Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண கால்பந்து 2010

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சிறி அண்ணா

அந்த நடுக்கத்திலை பையன்26 இப்பவே பியர் விஸ்கி எண்டு உளறத் தொடங்கி விட்டார்

வாத்தியார்

**********

ஓம் வாத்தியார்.

பையனை பார்க்க பாவமாய் கிடக்குது.......

என்ன செய்யிறது பையன் வாற கிழமை, தலைக்கு துண்டு போட்டுக்கொண்டு தான் யாழ் களத்துக்கு வரவேணும். :lol::rolleyes:

நானும் தான்.... எனக்கு கடைசி பரிசு காத்திருக்குது. :):)

.

Edited by தமிழ் சிறி

  • Replies 654
  • Views 33.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பையன்26 இங்கை எங்கை கசிப்புக் கிடைக்கும் எண்டும் சொன்னா வேண்டி அடிக்கலாம். :rolleyes::lol:

கிடைக்கிற இடம் தெரியாமல் வொட்கா அடிக்க வேண்டியிருக்கிது :):)

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சிறி அண்ணா

அந்த நடுக்கத்திலை பையன்26 இப்பவே பியர் விஸ்கி எண்டு உளறத் தொடங்கி விட்டார்

வாத்தியார்

**********

வார கிழமை எல்லாம் தெரியும்... :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான சில்லறைக்கருத்துக்கள் நீங்கள் எழுதுவீர்களென எதிர்பார்க்கவில்லை.

இது சிறிய மூஞ்சூறுகளின் விளையாட்டுக்களமல்ல?

நாடுசம்பந்தப்பட்டது!

அவர்களின் தன்மானம் சம்பந்தப்பட்டது!அல்லது நீங்களும் என்னைப்போல் மப்பில்..... :rolleyes:

குமாரசாமி அண்ணாவுக்கு

நான் சொன்ன கருத்து வேலையிடங்களில் வேற்று நாட்டவர்களால் கதைக்கப்பட்டவையே, எனது கருத்தாக இருந்தது பிறேசில், ஆர்ஜென்ரீனா ரீம்கள் வளமையாக விளையாடும் திறன் கடைசி இரு match களிலும் தெரியவில்லையென்பதே....,

மற்றும் இந்த இரு ரீம்களும் நல்லாக விளையாடவில்லையென்று நான் சொன்னதை நீங்கள் சில்லறை கருத்தென்று சொன்னீர்களாக இருந்தால் அது நீங்கள் வெற்றியடைந்த ரீம் ஒன்றின் தீவிர அபிமானியாக இருப்பதால் ஆத்திடரமடைந்து என் கருத்தை சில்லறைக் கருத்து என்று சொல்லியிருக்கிறீர்கள் என்றே நான் எண்ண இடமுண்டு, நீங்கள் அப்படி நினைத்தாலும் நான் அதை சொல்லாமல் இருக்கமுடியாது காரணம் அது எனது அபிப்பிராயமும் எனது கருத்துச் சுதந்திரமும்....

அல்லது வேலையிடங்களிலேயோ அல்லது யார் யாரரோ எல்லாம் கதைப்பதையெல்லாம், அல்லது இங்கு கொண்டுவந்து சொன்னதை சில்லறைத்தனமாக எடுத்திருந்தால் யாழில் இப்படிப்பட்ட சில்லறைத்தனங்களை எராளமாகப் பார்த்திருப்பீர்கள் அதில் எனதையும் ஒன்றாக எடுத்து விட்டுவிடுங்கள்...

அதை விடுத்து நீங்களே இப்படிச் செய்வீர்கள் என நினைக்கவில்லையெனச் சொல்வது 'இளங்கவி' என்றால் இப்படித்தான் என நீங்களே என்னைப் பற்றி ஒரு imaginery line ஐப் போட்டு வைத்திருந்தீர்கள் என்பதுபோலவும் அதை நான் தாண்டி வந்துவிட்டேன் என்பது போலவும் என்னை நினைக்கத் தோன்றுகிற்து.

என்னைப்பற்றி நன்றாக அபிப்பிராயம் வைத்திருந்தால் நன்றி, ஆனால் அதுவே எனக்கு என் கருத்துக்களை சொல்ல முட்டுக்கட்டையாக இருந்துவிடக்கூடாது என்பதுவே என் தாழ்மையான கருத்து .... ...

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் இரண்டுமே பிரஸில், ஆர்ஜென்டீனா அணிகளுக்குச் சளைத்தவையல்ல. காகா (Kaka), ரொபின்யோ (Robinho), பெபியானோ (Fabiano), மெஸி (Messi), டேவஸ் (Tevez) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தால் மட்டும் அந்த அணிகள் வெற்றி பெறும் என நினைப்பது தவறு. ஒட்டுமொத்த அணியாகப் பார்க்கும் போது நெதர்லாந்தும், ஜேர்மனியும் மற்ற அணிகளை விடச் சற்றுப் பலமான அல்லது அவற்றுக்கு நிகரான நிலையிலேயே இருக்கின்றன.

இங்கு உங்களுக்கு புக்கீஸ் (bookies) தான் ஆட்டங்களை நிர்ணயம் செய்திருக்கின்றார்கள் என்று சொன்னவர்களின் கால்பந்து சம்பந்தப்பட்ட அறிவை மட்டமாகவே நோக்கவேண்டியுள்ளது.

நான் அடித்துச் சொல்லுகின்றேன் நெதர்லாந்து தான் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும்! :) ஆனால் அரையிறுதிக்குத் தெரிவான நான்கு நாடுகளில் நான் ஆதரவளிக்கும் அணி ஜேர்மனி. இங்கு ஆதரவு என்பது வேறு, உண்மை நிலை என்பது வேறு. ஒருவேளை உருகுவே அணி உலகக் கிண்ணத்தை வென்றுவிட்டால் அதற்கு காரணம் புக்கீஸ் (bookies) தான் என்று நான் சொல்லக் கூடாது. :rolleyes:

காவாலி

ஜேர்மனியையோ, நெதர்லாந்தையோ, ஸ்பெயினையோ நான் குறைத்து மதிப்பிட்டு என் கருத்து அமைந்திருக்கவில்லை.... திறமையான இரு ரீம்கள் தங்கள் வளமையான ஆட்டத்திறனுடன் விளையாடவில்லையென்றே சொல்லியிருந்தேன்...

மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் match betting செய்வதில் அதிக கவனம் செலுத்துபவர்கள், அவரவர் காசு போட்ட ரீம்கள் தோற்கும் போது அதைப்பற்றி அவர்கள் செய்யும் விமர்சனங்கள் உண்மையென்பதல்ல...ஆனாலும் match betting இல் பல குளறுபடிகள் நடந்த சம்பவங்களையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்..... எது எப்படியோ.......அப்படியே விட்டுவிடுவோம்...

ஆனாலும் எந்த ரீம் வெல்லும் என்பதில் நான் சொல்லுவது ஜேர்மனி என்பதுதான் என் கருத்து..அதற்காக உங்களுடன் நான் bet கட்டமாட்டேன்..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனிக்கு கால்பந்து விளையாட்டு என்டால் உயிர்.அத்துடன் வேகத்தை விட நல்ல டெக்னிக்கை கையான்டு விளையாடுவார்கள்.அத்துடன் யேர்மனிக்கும் ஆயன்ரீனாவுக்கும் கால்பந்தில் கனக்க கெபடுக்கல்வாங்கல் இருக்கு :rolleyes: அய்ரோப்பிய கிண்ணத்துக்கும் உலககிண்ணத்துக்கும் உள்ள வித்தியாசமே பிரேசிலும் ஆயன்ரீனாவும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிடத்தில் சில வெளிநாட்டவர்களுடன் கதைத்திருந்தபோது அவர்கள் சொன்னது bookies

இந்த இரு ரீம்களுக்கும் நல்லாக காசு அடிசசிட்டாங்கள் போல எண்டாங்கள்....

உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலலாம்,

ஆனால் இந்த இரு ரீம்களின் வளமையான விளையாட்டுத்திறன் நேற்றைய, மற்றும் இன்றைய match களில் காணப்படவில்லையென்பது என் கருத்து....

இதில் ஒரு விடயத்தை நான் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன்

1998

பிரேசில் - பிரான்ஸ் இறுதியாட்டம்

பிரான்ஸ் வெற்றி

இன்றும் இங்கு நாங்கள் வழமையாக பேசுவது

முதன்முதலாக ஸ்ரேடியம்கட்டி அதில் வெற்றிக்கிண்ணத்தை வேறு ஒருவருக்கு கொடுப்பமா...

ஏழை நாடு பிரேசில்

காசை எறிந்தோம்

கௌரவத்தை காத்தோம் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடயத்தை நான் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன்

1998

பிரேசில் - பிரான்ஸ் இறுதியாட்டம்

பிரான்ஸ் வெற்றி

இன்றும் இங்கு நாங்கள் வழமையாக பேசுவது

முதன்முதலாக ஸ்ரேடியம்கட்டி அதில் வெற்றிக்கிண்ணத்தை வேறு ஒருவருக்கு கொடுப்பமா...

ஏழை நாடு பிரேசில்

காசை எறிந்தோம்

கௌரவத்தை காத்தோம் என்று.

:rolleyes::lol:

இதை போய் யாராவது ஒரு கேனை கிறுக்கிட்டை சொல்லுங்கோ அவன் நம்புவான்..ஒரு நாடு விளையாட்டில தோல்வி அடைஞ்சா அதர்க்கு லஞ்சம் தான் என்று உளற தொடங்கிடிவியள்..அப்ப 98விளையாடி நாட்டுக்கு பெருமை செர்த்த சிட்டான்ட விளையாட்டை என்ன சுத்து மாத்து என்று சொல்லுறதா விசுகு அண்ணை.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடயத்தை நான் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன்

1998

பிரேசில் - பிரான்ஸ் இறுதியாட்டம்

பிரான்ஸ் வெற்றி

இன்றும் இங்கு நாங்கள் வழமையாக பேசுவது

முதன்முதலாக ஸ்ரேடியம்கட்டி அதில் வெற்றிக்கிண்ணத்தை வேறு ஒருவருக்கு கொடுப்பமா...

ஏழை நாடு பிரேசில்

காசை எறிந்தோம்

கௌரவத்தை காத்தோம் என்று.

1998 உலகக் கோப்பையும்

2000 ம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணமும் பிரான்ஸ்தான் எடுத்தது. அக் கால கட்டத்தில் பிரான்ஸ் ஒரு வலிமையான அணி! ஆனால் 2002 உலகப் போட்டியில் தெரிவுச் சுற்றுகளை விட்டே அதனால் வர முடியவில்லை என்பதும் உண்மையே! பின் 2006 ல் அரை இறுதி வரை வந்து இத்தாலியின் அளாப்பி ஆட்டத்தால் கிண்ணத்தை இழந்தது! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லஞ்சம் கொடுத்து வெல்லுவது என்பது நடந்த உண்மை

அதற்காக பெரிய தலைகள் எல்லாம் உறுண்டன இங்கு.

Bernard Tapie என்பவரை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

zinedine zidaneஇன் ரசிகன் நான்.

அவருடன் இருந்தவர்களும் பலர் மிகச்சிறப்பானவர்களே

அதேநேரம்

நீங்கள் சொல்வதுபோல்தோல்வி வரும்போது இவ்வாறான கதைகள் வரும் என்பதும் உண்மையே.

ஆனால் இப்படி சொல்வதற்கான ஆதாரமாக தொடர்ந்து இவர்களின் தோல்வியும்

பிரேசில் வறிய நாடாக இருந்ததும் காரணம்.

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும்

இங்கு பிரெஞ்சுக்காறரிடையே இது சாதாரணமாக நடைபெறும் சம்பாசனை.

இங்கு இருப்பவர்கள் எவராயினும் இது பற்றி எழுதுவார்கள் என்று நினைக்கின்றேன்.

உயிரைக் கொடுத்து உதைபந்தாடம் பார்க்கும் எனக்கு இந்த முறை உலக கோப்பை ஏனோ எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை.

யுரோப்பியன் போட்டிகள் நடக்கும் நாட்களில் ஒவ்வொரு புதனும் ஏதோ சாட்டு சொல்லி அரை நேரத்துடன் வீடுவந்துவிடுவேன்.மனேஜருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது இவன் எப்படிஆகக் குறைந்தது மாதத்தில் 2,3 புதன் அறை நேரத்துடன் போகின்றானென்று.அவன் விசாரித்து திரிந்ததில் ஒரு இத்தாலிக்காரன் போட்டுக் கொடுத்துவிட்டான்.அதோடு புதன் எனக்கு லீவு இல்லை என்று விட்டான்.

காரணங்கள்.குறூப் ஆட்டங்களில் பல ரீம்கள் ஒfஎன்ஸ் ஆட்டத்திவிட்டு முற்று முழுதாக டிfஎன்ஸ் ஆட்ட முறையை கையாளுகின்றார்கள்.எவ்வளொவோ திறமையாக தனிப்பட விளைய்யடப் படக் கூடியவர்களெல்லம் கோச்சின் ஆட்ட வழிமுறையில் கட்டுப் பட்டு ஆட்ட விறு விறுப்பை இழக்கப் பண்ணிவிடுகின்றார்கள்.

ஒரு பீலேயோ,மரடோனாவோ,பிளாட்டினியோ,பெக்கன் பேரோ,சிடானோ இவ் வருடத்தில் இல்லை.மெஸ்ஸி,காகா,ரொனால்டோ எல்லாரும் பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டார்கள்.

இங்கிலாந்து இரண்டாவது அடித்த கோல் வழங்கப் பட்டிருந்தால் ஆட்டம் வேறு திசைக்கு மாறியும் இருக்கலாம் .அதே போல் ஆர்ஜென்டீனாவின் கோலும் முழு ஓfசைட்.

இருப்பினும் நெதர்லாந்து எனது பிரபல வீரர் ரூபின் நன்றாக விளையாடுவது ஒருவகையில் திருப்தி.

பேயன் முனிச்சோ,பாஸிலோனாவோ,ஏ.சீ மிலானோ,செல்சியோ இவர்களை விட திறம்.

  • கருத்துக்கள உறவுகள்

வார ஞாயிற்று கிழமை தங்களின் மனதை கட்டுப் படுத்த

bacardi-family-shot-new-feb-09.jpg

2105615636_167223ed53.jpg

Tuborg20Lite20Med20glas.jpg

jack_daniels.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

corona.jpg

பையா நான் இது தாம்பா குடிக்கிறனான் முடிஞ்சா இதை வாங்கி குடுங்கோ.

ஒருவேளை நாங்க சொன்னது பொல ஜேர்மனி வென்றிட்டால் குட்டி பையனுக்கு என்ன தர? :rolleyes:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன்காரன் ஆரிட்டை தோத்தாலும் சரி......இல்லாட்டி...... எப்ப தோத்தாலும் சரி......

கடைசிவரைக்கும் ஹொலண்ட்காரரிட்டையும் லண்டன்காரரிட்டையும் தோக்கக்கூடாது

அது இவங்களுக்கு அவமானம் அசிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஜேர்மனி பிரதமர் angela merkel

angelamerkel1.jpg

போட்டியை காண வந்திருந்தா. போட்டி ஆரம்பமாக முதல் zdf தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சொல்லி இருந்தா ஜேர்மனி 2:1 என்ற கணக்கிலை வெல்லும் என்று.

ஜேர்மனி கோல் அடிக்கும் போது எழும்பி நின்று கைதட்டி வீரர்களை உற்சாகமூட்டினார்.

உப்பிடித்தான் சென்ற உலகக்கிண்ணத்துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா சனாதிபதி மகிந்தாவும் இறுதிப்போட்டியில் சிறிலங்கா வெல்லும் என்று மேற்கிந்தியா தீவுக்கு சென்று துடுப்பாட்டம் பார்த்தவர். ஆனால் நான் வாழும் அவுஸ்திரெலியா வீரர் கில்கிறிஸ்ட்டின் அடி தாங்க முடியாமல் சிறிலங்கா தோற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தவரக்கிடையிலை

அவுஸ்ரேலியாவுக்கு ஜேர்மன்காரங்கள் ஓட ஒட நாலு சாத்து சாத்தினவங்களெல்லோ

அந்த எரிச்சல்லை ..

கந்தப்பருக்கு சன்னி புடிச்சிட்டுது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவரக்கிடையிலை

அவுஸ்ரேலியாவுக்கு ஜேர்மன்காரங்கள் ஓட ஒட நாலு சாத்து சாத்தினவங்களெல்லோ

அந்த எரிச்சல்லை ..

கந்தப்பருக்கு சன்னி புடிச்சிட்டுது :rolleyes:

ஜேர்மனி இந்த உலகக்கிண்ணப் போட்டியில் சேர்பியா என்ற நாட்டுடன் விளையாடும் போது மட்டும் தோற்றது. ஆனால் சேர்பியாவை இம்முறை அவுஸ்திரெலியா வென்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பாராமல் உருகுவே வந்தால் இந்தப் பிரச்சினை எல்லாம் அமுங்கிடும்! :rolleyes:

பையன் 26 ! நானும் ஜெர்மனிதான் வரும் எண்டனான் எனக்கு ஒண்டும் கிடையாதா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலிறுதி: தியேகோ, அந்தப் பையனின் பெயர் முல்லர்..!

07/04/2010 கடவு ஆல்

“தியேகோ, அந்தப் பையனின் பெயர் முல்லர்..!”, ஓலே எனும் ஆர்கெந்தீன நாளிதழ் கொடுத்திருக்கும் தலைப்பிது. இந்த தலைப்பின் பின்னுள்ள நேர்வை, கூட்டுகையைப் (context) புரிந்து கொள்ள ஒரு மூன்று, நான்கு மாதங்கள் பின் செல்ல வேண்டும். செருமனி ஆர்கெந்தீனாவுக்கெதிராக ஒரு நட்புறவு ஆட்டத்தை ஆடியிருந்தது, அதில் முல்லரும் இன்னும் நான்கைந்து புதியவர்களும் தங்கள் முதற் தோற்றத்தை (debut) ஆடிட வாய்ப்பளிக்கப் பட்டிருந்தது. செருமனி 0:1 கணக்கில் ஆர்கெந்தீனாவிடந் தோல்வி கண்டிருந்தது. போட்டி முடிந்தவுடன் இடம்பெறும் வழக்கமான தாளிகையாளர் சந்திப்பில், ஒலிவாங்கிகள் முளைத்திருக்கும் நேர்காணல் மிசையில் (மேசை) நம் முல்லரை ஆட்டத்தின் பின் கருத்து வழங்க உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். அங்கு வரும் தியேகோ மரடோனா முல்லர் அருகே அமர்கிறார், அவர் மீது பார்வையை எறிந்துவிட்டு… யார் இந்தப் பையன்? இவன் இங்கிருந்தால் நான் மிடையத்தாருடன் பேசமாட்டேனென அடம்பிடித்துக் கொண்டு எழுந்து வெளியேறிவிடுகிறார். முல்லரிடம் விதயத்தை விளக்கி அவரை வெளியே அனுப்பிவிட்டு, ஒருவழியாக மரடோனாவைச் சமதானப்படுத்தி மீண்டும் உள்ளழைத்து வருகின்றனர் (முல்லர் இதைப் பெரிதாக நினைக்கவில்லை. நமது கோள் இதுவரைக் கண்ட மாபெரும் காற்பந்தாட்டக்காரர் மரடோனா என்றியம்பி.., புலனத்தை முடித்துவிட்டார்!). மரடோனா பெயரற்ற ஒருவன், பந்து பொறுக்கும் பையன் எனக் குறிப்பிட்ட தோமை முல்லர் (Thomas Müller) தான் இந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில், ஆட்டந் தொடங்கி மிகக் குறைந்த நேரத்தில் – 158 நொடிகளில் – அடிக்கப் பட்ட கவலை ஆர்கெந்தீனாவுக்கெதிராக இட்டு மரடோனா & குழு வெளியேற வழிகோலியவர். யார் இந்தப் பையன் என்ற மரடோனாவின் கேள்விக்கான மறுமொழியை அவரே இன்று களத்திற் கண்டிருப்பார். ஒரு ஆட்டக்காரன் பேசுவது கால்களாற் றான், அவன் களம் ஆட்டரங்கினுள்ளே தான்.., அதற்கு வெளியே அவன் களம் இயங்கவில்லை.. எந்த அறைகூவலுக்கான மறுமொழியும் களத்திற் திறமையைக் காட்டுவதன் மூலமே சொற்களில் உருமாற்றப் படும் என்பதை 20 அகவை முல்லர் புரிந்து கொண்டிருக்கிறாரெனத் தெரிகிறது. பல விளையாட்டுவீரர்கள் (நம் ஊர்களில் இந்தத் தொல்லையைக் கொடுப்பவர்கள் திரைப்பட நடிகர்கள் மற்றும் இலக்கியவாதிகள்!) தங்கள் களத்தை விட்டு வெளியே ஆடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் ஆட வேண்டிய களம் வெறிச்சோடிக் கிடக்க, வெளியே சிந்தேற்ற வேலைகளில் ( sensation mongering) ஈடுபட்டிருப்பார்கள்.

காற்பந்து ஆட்டந் தொடங்கியதிலிருந்து அதன் வரலாறு கண்டிராத பெரும் நுட்பக்காரர் அவர், உலகக் காற்பந்தாட்டம் நீண்ட நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த, பந்தாட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒரு வரலாற்றுப் புள்ளி மரடோனா என்பதிற் சிறிதளவும் ஐயமில்லை ( எமிர் Kusturica-வின் மரடோனா எனும் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் இவரைக் குறிக்க footballing magician எனுஞ் சொல்லாடலைக் கையாண்டிருப்பார்! அது எவ்வளவு பொருத்தமானது!). ஊக்கமருந்து உட்கொள்வு, மிதமிஞ்சிய கஞ்சைப் பழக்கம், ஊதை நோய், மாரடைப்பு, சாவினருகே சென்று திரும்பியது, மிடையக்காரரைத் துமுக்கி கொண்டு சுட்டு விரட்டியது, உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் நூலிழையிற் தப்பியது, அதன் தொடர்ச்சியாகத் தாளிகைக்காரர் மீது வசவுமாரி பொழிந்தது என களத்திற் சாதித்ததற்காகப் பேசப்பட்டதை விட களத்தின் வெளியே அவர் ஆடிய கூத்துக்களுக்காக பேசப்பட்டவர் மரடோனா. வேறு சொற்களிற் சொல்வதென்றால் அவ்வப்போது எடக்கு மடக்காக திருவாழ்த்தான் வேலைகள் புரிந்து மிடையத் தலைப்புகளில் வந்து விடக்கூடியவர்.

செருமனி- ஆர்கெந்தீனா என இரு அணிகளும் மொத்தமாக 18 தடவை மோதியிருக்கின்றன, அதில் ஆர்கெந்தீனா 8 முறை வென்றும், 5 முறை தோற்றும் இருக்கிறது. மீதி 5 ஆட்டங்களும் சமநிலையில் முடிந்திருக்கின்றன. இவற்றில் 1986-இல் மரடோனா தலைமையில் 3:2 என செருமனியை இறுதி ஆட்டத்தில் வென்று வாகையரானதும், 1990 செருமனி ஆர்கெந்தீனாவை வென்று உலக வாகையர் ஆனதும் குறிப்பிடத்தக்கன!

சென்ற உலகக் கிண்ணப் போட்டித்தொடரின் காலிறுதியிலும் ஆர்கெந்தீனா செருமனியைச் சந்தித்திருந்தது. ஆட்டம் 1:1 என்ற நிலையில் தண்டஉதைப்பை நோக்கிச் சென்றது. அதில் செருமனி வென்றிருந்தது. அதன்பின்னர் ஆர்கெந்தீன ஆட்டக்காரருக்கும் செருமானிய ஆட்டக்காரர்களுக்குமிடையே நடந்த கைகலப்பு இன்னும் மறக்கப்படா விதயமாக இருக்கின்றது. அதைத் தொடர்புபடுத்தி இவ்வாட்டத்தின் முன்பாகவே ஆர்கெந்தீனா வீரர்களும், மரடோனாவும் உளவியற் போர் ஒன்றைத் தொடங்கிவிட்டிருந்தனர் (வழக்கமான உத்தி தான்!). தொடர்ந்து ஆர்கெந்தீனரிடமிருந்து செருக்கும், ஆணவமும் கொப்பளிக்கும் அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன. இதனால் ஆடுகளத்திற் சூடு பறக்கும் என்ற எதிர்பார்ப்புப் பலரையுங் கவ்வியிருந்தது.

ஆட்டம் இரு பயிற்சியாளர்களின் திறனைச் சோதிக்குங் களமாக இருந்தது. ஒருவர் உலகப் புகழ்பெற்ற காற்பந்துக்காரராக இருந்தவர், பயிற்றுநர் வகிபாகம் (role) அவருக்குப் புதிது! வெற்றியோ தோல்வியோ தன் வீரர்களை அவர் அணைத்தும் முத்தியும் ஊக்கமூட்டுவதை ஆடுகளத்தின் வெளியே நின்று கொண்டு அணியுடன் அவர் வாடுவதையும், பல்வேறு மெய்ப்பாடுகளூடாக ஆட்டத்துக்கு உயிரூட்டுவதைக் காண்பதே நெகிழ்வான ஒன்று. மற்றவர் லூவ்- Löw- நுட்பக்காரரென அறியப்பட்டவர், அடுவரை (tactic), தடந்தகை (strategy) வல்லுநர். மரடோனா மக்களின் ஆட்டக்காரர், மக்களாற் கொண்டாடப்பட்டவர் என்பது உண்மையெனினும், அதுவே அவர் பயிற்சியாளராகிட ஒரு தகுதியாகி விடுமா? தன் அணியுடன் தகுதிகாண் சுற்றுக்களிலிருந்து அவர் தப்பியதே பெருங் கதை. என்னளவில் அவர் வெறும் ஊக்கமூட்டி (motivator) மாத்திரமே!

பார்க்கத் தொடங்குகையில் இந்த ஆட்டம் காற்பந்தாட்ட வரலாற்றில் முகமை நிகழ்வாக அடிக்கோடிட்டுப் பதிவாகப் போகும் ஆட்டமென்று எவரும் நினைத்திருக்கவில்லை. இரு அணிகளும் நிலமுனை நகரின்(Cape town) பசும்புள்ளித் திடலிற் (Green Point stadium) சந்தித்துக் கொண்டன. பீட்டுடன் ஆடத் தொடங்கிய ஆர்கெந்தீனாவுக்கு 3ம் நுணுத்தமே அதிர்ச்சி காத்திருந்தது. ஒட்டமென்டி பொடொல்சுகியை தண்டப் பரப்புக்குச் சற்றுத் தள்ளி வலது மருங்கில் வழுவான முறையில் தடுத்து நிறுத்தியதால் பரி-உதை (free kick) கிடைத்திருந்தது செருமனிக்கு… இம்முறை உதைக்கும் பொறுப்பை ஏற்று ஷ்வைன் ஷ்டைகர் பந்தைக் கவல் நோக்கி எத்த, பின்னரணில் நின்றிருந்த முல்லர் அடைத்திருக்கும் ஆளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தலையால் மெதுவாக உள்ளே தட்டுகிறார் பந்தை. ஆர்கெந்தீனக் கவலாளி இரொமேரோ இம்முறை சரியான விழிப்புநிலையில் இல்லாதது குறையாக அமைந்தது. இவ்வுலகக் கிண்ணப் போட்டித்தொடரின் மிக விரைவான கவல் இங்ஙனம் உள்ளே சென்றது, 1:0! மின்னல் அடியாக இறங்கிய இக்கவல் ஆர்கெந்தீனா அணியினுள் வேதியல் மாற்றத்தை உருவாக்கியிருந்தது. மீள முடியாத அதிர்ச்சியாக ஆட்டம் முழுவதும் படரப் போகும் கொடுங் கனவாக இக்கவல் மாறப் போகிறதென்பதை எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டர். செருமன் அணி தொடர்ந்து தன் அழுத்தத்தை அதிகரிக்கிறது, நடுக்களத்தில் நிறைய நடக்கிறது. ஈராட்சமர்கள் அனைத்தும் வெல்லப் படுகிறன. ஒரு அணி எப்படி ஆட வேண்டுமென்ற செய்துகாட்டலை (demonstration) இங்கே மேடையேற்றியதெனலாம். அவ்வப்போது வாய்ப்புகளை, வெளிகளைத் தேடிய ஆர்கெந்தீனர் 20.வது நுணுத்தத்தில் மெசீயின் ஒரு வலவநீவல் (masterstroke)மூலம் எதிராளியரின் கவலை நோக்கிய படையெடுப்பொன்றை நடத்தியிருந்தர். அதுவும் செருமனின் நடுப் பின்னங்காரர் மேர்ட்டசுஅக்கரால் முறியடிக்கப் பட்டிருந்தது. மீட்பர் மெசீயின் அடுத்ததும், இறுதியுமான வாய்ப்பு 23.நுணுத்தத்திற் கிட்டியது. மிக அருமையான கடவொன்றுடன் கார்லோசு தேவெசை உள்ளே அனுப்பியிருந்தார். தண்டப் பரப்பினுள் பந்து வந்தாலே, உடனே அங்கே வந்து ‘உள்ளேன் ஐயா’ போட்டுவிடும் மானு-எல் நொயாரை மீறி அது கவலுக்குட் செல்லும் வாய்ப்பு இன்றில்லை என்பது திட்டவட்டமாகப் புரிந்தது. கவல் பெட்டிக்குள் மாத்திரமே

நிற்பவர் அல்லர் நொயார், அங்கும் இங்கும் ஓடியாடி, தண்டப் பரப்பை விட்டுச் சுற்றுலாக்கள் மேற்கொண்டு முழுவிழிப்பு நிலையில், ஆடும் 90 நுணுத்தங்களுக்கும் தன் முழுச் சேவையை அணிக்களிக்கும் விதப்பான கவலாளி அவர். மெசீயின் இறுதி ஆற்றம் (action) இதெனலாம், இம்மீட்பரின் உயிர்த்தெழுதல் இதன் பின்னர் கைகூடாது போயிற்று. செருமன் எதிரடி மீண்டுந் தொடங்கியது. உரங்கொண்டு ஆடிய முல்லர் மீண்டும் வலது சிறகமூடாக உள்நுழைந்து நடுவில் நிற்கும் குளோசெயின் கால்களிற் பந்தை அளிக்கிறார். அவர் பாதம் சரியான முறையிற் படாததால், காலில் மோதிக்கொண்டு கவற் கம்பத்தின் மேற்பரப்பை முட்டிச் செல்கிறது. இடையில் கையின் மேற்பாகத்தால் பந்தை நிறுத்தியதால் முல்லருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. சென்ற ஆட்டங்களில் அவர் பெற்றிருந்த மஞ்சளையும் சேர்த்து இது 2வது மஞ்சள் அட்டையாகையால், அடுத்த ஆட்டத்துக்கு அவர் தடைசெய்யப் பட்டுள்ளார். முதற் பாதி 1:0 என்ற பெறுபேற்றுடன் கழிந்தது. இரண்டாம் பாதியில் ஆர்கெந்தீனா மீண்டு வருமென்ற நம்பிக்கை பல விசிறிகளுக்கும் இருந்தது. செருமன் பந்தை நிருவகிப்பதில் நேரத்தைச் செலவிட்டது. பந்திருப்பு அதிகம் இருக்கும் அணிக்கு இடுக்குகளைக் காண, வெளிகளைத் திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் சிறந்த தாக்குதல்களை அது நிகழ்த்திட முடியும். 2வது மஞ்சள் அட்டை முல்லரைத் திடாரிகம் (தைரியம்) இழக்க வைக்கவில்லை, 68வது நுணுத்தம் (minute) தண்டப் பரப்பின் முன் மறிக்கப்பட்டு கீழே விழுத்தப் படும் அவர், கீழே கிடந்து கொண்டே பந்தை அருகிலுள்ள பொடொல்சுகிக்குக் கடவுகிறார்.. இடது ஓரம் வரை விரையும் அவர் அதனை அழகாகக் குளோசெயின் பாதங்களில் வைக்கிறார். இன்றைய ஆட்டத்துடன் தனது 100வது ஆட்டங் காணும் குளோசே தன் மூன்று உலகக் கிண்ணப் பட்டறிவில் இதுபோன்ற கவல்வாய்ப்பைத் முடிக்காதிருந்திருந்தாற் றான் வியப்பு, முடிப்பது அல்ல! 2:0! பொறுத்தது போதும் பொங்கி எழு, தடுப்பாட்டம் போதும் தாக்குதலில் இறங்கென வீறு கொண்டு எழுந்தது ஆர்கெந்தீனா. எதிராளியின் முன்னரணை நோக்கி ஓடுகையில், தாக்குதல் தொடுக்கையில் கிடைக்கும் வெளிகளை செருமனி அருமையாகப் பயன்படுத்திக் கொண்டது. ஷ்வைன்ஷ்டைகரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு தடுத்தாடும் நடுக்களக்காரன் எப்படி ஆட வேண்டுமென்ற இலக்கணங்களைக் எல்லாம் காட்சிப் படுத்தியிருந்தார். அவரின் ஆட்டம் சென்ற இரோப்பியக் கிண்ணத்தில் கலக்கிய - இப்போது மந்தமாக இருக்கும் – ஷாவியின் (Xavi) ஆட்டத்தை நினைவூட்டியது. ஆர்கெந்தீனாவுக்குக் கொஞ்ச நெஞ்சம் இருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்தது செருமனியின் அடுத்த நகர்வாகும். 74வது நுணுத்தம் தனியராக, ஒரு பனிச்சறுக்கு வீரரைப் போல சுற்றுஞ் சுழற்றுமாய் (slalom) ஓடிக் கொண்டு, மிக மிகச் சிறந்த பந்தாளுகையுடன் எதிராளியரை வெட்டித்தள்ளியவாறு கவற் பெட்டி முற்றத்துள் நுழையும் ஷ்வைன்ஷ்டைகர் ஃபிரீடெரிக்கைக் கண்டுகொண்டு அவரிடம் பந்தைக் கொடுக்கிறார். பந்தை இழுத்துக் கொண்டு கவலினுள் இறங்குகிறார் ஃபிரீடெரிக்கு. 77 ஆட்டங்களை செருமனிக்காக ஆடியிருக்கும் பின்னங்காரர் ஃபிரீடெரிக்கிற்கு இதுவே முதலாவது கவலாகும். அதுதான் ஆர்கெந்தீனாவைப் போட்டுத் துவைத்தெடுத்தாகி விட்டதே, விட்டுவிட்டுப் போக வேண்டியது தானே.. விடுவதாக இல்லை இந்த இளஞ்செருமானியர். இறுதியாக விழுந்த கவல் ஆர்கெந்தீனாவின் காற்பந்தாட்ட ஆணவத்துக்குக் கிடைத்த உதை. 89வது நுணுத்த இறுதி நகர்வின் பெயர்: ஊய்சில் நடபடிக்கை – Operation Özil! நிறைவேற்றியவர் குளோசெ. இரு தொகுவத்தின் நம்பிக்கைத்தாரகைகளாகவும், அணியை நெறிப்படுத்தும் நண் நடுக்கள வீரர்களான மேசூட், மெசீ இடையே நடைபெற்ற வலுத்தேர்வில், மேசூட் (ஊய்சில்) வாகை சூடியிருக்கிறார். எதிரடியொன்றைத் தொடுக்கும் ஊய்சில் குளேசேக்குப் பந்தை அளிக்க, அவர் அந் நகர்வை நேர்த்தியாக முடித்து வைக்கிறார், 4:0! இது அவர் உலகக் கிண்ணத் தொடர்களில் அடிக்கும் 14வது கவல், அதிக கவல்களுடன்(15) முதலிடத்தில் முன்னாள் பிறசீல்வீரர் இரொனால்டோ உள்ளார். ஏற்கனவே கண்கள் பனிக்க நின்றிருந்த மரடோனா இக்கவலின் பின் மொத்தமாக உடைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வகையில் செருமனி அசுரப் பாய்ச்சலுடன் அரையிறுதி நோக்கி நகர்ந்தது. எண்ணிப் பார்க்க முடியா இந்த வெற்றிக்குப் பின்னணியிற் காரணமாக இருந்தோர் இருவர்: முதலாமவர் அணியின் பயிற்சியாளர் யோகி லூவ். அணி பல வெற்றிகள் பெற்ற போதும் அமைதியாக எந்த ஆரவாரமும் இல்லாது அணி இந்த விதயங்களை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என அடக்கமாகக் கிடுக்கி விட்டுச் செல்லும் நேர்த்திவிரும்பி (perfectionist). இம்முறை ‘தான் எதிர்பார்த்தது போல அணி இன்று மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறதென..’ வாய்திறந்து பாராட்டியிருக்கிறார்.

இன்னொருவர் என்பதை விட, இரண்டாங் காரணமாய் இருப்பது, எதிராளியர் எப்படி ஆடுகின்றனர் என்பதைப் புலமறியும் பிரிவு. செ.உ.கூ. (செருமன் உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு) தலைமைச் சாரணராக (chief scout) இருக்கும் உர்சு சீகந்தாலரால்- Urs Siegenthalerஆல் இயக்கப் படும் இப்பிரிவு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே இப்பணியைத் துவக்கியிருக்கும். முகமையான அணிகள், அதுவும் தகுதிகாண் சுற்றில் முதன்மை வகித்திருக்கும் அணிகளை நோட்டமிடுவது இவர்கள் பணி. அந்த அணிகள் ஆடும் அனைத்து ஆட்டங்களையும் நேரடியாகப் பார்க்க ஒவ்வொரு நாடுகளுக்கும் பறந்து ஆட்டரங்குகளில் கமுக்கமாக அமர்ந்திருப்பர். நாடுகளுக்கெதிரான ஆட்டங்களென்றில்லை , அந்நாட்டு வீரர்கள் ஆடிவரும் கழக / சம்மேளன ஆட்டங்களையும் பார்வையிடுவர். ஒருவகை உளவறியும் பணி தான் இது. இவ்வேலை செய்வோரைச் சாரணர் அ. புலமறிவோர் (scouts) என்பர். கரவாக, ஒளித்து மறைத்துச் செய்யும் உளவல்ல, இவர்கள் வெளிப்படையாகவே அரங்கிலமர்ந்திருப்பர். ஏனையோர் பந்தையும், பந்துடனான ஆட்டத்தையும் கவனிக்கையில். இவர்கள் பந்தற்ற ஆட்டத்தை, பந்தற்ற நிலையில் வீரர்களின் நகர்வைக் கூர்ந்து பார்ப்பர், குறிப்பெடுப்பர். விழியமூடாகவும் (video) இவ்வகை ஆய்வுகளை மேற்கொள்ளலாம், ஆனால் விழியத்தில் பெரும்பாலும் பந்திருக்கும் இடம் தான் உள்வாங்கப் பட்டிருக்கும். பந்தற்ற ஆட்டம் பதிவு செய்யப் பட்டிருக்காது. இவர்களின் குறிப்புக்கள், விழியத் துணுக்குகள் (video clips) அனைத்தும் அலசலுக்காக மிக முகமையான இடமொன்றுக்கு அனுப்பப் படும். அவ்விடம் செருமனியின் கொலோன் நகரிலுள்ள பொருதுக் கல்லூரியாகும் (Köln Sports College). இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கப் பட்ட இக்கல்லூரி செருமானிய பொருதுத் துறைக்குப் பெரும்பங்கு ஆற்றுவதாகும். உ.கி. போட்டித் தொடரிற் பங்குகொண்ட ஒண்டூராசு பயிற்சியாளர் போன்றோர் இங்கு தான் பயின்றிருந்தர். தவிர செருமானிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டது இக் கல்லூரி. செருமானியப் பயிற்சியாளர் பலர் தங்கள் பதவிக்காலத்தில் இக்கல்லூரியின் வருகைப் பேராசிரியர்களாகப் பணியாற்றி இருக்கின்றனர். இக் கல்லூரி தன்னை வந்தடையும் தரவுகளை, குறிப்புக்களை, விழியங்களை அலசி ஆராயும் அதிலிருந்து முடிபுகளையும், தீர்மானங்களையும் பெற்றுக் கொள்ளும்.. எந்த அணிக்கு எங்கு வலுக்கேடுள்ளது, மெசீயை எப்படி மடக்கலாம், தெவேசை ஆட விடாது செய்வது எப்படி, வெய்ன் ரூனி எவ்வாறு தன் கவல்களை எல்லாம் இட்டிருக்கிறார், எப்படித் தடுத்தால் அவர் அடங்கிப் போவார் என்ற நுட்பங்களை எல்லாம் செருமானியப் பயிற்சியாளருக்கு அனுப்பி வைக்கும். அவற்றை வைத்து அவர் மேலும் சில அலசல்களை மேற்கொண்டு தன் உத்திகளை, அடுவரையைத் (tactic) தீர்மானிப்பார். இந்த எதிராளியரை ஆட்டத்திலிருந்து எடுக்க இந்த ஆட்டக்காரரை இப்பொதிப்பில் நிறுத்த வேண்டும் போன்ற முடிபுகள் பயிற்றுநரால் எட்டப்படும். அதற்கேற்ப பயிற்சிகளும் வழங்கப் படும். இங்கிலாந்தை, ஆர்கெந்தீனாவை வீழ்த்தியது இப்படித் தான். மெசீயை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு, விடை அவருக்குப் பந்தை அளிக்கும் வெரோன் மற்றும் மஸ்கரோனோவை ஆட்டத்துக்குள் வரவிடாது செய்வதில் இருந்தது (வெரோனுக்கு மாற்றாக டி மறியா களத்திலிருந்தார்!). அதற்காக விதப்பாக உருவாக்கப் பட்ட தோய விழிய வட்டுகள் (DVD) முதன்மை வீரர்களான ஊய்சில், ஷ்வைன்ஷ்டைகர், பொடொல்சுகி, கெடீரா போன்றோரிடங் கொடுக்கப் பட்டிருந்தன. பின்னங்காரர் ஃப்ரிடெரிக்கு மற்றும் மேர்டசு-அக்கருக்கு அடிப்பாளர்கள் இகுவாய்ன், தெவெசு ஆகியோர் ஆடும் பாங்கு பற்றி விளக்கப் பட்டது. பயிற்சியாளரும் முறையே இவர்களுடன் தனித்தனி உரையாடல்களை நடத்தியிருந்தார். அனைத்துக்குமான பலன் களத்திற் கிடைத்தது.

எக்காலமும் மிடையத்தாருடன் முட்டுப் பட்டுக்கொண்டிருக்கும் மரடோனா, தன் நாட்டில் நிறையப் பேருக்கு மறுமொழி சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இரிக்கெல்மை அணியிற் சேர்க்காதது, சனெட்டி, கம்பியாசோ போன்றோரை அழைத்து வராதது, 4-5-1 என்ற உருவாற்றத்துடன் (formation) வந்த அணி எதிர்த்து 4-4-2 உடன் – தாக்கும் திட்டத்துடன் – வந்தது போன்றன அவரிழைத்த பெருந்தவறுகளாகப் பேசப்படும். தாக்கும் வயகத்துடன் (வியூகம்) வந்த இங்கிலாந்து உதைபட்டுப் போன காட்சிகளைக் கண்டிருந்தும் தடுப்பாட்டத்துக்கு முதன்மை கொடுக்காது மெசீயை நம்பித் தாக்குதல் ஆட்டதோடு வந்ததை விட மடத்தனங் கிடையாது. பின்களத்தின் வலப்பக்கத் தடுநரான ஒட்டமென்டியின் ‘திறமையைக்’ கண்டுகொண்ட செருமானியர் அந்த பக்கத்தினூடகவே அனைத்துத் தாக்குதல்களையும் நடாத்தியிருந்தனர். கூடவே மடுத்தீன் டெமிகேலிசு வேறு நடுவில் ஒரு பெரிய வலுக்கேடாக நின்றிருந்தார். இவர்களுக்கு மாற்றுத் தேடக் கூட மரடோனா முயலவில்லை. பெரிதான திட்டம், உத்தி ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. செருமனின் வலமே அதன் தாக்கும் நடுக்களமும் அவர்களுக்கு உறுதுணையாயிருக்கும் காக்கும் நடுக்களமுமாகும்.

குறிப்பாக கெடீரா,ஷ்வைன்ஷ்டைகர். இவர்களை ஆட்டத்திலிருந்து எடுக்கும் எந்த முயற்சியையும் ஆர்கெந்தீனர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஷ்வைன்ஷ்டைகர் ஓர் கடுகதி(express) வண்டிபோல் எவராலுந் தடுக்கப்படாது தொடக்கம் முதல் முடிவு வரை விரைந்து கொண்டிருந்தார். பின்னரணை வலுவாக்கியிருக்கக் கூடிய சாமு-எல் வால்டர் ஏன் களமிறக்கப் படவில்லை என்பதும் புரியவில்லை.

செருமனி தன் தலைமுறை மாற்றத்தை மலைக்கும் வகையிற் கடந்துள்ளது. சம்மேளன ஆட்டங்களின் போது துப்புரவாக உருவிலிருக்காத வீரர்கள் பலரும் இங்கு சொலித்துக் கொண்டிருக்கின்றனர். செருமனின் கவலைக்கிடமான அணி அலகான பின்னரண் கூட நல்ல பணியைச் செய்கிறது. ஃபிரிடெரிக், மேர்டசுஅக்கர் வலுவாக இருக்கிறர். அந்திரயாசு பிறேமெ (Brehme) காலத்துக்குப் பின்னர் செருமன் பின்னரணின் இடதுபுறம் வலுக் குறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. இங்கிலாந்து ஆட்டத்திலும் அது புலப்பட்டது. ஆனால் இம்முறை அக்குறைபாடுகளைச் சரிசெய்து நன்றாக ஆடியிருந்தார் செரோம் புஆட்டெங்கு. பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக செருமன் அணியை பார்த்து வருகிறேன், வழக்கமாகச் சின்ன அணிகளைப் போட்டுப் புரட்டி எடுப்பதும், பெரிய அணியுடன் சறுக்குவதும், எப்போவாது போட்டித்தொடர்களில் தட்டுத்தடுமாறி விளிம்பு வெற்றி ஒன்றை பெற்று முன்னேறுவதுமே அவர்களது பாங்கு. இதற்குமாறாக இம்முறை அவர்கள் காட்டியிருப்பது கண்கவர் (attractive) உதைப் பந்தாட்டம்! கூட்டாகக் கடவுகளால் தாக்குதலைக் கட்டமைக்கும், வெட்டி ஆடும், குதிக்காலாற் பந்தைக் கடவும் திருக்குகளாற் (tricks) தென்னமெரிக்கருக்கே தண்ணீர் காட்டும் இந்த ஆட்டம் இதுவரை கண்டிராதது. பல் பண்பாட்டுக் கூட்டமாக (பார்க்க குழு ஆய்வு D!) வந்திருக்கும் இந்தச் சமஈனுகையான (homogeneous) இளம் அணி (30களில் இருப்போர் குளோசே மற்றும் ஃபிரிடெரிக் என இருவரே!) காற்பந்தாட்டம் ஒரு குழுவாக ஒன்றிப்புடன் ஆட வேண்டிய ஆட்டமென்பதைச் சொல்லாமற் சொல்லியிருக்கிறது.

ஆர்கெந்தீனாவின் பொட்டுக்கேடு நக்கரகம் (Nigeria), தென்கொரியா நாடுகளுடனான ஆட்டங்களிலேயே தெரிந்துவிட்டது. இவ்வளவு தூரம் வந்ததே பெரிது. இதற்கு மேல் வரும் சுற்றுக்களை நன்றாக ஆடும் அணிகள் கவனித்துக் கொள்ளும்! போய் வருக!

உலகக் கிண்ணத்தை வென்றால் புஏனசு ஏரெசை ஆடையற்று நக்கமாக ஒரு சுற்றுச் சுற்றி வருவேனக் கிலியைக் கிளப்பியிருந்தார் நம் தியேகோ ஆர்மண்டோ மரடோனா. நல்ல வேளை அந்தக் கண்ணராவியைப் காணுங் கொடுமையிலிருந்து புஏனசு ஏரெசு நகரம் தப்பிக் கொண்டது. அந் நகரின் வரலாற்றிற் பதிவாக வேண்டிய வேறு நல்ல விதயங்கள் வரக் கூடும்.

http://footballintamil.wordpress.com/2010/07/04/காலிறுதி-தியேகோ-அந்தப்-ப/

  • கருத்துக்கள உறவுகள்

10 பிளாப், 7 டாப்!

திங்கள்கிழமை, ஜூலை 5, 2010, 15:31[iST]

கால்பந்துப் போட்டியில் கோல்களின் எண்ணிக்கைக்கு இணையான மதிப்பும், மரியாதையும் கொண்ட எண் ஒன்று உள்ளது. அது எண் 10. இந்த எண்ணுக்குரிய ஜெர்சியை எந்த வீரர் அணிந்திருக்கிறாரோ அவர்தான் அந்த அணியின் பிளேமேக்கர் ஆவார். அவர்களுக்குத்தான் இந்த எண் கொண்ட ஜெர்சி கிடைக்கும்.

இந்த எண் பொதுவாக யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களுக்குத்தான் இந்த எண் கிடைக்கும். சரி 10ம் எண்ணுக்கு மட்டும் ஏன் இந்த விசேஷம்.

1928ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், லண்டன் [^] நகரில் நடந்த செல்சியா,ஆர்சனல் இடையிலான கால்பந்துப் போட்டியில், முதல்முறையாக வீரர்கள் எண்ணுடன் கூடிய ஜெர்சியை அணிந்து ஆட ஆரம்பித்தனர். கால்பந்துப் போட்டியில் எண்ணுடன் கூடிய ஜெர்சி அணிந்து வீரர்கள் ஆடியது அதுவே முதல் முறையாகும்.

அந்தப் போட்டியில் 10ம் எண்ணுடன் கூடிய ஜெர்சி அணிந்த வீரர் சிறப்பாக ஆடியதால் அந்த எண் பிரபலமானது. பின்னாளில் உலகப் புகழ் பெற்ற வீரர்களுக்கு 10ம் எண்ணைத் தருவது பிரபலமானது.

பீலே, மைக்கேல் பிளாட்டினி, மாரடோனா, ரொனால்டின்ஹோ, ஜினெடின் ஜிடேன் என பிரபல வீரர்கள் 10ம் எண் ஜெர்சி அணிந்து ஆடிய பிரபலங்கள்.

ஆனால் நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பத்தாம் எண் ஜெர்சி அணிந்த வீரர்கள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். மாறாக 7ம் எண் ஜெர்சி அணிந்த வீரர்கள்தான் கலக்கி வருகின்றனர்.

10ம் எண் வீரர்களான பிரேசிலின் காகா, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, இங்கிலாந்தின் வேயன் ரூனி ஆகியோர் இந்த முறை பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளனர்.

மாறாக 7ம் எண் ஜெர்சி அணிந்த நெதர்லாந்தின் கியூட், ஸ்பெயினின் டேவிட் வில்லா, ஜெர்மனியின் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டீகர் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெர்மனியின் பாஸ்டியன் அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டார். மெஸ்ஸி அன் கோவின் தடுப்புகளை முறியடித்து ஜெர்மனிக்காக 2 கோல்கள் கிடைக்க காரணமாக இருந்தார். முதல் கோலை அடித்த தாமஸ் முல்லருக்கும், பாஸ்டியன்தான் பந்தை பாஸ் செய்து அபாராமான கோலைப் போட வழி வகுத்தார். 3வது கோலைப் போட்ட பிரட்ரிச்சிக்கும் பாஸ்டியன்தான் பந்தை அழகாக எடுத்துக் கொடுத்தார்.

டேவிட் வில்லாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஸ்பெயின் இதுவரை போட்டுள்ள 6 கோல்களில் 5 கோல்களை வில்லாவே போட்டுள்ளார். 6வது கோல் போடவும் இவரே உதவினார். மொத்தத்தில் ஸ்பெயின் அரை இறுதி வரை வந்ததற்கு வில்லாவின் விஸ்வரூபம்தான் காரணம்.

இப்படி 10ம் எண் ஜெர்சிக்காரர்கள் எல்லாம் புறமுதுகிட்டு ஓட, 7ம் எண் வீரர்கள் கலக்கிக் கொண்டிருப்பது விசித்திரமான ஒரு உண்மை.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 6, ஜூலை 2010 (11:11 IST)

கால்பந்து போட்டி: நெதர்லாந்து உருகுவே இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து உருகுவே அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 19 வது உலக கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் நெதர்லாந்து, உருகுவே, ஜெர்மனி, ஸ்பெயின், பிரேசில், பராகுவே, அர்ஜென்டினா, கானா ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. இவற்றில் இருந்து நெதர்லாந்து, உருகுவே, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 அணிகள் கால் இறுதியில் அபாரமாக செயல்பட்டு அரை இறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் 2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதிப் போட்டி கேப்டவுனில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நெதர்லாந்து உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டி குறித்து நெதர்லாந்து அணி பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விஜ்க் கூறுகையில்,

உருகுவே வலுவான அணியாகும். அவர்களுக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மிகவும் அபாயகரமான போட்டியாகும். அவர்கள் கடைசி வரை போராடும் குணம் படைத்தவர்கள். எனவே நாங்கள் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும் என்றார்.

உருகுவே அணி பயிற்சியாளர் ஆஸ்கர் தரரேஸ் கருத்து தெரிவிக்கையில், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் கடினமானதாகும். இதுவரை அவர்கள் இந்த போட்டியில் எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கவில்லை. அந்த அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களது ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த போட்டியில் அவர்கள் வெற்றி வாய்ப்புடன் தொடங்கினாலும் போட்டி மிகவும் கடினமாக இருக்கும். அதேநேரத்தில் முடியாதது என்பது எதுவுமில்லை என்று கூறினார்.

nakkheran

  • கருத்துக்கள உறவுகள்

உருகுவெயிற்கு இந்த முறை நல்ல அதிஸ்டம் கிடைத்திருக்கின்றது.

விளையாட்டில் உருகுவேயினரின் போர்க்குணம் ஏற்கனவே அறியப் பட்டிருக்கின்றது.

ஆட்டமும் அதிஸ்டமும் சேர்ந்தால் உருகுவேயால் வெல்ல முடியும்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

உருகுவேதான் வெல்ல வேணும் வாத்தியார், அப்பத்தான் நாங்கள் கடைசிக்கு போகாமல் தப்பலாம்! இல்லாட்டில் அரவிந்தனின் புட்பாலில் அகப்பட்டிடுவோம்! :(:(

  • கருத்துக்கள உறவுகள்

உருகுவேதான் வெல்ல வேணும் வாத்தியார், அப்பத்தான் நாங்கள் கடைசிக்கு போகாமல் தப்பலாம்! இல்லாட்டில் அரவிந்தனின் புட்பாலில் அகப்பட்டிடுவோம்! :(:(

நெதர்லாந் தான் இண்டைக்கு வெல்லும் சுவி அண்ணா ஹிஹிஹிஹிஹி :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உருகுவேதான் வெல்ல வேணும் வாத்தியார், அப்பத்தான் நாங்கள் கடைசிக்கு போகாமல் தப்பலாம்! இல்லாட்டில் அரவிந்தனின் புட்பாலில் அகப்பட்டிடுவோம்! :(:(

சுவி & வாத்தியார், நீங்க பயப்படாதேங்கோ...... கடைசி இடம் எனக்கென்று முதலே றிசேர்வ் பண்ணி வைச்சிட்டன். :lol:

.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.