Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகா அவிழ்த்துவிட்ட போர்க்குற்ற தகவல்: ஆடிப்போய் உள்ளது இந்தியா தானாம்

Featured Replies

கோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் சுடப்பட்டனர் - சரத் பொன்சேகா .ளுரனெயலஇ 13 னுநஉநஅடிநச 2009 10:57 செல்வன் . சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப்படியேதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதை சிறிலங்காவின் அரச தலைவருக்கான வேட்பாளர் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட நேர்காணலில் உறுதிப்படுத்தினார்.

போரின் இறுதிக்கட்டத்தின்போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பற்றி தனக்கு எந்தவிதமான தகவல் பரிவர்த்தனைகளும் செய்யப்படவில்லை எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் நோர்வே பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவருக்கான ஆலோசகர் ஆகியோர் மட்டுமே இத்தொடர்பாடலில் இருந்தார்கள் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

”பசில் ராஜபக்சே இத்தகவலை கோத்தபாய ராஜபக்சேக்கு சொன்னதாகவும் அதனை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சே 58 வது படையணிகளின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வாவுடன் தொடர்புகொண்டு சரணடைகின்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லும்படி பணித்திருந்ததையும் பின்னரே அறிந்துகொண்டேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 18 ஆம் திகதி அதிகாலை சர்வதேச வழிகாட்டுதல்களுடன் வெள்ளைக்கொடிகள் ஏந்தியவாறு சென்ற பா. நடேசன் புலித்தேவன் ரமேஸ் உட்பட பல காயமடைந்திருந்த போராளிகள் பொதுமக்கள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே.

இவ்விடயம் தொடர்பாக பிரிகேடியர் சவேந்திர சில்வாவுடன் தொடர்பு கொண்டபோது அவர் இதுபற்றி கருத்துதெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

EELANATION

Edited by vvsiva

போரின் இறுதி கட்டத்தின் போது சரணடைந்த புலிகளின் தலைவர்களை சுட்டு கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டார் அதன்படியே சுட்டு கொல்லப்பட்டார்கள். வன்னியில் இராணுவ தளபதியாக இருந்த 58 வது டிவிசனின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா விற்கு உத்தரவிட்டார் என கூறியுள்ளார் சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு கூறியுள்ளார். சரணடைந்த புலிகளை கைதிகளாக கொண்டுவரவேண்டாம் சுட்டு தள்ளுங்கள் என கட்டளை இட்டவர் பாதுகாப்பு செயலர் கோத்தபாயதான் என கூறியுள்ளார்.

சர்வதேசத்தின் உதவியுடன் புலிகளின் அரசியல் தலைவர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைவதற்கு வந்து கொண்டிருந்தனர் எனவும் குறிப்பிட்ட சரத் பொன்சேகா யார் யார் வந்தார்கள், யார் சுடப்பட்டார்கள் என்ற விபரங்களை சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் அரசியல் பொறுப்பாளர் நடேசன், சமாதான பணிப்பாளர் புலிதேவன் ஆகியோரே இவ்வாறு சரணடைந்தபோது சுடப்பட்டார்கள் என்பது தெரிந்ததே.

மே 19 முன்னர் தாயகத்துடன் தொடர்பில் இருந்த புலத்து பெரியவர்கள், மே 19 இற்குப்பின் புலித்தலைமையைக் கைப்பற்றுவதற்குக் கதை கூறினார்கள். சிங்களம் செய்த சர்வதேச குற்றத்தை வெளியில் சொல்வதைத் தவிர்த்து, சிறிலங்கா தேசத்துடன் சமரச அரசியல் நடத்துவதற்கு எதிரியுடனும், துரோகிகளுடனும் கூடிக் குலாவி அரசியல் உரிமைகளைப் பெறுவோம் எனக் கூறினார்கள். சிங்களம் செய்த தவறை மறந்து, தமிழர் தலைமையின் தவறான வழிநடத்தலால் நாம் தவறு செய்துவிட்டோம் எனப் புதிய கண்டு பிடிப்புகளைக் கூறினார்கள். இப்போது அடக்கி வாசிக்கின்றார்கள்.

சிங்களவர்கள் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பதைச் சொல்வார்கள் என எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வி அடைய இந்த விடயமே போதும். தேசத்தின் மீது பற்றுள்ள சிங்களவர்கள் போன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

மகிந்த குடும்ப ஆட்சி நிலைபெறுவதை இனி இராணுவப் புரட்சி மூலம்தான் தடுக்கமுடியும்.

சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வி அடைய இந்த விடயமே போதும். தேசத்தின் மீது பற்றுள்ள சிங்களவர்கள் போன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

மகிந்த குடும்ப ஆட்சி நிலைபெறுவதை இனி இராணுவப் புரட்சி மூலம்தான் தடுக்கமுடியும்.

பொன்சின் பிரச்சாரங்களுக்கு பின்னால் அமெரிக்க நிறுவனம் ஒண்று செயற்பட்டு வருகிறது... இது சிங்களவர் தமிழர்களுக்கு எதிராக நடத்திய படுகொலைகளஅல்ல.. இது மகிந்த குடும்பத்தால் நடத்த பட்டது எண்று நிறுவ போதுமானது... போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு மகிந்த குடும்பம் மட்டுமே காரணம் எண்று பழியை போட்டு அனைத்து சிங்களவரையும் புனிதர்கள் ஆகிக்கொள்வது புளிக்கவா செய்யும்...??

மகிந்த குடும்பம் மீண்டும் ஆட்ச்சி ஏறினால் சர்வதேச தடைகள் வரும்( பிரச்சாரம் செய்ய மட்டும்) இலங்கை என்னவகையான இன்னல்களுக்கு உள்ளாகும் மக்கள் எப்படி பாதிக்க படுவார்கள் எனும் பிரச்சாரம் ஆரம்பிக்க படலாம்...

ஆக மொத்தம் மகிந்த உண்மையில் நாட்டின் மீது பற்று கொண்டவராக இருந்தால் விலகுவது நல்லது எனும் வண்ணம் சிங்கள மக்கள் சிந்திக்க தூண்டபட்டு இருப்பர்...

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மே மாத காலப் பகுதியில் சரணடைந்த பல போராளிகள் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இவ்வாறு சரணடையும் போராளிகளைச் சுட்டுக் கொல்லும் படி தளபதிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

களமுனைத் தளபதி சவேந்திர சில்வாவிடம் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக இந்த உத்தரவைப் பிறப்பத்ததாக பொன்சேக்கா தெரிவித்தார். அக்காலப் பகுதியில் தான் சீனாவில் இருந்ததால் இது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilstar.org

  • கருத்துக்கள உறவுகள்

Fonseka names assassins of Nadesan, Puleedevan

[TamilNet, Sunday, 13 December 2009, 09:01 GMT]

Former Sri Lanka Army (SLA) Commander and presidential candidate Sarath Fonseka named Defence Secretary Gotabhaya Rajapaksa and Shavendra Silva, commander of army’s 58th division as directly responsible to the assassination of LTTE’s political leaders B. Nadesan, S. Puleedevan and police chief Ramesh, while naming presidential advisor Basil Rajapaksa, Norwegian minister Erik Solheim and various foreign parties as people involved in the episode, The Sunday Leader reported. While Basil Rajapaksa denied communication with Norway, Sri Lanka defence circles refused to comment. Meanwhile, Tamil circles commenting on Fonseka's 'revelations', said both the SLA Commander Fonseka and Commander-in-Chief Mahinda Rajapaksa cannot explain away their involvement in war crimes and the crimes against humanity.

"The International Community has a responsibility to at least conduct an investigation on the last-minute facilitation to which it should have necessary evidences," the Tamil circles further said.

Meanwhile, information has leaked in Norway that a list of names up to 40 political and administrative officials of the Tamil Tigers and a procedure for protection were exchanged during the last moments of May 17 and 18, and that an Austrian national was also involved in the facilitation process.

According to what TamilNet learns, Palitha Kohona had confirmed the procedure used in the arrival of Mr. Ramesh, the Tamil Eelam police chief, and specified a similar procedure of carrying a white flag for the remaining Tiger officials who had sought protection through the last-minute facilitation with the involvement of certain international personalities. Nadesan and Puleedevan had given the list of names which were in turn conveyed to Palitha Kohona through these external personalities and that Nadesan and Puleedevan were the last to leave.

Fonseka in his interview to The Sunday Leader told the paper that he had no information communicated to him on this matter and instead communications were confined to the LTTE leaders, Norway, various foreign parties and Basil Rajapaksa.

“Later, I learnt that Basil had conveyed this information to the Defense Secretary Gothabaya Rajapaksa – who in turn spoke with Brigadier Shavendra Silva, Commander of the Army’s 58th Division, giving orders not to accommodate any LTTE leaders attempting surrender and that “they must all be killed,” Fonseka said.

According to him, Basil and Gotabhaya together, through foreign intermediaries, conveyed the message to the victims, “Get a piece of white cloth, put up your hands and walk towards the other side in a non-threatening manner.”

When followed the message, the three men and their family members were killed by the Sri Lankan troops, between midnight of 17th and early hours of 18th May.

The chief intermediary was Norway’s Erik Solheim, The Sunday Leader said while including the ICRC too in the process.

Sri Lanka’s former Foreign Secretary and present ambassador to the UN, Palitha Kohona appears to be Colombo’s point man in the mediations, the newspaper said.

Fonseka said that he later came to know what exactly had happened through journalists who had been with Shavendra Silva’s Brigade Command at that time.

These journalists were privy to the telephone message from Gotabhaya to the Brigade Commander, ordering the latter not to accommodate surrenders but to simply go ahead and kill them, Fonseka said.

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைய முற்பட்ட புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் தெரிவிப்பு‐

13 December 09 03:13 am (BST)

விடுதலைப் புலிகளின் எல்லாத் தலைவர்களும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். எவரும் சரணடைய அனுமதிக்கப்படக் கூடாது என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே களத்தில் இருந்த முக்கிய இராணுவத் தளபதிக்ளுக்கு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா சண்டே லீடரின் செய்தியாளர் பெரட்றிக்கா ஜான்ஸ்க்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சரணடைய முற்பட்ட மூன்று முக்கிய விடுதலைப் புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்ட வன்னியில் இறுதிக்கட்ட நாட்களில் நடைபெற்ற யுத்தத்தின் தனக்கு தொடர்புகள் இருக்கவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் பல்வேறு வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இது தொடர்பாக எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இவர்கள் சரணடைவதற்கு முன்னதாக பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசின் அதிகாரிகள், அரசாங்கத்தின் பிரதிநதிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு இது தொடர்பாக ஏராளமான குறுஞ்செய்திகளும் பக்ஸ்களும் மின்னஞ்சல்களும் பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாம் எவ்வாறு சரணடைவது என்று அவர்கள் வினவியிருந்தனர்.

பசில் ராஜபக்சவுக்குக் கிடைத்த செய்தியை அவர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக சென்றுள்ளனர்.

இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்க வேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படியே குறித்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அரசாங்கம் மே 18 ஆம் திகதி மோதல் ஒன்றின் போது நடேசன்,புலிதேவன் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் 100க்கு 100 மீற்றர் பிரதேசத்திற்குள் அகப்பட்டிருந்தபோதே இடம்பெற்றது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படையணித்தளபதி சவேந்திர சில்வா, இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய கருத்து தெரிவிக்க மறுப்பு :

சரத் பொன்சேகாவின் இந்த தகவல் தொடர்பில், சண்டே லீடர் 58 வது படையணித்தளபதி சவேந்திர சில்வா, இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய ஆகியோரோடு தொடர்பு கொண்டது. எனினும் அவர்கள் இது தொடர்பாகத் தமது கருத்தை தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இதேவேளை நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் சரணடையப் போகும் விருப்பத்தை தொலைபேசி மூலம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள், சரணடையப் போவதாக நோர்வே தரப்பு தமக்கு அறிவித்திருந்ததாகவும் எனினும் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்னவும் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளராக இருந்தவரும் தற்போது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதருமான பாலித கோஹன, செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கையில், நடேசனிடம் இருந்தும் புலிதேவனிடம் இருந்தும் பல செய்திகளை பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அத்தோடு சரணடைவதற்காக ஒரேயொரு மார்க்கமே உள்ளதென்றும் வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்துடன் சரணடைவதே அவ்வழி எனத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சம்பவத்தின் போது, 58 வது படையணி தளபதி சவேந்திர சில்வாவுடன் இருந்த ஊடகவியலாளர்களே தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற விடயத்தை கூறியதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரே சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக அந்த ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பசில் மறுப்பு :

சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, தாம் நோர்வே தரப்பிடம் இருந்து புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று தலைவர்கள் சரணடையப்போவதான தகவலை அறிந்திருக்கவில்லையா என பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது, இல்லை. தாம் அவ்வாறு கூறவில்லை. ஆனால் நோர்வே தரப்பினர் தம்முடன் தொடர்புக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இது தொடர்பான செய்தி எதனையும் நீங்கள் வழங்கவில்லையா? என அவரிடம் கேட்டபோது நோர்வே தம்முடன் தொடர்புகொள்ளாத முதல் விடயம் நடக்காத போது, இரண்டாவது விடயமும் நடந்திருக்க வாய்ப்பில்லை என பதிலளித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் செய்திகள் தொடர்பாக சண்டே லீடர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18396&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லும் சரத் பொன்சேக்கா நல்லவரா கெட்டவரா :D:lol::D

ஒன்று மட்டும் புரிகிறது உலகத்தில் துரோகிகளும் முட்டாள்களும் மிகுந்த இனம் ஒன்று உண்டு என்றால் அது..............................................................

Edited by வேலவன்

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபாயவா? இந்தியாவா? .Wednesday, 16 December 2009 15:52 கானகன் .எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தால் மகிந்த ராஜபக்சவை விட இந்தியாவே அதிகம் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனெனில், இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொன்சேகா வாய் திறந்தால் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் இந்தியாவும் நீதிமன்றுக்கு செல்லவேண்டியிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

சரத் பொன்சேகா விடயத்தில் இந்தியா ஆரம்பம் முதல் தனது அதிருப்தி அடைந்துள்ளமைக்கு காரணம், அவர் திறமையான இராணுவ தளபதி என்பதோ அல்லது அவர் சீன - பாகிஸ்தான் சார்பானவர் என்பதோ அல்ல. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் தெரிந்த ஒரே ஒருவர் அவர்தான். இதனால்தான், பொன்சேகா அரசியலுக்கு வருவதாக செய்தி வெளிவந்த நாள் முதல் இந்தியா கிலி கொண்டுடிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவதற்காக வெள்ளைக்கொடியுடன் வந்தபோது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுப்படி சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று பொன்சேகா வெளியிட்ட கருத்து இந்திய தரப்பினை அச்சத்தின் விளிம்புக்கு கொண்டு சென்றிருக்கிறது.

ஏனெனில், போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவ வியூகங்களை வகுத்த அனைத்து தரப்பினதும் திட்டப்படி ஓகஸ்ட் மாதமளவில் போர் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திட்டத்தை இறுதியாக்கிவிட்டு பொன்சேகா மே மாதம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

அரங்கேறிய இந்திய திட்டம்

ஆனால், போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும் மேற்குலகத்தின் ஊடாகவும் கடும் முயற்சி எடுத்த அமெரிக்கா, சிறிலங்கா விவகாரத்தில் ஆழமாக செல்வாக்கு செலுத்தி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தி அவர்களை காப்பாற்றப்போகிறது என்பதை அறிந்துகொண்ட இந்தியா, எவ்வளவு அழிவுகள் - மக்கள் இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்தது.

இந்நிலையில், இனிமேல் முன்னேற முடியாது என்ற நிலையில் தனது படையணிகளில் பெரும்பாலனவை விடுதலைப்புலிகளின் தாக்குதலில் முதுகொடிந்த நிலையில் காணப்பட்ட சிறிலங்கா இராணுவத்தை இந்தியா விடவில்லை. படைநடவடிக்கையை நிறுத்தவேண்டாம் என்று கூறி சகல விதமான ஆளணிகளையும் ஆயுதங்களையும் வழங்கி எந்த அழிவை ஏற்படுத்தியாவது விடுதலைப்புலிகளை அழித்தொழிக்குமாறு உத்தரவிட்டது. அக்காலப்பகுதியில் போரை நிறுத்தக்கோரி மேற்குலகம் வழங்கிய அழுத்தத்திலும் பார்க்க கூடுதலான அழுத்தத்தை சிறிலங்கா இந்தியா வழங்கி போரை நடத்தக்கோரியது.

இந்தியாவின் உதவியினாலும் அழுத்தத்தினாலும் ஓகஸ்ட் மாதம்வரை திட்டமிட்டிருந்த படைநடவடிக்கை மே மாதமே முடிவடைந்தது. இந்த நடவடிக்கை நாடு திரும்பிய பின்னரே பொன்சேகாவுக்கு தெரியவந்தது.

இந்தியாவின் மீது விழுந்த இடி

இவ்வாறான ஒரு நிலையில், மகிந்தவுக்கு எதிராக அரசியலில் குதித்துள்ள பொன்சேகா, தான் பதவிக்கு வந்தால் சிறிலங்காவில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிக்கையினால் அதிர்ந்த போன இந்தியாவுக்கு, தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் குறித்து சரத் பொன்சேகா கூறியிருப்பது இடி மேல் இடியாக விழுந்துள்ளது.

பொன்சேகா கூறுவதைப்போல சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேசத்தின் முன் இடம்பெறுமானால் தான் குற்றவாளிக்கூண்டில் நிச்சயம் ஏறவேண்டிவரும் என்பதும் இறுதிப்போரில் இடம்பெற்ற பல போர்க்குற்றங்களுக்கு தனது படைகள் நேரடி காரணம் என்றும் இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்.

பலமான வல்லரசாக வருவதற்கும் வல்லமை மிக்க நாடாகவும் இந்து சமூத்திரத்தில் கோலோச்சுவதற்கு துடிக்கும் இந்தியா, போர்க்குற்ற விசாரணைகளின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுமானால், சிறிலங்கா விவகாரத்தில் இவ்வாளவு காலமும் அக்கறை கொள்ளாமல் உள்ள பெரும்பான்மை இந்தியர்கள், தமது அரசின் மீது காறி உழிழ்வார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சி இனி வாழ்க்கையில் ஆட்சி கட்டிலை மறந்துவிடவேண்டியதுதான். ஆக, மொத்த இந்தியாவையே உலுப்பிவிடும் நபராக இன்று பொன்சேகா என்ற அரசியல்வாதி ஆளும் காங்கிரஸை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

இதனால், பொன்சேகாவை அரச தலைவராக வரவிடுவதில்லை என்பதிலும் பார்க்க அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தி விடுவது அல்லது "வேறு வழியிலாவது" தீர்வை நாடுவது என்ற திட்டத்தில் மகிந்தவின் பக்கமே இந்தியா சாய்ந்திருக்கிறது.

- என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை அதிபர் தெர்தலில் போட்டியிட வைப்பதே இந்தியாவே. இதன்மூலம் தமிழர்களது வாக்குகள் சரத்பொன்சேகாவுக்கு விளாது பார்த்துக்கொள்வதே அவர்களது நோக்கம். சமாதான காலம் தமிழர்கட்கு நிரந்தரத்தீர்வாக ஏமாற்றத்தையே தந்தது ஆனால் வடபகுதியின் தமிழர்கள் சில காலம் மூச்சவிட இதுவே உதவியது அதற்காகவே அவர்கள் ஐதேகவை ஆதரிப்பார்கள். இதைமுறியடிக்கவே சிவாஜிலிங்கம் எனும் கோடரிக்காம்பு.

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை அதிபர் தெர்தலில் போட்டியிட வைப்பதே இந்தியாவே. இதன்மூலம் தமிழர்களது வாக்குகள் சரத்பொன்சேகாவுக்கு விளாது பார்த்துக்கொள்வதே அவர்களது நோக்கம். சமாதான காலம் தமிழர்கட்கு நிரந்தரத்தீர்வாக ஏமாற்றத்தையே தந்தது ஆனால் வடபகுதியின் தமிழர்கள் சில காலம் மூச்சவிட இதுவே உதவியது அதற்காகவே அவர்கள் ஐதேகவை ஆதரிப்பார்கள்.

.....

சரியாகச் சொன்னீர்கள் எழும்ஞாயிறு. கீழே உள்ள பதிவையும் ஒரு முறை பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66860&pid=555912&st=0&#entry555912

வன்னிப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஜெனரல் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தை விட இந்தியாவுக்கே அதிக குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது

தொடர்ந்து வாசிக்க

சிவாஜிலிங்கத்தை அதிபர் தெர்தலில் போட்டியிட வைப்பதே இந்தியாவே. இதன்மூலம் தமிழர்களது வாக்குகள் சரத்பொன்சேகாவுக்கு விளாது பார்த்துக்கொள்வதே அவர்களது நோக்கம். சமாதான காலம் தமிழர்கட்கு நிரந்தரத்தீர்வாக ஏமாற்றத்தையே தந்தது ஆனால் வடபகுதியின் தமிழர்கள் சில காலம் மூச்சவிட இதுவே உதவியது அதற்காகவே அவர்கள் ஐதேகவை ஆதரிப்பார்கள். இதைமுறியடிக்கவே சிவாஜிலிங்கம் எனும் கோடரிக்காம்பு.

அய்யா

சிவாஜிலிங்கத்தின் மீது சும்மா பழி போடாதிங்கள். இரண்டு சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்குப்போட விருப்பமில்லாத தமிழ் வாக்காளர்கள் யாருக்கு வாக்குப்போடுறது? அவர்களுக்கும் ஒரு பன்முகத்தன்மை வேண்டாமா? கூட்டணியை இந்தியாதான் ஆட்டுவிக்குதேன்று இங்கேயே பலபேர் சொனார்கள். அப்பிடியிருக்க இந்தியா கூட்டமைப்பு வேண்டாம் சிவாஜிலிங்கம் போதுமென்று நினைப்பதாக சொல்லுகிறீர்களா?

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் இருந்ததுக்கு புலிகள் மீது பழி போட்டார்கள் இப்போ இந்தியாமீது பழி போடுகிறீர்கள்.

சிவாஜிலிங்கம் தேர்தலில் நிப்பது நல்லதே. தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு தெரிவு கட்டாயம் இருக்கவேண்டும்.

சிவாஜிலிங்கம் மற்றவர்களைப்போல விலைபோகும் ஆளுமில்லை. எது நடந்தாலும் இராஜபக்ச தான் வேல்லபோறான்... அதுக்கு தமிழ் மக்கள் ஏன் குடைபிடிக்க வேண்டும்.

இன்றைக்கு கூட்டமைப்பு யாருக்ககவேன்டியோ போட்டியிடாமல் இருக்கலாம். ஆனால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் இதேமாதிரி யாருக்காகவோ போட்டியிடாமல் இருக்காமல் இருக்க மாட்டார்களா? அப்படி இருந்தால் தமிழர்களின் குரல் என்னவாகும்?

அப்போது வேறுயாராவது கேட்டால் அதுக்கும் piடுயலையய?

பொன்சேகா அவிழ்த்துவிட்ட போர்க்குற்ற தகவல்: ஆடிப்போய் உள்ளது இந்தியா தானாம்

ஐயோ ......... கக்கக்கப்போ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிலிங்கம் மற்றவர்களைப்போல விலைபோகும் ஆளுமில்லை. எது நடந்தாலும் இராஜபக்ச தான் வேல்லபோறான்... அதுக்கு தமிழ் மக்கள் ஏன் குடைபிடிக்க வேண்டும்.

ஒருவகையில் நீங்க சொல்லுற லாஜிக் சரியாத் தான் இருக்கு. எப்பிடியும் மகிந்த தான் வெல்லப் போறான். ஆனபடியால் நாங்கள் இரண்டு போர்குற்றவாளிகளுக்கும் வாக்களிக்காமல் எங்கள் குரலை காட்டலாம்.

ஆனால் சில வேளைகளில் சரத் வெல்ல வாய்ப்பிருந்தால் (சாத்தியக் கூறுகள் < 10%) ஏன் ஒரு இந்திய கைப்பொம்மையை தெரிவு செய்ய நாங்கள் துணை போக வேண்டும்? எங்களின் குரலை உலகத்துக்கு இதுவரையில் ஒன்றல்ல ஓராயிரம் தடவை வெளிப்படுத்தி விட்டோம் (1976 வட்டு தீர்மானத்திலிருந்து). பயன் என்ன? இந்த செவிட்டு உலகம் எங்களின் தார்மீகக் கோரிக்கைகளை என்றேனும் சட்டை செய்யப் போகிறதா?

எம்மைப் பொறுத்தவறை ஒன்று நாகம் இன்னொன்று புடையன். இரண்டும் நச்சுப் பாம்புகள் தான். ஆனால் இந்த நாகம் இந்தியாவெனும் நாசகார சக்தியின் ஏவல் பாம்பு. அந்த ஏவல் பாம்பு வந்தால் இந்திய ஆதிக்கம் எம் மண்ணில் நிரந்தரமாகிவிடும். இந்தியா இலங்கை செய்த போர் குற்றங்களும் அப்படியே சமாதிக்குள் போய்விடும்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகையில் நீங்க சொல்லுற லாஜிக் சரியாத் தான் இருக்கு. எப்பிடியும் மகிந்த தான் வெல்லப் போறான். ஆனபடியால் நாங்கள் இரண்டு போர்குற்றவாளிகளுக்கும் வாக்களிக்காமல் எங்கள் குரலை காட்டலாம்.

ஆனால் சில வேளைகளில் சரத் வெல்ல வாய்ப்பிருந்தால் (சாத்தியக் கூறுகள் < 10%) ஏன் ஒரு இந்திய கைப்பொம்மையை தெரிவு செய்ய நாங்கள் துணை போக வேண்டும்? எங்களின் குரலை உலகத்துக்கு இதுவரையில் ஒன்றல்ல ஓராயிரம் தடவை வெளிப்படுத்தி விட்டோம் (1976 வட்டு தீர்மானத்திலிருந்து). பயன் என்ன? இந்த செவிட்டு உலகம் எங்களின் தார்மீகக் கோரிக்கைகளை என்றேனும் சட்டை செய்யப் போகிறதா?

எம்மைப் பொறுத்தவறை ஒன்று நாகம் இன்னொன்று புடையன். இரண்டும் நச்சுப் பாம்புகள் தான். ஆனால் இந்த நாகம் இந்தியாவெனும் நாசகார சக்தியின் ஏவல் பாம்பு. அந்த ஏவல் பாம்பு வந்தால் இந்திய ஆதிக்கம் எம் மண்ணில் நிரந்தரமாகிவிடும். இந்தியா இலங்கை செய்த போர் குற்றங்களும் அப்படியே சமாதிக்குள் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ

இரண்டு கொலைகாறர்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும்போது...

அதில் எமக்கு மிகவும் ஆபத்தானவன் வெல்லப்போகிற கட்டம்வந்தால்....

ஏதாவது செய்து

அவனை கவுட்டுவிடுவோம் அல்லவா...

அதைத்தான் தமிழ்மக்கள் தற்போது செய்யவேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.