Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் நிலைப்பாட்டில் இப்போ மாற்றம் தெரிகின்றதாம் - சம்பந்த ஐயாவின் கண்டு பிடிப்பு..

Featured Replies

இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம்.என சம்பந்தன் ஐயா நேற்று யாழில் கூறியுள்ளார்.

இந்தியா தான் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன். ஆனால் என்ன திர்ர்வு பற்றி பேசபோகின்றேன் என மக்களிடம் கூறவில்லை.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றுகை யில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சர்வதேசப் பங்களிப்பு குறித்து இங்கு கருத்துக்கூறுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் இனப்படுகொலை நடைபெற்றபின் சர்வதேச சமூகம் எமது விடயத்தில் மிகவும் அக்கறை காட்ட ஆரம்பித்தது. இந்தியா கூடுதல் பங்களிப்புச் செய்தது.

துரதிர்ஷ்டவசமாக ஒரு காலகட்டத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியா ஒதுங்கிவிட்டது. அவர்கள் ஒதுங்கியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஓரளவு அக்கறை காட்டி வந்தார்கள். அவர்களின் பங்களிப்பு பரிபூரணமானதாக இருந்ததாகக் கூறமுடியாது. பல நாடுகளின் நிலைப்பாடு, இந்தியா என்ன செய்கின்றதோ அதன் பின்னால் நிற்போம் என்பதாகும். பல நாடுகளின் ராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வரும்போது அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியா பங்கெடுக்க வேண்டும்; நாங்கள் உதவியாக இருப்போம் என்பதாகும்.

இதை இந்தியாவிற்கு நாங்கள் பலதடவைகள் எடுத்துக்கூறி வந்துள்ளோம். தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக்காண்கிறோம். தமிழர் பிரச்சினை தொடர்பாக தங்களின் பங்களிப்பைச் செய்து நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அவர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை அவதானிக்கின்றோம் நானும் எனது நண்பர்கள் சிலரும் எதிர்வரும் இரண்டு மூன்று நாள்களுக்குள் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றோம். எமது மக்கள் சார்பாக இந்தியாவுக்கு ஒரு விநயமான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன். என்றார்

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன்.

எல்லாரும் உங்க போய்தானே பேச்சுவார்த்தை நடத்துறீங்கள். இங்க எல்லாரும் இந்தியா துரோகியெண்டு கதைக்கினம்.... மகிந்தா போனார் சரத்து போனார் இப்ப நீங்கள். உங்க போய் நீங்கள் திரும்பவும் பட்டம் வேண்ட போறீங்களோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம்"

இந்திய இறையாண்மையையே காணாது இந்திய மக்கள் துடிக்கின்றார்கள். அதை கொலைஞர் கொண்டுபோய் சோனியாவின் முந்தானைக்குள் முடிந்துவைத்து கன காலம் ஆகுது. இப்ப சம்ந்தன் எங்கே மாற்றத்தை கண்டார் என்பது மிகவும் சர்ச்சைக்குரியது.

அதுவும் சோனிய கணவனை இழந்த ஒரு விதவையாக இருக்கும் போது இந்த ஐயாவின் பேச்சு கண்டனத்தற்கு உரியது!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் குச்சிமிட்டாய் குடுப்பான் இந்தியன்.. ஈழத்தவர்கள் அந்த அந்த நாடுகளின் அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்காதவரை.. எல்லோருக்கும் குச்சிமிட்டாய் தான் தருவான்

"தமிழன் எவனும் உரிமைபற்றிப் பேசக்கூடாது" இப்படித்தான் இந்தியா நினைக்கும். இதற்காகத்தானே இந்தியாவினால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டரசிற்குக் கூட அத்தருணத்தில் வலிமையில்லாது போயிற்று. இந்தியாவின் சூழ்ச்சிகளை முறியடித்துத்தான் யுத்தத்தில் வெற்றிபெற்றேம் என்றார் கோத்தபாய. அதற்கு என்ன அர்த்தம் என்றுபுரியாமல் சம் பந்து இந்தியாவை நோக்கி அடிக்கப்பட்டு பறக்கிறது.

எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன். என்றார்

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

முள்ளிவாய்க்காலுடன் இந்தியாவின் ஈழத் தமிழர் மீதான தலையீடுகள் அனைத்தும் முடிவுபெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சம்பந்தருக்கு. எப்பவும் இந்தியாவின் மீது ஒரு மோட்டு நம்பிக்கை. இது எம்மை மீண்டும் அழிவில் தள்ளவே செய்யும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா, உங்கட நண்டுபிடிப்பை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். புலம்பெயர் தேசத்திலையும் சிலர் நண்டுபிடிச்சிருக்கினம் இப்போ இந்தியா தமிழ்ஈழ விடுதலைச் சக்திகளுடன் இணங்கி வருவதாகவும் அனேகமாக இன்னுமொரு ஆயுதப்போராட்டத்திற்கு உதவுவார்கள் எனவும். அதாவது இந்த இருதரப்பும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலை நாளையோ அன்றேல் இன்னம் முப்பது வருடம் கழித்தோ நடாத்துவதற்குத் துணைபோக ஒற்றைக்காலில் நிற்கினம். இந்தியா எனும் தமிழர் இன அழிப்புத்தேசம் தனது சொந்த நேரஅட்டவணையின்படி தமிழர் இன அழிப்பிற்கு ஆயத்தங்களை மேற்கொள்ளும், அப்படியான வேலைகளை கடந்த முள்ளிவாய்காலுடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என இந்த இருதரப்பின்மூலமும் இந்தியாவுக்கு சொல்லுங்கோ. முடிவாக எங்கள் பிரச்சனைகளில் இந்தியா தலையிடாமல் இருந்தாலே போதும். சிங்களவனிலிருந்து எப்படி பிரிந்து செல்வது என்பதைக் காலம் உணர்த்தும். இல்லையேல் சிங்களவனுடன் சேர்ந்து வாழவதா? என்பதையும் அதே காலம் எமக்குணர்த்தும். போக்கிலி இந்தியா .

எல்லாரும் உங்க போய்தானே பேச்சுவார்த்தை நடத்துறீங்கள். இங்க எல்லாரும் இந்தியா துரோகியெண்டு கதைக்கினம்.... மகிந்தா போனார் சரத்து போனார் இப்ப நீங்கள். உங்க போய் நீங்கள் திரும்பவும் பட்டம் வேண்ட போறீங்களோ? :(

இந்தியாவின் தூர நோக்கு வெற்றியடைந்துள்ளது...60வருடங்களாக முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்கள்.முன்பு நடந்த தேர்தல்களின் பொழுது எவரும் இந்தியா செல்வதில்லை ,சுயமாக தேர்தல்களில் இடுபட்டார்கள் ,ஆனால் இம் முறை இந்தியாவின் ஆசிர்வாதம் பெறுவதற்கு கியூஇல நிக்கிறாங்கள்.

அப்ப இந்தியாவின் வேண்டுதலின் பேரில்தான் சரத்துக்கு ஆதரவோ...??

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியாவின் வேண்டுதலின் பேரில்தான் சரத்துக்கு ஆதரவோ...??

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க வாங்க....

உங்களுக்கு இன்னும் நிறையா செய்ய தான் சோனியவும் மன்மோகனும் இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக்காண்கிறோம். தமிழர் பிரச்சினை தொடர்பாக தங்களின் பங்களிப்பைச் செய்து நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அவர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை அவதானிக்கின்றோம் நானும் எனது நண்பர்கள் சிலரும் எதிர்வரும் இரண்டு மூன்று நாள்களுக்குள் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றோம். எமது மக்கள் சார்பாக இந்தியாவுக்கு ஒரு விநயமான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.

ரொம்ப நல்ல விடயம். ஏதோ ஒரு படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை இங்கே நினைவுக்கு வருகிறது.

நல்லது நடந்தால் சரிதான்...- இந்தியாவுக்கல்ல! :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நல்ல விடயம். ஏதோ ஒரு படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை இங்கே நினைவுக்கு வருகிறது.

நல்லது நடந்தால் சரிதான்...- இந்தியாவுக்கல்ல! :lol::(

பிரபாகரன் இல்லாதேசம் ..

வேறு எதைச்செய்யமுடியும்?

வேறு எதைச்சாதிக்கும்?

எமது மக்களின் வாழ்வோ, சாவோ ...... நாம் விரும்புகிறோமோ/இல்லையோ ....... அது இந்தியாவினால்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களின் வாழ்வோ, சாவோ ...... நாம் விரும்புகிறோமோ/இல்லையோ ....... அது இந்தியாவினால்தான்!!

நாமம் என்பது இதுதானா??

நேற்று GTVஇல் வந்து போனது நீங்கள் தானா?

எமது மக்களின் வாழ்வோ, சாவோ ...... நாம் விரும்புகிறோமோ/இல்லையோ ....... அது இந்தியாவினால்தான்!!

இது ஜதார்த்தம்!!! ... இதனை புரியாவிடில் .. ... யாராலும் தடுக்க முடியாது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜதார்த்தம்!!! ... இதனை புரியாவிடில் .. ... யாராலும் தடுக்க முடியாது!!!

காரமான நிபந்தனை...

காலம் பதில் சொல்லும்

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜதார்த்தம்!!! ... இதனை புரியாவிடில் .. ... யாராலும் தடுக்க முடியாது!!!

அட போங்கப்பூ இன்னும் புலம்பெயர்ந்த நாடுகளில் எதற்காக போராட்டங்களை தொடங்காமல் உள்ளீர்கள்..அது இந்தியனாக இருக்கட்டும் வேறு எவனாவது இருக்கட்டும்.. ஜனநாயக வழியில் போராடலாம் இல்லையா? என்ன இந்தியனுக்கு நாலும் உங்களுக்கு ஒன்றும் தான் இருக்கிற்தோ? முதலில் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு பிற்கு இந்தியா..பாட்டி நாடு பேரன் நாடு ..அவரை கொடி உறவு.. சுறக்கொடி உறவு என்று கூறுவதை நிறுத்தவேண்டும்.. நாங்களே இங்கு அடிமைகளாகவே உள்ளோம்...

காரமான நிபந்தனை...

காலம் பதில் சொல்லும்

பார்க்கலாம்

காலம் பதில் சொல்லப்போவதில்லை!!! .... வரலாறு காறி உமிழ்ந்து துப்பும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒரு நாள். இந்தியா சோவியத் யூனியன் போல துண்டு துண்டாக உடையும்( உடைக்கப்படும்) அப்பொழுது தமிழர்களுக்கு உலக வரை படத்தில் 2 நாடுகள் இருக்கும்.தன்னைச் சுற்றி ஒரு நட்பு நாட்டை பேணத் தெரியாத இந்தியா எப்படி வல்லரசாகும்.சீனா ஒரு பக்கத்தாலும் மேற்கு நாடுகள் ஒருபக்கத்தாலும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பயன் படுத்தி பங்கு போடப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒரு நாள். இந்தியா சோவியத் யூனியன் போல துண்டு துண்டாக உடையும்( உடைக்கப்படும்) அப்பொழுது தமிழர்களுக்கு உலக வரை படத்தில் 2 நாடுகள் இருக்கும்.தன்னைச் சுற்றி ஒரு நட்பு நாட்டை பேணத் தெரியாத இந்தியா எப்படி வல்லரசாகும்.சீனா ஒரு பக்கத்தாலும் மேற்கு நாடுகள் ஒருபக்கத்தாலும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பயன் படுத்தி பங்கு போடப் போகிறார்கள்.

என் கனவும் அதுதான்

அதுவரை....??

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்..! :(

இந்தியாவுக்கு மகிந்தவை விட சரத் பலமான நண்பன் எண்டதுக்கு பலமான ஆதாரங்கள், காரணங்கள் இருக்கின்றன... ஒரு வேளை பிபிசி தமிழை நீங்கள் பார்ப்பவராக இருந்தால் அவதானிக்கலாம் RAW வின் நிகழ்ச்சி நிரல் எப்படி இருக்கிறது யாரை ஆதரிப்பதாக இருக்கிறது எண்று...

இதை விளங்கி கொள்ளும் நேரம் தமிழர்களின் போராட்டம் எண்டது இன்னும் ஒரு 30 வருடம் பின்னோக்கி போய் இருக்கும்...

... இந்தியா வேண்டாம், அது எம்மை அழித்தது .... நாம் செய்வோம் .... இல்லை மேற்குலகுடன் சேர்ந்து செய்வோம் ... என்போர் சில நாட்களுக்கு முன் ஐநா வெளியிட்ட அறிக்கையுடன் ... ஏதோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்தோம் ... அது இன்று ...

Ban says Alston acting independently

Tuesday, 12 January 2010 08:08

UN Secretary General Ban ki-moon distanced himself from the controversy arising over the Channel 4 video on Sri Lanka by telling reporters in New York that the UN special envoy on extra judicial killings Philip Alston, who released a report on it last week, is acting independently.

... சாண் ஏற, முழம் ...... நிலைதான்!! ... இன்று மேற்குக்கும், அங்கு சீனா சார்பு அரசு இருக்கக்கூடாது என்பதே கவலை ... , இல்லை மகிந்த வென்றால் ... நிச்சயமாக மேற்குடன் உடன் உறவுகளை வழக்கும் அல்லது அதற்காக சீன சார்பு நிலையையும் மாற்றலாம்!! .. அதைவிட அண்மையில் அமெரிக்க செனட் குழு ஒன்றின் அறிக்கையும் ... இலங்கையுடன் முரண்பாட்டு முறையை தவிர்க்க வேண்டும் என்பது போலவே உள்ளது!!

இல்லை, நாம் ஏதாவது செய்யலாமெனில் உலகம் விடமாட்டாது!!! ... "எதிரிக்கு எதிரு நண்பன், எனும் லாஜிக்கெல்லாம் 9/11 உடன் போய்விட்டது. ..."

... இன்றைய நிலையில் பிராந்திய அரசியலுக்கு ஏற்ப நகர்வுகளை மேற்கொள்வதும் .... .. அத்துடன் காலம் கனியும் மட்டும் காந்திருப்பதும் தான் இன்றைய அரசியல் எமக்கு!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரும்பவும் சேற்றுக்குள் கிழடுகளின் கால்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.