Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:lol::D:lol:
  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply

நல்லாயிருக்கு அங்கிள்

தீபாவளிக்கு என்ன பலகாரம் அங்கிள் வீட்டில

நல்லாயிருக்கு அங்கிள்

தீபாவளிக்கு என்ன பலகாரம் அங்கிள் வீட்டில

ஏன் நித்திலா அங்கிள் வீட்டை போகப்போறிங்களா? நானும் வரட்டா?

:lol::lol::lol::D

எண்டாலும் பொன்னம்மாக்க இப்படிச் சொல்லி இருக்ககூடாது :cry: :cry: :cry: :cry:

:lol::lol::lol::D:D

:lol::lol::lol::D

பொன்னம்மாக்காக்கு...முகத்தார

தீபாவளி ரீலீஸ் நல்லாயிருக்கு முகத்தார். இனி ஒரு பேப்பரிலும் தொடர்ந்து வெளிவருமா முகத்தார்?

இன்றுதான் இந்த முகத்தார் வீடு என்னும் பக்கத்தினைப்பார்த்தேன். முகத்தார் உண்மையிலேயெ நேரில் நடக்கும் சம்பவங்கள் போல உள்ளன. உங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் ஆவலுடன்..

இருவிழி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா பாராட்டுக்கள் :lol::lol: :P :D:D:lol::D:D:D :P :P :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் கலக்கின்றீர்கள். யாருடைய கதையை கேட்டும் நிறுத்திவிடாதீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்

முகத்தார் வீடு - அங்கம் 6

வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்

பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ

வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்

பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்

:lol::lol::lol:

நல்லா எழுதுறீங்க ... தொடர்ந்து எழுதுங்க எங்களுடைய ஆதரவு எப்பவும் உங்களுக்கு இருக்கு... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol:
  • தொடங்கியவர்

ஆனால் யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம் யுனிக்கோட் பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?

நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை முகத்தார் உங்கள் ஆக்கம் தொடர்ந்து வரவேண்டும் என வேண்டுகின்றோம். எல்லாருடைய விருப்பத்துக்கும் நாம் தாளம் போடவேண்டிய தேவை எமக்கு கிடையாது. இப்பக்கம் 10 க்கு மேல் இருக்கின்றது என்றால் உண்மையில் வாசகர்களின் விருப்பு தான் காரணம். இது ஒருத்தருடைய விருப்புக்களை மட்டும் புூர்த்தி செய்யமட்டும் அமைக்கப்பட்ட தளமல்ல. இது பற்றி தீர்மானிப்பது பொறுப்பாளரே தவிர வேறு எவருமல்ல. நீங்கள் ஏன் இது குறித்து அலட்டிக் கொள்கின்றீர்கள்.

உங்களின் அடுத்த ஆக்கத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம்

ஆமா தூயவன் சொல்வது தான் எனது கருத்தும். உங்களின் எல்லா பகுதிகளையும் பார்த்து ரசித்து விட்டு இப்போ மட்டுமா இது சரியில்லை என்று அவர்களுக்கு தெரிகின்றது. அட சீ எட்டப் பழம் புளிக்கும் என்பது மாதிரி தான் அவர்களின் கருத்து.... அங்கிள் உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு. இந்த முகத்தார் பகுதியில் மட்டுமல்ல எல்லா பகுதிகளிலும் நகைச்சுவையுடன் கருத்துக்கள் வைப்பதில் நீங்கள் வல்லவர். உங்கள் நகைச்சுவைகளை நாங்கள் ரசிக்கின்றோம். நகைச்சுவை மட்டுமல்ல பல கருத்துக்களையும் அதில் தருகின்றீர்கள். ஆகவே தொடர்ந்து உங்கள் ஆக்கத்தை தாருங்கள். எதிர்பார்க்கின்றோம்

முகத்தார் தாத்தா நீங்களே இப்படி சொல்வது நல்லா இருக்கா? உங்கள் கருத்து சிலருக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்கள் இப்பக்கத்திற்கு வரத்தேவையில்லையே! கருத்துக்களிற்கு பதிற்கருத்து எழுதுவதை விட்டுவிட்டு தனிநபர்களைச் சீண்டிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது இந்தப் பக்கத்திலும் கைவைக்கப் பார்க்கிறார்கள். இக்களத்தில் அவர்களிற்கு இருக்கும் சுதந்திரம் உங்களிற்கும் இருக்குத்தானே. நாம் ஏன் மற்றவர்களிற்காக எமது உரிமையினை விட்டுக்கொடுப்பான். இவ்வளவு காலமும் இதனைப்பார்த்து இரசித்தவர்களிற்கு இப்போது என்ன நடந்ததாம். ஏன் தாம் எழுதும் பக்கத்தில் யாரும் பதில் கருத்து எழுதவில்லை என்ற காரணமா? அல்லது தம்மீது மற்றவர்கள் கவனத்தைத் திசைதிருப்பவா?

தாங்கள் எழுதும் கருத்தே சில சமயங்களில் தெரியாமல் இருக்கும் இவர்களின் கருத்தை யார்தான் படித்துப் புரிந்து பதிலெழுதுவார்கள். ஒரு கருத்தை எழுதினால் அதனை மற்றவர்களும் புரிந்து கொள்ளக் கூடியவாறு எழுத வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உண்டு. அதனை அவர்கள் முதலில் உணரவேண்டும். அவர்கள் உணர மறுக்கும் பட்சத்தில் அவர்களின் பேச்சை கருத்திலெடுக்க மாட்டார்கள். இதுவே அவர்களின் கருத்துக்களிற்கும் நடந்தது என்பதை அறியாமல் மீண்டும் மீண்டும் கூச்சல் போட்டு பிரயோசனம் இல்லை.

முகத்தார் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ கவலைமறந்து சிரிக்கப் பலருளோம் களத்தில். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வார்கள், இல்லாட்டி நாம் நோயாளிகளாய் மாறவேண்டியதுதான்.

முகத்தாரண்ணை காய்க்கிற மரத்துக்குதான் கல்லெறிபடும், உங்கடபக்கம், பக்கம் பக்கமா காய்ச்சு தொங்குது, சனமும் நல்லா வந்து போகுது, ஒருபேப்பர் காறனும் எடுத்து போடுறான், தரமானதுக்கு விளம்பரம் தேவையில்லை தானா விலை போகும், தரமற்ரசரக்குதான் கூவிகூவி வித்தாலும் வாங்க நாதிவராது, இது இயற்கையாய் வரும் பொறாமை, இதற்கு முக்கிய காரனம் முயலாமை. நகைச்சுவை அனைவருக்கும் வராது, உங்களுக்கு வந்திருக்கிறது, அதை சனம் படித்து சுவைக்கக்கூடிய விதத்தில் அழகாக எழுத்தில்வடிக்க உங்களுக்கு தெரிந்திருக்கிறது, ஜயா படிக்க நாங்கள் இருக்கிறோம், விடுங்கள் கவலை, தூக்குங்கள் எழுதுகோலை, வரையுங்கள் பக்கம் பக்கமாக, தருக்கர்கள் ஓடிமறைவர்.

முகத்தார் என்ன நீங்கள் வேற. உங்கள் போன்றோரின் ஆக்கங்கள் தானே கள உறவுகளை உற்சாகப்படுத்துகின்றன. நீங்களே இவ்வாறு கூறினால் எப்படி. நீங்கள் எங்களுக்கு வளிகாட்டியாக இருக்கக் கூடாதோ? எழுதுங்கள் படிக்க ஆவலோடு உள்ளோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார்

முகம்ஸ் இது நல்லாவே இல்லை உங்கள் முகத்தார் வீட்டில் மறைமுகமாக எத்தனை கருத்தை முன்வைத்தீர்கள். சினிமா பற்றி முதியநடிகர்கள் பற்றி சிரிக்கவம் அரசியல் பற்றி சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய வாறு உங்கள் முகத்தார் வீடு அமைந்திருந்தது. வாசித்து மிகவும் ரசித்து இதுபற்றி குடும்ப சகிதம் பேசினோம். உங்கள் ஆக்கம் ஒரு பேப்பரில் வந்தது அதையும் இங்கு குறிப்பிட்டிருந்தேன். உங்கள் தொடருக்கு எங்களைப்போன்ற ரசிகர்கள்

இருக்கிறார்கள். து}ற்றுபவர்கள் து}ற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும் நீங்கள் செய்வது சரி என்றால் தொடர்ந்து செய்வதில் என்ன தயக்கம். நீங்கள் எழுதிய தொடர்மு}லம் யாருக்கு என்ன நட்டம் வந்தது. சும்மா இப்படித்தான் சீசனுக்கு சீண்டிப்பாக்க ஆள் இல்லாவிட்டால் பேசுவார்கள் போல. அதை கணக்கில் எடுக்காது. உங்கள் தொடரை இங்கு தொடர வேண்டுகிறோம். தயவு செய்து நிறுத்தாதீர்கள்.

உங்கள் கருத்துக்கள் களத்தை எந்தவிதத்திலும் பதித்தா?? பிறகேன் உறுப்பினர்களின் பேச்சைக்கண்டு ஒதுங்குகிறீர்கள். நிர்வாகத்தில் இருந்து எதுவும் சொல்லவில்லையே முகம்ஸ். தாழ்மையான வேண்டுகோள். களத்திற்கு வருகிற எல்லா உறுப்பினர்களும் பார்வையாளர்களும் புளொக்ஸ் செல்வது குறைவு. அதனால் இங்கும் பிரசுரியுங்கள். தொகுப்பாக அது வரட்டும். அவர்கள் உறுப்பிர்கள் என்றால் அப்படித்தான் யாரையோ பேச பாவம் நீங்கள். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தாரண்ணா.....குறுக்கால போவான் அண்ணா வேற இதுகள தான் சொல்லியிருக்கிறார் எண்டு நினைக்கிறன்.... உங்கள அவர் சொல்லேல.....உங்கட பகிடிகள் சிரிக்கிறதுக்கும் சிந்திக்கிறதுக்கமாக இருக்குது.... இது பிரியோசனமாவும் இருக்குத்தானே.... சும்மா சினிமா நடிகைகளின்ர அந்தரங்கங்கள பற்றி அங்கால கதைக்கினம் தானே... அததான் குறுக்் அண்ணா சொல்லியிருக்கிறார்.....நீங்கள

நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார் :lol::lol::lol:

முகத்தார் ஐயா நாங்கள் உங்கள் எழுத்துகளை

மிகவும் விரும்பிப் படிக்கிறோம்.. தயவு செய்து

தொடர்ந்து எழுதுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எங்கள் அங்கிள்

அங்கால பொன்னமாக்கா பிரச்சனை எண்டால், இப்பக்கம் இவர்கள். ஒரு பக்கமாவது தப்ப வேண்டும் என்று தான் இந்த முடிவு போல. :wink:

முகத்தார் ஐயா நாங்கள் உங்கள் எழுத்துகளை

மிகவும் விரும்பிப் படிக்கிறோம்.. தயவு செய்து

தொடர்ந்து எழுதுங்கள்...

ஆமாம் தாத்தா நீங்கள் எழுதுங்கோ. நான் சிரிக்கணும் உங்க நகைச்சுவை நிரம்பிய எழுத்துக்கள் பார்த்து :P

  • கருத்துக்கள உறவுகள்

அடே முகத்தான் இதுக்கெல்லாம் போய் சோரலாமோ பார் பிள்ளையள் எவ்வளவு ஆசையா இருக்கினம் கருத்து சொல் எல்லாருக்கும் உரிமை இருக்கு அவை அவையளின்ரை கருத்தை சொல்லட்டும் நீ தொடந்து எழுதப்பு நானும் நேரம் கிடைக்கேக்கை புகுந்து விழையாடுறன் :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.