Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துப் பொறியியப் பொலிகாளை ஒருத்தரின் இன்றையவிலை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அவர்களே இதைப்போய் யாழ்ப்பாணத்தில் அடுப்படியில் வெந்து சுண்ணாம்பாகிக் கிடக்கும் பெண்களிடம் கேட்கவும். புலம்பெயர் நாடுகளுக்கு வரும்போது அனேகர் தங்களுக்குக் கடவுச்சீட்டு எடுத்தார்களோ (அது ஏஜன்சிக்காரனின்ர பொறுப்பு) தெரியாது ஆனால் இந்தச் சாதிக்குமட்டும் தனியாகக் கடவுச்சீட்டு எடுத்துப் பத்திரமாகக் கொண்டுவந்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் மேடைகளில், தெரிந்தவர்களுடன் உரையாடும் போது சீதனம் வாங்குபவர்கள் கோழைகள் என்று சொல்லுவார். ஆனால் தன்னுடைய மகனுக்கு இவ்வளவு சீதனம் வைத்தால் தான் கல்யாணப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றார். தனது மகள்மாருக்கு சீதனம் கேட்காதவர்களைப் பார்த்துத்தான் கட்டி வைத்தார். அவரது வீட்டுக்கு ஒரு சட்டம் ,மற்றவர்களுக்கு வேற சட்டம்.

அப்பு...............உங்களுக்கு அந்த காலத்தில நல்ல சீதனம் தந்தவையளோ?

அப்பு...............உங்களுக்கு அந்த காலத்தில நல்ல சீதனம் தந்தவையளோ?

புத்தன் என்ன வயித்தெரிச்சல் போல இருக்குது. இன்னமும் காலம் போகேல்லை கூட்டணி சேர்ந்து சீதனம் கேட்க. நானும் உங்கட கட்சிக்கு சப்போட் பண்ணுறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது பிள்ளைகளுக்கு சொல்லியுள்ளேன் சீதனம் வாங்கக்கூடாது என்று.

ஆனால் எனக்கொரு சந்தேகம்

ஒரு ஆண் கடினமான பாதைகளைக்கடந்து பணம் செலவுசெய்து ...படித்து நல்ல தொழிலுக்கு வந்ததும்

அவரது அத்தனை துன்பங்களையும்படாது....படிப்பும் வராது இருந்த.... தனது மகளுக்கு அந்த வரனை மடக்கப்பார்க்கும்போதுதான் சீதனம் உருவாகிறது...இதை நியாயப்படுத்துகின்றீர்களா....?

எவ்வாறு இதை ஒழிக்கமுடியும்.....???

நீங்கள் யதார்த்தத்திற்கு எட்ட நிற்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உலகம் பூரா பணக்காரன் ஏழை.. வெள்ளையன் கறுப்பன்.. இந்து முஸ்லீம் கிறிஸ்தவம்.. என்று மனிதருக்குள் மனிதப் பாகுபாடுகள் பல வடிவங்களில் படர்ந்து போய் உள்ளன.

எம்மவர்கள் இன்னும் சாதியில் ஊறித்தான் கிடக்கின்றனர். கடந்த போராட்ட காலம் சாதியத்தின் மந்த காலம் என்றால் இப்போ அது தங்கு தடையின்றி துளிர்விடும் காலமாகி விட்டிருக்கிறது.

புலத்தில் இருக்கும் எட்டு லட்சம் பேரில் உள்ள இளம் சந்ததியில் எத்தனை பேருக்கு "சாதி" என்கின்ற வார்த்தை தெரியும் ?

அல்லது கொழும்பில் இருக்கும் ஐந்து லட்சத்தில் உள்ள இளம் சந்ததியில் எத்தனை பேருக்கு "சாதி" என்கின்ற வார்த்தையின் உண்மைச் சொரூபம் தெரியும் ? :D

எங்க‌ட‌ ச‌ந்த‌தியை விடுவோம்.( போன‌ ச‌ந்த‌தியை விட எங்கட சந்ததி எவ்வளவோ பரவாயில்லை!)‌

நாக‌ரீக‌ வ‌ள‌ர்ச்சியில் சாதி போன்ற‌ பிற்போக்குத் த‌ன‌மான‌ சிந்த‌னைக‌ள் அழிந்து போவ‌து தான் இய‌ற்கை. அடுத்த‌ ச‌ந்த‌தியில் சாதியின் எச்ச‌ சொச்ச‌ங்க‌ள் தான் மிஞ்சும் !

  • கருத்துக்கள உறவுகள்

.

சீதனம் வாங்காமல் ஒரு ஆம்பிளை கலியாணம் கட்ட வெளிக்கிட்டால்......

ஊருக்குள்ளை சனம், மாப்பிள்ளைக்கு ஏதோ..... குறைபாடு இருக்குது, எண்டெல்லோ கதைக்குது. dancing%20irish%20smiley.gif

இதுக்காகவெண்டாலும் கொஞ்சமா சீதனம் வேண்டினால் தப்பில்லை.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அளவு கணக்கிலாமல் கொடுத்தால் பெண்ணுக்கு ...........எதோ என்று நினைக்க் மாடார்களா? அளவோடு கொடுத்து வாங்கி ....(பணம் ) வளமோடு வாழ்க

அது என்ன ஐயா பொறியியப் பொலிகாளை? Engineer என்றால் பொறியியலாளர் என்று தானே சொல்லுவம்? இதென்ன காளை கன்றுக்குட்டி என்றுகொண்டு. வைத்தியரை எப்பிடி சொல்லிறது? உடலியல் கிலிகாளை? காளையென்று சொல்லி ஆண்களை மாத்திரம் கெளரவிச்சு இருக்கிதே. பெண்களையும் பொலிகாளை என்றோ சொல்லிறது? தமிழ் அறிஞர்கள் தனிநாடு என்று எல்லாம் வாயுக்காலை பேசிக்கொண்டு இருந்தாலும்.. இன்னும்தான்.. தங்கடை அடி உள்ளத்தில பெண்களுக்கு சம உரிமை கொடுத்து சிந்திக்க இல்லைப்போல.

Edited by மச்சான்

பெண்கள் ஆண்களுக்கு சீதனம் குடுகிறது பழைய காலம்.

சொந்தத்தில் தாய்வழியில் மச்சாள்மார் யாரும் கொஞ்சம் வடிவா இருந்தால் காணும், எங்கடை ஆட்கள் படுகிற பாட்டை பார்க்க வேணும்... அதிலும் மாமி, (மாமன்மார் லேசில சொல்லுறது இல்லை) 'அவள் உனக்குத் தானடா' என்று சொன்னால் போதுமே... குதிக்கால் பிரடரியில அடிக்கிற கணக்குக்கு ஓடி, ஓடி எல்லா வேலையும் தாங்களே செய்து குடுப்பினம்...மாமியாருக்கு சீதனம் குடுத்து, மச்சாளைக் கட்டுவினம்.

இதுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரிய இல்லை. தமிழர்கள் யாரும், யாருக்கும் சளைச்சவர்கள் இல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் மச்சான் அவர்கடகு, எங்கட ஊரில சங்கரன் என்பவர் மாட்டுப்பண்ணை வைத்திருந்தார் அவ்வேளையில் ஊரில் உள்ள ஆடு, மாடுகளை சினைபிடிக்க வோண்டுமாகவிருந்தால் அங்கேதான கொண்டுபோவார்கள். அதை யாழ்ப்பாணத்தில் மாட்டுக்கு விடுவது ஆட்டக்கு விடுவது எண்டுதான் வழக்கமாச் சொல்லுறது. ஆனால் அவரிடம் பல இனங்களில் கிடாய் மற்றும் நாம்பன்மாடு ஆகியன இருக்கும் நாங்கள் கொண்டுபோகிற மறியாடு அல்லது பசுவின் ஒடல்வாகுக்குத்தக்கமாதிரி அவர் இணையைத் தெரிவுசெய்வார் எங்கட ஆசைக்கு அவரிடம் இருக்கும் கண்ணுக்கு லட்சணமான மாட்டைக்காட்டினால் அவர் மறுத்துவிடுவார், காரணம் பிறகு ஆடோ, பசுவோ ஈணும்போது குட்டி பெரிசாக இருந்தால் வில்லங்கம் எண்டுறதுக்காக. அது சரி மச்சான் இப்ப உங்கட கேள்விக்கு வாறன் இந்தியாவில் இப்படியான நாம்பன் மாடுகளை பொலிகாளை எண்டுதான் அழைப்பார்கள். நான் கூறவந்த விடையத்தின் கதாநாயகன் பொறியியல் படிப்புப் படித்ததாலை "பொறியியல்ப் பொலிகாளை"

பொறியியற் பொலிகாளை ஒரு சொல் என்று நினைத்துவிட்டேன். வைத்தியரை மருத்துவ பொலிகாளை, கணக்கியலாளனை கணக்கியற் பொலிகாளை என்று சொல்லலாமோ? சரி, பெண்களை எப்படி சொல்லிறது? பொறியியற் பொலிபசு, மருத்துவ பொலிபசு, கணக்கியற் பொலிபசு..? பொலிகாளைக்கு இணையான பெண்பால் என்ன என்று தெரிந்தால் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு...............உங்களுக்கு அந்த காலத்தில நல்ல சீதனம் தந்தவையளோ?

சீதனம் வாங்காமலேயே அடி விழுகுது. சீதனம் வாங்கினால் இன்னும் விழும். சிட்னியில் சீதனம் வாங்குவோரின் எண்ணிக்கை இப்ப மிகவும் குறைவு.

புத்தன் என்ன வயித்தெரிச்சல் போல இருக்குது. இன்னமும் காலம் போகேல்லை கூட்டணி சேர்ந்து சீதனம் கேட்க. நானும் உங்கட கட்சிக்கு சப்போட் பண்ணுறன். :lol:

ஆதரவு குடுக்கப் போய் இன்னும் சீதனம் உங்களிடம் கேட்டால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அவர்களே இதைப்போய் யாழ்ப்பாணத்தில் அடுப்படியில் வெந்து சுண்ணாம்பாகிக் கிடக்கும் பெண்களிடம் கேட்கவும். புலம்பெயர் நாடுகளுக்கு வரும்போது அனேகர் தங்களுக்குக் கடவுச்சீட்டு எடுத்தார்களோ (அது ஏஜன்சிக்காரனின்ர பொறுப்பு) தெரியாது ஆனால் இந்தச் சாதிக்குமட்டும் தனியாகக் கடவுச்சீட்டு எடுத்துப் பத்திரமாகக் கொண்டுவந்துவிட்டார்கள்.

அப்ப நீங்களும் அதுக்கெண்டு(சாதி சாதி) தனியாய் பாஸ்போட் எடுத்து கொண்டுவந்திருக்கிறியள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஐயா, பின்ன என்ன அதுக்கெண்டு நானும் தனியா பாஸ்போட் எடுத்துக்கொண்டு வராட்டில் சபசந்தியளில யாழ்ப்பாண பீலிங் வராதுகாணும்.

உப்பிடித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் மேடைகளில், தெரிந்தவர்களுடன் உரையாடும் போது சீதனம் வாங்குபவர்கள் கோழைகள் என்று சொல்லுவார். ஆனால் தன்னுடைய மகனுக்கு இவ்வளவு சீதனம் வைத்தால் தான் கல்யாணப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றார். தனது மகள்மாருக்கு சீதனம் கேட்காதவர்களைப் பார்த்துத்தான் கட்டி வைத்தார். அவரது வீட்டுக்கு ஒரு சட்டம் ,மற்றவர்களுக்கு வேற சட்டம்.

வயது போன காலத்தில அரைகுறை தகவலை வைத்துக் கொண்டு, அதிக பிரசங்கித்தனம் பண்ணக்கூடாது. வேண்டி, வேண்டியதுக்கு மேலால குடுத்து நொந்து நொடிந்து போனவங்களும் இருக்கிறாங்கள் அப்பு....

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டி, வேண்டியதுக்கு மேலால குடுத்து நொந்து நொடிந்து போனவங்களும் இருக்கிறாங்கள் அப்பு....

உது பறவாயில பிரித்தானியாவில எனக்குத்தெரிந்த ஒருவர்,சீதனம் வாங்காமல் 8000 பவுண்ஸ் கட்டி, வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்திருக்கிறார். அவர் 8000 பவுண்சுக்கு வட்டியும் கட்ட வேண்டிய நிலை. வெளினாடு வந்தவுடன் ,அந்தப் பெண்மணி அவரைப் பாருங்கோ பெண்ஸ் கார் வைத்திருக்கிறார், இவரைப் பாருங்கோ பெரிய வீட்டில இருக்கிறார் என்று ஆக்கின கொடுக்கத்தொடங்கி மனுசனுக்கும் அடியும் கொடுக்கிறார். 8000 பவுண்சு குடுத்து அடிவாங்குகிற ஆண்களும் இருக்கினம்.

சும்மா பின்னிட்டீங்கள் கந்தப்பு. இனியாவது உறைக்கிதோ என்று பார்ப்பம்.

என்ன கந்தப்பு, கவி அக்கா.. உள்வீட்டு சமாச்சாரத்தை நாற்சந்தியில கொண்டுவந்து கொட்டுறீங்கள் போல இருக்கிது. ஏதோ அந்த பாவப்பட்ட ஜென்மம் கந்தப்புவாய் இல்லாவிட்டால் சரி. கந்தப்பு தன்ர சொந்தக்கதையை சொல்ல இல்லைத்தானே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

. வேண்டி, வேண்டியதுக்கு மேலால குடுத்து நொந்து நொடிந்து போனவங்களும் இருக்கிறாங்கள் அப்பு....

அதுக்குதான் சொல்லுறம் வாங்ககூடாது என்று ....வாங்கின படியால் தானே கொடுக்க வேண்டிகிடக்குது... நான் எல்லாம் கொண்டு வந்த சீதனத்தின்ட திறத்தில என்று சொல்லி தப்பிவிடுவன் பாருங்கோ.... :lol::huh:

  • கருத்துக்கள உறவுகள்

உது பறவாயில பிரித்தானியாவில எனக்குத்தெரிந்த ஒருவர்,சீதனம் வாங்காமல் 8000 பவுண்ஸ் கட்டி, வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்திருக்கிறார். அவர் 8000 பவுண்சுக்கு வட்டியும் கட்ட வேண்டிய நிலை. வெளினாடு வந்தவுடன் ,அந்தப் பெண்மணி அவரைப் பாருங்கோ பெண்ஸ் கார் வைத்திருக்கிறார், இவரைப் பாருங்கோ பெரிய வீட்டில இருக்கிறார் என்று ஆக்கின கொடுக்கத்தொடங்கி மனுசனுக்கும் அடியும் கொடுக்கிறார். 8000 பவுண்சு குடுத்து அடிவாங்குகிற ஆண்களும் இருக்கினம்.

கந்தப்பு அவர் 8000 பவுண்ஸ் கொடுத்து காஞ்சு போன பசுவை ஊரில போய் வாய்க் கொண்டு வந்து அதற்கு செழிப்பான நல்ல புற்தரையைக் காட்டினால் அது என்ன செய்யும். அங்க இங்க ஒப்பிடும்.. எங்க பச்சை அதிகம் என்று தேடும்.. இப்படிப் பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அவரின்ர சுயநலம் காஞ்ச மாட்டை இலகுவா கட்டிப்போடலாம் என்றது. அது அவற்றை எதிர்பார்ப்பை மீறி திமிறிறதும் நடக்கத்தான் செய்யும்.

இதுதான் சொல்லுறது தகுதிக்கேற்ற.. ஒன்றை தேடிப் பிடிக்கனும் என்று. இந்தக் காலத்தில ஐயோ காஞ்ச பசுவா இருக்கே என்று இரக்கப்பட்டியல் அது பின்னாடி ஊதிப் பெருத்த பின் உதையத்தான் செய்யும்..! இப்ப பசுக்களை வாங்கும் போது மிகக் கவனம் அவசியம்..! குறிப்பா காஞ்ச பசுக்கள்.. செழிப்பான பசுக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பா காஞ்ச பசுக்கள்.. செழிப்பான பசுக்கள்.

இன்னும் சிறிது விபரமாக விளக்கவும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உது பறவாயில பிரித்தானியாவில எனக்குத்தெரிந்த ஒருவர்,சீதனம் வாங்காமல் 8000 பவுண்ஸ் கட்டி, வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்திருக்கிறார். அவர் 8000 பவுண்சுக்கு வட்டியும் கட்ட வேண்டிய நிலை. வெளினாடு வந்தவுடன் ,அந்தப் பெண்மணி அவரைப் பாருங்கோ பெண்ஸ் கார் வைத்திருக்கிறார், இவரைப் பாருங்கோ பெரிய வீட்டில இருக்கிறார் என்று ஆக்கின கொடுக்கத்தொடங்கி மனுசனுக்கும் அடியும் கொடுக்கிறார். 8000 பவுண்சு குடுத்து அடிவாங்குகிற ஆண்களும் இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சில சிக்கல்கள் நடந்துவருகின்றன

எனது ஒன்றுவிட்ட தம்பிக்கும் இதேபோல் நடந்தது

இவரிடம் காரும் இல்லை

கார் ஓடுவதற்கான பத்திரமும் இல்லை

திருமணம் முறையாக செய்யும்வரை அவரது மாமனார் வீட்டில் விட்டிருந்தான்

எங்காவது முக்கியமாக விசா சம்பந்தமாக போவதாக இருந்தால்அவருடைய சினேகிதனுடன் காரில் அடிக்கடி கணவரும் மனைவியுமாக போய்வருவார்கள்

சில நாட்களில் இவரை வெறுக்க ஆரம்பித்தார்

நாங்கள் விசாரித்ததில் சினேகிதன் மீத சந்தேகம் வந்தது

நாங்கள் அவாவை ஒன்றும் செய்யவில்லை

சினேகிதனை முறித்துவிட்டு..

இவவை மாமானுடன் விட்டுவிட்டு...

தம்பிக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவை மிகக்குறைவானவை

பெண்களுக்கு நடப்பவைகளுடன் ஒப்பிடும்போது..

ஆனால் பெண்கள் வெளியே சொல்லாது மறைத்துவிடுவார்கள்

நாமும் பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினையென்றால்.....

அடக்கி வாசிப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.