Jump to content

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புள்ளி வச்சு அழகு பார்க்கிறதுக்கென்றே ஒரு குருப் அலையுது போலயே.........

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் எனக்கு ஒன்று தெரிய வேண்டும் பெண்களை ஏமாற்றும் ஆண்களை என்ன வார்த்தையில் சொல்லுவீர்கள்?

இல்லை ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதே இல்லை என்கிறிர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு ஒன்று தெரிய வேண்டும் பெண்களை ஏமாற்றும் ஆண்களை என்ன வார்த்தையில் சொல்லுவீர்கள்?

இல்லை ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதே இல்லை என்கிறிர்களா???

ஆண்கள் பெண்களை ஏமாற்ற பெண்களே அதிகம் காரணமாக இருக்கின்றனர். எந்த ஒரு நல்ல மன நிலையில் உள்ள ஆணும் தன்மீது உண்மையான நம்பிக்கையை வெளிபப்படுத்தும் பெணை ஏமாற்றுவதில்லை. ஆனால் ஒரு ஆண் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டும் ஏமாற்றுபவர்களாக பெண்கள் அதிகம் விளங்குகின்றனர் என்பதை சமூகத்தைப் பார்த்தே சொல்லிடலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lol2.gif

சுகிசிவம் எல்லாம் அறிந்த தத்துவஞானி கிடையாது. அவரின் தத்துவமே தென் இந்திய கலாசாரத்தை மையப்படுத்தி இருக்கிறது. மேலை நாடுகளில் 50 வயதிற்கு மேல் தான் காதலிப்பது நிலைப்பதாகச் சொல்கின்றனர். இந்தியாவில் தான் 16 வயதில் காதலித்து 18 வயதில் கலியாணம் செய்து 25 வயதில் பாட்டியாவது. சுகிசிவத்தின் தத்துவம் அவர் சார்ந்த சமூகத்துக்கு எடுபடக் கூடியதாக இருக்கலாம். அனைத்துலக மனிதர்களுக்கும் எடுபடாது. இதே சுகிசிவம் பிறந்த மண்ணில் இருந்து தான் விவேகானந்தரும் தோன்றினார்.. அப்துள் கலாமும் தோன்றினார்.. வாஜ் பாயும் தோன்றினார்.. அன்னை திரேசாவும் வாழ்ந்தார். அவர்களுக்கு எல்லாம் சுகிசிவத்தின் தத்துவார்த்தப்படி மனதில் பிரச்சனை. கொடுமை சரவணா இது..! ஒரு பட்டிமன்றப் பேச்சாளன் ஆயிரம் புழுகுவான்.. அதையெல்லாம் வேதவாக்காகக் கொண்டால்.. மனித இனம் என்னாவது..! :D:o

Link to comment
Share on other sites

இப்போது தான் படித்தேன். முதலில், கவிதை தொடுத்த நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்! ஒரு பச்சை புள்ளியும் வழங்கி உள்ளேன்.

சில பெண்கள் மட்டுமில்லை, சில ஆண்களும் காதல் என்று பழகிவிட்டு, பிறகு இருந்த அடையாளம் கூட இல்லாமல் பெண்களைக் கண்ணீருடன் விட்டு விட்டு மாயமாக மாறி விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!

காதலிப்பது பிழை இல்லை. பிரிந்து செல்வதும் பிழை இல்லை, பிரிவுக்குரிய காரணங்கள் நியாயமாக இருப்பின்....

நீங்கள் எழுதிய கவிதையில் அப் பெண் காசுக்காகவோ அல்லது விசாவிற்காகவோ தன் உடம்பை விற்கவில்லை....தன் பெற்றோருடன் தான் லண்டன் செல்கிறாள்...ஒரு பெண்ணின் தந்தையோ,ஆண் சகோதரங்களோ அல்லது அவளது கணவரோ சரியில்லா இடத்தில் தான் அப் பெண் தன் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான் இத் தொழிலுக்கு வருகிறாள்....சில பெண்களும் ஆணை ஏமாற்றுகின்றனர் அதே போல ஆண்களும் ஏமாற்றுகின்றனர்...பெண்கள் ஏமாற்றினால் விபச்சாரப் பட்டம் கொடுக்கும் நீங்கள் ஆண்கள் ஏமாற்றினால் என்ன பட்டம் கொடுப்பீர்கள்!

இரண்டாவது, ரதி நீங்கள் முன்வைத்து இருக்கும் ஒரு கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு பெண்ணுக்கு அவள் தந்தை, ஆண் சகோதரங்கள், கணவன் யாருமே சரியாக அமையாமல் போகலாம். அதற்காக, அந்தப் பெண் வேறு வழியில்லாமல் விபசாரத்தில் ஈடுபடுவது நியாயமானது அல்ல. இந்த நாட்டில் ஒரு பெண் தனித்து வாழ்வதற்கு நேர்மையான வழிகள் பல உள்ளன. அப்படி இருக்கும் போது, விபச்சாரம் தான் முடிவு என்று ஆகாது.

ஊரில் ஒரு நடுத்தர வயதான பெண், ஆண் சகோதரர்கள் இல்லை, பெற்றோரும் உயிரோடு இல்லை. ஒரு மகனுடன் அவவை நான் பார்த்து இருக்கிறேன். அந்தப் பெண் ஓலை குடிசையில் இருந்து தான் இடியப்பம், தோசை என்று செய்து, அதை ஊர் மக்களுக்கு விற்றுத் தான் தனது மகனை படிக்க வைத்து மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு அனுப்பி, அவனின் உழைப்பில் கல் வீடு கட்டினார்கள். மகனுக்கும் திருமணம் முடித்து வைத்து வெளி நாடு ஒன்றுக்கு அனுப்பியும், அந்தம்மா, அவவின் கைத்தொழிலை நிறுத்தவில்லை. அடுப்புப் புகைக்குள் நீண்ட காலம் வாழ்ந்ததால், அவவுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு காலமானார்.

இதில என்ன ஆச்சரியம் என்றால், அவவின் கணவனும் அதே தெருவில் தான் வாழ்ந்து வந்தார். ஆனால் கதைப்பது இல்லை. செத்தவீட்டு வாசலில் வந்து நின்று சத்தமின்றி அழுது கொண்டு இருந்தார்...

இது பலவருடங்களுக்கு முன்னால் நடந்தது. அந்தப்பெண், அப்பவே தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் அந்த ஒரு சிறிய கிராமத்தில் நேர்மையாக முனேற இருந்த வாய்ப்புக்களை பயன் படுத்தியதால் முன்னேறினார். அதை விட இங்கே பல வழிகள் உண்டு நேர்மையாக முன்னேற...

ஒவ்வொருத்தரின் தெரிவுகள் தான் அவர்களின் வாழ்கை பிரதி பலிக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி நீங்களே சொல்லுங்கள் பின் எவ்வாறு விபச்சாரிகள் உருவாகிறார்கள்...இந்தியாவில் எத்தனையோ பெண்கள் ஆண்களால் காதலித்து ஏமாற்றப்பட்டு விபச்சார விடுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள் தெரியுமா...ஈழத்தில் அது குறைவு காரணம் புலிகள்...விபச்சார‌ம் செய்ய விரும்பிப் போகும் பெண்கள் குறைவு...சூழ்நிலையாலே விபச்சாரி ஆக்கப்படுக்கின்றனர்...ஒரு தடவை யாராலும் கெட்டுப் போன பெண்ணை உங்களை போல ஆண்கள் மணம் முடிப்பார்களா ஒர்,இரண்டு பேரை எண்ணி சொல்லலாம் முடிப்பார்கள் என...பிழைப்பதற்கு வேறு வழி இல்லாத விடத்து தான் அவர்கள் இத் தொழிலை தேர்ந்து எடுக்கிறார்கள்...நீங்கள் சொல்வது மாதிரி பெண்கள் எத்தனை பேரை உங்களால் காட்ட முடியும்...தாங்களாகவே கெட்டுப் போகும் சில பெண்கள் இருக்கிறார்கள் அவர்களை விடுங்கள் அவர்களை பற்றி நான் இங்கு கதைக்கவில்லை...நீங்கள் இங்கு ஒரு பெண் விபச்சாரி ஆகாமல் வாழ வேண்டும் என சொல்கிறீர்கள் எனது விருப்பமும் அது தான்...ஆனால் அவர்கள் உருவாகுவதற்கு இந்த ஆண்கள் தான் கார‌ணம் என நான் சொல்கிறேன்[எல்லாரையும் சொல்லவில்லை]...ஒரு ஆண் என்ன வேண்டும் என்டாலும் செய்யலாம் பத்துப் பேரோடு படுக்கலாம் ஆனால் ஒரு பெண் சாப்பிட வழியில்லாமல் கூட‌ செத்துப் போக வேண்டும் ஆனால் கடைசி வரைக்கும் கெட்டுப் போகக் கூடாது என்ட‌ மாதிரி இருக்கு உங்கள் கருத்து.

நான் நெடுக்ஸீட‌ம் கேட்டேன் பதில் சொல்லவில்லை நீங்களாவது சொல்லுங்கள் ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டார் என விபச்சாரி பட்ட‌ம் கொடுத்திருக்கிறார்.. அதே போல ஒர் ஆண் பெண்ணை ஏமாற்றினால் அவ் ஆணுக்கு என்ன பட்ட‌ம் கொடுப்பார்...அவர் விபச்சாரி எனச் சொன்னது அந்த காதலித்த பெண்ணை மாத்திர‌ம் அல்ல முழு பெண்களையும் சேர்த்து தான் சொல்லி இருக்குறார்.அந்தப் பெண் வேணும் என்று ஏமாற்றினாரோ அல்லது தவிர்க்க முடியாம‌ல் பிரிந்தாரோ தெரியவில்லை ஆனால் விபச்சாரி என பட்டம் கொடுத்தது தப்பு இது தான் எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்ஸீட‌ம் கேட்டேன் பதில் சொல்லவில்லை நீங்களாவது சொல்லுங்கள் ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டார் என விபச்சாரி பட்ட‌ம் கொடுத்திருக்கிறார்.. அதே போல ஒர் ஆண் பெண்ணை ஏமாற்றினால் அவ் ஆணுக்கு என்ன பட்ட‌ம் கொடுப்பார்...அவர் விபச்சாரி எனச் சொன்னது அந்த காதலித்த பெண்ணை மாத்திர‌ம் அல்ல முழு பெண்களையும் சேர்த்து தான் சொல்லி இருக்குறார்.அந்தப் பெண் வேணும் என்று ஏமாற்றினாரோ அல்லது தவிர்க்க முடியாம‌ல் பிரிந்தாரோ தெரியவில்லை ஆனால் விபச்சாரி என பட்டம் கொடுத்தது தப்பு இது தான் எனது கருத்து.

தப்பு தான் இதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அப்படி பார்த்தால் எத்தைனையோ ஆண் விபச்சாரிகள் இந்த சமூகத்தில் கவுரவமாக வாழ்ந்து கொன்டிருக்கிறார்கள்.ஆனால் ரதி உங்களிடம் ஒரு கேள்வி.ஏன் பெருண்பாண்மையான பெண்கள் தங்களுக்கு என்று ஒரு ரசனை அல்லது தேவை என்றில்லாமல் மற்ற பெண்கள் செய்வதை தான் தாங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர் நெடுக்ஸ், இந்த கவிதையில் ஒரு சின்ன விடயம் தவறுகிறது? அது தான் என்ன வயதில் உங்களது காதல் முறிவடைந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர் நெடுக்ஸ், இந்த கவிதையில் ஒரு சின்ன விடயம் தவறுகிறது? அது தான் என்ன வயதில் உங்களது காதல் முறிவடைந்தது?

முதலிலேயே சொல்லிட்டன் இது எனது அனுபவம் இல்லை என்று. தரிசனத்தின் உண்மை கலந்தது என்று குறிப்பிட்டிருக்கிறேன். கவிதையின் அடிக்குறிப்பில்..!

நிச்சயமா பள்ளிப் பருவத்தைத் தாண்டி காதல் வந்துவிட்டது என்பதை சாடை காட்டி இருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

nedukkalapoovan Icon

விபச்சாரி காசிற்கு உடலை விற்கிறாள்.. இவள் விசாவிற்கு வசதியான தன் சுயநலவாழ்க்கைக்கு உடலைக் காட்டுகிறாள்..! முன்னவளும் தான் வசதியாக வாழத்தான் உடலை விற்கிறாள்.. அல்லது காட்டிறாள் பின்னவளும் அதற்காகத்தான் (விசா உள்ளவனிற்கு) உடலை விற்கிறாள். :)

இந்த கருத்தை எப்பவுமே ஏற்றுக் கொள்ள முடியாது .இந்த பெண்ணை ஒரு விபச்சாரியுடன் ஒப்பிட்டது தப்பு.தந்தையின் விசாவில் அந்த பெண் வெளிநாடு போயிருப்பதால் கண்டிப்பாக அந்த பெண்ணின் வயது 21 வயதிற்குள்தான் இருக்க வேண்டும் .இந்த வயதில் வாழ்க்கையை பற்றிய

சரியான மதிப்பீடு வந்திருக்க வாய்ப்பில்லை .இந்த வயதில் குடும்பத்தை எதிர்த்து தன வாழ்கையை தேர்ந்தெடுக்கும் துணிவும் அந்த பெண்ணுக்கு வர வாய்ப்பில்லை .புதிய இடம் ,புதிய மனிதர்கள் ,புதிய சூழல்,புதிய மொழி இதற்கு நடுவில் தன காதலுக்காக அந்த பெண்ணால் என்னதான் செய்ய முடியும் .

இதற்கு நடுவில் பெற்றோரின் அழுத்தம் .வற்புறுத்தல் ...எனவேதான் அந்த பெண் இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம்.இதை நீங்கள் எப்படி தப்பு என்று சொல்ல முடியும் .ஒரு பெண்ணை பல வருடம் காதலித்து விட்டு சீதணத்துக்காக வேறு

திருமணம் செய்யும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் .அவர்களை எல்லாம் என்ன பேரால் சொல்லபோகிறீர்கள் .

நீங்கள் குறிப்பிட்ட பெண் திருமணம் செய்த பின் தன முன்னாள் காதலனை கண்டபோது கதைத்திருந்தால் அது தப்பு .இங்கு அவள் செய்தது சரி .இங்கு அவள் மனம் எந்த வகையிலும் சலனப்படவில்லை .தாலி கட்டியவனுக்கு அவள் உண்மையாக இருக்கிறாள் .அவனுக்காக வாழ்கிறாள் .இதை விட ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை .இப்படிப்பட்ட ஒரு பெண்ணை விபச்சாரி என்று சொன்னது கண்டிக்கத்தக்கது .

பெண்களின் திருமண வயது சட்டப்படி 18. அப்படி இருக்கும் போது 21 வயதிற்குள் பெண்கள் முதிர்ச்சி அற்றவர்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரணம் அல்ல. 18 வயது ஆணை விட 18 வயதுப் பெண் கூடிய அளவு முதிர்ச்சி அடைகிறாள். வளர்ச்சியில் கூட பெண்களின் வளர்ச்சி 16 வயது வரைதான் பெரும் பகுதி நிகழ்கிறது. ஆண்களில் அது 18 வரை நீளும். பெண்கள் விரைந்து முதிர்ச்சியடையக் காரணமும் இருக்கிறது. அவர்களின் இனப்பெருக்கத் தகவுதான் அதற்குக் காரணம். ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தில் அவள் இனப்பெருக்கம் செய்யக் கூடிய வளமான காலம் என்பது 10 - 15 வருடங்கள் மட்டுமே. அதற்கு ஏற்ற வகையில் அவர்களிடம் முதிர்ச்சி இருக்கும். ஆண்களில் அப்படியல்ல.

எனவே இந்த முதிர்ச்சிக் கதைகள் இங்கு எடுபட வாய்ப்பில்லை. 16 வயதுச் சிறுமி என்று கருதினால் அது ஏற்றுக் கொள்ளலாம். இது அதைத்தாண்டி போய் இருக்கிறது. கவிதையின் படி அவர்கள் நீண்ட காலம் காதலித்திருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளியிலேயே அறிமுகமாகி இருக்கிறார்கள். இதை நட்பு என்று அடையாளம் காட்ட முடியாது. ஏனெனில் அது கவிதையின் படி அவர்களிடையே காதலாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி

காதலித்தேன் என்று உணரவும் காதலன் ஒருவன் இருந்தான் அவனோடு சுத்தித்திரிந்தேன் அவன் என் மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தான் இவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ள 18 வயது மிகப் போதுமானது.

புதிய சூழல் என்பது குடிபெயர்பவர்கள் எல்லோருக்கும் பொதுவானது. அதற்கு காலக்கிரமத்தில் எல்லோரும் பழகிக் கொள்வார்கள். அதற்கும் காதலை கைவிடுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..??! காதலன் எந்த வகையில் புதிய சூழலில் வாழ்வதற்கு இடையூறாக இருக்கிறான் இந்தக் கவிதையின் படி..???! அப்படி எதுவும் இல்லாத போது அவனை புறக்கணித்து ஒதுக்குவது என்பது ஒட்டுமொத்தமாக தனது சுயநலத்தின் அடிப்படையில் காதலனுக்கு ஊட்டிய நம்பிக்கைக்கு எதிரான வகையில் அமைகிறது.

இன்னொருவனுடன் வாழப் போகும் போது 18 வயதில் காதலனுடன் கை பிடித்துத் தெரிந்ததைக் கூடவா பெண்களின் முதிர்ச்சி மறக்கச் செய்துவிடும்..???! புதிய சூழல் என்பதால்.. காதலன் கண்டு கொள்ளமாட்டான் என்பதால்.. காதலன் தன்னுடனான உறவு பற்றி புதிய சூழலில் பிறருக்குச் சொல்ல வாய்ப்பில்லை என்பதால்.. இந்தப் பெண் கூடத்திரிந்தவனை உதறிவிட்டு இன்னொருவனை நாடிச் செல்ல சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நோக்கினாலும் கூட அவள் இரண்டு ஆண்களுக்குமே உண்மையாக இருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

முன்னவனுக்கு அளித்த நம்பிக்கையை காப்பாற்ற முடியாதவளுக்கு பின்னவனுடன் வந்த உறவைக் காப்பாற்றும் பக்குவம் வந்துவிட்டதாகக் காட்டுவது அபந்தமானது. இந்த இடத்தில் அவள் முகம் திருப்பி நடந்து சென்றதற்கு பின்னவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதிலும்.. ஏன் அநாவசிய வம்பை விலைக்கு வாங்கி என்னையே நான் போட்டுக்கொடுப்பான் என்ற சுயநலமே மிகுந்திருக்கும்.

இந்த வகையில் உள்ள பெண்களை விபச்சாரியுடன் ஒப்பிடாமல் எவரோடு ஒப்பிட முடியும்..??! விபச்சாரிதான் தான் சந்திக்கும் எவனுக்கும் அளிக்கும் நம்பிக்கையை காக்க வேண்டிய அவசியமற்று சுயநலத்துக்கு வாழ்ப்பவளாக இருக்கிறாள்.

இப்படித்தான் பெண்களில் அநேகர் இருக்க விளைகின்றனர். முன்னர் பழகியவன் கணவன் முன் வந்தால் எந்தப் பெண் அவனோடு கதைத்து உரையாடுவாள். முன்னையவனை ஏமாற்றாதவள் என்பதை மனதளவில் உணரும் ஒருவள் மட்டுமே துணிந்து நின்று கதைப்பாள். இவள் ஒழித்து ஓடுகிறாள் என்றால்.. அதற்கு காரணம்.. வம்பை விலைக்கு வாங்கி தன்னை தாழ்த்திக் கொள்ள விரும்பாததே முதன்மையாக இருக்கும். அதைவிடுத்து அதை அவளின் இரண்டாமவனுக்கான நம்பிக்கையின் பாத்திரமாக சித்தரிப்பது.. முன்னையவனை அவள் ஏமாற்றியதை மறந்து சோடிக்கப்படும் அழகிய ஒரு சோடிப்பு மட்டுமே ஆகும். முன்னவனை ஏமாற்றத் தெரிந்தவளுக்கு பின்னவனை ஏமாற்றவா கற்றுக் கொடுக்க வேண்டும்..??!

இது தான் இன்றைய நிலையில் பல இடங்களிம் நடக்கிறது. :)

இது தான் இன்றைய நிலையில் பல இடங்களிம் நடக்கிறது. :D

உங்கள் கருத்துப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆக இருக்கலாம் .இந்த வயதில் ஒரு பெண் உடலியல் ரீதியாக திருமணம் செய்ய தகுதியடைந்து விடுகிறாள் .ஆனால் மனதளவில் அவள் பக்குவம் அடையவில்லை .வாழ்க்கையை எடை போட்டு பார்க்க தெரியாத வயது இது .மனதளவில் சலனப் படாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இருக்க முடியாது .சிலருக்கு அது தொடர்கிறது .இன்னும் சிலருக்கு அது சில கணங்களில் மறைந்து விடுகிறது .நீங்கள் கூட இதில் விதி விலக்கல்ல .(ஆட்டோகிராப் படம் இருப்பீர்கள் ) உங்க ள் கருத்து படி பார்த்தால் நல்லவர்கள் என்று யாருமே இருக்க முடியாது .சந்தர்ப்பம் கிடைக்காத வரை தான் எல்லோரும் நல்லவர்கள் .

உண்மையாக அந்த பெண்ணை அவன் காதலித்திருந்தால் அவள் அவளது கணவனுடன் போனதை பார்த்தவுடன் விலகி சென்றிருக்க வேண்டும் .ஆனால் அவன் அவளிடம் சென்று பேச்சு கொடுத்து அவளுக்கு பிரச்சினையை ஏற்படுத்த முனைகின்றான் .இப்படிப்பட்ட ஒருவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் .இப்படிப்பட்ட ஒருவனை அந்த பெண் நிராகரித்தது சரியே .காதலித்த எல்லோருக்கும் அந்த காதல் கைகூடுவதில்லை.இதற்கு எமது இறுக்கமான சமூக அமைப்பும் ,பெற்றோர்களின் எதிர்மறையான சிந்தனையுமே காரணம் .உங்கள் வீட்டில் ஒருவர் காதலித்தால் உடனே அழைத்து திருமணம் செய்து வைத்து விடுவீர்களா ? சிலது பேசுவதற்கு சரியாக இருக்கலாம் .ஆனால் நடைமுறைக்கு சரிவராது .

இந்த பெண் மனதளவில் சலனப்பட்டு இருக்கிறாள் .அதற்க்காக பணத்துக்காக உடலை விற்கும் ஒருத்தியுடன் அவளை ஒப்பிடுவது நியாயமற்றது.உங்கள் கருத்துப்படி பார்த்தால் உலகில் பாதிக்கு மேலுள்ள ஆணும் பெண்ணும் விபச்சாரியாகத்தான் இருக்க முடியும் .ஒரு பருவ வயதில் வரும் காதல் பலருக்கு சில நாட்களில் முறிந்து போய்விடுகிறது ''.பள்ளி காதல் படலை வரை '' என்று ஒரு பழமொழியே உண்டு .அதற்காக இவர்களை எல்லாம் விபச்சாரி என்பதா ?

காதலித்து கைவிடும் ஆண்கள் தான் இந்த பூமியில் அதிகம் அவர்களை எல்லாம் எப்படி அழைப்பது

நாளை உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பெண் வருவாள் .அந்த பெண்ணையும் இப்படி எல்லாம் சந்தேகப் பட்டு விடாதீர்கள் .சந்தேகம் பின் உங்கள் சந்தோசத்தை கெடுத்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லுகிறிர்களே இதை நீங்கள் ஊரில் இருந்து சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் நீங்களும் வெளி நாட்டு மோகத்தில்தானே இங்கே வந்து இருக்கிறிர்கள்... நான் நினைக்கிறேன் இந்த சான்ஸ் உங்களுக்கு முதலில் கிடைத்து இருந்தால் நீங்களும் அதைத்தானே பண்ணி இருப்பிர்கள்... நீங்களும் அந்த பெண்ணும் ஒரே தாரசியில்தானே இருக்கிறிர்கள்.... :D

நீங்களும் அந்த பெண்ணும் ஒரே தாரசியில்தானே இருக்கிறிர்கள்....

அற்புதமான எடுத்துக்காட்டு

எனக்கு ஓங்கி சுத்தியலால் அடித்ததுபோல் உறைக்கிறது

அவருக்கு ஒறைக்குமா.....?

சுஜி இவ்வளவு திறமையா எழுதுங்கள் தொடர்ந்து....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆக இருக்கலாம் .இந்த வயதில் ஒரு பெண் உடலியல் ரீதியாக திருமணம் செய்ய தகுதியடைந்து விடுகிறாள் .ஆனால் மனதளவில் அவள் பக்குவம் அடையவில்லை .வாழ்க்கையை எடை போட்டு பார்க்க தெரியாத வயது இது .மனதளவில் சலனப் படாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இருக்க முடியாது .சிலருக்கு அது தொடர்கிறது .இன்னும் சிலருக்கு அது சில கணங்களில் மறைந்து விடுகிறது .நீங்கள் கூட இதில் விதி விலக்கல்ல .(ஆட்டோகிராப் படம் இருப்பீர்கள் ) உங்க ள் கருத்து படி பார்த்தால் நல்லவர்கள் என்று யாருமே இருக்க முடியாது .சந்தர்ப்பம் கிடைக்காத வரை தான் எல்லோரும் நல்லவர்கள் .

உண்மையாக அந்த பெண்ணை அவன் காதலித்திருந்தால் அவள் அவளது கணவனுடன் போனதை பார்த்தவுடன் விலகி சென்றிருக்க வேண்டும் .ஆனால் அவன் அவளிடம் சென்று பேச்சு கொடுத்து அவளுக்கு பிரச்சினையை ஏற்படுத்த முனைகின்றான் .இப்படிப்பட்ட ஒருவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் .இப்படிப்பட்ட ஒருவனை அந்த பெண் நிராகரித்தது சரியே .காதலித்த எல்லோருக்கும் அந்த காதல் கைகூடுவதில்லை.இதற்கு எமது இறுக்கமான சமூக அமைப்பும் ,பெற்றோர்களின் எதிர்மறையான சிந்தனையுமே காரணம் .உங்கள் வீட்டில் ஒருவர் காதலித்தால் உடனே அழைத்து திருமணம் செய்து வைத்து விடுவீர்களா ? சிலது பேசுவதற்கு சரியாக இருக்கலாம் .ஆனால் நடைமுறைக்கு சரிவராது .

இந்த பெண் மனதளவில் சலனப்பட்டு இருக்கிறாள் .அதற்க்காக பணத்துக்காக உடலை விற்கும் ஒருத்தியுடன் அவளை ஒப்பிடுவது நியாயமற்றது.உங்கள் கருத்துப்படி பார்த்தால் உலகில் பாதிக்கு மேலுள்ள ஆணும் பெண்ணும் விபச்சாரியாகத்தான் இருக்க முடியும் .ஒரு பருவ வயதில் வரும் காதல் பலருக்கு சில நாட்களில் முறிந்து போய்விடுகிறது ''.பள்ளி காதல் படலை வரை '' என்று ஒரு பழமொழியே உண்டு .அதற்காக இவர்களை எல்லாம் விபச்சாரி என்பதா ?

காதலித்து கைவிடும் ஆண்கள் தான் இந்த பூமியில் அதிகம் அவர்களை எல்லாம் எப்படி அழைப்பது

நாளை உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பெண் வருவாள் .அந்த பெண்ணையும் இப்படி எல்லாம் சந்தேகப் பட்டு விடாதீர்கள் .சந்தேகம் பின் உங்கள் சந்தோசத்தை கெடுத்துவிடும் .

காதலன் என்ற நிலையை விட்டு அவன் ஒரு சாதாரணமான ஆளாகக் கூட கதைக்க முடியும். ஆனால் அதைக் கூட மறுதலிக்கும் அளவிற்கு சுயநலம் மிகுந்து நடக்கும் பெண்களிடம் எப்படி.. நல்லவள் என்ற தகுதியை வழங்க முன்வருகிறீர்களோ தெரியாது.

சந்தேகப்படும் இடத்தில் சந்தேகப்படாவிட்டாலும் அது பிரச்சனையாகத்தான் முடியும். இறுதியில் ஏமாற்றப்பட்டு சந்தியில் நிற்க வேண்டியதுதான். ஒருவரின் நடத்தை சந்தேகத்துக்கு இடமானது என்று கருதும் போது காவல்துறையே விசாரிக்கும் நிலையில் ஒருவன் தனது வாழ்க்கை காலத்தை ஒப்படைக்க இருக்கும் ஒருத்தியின் செயற்பாடுகள் நம்பகத்தன்மைக்கு அப்பால் இருக்கும் நிலையில் சந்தேகிக்க வேண்டியது கட்டாயம். இன்றேல் அவள் துணிந்து தவறுகளைச் செய்யவே தலைப்படுவாள்.

ஆண்களை சந்தேகிக்க வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் தாங்கள் எடுத்ததெற்கெல்லாம் ஆண்களை சந்தேகிப்பதோடு சந்தேகிக்கப்படாதது போல் கேள்விகளை வேலைகளை பணிகளை கொடுத்து நோட்டம் விட்டுக் கொள்வார். அப்படிப்பட்ட பெண்களிடத்திலா சந்தேகம் கொள்ளக் கூடாது என்கிறீர்கள்.

நிச்சயமாக ஒருவரின் செயற்பாடு சந்தேகத்திற்குரியது எனும் நிலையில் அது கண்காணிக்கப்படுவது அவசியம். இன்றேல் அதுதான் ஒட்டுமொத்த வாழ்வையும் நாசம் செய்து விடும். எத்தனையோ பெண்கள் கணவனை வைத்துக் கொண்டே காதலனை அணைத்துக் கொண்டே பிற ஆண்களோடும் தகாத அல்லது பிரத்தியேக அல்லது இரண்டாம் தர வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படியானவர்களின் கணவர்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்.. காதலர்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்.

சந்தேகம் ஒரு வியாதி. சந்தேகம் மகிழ்ச்சியை கொன்றிடும் என்று போதித்துக் கொண்டே சந்தேகப்படும் படி நடந்து கொள்பவர்கள் வாழும் இந்த உலகில்.. சந்தேகம் இன்றி ஒரு மனிதன் கூட வாழ முடியாது. நேர்மையான இடத்தில் சந்தேகம் ஒருபோதும் எழாது. எங்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நடத்தைகள் செயற்பாடுகள் இருக்கோ அங்கு சந்தேகப்படுவது அவசியம். தேவை. இன்றேல் அது பல சீரழிவுகளுக்கே இட்டுச் செல்லும். அது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதுடன்.. அவன் ஒரு இளிச்சவாயன் என்று இந்த சந்தேகிக்கக் கூடாது என்று சொல்லும் உலகம் மாற்றிப் பேசும்.

என்னைப் பொறுத்தவரை நான் எவரையும் சந்தேகிக்கக் கூடாது என்று சொல்லமாட்டேன். எமது நோக்கில் நேர்மையாக இருக்கும் ஒருவர் மீது சந்தேகிப்பதில் அர்த்தமில்லை. அதேவேளை எமக்கு சந்தேகத்தை உண்டு பண்ண நடக்கும் ஒருவர் மீது சந்தேகிக்க மறுப்பது முட்டாள் தனம்.

பெண்கள் வேண்டாம்.. கூடாது என்று சொல்லிக் கொண்டே அவற்றை நோக்கி நகர்வது வழமை. காரணம். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக. அப்படியானவர்களை சந்தேகிக்காமல் இருப்பது ஆபத்தானது.

போதனைகள் செய்வது இலகு. ஆனால் நிஜ வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதுதான் போதனைகள் சோதனைகளாவதன் அர்த்தம் புரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதனைகள் செய்வது இலகு. ஆனால் நிஜ வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதுதான் போதனைகள் சோதனைகளாவதன் அர்த்தம் புரியும். :D

அப்படிப்போடு அரிவாளை நெடுக்கர்

இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து சொல்கின்றேன்

தேனின் சுவையை பார்த்து கேட்டு எப்படி எழுதுகின்றீர்கள் என்று...

உள்ள வாருங்கள் அதற்குப்பிறகு பார்க்கலாம்

காதலா

கத்தரிக்காயா என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு தான் இதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அப்படி பார்த்தால் எத்தைனையோ ஆண் விபச்சாரிகள் இந்த சமூகத்தில் கவுரவமாக வாழ்ந்து கொன்டிருக்கிறார்கள்.ஆனால் ரதி உங்களிடம் ஒரு கேள்வி.ஏன் பெருண்பாண்மையான பெண்கள் தங்களுக்கு என்று ஒரு ரசனை அல்லது தேவை என்றில்லாமல் மற்ற பெண்கள் செய்வதை தான் தாங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். :D

எனக்கு சரியாய் விளங்கவில்லை நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என ஆனால் நான் புரிந்து கொண்டதில் இருந்து ஏன் பெண்கள் மற்றவர்களை பார்த்து அதிகம் ஆசைப்படுகிறார்கள் எனக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்...எனக்குத் தெரிந்த வரை பல விதமாய் பதிலளிக்கலாம்...ஏன் ஒரு ஆண் மற்ற ஆணைப் பார்த்து ஆசைப்படுவதில்லையா உதாரணமாக இரு ஆண்கள் நண்பர்களாயிருந்தாலும் வியாபாரத்தை தொழிலாகக் கொண்டால் ஒருவர் தொழிலில் நன்றாக முன்னேறி பெரிய வீடு,கார் என வாங்கினால் அந்த மற்றவருக்கும் இவரைப் போல முன்னேற வேண்டும் என ஆசை இருக்கும்...அப்படி ஆசைப்படாவிடின் அவர்கள் துறவிகள் அல்லது சோம்பேறிகளாகத் தான் இருப்பர்.

ஈழத்தில் இருக்கும் போது தான் ஒரு பெண் மற்ற பெண்ணைப் பார்த்து அதாவது அவர்கள் என்ன நகை போடுகிறார்கள் ,என்ன உடுப்பு போடுகிறார்கள் எனப் பார்த்து தாங்களும் அதே மாதிரி செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள் ஆனால் புலத்தில் அது குறைவு என்றே நினைக்கிறேன்.

ஒர் ஆண் வெளிநாட்டுக்கு வந்து உழைத்து தன் சகோதரிகளுக்கு எல்லாம் திருமணம் முடித்த பின்னர் தான் திருமணம் செய்கிறார்...இதில் விடயம் என்னவென்றால் தனது சகோதரிகள் நல்லாய் இருக்க வேண்டும் என நிறைய சீதனம் குடுத்து கட்டி வைத்து விட்டு அவர்கள்[ஆண்] திருமணம் செய்யும் போது அவர்களிடம் எதுவும் இருக்காது...தனது சகோதரிகள் எது கேட்டாலும் செய்யும் ஒர் ஆண் தனது மனைவி ஏதாவது சின்னதாக கேட்டால் மாத்திரம் ஆத்திரம் அடைவார்கள்...சமூகத்தில் ஆணோ,பெண்ணோ ஒரளவு வசதியாய் வாழவே ஆசைப்படுவார்கள்...உதாரணத்திற்கு ஒரு பெண் திருமணம் முடித்து புலம் பெயர் நாட்டுக்கு வரும் போது கணவருக்கு வீடு இல்லா விடின் எவ்வளவு கஸ்டம் என அனுபவிப்பவருக்கு தான் தெரியும்...தனது சகோதரி நல்ல வச‌தியோடு இருக்க வேண்டும் என நினைக்கும் சில ஆண்கள் தனது மனைவியையும் அதே மாதிரி வைத்திருக்க வேண்டும் என யோசிப்பதில்லை..மற்றப் படி ஆண்களோ,பெண்களோ ஒரே மாதிரித் தான் ஆசைப்படுகிறார்கள்...ஆசை இருக்க வேண்டும் ஆனால் பேராசையாக மாறக் கூடாது என்பது தான் என் கருத்து.

நீங்கள் எதனைப் பற்றிக் கேட்டீர்கள் என எனக்கு விளங்கவில்லை...ஆனாலும் எனது பதிலை தந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகே அருமையான பதிலைக் கொடுத்து உள்ளீர்கள் ஆனாலும் அவருக்கு புரியாது அல்லது புரிந்தாலும் புரியாத மாதிரித் தான் இருப்பார்கள்...ஒரு பெண் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் அதன் வலி தனக்குத் தான் தெரியும் என எழுதுபவர் எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள் என்பதை அவர் உணரவில்லை...திருமணம் முடித்த பின் அந்தப் பெண்ணோடு போய் கதைத்திருக்கிறார் அந்தப் பெண் இவரோடு கதைத்திருந்தால் சொல்லியிருப்பார் தன்னைக் காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் முடித்த பின் கணவரை ஏமாற்றுகிறார்[தன்னோடு தொடர்பில் இருப்பதன் மூலம்]...அந்த பெண் இவரை ஏமாற்றினார் என புலம்பும் இவர் படிப்பை தொடரவில்லையா...லண்டனுக்கு வரவில்லையா...உலகத்தில் 99% மக்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றப்பட்டே உள்ளனர்...ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற பார்க்க வேண்டும்...உண்மையாக அந்தப் பெண் வேணும் என ஏமாற்றினால்[இந்தக் கதை அப்படி இல்லை]அப் பெண் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும்...நீ விட்டுட்டு போனாய் நான் இப்போது படித்து பெரிய உத்தியோகத்தில் உன்னை விட என்னை நேசிக்கும் பெண்ணை மணம் முடித்து மனைவி,பிள்ளைகள் என சந்தோசமாய் இருக்கிறேன் பார் எனக் காட்ட வேண்டும் அதை விடுத்து ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என விபச்சாரி பட்டம் கொடுப்பது ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகல்ல.

அம்மா தாயே.. கவிதையின் கீழ் உள்ளதை ஒரு தடவை வாசியுங்கள். அதைக் கூட சரி வர புரிந்து கொள்ளாமல் என் மீது உங்கள் ஆத்திரத்தை கொட்டுவதில் பயனில்லை. நான் கவிதை வடித்ததோடு சரி. இப்படியான சம்பவங்களுக்கும் எனக்கும் தொடர்பு வைப்பதில்லை. எனக்கு இந்தக் காதலில் எல்லாம் நம்பிக்கையும் கிடையாது. நான் ஆண்கள் - பெண்கள் கலந்து படிக்கும் பள்ளியிலும் படிக்கவில்லை. இது நான் சமூகத்தில் தரிசித்ததில் கண்ட உண்மையின் பிரதிபலிப்பே அன்றி எனது அனுபவம் அல்ல.

என்னை ஒரு பெண் ஏமாற்ற நினைத்தால் நிச்சயம் என்னைப் போல அவளையும் வலி உணர வைத்துவிட்டுத்தான் விலகுவேன். எல்லாவற்றிலும் சம பங்கு கேட்கும் பெண்கள்.. அதையும் உணரட்டன். அப்போதுதான் இன்னொருவனோடு இப்படி அணுகமாட்டார்கள். அவனோடாவது ஒழுங்காக வாழ முயற்சிப்பார்கள். :D

ஆனால் இந்தக் கவிதையின் நாயகன் அப்பாவி. அவன் வெளுத்தது எல்லாம் பால் என்றிருக்கப் போய் அவன் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறாள் அவள். அவளுக்கு நீங்கள் எல்லாம்.. ஆதரவு. வங்காளத்து. அதுதான் கொடுமை..! பெண்கள் உலகமே நரகம் என்று ஒரு கவிஞன் பாடியதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது..! இதே ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படியாவது அந்த ஆணைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி இருப்பீர்கள். இங்கு பாதிக்கப்பட்டது ஆண் என்றவுடன் அந்தப் பெண்ணை நிராபராதியாக்கிக் காட்டத் துடிக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் மனிதர்கள் தானா..??! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் உண்மையாகவே அவரை ஏமாற்றியிருந்தால் அவ் ஆண் பரிதாபத்திற்குரியவர் தான் ஆனால் நாங்கள் எல்லோரும் சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் அப் பெண்ணுக்கு விபச்சாரப் பட்டம் கொடுத்தது மிகப் பெரிய தப்பு...வேணும் என்றால் நான் ஏற்கனவே எனது பதிவில் சொன்ன மாதிரி ஏமாற்றுக்காரி எனச் சொல்லுங்கள்.

எனக்கு அப்படியா பட்ட ஒரு பெண்ணை விபச்சாரி என்று இனங்காட்டியது தவறென்றே படவில்லை.

விபச்சாரிகள் = ஏமாற்றுக்காரிகள்.(வெளிப்படை உண்மை)

கவிதையின் நாயகி = ஏமாற்றுக்காரி. (உங்கள் தரவு)

ஆகவே.. கவிதையின் நாயகி = விபச்சாரி = ஏமாற்றுக்காரிகள்.(நிறுவல்) :D

Link to comment
Share on other sites

வணக்கம் நெடுக்ஸ்!

இந்த வரிகள் உங்கள் வேதனைகளின் துளிகளாக இருந்தால் உங்களுக்கு எனது அனுதாபங்கள்!

இந்த வரிகள் உங்களின் கற்பனையின் துகள்களாக இருந்தால் பாராட்டுக்கள்!

இந்த வரிகளில் வரும் நிகழ்வுகள் நாணறிந்த பலருக்கு உண்மையாகவே நடந்துள்ளது.

ஓர் நாள் சொன்னாள்

"அப்பாக்கு

லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது

நாங்களும் போகப் போறம்."

இந்த வரிகள் தான் கவிதையின் சுவையை சற்று சுருக்குகின்றன, அதாவது பெரும்பாலும் வெளிநாடுகளிலை மாப்பிளை பார்த்திருக்கு நானும் போகப்போறன் என்று தான் பெண்கள் சொல்வதுண்டு.

நன்றிகள். எனது அனுபவமல்ல என்பதை கவிதையின் கீழேயே சொல்லிவிட்டேன்.

உண்மை தான் அண்ணா. எம்மவர் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்தச் சமாச்சாரம் வெவ்வேறு வடிவங்களில் நடக்கிறது.

சிலர்.. வெளிநாட்டு மாப்பிள்ளையிடம் போறன் என்று போவினம். ஊரறிய கலியாணம் கட்டிக் கொண்டு போவினம்.

சிலர்.. அப்பா அசைலம் அடிச்சு நிரந்தர விசா கிடைச்சிட்டு என்று போவினம்.

சிலர்.. ஊருக்கு போக்குக் காட்ட அப்பாக்கு விசா கிடைச்சிட்டு என்றிட்டு விசா உள்ள மாப்பிள்ளை கூப்பிட ரகசியமா திருமண எழுத்தை வைத்துக் கொண்டு போவினம்.

சிலர்.. ஏஜென்சி மூலம் வருவினம். பின் வெளிநாட்டில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுவினம்.

சிலர்.. வேலை படிப்பு என்று சொல்லி ஆனால் கூடி வாழ இணைய வருவினம்.

இந்த நாயகி வர்க்கம் 2 அல்லது 3 ஐ சார்ந்திருக்கலாம். உண்மையிலேயே அப்பாக்கு விசா கிடைச்சிருக்கா விட்டாலும்.. காதலனை ஏமாற்ற அப்படிச் சொல்லிவிட்டு விசா உள்ள மாப்பிள்ளையை ரகசியமான திருமண எழுத்தின் மூலம் உறவாக்கிக் கொண்டு வெளிநாடு வந்து விடுவார்கள். இப்படி ஊரில் தப்புச் செய்து கொண்டு நாடு கடந்த பெண்கள் ஏராளம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிலேயே சொல்லிட்டன் இது எனது அனுபவம் இல்லை என்று. தரிசனத்தின் உண்மை கலந்தது என்று குறிப்பிட்டிருக்கிறேன். கவிதையின் அடிக்குறிப்பில்..!

நிச்சயமா பள்ளிப் பருவத்தைத் தாண்டி காதல் வந்துவிட்டது என்பதை சாடை காட்டி இருக்கிறேன். :D

பள்ளிப்பருவம் தாண்டி யாழில பல்கலைகழகம் செல்ல பதினெட்டு வயதாகும். அங்க பெரிசா பதினெட்டு வயசில வேலையும் எடுக்க முடியாது. ஆர்மி வேற உங்கட நண்பரை தூக்க சான்ஸ் கூட. அங்க வீட்டிலையும் பதினெட்டு வயசில கட்ட விடமாட்டினம். ஊருக்க வாடகைக்கு வீடும் தரமாட்டினம்.

அந்த பெண்பிள்ளையை உங்கள் நண்பர் சின்ன வயசிலேயே கரெக்ட் பண்ணுமளவிட்கு அழகு இருந்தால், எப்படியோ ஆர்மியோ அல்லது ஒட்டுண்ணி குழுக்களோ சென்றி பொயிண்டுக்க வைச்சு கெடுத்து போட்டு ஒரு ஆக்களுக்கும் சொல்லாத இல்லாட்டி குடும்பத்தை தூக்குவம் எண்டு வெருட்டுவான்.

பிறகு உங்கட நண்பர் வாழ்வே மாயம் எண்டு தண்ணி அடிச்சு, தாடி வழர்த்து அந்த பெண்பிள்ளையை கை விடுவார். எனக்கென்னவோ அந்த பெண் பிள்ளை புத்திசாலித்தனமான முடிவை தான் எடுத்திருக்கிறது என்று தோன்றுகிறது.

அது சரி, காசிற்கு பெண் புணர்ந்தால் அவள் விபச்சாரி ஆனால் அந்த காசை கொடுக்கும் ஆணிற்கு என்ன பெயர்? விபச்சாரன்? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சரியாய் விளங்கவில்லை நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என ஆனால் நான் புரிந்து கொண்டதில் இருந்து ஏன் பெண்கள் மற்றவர்களை பார்த்து அதிகம் ஆசைப்படுகிறார்கள் எனக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்...எனக்குத் தெரிந்த வரை பல விதமாய் பதிலளிக்கலாம்...ஏன் ஒரு ஆண் மற்ற ஆணைப் பார்த்து ஆசைப்படுவதில்லையா உதாரணமாக இரு ஆண்கள் நண்பர்களாயிருந்தாலும் வியாபாரத்தை தொழிலாகக் கொண்டால் ஒருவர் தொழிலில் நன்றாக முன்னேறி பெரிய வீடு,கார் என வாங்கினால் அந்த மற்றவருக்கும் இவரைப் போல முன்னேற வேண்டும் என ஆசை இருக்கும்...அப்படி ஆசைப்படாவிடின் அவர்கள் துறவிகள் அல்லது சோம்பேறிகளாகத் தான் இருப்பர்.

ஈழத்தில் இருக்கும் போது தான் ஒரு பெண் மற்ற பெண்ணைப் பார்த்து அதாவது அவர்கள் என்ன நகை போடுகிறார்கள் ,என்ன உடுப்பு போடுகிறார்கள் எனப் பார்த்து தாங்களும் அதே மாதிரி செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள் ஆனால் புலத்தில் அது குறைவு என்றே நினைக்கிறேன்.

ஒர் ஆண் வெளிநாட்டுக்கு வந்து உழைத்து தன் சகோதரிகளுக்கு எல்லாம் திருமணம் முடித்த பின்னர் தான் திருமணம் செய்கிறார்...இதில் விடயம் என்னவென்றால் தனது சகோதரிகள் நல்லாய் இருக்க வேண்டும் என நிறைய சீதனம் குடுத்து கட்டி வைத்து விட்டு அவர்கள்[ஆண்] திருமணம் செய்யும் போது அவர்களிடம் எதுவும் இருக்காது...தனது சகோதரிகள் எது கேட்டாலும் செய்யும் ஒர் ஆண் தனது மனைவி ஏதாவது சின்னதாக கேட்டால் மாத்திரம் ஆத்திரம் அடைவார்கள்...சமூகத்தில் ஆணோ,பெண்ணோ ஒரளவு வசதியாய் வாழவே ஆசைப்படுவார்கள்...உதாரணத்திற்கு ஒரு பெண் திருமணம் முடித்து புலம் பெயர் நாட்டுக்கு வரும் போது கணவருக்கு வீடு இல்லா விடின் எவ்வளவு கஸ்டம் என அனுபவிப்பவருக்கு தான் தெரியும்...தனது சகோதரி நல்ல வச‌தியோடு இருக்க வேண்டும் என நினைக்கும் சில ஆண்கள் தனது மனைவியையும் அதே மாதிரி வைத்திருக்க வேண்டும் என யோசிப்பதில்லை..மற்றப் படி ஆண்களோ,பெண்களோ ஒரே மாதிரித் தான் ஆசைப்படுகிறார்கள்...ஆசை இருக்க வேண்டும் ஆனால் பேராசையாக மாறக் கூடாது என்பது தான் என் கருத்து.

நீங்கள் எதனைப் பற்றிக் கேட்டீர்கள் என எனக்கு விளங்கவில்லை...ஆனாலும் எனது பதிலை தந்துள்ளேன்.

நீங்கள் சரியாகதான் விளங்கியுள்ளீர்கள்.உங்கள் பதிலில் நான் குறிப்பிட்ட பகுதியின் அர்த்தம் இங்கு புலத்தில் பெண்கள் விபரம் தொந்வர்கள் என்ற பொருளாயின் மற்ற நாடுகளைப்பற்றி தெரியாது.ஆனால் இங்கு swiss பெரிய முன்னேற்றம் இலலை.மற்றும் படி ஓரளவு படித்த பெண்களிடம் நான் கூறிய பிரச்சனைகள் இலலை என்பதை ஏற்றுக்கொள்கிறேன. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.