Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா "உதயன்" பத்திரிகை மீது கோழைகளின் தாக்குதல்

Featured Replies

தமிழச்சி, எனக்கு உதயன் பத்திரிகை நடாத்துனரை தெரியாது. நான் உதயன் பார்ப்பதும் இல்லை. உதயன் ஓர் ஊடகம் என்கின்ற வகையில இந்தத்தாக்குல் பற்றி கருத்து சொல்லி இருக்கிறன்.

நான் வட்டுக்கோட்டை தீர்மானம், நாடு கடந்த அரசு சம்மந்தமாக சொன்னது ஜனநாயக நீரோட்டத்தில தமிழர் இருக்கிறீனம் எண்டுறதை சர்வதேசத்துக்கு தெரிவிக்க முயற்சிப்பது பற்றினது.

மேலே எத்தனையோ பேர் போட்டு தாக்கினதுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறீனம். சங்கதி வேற தமிழ் மக்களின் தாக்குதல் என்று சொல்லி இருக்கிது. பிறகு என்ன என்னட்டை கேள்வி கேட்கிறீங்கள்? உதயன் நடாத்துனர் பற்றி தெரிஞ்சதை நீங்கள் அவையுக்கு சொல்லுங்கோ. கொஞ்சம் முன்னதாய் சொல்லி இருந்தால் சங்கதி தனது நிறுவனத்தை தானே தாக்கின உதயன் நடாத்துனர் என்று செய்தியை மாற்றி போட்டு இருப்பதற்கு உதவியாய் இருந்து இருக்கும். :wub:

சகாறா அக்கா, நான் எழுதின முழுக்கருத்துக்கும் பதில் சொல்லுங்கோ. ஒருதுண்டை தூக்கிப்பிடிச்சு விளக்கம் கேட்டால் என்னத்தை சொல்கிறது?

  • Replies 92
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையாக இருந்தால் யாழ் உதயன் தாக்குதலுக்கும், கனடா உதயன் தாக்குதலுக்கும், அதை செய்தவர்களுக்கும் இடையில் எதுவித வேறுபாடும் இல்லை. விருப்பம் இல்லையென்றால் உதயன் அலுவலம் முன்னால போய் சுலோகங்களோட நின்று எதிர்ப்பு காட்டி இருக்கலாம். அது வலிமையான ஓர் செய்தியாக இருந்து இருக்கும். அதைவிட்டுப்போட்டு கல்லு எறிகிறது, அடிதடி எல்லாம் இன்னமும் கெட்ட பெயரைத்தான் கனேடிய தமிழர்களுக்கு உருவாக்கும்.

தட்டிப்பார்க்கிறதுக்கு இது என்ன மேளமா? :wub: தமிழ்த்தேசியத்துக்கு உதவுவது, உதவாதது ஒருபுறம் இருக்க கனடா நாட்டை பொருத்த அளவில உதயன் பத்திரிகை ஓர் மக்கள் ஊடகம். அது விளம்பரத்தை மையப்படுத்தியதாக இருக்கிது, தனிநபர் புராணம் பாடுது என்பது எல்லாம் ஊடகவியல் ரீதியாக பார்க்கும்போது ஒரு பொருட்டு அல்ல.

கனடா நாட்டில் கனடா நாட்டு சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்காமல் சண்டித்தனம் காட்டினால் அதனால் பாதிப்பு கடைசியில தமிழ்ச்சமூகத்துக்குத்தான்.

கடைசியில இப்ப என்ன நடந்து இருக்கிது தெரியுமா? உதயன் பத்திரிகைக்கு அந்த கோவக்கார பசங்கள் இலவசமாக விளம்பரம் செய்து இருக்கிறாங்கள். குளோப் அன் மெயில் ஸ்டார், 680 தொடக்கம் எல்லா கனேடிய ஊடகங்களிலையும் இது ஓர் முக்கிய செய்தி. சேதம் சுமார் 12,000 டாலராம். 12,000 டாலர் கொடுத்து செய்யமுடியாத விளம்பரத்தை பசங்க சும்மா தட்டிப்பார்த்து செய்து இருக்கிறாங்க.

இதனால யாருக்கு லாபம்? ஒன்று தமிழ்ச்சமூகத்துக்கு கெட்ட பெயர், ரெண்டு உதயன் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் + அங்கீகாரம்.

அடடா சங்கதி தமிழ்மக்கள் தாக்கினார்கள் என்று உரிமை வேறு கோரி இருக்கிது. :wub: சிலநூறுபேரை குளிர்விக்கும் முகமாய் எழுதப்படுகிற செய்தி ஒருபுறம் இருக்க, கீழ உள்ள ஊடகங்களில வருகிற செய்தியை உலகத்தில இருக்கிற எத்தனை இலட்சம் மக்கள் வாசிப்பீனம், பார்ப்பீனம் என்று ஒருக்கால் சிந்திச்சு பாருங்கோ.

இப்பிடி தட்டிப்பார்த்து, தடவிப்பார்த்துப்போட்டு உணர்வுகளை கொட்டிப்போட்டு... நாளைக்கு நாடு கடந்த அரசு, புறநிலை அரசாங்கம் என்று சொல்லி வாக்கெடுப்பும், மாநாடும் வையுங்கோ. சர்வதேச அங்கீகாரத்தோட நிச்சயம் தமிழீழம் கிடைக்கும்.

Toronto Tamil newspaper office vandalized

National Post - ‎1 hour ago‎

Police are investigating mischief at the offices of a Toronto Tamil community newspaper, in which two large windows were smashed late Saturday night, ...

Tamil newspaper vandalized after publisher warned of trouble

Globe and Mail - Anna Mehler Paperny - ‎2 hours ago‎

Tamil newspaper ransacked in Toronto

Times of India - ‎7 hours ago‎

TORONTO: The office of a prominent Tamil newspaper here was ransacked Saturday night for covering the talks of a local Tamil leader with Sri Lankan ...

Times Online - Jeremy Page - ‎13 hours ago‎

Modesty is apparently not a strong point for Namal Rajapaksa, the 23-year-old son of the Sri Lankan President – and scion of Asia's newest political dynasty ...

Tamil newspaper's Scarborough office attacked

Toronto Star - John Rieti - ‎17 hours ago‎

The front window of Uthayan newspaper's office looked like a “vehicle drove right through it” when Kula Sellathurai arrived at the scene. ...

Tamil Newspaper Office Pillaged In Toronto For Covering Unwanted Conversation

india-server.com - ‎5 hours ago‎

A renowned Tamil newspaper office was destroyed in Toronto on Saturday because the newspaper covered the conversation between the Sri Lankan President ...

Tamil newspaper east-end office vandalized

680 News - ‎9 hours ago‎

Police are probing an act of vandalism at a Sri Lankan newspaper office in Scarborough. Uthayan, a paper widely read by Toronto's Sri Lankan Community, ...

Reconciliation, Post-War and Post-Poll

Daily Mirror - ‎16 hours ago‎

Time used to be not very long ago when terms like rehabilitation, reconstruction and reconciliation had specific meanings in contemporary Sri Lanka. ...

Vandals Target Tamil Newspaper

CityNews - ‎12 hours ago‎

தமிழச்சி, எனக்கு உதயன் பத்திரிகை நடாத்துனரை தெரியாது. நான் உதயன் பார்ப்பதும் இல்லை. உதயன் ஓர் ஊடகம் என்கின்ற வகையில இந்தத்தாக்குல் பற்றி கருத்து சொல்லி இருக்கிறன்.

நான் வட்டுக்கோட்டை தீர்மானம், நாடு கடந்த அரசு சம்மந்தமாக சொன்னது ஜனநாயக நீரோட்டத்தில தமிழர் இருக்கிறீனம் எண்டுறதை சர்வதேசத்துக்கு தெரிவிக்க முயற்சிப்பது பற்றினது.

மேலே எத்தனையோ பேர் போட்டு தாக்கினதுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறீனம். சங்கதி வேற தமிழ் மக்களின் தாக்குதல் என்று சொல்லி இருக்கிது. பிறகு என்ன என்னட்டை கேள்வி கேட்கிறீங்கள்? உதயன் நடாத்துனர் பற்றி தெரிஞ்சதை நீங்கள் அவையுக்கு சொல்லுங்கோ. கொஞ்சம் முன்னதாய் சொல்லி இருந்தால் சங்கதி தனது நிறுவனத்தை தானே தாக்கின உதயன் நடாத்துனர் என்று செய்தியை மாற்றி போட்டு இருப்பதற்கு உதவியாய் இருந்து இருக்கும். :D

சகாறா அக்கா, நான் எழுதின முழுக்கருத்துக்கும் பதில் சொல்லுங்கோ. ஒருதுண்டை தூக்கிப்பிடிச்சு விளக்கம் கேட்டால் என்னத்தை சொல்கிறது?

முரளி சிங்களத்திற்கு எதிராக எத்தனை இலட்சம் மக்கள் தெருக்களில் இறங்கி நின்றார்கள். 40 ஆயிரம் மக்கள் துடிக்கத் துடிக்கச் செத்த வேளையிலும் நின்றார்கள். அது ஒரு இன அழிப்புக்கு எதிரான போராட்டம். அப்போராட்டத்திற்காக முன்னெடுத்த விடயங்களுக்கு இன்னும் பதில் உலகத்தால் வழங்கப்படவில்லை.

நீங்கள் ஏன் பிடிவாதமாக தமிழர்கள்தான் செய்தார்கள் என்று கூறுகிறீர்கள்? நீங்கள் நேரே நின்று பார்த்தீர்களா? நீங்களும் கரும்பு என்ற வலைப்பதிவில் ஆசிரியராக இருக்கிறீர்கள் உங்களுக்கு மற்றவர்கள் வாயிலாக அது ஊகிப்பாகவும் இருக்கலாம் கிடைக்கும் செய்தியை செய்தியாக இணைக்கிறீர்கள் அதற்காக உங்களுடைய செய்தி அங்கு நேரில் சேகரிக்கப்பட்ட தகவலாக இருக்க முடியுமா?

கடைசியில இப்ப என்ன நடந்து இருக்கிது தெரியுமா? உதயன் பத்திரிகைக்கு அந்த கோவக்கார பசங்கள் இலவசமாக விளம்பரம் செய்து இருக்கிறாங்கள். குளோப் அன் மெயில் ஸ்டார், 680 தொடக்கம் எல்லா கனேடிய ஊடகங்களிலையும் இது ஓர் முக்கிய செய்தி. சேதம் சுமார் 12,000 டாலராம். 12,000 டாலர் கொடுத்து செய்யமுடியாத விளம்பரத்தை பசங்க சும்மா தட்டிப்பார்த்து செய்து இருக்கிறாங்க.

யார் அந்தக் கோபக்காரப்பசங்க? உங்களுக்கு அவர்கள் என்ன நிறம்? என்ன மொழி பேசுபவர்கள் என்று தெரியுமா?

இதனால யாருக்கு லாபம்? ஒன்று தமிழ்ச்சமூகத்துக்கு கெட்ட பெயர், ரெண்டு உதயன் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் + அங்கீகாரம்.

யாருக்கு லாபம்? தமிழ் சமூகத்திற்குக் கெட்ட பெயர் உதயன் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் :)

தமிழ் சமூகத்திற்கு கெட்ட பெயர் வருவதால் யாருக்கு லாபம்? எதற்காக? புத்திசாலிகள் இதன் பின்னணியையும் ஆராய்வார்கள். ஆக உங்கள் பதிலிலேயே இருக்கிறது இது உதயன் பத்திரிகைக்கு நல்ல விளம்பரம் என்ற தகவல். :)

கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற மனித அவலத்தை எந்தளவு தூரம் இந்த ஊடகங்கள் சுமந்து வந்தன? ஊடகத்துறையும் வணிக நோக்கத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டது என்பதை தமிழர்களாகிய நாம் கடந்த வருடம் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறோம். மனித அவலத்தைப் பேசக்கூட வணிகம் பேசிய பல சம்பவங்களைக் கடந்துதான் தமிழரின் அவலம் வெளிஉலகின் பார்வைக்குப் போய் சேர்கின்றன என்னும் விடயத்தை அறியாத வெகுளிப்பிள்ளையாக இருக்கிறீர்கள் முரளி. இங்குள்ள ஊடகங்கள் முண்டியடித்துக் கொண்டு இச்செய்தியைப் பிரசுரிப்பதற்கு மிகைப்பட்ட வருமானம் கிடைக்கவில்லை என்றால் இச் செய்திக்கு முதன்மை அளிக்குமா?

அடுத்து குற்றவாளிகள் யார் என்று தெரியாத நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு, மற்றும் வட்டுக் கோட்டைத் தீர்மானம் மீதான ஜனநாயக வாக்கெடுப்புகளை முன்னெடுக்கும் தமிழர் சமுதாயத்தின் மீது சந்தேகக் கல் எறிவதை நாம் தவிர்க்கலாமே

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து கனடா உதயனுக்கு பத்திரிகை, ஊடகம் என்ற வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிருங்கள். பத்திரிகைத் துறைக்கே அது கேவலம்.

காசு கொடுத்தால் உங்கள் மகளினது நடன அரங்கேற்றத்தை முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் இந்த விளம்பரத் தாள் போடும். யாராவது இளிச்சவாயன் அம்பிட்டால் ... என்ற மகளின்ரை அரங்கேற்ற செய்தி பத்திரிகையின் முன் பக்கத்தில் வந்திருக்கின்றது என்று பீற்றிக்கொள்ள மட்டும் உதவும்.

Edited by காட்டாறு

இது கோழைகளின் தாக்குதல் இல்லை. கோபத்தின் தாக்குதல்.

இவ்வளவு நாலும் தமிழரை பேய்க்காட்டி தன்னை வளர்த்து போட்டு

இப்ப சுய முகத்தை காட்ட வெளிக்கிடதன் வெளிப்பாடு.

யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

தக்குதல் சரியோ பிழையோ தெரியாது. தொடர்ந்தும் இனத்தின் பெயரை சொல்லி பேய்க்காட்டி பிழைப்பு நடாத்துவதை அனுமதிக்க மாட்டோம்

என்று சொல்வது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுடன் தொடர்பு - கனடா உதயன் மக்களால் தாக்கப்பட்டது

சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்ந்த ராசபக்‌சவுடன் வர்த்தக உறவு கலந்துரையாடலில் பங்குபற்றியதற்காகவும் அதன் செய்தியினை முன்பக்கத்தில் பிரசுரித்தமைக்காகவும் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை தாக்கப்பட்டுள்ளது.

கனடா உதயன் பத்திரிகை நிர்வாகி குலா செல்லத்துரை அவர்கள் கனடா - சிறீலங்கா வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருகின்றார். இவர்அண்மையில் சிறீலங்கா சென்று மகிந்த ராசபக்‌சவுடன் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் மகிந்தவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றினையும் எடுத்து அதனை உதயன் பத்திரிகையில் முன் அட்டையில் பிரசுரித்தாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், செல்லத்துரை அவர்கள் பத்திரிகை அலுவலகம் செல்லும் வேளை பார்த்து அங்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாலையத்தையும் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒருபக்கம் பொருளாதார தடை என்ற போராட்டம் தொடர இன்னொரு பக்கம் வர்த்தக உறவை பேணுவதும். இதே வேளை ஈவிரக்கமின்றி 40,000 வரையான மக்களை கொன்ற மகிந்;தவுடன் புலம் பெயர் மக்கள் உறவுகளை வைத்து கொள்ளல் ஆகியவையே தாக்குதலிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

நன்றி சங்கதி

  • தொடங்கியவர்

நிழலியும் மச்சானும் "உதயன்" ஐயும் லோகேந்திரலிங்கத்தையும் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சஹாராக்கா குறிப்பிட்டதுபோல, உதயன் எத்தனை தடவைகள் இப்படி காப்புறுதிப் பணமும், வங்கி முறிதலும் செய்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? பொது இடத்தில் ஒரு கொலையே கூட நடந்தாலும் அதற்கு வழக்கு போடப்பட்டு விசாரித்தபின்னர்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் இங்குள்ள சிலரோ........

கொலையை யார் செய்தனர், ஏன் செய்தனர் என்பற்கு அப்பால் ஒரு கொலைக்கான கண்டனத்தையும் அதன் துயரத்தையும் தான் அந்தக் கொலை பற்றிய செய்தி முதலில் வெளிப்படுத்தும். அதேபோல் தான் இங்கு தமிழ் ஊடகமான 'உதயன்' தாக்கப்பட்டிருக்கு என்பது கண்டனத்திற்குரியதாகும். அதனை அவர்களே செய்தார்களா அல்லது, 'கோழைக்கார பசங்கள்" செய்தார்களா என்பதுக்கு அப்பால் அது கண்டனத்திற்குரியது. ஒரு வேளை அதனை உதயனே செய்திருந்தாலும் தமிழ் ஊடகத்துறையில் இருக்கும் அற்பத்தனங்களை வெளிக்காட்டி அது மேலும் கண்டனத்திற்குரியதாகத் தானிருக்கும்

ஆனால், இங்கு உதயன் உரிமையாளர் ஒரு பச்சோந்தி, அதனால் அது தாக்கப்பட்டிருப்பது சரிதான் என்று வாதிடுபவர்கள் மீதுதான் எங்கள் கேள்வி அமைகின்றது. உதயன் பற்றிய விமர்சனமும், உதயனின் செயல்பற்றிய விளக்கங்களும் மக்களுக்கு தெரிவிப்பதற்கு எத்தனையோ முறையிருக்க, அதனை தாக்குவதுதான் சிறந்த விடயம் என்று வாதிடுவது சரியா இல்லையா என்பதுதான் முக்கிய கேள்வி.

கனடா பத்திரிகைகள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் பிரதான காரணங்களில் ஒன்று, ஒரு பத்திரிகை காரியாலயம் தாக்கப்பட்டிருப்பது என்பதால் ஆகும். இதுவே வேறு ஒரு பத்திரிகை கனடா மண்ணில் தாக்கப்பட்டிருந்தாலும், கனடா பத்திரிகைகள் இவ்வாறுதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கும். கனடாவில் இருக்கும் ஊடகச் சுதந்திரம் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை என நம்புகின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உலகதமிழர் இயக்கத்தை தடைசெய்து அதனை இயங்காமல் பண்ணிய போது கண்மூடி இருந்த ஊடகங்கள் எல்லாம் இப்போ ஒரு தமிழ் விளம்பர பத்திரிகை மீது யாராலோ தாக்குதல் நடாத்தப்பட்ட போது மட்டும் பந்தி பந்தியாக எழுதுவதன் உள்நோக்கம் என்ன? யார் என்றே கண்டு பிடிக்கவில்லை உடனடியாக பெரிய எழுத்துக்களில் தலைப்புக்கள் என்ன சொல்லி வேலையில்லை. இவர்கள் எப்படி நடுநிலையானவர்கள்.எமது இனத்தை மானபங்க படுத்த வெளிக்கிட்டவர்களாவே பார்க்க முடிகிறது. போதாததுக்கு நாங்கள் ஏன் குத்தி முறிகிறோம் என்றும் விளங்கவில்லை.

கனடிய உளவு துறை நிச்சயமாக செய்தவர்களை கண்டு பிடிக்கவே முடியாது. ஏனென்றால் செய்வித்தவர் நேதாரலிங்கம் தானே. :wub: செய்கிறவற்றையும் செய்து விட்டு சோதியை கூப்பிட்டு அலுவலகத்துக்கு முன் ஒரு நேரடி அஞ்சல்.யப்பா இது எங்கே கனடிய உளவு துறைக்கு விளங்க போகுது. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி நீங்கள் சொல்வது சரியானது. ஆனால் அது ஒரு அறிவுபூர்வமான சமுதாயத்துக்கு மட்டுமே ஏற்புடையது. எங்கள் இனம் அறிவுபூர்வமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் தரமான ஒரு பத்திரிகையாவது வந்திருக்கக் கூடாதா? இந்த கேவலங்கெட்ட விளம்பரத் தாளையெல்லாம் "பத்திரிகை" என்று சொல்லும் இழி நிலை வந்தா இருக்கும்?

காவாலிகளை எங்கள் பொறுப்பற்ற தனத்தாலும் அறிவீனத்தாலும் மேடையேற்றி விட்டோம். அந்த காவாலிகள் மேடையை நாறடிப்பதை இப்போது பார்க்கின்றோம். இவ்வளவு காலமும் இவர்கள் நாறடிப்பதை பார்த்து பேசாமல் இருந்த நாம் ... இப்போது அவர்கள் தாக்கப்படும் போது (உண்மையில் தாக்கப்பட்டிருந்தால் கூட) மட்டும் ஏன் கூவவேண்டும்?

Edited by காட்டாறு

நிழலி நீங்கள் சொல்வது சரியானது. ஆனால் அது ஒரு அறிவுபூர்வமான சமுதாயத்துக்கு மட்டுமே ஏற்புடையது. எங்கள் இனம் அறிவுபூர்வமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் தரமான ஒரு பத்திரிகையாவது வந்திருக்கக் கூடாதா? இந்த கேவலங்கெட்ட விளம்பரத் தாளையெல்லாம் "பத்திரிகை" என்று சொல்லும் இழி நிலை வந்தா இருக்கும்?

காவாலிகளை எங்கள் பொறுப்பற்ற தனத்தாலும் அறிவீனத்தாலும் மேடையேற்றி விட்டோம். அந்த காவாலிகள் மேடையை நாறடிப்பதை இப்போது பார்க்கின்றோம். இவ்வளவு காலமும் இவர்கள் நாறடிப்பதை பார்த்து பேசாமல் இருந்த நாம் ... இப்போது அவர்கள் தாக்கப்படும் போது மட்டும் ஏன் கூவவேண்டும்?

  • தொடங்கியவர்

நிழலி நீங்கள் சொல்வது சரியானது. ஆனால் அது ஒரு அறிவுபூர்வமான சமுதாயத்துக்கு மட்டுமே ஏற்புடையது. எங்கள் இனம் அறிவுபூர்வமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் தரமான ஒரு பத்திரிகையாவது வந்திருக்கக் கூடாதா? இந்த கேவலங்கெட்ட விளம்பரத் தாளையெல்லாம் "பத்திரிகை" என்று சொல்லும் இழி நிலை வந்தா இருக்கும்?

காவாலிகளை எங்கள் பொறுப்பற்ற தனத்தாலும் அறிவீனத்தாலும் மேடையேற்றி விட்டோம். அந்த காவாலிகள் மேடையை நாறடிப்பதை இப்போது பார்க்கின்றோம். இவ்வளவு காலமும் இவர்கள் நாறடிப்பதை பார்த்து பேசாமல் இருந்த நாம் ... இப்போது அவர்கள் தாக்கப்படும் போது மட்டும் ஏன் கூவவேண்டும்?

மிகவும் வேதனையான உண்மை இது காட்டாறு.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கேவலங்கெட்ட விளம்பரத் தாளையெல்லாம்.................மிகவும் சரியான சொற்பதம்.

சகாறா அக்கா, எனது கருத்துக்களை வட்டம் போட்டு காட்டி இருக்கும் அதேநேரம் இந்த திரியில எல்லா கருத்துக்களையும் ஒருக்கால் முழுமையாக பாருங்கோ. அப்போது எனது கருத்தின் அர்த்தம் புரியும்.

மேல சித்தன், மற்றும் அர்ஜுன் ஆகியோர் இரண்டு கேள்விகளை கேட்டு இருக்கிறீனம். அதற்கு எவராவது பதில் சொல்லி இருக்கிறீனமா?

இந்த உதயன் பத்திரிகைக்கு எப்படி மக்கள் ஆதரவு கிடைக்கின்றது? உதயன் பத்திரிகை விளம்பரத்தின் அடிப்படையில் இயங்குகின்றது என்றால் அந்த விளம்பரங்களை உதயன் பத்திரிகைக்கு கொடுப்பதை நிறுத்துவதற்கு மக்கள் ஏன் முன்வரவில்லை? உதயன் பத்திரிகையை தங்கள் வியாபார நிலையங்களில் விநியோகம் செய்வதற்கு தமிழர் வியாபார நிறுவனங்கள் ஏன் ஆதரவை தொடர்ந்து கொடுக்கின்றார்கள்? அப்படியாயின் உண்மையில் மக்கள் ஆதரவு உதயனுக்கு இருக்கின்றது என்பதுதானே அர்த்தம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேவலங்கெட்ட விளம்பரத் தாளையெல்லாம்.................மிகவும் சரியான சொற்பதம்.

சரி சரி......குற்றச்சாட்டுகள் எல்லாம் இப்பத்தான் வருகிது. அடிச்சுடைச்சதுக்காக ஆதரவும் கனக்க இருக்கு. அடுத்தது யாருக்கு பட்டம் குடுக்கலாம் எண்டு வரும் அதுவரைக்கும் கொஞச ஓய்வு எடுங்கோ. :wub:
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சுதந்திரம் என்பது ஊருக்கு நமக்கல்ல :wub:

அடுத்த நமது படைப்பு காதலிக்கும் பெண்ணின் கண்கள் ஒரு விஞ்ஞான புனை கதை ஆர்தர் c கிளார்க்,ஐசாக் அசிமோவ் மற்றும் நம்மவர் சுஜாதா போன்றவர்களின் ஒரு கலவையாக வரும் அற்புத கதையை ஆவலுடன் எதிர் பாருங்கள்:wub:

ஏனென்றால் அதை தூக்க முடியாதே!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கமெங்க!

இங்கு நாங்கள் கவர்சியாக கருத்துக்களை முன்வைக்கும்போது பிரச்சினையை பலவிதமாக அணுகியிருக்கவேண்டும். மச்சான் உங்களால் குறிக்கப்பட்ட ஆதரவு என்பது எதை வைத்து கூறுகின்றீர்கள்? அதாவது பத்திரிகையில் வரும் விளம்பரங்களின் தொகையை வைத்தா? எல்லாக்கடைகளிலும் அதிகமாக விநியோகிக்கப்படுவதை வைத்தா? அல்லது நல்ல கலரான பத்திரிகை என்பதினாலா?

முக்கியமாக ஈழத்தமிழர் விடயத்தை இரண்டு அத்தியாயமாக நோக்க வேண்டியுள்ளது, ஒன்று 2009மே மாதத்திற்கு முன்னைய , பின்னைய என்று பிரித்துத்தான் பல விடயங்களையும் சம்பவங்களையும் நோக்க வேண்டியுள்ளது.

இன்று எங்களால் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கும் உதயன் பத்திரிகை விடயம் அல்லது சம்பவமும் ஒரு சந்தேகத்திற்கிடமான விடயம்.

எனது கருத்து என்னவென்றால் பத்திரிகை நிறுவனத்தின் தாக்குதல் பற்றி விவாதத்திற்கு எடுத்தோமானால் அது தப்பு, கோளைத்தனம், முட்டால்தனம் அதாவது ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஏனென்றால் ஊடகச்சுதந்திரத்தை மதிக்கவேண்டும்.

இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் மதிப்பு மிகு திரு லோகேந்திரலிங்கம் அவர்களையும் ஊடகத்துறையையும் ஒன்றாக சேர்த்து குழப்பாதீர்கள்.

யார் இந்த லோகேந்திரலிங்கம் ஜயா? இவரைப்பற்றி இன்று நாங்கள் பெரிதுபடுத்தும் அளவிற்கு தேசியத்திற்காக அல்லது ஊடகத்துறையில் என்ன செய்துள்ளார்? பத்திரிகை வியாபாரத்தை தவிர.

இவர் செய்த சாதனைகள் இவைதான்.

1- அதிகளவான பிரமுகர்களுடன் வலிய வலிய சென்று படம் எடுத்துக்கொள்வது.

2- தனது பத்திரிகையிலையே தனது படம் மற்றும் தான் சம்பந்தமாக செய்திகளை இணைப்பித்தல்.

3- ஒரு பிரபல இந்து ஆலயம், இரண்டு தமிழ் வானொலிகள், ஒரு தமிழர் வியாபார கைநூல், சில தனியார் கல்வி நிலையங்கள், சில தமிழர் மருத்துவ நிலையங்கள், போன்றவர்களின் சிறப்பு நிகழ்வுகளில் தன்னை முன்னிலைப் படுத்துவதும், தனது நிகழ்வுகளின் போதும் அவர்களை முன்னிலைப் படுத்துவதினாலை தான் பிரபல்யமாக இருக்கிறாரே தவிர மற்றும்படி அவரது சேவையோ அல்லது பொதுநலன் மனப்பான்மையோ காரனமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று அதாவது தமிழீழத்தில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற அவலத்தின் பின்பு இவரைப்போன்றோர்களின் செயல்களை ஆமோதிப்பது போன்ற மாதிரித்தான் இங்கு பலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

அப்படியென்றால் உங்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புக்கள் எல்லாம் வேஷமானவையா? அல்லது எல்லாமே முடிந்துவிட்டது இனிமேல் அப்படித்தான் வாழவேண்டும் என்று எல்லோரும் மாறி விட்டீர்களா?

இவர்களின் நடவடிக்கைகள் எப்படியானவை தெரியுமா?

இப்படித்தான் நடக்கவேண்டும் என்று காத்திருந்த மாதிரியல்லவா உள்ளது?

நீங்கள் விவாதிக்க வேண்டிய விடயம் பத்திரிகை தாக்குதலுக்கு உள்ளானது சரியா? பிழையா? என்பதுதான்

ஆகவே தயவுசெய்து இந்த விவாதத்தில் தமிழ்த்தேசியம் போன்ற சொற்களை புகுத்தி ஒரு தமிழ்த்தேசியத்தின் மாற்றுக்கருத்தாளரை கெளரவப்படுத்தாதீர்கள்.

இணைவோம் தமிழராய்!

Edited by Valvai Mainthan

கருத்து சுதந்திரம் என்பது ஊருக்கு நமக்கல்ல :wub:

அடுத்த நமது படைப்பு காதலிக்கும் பெண்ணின் கண்கள் ஒரு விஞ்ஞான புனை கதை ஆர்தர் c கிளார்க்,ஐசாக் அசிமோவ் மற்றும் நம்மவர் சுஜாதா போன்றவர்களின் ஒரு கலவையாக வரும் அற்புத கதையை ஆவலுடன் எதிர் பாருங்கள்:wub:

ஏனென்றால் அதை தூக்க முடியாதே!

புரியவில்லை. புரிகிறமாதிரி சொல்லிப்போட்டு சிரிச்சால் நாங்களும் சேர்ந்து சிரிக்க முயற்சிக்கலாம்.

இவர் செய்த சாதனைகள் இவைதான்.

1- அதிகளவான பிரமுகர்களுடன் வலிய வலிய சென்று படம் எடுத்துக்கொள்வது.

2- தனது பத்திரிகையிலையே தனது படம் மற்றும் தான் சம்பந்தமாக செய்திகளை இணைப்பித்தல்.

3- ஒரு பிரபல இந்து ஆலயம், இரண்டு தமிழ் வானொலிகள், ஒரு தமிழர் வியாபார கைநூல், சில தனியார் கல்வி நிலையங்கள், சில தமிழர் மருத்துவ நிலையங்கள், போன்றவர்களின் சிறப்பு நிகழ்வுகளில் தன்னை முன்னிலைப் படுத்துவதும், தனது நிகழ்வுகளின் போதும் அவர்களை முன்னிலைப் படுத்துவதினாலை தான் பிரபல்யமாக இருக்கிறாரே தவிர மற்றும்படி அவரது சேவையோ அல்லது பொதுநலன் மனப்பான்மையோ காரனமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவையே இவர் செய்த சாதனைகளாக இருக்கட்டும். ஆனால்.. அவரினால் தொடர்ந்து வெற்றிகரமாக தனது பத்திரிகையை கொண்டு நடாத்த முடிகின்றதே. எப்படி? குளோப் அன் மெயிலில் அல்லது நசனல் போஸ்டில் 10,000 circulation power என்று போட்டு இருந்தார்கள். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் நம்மட மக்கள் இவரின் சாதனைகள் சம்மந்தமாக அலட்டிக்கொள்ள இல்லை என்று தெரிகிது வல்வை அண்ணா.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியவில்லை. புரிகிறமாதிரி சொல்லிப்போட்டு சிரிச்சால் நாங்களும் சேர்ந்து சிரிக்க முயற்சிக்கலாம்.

இவையே இவர் செய்த சாதனைகளாக இருக்கட்டும். ஆனால்.. அவரினால் தொடர்ந்து வெற்றிகரமாக தனது பத்திரிகையை கொண்டு நடாத்த முடிகின்றதே. எப்படி? குளோப் அன் மெயிலில் அல்லது நசனல் போஸ்டில் 15,000 circulation power என்று போட்டு இருந்தார்கள். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் நம்மட மக்கள் இவரின் சாதனைகள் சம்மந்தமாக அலட்டிக்கொள்ள இல்லை என்று தெரிகிது வல்வை அண்ணா.

சரி சரி மகிந்தவை சத்தித்து திம்பியவர் பத்திரிகை உரிமையாளர் செல்வதுரை அவரை விட்டுவிட்டு ஆசிரியரை கிழிப்பதில் மட்டுமே எல்லோரும்

குறியாக உள்ளனர் .செல்வதுரை பற்றி கருத்துகளையும் வந்து சொன்னால்தானே நல்லாய் இருக்கும் ஏன்ரால் அவர்தானே மகிந்தாவை சந்தித்தவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி மகிந்தவை சத்தித்து திம்பியவர் பத்திரிகை உரிமையாளர் செல்வதுரை அவரை விட்டுவிட்டு ஆசிரியரை கிழிப்பதில் மட்டுமே எல்லோரும்

குறியாக உள்ளனர் .செல்வதுரை பற்றி கருத்துகளையும் வந்து சொன்னால்தானே நல்லாய் இருக்கும் ஏன்ரால் அவர்தானே மகிந்தாவை சந்தித்தவர்

அதுகும் அப்பிடியே? சேந்து நிண்டவர விட்டிட்டு தூர நிண்டவருக்கே இவளவு கல்லெறி. :wub:

உதயன் பத்திரிகையின் தராதரம்,லொகேந்திரலிங்கம் எப்படிப்பட்டவர் என்றதுகளைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை.தனக்கு தெரிந்ததை அவர் நடாத்திவிட்டு போகட்டும்.அவன் யாரோட படம் எடுத்தாலென்ன உங்களுக்கென்ன? எல்லோரும் உங்களுடன் ஒத்து ஊதவேண்டும் என்று எழுதாத சட்டமா வைத்திருக்கின்றீர்கள்.

எங்களுடைய இப்படியான குணாதியசத்தால் நாங்கள் கனடா போன்ற நாடுகளில் எமது நாட்டில் உரிமைகான போராட்டத்திற்கான ஆதரவையும் இழந்து,அத்துடன் இங்கு படிக்கும் எமது இளையசந்ததிக்கு கல்விகற்குமிடங்களிலும்,வேலைசெய்யும் இடங்களிலும் பல அசௌங்கரியங்களையும் ஏற்படுத்துகின்றோம்.

40,000 எங்கட மக்கள் சாகும் போது பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தானே இவர்கள் என்று சொல்ல போகின்றீர்கள்? ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் அதைவிட குடூரமான யுத்தத்திற்கு துணை போகின்றவர்கள் இவர்கள்.அதே நேரம் தமது நாட்டை சட்டதிட்டத்துடன் நடாத்துபவர்கள்.ஜனநாயம் நாடு என்று எவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு என்று காட்டிக்கொள்பவர்கள்.நாகரீகமடைந்த தமிழருக்கும் அது பொருந்தும்

நீங்கள் செய்வதை முதல் சரியாகச் செய்தால் அப்படிப்பட்டவர்களை சனமே ஒதுக்கிவிடும். சனத்திற்கு வடிவாக எல்லாம் தெரியும். தேசியம் என்ற போர்வையில் குளிர்காய்பவர்களை விட இவர்கள் திறம் என்ற படியால் தான் சனம் அவர்களிடம் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நிழலி அண்ணா லோகேந்திரலின்கந்திண்ட உதயன் பத்திரிகைக்கு அடி விளுந்துடன் பத்திரிகை சுகந்திரம் பத்தி எதோ துள்ளி அடிகிறிகள்.

நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்றால்,

உதயன் பத்திரிகை சிலவரங்களுக்கும் முன்னும் சில வியாபார நிறுவனங்களில் நின்று துக்கபட்டது என்று டொரோண்டோ ஸ்டார் இல வந்தது நீங்கள் முச்சு விடவில்லை . இலங்கையில் எத்தினையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டும், பத்திரிகை நிறுவனகள் தாக்கப்படும் வந்துள்ளது.ஆனால் நீங்கள் அதப்பத்தி ஒரு டொபிக் கூட எழுதவில்லை.

நீங்கள் குறை நினைக்க கூடாது அண்ணா , நீங்களும் புங்குடுதீவே? ஏனென்றல் புங்குடுதீவு அக்களுஉக்கு தங்கட ஊர் ஆக்களில கைவச்சல் ஊர் ஆக்கள் விட மாட்டினமாம் என்று ஒரு புங்குடுதீவு நண்பர் சொன்னார்.

இலங்கை ஆமி தங்கட ஊரில கைவைக்காத படியால் தானம் தங்கட ஊரில் இருந்து மாவீரர் குறைவாம் என்று சொன்னார்.

நான் ஒருக்கா விறைச்சுபோனேன், இப்ப பாருங்கோ எல்லாரும் என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு கனடா தமிழர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்துள்ளது . அமெரிக்கவின் இப்போதைய போக்குக்கு கனடாவில் நடந்த போராட்டங்களும் , தூதரகதுக்கு முன்னால் நடந்த ஆர்பாட்டங்களும். கனடா தமிழருக்கு ஒரு சேறு பூசும் வகைல் toronto star இல் வரகூடிய மாதிரி லோகேந்திரலிங்கம் மகிந்தவிடம் பல கோடிகணக்கில் பணம் பெற்றுருக்கலாம்.

அவர் ஏன் toronto star போன்ற நிறுவனகளுக்கு இந்த தாக்குதல் ஒரு அரசியல் சம்பந்தமானது என்றும், நாங்கள் மகிந்தவுடன் சமாதானமாக வாழவிரும்புகிறோம் என்றெல்லாம் கூறுவது மிகவும் சந்தேமானது.

அவரே சில ஆட்களை வைத்து தன்னுடைய அலுவலகத்தை உடைத்து விட்டு பணத்துக்காக நாடகம் ஆடலாம்.

அவர் எவ்வளவு பணத்தாசை பிடித்தவர் என்று நீங்கள் ஒரு விளம்பரம் கொடுக்க போனால் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் வட இந்தியர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு சூறையாக்கப்பட்ட செய்திகள் வந்தன. தாக்கப்பட்ட இந்திய நிறுவனங்களும், இந்திய ஊடகங்களும் தாக்கியவர்கள் அவுஸ்திரெலியர்கள் என்று சொல்லி இனவெறித்தாக்குதல் என்றும் சொன்னார்கள். சில நாட்களுக்குப் பின்பு காவல்துறை விசாரணையின் பின்பு காப்புறுதிப்பணத்திற்காக வட இந்தியர்கள் தங்களது நிறுவனங்களை சேதம் செய்த சதி அம்பலமானது. சிலவேளை காப்புறுதிக்காக உதயன் நிறுவனமே எரித்தும் இருக்கலாம். கனடா உதயன் பத்திரிகை மீது உண்மையில் தாக்குதல் நடந்திருக்கலாம். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு செய்கிற சில காரியங்களினால் பாதிக்கப்படுவது எம்மினம் தான். அவுஸ்திரெலியாவில் உதயம் என்ற பத்திரிகை இருக்கிறது. அப்பத்திரிகையை சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக செய்தி வெளியிடும் பத்திரிகை. பல தமிழ்க்கடைகள் அப்பத்திரிகையை தங்களது கடையில் வைக்க அனுமதிப்பதில்லை. எம்மவர்கள் பலர் அப்பத்திரிகைக்கு விளம்பரங்கள் செய்வதுமில்லை. இந்தியர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள்( உ+ம் அவுஸ்திரெலியா சன் தொலைக்காட்சி).எம்மவர்கள் பலர் அப்பத்திரிகையைப் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையே இவர் செய்த சாதனைகளாக இருக்கட்டும். ஆனால்.. அவரினால் தொடர்ந்து வெற்றிகரமாக தனது பத்திரிகையை கொண்டு நடாத்த முடிகின்றதே. எப்படி? குளோப் அன் மெயிலில் அல்லது நசனல் போஸ்டில் 10,000 circulation power என்று போட்டு இருந்தார்கள். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் நம்மட மக்கள் இவரின் சாதனைகள் சம்மந்தமாக அலட்டிக்கொள்ள இல்லை என்று தெரிகிது வல்வை அண்ணா.

மச்சான்... கோதாரிலிங்கத்திற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு பற்றி நன்கு அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். அவரின் சிறப்பியல்புகளை அறிய நீங்கள் National Post எல்லாம் எடுத்து படிக்கவேண்டியதில்லை :wub: . சிம்பிள் வேலை .. இப்பொழுது நீங்கள் 2978 கருத்துகளை எழுதிவிட்டீர்கள். வெகு விரைவில் 3000 கருத்துக்களைத் தொட்டுவிடுவீர்கள். இதை வெகு விமர்சையாக கொண்டாட விரும்பினால் செல்லுங்கள் கோதாரிலிங்கத்திடம். கேட்கும் காசைக் கொடுங்கள். அடுத்த உதயனில் வரும் பாருங்கள் சும்மா .. முன் பக்கத்தில் பெரிய தலைப்புச் செய்தி போல கொட்டை எழுத்தில் ...

யாழ் களத்தில் 3000 கருத்துக்கள் எழுதி சாதனை புரிந்த மச்சான் அவர்களுக்கு கவிஞர் xxx அவர்கள் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவம். :wub:

கூடவே உங்களுக்கு பொன்னாடை போர்த்தும் புகைப்படமும் அச்சிடப்பட்டிருக்கும். :)

Edited by காட்டாறு

லோகேந்திரலிங்கம் பற்றி எனக்கு தெரியும் உனக்கு தெரியும் என்டு மாத்தி மாத்தி அடிபடுறீங்கள்...அப்படி அந்த ஆளை பற்றி என்னதான் தெரியும்?..யார் அவர்?..ஊரில மூலிகை பெற்றோல் ஏதும் கண்டுபிடிச்சவரே?..ஏன் அவர பற்றி இவ்வளவு விவாதம் :wub: :wub:

காட்டாறு,

நீங்கள் நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும் இதன்பின்னால் பல உண்மைகள் இருக்கிது. இதை விளக்குவதற்கு பிரபலமான ஓர் கொள்கையும் இருக்கிது. இதை Maslow's hierarchy of needs என்று அழைப்பார்கள்.

maslow.png

எனக்கு ஒரு பெரியவர் சொன்னார் தன்னிடம் ஆட்கள் வந்து “உங்களுக்கு நாங்கள் பாராட்டுவிழா செய்யப்போறம் காசு தாங்கோ” என்று கேட்டுச்சீனமாம் என்று. அவர் சொன்னாராம் தானே காசுதந்து தனக்கு பாராட்டு விழா செய்ய ஏலாது என்று. உண்மையில கனடாவில இப்படியான விசயங்கள் சகஜம். இந்தவகையில பார்க்கேக்கயும் ஏன் உதயன் பத்திரிகைக்கு மக்கள் ஆதரவு இருக்கிது என்கின்றதை ஒருவகையில புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிது.

ஒருவிதத்தில பார்த்தால் இப்படி காசு கொடுத்தால் பத்திரிகையில பாராட்டி விளம்பரம் போடக்கூடிய நிலமை இருப்பதும் தவறானது என்று சொல்லிறதுக்கு இல்லை. ஏன் என்றால் எங்கட சமூகத்தில ஒருவனை மனந்திறந்து பாராட்டி மகிழ்வதற்கு ஒருசிலர் தவிர எல்லாராலும் முடியாது.

நான் முன்பு சில வருசங்களுக்கு முன்னர் செஞ்சோலை மாணவிகள் நினைவாக ஓர் பாடல் செய்து அதை பல்வேறு வானொலிகளுக்கு அனுப்பினன். பாடலை போடவில்லை பரவாயில்லை. ஒரு சின்ன Appreciate பண்ணி இரண்டு வார்த்தைகூட பதில் எழுதி ஓர் மின்னஞ்சல்கூட அனுப்பவில்லை. நானும் பதறி அடிச்சு குறிப்பிட்ட நினைவுதினத்துக்கு முன்னதாக வானொலிகளுக்கு பாடலை செய்து அனுப்பி கடைசியில கொட்டாவி விட்டதுதான் மிச்சம்.

அதாவது, தங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள், தாங்கள் அறிஞ்சவர்கள், ஏற்கனவே அறியப்பட்டவர்கள் இவர்கள் மாத்திரம்தான் நமது ஊடகவட்டத்தில் பிரகாசிக்க - வெளிபடுத்தப்பட முடியும்.

இப்படியான நிலமையில, காசு கொடுத்தால் விசயத்தை வெளியில கொண்டு செல்லமுடியும் என்றால் அதில் தவறு ஏதும் இல்லை.

தாக்குதல் விசயத்தை மீண்டும் எடுத்தால்… இந்த தாக்குதலை சிறுபிள்ளைத்தனமானது – Childish - என்று காவல்துறை சொல்லி இருக்கிது. யாராவது உணர்ச்சியை அடக்கமுடியாத ஒன்று இரண்டு இளைஞர்கள் எதேச்சையாக, தன்னிச்சையாக இப்படி செய்து இருக்கலாம்.

நான் வட்டுக்கோட்டை தீர்மானம், நாடு கடந்த அரசை இங்கு ஒப்புமை காட்டியது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். ஏன் என்றால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை, நாடு கடந்த அரசை முன்னெடுப்பவர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எதுவித தொடர்பும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்த தாக்குதல் முற்றிலும் ஓர் சூழ்ச்சியாக இருந்தாலும், உதயன் கனேடிய தமிழ் ஊடகம் என்கின்றவகையில நம்மவர்கள், நமது ஊடகங்கள் தாக்குதலை கண்டிக்க முன்வராத தன்மை, மாறாக தாக்குதலுக்கு புகழாரம் சூட்டுகின்ற தன்மை நம்மவர்களின் – நமது ஊடகங்களிண்ட வக்கிரபுத்தியை, வக்கிர தன்மையை காட்டி நிற்கிது. Decency இல்லாதவரை நாங்கள் எமது குறுகியவட்டத்தில இருந்து வெளியேறி சர்வதேசத்தில பிரகாசிக்கவோ, வெற்றிகரமாக காரியங்களை ஆற்றவோ முடியாது.

வன்முறைகள் மூலம் அழிவுகள் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை எண்டுறதுதான் நாங்கள் அண்மையில படிச்சுக்கொண்ட பாடம். இதை எங்கட ஊடகங்கள், நம்மவர்கள் மறந்துகொள்வது கவலைக்குரியது.

வணக்கம்.

Edited by மச்சான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.