Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பட்டியலிலிருந்து தீபச்செல்வன் விலக்கப்பட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-7111-12671854316535.jpg

யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளர் கவிஞர் தீபச்செல்வன் இறுதி நேரத்தில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிருந்து விலக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளரும் ஈழத்தின் கவிஞர்களில் ஒருவருமான தீபச்செல்வன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தீபச்செல்வனின் பெயர் இடம்பெறவில்லை.

கடந்த காலத்தில் அதுவும் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்வேறு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்த இவர், வன்னியில் இடம்பெற்ற கடுமையான போருக்கு எதிராக மௌனப் பிரார்த்தனை என்ற அமைதிப் போராட்டத்தையும் தனித்து நின்று செய்திருந்தவர். தடுப்பு முகாங்களிலுள்ள மாணவர்களை முகாங்களிலிருந்து வெளியில் மீட்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

இறுதி வரை இவர் போட்டியிடுவதாக கூறப்பட்ட பொழுதும் இன்று வெளியிட்ட பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லை என்று தெரிய வருகிறது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={9DE665BE-B4F0-49D8-8347-0E253FBC6A4D}

Edited by தீபம்

  • Replies 71
  • Views 5.3k
  • Created
  • Last Reply

தனிப்பட்ட ரீதியில் தீபன், உங்களை ஒரு அரசியல்வாதியாக பார்க்க விரும்பவில்லை என்பதால் எனக்கு ஓரளவு சந்தோசமாக இருக்கின்றது இந்தச் செய்தியைக் கேட்க. இந்த அரசியலில் இல்லாமல், நீங்கல் ஆற்றக்கூடிய பல காத்திரமான விடயங்கள் இருக்கு என நினைக்கின்றன்

தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்

சுயேச்சையாய் நின்று இருக்க ஏலாதோ? கடைசி நேரத்தில மாற்றம் செய்யாமல் முன்னமே சொல்லி இருக்க ஏலாதோ? சீட்டு கிடைச்சால் போய் சேவை செய்யுங்கோ. கிடைக்காட்டிக்கு தலையோட வந்த சனியன் தலைப்பாகையோட போயிட்டுது எண்டு நினைச்சுக்கொள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் தீபச்செல்வன் அவர்களே, மக்களுக்கு சேவை செய்ய "அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை"க்கு போக வேண்டியது இல்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே மக்களுக்குச் சேவை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

கூட்டமைப்பு இன்னும் எத்தனை நல்ல வேட்பாளர்களை நீக்கி தனது விசுவாசத்தை காட்டப் போகிறதோ..... :rolleyes:

இனி.... இதனை கூட்டமைப்பு என்னும் பதத்தை பாவிப்பதை நான் ஆட்சேபிக்கின்றேன். :)

வேறு பொருத்தமான பெயர் என்ன வைக்கலாம், என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடித்துவிடும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நியமனத்தில் என்னை நிராகரித்தாக முதலில் தெரிய வந்த பொழுதும் உன்மையில் அவர்கள் எனது விண்ணப்பத்தை நிராகரிக்கவில்லை என்பதுதான் உன்மை. இதை பின்னரே அறிய முடிந்தது. எப்படி என் பெயர் அகன்றது என்பதை இப்பொழுது கூற முடியாதுள்ளது. கூட்டமைப்பில் போட்டியிட முடியாதுபோனதால் தேர்தலில் இருந்து ஒதுங்கும் முடிவை இரண்டு நாட்களின் முன்பே எடுத்துவிட்டேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டுமே போட்டியிடும் நிலைப்பாடு எனக்கிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக எமது மக்களின் எதிர்கால அரசியலை வலுப்படுத்தவும் எண்ணங்களை செயற்படுத்தவுமே தேர்தலில் போட்டியிட தீர்மானத்திருந்தேன். மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக இனி பகிரங்கமாக இறங்கி வேலையாற்ற வேண்டும் என்பற்காகவும் எமது மக்களின் அடையாளத்திற்காகவும் வாழ்வுக்காகவும் அடிப்படைக்காகவும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

சுயேட்சையாக போட்டியிடுவது பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது என்பன எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடிக்கும் நடவடிக்கைகளாகும். இந்த என் அடிப்படை நிலைப்பாட்டுடன் இருந்த பொழுது, பிளவு பட்ட கட்சிகள் எனக்கு இடம்தர அழைத்தன. தமிழ் மக்களின் வாக்கை சிதறடிக்கும் இந்த செயற்பாட்டை நிராகரித்துள்ளேன். விலைபேசல்கள் முதல் தமிழ் மக்களின் அரசியல் வலுவை சிதைக்கும் பல்வேறு சதிகளும் இடைமறித்தன.

தீபச்செல்வன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக எமது மக்களின் எதிர்கால அரசியலை வலுப்படுத்தவும் எண்ணங்களை செயற்படுத்தவுமே தேர்தலில் போட்டியிட தீர்மானத்திருந்தேன்.

சுயேட்சையாக போட்டியிடுவது பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது என்பன எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடிக்கும் நடவடிக்கைகளாகும். . தமிழ் மக்களின் வாக்கை சிதறடிக்கும் இந்த செயற்பாட்டை நிராகரித்துள்ளேன். .

தீபச்செல்வன்

நன்றியண்ணா

மிகவும் கவனமாக நாம் நகரவேண்டிய சூழ்நிலையை உணர்ந்தியுள்ளீர்கள்

பாதையை அறிந்தவன் தெளிவாக இருப்பான் என்பது தங்களது முடிவில் தெரிகிறது

சுயேட்சையாக போட்டியிடுவது பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது என்பன எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடிக்கும் நடவடிக்கைகளாகும். இந்த என் அடிப்படை நிலைப்பாட்டுடன் இருந்த பொழுது, பிளவு பட்ட கட்சிகள் எனக்கு இடம்தர அழைத்தன. தமிழ் மக்களின் வாக்கை சிதறடிக்கும் இந்த செயற்பாட்டை நிராகரித்துள்ளேன்

இந்த சிந்தனை உண்மையிலயே தமிழ்தேசியம் பேசிய அரசியல் வாதிகளுக்கு வராமல் போனது கவலைக்குறியது.

சில அரசியல்வாதிகள் மக்களின் அரசியல் வலுவை சேர்ப்பதிலும்பார்க்க தங்களின் பணவலுவை சேர்ப்பதில அக்கறையாகவுள்ளனர்

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடித்துவிடும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நியமனத்தில் என்னை நிராகரித்தாக முதலில் தெரிய வந்த பொழுதும் உன்மையில் அவர்கள் எனது விண்ணப்பத்தை நிராகரிக்கவில்லை என்பதுதான் உன்மை. இதை பின்னரே அறிய முடிந்தது. எப்படி என் பெயர் அகன்றது என்பதை இப்பொழுது கூற முடியாதுள்ளது. கூட்டமைப்பில் போட்டியிட முடியாதுபோனதால் தேர்தலில் இருந்து ஒதுங்கும் முடிவை இரண்டு நாட்களின் முன்பே எடுத்துவிட்டேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டுமே போட்டியிடும் நிலைப்பாடு எனக்கிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக எமது மக்களின் எதிர்கால அரசியலை வலுப்படுத்தவும் எண்ணங்களை செயற்படுத்தவுமே தேர்தலில் போட்டியிட தீர்மானத்திருந்தேன். மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக இனி பகிரங்கமாக இறங்கி வேலையாற்ற வேண்டும் என்பற்காகவும் எமது மக்களின் அடையாளத்திற்காகவும் வாழ்வுக்காகவும் அடிப்படைக்காகவும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

சுயேட்சையாக போட்டியிடுவது பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது என்பன எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடிக்கும் நடவடிக்கைகளாகும். இந்த என் அடிப்படை நிலைப்பாட்டுடன் இருந்த பொழுது, பிளவு பட்ட கட்சிகள் எனக்கு இடம்தர அழைத்தன. தமிழ் மக்களின் வாக்கை சிதறடிக்கும் இந்த செயற்பாட்டை நிராகரித்துள்ளேன். விலைபேசல்கள் முதல் தமிழ் மக்களின் அரசியல் வலுவை சிதைக்கும் பல்வேறு சதிகளும் இடைமறித்தன.

தீபச்செல்வன்

அப்போ...... சம்பந்தமில்லாத ஆட்டத்துக்கும் ஒத்துப் போவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் தீபச்செல்வன் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பது பாராட்டத்தக்கது. கவிஞரின் பேனாவுக்கு அளப்பரிய பணி காத்து இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் இந்த அரசியல் சேற்றுக்குள் கால்வைப்பதை நான் விரும்பவில்லை.

இதுதான் எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு திசை மாறிப் பயணிக்கிறது என்று சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ள நிலையில் தீபச்செல்வன் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு எதுவும் சாதிக்க முடியாது.ஏனெனில் கூட்டமைப்பு சுதந்திரமாக இயங்கவில்லை.இந்தியாவின் ஆட்டத்திற்கு ஆடும்பொழுது வேட்பாளர் நியமனம் கிடைக்காதது நல்லதிற்கே.நல்ல கவிஞர் தம் மதிப்பை இழக்க வேண்டி இருந்திருக்கும்.தேசியத்தின் நலனில் அக்கறையுள்ளவர்களோடு சேராமல் கூட்டமைப்போடு சேர நினைத்தது மனதிற்கு நெருடலாகத்தான் இருக்கிறது.

அவர்கள் யார் யார்? இறுதி வரைக்கும் சீட்டுக் கிடைக்கும் என்று தொங்கிக் கொண்டு நின்றவரினதும், யாழ்ப்பாண வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேரத்தில் மட்டும் இரு தேசம் என்ற கோரிக்கையை வைக்க வேண்டும் என்று விரும்பிய, இடையில் கட்சித் தலைமையின் விருப்பின்றி கட்சியையும் கூட்டணியையும் உடைத்துக் கொண்டு சிங்களவர்கள் விரும்பியவாறு தமிழர் பலத்தை சிதைக்க விரும்பும் கஜேந்திரனா?

இங்கு சரத் வந்தால் இந்தியாக்கு ஆப்பு என்றும் மகிந்த வந்தால் இந்தியாவுக்கு ஆதரவு என்றும் ஒன்ரரை மாதம் முன் நம்பி எழுதியவர்கள் அநேகர். அன்று சரத்துக்கு ஆதரவு வழங்கிய சம்பந்தர் இந்திய எதிரியாக அல்லவா இருக்க வேண்டும்? சமன்பாடு குழம்புகின்றதே

புலவர் உட்பட எம் அனைவரினதும் தீர்க்க தரிசனதிற்கும் திறனாய்வுக்கும் இந்த திரியில் வந்த பல பின்னூட்டல்களே சாட்சி. எம் முன்னைய எழுந்தமான முடிவுகள் எல்லாம் நீர்த்துப் போய்விட்ட பிறகாவது திருந்துகின்றோமா? இனியாவது சிங்கள கொள்கை வகுப்பாளர்களின் நுண்ணறிவையும், நுணுக்காமான சதிகளையும் புரிந்து கொள்ள முயல்வோமா

Edited by பிழம்பு

பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடித்துவிடும்

சுயேட்சையாக போட்டியிடுவது பிளவுபட்டு தனித்துப் போகும் கட்சிகளில் போட்டியிடுவது என்பன எமது மக்களின் அரசியல் வலுவை சிதறடிக்கும் நடவடிக்கைகளாகும். இந்த என் அடிப்படை நிலைப்பாட்டுடன் இருந்த பொழுது, பிளவு பட்ட கட்சிகள் எனக்கு இடம்தர அழைத்தன. தமிழ் மக்களின் வாக்கை சிதறடிக்கும் இந்த செயற்பாட்டை நிராகரித்துள்ளேன். விலைபேசல்கள் முதல் தமிழ் மக்களின் அரசியல் வலுவை சிதைக்கும் பல்வேறு சதிகளும் இடைமறித்தன.

தீபச்செல்வன்

வாழ்த்துக்கள் தீபச்செல்வன். இந்த உறுதிப்பாடு இறுதிவரை நிலைக்க வேண்டும். நாம் உங்களுடன்.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன, சுருக்கமான கேள்வி தீபன்,

சம்பந்தர்; நல்லவரா,கெட்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சிலருக்கு கஜேந்திரன் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவராகவும், அதை விலை பேசியவராகவும் தெரியும் போது, சம்பந்தனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் தேசியத்தைக் கட்டிக் காப்பவர்கள் போலத் தெரிகிறது.அதாவது இந்தியா எடுத்துத் தரப்போகும் தமிழீழ விடுதலையை கஜேந்திரன் அவர்கல் கூட்டமைப்பிலிருந்து பிரிந்ததன் மூலம் எத்ரிக்கிறார் அப்படித்தானே?? நல்ல கற்பனை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, கஜேந்திரன் தானாகக் கூட்டமைப்பிலிருந்து விலகவில்லை, இந்திய ஆலோசனையின்படி சம்பந்தன் என்கிற தலைக்கணம் பிடித்த மனிதனால் விலக்கப்பட்டார். புரிந்து கொள்ளுங்கள், தேசியத்தையும், ஒற்றுமையையும் சிதைப்பது யார் என்பதை.

:lol: குகன்,

எனக்குள் ஒரு கேள்வி கன காலமாய் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது, எதற்காக நீங்கள் வரிந்துகட்டிக்கொண்டு சம்பந்தனையும் அவர் செய்கிற செயல்களையும் ஆதரித்துக்கொண்டிருக்கிறீர்கள்??ஒன்றில் நடப்பவை பற்றி முழுவதும் தெரிந்தவராக இருக்க வேன்டும்(அந்தரங்கம் உட்பட) அல்லது நடப்பவை எதுவுமே தெரியாமலிருக்க வேண்டும்.அன்னாரின் அண்மைய நேர்காணல்கள், கருத்துக்கள், பத்திரிக்கைப் பேட்டிகளைத் தொடர்ந்து கேளுங்கள். அப்போதாவது சிலவேளை உங்களுக்கு உண்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சிலருக்கு கஜேந்திரன் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவராகவும், அதை விலை பேசியவராகவும் தெரியும் போது, சம்பந்தனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் தேசியத்தைக் கட்டிக் காப்பவர்கள் போலத் தெரிகிறது.அதாவது இந்தியா எடுத்துத் தரப்போகும் தமிழீழ விடுதலையை கஜேந்திரன் அவர்கல் கூட்டமைப்பிலிருந்து பிரிந்ததன் மூலம் எத்ரிக்கிறார் அப்படித்தானே?? நல்ல கற்பனை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, கஜேந்திரன் தானாகக் கூட்டமைப்பிலிருந்து விலகவில்லை, இந்திய ஆலோசனையின்படி சம்பந்தன் என்கிற தலைக்கணம் பிடித்த மனிதனால் விலக்கப்பட்டார். புரிந்து கொள்ளுங்கள், தேசியத்தையும், ஒற்றுமையையும் சிதைப்பது யார் என்பதை.

சம்பந்தனும் சுரேசும் இங்கு கன்னி கழியா தெய்வங்கள் அல்ல. ஆனால் அவர்களை குறை சொல்லும் அவருடனே கடைசி வரை (எது வரை?: சீட்டு கிடைக்குமா எனக் காத்திருந்த காலம் வரை) இருந்த இவர்கள் இன்று புனிதர்களானது எந்த அறிவு பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடு?

பத்மினி சிதம்பரநாதன் என்பவர் போன வருடம் மே மாதங்களிலும் லண்டனில் இருந்தவர். கேட்டுப் பாருங்கள் இவர் லண்டனில் நடந்த எந்தவொரு புலம் பெயர் பேரணியிலும், இளையோர் கலந்து கொண்ட செயற்பாடுகளில் கலந்து கொண்டாரா என? அப்படியே கஜேந்திரனும், அவர் சக பாடிகளும் என்ன செய்தார்கள்?

சரி, தமிழ் போலித் தேசியத்தால் புனித பிரம்மாக்கள் ஆக்கப்பட்ட கஜேந்திரன் கோஸ்டி, சிறையில் அடைபட்டு சித்திரவதை அனுபவிக்கும் போராளிகள் பற்றி என்ன கோரிக்கைகளை வைத்து இந்த முறை தேர்தலில் நிற்கின்றனர்????? தெரிந்தவர்கள் சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சம்பந்தன் என்கிற தெய்வம் உங்களுக்கு எல்லாம் எடுத்துத் தரப்போகிறது என்று சொல்கிறீர்கள். நல்லது, அவரிடம் இதற்கான பதில்கலையும் கேட்டுச் சொல்லுங்கள்.

1) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், முள்வேலி முகாமுக்குள் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களையும் சென்று பார்ப்பதற்கே சிங்கள அரசு மறுத்த போது, அந்த மக்களுக்காக போராடத் தவறியது ஏன்?

2) இறுதி யுத்த காலத்தில் போர்க் குற்றம் புரிந்ததாக மனச்சாட்சியுள்ள நாடுகளாலும், அமைப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்ட மகிந்த சகோதரர்களோடும், சரத் பொன்சேகாவோடும் ஜனாதிபதித் தேர்தலின்போது சமரசம் காண முற்பட்டதும், சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்கியதும் எதற்காக?

3) விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியத்திற்கான பலமான சக்தியாக எழுந்து நிற்கும் புலம்கெயர் தமிழ் அமைப்புக்களது அழைப்புக்களை உதாசீனம் செய்தது எதற்காக?

4) தமிழின அழிப்புப் போரை பின்நின்று நடாத்தியதோடல்லாமல், அதை நெறிப்படுத்திய இந்தியா தமிழீழ மக்களை இறுதி யுத்தத்தின்போது காப்பாற்ற முனைந்த மேற்குலகையும் தடுத்து நிறுத்தியது. அத்துடன் நிறுத்திவிடாமல், மனச்சாட்சியே இல்லாமல் மேற்குலகால் ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர முற்பட்ட சிறிலங்கா அரசுக்கெதிரான குற்றப் பிரேரணையையும் முறியடித்தது. அந்த இந்திய அரசின் நெறிப்படுத்தலுடனான உங்களது அரசியல் பயணம் தமிழீழ மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது?

5) கஜேந்திரன், பத்மினி போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு இந்தத் தேர்தலில் இடம் கொடுக்காமல் மறுத்தது இந்திய நிர்ப்பந்தத்தினால் என்ற குற்றச்சாட்டை எவ்வாறு நிராகரிக்கப் போகின்றீர்கள்?

6) முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான இன்று வரையான காலப் பகுதியில் அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களுக்கான உங்களது நகர்வு போதுமானது என்று எண்ணுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனாக இருக்கட்டும், கஜேந்திரனாக இருக்கட்டும், ஏன் தேவானந்தாவாகக் கூட இருக்கட்டும். அங்கே எந்த மயிரையும் புடுங்க முடியாது. அப்படியில்லை, நாம் சொல்வதைச் செய்வோம் என்று யாராவது சொன்னால் அது முழுப் பொய். சிங்கள அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் எவராலும் தமிழரின் உரிமை பற்றி பேசவோ அல்லது செயல்படவோ முடியாது. ஏதோ இந்தத் தேர்தலில் நிற்பதன் மூலமும் நின்று ஜெயிப்பதன் மூலமும் தமிழரின் உரிமைகளை வென்றுவிடலாம் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் இந்திய சிங்கள சதிவலையில் தாமும் ஒரு பின்னலாகி தேசியத்தை மறுக்கும் சில அரசியல் வாதிகளைத்தான் நாம் வெறுக்கிறோம். மற்றும்பட்டி நீங்கள் சொல்லிய உத்தம சம்பந்தனோ அல்லது கஜேந்திரன் கோஷ்ட்டியோ எதையுமே எமக்குச் சார்பாகச் செய்யப்போவதுமில்லை, செய்யவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சம்பந்தன் என்கிற தெய்வம் உங்களுக்கு எல்லாம் எடுத்துத் தரப்போகிறது என்று சொல்கிறீர்கள். நல்லது, அவரிடம் இதற்கான பதில்கலையும் கேட்டுச் சொல்லுங்கள்.

1) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், முள்வேலி முகாமுக்குள் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களையும் சென்று பார்ப்பதற்கே சிங்கள அரசு மறுத்த போது, அந்த மக்களுக்காக போராடத் தவறியது ஏன்?

கசேந்திரனும் பத்மினியும் என்ன செய்தனர்? மகிந்தவுக்கு மாலை போட்ட கிசோர் செய்ததை விட 100 இல் ஒரு பங்கு கூட செய்யவில்லை

2) இறுதி யுத்த காலத்தில் போர்க் குற்றம் புரிந்ததாக மனச்சாட்சியுள்ள நாடுகளாலும், அமைப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்ட மகிந்த சகோதரர்களோடும், சரத் பொன்சேகாவோடும் ஜனாதிபதித் தேர்தலின்போது சமரசம் காண முற்பட்டதும், சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்கியதும் எதற்காக?

மகிந்தவுக்கு ஆதரவாக, தமிழர் வாக்கை பிரிக்க, யாழ் மக்கள் வாக்களிப்பை குறைக்க சிவாஜி தனித்து நின்றார் என்று சொன்னார்கள். அதே போல் கசேந்திரன் தேர்தலை புறக்கணிக்க சொன்னார் என்று சொன்னார்கள் (இதனை தொடர்ந்து ஒளிபரப்பிய டான் ரி.வி துரோகியானது வரலாறு).... அப்ப இந்தியாவின் விருப்புக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்டவர்கள் யார்?

3) விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியத்திற்கான பலமான சக்தியாக எழுந்து நிற்கும் புலம்கெயர் தமிழ் அமைப்புக்களது அழைப்புக்களை உதாசீனம் செய்தது எதற்காக?

யார், புலம் பெயர் நாடுகளின் தமிழ் அமைப்புகளின் அழைப்பின் பேரில் சுற்றுலா வந்த பத்மினியா, கசேந்திரனா?4) தமிழின அழிப்புப் போரை பின்நின்று நடாத்தியதோடல்லாமல், அதை நெறிப்படுத்திய இந்தியா தமிழீழ மக்களை இறுதி யுத்தத்தின்போது காப்பாற்ற முனைந்த மேற்குலகையும் தடுத்து நிறுத்தியது. அத்துடன் நிறுத்திவிடாமல், மனச்சாட்சியே இல்லாமல் மேற்குலகால் ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர முற்பட்ட சிறிலங்கா அரசுக்கெதிரான குற்றப் பிரேரணையையும் முறியடித்தது. அந்த இந்திய அரசின் நெறிப்படுத்தலுடனான உங்களது அரசியல் பயணம் தமிழீழ மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது?

சரத்=இந்திய எதிர்ப்பு=சம்பந்தர் ஆதரவு

மகிந்த=சிவாஜி= வாக்கு பிரிப்பு

என்ற 1.5 மாதம் முன்னான சமன்பாடு என்னானது?

5) கஜேந்திரன், பத்மினி போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு இந்தத் தேர்தலில் இடம் கொடுக்காமல் மறுத்தது இந்திய நிர்ப்பந்தத்தினால் என்ற குற்றச்சாட்டை எவ்வாறு நிராகரிக்கப் போகின்றீர்கள்?

அவர்கள் எப்படி தமிழ் தேசிய ஆதரவாளர்கள என்று நம்புகின்றீர்கள்?

6) முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான இன்று வரையான காலப் பகுதியில் அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களுக்கான உங்களது நகர்வு போதுமானது என்று எண்ணுகிறீர்களா?

இல்லை.....ஆனால் அதுவரை த.தே.கூ இல ஒட்டி இருந்தவர்கள் எப்படி புனித தெய்வங்களாகினர்?

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: தமிழ்க் கூட்டமைப்பில் உள்ள எவரும் புனிதர்கள் இல்லை. எவராலும் எமக்குத் தேவையானதைத் தரமுடியாது. அவர்கள் செய்யும் அரசியல் அவர்களுக்கு மட்டுமே உபயோகமானது. ஆனால், அவர்கள் தாம் செய்யும் அரசியலை தேசியத்திற்கு எதிரான சக்தியான இந்தியாவை கேட்டுச் செய்வதுதான் தவறு.

கஜேந்திரனையும் பத்மினியையும் விலக்குவதற்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை.

மற்றது, நீங்களென்ன சம்பந்தரின் அந்தரங்க அலோசகரா?? அவரிடம் கேட்கப்பட்ட கேவிகளுக்கு அவரிடமே பதிலிருக்குமோ தெரியாது, ஆனால் நீங்கள் நல்லாத்தான் கஷ்ட்டப்பட்டு இருக்கிறீர்கள். கஜேந்திரனை தேசியத்தின் துரோகியாக்குவதில் நீங்கள் காட்டுகிற ஆர்வத்தைப் பார்த்தால் சம்பந்த ஐய்யா உங்களைக் கேட்டுத்தான் எதுவும் செய்வாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பாருங்கள். சம்பந்தன் ஐய்யாவால் எமக்குச் சுதந்திரம் கிடைக்கும் !!!!!!

வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபச் செல்வன், உனது பதிலையும் கூட்டணியை பலகீனப் படுத்த விரும்பாத உனது நிலைபாட்டையும் நான் ஆதரிக்கிறேன். என்னிடம் தொலைபேசியில் பொருத்தமான வேட்பாளர்களை அறிமுகப் படுத்தும்படி கோரி பேசிய ஜெ.வி.பி தலைவர்கள் நீ அவர்களது வேட்பாளனாக நிற்பதையே பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் உனக்கு தேசிய பட்டியலில்கூட இடம்தர கூடும். இதுபற்றி நீயும் அறிவாய். எல்லாவற்றையும் தோற்றுவிட்டோமடா. எதிரி முக்கால் நாம் கால் என போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களது நம்பிக்கைகள் வாய்ப்புகள் வழிகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டோமடா. நிலத்தில் சைபர் மட்டத்தில் கிடக்கிறது எங்கள் தாயகம். அதுவும் வடக்கு கிழக்கென பிழவுபட்டுபோய் சீரழிகிறது. இன்றுள்ள சூழலில் வடகிழக்கு தமிழர்கள் இணைந்து ஒரே அணியாக நிற்க்கிறது என்பதை உலகுக்குச் சொல்வதுதான் முக்கியம். முஸ்லிம் தலைமையோடு இணக்கம் உள்ளதையும் நாம் உறுதிப் படுத்த வேண்டும். இந்த பணிகளை சம்பந்தர் சரியாகவே ஆரம்பிதிருக்கிறார். அதை நாங்கள் ஆரம்பிக்க வேணும். புலம்பெயர்ந்த அமைப்புகளை புலம் பெயர்ந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் அமைப்பாகவும் புலம் பெயர்ந்த தலித்துகளதும் பெண்களதும் பங்குபற்றுதல் உள்ள அமைப்பாக முழுமைப் படுத்தும் பணி களத்தில் உள்ள உங்களுக்காக காத்திருக்கிறது. அத்தகைய முழுமைப் படுதல் ஒன்றே பூனைக்கு மணிகட்டும் விவாதங்களில் இருந்து அவர்கலை விடுவித்து கழத்தில் உள்ள மக்கள் மட்டத்துக்கு இறங்கி வர வைக்கும். அதன் மூலம் மட்டுமே புலம் பெயர்ந்த எம்மால் விடுதலைக்கு சேவை செய்ய முடியும்.

உலக அரசியலிலும் பிரட்தேச அரசியலிலும் நமக்குள்ள வாய்ப்புக்களை தேடும் பணியை நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். நம்முள் மறைந்து கிடக்கும் யாழ்மையவாத பிசாசு அடுத்த தெல்லாவற்றையும் துரோகிகளாக்கும் என்பதை அறிவாய். அத்தகைய சக்திகளுக்கு நீ ஒருபோதும் தலை பணிந்துவிடாதே. தீபச் செல்வா. இந்த ஆசனங்கள் போகும் வரும். வரலாறுதான் எமது சிம்மாசனமாகும்.

இந்த தருணத்தில் வடகிழக்கு இணைப்பையும் முஸ்லிம்களோடு இணக்கப் பாட்டையும் முன்னிலைப் படுத்தி சம்பந்தரது தலைமையில் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்லும் எமது இனத்தின் உயிர்த்தெழும் முயற்ச்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.

இன்றைய பணியை நாம் முடித்தாக வேண்டும். இன்றைய பணிகள் நிறைவேறினால் நாழைய பணியை நாம் தொடராவிட்டாலும் மக்கள் தொடர்வார்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு, பல புலம் பெயர் தமிழர்களின், பியர் அடித்து பேசும் உணர்ச்சிகர போலித் தேசிவாதத்திற்கு மரண அடியாக கிடைக்கப் போகுது. இன்னும் ஒரு மாதத்தின் பின்னாவது அவர்களின் அறிவுக் கண் திறக்கும் என நம்புகின்றேன்

>>> இன்று சிங்கள தேசிய போர் வெறிக்கு முன்னால் எம்மால் காட்டக்கூடிய ஒரே ஒரு ஆயுதம் எம் ஒற்றுமையே

>>> அதனை முறியடிக்கும் எவரும், அதற்கு புலமை சார் ஆதரவை தரும் புலம் பெயர் தமிழர்களின் எல்லோரும் வரலாற்றின் முன் தோல்வியை தழுவியவர்கள் ஆவர்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

தீபச் செல்வன், உனது பதிலையும் கூட்டணியை பலகீனப் படுத்த விரும்பாத உனது நிலைபாட்டையும் நான் ஆதரிக்கிறேன். என்னிடம் தொலைபேசியில் பொருத்தமான வேட்பாளர்களை அறிமுகப் படுத்தும்படி கோரி பேசிய ஜெ.வி.பி தலைவர்கள் நீ அவர்களது வேட்பாளனாக நிற்பதையே பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் உனக்கு தேசிய பட்டியலில்கூட இடம்தர கூடும். இதுபற்றி நீயும் அறிவாய். எல்லாவற்றையும் தோற்றுவிட்டோமடா. எதிரி முக்கால் நாம் கால் என போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களது நம்பிக்கைகள் வாய்ப்புகள் வழிகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டோமடா. நிலத்தில் சைபர் மட்டத்தில் கிடக்கிறது எங்கள் தாயகம். அதுவும் வடக்கு கிழக்கென பிழவுபட்டுபோய் சீரழிகிறது. இன்றுள்ள சூழலில் வடகிழக்கு தமிழர்கள் இணைந்து ஒரே அணியாக நிற்க்கிறது என்பதை உலகுக்குச் சொல்வதுதான் முக்கியம். முஸ்லிம் தலைமையோடு இணக்கம் உள்ளதையும் நாம் உறுதிப் படுத்த வேண்டும். இந்த பணிகளை சம்பந்தர் சரியாகவே ஆரம்பிதிருக்கிறார். அதை நாங்கள் ஆரம்பிக்க வேணும். நம்முள் மறைந்து கிடக்கும் யாழ்மையவாத பிசாசு அடுத்த தெல்லாவற்றையும் துரோகிகளாக்கும் என்பதை அறிவாய். தீபச் செல்வா. இந்த ஆசனங்கள் போகும் வரும். வரலாறுதான் எமது சிம்மாசனமாகும்.

இந்த தருணத்தில் வடகிழக்கு இணைப்பையும் முஸ்லிம்களோடு இணக்கப் பாட்டையும் முன்னிலைப் படுத்தி சம்பந்தரது தலைமையில் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்லும் எமது இனத்தின் உயிர்த்தெழும் முயற்ச்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.