Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன்

Featured Replies

''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன்

[ சனிக்கிழமை, 20 மார்ச் 2010, 01:06.25 PM GMT +05:30 ]

''பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் பொலிஸ்! இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழின் அட்டைச் சிறப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளது.

அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள்.

இதற்கிடையில், ''பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை... தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்... கைது வாரன்ட்: சென்னை, இந்தியா...'' என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட... ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.

இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ''கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!'' என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம். ''ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு 'குருவி' என இரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, இரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள இராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன் இராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார். அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை இராணுவத் தரப்பு சல்லடையாகத் துளாவியது.

அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது பெயர் 'குருவி'! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு 'குருவி' என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் பொலிஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது.

இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!'' எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

''புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள இராணுவத்திடம் சிக்கினார். ஆனால்... அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள்.

போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான்.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், 'சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!' என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்'' என்றார்கள்.

இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து இரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்... அதில், ''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்'' என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

''போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் இரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம்.

இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்'' என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

''புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?'' என்று இவர்களிடம் கேட்டால்... ''எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்... இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!'' என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்.-

ஜூனியர் விகடனுக்காக

- இரா.சரவணன்

Edited by BLUE BIRD

''புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?'' என்று இவர்களிடம் கேட்டால்... ''எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்... இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!'' என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்.-

புலி என்னும் இருக்கிறது. நாடுகடந்த அரசாங்கம் வருகிறது. போர்க்குற்ற விசாரணை வருகுது. எங்கட கட்டுப்பாட்டில இருங்கோ என்று இந்தியாவும் மேற்குலகும் வெருட்டுகின்றது. தமிழர் எப்பிப்பார்த்தாலும் பகடைக்காய்கள் தான்.

பொட்டம்மான் காட்டில அவர் எதிர்பார்த்த மாதிரி மழை வரப்போகுதாம்..

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி :D:D

அரியாலை

Edited by nunavilan

இந்தியா விடுதலைப்புலிகளைத் தனது பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் உலக நாடுகளின் பயங்கரவாதப் பட்டியல்களிலிருந்தும் நீக்கப்படக் கூடாது என்பதற்காக அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கதையிது.

இந்தியா விடுதலைப்புலிகளைத் தனது பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் உலக நாடுகளின் பயங்கரவாதப் பட்டியல்களிலிருந்தும் நீக்கப்படக் கூடாது என்பதற்காக அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கதையிது.

தடையை நீக்குவது குறித்து யோசிப்பதாகவே இனிவரும் காலங்களில் கதைவிடப்படும் தடை நீக்கவும் படலாம். புலியின் பலத்தை குறைத்து வைத்திருக்கலாம் முற்றாக அளித்திருக்கக் கூடாது என்றளவிலேயே இலங்கையை தமது பிடிக்குள் வைத்திருப்பது குறித்த நிலமை இந்தியா மேற்கு நாடுகளை பொறுத்தவரை இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி பறக்குது , கோழி பறக்குது என்றவுடன் பறந்தடிக்கும் யாழ்கள புலிகள், 11,000 போராளிகளை சரணடைய சொல்லியது யார் என்று தெரியாது பாருங்கோ, தமிழ் மக்களுக்காக, மிக பெரும் தலைமை என்று நம்பி வந்து கடைசியில் சித்திரைவதை முகாம்களுக்க அடைபட்டு கிடக்குதுகள். இதை பற்றி ஒருவரும் இங்க கதைக்க மாட்டார்கள்.

சினிமாத்தனமான கற்பனைகள் நிஜ வாழ்க்கைக்கும், தமிழரின் எதிர்காலத்துக்கும் ஆபத்தாக முடியலாம்!

நாம் செய்து கொண்டிருப்பதை, அதிக ஆரவாரம் இல்லாமல், அவசியமற்ற ஊடக அறிக்கைகள் இல்லாமல் செய்துகொண்டிருப்பது தான் இப்போதைய தேவை என நினைக்கிறேன்!!

ஈழத் தமிழர்கள் கற்பனைகளில் அடித்துச் செல்லப்படாமல், நீண்டகால நன்மை கருதி, அவரவர் பொறுப்புக்களை இன்னொருவர் செய்வார் என்று காத்திராது, கருத்து முரண்படும் உரிமையை ஏற்றுக்கொண்டு, செய்ய வேண்டியவற்றை தாமதிக்காமல் ஒற்றுமையாக செய்தால் எதிரிகளின் சூழ்ச்சிகள் தோல்வியடையும்!!! ,

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்

குருவி பறக்குது , கோழி பறக்குது என்றவுடன் பறந்தடிக்கும் யாழ்கள புலிகள், 11,000 போராளிகளை சரணடைய சொல்லியது யார் என்று தெரியாது பாருங்கோ, தமிழ் மக்களுக்காக, மிக பெரும் தலைமை என்று நம்பி வந்து கடைசியில் சித்திரைவதை முகாம்களுக்க அடைபட்டு கிடக்குதுகள். இதை பற்றி ஒருவரும் இங்க கதைக்க மாட்டார்கள்.

கதைக்கிற நேரத்திலே உங்களுக்கு ஈமெயில் அனுப்புவதில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

ஆனால் கதைப்பதில்லை என்ற அப்பட்டமான பொய்களை சொல்லாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல............ மக்களையும் சிறையில் அடைபட்ட புலிகளையும் எண்ணி துடிப்போர் பலர் இங்கே இருக்கிறார்கள். ஒரு வேளை பல பேரில் சிலரே இருக்கின்றார்களோ என்ற உண்மை எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது. ஆனால் பாரிய அளவில் கவலைபடுகிறார்கள்.

எங்களுக்குதான் அது அத்துபோய்டவிட்டது. வேறுசிலர் அடியோடே மறந்துவிட்டார்கள் திரும்பவும் போர் என்று பேசுகிறார்கள்.

இன்டர்போலிலும், ஜனநாயக போர்வையில், வட இந்திய பயங்கரவாதிகளினதும் அவர்கள் வால்களான மலையாளிகளினதும் ஊடுருவலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி பறக்குது , கோழி பறக்குது என்றவுடன் பறந்தடிக்கும் யாழ்கள புலிகள், 11,000 போராளிகளை சரணடைய சொல்லியது யார் என்று தெரியாது பாருங்கோ, தமிழ் மக்களுக்காக, மிக பெரும் தலைமை என்று நம்பி வந்து கடைசியில் சித்திரைவதை முகாம்களுக்க அடைபட்டு கிடக்குதுகள். இதை பற்றி ஒருவரும் இங்க கதைக்க மாட்டார்கள்.

போங்க பூ

போங்க பூ

என்ன சீலன்

மாத்துங்க name

Edited by raja.m

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசைப்போலவே இங்கிலாந்து அரசும் குளப்பத்திலிருப்பது புரிகிறது.

ஆனால் எந்த மடையன் இதைச் செய்வான்.

...... பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் இரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம்.

இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்'' என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

யூனியர் விகடன் இந்திய ராவுக்கு வேலைபார்க்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

குருவி பறக்குது , கோழி பறக்குது என்றவுடன் பறந்தடிக்கும் யாழ்கள புலிகள், 11,000 போராளிகளை சரணடைய சொல்லியது யார் என்று தெரியாது பாருங்கோ, தமிழ் மக்களுக்காக, மிக பெரும் தலைமை என்று நம்பி வந்து கடைசியில் சித்திரைவதை முகாம்களுக்க அடைபட்டு கிடக்குதுகள். இதை பற்றி ஒருவரும் இங்க கதைக்க மாட்டார்கள்.

11,000 போராளிகளையும் 300,000 மக்களையும் சிங்களவன் கொல்ல அனுமதிக்கவில்லை என்பதுதான் உங்கள் கவலை என்றால் இப்படியே எழுதிக் கொண்டு திரியுங்கோ.

2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் இருந்து புலிகள் போராட்டம் பற்றி புலம்பெயர் மக்கள் தாயக மக்களுக்கு அறிவுரை மட்டுமன்றி எதிர்கால செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்புக்கள் தொடர்பில் கூறிக் கொண்டே வந்தனர்.

கிட்டத்தட்ட 200,000 சிங்களப் படைகளை 20,000 போராளிகள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. வன்னி மக்கள் அனைவரும் சேர்ந்து போராட வேண்டும். அதுமட்டுமன்றி புலம்பெயர் மக்களின் பங்களிப்பும் அவசியம் என்று தெளிவாகக் கூறப்பட்டது. ஒரு இராணுவ நடவடிக்கையை முறியடிக்க மட்டும் 10,000 எறிகணைகள் தேவைப்பட்ட இடத்தில் நாங்கள் 1000 எறிகணைகளையே பாவிக்க முடிகிறது என்று தளபதி தீபன் கூடச் சொன்னார்.

அதுமட்டுமன்றி வன்னி மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகள் எதிர்பார்த்த அளவிற்கு நேரடி பங்களிப்பு இருக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தும் போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை. மேலும் சர்வதேச கண்காணிப்பு பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் களத்தின் பூகோள நிலை புலிகளுக்கு பெரும் பாதகமானது. வெட்ட வெளிக் கடலை நம்பி அதனூடு வரும் வழங்கலை நம்பி போராடி வந்த புலிகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அந்த வழங்கலை தடுத்து நிறுத்தி சிங்களத்திற்கு பேருதவி புரிந்து நின்றன.

வன்னிக் காட்டுக்குள் நின்ற போராளிகளுக்கு தொடர்ச்சியான வழங்கல் இன்றி எப்படி போராட முடியும். பல போராளிகள் ஒருவேளை உணவு.. குடிநீருக்கு வசதி இன்றிக் கூட கஸ்டப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் எதிரியின் அவனின் கூட்டாளி நாடுகளின் பலமிக்க தாக்குதலை எமது போராளிகள் 2006 இல் இருந்து 2009 மே வரை தாக்குப் பிடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான பூகோள தளத்தைக் கொண்டிருந்த தலிபான்கள் கூட இவ்வாறு நின்று பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு பதுங்கிப் போராடக் கூடிய அளவிற்கு வழங்கலைப் பெறக்கூடிய பூகோள நிலை இருக்கிறது. போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வழங்கல் இல்லை. உணவு இல்லை. நம்பி வந்த மக்கள் தினமும் இறக்கின்றனர்,காயப்படுகின்றனர்.அனுபவம் மிக்க போராளிகள் இறக்கின்றனர், காயப்படுகின்றனர். எதிரியும் இந்திய மற்றும் பிற நாடுகளின் அழுத்தங்களும் தேடுதல்களும் அதிகரித்து வருகின்றன.. புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்ட குரல்களால் எதுவும் பெரிதாக சாதிக்க முடியாத நிலை.. அரசியல் களத்தில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாலாகாமல் மெளனித்துக் கிடக்கிறது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் ஒரு மக்கள் நலன் கருதி போராடும் போராளி அமைப்பின் தலைவர் என்ற வகையில் தாங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தலைமை விரும்பி போராளிகளை சரணடையச் செய்யவில்லை. அவர்கள் அவர்களின் உறவினர்கள் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் இராணுவ வலயத்திற்குள் சென்ற போது அவர்களை இராணுவத்துக்கு ஆளாளாக காட்டிக் கொடுத்ததும்.. உறவினர்களை போட்டுக் கொடுத்ததும் எம்மவர்கள் தான். முகாம்களில் மக்களை அடைத்து வைத்து எடுத்து விடுகிறோம் என்று பணம் பார்த்ததும் எம்மவர்கள் தான். எதிரியோடு சேர்ந்து எமது மக்களை போராளிகளை கொன்றதும் எம்மவர்கள் தான். இந்த நிலையில் தலைமை தலைமை தவறு செய்துவிட்டது என்று கண்மூடித்தனமான கருத்துக்களை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

தலைமை தன்னால் ஆன அளவிற்கு இழப்புக்களை குறைத்து மக்களை போராளிகளை காப்பாற்றி இருக்கிறது. அவர்களை எதிரியிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை இராஜதந்திர நகர்வுகளை செய்ய வேண்டிய வெளியில் உள்ள மக்கள்.. அதையா செய்கிறார்கள். தலைமை மீது குற்றம்பிடிப்பதில்.. நேரத்தை செலவு செய்கிறார்கள். இதில் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழின் அட்டைச் சிறப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளது.

-----

இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து இரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்... அதில், ''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்'' என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடிதம் என்றால்...... அதில் ஒன்று கருணாநிக்கும் வந்திருக்கும்.

ஜினியர் விகடன், நக்கீரன் போன்றவை தங்களுடைய வாரப் பதிப்பை அதிக விற்பனை செய்ய, சில லூஸ் தனமான தலைப்புக்களை இடுவது வழக்கம்.smiley-think005.gif

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை வைச்சு எல்லாரும் பிளைக்கிறாங்கள்.புலி இருக்குது என்பதும் அதி தீவிர அரசியலும் போராளிகளின் விடுதலையை பாதிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜூனியர் விகடன் ராவின் ஊதுகுழல் என்று எங்கோ படித்த ஞாபகம் . புலிகளை பற்றி ஜூனியர் விகடனில் வந்த பல கற்பனை கட்டுரைகளை முன்பும் படித்து இருக்கிறோம்.

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருங்கி வரும் அழுத்தங்கள் காரணமாக இலங்கையை காப்பாற்ற புலிகலின் இருப்பு தேள்வையாக இருகிறது, இந்தியாவிற்கு றோவின் கைகூலி இதழ் துணை போய் இருக்கிறது :lol:

குருவி பறக்குது , கோழி பறக்குது என்றவுடன் பறந்தடிக்கும் யாழ்கள புலிகள், 11,000 போராளிகளை சரணடைய சொல்லியது யார் என்று தெரியாது பாருங்கோ, தமிழ் மக்களுக்காக, மிக பெரும் தலைமை என்று நம்பி வந்து கடைசியில் சித்திரைவதை முகாம்களுக்க அடைபட்டு கிடக்குதுகள். இதை பற்றி ஒருவரும் இங்க கதைக்க மாட்டார்கள்.

யார் இங்கு இருக்கும் பச்சோந்திகளா? நாடுக்காக அன்று ஒரு 30 யூரோ காசு கொடுக்கவே 30 நியாயம் பேசிய இந்த மனிதர்கள்! இன்றா இது பற்றி எல்லாம் கவலைப்படுவாங்கள். போய் ஓமந்தை, வவுனியா நகரம், செட்டிகுளம், பம்பைமடுவில் பட்டிகளுக்குள் அடைத்த மிருகங்கள் மாதிரி இருக்கும் முன்னாள் போராளிகளை பாருங்கள் 2009 மே 18 வரை தெருவில் இறங்கி கோசம் போட்டு கொடி பிடித்தவர்கள் இன்று எம் மக்களின் நிலை கண்டு சற்று கலங்குகின்றனரா? அன்று மக்கள் மக்கள் என்று உருகியவர்கள் இன்று அவர்களின் புனர்வாழ்வு போராளிகள் விடுதலை பற்றி ஏதும் கதைக்கின்றார்களா? ஏதோ முகம் தெரியாமல் கணனித்திரையின் பின் இருந்து தங்கள் சுயவிபரங்களை மறைத்து ஏதோ புனை பெயரில் வாய் சவடால் விடுபவர்களே இவர்கள். உண்மையில் இந்த இணையத்தில் இருக்கும் உறுப்பினர்களில் ஒரு சிலரே உணர்வில் வேலை செய்பவர்கள் மற்றயவர்கள் தெரியும் தானே? எம் பாசையில் சொன்னால் பச்சோந்திகளே!

^_^:lol:

ஒரு இக்கட்டான சூழலில் ஒரு மக்கள் நலன் கருதி போராடும் போராளி அமைப்பின் தலைவர் என்ற வகையில் தாங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தலைமை விரும்பி போராளிகளை சரணடையச் செய்யவில்லை. அவர்கள் அவர்களின் உறவினர்கள் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

அது சரி நாம் கொண்ட கொள்கையின் படி இக்கட்டான நிலையில் எல்லா புதிதாக இணைந்த / இணைக்கப்பட்ட போராளிகளுக்கு மொட்டை அடித்து எதிரியிடம் உயிருடன் பிடிபடச்சொல்லி இருப்போம். :D:D அல்லது தாய் தகப்பனிடம் கொடுத்து பின் காட்டிக் கொடுதிருப்போம் :lol::lol: கடுப்பை ஏத்தாதைங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த இணையத்தில் இருக்கும் உறுப்பினர்களில் ஒரு சிலரே உணர்வில் வேலை செய்பவர்கள் மற்றயவர்கள் தெரியும் தானே? எம் பாசையில் சொன்னால் பச்சோந்திகளே!

இன்றைய நிலவரப்படி இந்த இணையத்தில் 6173 உறுப்பினர்கள் இருக்கினம். அதில் 50% கணக்குகள் போலி என்று வைத்துக்கொண்டாலும் உண்மையான கணக்குகளுடன் மூவாயிரத்து சில்லறைப்பேர் இருக்கிறம். அதிலும் இங்கே கருத்தெழுதுபவர்கள் ஒரு 30 பேர்தான் இருப்போம். இந்த 30 பேரின் கருத்துக்களை வைத்துக்கொண்டு எப்படி ஒரு சிலரைத் தவிர மீதி எல்லோரும் பச்சோந்திகள் என்கிறீர்கள்? உங்கள் கருத்துக்கான ஆதாரம் என்ன? :lol:

இது "He said; she said" என்கிற ரீதியில் எழுந்தமானமாக எழுதின கருத்துதானே..? :lol: அப்ப நீங்கள் எழுதிற மற்றதெல்லாம்?? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

யார் இங்கு இருக்கும் பச்சோந்திகளா? நாடுக்காக அன்று ஒரு 30 யூரோ காசு கொடுக்கவே 30 நியாயம் பேசிய இந்த மனிதர்கள்! இன்றா இது பற்றி எல்லாம் கவலைப்படுவாங்கள். போய் ஓமந்தை, வவுனியா நகரம், செட்டிகுளம், பம்பைமடுவில் பட்டிகளுக்குள் அடைத்த மிருகங்கள் மாதிரி இருக்கும் முன்னாள் போராளிகளை பாருங்கள் 2009 மே 18 வரை தெருவில் இறங்கி கோசம் போட்டு கொடி பிடித்தவர்கள் இன்று எம் மக்களின் நிலை கண்டு சற்று கலங்குகின்றனரா? அன்று மக்கள் மக்கள் என்று உருகியவர்கள் இன்று அவர்களின் புனர்வாழ்வு போராளிகள் விடுதலை பற்றி ஏதும் கதைக்கின்றார்களா? ஏதோ முகம் தெரியாமல் கணனித்திரையின் பின் இருந்து தங்கள் சுயவிபரங்களை மறைத்து ஏதோ புனை பெயரில் வாய் சவடால் விடுபவர்களே இவர்கள். உண்மையில் இந்த இணையத்தில் இருக்கும் உறுப்பினர்களில் ஒரு சிலரே உணர்வில் வேலை செய்பவர்கள் மற்றயவர்கள் தெரியும் தானே? எம் பாசையில் சொன்னால் பச்சோந்திகளே!

கடந்த பல காலமாக யாழ் கழத்தினூடாக யாழ் கள உறுப்பினர்கள் பணம் சிறுதளவாயினும் அனுப்பி கொண்டிருந்தோம். அப்போ நீங்கள் எங்கே போனீர்கள்? அல்லது நீங்களே பச்சோந்திகளுக்கு தலைமை தாங்குகிறீர்களா? :lol::lol:

உண்மைதான்

எல்லோரும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்

ஆனால் உதவி செய்யவே இல்லை என்பது அபத்தமான குற்றச்சாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

யார் இங்கு இருக்கும் பச்சோந்திகளா? நாடுக்காக அன்று ஒரு 30 யூரோ காசு கொடுக்கவே 30 நியாயம் பேசிய இந்த மனிதர்கள்! இன்றா இது பற்றி எல்லாம் கவலைப்படுவாங்கள். போய் ஓமந்தை, வவுனியா நகரம், செட்டிகுளம், பம்பைமடுவில் பட்டிகளுக்குள் அடைத்த மிருகங்கள் மாதிரி இருக்கும் முன்னாள் போராளிகளை பாருங்கள் 2009 மே 18 வரை தெருவில் இறங்கி கோசம் போட்டு கொடி பிடித்தவர்கள் இன்று எம் மக்களின் நிலை கண்டு சற்று கலங்குகின்றனரா? அன்று மக்கள் மக்கள் என்று உருகியவர்கள் இன்று அவர்களின் புனர்வாழ்வு போராளிகள் விடுதலை பற்றி ஏதும் கதைக்கின்றார்களா? ஏதோ முகம் தெரியாமல் கணனித்திரையின் பின் இருந்து தங்கள் சுயவிபரங்களை மறைத்து ஏதோ புனை பெயரில் வாய் சவடால் விடுபவர்களே இவர்கள். உண்மையில் இந்த இணையத்தில் இருக்கும் உறுப்பினர்களில் ஒரு சிலரே உணர்வில் வேலை செய்பவர்கள் மற்றயவர்கள் தெரியும் தானே? எம் பாசையில் சொன்னால் பச்சோந்திகளே!

நிறைய எழுதுகின்றீர்கள் நன்றாகவும் எழுதுகின்றீர்கள்.

ஆனால் இப்ப "பச்சோந்திகள்" என்றீங்கள் இதுதான் புரியமாட்டேங்குது.

புரியும்படி எழுதினால் நல்லாய் இருக்குமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

தலைமை விரும்பி போராளிகளை சரணடையச் செய்யவில்லை. அவர்கள் அவர்களின் உறவினர்கள் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் இராணுவ வலயத்திற்குள் சென்ற போது அவர்களை இராணுவத்துக்கு ஆளாளாக காட்டிக் கொடுத்ததும்.. உறவினர்களை போட்டுக் கொடுத்ததும் எம்மவர்கள் தான். முகாம்களில் மக்களை அடைத்து வைத்து எடுத்து விடுகிறோம் என்று பணம் பார்த்ததும் எம்மவர்கள் தான். எதிரியோடு சேர்ந்து எமது மக்களை போராளிகளை கொன்றதும் எம்மவர்கள் தான். இந்த நிலையில் தலைமை தலைமை தவறு செய்துவிட்டது என்று கண்மூடித்தனமான கருத்துக்களை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

தலைமை தன்னால் ஆன அளவிற்கு இழப்புக்களை குறைத்து மக்களை போராளிகளை காப்பாற்றி இருக்கிறது. அவர்களை எதிரியிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை இராஜதந்திர நகர்வுகளை செய்ய வேண்டிய வெளியில் உள்ள மக்கள்.. அதையா செய்கிறார்கள். தலைமை மீது குற்றம்பிடிப்பதில்.. நேரத்தை செலவு செய்கிறார்கள். இதில் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.

தலைமை விரும்பி போராளிகளை சரணடையச் செய்யவில்லை. அவர்கள் அவர்களின் உறவினர்கள் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் இராணுவ வலயத்திற்குள் சென்ற போது அவர்களை இராணுவத்துக்கு ஆளாளாக காட்டிக் கொடுத்ததும்.. உறவினர்களை போட்டுக் கொடுத்ததும் எம்மவர்கள் தான். முகாம்களில் மக்களை அடைத்து வைத்து எடுத்து விடுகிறோம் என்று பணம் பார்த்ததும் எம்மவர்கள் தான். எதிரியோடு சேர்ந்து எமது மக்களை போராளிகளை கொன்றதும் எம்மவர்கள் தான். இந்த நிலையில் தலைமை தலைமை தவறு செய்துவிட்டது என்று கண்மூடித்தனமான கருத்துக்களை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

தலைமை தன்னால் ஆன அளவிற்கு இழப்புக்களை குறைத்து மக்களை போராளிகளை காப்பாற்றி இருக்கிறது. அவர்களை எதிரியிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை இராஜதந்திர நகர்வுகளை செய்ய வேண்டிய வெளியில் உள்ள மக்கள்.. அதையா செய்கிறார்கள். தலைமை மீது குற்றம்பிடிப்பதில்.. நேரத்தை செலவு செய்கிறார்கள். இதில் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை.

நீங்கள் முன்பு வாசித்த தமிழ் ஊடகங்களை மேற்கோள்காட்டி இப்படி எழுதுகிறிர்கள அல்லது போராளிகள் கையளிக்கப்படும் போது அங்கு நின்றிர்களா? மயிர் கட்டையாக வெட்டபட்ட பெண்போராளிகளை,வலுகரமாக புதிதாக இணக்கப்பாடு மொட்டை அடிக்கபட்ட போராளிகளை ஒருத்தரும் அங்கு காட்டி கொடுக்க தேவை இல்லை. முகாமில் அடைக்கபட்ட அரசியல் துறைய சேர்ந்த சில போராளிகள் காசு கொடுத்து விடுதலை செய்யப்படவர்களுடன் (எனது உறவினர்கள்) நான் கதைத்தேன். சில உண்மைகளை சொன்னால் இங்க என்ன துரோகி என்று பட்டம் தந்துவிடுவிர்கள்.

கனடாவில் கடைசி சண்டை என்று எவளவு காசை சுருட்டிநிர்கள். நான் கொடுத்த காசுக்கு தந்த போலி கையொப்பம் இடப்பட்ட பத்திரத்தை இங்கு போடா விரும்பவில்லை.நான் என்னுடன் வேலை செய்பவர்களின் முகவரிகளை கொடுத்து அவர்களிடமும் காசு வேண்டுங்கள் எல்லோரும் இந்த கடைசி போருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நின்றோம். இங்கு காசு சேர்த்த ஒருத்தரை கட்டுங்கோ பார்போம், அவர்களின் விடுவசல்களை அவர்களுடன் படம் எடுத்து போடுகிறேன் நிர்வாகம் அனுமதி தந்தால். காசு வசூலித்த ஒருவரை தற்செயலாக Gas station இல் சந்தித்தேன். அவருடன் நான் உரையாட முயன்றபோது என்னுடன் இதுகளை பற்றி கதைக்கவேணம் என்று கோபமாக கூறினர். நானும் விடாமல் கதைக்க முயலும் போது இனி கதைக்க முயன்றால் போலீசாரை அழைப்பேன் என்று எச்சரித்தார். என்னுடன் வந்த நண்பன் என்னை மேலும் அவருடன் கதைக்க விடவில்லை.

மே மதத்திற்கு பிறகும் பெரிய போராடங்களை செய்ய முயற்சித்த போதும் காசை சுருட்டியவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்கள் தொலைபேசிகள் இயங்கவில்லை.

எமது இளையவர் போராட்டம் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து நடந்தது.

அப்போது சண்டை நடை பேறும் போது முனைய போராளிகள் எனது நண்பர்கள் சொன்னார்கள், மணலாறு காட்டுபகுதியை எதிரி சண்டை இல்லாமல் பிடித்துகொண்டு வாறான் நாங்கள் சுற்றி வளைக்கப்பட போகிறோம் என்று பலமுறை வருதப்பட்டர்கள்.அவர்கள் அங்கு நின்று போராடியவர்கள். ஏன் தலைமை இப்படி அசட்டையாக இருக்கிறது என்று கோபபடடர்கள்.

பின் குறிப்பு: நெடுக்ஸ் அண்ணா நீங்கள் நல்ல புனை கதை எழுத்தாளர் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லுறது எல்லாம் சரிதான்........

அதனுடாக என்ன சொல்ல வாறீங்கள்?

காசு சேர்தவர்கள் காசை சுருட்டியிருக்கலாம்தான்......... அதுக்கு இப்போ என்ன செய்வேண்டும் என்று சொல்றீங்கள் என்றால் தானே.

ஏதாவது எங்களுக்கும் புரியும்.

இது தென்னை மரத்தை பற்றி சுயசரிதைபோல்.

தென்னையில் தேங்கை இருந்து.......

ஓலை இருந்தது...........

பாழை இருந்தது ............

என்றால் இருக்கவில்லை என்று யாரோ சொன்னார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.