Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!

Tuesday, March 23, 2010 at 7:42 pm | 725 views

3 Comments

போதை… மோசடி… கல்கி ஆசிரமத்தின் நிஜ முகம்!

இந்த நாட்டில் பக்தி என்பது படு பயங்கரமான பிஸினஸ். இதை பல்லாண்டு காலமாக எடுத்துச் சொல்லி வரும் நிஜமான பகுத்தறிவாளர்களின் (பகுத்தறிவு பிஸினஸ்மேன்களைச் சொல்லவில்லை!) பிரச்சாரங்களை மக்கள் மதிப்பதே இல்லை.

kalki-fraud-1.jpg

எளிமையாய் கோவிலுக்குப் போய் லஞ்சம் கொடுக்காமல் சாமி கும்பிடுவதில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கையில்லாமல் போய் நெடுங்காலமாகிவிட்டது.

சும்மா கோயிலுக்குப் போனால் கூட, அய்யரிடம் ரூ 50 கொடுத்து, அடுத்தவர்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக சாமி கழுத்தில் உள்ள மாலையைக் கேட்கும் அல்பத்தனமான பக்திதான் பல பெரிய மோசடிகளின் அஸ்திவாரமாக உள்ளது.

இன்னும் சில பக்திமான்களோ பக்தியைக் கூட பலர் மெச்ச காட்ட வேண்டும் என்ற மனநோய் பீடிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள்.

இவர்களுக்காகவே ஆசிரம வலை விரித்துக் காத்திருக்கிறார்கள் சுப்பிரமணியன்களும், விஜயகுமார் நாயுடுகளும், ராஜசேகரன்களும் ஜெயேந்திரன், கல்கி, நித்யானந்தன் என்ற கள்ளப் பெயர்களில். பெயரிலேயே போலியாக இருப்பவனிடம் நிஜ பக்தியைத் தேடி ஓடும் இந்தக் கூட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்து, வித விதமாக மொட்டை போடுகிறார்கள்.

கத்தியை இவர்கள் எப்படிச் சுற்றி வளைத்து வித்தை காட்டினாலும் கடைசியில் போடப்படுவது மொட்டைதான் என இந்த ஆட்டுமந்தை பக்திமான்களுக்குப் புரிவதே இல்லை!

இங்கே தரப்பட்டுள்ள வீடியோ சன் டிவியில் ஒளிபரப்பான கல்கி ஆசிரம கூத்துக்கள் பற்றியது.

இதுகுறித்து கடந்த மார்ச் 3-ம் தேதி நாம் வெளியிட்ட கட்டுரை நினைவிருக்கலாம். கல்கி என்ற பெயரில் ஊரை ஏமாற்றும் விஜயகுமார் நாயுடு மற்றும் அவரது கும்பல் நடத்தும் போதை மருந்து மோசடிகள் குறித்து அதில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கழுகு என்ற ரஜினி படமும் அதில் காட்டப்படும் ஆசிரமக் கூத்துக்களும் நினைவிருக்கலாம். அதை விட பலமடங்கு மோசமான, பயங்கரமான போதை மருந்து கும்பல் இந்த கல்கி ஆசிரமத்துக்குள் பதுங்கியிருக்கிறது.

இப்போது அங்கு நடப்பதன் வீடியோவை சன் தொலைக்காட்சி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. எத்தனை கொடூரமான காட்சிகள்!

இதுவா பக்தி… ஆசிரமங்கள் என்ற பெயரில் நடக்கும் இந்த மனநோயாளிகளின் கூடங்களை அனுமதிப்பது யார்?

இந்த கல்கி விஜயகுமாருக்கும் அவரது மனைவிக்கும் பிறந்த பிள்ளைகள் இப்போது இளம் தொழிலதிபர்களாக கொடிகட்டிப் பறக்கிறார்களே… அவர்களையும் இதே போதை ஆசிரமத்துக்குள் இதே நிலையில் வைத்திருப்பார்களா… அதற்கு சம்மதிக்குமா இந்த கிரிமினல் சாமிகளின் மனது?

இதற்கெல்லாம் ஒரு கேள்விமுறையே இல்லையா?

என்னதான் செய்கின்றன அரசுகள்?

எத்தனை இளைஞர்கள், பெண்கள் சீரழிக்கப்பட்டிருக்கிறார்களோ… ஆசிரமம் எனும் போர்வையில் இந்த கிரிமினல் கூடங்களை இழுத்து மூடத் தடையாக இருப்பது எது?

சன் வீடியோ -1

http://www.youtube.com/watch?v=qpxPCtCoUVQ

சன் வீடியோ -2

http://www.youtube.com/watch?v=UE8gvaCiOB4&feature=player_embedded

சன் வீடியோ -3

http://www.youtube.com/watch?v=iIgeyhtJeXg&feature=player_embedded

குறிப்பு: சன் தொலைக்காட்சிக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிப்பது நமது கடமையாகிறது. நித்யானந்தன், கல்கி விஜயகுமார் நாயுடு போன்றவர்களின் இந்த கோரமுகத்தை அவர்கள் காட்டியதன் நோக்கம் எதுவானாலும் இருக்கட்டும். ஆனால் இந்த கள்ளச் சாமிகளை உலகுக்கு அம்பலப்படுத்திய அவர்களின் துணிச்சல், குறிப்பாக பெரும் பலம் பொருந்தியவனாக தன்னை காட்டிவரும் கார்ப்பரேட் சாமியார் கல்கியின் ஆசிரமங்களில் நடக்கும் அசிங்கம் – கொடுமைகளை, ஒரு ஆவணமாகவே வெளிக்காட்டிய விதத்தைப் பாராட்டுகிறோம்!

http://www.envazhi.com/?p=17082

  • Replies 80
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

இவர்கள் எத்தனை கல்லூரி இளைஞர்களையும், யுவதிகளையும் தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றார்கள் என்பதை காணொளி மூலம் காணக்கூடியதாக உள்ளது.ஆன்மீகத்தை வியாபாரமாக்கி சொத்துக்களை குவிக்கும் இந்தச் சாமியார்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து, சிறையில் தள்ள வேண்டும்.இவர்களுக்கு அரசியல்வாதிகளின் அபரிதமான செல்வாக்கு இருப்பதால், இந்தியாவில் இது நடக்கக் கூடிய விடயம் அல்ல.

இந்தச் சாமியாருக்கு அதிக ஈழத்தமிழர்களும் பக்தர்களக உள்ளதாக அறிகின்றேன். சாமியாரின் செருப்பைக் கழட்டி இவர்களுக்கு அடிக்க வேண்டும். :)

புலம்பெயர் அரைவேக்காடுகள்.இவர்களை இங்கு கூப்பிட்டு பஜனை நடத்துகின்றார்கள்.

உண்மையில் கடவுள் இல்லை என்பதில் நூறு வீதம் தெளிவாக இருப்பவர்கள் இவ்வாறான சாமிகளும் கடவுளை மையப்பொருளாக வைத்து பிழைப்புநடத்துபவர்களும் தான். எவ்வளவு தைரியமாக இத்தனை இளைஞர் யுவதிகள் வாழ்வை போதைக்கு அடிமையாக்கி சீரளித்துள்ளனர்.போதையில் சிஸ்யர்கள் பிரண்டு புலம்ப அந்தக் கிழட்டு நரி ஒரு கட்டத்தில் சிரித்து மகிழ்கின்றது என்ன ஒரு கண்றாவி!! அம்மாபகவான் மீது அதீதமான பற்றை இலங்கையிலும் புலம்பெயர் நாட்டிலும் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

போதையில் சிஸ்யர்கள் பிரண்டு புலம்ப அந்தக் கிழட்டு நரி ஒரு கட்டத்தில் சிரித்து மகிழ்கின்றது என்ன ஒரு கண்றாவி!! அம்மாபகவான் மீது அதீதமான பற்றை இலங்கையிலும் புலம்பெயர் நாட்டிலும் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

அவர்களிடம் இது பற்றிச் சொல்லிப்பாருங்கள்....எல்லாம் பொய் என்பர்? இவர்களிடம் கதைத்து நிறையப் பட்டாச்சு. என் மச்சானை கட்டிய பெண், தான் படம் வைத்து கும்பிடும் போது கல்கி ஆசாமியின் கால்கள் அசைந்து நடந்தது என்று அடித்துச் சத்தியம் செய்வார்

  • கருத்துக்கள உறவுகள்

என் வருத்தமெல்லாம்

நாட்டுக்கோ வீட்டுக்கோ எந்த பிரயோசனும் செய்யாதவர்களிடம் எம் இனம் பணத்தை வாரி இறைக்கின்றதே என்பதுதான்

ஐயப்பர் கோவிலில் ஒரு பால் செம்பு அபிசேகம் 600 யூரோக்கள் என்று தெரிந்ததும் ............?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களில் எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றதா?

ஏன் அங்;கே களவு பொய் பிரட்டு கற்பளிப்பு இதெல்லாம் இல்லையா?

இந்து மதம் என்றவுடன் ஒடி வருகிறார்கள்.

இந்த பேமாண்டி கூட்டத்திற்கு வேறு வேலையே இல்லை

"உண்மையில் கடவுள் இல்லை என்பதில் நூறு வீதம் தெளிவாக இருப்பவர்கள் இவ்வாறான சாமிகளும் கடவுளை மையப்பொருளாக வைத்து பிழைப்புநடத்துபவர்களும் தான்".சுகன்

இது என்னை பொறுத்த மட்டில் பல விசயங்களுக்கு பொருந்தும்.இவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்போ எவ்வளவு பேர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றோம் என்றோ ஒரு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது.தங்கள் பொக்கெட் நிரம்பினால் காணும் என நினைப்பவர்கள்.இவர்கள் தரவளிகளை நம்பத்தான் ஒரு கூட்டமே இருக்கின்றது.எங்கள் தரவளி அவர்களுடன் சேர்ந்து சிஞ்சிஞ்சா போடாமல் நியாயம் கதைக்கப் போவதால்தான் போகும் இடமெல்லாம் கெட்ட பெயர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களில் எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றதா?

ஏன் அங்;கே களவு பொய் பிரட்டு கற்பளிப்பு இதெல்லாம் இல்லையா?

இந்து மதம் என்றவுடன் ஒடி வருகிறார்கள்.

இந்த பேமாண்டி கூட்டத்திற்கு வேறு வேலையே இல்லை

யார் இல்லை என்றது....

அந்த மதங்களில் இருந்த தில்லுமுல்லுகளை கொண்டு வந்து ஒரு திரி?யை திறந்து பாருங்கள்...

பூந்து விளையாடுவோம்ல..........

நீங்க சொல்லுறதுதான் ரொம்ப ரொம்ப சரி............

ஆனால்

நீதிக்கு துணிந்தவர்களால்தான் நியாயம் பேச முடியும்.

விலைபோனவர்களால் விலைதான் பேச முடியும்............ பொதுவா சொந்த சரக்கே இருக்காது. அவர்கள் சொல்லி கொடுக்க அப்பி திரிவது. அதுதான் தெரிந்த ஒன்று.............. கிட்டதட்ட ஒரு மனநோய்தான். மருத்துவம் மூலம் ஒரளவு கட்டுபடுத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்

யார் இல்லை என்றது....

அந்த மதங்களில் இருந்த தில்லுமுல்லுகளை கொண்டு வந்து ஒரு திரி?யை திறந்து பாருங்கள்...

பூந்து விளையாடுவோம்ல..........

எமது மதத்தை இவர்கள் இப்படி இம்சித்தாhல் திரி திறப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை இப்போதே அவர்களுக்கு சொல்லி வைக்கிறேன்.

இந்து மதம் வேறுங்கும் இல்லாத படியால்தான் இந்த உலகை படைத்த பரந்தாமன் பத்து முறையும் இந்தியாவிலேயே பிறந்தான். பத்தாவது முறையாக கல்கி அவதாரம் எடுத்து வந்தபோதும் வேறெங்கும் பிறக்கவில்லை என்பதை இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ளட்டும்.

எமது கல்கி பரந்தாமன் என்ன இவர்கள் வீட்டு பெண்ணையா பிடித்து இழுத்தார்?

ஒவ்வொரு முறையும் தான் அவதரிப்பதற்கு முன்பு தனது சிஸ்யைகளாக சில பெண்களை படைத்துவிட்டே அவதரிக்கின்றார். பின்பு அவர் அவதரித்துவிட்ட செய்தி கிட்டியதும் அந்த பெண்கள் அவரை தேடி போகிறார்கள். இதில் இவர்களுக்கு எங்கே நோகிறது என்பதுதான் எனக்கு புரியவி;ல்லை. ஒரு கன்னி பெண்ணின் மனது அவளை படைத்த பரந்தாமனுக்கே புரியும். அவளுக்கு எது வேண்டுமோ அதையே அவர் கொடுப்பார். காலம் கெட்ட கேட்டில் சில பெண்கள் மதுவை நாடுகிறார்கள்............. அதற்கு இவர்கள் ஏன் சாமியை சாடுகிறார்கள்?

அம்மா பகவானின் சக்தி புரியாது அவதுறுகளை எழுதுபவர்கள் வாழ்வு என்னாகும் என்பது எனக்கு நன்றே தெரியும். அதலாலல்தான் சொல்கிறேன். உங்கள் அருமையான வாழ்வை சாமிகுற்றம் ஆக்காதீர்கள்.

சாதிகுறைந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி கும்பிடுவதையே கோவில் என்று கூப்பாடு போடுகிறது கிறிஸ்தவமும் இஸ்சுலாமும். அப்போ அங்கே புனிதம் என்பது எப்படி இருக்கும்? எமது மதம் புனிதமாக இருப்பதால்தான் இவர்களுக்கு பொறாமை. நாங்கள் சாதிகுறைந்தவர்களை வெளிதள்ளி புனிதாமாக கோவிலை வைத்திருக்கிறோம் என்ற வயித்தெரிசல். அதுதான் எமது பத்தாவது அவதாரமான கல்கி மீது அவதுறுகளை பொழிகின்றார்கள்.

பரந்தாமனின் பொறுமை அளவிட முடியாதது என்பதால் இவர்கள் வாழ்வு கொஞ்சம் நீடிக்கபட்டிருக்கின்றது.

:(

உண்மையில் கடவுள் இல்லை என்பதில் நூறு வீதம் தெளிவாக இருப்பவர்கள் இவ்வாறான சாமிகளும் கடவுளை மையப்பொருளாக வைத்து பிழைப்புநடத்துபவர்களும் தான். எவ்வளவு தைரியமாக இத்தனை இளைஞர் யுவதிகள் வாழ்வை போதைக்கு அடிமையாக்கி சீரளித்துள்ளனர்.போதையில் சிஸ்யர்கள் பிரண்டு புலம்ப அந்தக் கிழட்டு நரி ஒரு கட்டத்தில் சிரித்து மகிழ்கின்றது என்ன ஒரு கண்றாவி!! அம்மாபகவான் மீது அதீதமான பற்றை இலங்கையிலும் புலம்பெயர் நாட்டிலும் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

அவர்களிடம் இது பற்றிச் சொல்லிப்பாருங்கள்....எல்லாம் பொய் என்பர்? இவர்களிடம் கதைத்து நிறையப் பட்டாச்சு. என் மச்சானை கட்டிய பெண், தான் படம் வைத்து கும்பிடும் போது கல்கி ஆசாமியின் கால்கள் அசைந்து நடந்தது என்று அடித்துச் சத்தியம் செய்வார்

நீங்கள் ஆயிரம் முறை கத்தி கூப்பாடு போட்டாலும் யாரும் திருந்தப்போவதில்லை/ பக்த சீகாமணிகள் கேட்கப்போவதில்லை.

சிறிலங்காவில் முன்னர் பிரேமானந்தருக்கு ஆச்சிரமம் இருந்தது. அவருடைய லீலைகள் காரணமாக சிறை சென்றபின்னும் யாழ்ப்பாணத்தில் ஒரு பக்தை அவரது செருப்புக்கு பூசை செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

இன்றைக்கு, சன் ரீவி? கல்கிபகவான்/ பாவி/?? பற்றிய வீடியோக்களை ஒளிபரப்புவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்து பத்திரிகையில் வந்த செய்தி, பேஸ் புக் அம்மா பகவான் பக்தர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

:D

Edited by KULAKADDAN

சாதிகுறைந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி கும்பிடுவதையே கோவில் என்று கூப்பாடு போடுகிறது கிறிஸ்தவமும் இஸ்சுலாமும். அப்போ அங்கே புனிதம் என்பது எப்படி இருக்கும்? எமது மதம் புனிதமாக இருப்பதால்தான் இவர்களுக்கு பொறாமை. நாங்கள் சாதிகுறைந்தவர்களை வெளிதள்ளி புனிதாமாக கோவிலை வைத்திருக்கிறோம் என்ற வயித்தெரிசல்.

சாதி மதம் என்று இன்னமும் மத வெறி பிடித்திருப்போர்களால் தான் எமக்கு இன்னும் இந்த நிலை. கடவுளை கும்பிடப்போகும் போதும் சாதி பார்த்தா போவீங்க? :( கடவுளுக்கு முன்னால் எல்லாரும் ஒரு இனம்தான். பல இனம் சேந்து கும்பிட்டால் புனிதம் இருக்காது என்று எப்படி சொல்லலாம்? அதற்காக எந்த மதமும் ஒன்றை விட ஒன்று மேலானது என்று வாதாட நான் வரவில்லை. மதம் என்பது எம்மை நல்வழிப்படுத்தவே ஒழிய இப்படி மதம் பிடித்து சண்டை போடுவதற்கல்ல. எல்லா மதத்திலும் இப்படியான தவறான செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்காக நாம் கருத்து முரண்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவரவர் மனச்சாட்ச்சிக்கு ஏற்ப வாழ்ந்தாலே போதும் கடவுள் நம்மை தேடி வருவதற்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

எமது மதத்தை இவர்கள் இப்படி இம்சித்தாhல் திரி திறப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை இப்போதே அவர்களுக்கு சொல்லி வைக்கிறேன்.

இந்து மதம் வேறுங்கும் இல்லாத படியால்தான் இந்த உலகை படைத்த பரந்தாமன் பத்து முறையும் இந்தியாவிலேயே பிறந்தான். பத்தாவது முறையாக கல்கி அவதாரம் எடுத்து வந்தபோதும் வேறெங்கும் பிறக்கவில்லை என்பதை இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ளட்டும்.

எமது கல்கி பரந்தாமன் என்ன இவர்கள் வீட்டு பெண்ணையா பிடித்து இழுத்தார்?

ஒவ்வொரு முறையும் தான் அவதரிப்பதற்கு முன்பு தனது சிஸ்யைகளாக சில பெண்களை படைத்துவிட்டே அவதரிக்கின்றார். பின்பு அவர் அவதரித்துவிட்ட செய்தி கிட்டியதும் அந்த பெண்கள் அவரை தேடி போகிறார்கள். இதில் இவர்களுக்கு எங்கே நோகிறது என்பதுதான் எனக்கு புரியவி;ல்லை. ஒரு கன்னி பெண்ணின் மனது அவளை படைத்த பரந்தாமனுக்கே புரியும். அவளுக்கு எது வேண்டுமோ அதையே அவர் கொடுப்பார். காலம் கெட்ட கேட்டில் சில பெண்கள் மதுவை நாடுகிறார்கள்............. அதற்கு இவர்கள் ஏன் சாமியை சாடுகிறார்கள்?

அம்மா பகவானின் சக்தி புரியாது அவதுறுகளை எழுதுபவர்கள் வாழ்வு என்னாகும் என்பது எனக்கு நன்றே தெரியும். அதலாலல்தான் சொல்கிறேன். உங்கள் அருமையான வாழ்வை சாமிகுற்றம் ஆக்காதீர்கள்.

சாதிகுறைந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி கும்பிடுவதையே கோவில் என்று கூப்பாடு போடுகிறது கிறிஸ்தவமும் இஸ்சுலாமும். அப்போ அங்கே புனிதம் என்பது எப்படி இருக்கும்? எமது மதம் புனிதமாக இருப்பதால்தான் இவர்களுக்கு பொறாமை. நாங்கள் சாதிகுறைந்தவர்களை வெளிதள்ளி புனிதாமாக கோவிலை வைத்திருக்கிறோம் என்ற வயித்தெரிசல். அதுதான் எமது பத்தாவது அவதாரமான கல்கி மீது அவதுறுகளை பொழிகின்றார்கள்.

பரந்தாமனின் பொறுமை அளவிட முடியாதது என்பதால் இவர்கள் வாழ்வு கொஞ்சம் நீடிக்கபட்டிருக்கின்றது.

கடந்த பல வருடங்களில் நான் வாசித்த மிக பிற்போக்குத்தனமான கருத்து இதுதான். புல்லரிக்கின்றது உங்கள் வாதத்தைக் கேட்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் வேறுங்கும் இல்லாத படியால்தான் இந்த உலகை படைத்த பரந்தாமன் பத்து முறையும் இந்தியாவிலேயே பிறந்தான்.

ஏன் இந்தியாவில் பிறந்தால் தான் பிழைப்பு நடத்தலாம் என்பதாலா? அப்ப கடவுளும் லேசுப் பட்ட ஆளில்லை. எங்க பேக்காட்டி பிழைப்பு நடத்தலாமோ அங்கு தான் பிறப்பெடுப்பார்? :(

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் சாதிகுறைந்தவர்களை வெளிதள்ளி புனிதாமாக கோவிலை வைத்திருக்கிறோம் என்ற வயித்தெரிசல்.

உணர்ச்சி மிகுதியில் உங்களை நீங்களே கேவலப்ப்டுத்தி விட்டீர்கள். ஆனாலும் உங்களின் அடிமனதில் ஒழிந்து கிடந்த சாதி வெறி வெளியே வந்திருக்கின்றது. வேறு எதைச் சொல்ல!

எமது மதத்தை இவர்கள் இப்படி இம்சித்தாhல் திரி திறப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை இப்போதே அவர்களுக்கு சொல்லி வைக்கிறேன்.

இந்து மதம் வேறுங்கும் இல்லாத படியால்தான் இந்த உலகை படைத்த பரந்தாமன் பத்து முறையும் இந்தியாவிலேயே பிறந்தான். பத்தாவது முறையாக கல்கி அவதாரம் எடுத்து வந்தபோதும் வேறெங்கும் பிறக்கவில்லை என்பதை இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ளட்டும்.

எமது கல்கி பரந்தாமன் என்ன இவர்கள் வீட்டு பெண்ணையா பிடித்து இழுத்தார்?

ஒவ்வொரு முறையும் தான் அவதரிப்பதற்கு முன்பு தனது சிஸ்யைகளாக சில பெண்களை படைத்துவிட்டே அவதரிக்கின்றார். பின்பு அவர் அவதரித்துவிட்ட செய்தி கிட்டியதும் அந்த பெண்கள் அவரை தேடி போகிறார்கள். இதில் இவர்களுக்கு எங்கே நோகிறது என்பதுதான் எனக்கு புரியவி;ல்லை. ஒரு கன்னி பெண்ணின் மனது அவளை படைத்த பரந்தாமனுக்கே புரியும். அவளுக்கு எது வேண்டுமோ அதையே அவர் கொடுப்பார். காலம் கெட்ட கேட்டில் சில பெண்கள் மதுவை நாடுகிறார்கள்............. அதற்கு இவர்கள் ஏன் சாமியை சாடுகிறார்கள்?

அம்மா பகவானின் சக்தி புரியாது அவதுறுகளை எழுதுபவர்கள் வாழ்வு என்னாகும் என்பது எனக்கு நன்றே தெரியும். அதலாலல்தான் சொல்கிறேன். உங்கள் அருமையான வாழ்வை சாமிகுற்றம் ஆக்காதீர்கள்.

சாதிகுறைந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி கும்பிடுவதையே கோவில் என்று கூப்பாடு போடுகிறது கிறிஸ்தவமும் இஸ்சுலாமும். அப்போ அங்கே புனிதம் என்பது எப்படி இருக்கும்? எமது மதம் புனிதமாக இருப்பதால்தான் இவர்களுக்கு பொறாமை. நாங்கள் சாதிகுறைந்தவர்களை வெளிதள்ளி புனிதாமாக கோவிலை வைத்திருக்கிறோம் என்ற வயித்தெரிசல். அதுதான் எமது பத்தாவது அவதாரமான கல்கி மீது அவதுறுகளை பொழிகின்றார்கள்.

பரந்தாமனின் பொறுமை அளவிட முடியாதது என்பதால் இவர்கள் வாழ்வு கொஞ்சம் நீடிக்கபட்டிருக்கின்றது.

நீங்கள் கொஞ்சம் வெளியே வாருங்கள்.சாதி உங்களூக்கு பெருமையாகவிருந்தால் நெற்றியியில் எழுதி ஒட்டிக் கொள்ளுங்கள்,யாருக்கும் கவலையில்லை. அதேபோன்று இந்த கள்ளச் சாமிமாருக்கும் இந்து சமயத்திற்கும் வக்காளத்து வாங்குவதானால் கொஞ்சம் சரித்திரம் படியுங்கள்.பாவம் உங்களைப்போன்றோரால்தான் வெளி நாட்டிலும் தமிழன் நக்கி வாழ்கின்றான்.

கடந்த பல வருடங்களில் நான் வாசித்த மிக பிற்போக்குத்தனமான கருத்து இதுதான். புல்லரிக்கின்றது உங்கள் வாதத்தைக் கேட்க

இப்படியான அடிமுட்டாள்கள் வெளி நாட்டில் நிறையவே வாழ்கின்றார்கள்.

அப்ப இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களில் எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றதா?

ஏன் அங்;கே களவு பொய் பிரட்டு கற்பளிப்பு இதெல்லாம் இல்லையா?

இந்து மதம் என்றவுடன் ஒடி வருகிறார்கள்.

இந்த பேமாண்டி கூட்டத்திற்கு வேறு வேலையே இல்லை

நண்பரே, கள்வன் காவாலி, பொய்பேசுபவன் ஏமாற்று வித்தைகாட்டுபவன் , கொலைசெய்பவன் பணத்திற்காக தன் இனத்தையே அழிக்க நினைப்பவன் உங்களூக்கு புனிதமானவர்களக தெரிந்தால், மகிந்த ராஜபக்ச.?

மருதங்கேணி தனது நேர்மறையான கருத்திற்கு இத்தனை பேர் புள்ளி குத்துவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். :lol:

இருந்தாலும் சந்தடி சாக்கில் கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களை உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள் இணையவன்.

நன்றிகள்.

எங்கள் சமயம் தொன்றுதொட்டதுதான்.

இருந்தாலும் வேறு சமயங்களில் இல்லாத பிற்போக்கு வாதம் மட்டுமே

எங்கள் மதத்தை இந்த நிலையில் வைத்திருக்கின்றது.

மருதங்கேணி உங்கள் ஆதங்கமே பல கோடி மக்களின் ஆதங்கம்.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணியை யாரும் புரிந்துகொள்ளவில்லையா.. :lol:

அது வஞ்சப் புகழ்ச்சி ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர் அது லஞ்சப்

புகழ்ச்சி என்று நினைத்து விட்டார்களோ?

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி தனது நேர்மறையான கருத்திற்கு இத்தனை பேர் புள்ளி குத்துவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். :lol:

இருந்தாலும் சந்தடி சாக்கில் கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களை உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் நான் ஒரிடித்திலும் உயர்த்துவதில்லை. ஆனால் எமது அழுக்கை கழுவுவோம் வாருங்கள் என்று அழைத்தால். எனக்கு இயல்பாகவே ஜானஸ்தானம் தந்து கிறிஸ்தவன் ஆக்கிவிட்டு தொடந்தும் பிற்குபோக்கு தனமான அசிங்கங்களுக்கு வக்காலத்து வாங்குவதால் ஒரு மதத்திற்கு புண்ணியம் செய்வதாக எண்ணி இப்படிபட்ட காவாலிகளை சாமியராக்க மறைமுகமாக உதவிகொண்டிருக்கின்றார்கள் என்பதை கூட பலர் புரிந்துகொள்ள முடியாத நிலையில் 2010ம் ஆண்டில் வாழ்கிறார்கள் என்றால். இனி சாமிகளை நொந்து ஏதும் இல்லை.............. புகழ்ந்து பார்ப்போம் என்று எண்ணினேன். கொஞ்சம் வேலைசெய்யுது.............. குறைந்த பட்டசம் சிவப்பு புள்ளியாவது குத்த வேண்டும் என்று 13 பேருக்காவது தோன்றியுள்ளதே?

சிலபேர் அது லஞ்சப்

புகழ்ச்சி என்று நினைத்து விட்டார்களோ?

வாத்தியார்

...............

காலம் கெட்டுகிடக்குது அதுவும் நடக்கலாம்........... எதுவும் நடக்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.