Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள்.

நான் தெரியாமல்தான் கேட்கின்றேன். அந்த பதினெட்டாவது வயதில் என்ன தான் விசேசம். பெண் பிள்ளைகளுக்கும் அந்த வயதில் மாற்றம் வருவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கும் நானறிந்தவரை இந்த வயதுதான் முக்கியமானது என்றில்லை. சட்டப்படியும் பிரான்சில் 21 வயது தான் கல்யாண வயது. அப்படியாயின் இந்த இளசுகள் அந்த பதினாறை கொண்டாடவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மர்மம் என்ன...

எனது மக்களுக்கு நான் சொல்லிப்போட்டன். பதினெட்டல்ல 25 வயது வந்தாலும் அப்பனோட இருக்கும் வரைக்கும் எந்த வயது பிறந்தநாளும் ஒரே மாதிரித்தான். தாங்கள் சொல்லுங்கள் இனி.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள்.

நான் தெரியாமல்தான் கேட்கின்றேன். அந்த பதினெட்டாவது வயதில் என்ன தான் விசேசம். பெண் பிள்ளைகளுக்கும் அந்த வயதில் மாற்றம் வருவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கும் நானறிந்தவரை இந்த வயதுதான் முக்கியமானது என்றில்லை. சட்டப்படியும் பிரான்சில் 21 வயது தான் கல்யாண வயது. அப்படியாயின் இந்த இளசுகள் அந்த பதினாறை கொண்டாடவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மர்மம் என்ன...

எனது மக்களுக்கு நான் சொல்லிப்போட்டன். பதினெட்டல்ல 25 வயது வந்தாலும் அப்பனோட இருக்கும் வரைக்கும் எந்த வயது பிறந்தநாளும் ஒரே மாதிரித்தான். தாங்கள் சொல்லுங்கள் இனி.....

இழமை கதவின் திறப்பை கையில் எடுக்கும் திறப்பு பிறந்த நாள். கீ பேத் டே :lol::D:D திறப்பு துலைந்து விடாமல் இருக்கு ஒரு கவர் கொடுப்பதுதான் வழி. :rolleyes::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள்.

நான் தெரியாமல்தான் கேட்கின்றேன். அந்த பதினெட்டாவது வயதில் என்ன தான் விசேசம்.....

18.jpg

விசுகு, 18 வயது லைசன்ஸ் எடுக்கிற வயது.

பிள்ளைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தம்மைத்தாமே பெற்றோர் துணை இல்லாமல்,

அதாவது..... அடுத்த தலை முறைக்கு, ஆயத்தப்படுத்தும் வயது.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து தோழர் விசுகு...

  • கருத்துக்கள உறவுகள்

*******

மன்னிக்கவும், தவறுதலாக பதிந்த கருத்தை நீக்கியுள்ளேன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் திறப்பு கொடுக்கிற வயது என்கிறார்

இன்னொருத்தர் லைசன்ஸ் கொடுக்கிற வயது என்கிறார்

எனக்கென்றால் ஒன்றும் புரியல..

அழுகை அழுகையா வருது இவங்கட இந்த வயதை மட்டும் தூக்கி பிடிப்பதை பார்த்தா......???

எரிச்சலாகவும் கிடக்கு..

இந்த வயது எனக்கும் வந்து போனதுதானே...

ஆனால் நான்............???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பருவத்தின் வாசலில் விடலைகளின் குறு குறுப்போடு தடுமாற்றத்தோடு அங்கீகாரம் தேடும் பிரவேசம்....எதுவுமே கவர்ச்சிதான் இந்த வயதில்...மற்றவர்கள் தம்மை நோக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு...மொத்ததில் தவழும் குழந்தை எழுந்து நடக்க ஆரம்பிக்க முயற்சிக்கும்போது தடுமாற்றதைத் தாங்கவரும் பெற்றோரின் கைகளை தட்டிவிட்டு ஓடத் துடிக்கும் பயமறியா வயசு...

மொத்தத்தில் பெற்றோரின் பார்வையில்.... மிகக் கவனமாக கையாளவேண்டிய பருவம்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வந்தது தானே...............?

நீங்கள் தாயகத்தில் அப்பாவின் ...சமுதாயத்தின் ..கண்டிப்புடன் வாழ்ந்த காலம். அங்கு

கட்டுபாடுகள் கூட ...இங்கு புலம்பெயர்வில் வசதிகள் வாய்ப்புக்கள் கூட தடுமாறுவதற்கும்...தவறுவதற்கும்..........மனதை அலைபாய விடுவதற்கும்....சந்தர்பங்கள் அதிகம். .அன்பான் கண்டிப்புடனும் மனம் நோகாமலும் வழி நடத்தபடவேண்டும்....அவர்களுக்கு தெரியாமல் கவனிக்க் வேண்டும். .பிள்ளைகள் எதையும் மனம் திறந்து

உங்களுடன் .....தாயுடன் சொல்ல இடம் கொடுங்கள். மகனுடடைய நண்பனாக் வாழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வயசுபோனவர்கள் 75...80...90 வயதில் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகினம்..கொண்டாடிட்டு சும்மா இருந்தா பறவாயில்லை.எங்கடபோட்டோ பேஸ் புக்கில் போட்டு இருக்கிறம் பாருங்கோ எண்டு போண் எடுத்து வேறை சொல்லூகீனம்.இளையவர்கள் தங்களுக்கு பலதும் பத்தும் புரியக் கூடிய வயதில் யஸ்ற் ஒரு பிறந்த நாள் கொண்டாடினால் என்ன?பெற்றோராக இருக்கும் நிங்களே உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாது விட்டால் வேறு யாரு புரிந்து கொள்வார்கள்? :rolleyes:

16 வயதில் இருந்து சிறுபிள்ளைத்தனம் மறைய ஆரம்பிப்பதாகவும், பொறுப்புணர்வுடன் கூடிய பக்குவம் பெறத் தொடங்குவதாகவும் என் வீடுக்காரர்கள் கூறுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
biggrin.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

எனது உறவினரின் மகளுக்கு சென்ற மாதத்தில் 18வது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: மகள் பல்கலைக்கழகம் வேறு நகரத்திற்கு போகப்போகின்றாள் மற்றது திருமணம் நாம் விரும்பியபடி செய்யமுடியாது அதனால் இதையாவது எம் விருப்பத்திற்கு எம்முறவுகளுடன் செய்யனும் என்று.

18 வயதில் பிள்ளைகள் சுயமாக முடிவு எடுக்கலாம் என்பதால் தான் அதை Key B'day என்று அழைப்பதோடு அதனை விஷேசமாக கொண்டாடுவதுமுண்டு. என்னைப்பொறுத்தவரை பிள்ளைகளின் அனைத்து பிறந்ததினங்களையும் மகிழ்வாக, தங்களுக்கு இயன்றளவில் கொண்டாடலாம் அதே நேரம் பிறந்ததினம் கொண்டாடும் பிள்ளை சார்பில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவிசெய்தால் ஒவ்வொரு பிறந்ததினமும் அந்த பிள்ளைக்கும், பெற்றோர் உற்றாருக்கும், உதவி பெற்றவர்களுக்கும் மகிழ்வான தினமே.

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமகளுக்கு ஒரு பச்சை.இது தான் எனது கருத்தும். :rolleyes:

உங்கள் கருத்திற்கும் பச்சைப்புள்ளிக்கும் நன்றிகள் சஜீவன் அண்ணா.... :)

16, 18, 21 இந்த வயது பிறந்த நாட்களை முக்கியமாக வேற்று இனத்தவர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுபவர்கள் என்பது உண்மை. காரணத்தை ஏற்கெனவே பல உறவுகள் சொல்லி இருக்கிறார்கள். வேற்று இனத்தவருடன் படிக்கும் எமது இளைய சமுதாயத்தினரும் தங்களை அவர்களிடமிருந்து வேறுபடுத்தி வித்தியாசமாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்க தமக்கும் தமது பெற்றோர் அப்படி கொண்டாட வேண்டும் என எதிர் பார்க்கலாம். அதில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படிக் கொண்டாடாமல் போகும் பட்சத்தில் அவர்கள் தங்கள் நண்பர்கள் மத்தியில் bully பண்ணுப் படலாம் என்று யோசிக்கலாம். உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு கதைத்து அவர்கள் ஏன் ஆடம்பரமாக அந்த பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறார்கள் என்று உண்மையான காரணத்தை அறிய பாருங்கள். தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நீங்கள் உங்கள் கருத்துகளையும் முன்வையுங்கள், ஒரு வேளை நீங்கள் பிள்ளைகளின் கருத்தையும், பிள்ளைகள் உங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடும்.

வயசுபோனவர்கள் 75...80...90 வயதில் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகினம்..கொண்டாடிட்டு சும்மா இருந்தா பறவாயில்லை.எங்கடபோட்டோ பேஸ் புக்கில் போட்டு இருக்கிறம் பாருங்கோ எண்டு போண் எடுத்து வேறை சொல்லூகீனம்.

... :)

அந்த வயதில பேஸ் புக் வைச்சு இருக்கினமா? :mellow: சிலவேளை அவையளிண்டே பிள்ளையள் பேரப்பிள்ளைகளின் பதிவுகளாக இருக்கும்... பாவம் கடைசிக் காலங்களில கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டுப் போகட்டுமே...

விசுகு,

இந்த வயதில் உள்ள பிள்ளைகளுடன் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு விடயம், மிகச் சிறந்த நண்பனாக இருப்பதுதான். அத்துடன், அவர்களுக்குரிய சுயமரியாதையையும், Privacy யையும் பேணினீர்கள் என்றால் மிச்ச விடயங்கள் எல்லாம் சரியாக வரும்

அங்கீகாரம் தேடும் வயது, பத்துதடவை கண்ணாடி பார்க்கும் வயது, அழகென்று இறுமாப்புக் கொள்ளும் வயது, புதியதோர் உலகிற்குள் பிரவேசிக்க துடிக்கும் வயது,மொத்தத்தில் தனித் தன்மை வேண்டி நிற்கும் வயது. கொண்டாடுவது அவரவர் வசதிகள்,விருப்புகளைப் பொறுத்தது. முதல் பிறந்த நாள் கொண்டாடுவது வழமையான விடயம். மற்றவையெல்லாம் வசதி கூடியதால் வந்தவை.

18 வயசில் பிள்ளைகள் வளந்திட்டினம், எதோ கொஞ்சம் அறிவு வந்திட்டுது/

சுயமா முடிவெடுக்கிற வயசு என்றதால 18 ஆவது பிறந்தநாளை பெரிசா கொண்டாடினம்.

(இருந்தாலும் பலர் 18 வயசு வந்து கன வருசம் ஆனாலும், அப்பா அம்மா சொல்லுறதை தான் கேட்கினம், சுயமா முடிவுகளை எடுகிறதில்லை எண்டது வேறை விசயம்)

எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள்.

எனது மக்களுக்கு நான் சொல்லிப்போட்டன். பதினெட்டல்ல 25 வயது வந்தாலும் அப்பனோட இருக்கும் வரைக்கும் எந்த வயது பிறந்தநாளும் ஒரே மாதிரித்தான்.

விசுகு அண்ணா நீங்கள் உங்களுடை பிள்ளைகளோட எல்லா பிறந்தநாளையும் முதலாவது பிறந்தநாள் மாதிரி பெரிசா விமர்சியா கொண்டாடுரீங்கள் எண்டு சொல்லாமல் சொல்லிபோட்டியள். :lol:

இந்த வயது எனக்கும் வந்து போனதுதானே...

ஆனால் நான்............???

உங்கடை காலம் மாதிரி இல்லை இப்போ, காலம் மாறிப்போச்சுது.

டேக் இட் ஈசி!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்தவரிகள்:-

மொத்ததில் தவழும் குழந்தை எழுந்து நடக்க ஆரம்பிக்க முயற்சிக்கும்போது தடுமாற்றதைத் தாங்கவரும் பெற்றோரின் கைகளை தட்டிவிட்டு ஓடத் துடிக்கும் பயமறியா வயசு... மொத்தத்தில் பெற்றோரின் பார்வையில்.... மிகக் கவனமாக கையாளவேண்டிய பருவம்! :- இது ராஐவன்னியன்

பயப்படுத்தி போட்டீர்கள் ராஐவன்னியன். ஆளமான பார்வை. சிந்திக்கவைக்கும் வரிகள்.

இங்கு புலம்பெயர்வில் வசதிகள் வாய்ப்புக்கள் கூட தடுமாறுவதற்கும்... தவறுவதற்கும்..... மனதை அலைபாய விடுவதற்கும்....சந்தர்பங்கள் அதிகம். .அன்பான் கண்டிப்புடனும் மனம் நோகாமலும் வழி நடத்தபடவேண்டும்....அவர்களுக்கு தெரியாமல் கவனிக்க் வேண்டும். .பிள்ளைகள் எதையும் மனம் திறந்து உங்களுடன் .....தாயுடன் சொல்ல இடம் கொடுங்கள். மகனுடடைய நண்பனாக் வாழுங்கள்-இது நிலாமதியக்கா உண்மைதான் எம்மைவிட 100மடங்கு அதிகம் இவர்கள் தடுமாற....

வயசுபோனவர்கள் 75...80...90 வயதில் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகினம்..கொண்டாடிட்டு சும்மா இருந்தா பறவாயில்லை.எங்கடபோட்டோ பேஸ் புக்கில் போட்டு இருக்கிறம் பாருங்கோ எண்டு போண் எடுத்து வேறை சொல்லூகீனம்.இளையவர்கள் தங்களுக்கு பலதும் பத்தும் புரியக் கூடிய வயதில் யஸ்ற் ஒரு பிறந்த நாள் கொண்டாடினால் என்ன?பெற்றோராக இருக்கும் நிங்களே உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாது விட்டால் வேறு யாரு புரிந்து கொள்வார்கள்:- இது யாயினி

சரி சரி என்னைப்போல்தான் பொறாமையாக இருக்கா வயதானவர்கள் கொண்டாடுவதைப்பார்க்க… .அமைதி அமைதி இன்னும் சில வருடங்களில் நீங்களும் அந்த வயதை கொண்டாடலாம் தானே யாயினிக்கிழவி….

16 வயதில் இருந்து சிறுபிள்ளைத்தனம் மறைய ஆரம்பிப்பதாகவும், பொறுப்புணர்வுடன் கூடிய பக்குவம் பெறத் தொடங்குவதாகவும் என் வீடுக்காரர்கள் கூறுகின்றனர். :- இது ஆரமுதன்

அப்போ தங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறீர்களா…. ???

என்னைப்பொறுத்தவரை பிள்ளைகளின் அனைத்து பிறந்ததினங்களையும் மகிழ்வாக, தங்களுக்கு இயன்றளவில் கொண்டாடலாம் அதே நேரம் பிறந்ததினம் கொண்டாடும் பிள்ளை சார்பில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவிசெய்தால் ஒவ்வொரு பிறந்த தினமும் அந்த பிள்ளைக்கும், பெற்றோர் உற்றாருக்கும், உதவி பெற்றவர்களுக்கும் மகிழ்வான தினமே :- இது ஈழமகள் மற்றும் சயூவன்

ஓவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டிய வரிகள்- ஆனால் ஒருசிலரே தொடர்ந்து சுமையை சுமந்தபடி…..

உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு கதைத்து அவர்கள் ஏன் ஆடம்பரமாக அந்த பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறார்கள் என்று உண்மையான காரணத்தை அறிய பாருங்கள். தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நீங்கள் உங்கள் கருத்துகளையும் முன்வையுங்கள், ஒரு வேளை நீங்கள் பிள்ளைகளின் கருத்தையும், பிள்ளைகள் உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடும். :;-இது குட்டி

வயதுக்கேற்ற வார்த்தைகளாக தெரியவில்லை. மிகவும் ஆளமான வரிகள்

இந்த வயதில் உள்ள பிள்ளைகளுடன் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு விடயம், மிகச் சிறந்த நண்பனாக இருப்பதுதான். அத்துடன், அவர்களுக்குரிய சுயமரியாதையையும், Privacy யையும் பேணினீர்கள் என்றால் மிச்ச விடயங்கள் எல்லாம் சரியாக வரும்: :-இது நிழலி

உண்மையான ஆனால் மிகவும் கடினமான வரி அல்லது பாதை

மொத்தத்தில் தனித் தன்மை வேண்டி நிற்கும் வயது. முதல் பிறந்த நாள் கொண்டாடுவது வழமையான விடயம். மற்றவையெல்லாம் வசதி கூடியதால் வந்தவை :-இது சிற்பி

இது தான் எனது கருத்தும் தெரிவும் நடைமுறையும்

இருந்தாலும் பலர் 18 வயசு வந்து கன வருசம் ஆனாலும்; அப்பா அம்மா சொல்லுறதை தான் கேட்கினம், சுயமா முடிவுகளை எடுகிறதில்லை எண்டது வேறை விசயம் . விசுகு அண்ணா நீங்கள் உங்களுடை பிள்ளைகளோட எல்லா பிறந்தநாளையும் முதலாவது பிறந்தநாள் மாதிரி பெரிசா விமர்சியா கொண்டாடுரீங்கள் எண்டு சொல்லாமல் சொல்லிபோட்டியள். - இது தமிழ்ப்ரியா

இதைத்தானே நான் செய்தனான் - அதற்காக அவர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர் என்றோ ஒன்றும் தெரியாத அப்பாவிகள் என்றோ தாங்கள் எழுதாதது ஆறுதல் தருகிறது. அதேநேரம் எனது வீட்டு பிறந்த நாட்கள் பற்றி தாங்கள் எழுதியது உண்மைதான். சிற்பி அவர்கள் எழுதியதுபோல்………………….எல்லாம் ஒரே மாதிரிதான். முதலாவது பிறந்ததினம் முக்கிய உறவுகளுக்கு சொல்லி செய்வோம் அடுத்தவை ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கேக் வெட்டுவோம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே….

ஆனால் என்னுடைய நிலை:- இந்த 18 வயதை கொண்டாட வேண்டுமாயின் அவர்கள் அந்த 18 வயதுக்குள் செய்யவேண்டியதை செய்திருக்கவேண்டும். மனிதராக பிறந்த எவருக்கும் இதை கொண்டாட அருகதையுள்ளதா.. ? அல்லது சாதித்தவர்களுக்கு உண்டா.. ? அல்லது எவருக்கு கொண்டாட பெற்றோர் விரும்புவர்…. ??? அனேகமானவர்களின் கருத்து அவர்கள் சிறகடிக்க போகின்றனர் என்பது…. அப்படியாயின் பெற்றோரது விருப்புகளை அவர்கள் இந்த வயதுக்குள் நிறைவேற்றியிருக்க வேண்டாமா..???

Edited by விசுகு

-

குட்டியைத் தவிர மற்ற எல்லோரும் ஆழமாகப் பார்கவில்லை ...!

சகோதரங்களே! இங்கு வளரும் பிள்ளைகள் ஐரோப்பியர் என்பதை மறந்து விட்டீர்கள் ... ?

18 வயதை ஏன் பெரிதாக கொண்டாட வேண்டும் ?

சரியாகத் திருப்பிக் கேட்டால், ஐரோப்பியர் ஏன் 18 வயதை பெரிதாக கொண்டாடுகிறார்கள்?

இந்தக் கொண்டாடத்தின் முலம் இளைஞனும் குமரியும் (
இவர்கள் ஏற்கனவே
பள்ளிக்கூடத் துணையுட வலம் வந்தவர்கள்
) தமது வாழ்கையை தொடங்க துணை தேடுகிறேன் என தங்கள் சுற்றாடலுக்கு அறிவிகிறர்கள், அத்துடன் இக்கொண்டாடம் அவர்களில் பலரிற்கு சுயம்வர விழாவாக அல்லது தங்கள் துணைவர்களை அறவிக்கும் சந்தர்பமாக அமைகிறது, இவ்வண்ணம் இணைந்த உறவுகள் மேல் படிப்பைத் தொடர்ந்து கொண்டே அங்கும் இங்கும் வேலை சைது காசு ஒதுக்கி வீடொன்றை வாடைக் எடுத்து தனியகக் குடி போவார்கள், பின்பு எல்லாம் தொதாகச் சரியக நடந்தால் 22, 23 வயதில் பிள்ளைகளை ஆக்க தொடங்குவார்கள்... பின் கடனெடுத்து ஒரு வீடு வாங்குவார்கள் ... அவர்களின் தாய் தந்தயர் பொருளாதார உதவி செய்வது உண்டு ஆனால் எந்தவிதமான கட்டாயமும்மிலை ...

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவர்களுக்கு, தங்களுக்கு என்ன தேவை எதை முடியும் அதை எப்படி அடைவது என்றெல்லாம் நன்றாகத் தெரியும், தங்கள் துணைவருடன் நன்றாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள், அனேகமாக அது அவர்களின் ஒருமித்த வருங்கால திட்டம் ...! , இந்த நிலையில் பெரியவர்கள் இவர்கள் வாழ்கையில் தலையிடுவது ...?

பெரியவர்களுக்கு கொடுக்கும் மதிப்புடன், என்ன எப்படி என்று தாராளமாக திருப்பித் திருப்பி வேறுவேறு விதமாகக் கேளுங்கள்... ஆனால் பதில் ஒன்றும் சொல்லாமல் ...

இதோ இன்று பிரஞ்ச 16-18 வயதுக் காரர் ஆர்வத்துடன் பார்கும் தொலைகாட்சி FR3 வின் தொடர் இயங்குபடம்

எல்லா (ஐரோபியர் மாத்திரமல்ல) இளஞ்ஞர்களின் சமூகவியல் மற்றும் பல துறை அறிவுகளும் (அமேரிக்க !) தொலைக்காட்சிகளால்தான் பதப்படுத்தப் படுகின்றது

-

Edited by ஜெகுமார்

விசுகு,

இந்த வயதில் உள்ள பிள்ளைகளுடன் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு விடயம், மிகச் சிறந்த நண்பனாக இருப்பதுதான். அத்துடன், அவர்களுக்குரிய சுயமரியாதையையும், Privacy யையும் பேணினீர்கள் என்றால் மிச்ச விடயங்கள் எல்லாம் சரியாக வரும்

நிழலி உங்களுக்கு நான் பச்சைப்புள்ளி தான் குத்திகிறன் என்று மாறி சிவப்பு புள்ளி குத்திட்டன் மன்னிக்கவும். நிழலியின் கருத்து தான் எனதும். பிள்ளைகளுடன் பெற்றோர்கள் நல்ல நண்பர்களாக இருந்தால் நிச்சயம் பிள்ளைகள் பெற்றோருடன் எல்லாத்தையும் மறைக்காமல் சொல்வார்கள்.இன்றைய சந்தியினரை நல்லமுறையில் வளர்க்க இது தான் சிறந்த வழி .

Edited by செவ்வந்தி

ஓ செவ்வந்தி அக்கா பெரிய குற்றம் தான் செய்துபோட்டீங்கள். அப்ப ஆக்களுக்கு இருட்டில மாறி தடக்குப்பட்டு விழுந்து சிகப்பு குத்துற ஆள் எண்டு சிறீ தேடிக்கொண்டு இருந்தது உங்களைத்தானோ. சரி பரவாயில்லை.. நானொரு பச்சை குத்தி நிழயிண்ட கருத்தை நியூட்ரல் ஆக்கி இருக்கறன். நிம்மதியாய் தொய்யா செய்யுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.