Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவ்வாறு நான் முகம் கொடுப்பேன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு நான் முகம் கொடுப்பேன்? ‐ தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்

moor20street20jaffna.jpg

பல தசாப்தங்களாக நீடித்த போரின் விளைவாக இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் மெல்ல மெல்ல தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அயலவர்களாக தமிழர்களுடன் நட்பை ஏற்படுத்துவதிலும், தமது கடந்த காலத்;தில் தமக்கேற்பட்ட அவலமான சம்பவங்களின் எஞ்சிய நினைவுகளிலிருந்து மீள்வதிலும் அவர்கள் சவாலை எதிர் கொள்கிறார்கள்.

வடக்கின் மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் சில பாகங்களிலிருந்தும் 1990 ஒக்ரோபரில் வெளியேற்றப்பட்ட 75000 முஸ்லிம்கள், கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்த பிற்பாடு திரும்பி வர ஆரம்பித்திருக்கிறார்கள். போர் முடிவுக்கு வந்தமை அவர்களது இடங்களுக்குத் திரும்புதலை அல்லது அவர்களது மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தி இருக்கிறது.

அவர்கள் மீள் குடியேற ஆரம்பித்ததும் பாடசாலைகள், சுகாதார வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் எழ ஆரம்பித்தருக்கின்றன என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் பிரஜைகள் குழு உறுப்பினருமாகிய பர்ஷானா ஹனீபா. இவர் உறுப்பினராக உள்ள சிவில் சமூகத்தையும், முஸ்லிம் அமைப்புக்களiயும் கொண்ட பிரஜைகள் குழு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறையுடன் செயலாற்றி வருகிறது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கே வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புத்தளம் மாவட்டத்தை வந்தடைந்தார்கள்.

புத்தளத்திலும் நாட்டின் வேறு சில இடங்களிலும் தம்மைத் தாபித்துக் கொண்ட முஸ்லிம்களில் சிலர் மீளவும் யாழ்ப்பாணத்தற்குத் திரும்பும் அவாவைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஹனீபா குறிப்பிடுகிறார்.

தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள முஸ்லிம் மக்கள் வடக்கின் போர்ப் பிராந்தியமாக இருந்த அப்பிரதேசங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.

தமிழர்களின் இதய பூமியாகக் கொள்ளப்படும் யாழ் மாவட்டத்தில் ‐ முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதாக ‐ 5500 குடும்பங்கள் இருந்ததாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிபரங்களின்படி 1990களின் மத்தியில் புத்தளத்திற்கு இடம் பெயர்ந்து சென்றிருந்தவர்களில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியிருந்தன.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இடம் பெயர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள் ஓகஸ்ட் 2009இன் பின்னரேயே மீளத் திரும்ப ஆரம்பித்தார்கள் என்கிறது யு.என்.எச்.சி.ஆர்.

அதிலிருந்து இதுவரை 1500 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் மீள் குடியேறி உள்ளார்கள். இந்த எண்ணிக்கை இதனை விட உயர்வாக இருக்கலாம். ஏனெனில் தாமாகவே மீளத் திரும்பிய பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்கவில்லை எனவும் யு.என்.எச்.சி.ஆர். தெரிவிக்கிறது.

வளங்களின் பற்றாக்குறை, அதற்கான போட்டி, தொழில் தேடுதல், வீடுகள் பற்றாக்குறை, வீடு மற்றும் காணி உரிமையில் செய்யப்பட்ட முறைகேடுகள் (ஏனெனில் முஸ்லிம்கள் பலவந்தமாக அவர்களது இருப்பிடங்களிலிருந்து கலைக்கப்பட்டிருந்தார்கள்) என்று மீளக்குடியமரச் சென்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளமானவை.

முஸ்லிம்களின் இந்த வெளியேற்றம் நடைபெற்று ஏறத்தாழ 20 ஆண்டுகளாகி விட்டது. புதிய ஒரு தலைமுறை தமிழர்களும் முஸ்லிம்களும் சமூகரீதியான உறவுகளோ அவை குறித்த அனுபவங்களோ எதுவுமின்றி வளர்ந்து விட்டிருக்கிறார்கள்.

உள்ளூரில் இருக்கும் தமிழ் மக்கள் முஸ்லிம்கள் திரும்பி வந்தது குறித்து அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். முன்னைய சந்ததியினருக்கு உள்ள இரண்டு சமூகங்களுக்கு இடையேயான ஊடாட்டங்கள் குறித்த அனுபவங்கள் தற்போதைய சந்ததியினருக்கு இல்லை.

புலிகளுடைய முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கை மிகத் துரிதமாகவும் விiனாயற்றல் மிக்கதாகவும் இருந்தது. புலிகளின் உள்ளூர்த் தலைவர்கள் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஆக ஒரு மணித்தியால அவகாசத்தையே வழங்கியிருந்தார்கள்.

"மாலை ஐந்து மணியிருக்கும். விடுதலைப் புலிகள் ஒலி பெருக்கியில் எல்லோரையும் ஜின்னா மைதானத்தற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்கள். புலிகளின் தலைவர்களில் ஒருவர் எங்களுக்குச் சொன்னார். இரண்டு மணித்தியாலங்களுக்குள் எல்லா முஸ்லிம்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று" என்கிறார் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான 55 வயதான முஹமட் யாஸின். இவர் 1996இல் புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி இருந்தார்.

முஹமட் மைதானத்திலிருந்து திரும்பி வந்து செய்தியை மனைவியிடம் சொன்னபோது அவருடைய மனiவி அதனை நம்பவில்லை. அவர் பகிடி விடுகிறார் என்றே நினைத்தார். இதனல் அயலவர்களிடம் விசாரித்துப் பார்க்குமாறு மனைவியிடம் கூறினார் முஹமட். உண்மை தெரிந்ததும் மனைவி அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

அவர் அச்செய்தியை நம்பாததில் வியப்பேதுமில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் தமது அயலிலுள்ள தமிழர்களுடன் அவ்வளவு அந்நியோன்னியமாகவே வாழ்ந்து வந்தார்கள்.

தமக்கு ஏற்பட்ட இந்தத் துன்பியல் நிகழ்வுக்காக முஹமட் யாழ்ப்பாணத்துத் தமிழர்களைக் குற்றம் சாட்டவில்லை. "எங்களுக்கு உதவ முடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். அதையும் மீறி அவர்கள் முயன்றிருந்தால் அவர்களும் புலிகளால் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்" என்றும் அவர் சொல்கிறார்.

யாழ்ப்பாணத்தில் இப்போது மீளத் திரும்பியிருக்கும் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லுறவு நிலவி வருகிறது என்கிறது பிரஜைகள் குழு.

யாழ்ப்பாணத்தலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்குச் சாட்சியாக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பத்மராஜா அவர்கள் மீளக் குடியேறி வருவதை வரவேற்கிறார்.

மக்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என் விரும்பியதில்லை. அவர்கள் வேறொரு மதத்தைப் பின்பற்றுபவராக இருக்கலாம். ஆனால், நாங்கள் எல்லோரும் ஒரே மொழியையே பேசுகிறோம். எங்களுக்கிடையே எவ்விதத் தடைகளும் இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

நடந்தவை குறித்து நாங்கள் எல்லோருமே கூட்டாக வெட்கமடைவதாக உணர்கிறோம் என்றும் அவர் சொல்கிறார்.

அநீதியான முறையில் அம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு நாங்கள் ஒரு மௌன சாட்சியாக இருந்திருக்கிறோம் என நினைத்து நாங்கள் வெட்கமடைகிறோம். நிச்சயமாக நான் வெட்கித் தலை குனிகிறேன் எனச் சொல்லும் அவர் பின்வருமாறு கேள்வியொன்றையும் எழுப்புகிறார்.

எவ்வாறு நான் எனது முஸ்லிம் நண்பர்களை முகம் கொடுப்பேன்?

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=23946&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அவர்களது வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக முசிலிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்வு எமது வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வு. பேரினவாதிகளால் அடக்குமுறைக்கு உள்ளக்கப்பட்ட சிறுபான்மை இனம் ஒன்று இன்னொரு சிறுபான்மை இனத்தை அடக்குமுறைக்குள்ளாக்கிய சோக வரலாறு. மீளக் குடியேறியுள்ள முசிலிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் மீண்டும் நல்ல பலமானதொரு உறவுப் பாலம் அமைக்கப்படவேண்டியது இது தொடர்புபட்ட சகலரினதும் தலையாய தார்மீகக் கடமையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு பதிவு.

-

பார் சகோதரமே ! பார் !! ... தெய்வம் நின்று கொல்லுது, ... இன்று ஈழம் இங்கும் அங்கும் அழுகுது ...

எப்படி உனக்கு இதைச்செய்ய முடிந்தது சகோதரமே... ஏன் இதைச்செய்தாய்? ... இன்னும் என்னென்ன செய்தாய்யோ ..?

மன்னிக்க முடியாத, அழிக்கமுடியாத கறை படிந்த, என்றும் எல்லோரையும் வெட்கப்டவும் தலைகுனியவும் வைகும்

பாரிய ... பாவம், அயோக்கியம், அநியாயம்... ... மண்னாங்கட்டி .... குரங்கின்ட கையில பூமாலையா ...?

தெய்வம் நின்று கொல்லுது ... ஈழம் இங்கும் அங்கும் அழுகுது கேட்பாரில்லமல் ... பார் சகோதரமே ! பார் !! ...

...

:rolleyes::wub::lol:

original is here

-

Edited by ஜெகுமார்

எமது போராட்டத்தில் விளங்கமுடியாத பல விடயங்கள் இருந்தன.சில பிழைகள் தவிர்க்க முடியாதயையாகவும் பல பிழைகள் தவிர்த்திருக்க கூடியவைகளுமாக இருந்தன.அவை ஏன் நடந்தன என்று,யார் அந்த முடிவுகளை எடுத்தார்கள் என்று இன்னமும் புரியாமல் இருக்கின்றது.

முஸ்லிம்கள் வெளியேற்றமும் அவற்றில் ஒன்று. சிலர் தலைமைக்கு தெரியாமல் நடந்ததென்று நொண்டிச்சாட்டு சொல்லுகின்றார்கள்(பிறகென்ன தலைவர்).ஈரான் -கொன்ரா விசயத்தில் றீகனும் இப்படித்தான் தனக்கு தெரியாமல் ஒலிவர் நோர்த் தான் செய்தார் என்று தப்பிவிட்டார்.

  • தொடங்கியவர்

ஏற்கனவே மன்னிப்பு கேட்டாகி விட்டது. துணிவு இருந்தால் நீங்கள் இருந்த இயக்கம் பற்றி ஒரு வரி எழுத முடியுமா?

சிகப்பு புத்தகங்களை மக்கள் போராட்டம் என காட்டி விட்டு இன்று கொலை கொள்ளை என ஈடுபடவில்லை.

கடைசி வரை தனது மக்களை காட்டி கொடுக்கவில்லை.

இது சில வரிகள் புலிகள் பற்றி. அவர்களும் மனிதர்கள் தான் . 100% சரியாக முடிவு எடுத்த அல்லது எடுக்கும் ஒரு நாடு அல்லது விடுதலை இயக்கம் பற்றி அறிய மிக ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அவர்களது வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக முசிலிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்வு எமது வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வு. பேரினவாதிகளால் அடக்குமுறைக்கு உள்ளக்கப்பட்ட சிறுபான்மை இனம் ஒன்று இன்னொரு சிறுபான்மை இனத்தை அடக்குமுறைக்குள்ளாக்கிய சோக வரலாறு. மீளக் குடியேறியுள்ள முசிலிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் மீண்டும் நல்ல பலமானதொரு உறவுப் பாலம் அமைக்கப்படவேண்டியது இது தொடர்புபட்ட சகலரினதும் தலையாய தார்மீகக் கடமையாகும்.

இது தான் எனது கருத்தும்.காவலிக்கு ஒரு பச்சை :rolleyes:

யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு செய்யப்பட்ட அநியாயம் மன்னிக்கமுடியாத கொடுமை. இந்த அநியாயத்தால்தான் தமிழ் மக்கள் அழியவேண்டிய ஏற்பட்டது. முள்ளிவாய்க்கால் கொடுமையைப்பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது பற்றியும் பேச வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் முஸ்லிம் மக்களால் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட, படுகின்ற கொடுமைகள் பற்றியும் பேச வேண்டும். குறுகிய வட்டத்துக்குள் நின்று பேசக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கார் பிரிஞ்சு போயிட்டினமாம்.... தங்கட ஏரியா பிரச்சனையள தாங்களே தீத்துக்கொள்ளுவினமாம், இடைத்தரகர்கள் தேவையில்லயாம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுகுழுக்கள் அது தான் கொலை களவு செய்யும் உங்கள் ஆட்கள் பற்றி தானே சொல்கிறீர்கள்?? :rolleyes:

கிழக்கார் பிரிஞ்சு போயிட்டினமாம்.... தங்கட ஏரியா பிரச்சனையள தாங்களே தீத்துக்கொள்ளுவினமாம், இடைத்தரகர்கள் தேவையில்லயாம். :rolleyes:

எண்டு போன தேர்தலிலை அமோகமாக மக்கள் வாக்கு போட்டு அதனால் வெற்றி பெற்ற கருணாவும் பிள்ளையானும் சொல்லுகினமாக்கும்...??

-

"அதே நேரம் முஸ்லிம் மக்களால் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட, படுகின்ற கொடுமைகள் பற்றியும் பேச வேண்டும். குறுகிய வட்டத்துக்குள் நின்று பேசக்கூடாது." - nunavilan

"கிழக்கார் பிரிஞ்சு போயிட்டினமாம்.... தங்கட ஏரியா பிரச்சனையள தாங்களே தீத்துக்கொள்ளுவினமாம், இடைத்தரகர்கள் தேவையில்லயாம். :rolleyes:" -Mathivathanang

...

1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் தோன்றிய காலத்தில் அனேக சிங்களத் தலைவர்களை பிரித்தானிய அரசாங்கம் அவர்களைச் சிறைக்கு அனுப்பி எந்த நேரத்திலும் மரணதண்டனையை எதிர்பார்த்தனர். இந்தக் கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத சேர் பொன். இராமநாதன் தனது உயிரையும் மதிக்காமல் இங்கிலாந்து சென்று சிங்கள தேசியத் தலைவர்களுக்கு உயிர்ப் பிச்சை எடுத்துக் கொடுத்தார். இந்த வெற்றியை அடைந்த பின்பு சேர் பொன். இராமநாதன் வெற்றிவாகையுடன் திரும்பிவந்த பொழுது அவரை கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவருடைய வீடுவரை சிங்களத் தலைவர்கள் குதிரைகளாக மாறி அவரை வண்டியில் வைத்து அவர் வீடு வரை அழைத்துச் சென்றமை சகலருக்கும் தெரிந்த விடயம்.

...

இந்த அறிவு கெட்ட சாதி வெறி பிடித்த பேதை

எங்களுக்குச் செய்த அவமானத்தையும்

அவர்களுக்குச் செய்த அநியாயத்தையும் மறந்திடாதேங்கோ ...!!

அவர்கள் உதுவும் செய்யலாம் இன்னமும் செய்யலாம்...,

ஏன் எண்டால் நாளைக்கு நாங்கள் நேர்மையாய் நடப்போம் என்று

உறுதி கொடுக்கத் எங்களில் யாருக்கும் தகுதியில்லை,

அப்படிக் கொடுத்தாலும்,

அதை நம்புவதற்கு யாருமில்லை, அவர்களும் இன்னும் முட்டாள்களுமில்லை ...?

ஆனால்

அவர்களும் தமிழர்கள், ஆனபடியால்

பாரமான மனத்துடன் வேறுவழி இன்றி

எங்கள் பக்கத்தில் மௌனமாக நடக்கக்கூடும் ...

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஆனால்

அவர்களும் தமிழர்கள், ஆனபடியால்

பாரமான மனத்துடன் வேறுவழி இன்றி

எங்கள் பக்கத்தில் மௌனமாக நடக்கக்கூடும் ...

அவர்கள் என்றுமே தங்களை தமிழர் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. அது தான் பிரச்சினையே.

ஹ்ம்ம்..... நம்பிக்கை தான் வாழ்க்கை என்றால், வாழ்ந்து விட்டுப் போவது தான்.

அதே நேரம் முஸ்லிம் மக்களால் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட, படுகின்ற கொடுமைகள் பற்றியும் பேச வேண்டும். குறுகிய வட்டத்துக்குள் நின்று பேசக்கூடாது.

நுணாவிலானின் கருத்துக்கு ஒரு பச்சைப்புள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அவர்களது வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக முசிலிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்வு எமது வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வு. பேரினவாதிகளால் அடக்குமுறைக்கு உள்ளக்கப்பட்ட சிறுபான்மை இனம் ஒன்று இன்னொரு சிறுபான்மை இனத்தை அடக்குமுறைக்குள்ளாக்கிய சோக வரலாறு. மீளக் குடியேறியுள்ள முசிலிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் மீண்டும் நல்ல பலமானதொரு உறவுப் பாலம் அமைக்கப்படவேண்டியது இது தொடர்புபட்ட சகலரினதும் தலையாய தார்மீகக் கடமையாகும்.

அதேவேளை இந்த நிகழ்விற்கு முன்னர் முஸ்லீம்களால் திருமலை நிலாவெளி.. கிண்ணியா.. மூதூர்.. என்று விரட்டி அடிக்கப்பட்டு வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் படகுகளில் ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு வந்த எம்மக்களையும் நான் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு குரல் கொடுக்க எவரும் இல்லை. அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேச யாரும் இல்லை. மூதூரில் எம் சொந்தங்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவற்றை சூறையாடியவர்களுக்கு முஸ்லீம்கள் சார்பில் என்ன தண்டனைகள் வழங்கப்பட்டன..??! இவற்றிற்காக இவர்கள் என்றாவது வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா..??!

அதுமட்டுமன்றி யாழ் நகரில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் தமிழ் மக்கள் வணங்கும் ஆலயப்பகுதிகளில் மாட்டுறைச்சியைக் கொட்டுறது.. வீதிகளில் நின்று சண்டித்தனம் செய்வது.. போர் விமானங்களுக்கு வழிகாட்டி உளவுத்தகவல் கொடுப்பது.. இப்படி பல அநியாயச் செயற்பாடுகளிலும் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். அதற்காக அவர்கள் என்றும் தமிழ் மக்களிடம் வருத்தமோ மன்னிப்போ தெரிவித்ததில்லை..!

அப்படி நோக்கும் போது இவர்கள் மீது இரக்கப்பட என்னால் முடிவதில்லை. நாங்கள் இவர்களின் தொல்லைகளை நேரில் அனுபவித்தவர்கள். வீடுகளை வாடகைக்கு கேட்டு வருவார்கள். கொடுக்கா விட்டால் சண்டித்தனம் செய்வார்கள். இதெல்லாம் 1987 இந்தியப் படைகளின் காலத்தில் நடந்தது. அதற்காக முஸ்லீம்கள் எல்லோரும் அப்படியல்ல. அவர்களுக்குள்ளும் குழப்பவாதிகள்.. ஜிகாத் விரும்பிகள்.. கடும்போக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களின் செயற்பாடுகளையும் அவர்கள் கட்டுப்படுத்திக் கொண்டால்.. தமிழ் மக்களோடு உறவாடிக் கொள்வதில் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை.

மீண்டும் காட்டிக் கொடுப்பு. சண்டித்தனம்.. சமூகச் சீரழிவு.. ஜிகாத்.. அல் கொகைடா.. என்று அலட்டிட் திரிந்தார்கள் என்றால் அடித்து விரட்டாமல்.. வைத்து அழகா பார்ப்பார்கள். நாம் மேற்கு நாடுகளில் பார்த்த வகையிலும் பல மக்கள் முஸ்லீம்களில் அவ்வளவு நல்ல அபிப்பிராயத்தை கொண்டிருப்பதில்லை. காரணம் அவர்களின் மத வெறி. அதை கட்டுப்படுத்தாமல் அவர்கள் எந்தச் சமூகத்தோடும் நெருங்கி வாழ முடியும் என்று நினைக்கவில்லை. :lol::rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தில் விளங்கமுடியாத பல விடயங்கள் இருந்தன.சில பிழைகள் தவிர்க்க முடியாதயையாகவும் பல பிழைகள் தவிர்த்திருக்க கூடியவைகளுமாக இருந்தன.அவை ஏன் நடந்தன என்று,யார் அந்த முடிவுகளை எடுத்தார்கள் என்று இன்னமும் புரியாமல் இருக்கின்றது.

முஸ்லிம்கள் வெளியேற்றமும் அவற்றில் ஒன்று. சிலர் தலைமைக்கு தெரியாமல் நடந்ததென்று நொண்டிச்சாட்டு சொல்லுகின்றார்கள்(பிறகென்ன தலைவர்).ஈரான் -கொன்ரா விசயத்தில் றீகனும் இப்படித்தான் தனக்கு தெரியாமல் ஒலிவர் நோர்த் தான் செய்தார் என்று தப்பிவிட்டார்.

முஸ்லீம் காடையர்களால்.. ஜிகாத் அமைப்பினரால்.. அஸ்ரப் தலைமையிலான முஸ்லீம் காங்கிரசால்.. கிழக்கில் குறிப்பாக நிலாவெளி.. கிண்ணியா.. மூதூர்.. போன்ற இடங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்ட எம்மக்கள் பற்றிய உங்களின் நொண்டிச்சாட்டு என்ன..??!

மன்னாரில் முஸ்லீம் ஜிகாத் அமைப்பினரால் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு பயந்தோடிய எமது மக்கள் தொடர்பான உங்களின் தகவல் என்ன..??!

யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையை அண்டி முஸ்லீம்கள் கட்டவிழ்த்துவிட்டிருந்த காடைத்தனங்களுக்கும் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளிற்கும் தங்களின் பதில் என்ன..??!

இந்தியப் படைகள் வந்து முஸ்லீம்களை துன்புறுத்திய போது அடைக்கலம் தந்து பாதுகாத்த தமிழ் மக்களையே இறுதியில் சிங்களவர்களோடு இணைந்து அடித்து விரட்டியவர்கள்.

அதுமட்டுமா.. தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை அரச உளவாளிகளாக நின்று துன்புறுத்தியோர் வரிசையில் சிங்களவர்களை விட முஸ்லீம்களே முன்னணியில் இருந்தனர். இவற்றையும் வரலாறு மன்னிக்காது. உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதும் மேற்கு நாடுகளில் முஸ்லீம்களுக்கு என்று விசேட பொலிஸ்பதிவு முறைகள் இருக்கின்றன. அவர்களின் மீது உலகம் பூராவுமே ஒரு சந்தேகப் பார்வை இருக்கிறது. மதத்திற்காக அதன் பெயரால் மனிதர்களைக் கொல்லும் துன்புறுத்தும் காட்டுமிராண்டித்தனப் போக்கை முஸ்லீம்கள் கைவிட வேண்டும். அதை செய்யாமல்.. அவர்கள் மற்றைய இனங்களோடு இணங்கி வாழுதல் என்பது எவ்வளவு உறுதியாக அமையும் என்று சொல்ல முடியாது.

கடந்த காலங்களில் பாணந்துறை.. களுத்துறை.. கண்டி.. கேகாலை.. மருதானை.. என்று சிங்களவர்களோடும் முஸ்லீம்கள் வன்முறை ரீதியாக மோதி இருக்கின்றனர். ரத்வத்தை கண்டியில் ஏன் முஸ்லீம்களை போட்டுத்தள்ளினார் என்பது பற்றியும் சொல்லுங்கள்.

எல்லாத்துக்கும் ஒரே ரெக்கோட்டை பாடாதேங்கோ. வரலாற்று இரண்டு பக்கங்களை பதிந்து வைத்திருக்கிறது. எப்பவும் மாற்றுக் கருத்தென்று ஒரு பக்கத்தை மட்டும் புரட்டி வைச்சு குரட்டை விடாதேங்கோ. மற்றைய பக்கங்களையும் படியுங்கள். அப்போதுதான் மக்களின் மனங்களில் உள்ள காயங்களையும் கண்டறியலாம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹலோ நெடுக்ஸ் உங்களின் நோக்கம் என்ன? இங்கு முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களால் கொடுக்கப்பட்ட அநீதிகளை தமிழ் சமூகத்தினர் மனமார்ந்த நிலையில் உணர்ந்து அநீதி இழைக்கப்படதும் அவ்வநீதிக்கு தமிழ் சமூகம் மெளனசாட்சியாக அங்கீகாரம் வழங்கியமை உள்ளங்கை நெல்லிக்கணி. இருந்தும் தமிழ் சமூகம் இன்னும் ஓர் சமூகத்தினால் இதே பாதிப்பினை அடையும் போது முஸ்லிம்களின் வலியின் ஆழம் எப்படி இருந்திருக்கும் என்பதனை உணர்வதும் ஒரு படிப்பினைதான். அப்படிப்பினையினால் நடந்த தவறினை சுட்டிக்காட்டி இனங்களுக்கிடையில் ஒற்றுமையின் அவசியத்தையும் ஒத்துழைப்பினையும் வளர்ந்துக்கொள்வது நல்ல ஒரு முயற்சி. மறுபுறத்தே முஸ்லிம்கள் அவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும்- சிங்களம் பேசுபவர்களாக இருந்தாலும்- அரபு பேசுபவர்களாக இருந்தாலும்-மலாய் பேசுபவர்களாக இருந்தாலும்-ஹிந்தி பேசுபவர்களாக இருந்தாலும்- ஏன் ஆங்கிலம் பேசுபவர்களாக இருந்தாலும். மொழியால் அடைமொழி பெறுபதை விட சமயத்தால் அதாவது முஸ்லிம்கள் என்கிற இனத்தொகுதியாகவும் இஸ்லாத்தை பின்பற்றுவர்கள் என்பதை உறுதிப்படுத்துபவர்களாகவுமே நெறிப்படுத்தப்பட்டு இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆகவே அவர்கள் தமிழினை பேசுவதினால் அவர்களும் தமிழர்களே என்ற உங்கள் புறத்தில் நியாயம் கற்பிக்க முற்படவேண்டாம். ஆனால் தமிழ்நாட்டில் மாத்திரம் முஸ்லிம்கள் தமிழ் பேசுவதினால் அவர்களும் தமிழர் என்கின்ற அடைமொழிக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளதைமுஸ்லிம் சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது. மறுபுறத்தே உங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சண்டித்தனம் பண்ணுவது கோயில்களை அசிங்கம் பண்ணுவது இன்னோரன்ன குற்றச்சாட்டுக்கள் தேவையில்லாமல் உங்களுக்கு முஸ்லிம் சமூகத்தவரின் மீதுள்ள காள்புணர்வை வெளிப்படுத்துகின்றதே தவிர ஏதோ உங்கள் சமூகத்தவர் மாத்திரம் மனிதப்புனிதர்களாக மற்ற சமூகத்தவருடம் தொடர்புகளையும் உறவினையும் பேனுவதாக கற்பனை செய்து கிணற்று தவளை போன்று வேண்டாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். எப்படி உங்கள் சமூகத்தவர் முஸ்லிம்களை ஒரு மதிப்பீடு செய்து வைத்துள்ளீர்களோ அதே மாதிரி முஸ்லிம்களும் தமிழ் சமூகத்தவரை ஒரு மதிப்பீடு செய்துள்ளார்கள் என்பதும் நீங்கள் அறியாத ஒன்றல்ல. நீங்கள் குறிப்பிட்ட போல் மேற்கு உலகில் உள்ளவர்கள் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தவரும் சார்த்த வாழமுடியாதவர்கள் என்கின்ற உங்கள் மேற்கு உலக சிந்தனையினை (அதாவது நீங்கள் குடி பெயர்ந்து போனததன் பின்னர் உங்களில் தொற்றிக்கொண்டுள்ள வெள்ளக்காரன் புத்தி) யினை இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது நீங்கள் பிரயோகிக்க முற்படுவதனையும் முற்றாக எதிர்கின்றோம். அதில் நீங்கள் வெள்ளக்காரனும் இல்லை. யாழ்பானத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இன்று மேற்குலகில் இல்லை. அதே இலங்கையில் நொத்தலிக்கருவாடும்- பனம் ஒடியல் கூலும். கீரி மீன் பெரியலும் சாப்பிட்டு தங்களது சாதாரண வாழ்வை தொடர்கின்ற சமூகம்தான் அம் முஸ்லிம்கள். மறுபுறத்தே தமிழர்கள் என்றால் முஸ்லிம்களுக்கு அதிகாரங்களையும் வாழ்வாதாரத்தையும் வழங்கக்கூடிய ஆதிக்க சமுதாயம் என்கின்ற வேண்டாத சிந்தனையில் இருந்து விடுபட்டு நானும் நீயும் மனிதன் அதில் தழினும் முஸ்லிமும் சிங்களவனும் இலங்கையில் வாழ்கின்ற சமூகத்தவர் இதில் யாரும் யாருக்கும் அடிபனியவேண்டிய நிலையும் இல்லை யாரும் யாருக்கும அதிகாரங்களை கொடுக்கவேண்டிய நிலையிலும் இல்லை என்று நினைத்து செயற்பட்டால் சமூக உயர்வினை நோக்கி பயனிக்கலாம். உங்கள் எங்கள் சிந்தனை சமூகத்தின் அழிவுகளுக்கு பாதை அமைப்பதாக இருக்ககூடாது என்பதும் இதன் நோக்கமும் கூட. நன்றி

முஸ்லிம்கள் சிலர் செய்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தையும் மறக்க முடியாது. அதை மற்ற முஸ்லிம்கள் தட்டிக் கேட்காதையும் மறக்க முடியாது.

அஷ்ரப் உட்பட பல முஸ்லிம் தலைவர்கள், போரை மையமாக வைத்து, தொப்பி பிரட்டி, திரை மறைவில் தமிழர்களை காட்டிக்கொடுத்து அழித்தவர்கள் தான். மத வெறியர்களாகவும் இவர்கள் தமிழின அழிப்புக்கு துணை போனதையும் மறக்க முடியாது.

கிழக்கில் தமிழர்களின் சொத்துக்கள் பலவற்றை ஆக்கிரமித்து கொள்ளையடித்தவர்கள் முஸ்லிம்கள். சிங்கள தமிழின விரோத பாதுகாப்பு படையினருடன் இணைந்து, சிங்கள தமிழின விரோத பாதுகாப்பு படையினரே முகம் சுளிக்கும் அளவுக்கு தமிழ் மக்களை சோதனை என்ற பெயரில் கொடுமைகள், சித்திரவதைகள் பல செய்தவர்கள் பாதுக்காப்புப் படை உடையணிந்து சிங்களம் பேசிய முஸ்லிம்கள்.

பல நூற்றுக் கணக்கான ஆதாரங்கள் உரிய நேரத்தில், தேவையிருந்தால் வெளிவரும்.

உதாரணமாக, காரைதீவு அம்மன் கோவில் மூலஸ்தான சிலைகளை உடைத்து கோவில் கிணத்துக்குள் போட்டதோடு, இறைச்சி தசைகளையும் எலும்புகளையும் மூலஸ்தானத்துக்குள்ளும் கோவில் கிணத்துக்குளும் போட்டு மகிழ்ந்தவர்கள் தான் முஸ்லிம்கள்.

வடக்கில் சந்தர்ப்பவாத காட்டிக் கொடுப்பு, சண்டித்தனம், மதவெறி, சமூகச் சீரழிவு, வீராப்பு பேசுதல், ஆக்கிரமிப்பு, சொத்துக் கொள்ளை போன்றவை உச்சம் பெற்ற போதுதான் வடபகுதி தலைமை அவர்களை வெளியேற பணித்தது.

இதன் பின்னர் கிழக்கில் கருணா குழுவினரின் முடிவின்படி பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர் தான் முஸ்லிம் அயோக்கியர்கள் ஓரளவு அடங்கியிருந்தனர்.

இவையிரண்டும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிராந்திய தலைமைகளால் எடுக்கப்பட்ட முடிவுகளே.

ஆனால் வடக்கிலும் சில முஸ்லிம் அயோக்கியர்களை ஆயுத பலத்தால் அடக்கியிருக்கலாம் என்ற கடும் விமர்சனம் வட பிராந்திய தலைமைக்கு எதிராக ஏனைய தலைமைகளால் முன்வைக்கப்பட்ட போது, முஸ்லிம் அயோக்கியர்களுக்கு ஆதரவாக பள்ளிவாசல்கள் தலையிட்டு சகல தமிழருக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோதே, கடுமையான முடிவெடுத்ததாக வட பிராந்திய தலைமை தமது செயலை நியாயப்படுத்தியதாக அறியமுடிந்தது.

எது எப்படியெனினும் அப்பாவிகள் பாதிக்கப்பட்டதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது இரு பக்க தலைமைகளின் பொறுப்பாகும்.

முஸ்லீம்களை உலகம் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய காலப் பகுதியிலும் தமிழ் மக்கள் அவர்களோடு உறவாடி வாழவே விரும்புகின்றனர்.

கடந்த கால தவறுகளுக்கு தமிழ் மக்கள் மட்டும் பொறுப்பல்ல. முஸ்லீம்கள் மத்தியில் இருந்த ஜிகாத் மற்றும் மத வெறிக் கும்பல்கள்.. சிங்கள ஆட்சியாளர்களிடம் சலுகைக்காக தமிழ் மக்களை காட்டிக் கொடுத்தோர்.. சிங்கள படைகளிற்கு கூலிகளாக செயற்படுவோர் என தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளை முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் கடந்த போராட்ட காலத்தில் கைக்கொண்டே வந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் சந்தித்த துன்பங்களுக்கு பெறுப்பேற்க வேண்டும். தம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்த முஸ்லீம் குழுக்களால் வகை தொகையற்ற உயிரிழப்புக்களை சொத்திழப்புக்களை நில இழப்புக்களை குறிப்பாக தென் தமிழீழ மக்கள் சந்தித்து நின்றுள்ளனர். அதுமட்டுமன்றி வடக்கு மன்னாரில் முஸ்லீம் ஜிகாத் மற்றும் காடைக்கும்பல்களின் சிறீலங்கா படைகளுடன் இணைந்தும் தனித்துமான செயற்பட்டால் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களும் உள்ளனர்.

எனவே பாதிப்பு என்று வருகின்ற போது 1990 முஸ்லீம்களின் இடம்பெயர்வு என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகவே இருந்தது. முஸ்லீம்கள் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே இடம்பெயர்விற்கு முன்னர் கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்டு இன்னும் வீடு திரும்ப முடியாமல் இடம்பெயர்ந்த முகாம்களிலும் நிரந்தரமாக வேறு இடங்களுக்கும் ஓடிவிட்ட தமிழ் மக்கள் குறித்தும் முஸ்லீம்கள் உட்பட அனைவரும் சிந்திக்க வேண்டும்.

முஸ்லீம்கள் மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களை துன்புறுத்தி தாம் வாழலாம் என்று நினைக்கக் கூடாது. சிங்களவர்களோடும் இவர்கள் மோதிப்பார்த்தனர். இறுதியில் என்ன நடந்தது..??!

எமது போராட்டம் இழப்புக்களை சந்தித்ததில் முஸ்லீம்களில் குறிப்பிட்டவர்களின் பங்களிப்பு இருக்கிறது. இவற்றை எல்லாம் ஆழ்மனதில் இருந்து அகற்ற முடியாது. சும்மா வெளிப்பூச்சுக்கு வரவேற்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மனதுக்குள் கறுவும் நிலையை வளர்த்துக் கொண்டிருந்தால் சமூகங்கள் ஐக்கியமாக வாழ்வதாக சொல்ல முடியுமே அன்றி உண்மையில் செய்ய முடியாது.

மனதளவில் முஸ்லீம்கள் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதியை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் அதேவேளை அதன் பிரதிபலனாக தாம் அனுபவிக்க நேர்த்த துன்பத்தையும் மறக்க வேண்டும். அப்படிச் செய்யின் தமிழ் மக்களும் அதனைச் செய்வர். இன்றேல் இரு சமூகங்களும் மனதளவில் ஒருங்கிணைவது என்பது கடினமானதாகவே இருக்கும். இதுதான் யதார்த்த நிலை.

ஓய்வுபெற்ற வாத்தியார் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று சொல்லலாம். ஆனால் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட முஸ்லீமிடம் இருந்து வந்த இந்தச் செய்தியைப் போல் ஒன்றை பெற்றுப் போடுங்கள். அப்போதுதான் உண்மையின் தரிசனம் வெளிப்படும்.

சமூகங்கள் வெறும் போலி வார்த்தைகளால் இணங்க வைக்கப்படுவது அவர்களை கூறுபோட நினைக்கும் சிங்களவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமே சந்தர்ப்பங்களை இலாபத்தை அதிகம் அளிக்கும். சமூகங்கள் இரண்டும் மனதளவில் எந்தக் கசப்பும் இன்றி ஒருங்கிணைய வேண்டின் இன்னும் பயணிக்க வேண்டிய விளங்க வேண்டிய புரிய வைக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அதேபோல் மன்னிக்கும் பங்குவமும் வளர்க்கப்பட வேண்டும். சமூகங்களின் ஒருங்கிணைவு சந்தேகங்களுக்கு அப்பால் நிதர்சனமாக நீண்டதாக அமைய வேண்டும். அதுதான் தேவை. கடந்த கால பிற சமூகத்தினரின் அனுபவங்களை மறைத்து ஒன்றை முக்கியப்படுத்தி இதனை சாதிக்க முடியாது என்பதையும் முஸ்லீம்களும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் எமது நோக்கு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் சிலர் செய்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தையும் மறக்க முடியாது. அதை மற்ற முஸ்லிம்கள் தட்டிக் கேட்காதையும் மறக்க முடியாது.

அஷ்ரப் உட்பட பல முஸ்லிம் தலைவர்கள், போரை மையமாக வைத்து, தொப்பி பிரட்டி, திரை மறைவில் தமிழர்களை காட்டிக்கொடுத்து அழித்தவர்கள் தான். மத வெறியர்களாகவும் இவர்கள் தமிழின அழிப்புக்கு துணை போனதையும் மறக்க முடியாது.

கிழக்கில் தமிழர்களின் சொத்துக்கள் பலவற்றை ஆக்கிரமித்து கொள்ளையடித்தவர்கள் முஸ்லிம்கள். சிங்கள தமிழின விரோத பாதுகாப்பு படையினருடன் இணைந்து, சிங்கள தமிழின விரோத பாதுகாப்பு படையினரே முகம் சுளிக்கும் அளவுக்கு தமிழ் மக்களை சோதனை என்ற பெயரில் கொடுமைகள், சித்திரவதைகள் பல செய்தவர்கள் பாதுக்காப்புப் படை உடையணிந்து சிங்களம் பேசிய முஸ்லிம்கள்.

பல நூற்றுக் கணக்கான ஆதாரங்கள் உரிய நேரத்தில், தேவையிருந்தால் வெளிவரும்.

உதாரணமாக, காரைதீவு அம்மன் கோவில் மூலஸ்தான சிலைகளை உடைத்து கோவில் கிணத்துக்குள் போட்டதோடு, இறைச்சி தசைகளையும் எலும்புகளையும் மூலஸ்தானத்துக்குள்ளும் கோவில் கிணத்துக்குளும் போட்டு மகிழ்ந்தவர்கள் தான் முஸ்லிம்கள்.

வடக்கில் சந்தர்ப்பவாத காட்டிக் கொடுப்பு, சண்டித்தனம், மதவெறி, சமூகச் சீரழிவு, வீராப்பு பேசுதல், ஆக்கிரமிப்பு, சொத்துக் கொள்ளை போன்றவை உச்சம் பெற்ற போதுதான் வடபகுதி தலைமை அவர்களை வெளியேற பணித்தது.

இதன் பின்னர் கிழக்கில் கருணா குழுவினரின் முடிவின்படி பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர் தான் முஸ்லிம் அயோக்கியர்கள் ஓரளவு அடங்கியிருந்தனர்.

இவையிரண்டும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிராந்திய தலைமைகளால் எடுக்கப்பட்ட முடிவுகளே.

ஆனால் வடக்கிலும் சில முஸ்லிம் அயோக்கியர்களை ஆயுத பலத்தால் அடக்கியிருக்கலாம் என்ற கடும் விமர்சனம் வட பிராந்திய தலைமைக்கு எதிராக ஏனைய தலைமைகளால் முன்வைக்கப்பட்ட போது, முஸ்லிம் அயோக்கியர்களுக்கு ஆதரவாக பள்ளிவாசல்கள் தலையிட்டு சகல தமிழருக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோதே, கடுமையான முடிவெடுத்ததாக வட பிராந்திய தலைமை தமது செயலை நியாயப்படுத்தியதாக அறியமுடிந்தது.

எது எப்படியெனினும் அப்பாவிகள் பாதிக்கப்பட்டதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது இரு பக்க தலைமைகளின் பொறுப்பாகும்.

இதுதான் நடந்த உண்மை. ஆனால் உலகத்துக்கு காட்டப்பட்ட உண்மை என்னவோ புலிகளை மக்கள் விரோத பயங்கரவாதிகளாக. இதனை செய்தவர்களில் அஸ்ரப்பின் முஸ்லீம் காங்கிரஸ் முதலிடம் வகித்தது. முஸ்லீம் நாடுகளின் தூதரங்களுக்குச் சென்று உண்மைப்புப் புறம்பான செய்திகளை வழங்கி புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தனர். இதனை சிங்களம் செய்யவிட்டு வேடிக்கை பார்த்து தான் செய்ய வேண்டிய பணியில் பாதியை இவர்களே நிறைவு செய்கிறார்கள் என்று திருப்தி கொண்டிருந்தது.

இறுதியில் அஸ்ரப்பின் தனி அலகு கோரிக்கை எழுந்த போதுதான் சிங்களம் விழித்துக் கொண்டது. கிழக்கில் சிங்கள ஆதிக்கம் பறிபோகப் போவதை உணரத்தலைப்பட்டு அஸ்ரப்பை போட்டுத் தள்ளியது. இதனை எல்லாம் இலகுவாக மறக்க கூடியவர்களுக்கு.. யாழ்ப்பாண இடம்பெயர்வை மட்டும் துரித்திக் காட்டிக் கொண்டிருப்பதும்.. அதனை சில தமிழ் மக்கள் விரோத ஒட்டுக்குழு கும்பல்கள் துரித்தி புலிவிரோதம் வளர்ப்பதுமே காலம் காலமாக நடந்து வருகிறது.

இதில் இருந்து முஸ்லீம்கள் வெளிவர வேண்டும். செய்வார்களா. தாம் செய்த தவறுகளையும் உணர்ந்து அவர்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு தமிழ் மக்களின் வாழ்விடங்களில் குறிப்பாக கிழக்கில் மற்றும் மன்னாரில் அவர்கள் பாதுகாப்பாக உறவாடி வாழ உதவுவார்களா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு சமூகமும் செய்யாத தவறினையா முஸ்லிம்கள் செய்துள்ளார்கள்? ஏன் மற்ற சமூகத்தவரை எடுத்து ஒப்பீடு செய்வான். ஆண்டாண்டு காலமாக இயக்கங்களில் இருந்த கருணா, பிள்ளையான், டக்ளஸ், ஆனந்த சங்கரி, சித்தாத்தன் ஏன் இன்று சிங்கள இராணுவத்துடன் கூடிக்குலாவும் குமரன்பத்மநாதன் செய்யாத காட்டிக்கொடுப்பினையும், இன அழிப்பு நடவடிக்கைக்கு துணைபோன நிகழ்வுகளையுமா முஸ்லிம் சமூகம் செய்தது? ஒரு இயக்கத்தை அழித்து ஒழிப்பதற்கு துணைபோனது முஸ்லிம் சமூகம் மாத்திரம் தானோ? ஏன் ஒரு சமூகத்தினரையே பகைக்க துணிந்த நீங்கள் உங்கள் சமூகத்தில் அதிலும் ஒரே கொள்கையிலும் அதே பாதையிலும் நடைபயின்ற பயில்வான்களை கண்டும் காணாதுபோல் இருந்தது ஏனோ?. ஒன்றில் அவர்கள் உங்கள் சொந்த சமூகமா? அல்லது ஆயுதபலத்தோடு இருப்பதனால் இவர்களையும் இவர்கள் பின்னால் போகும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களையும் தட்டிக்கேட்ட முடியாமலும், யாழில் இருந்த முஸ்லிம்களை வெளியேற்றியது போன்று நீங்கள் குறிப்பிட்ட அதே காரணத்தை வைத்து இவர்களையும் வெளியேற்றாமல் நாம் தமிழர் என்கின்ற பினைப்பின் காரணத்தினால் உனக்கு அல்ல உபதேசம் ஊருக்குத்தான் என்கின்ற மாதிரி முஸ்லிம் சமூகத்துக்கு உங்களால் அநீதி இழைக்க முடியுமானால் அதற்கு நீங்கள் குறிப்பிடும் போலிக்காரணம் அதுவேயாக இருக்குமானால், கருணாவின் கிராண்குளமும், பிள்ளையானின் மட்டக்களப்பும், டக்ளசின் மண்டைதீவும், ஆனந்த சங்கரியின் வன்னியும். சித்தாத்தனின் வவுனியாவும், கேபியின் யாழ்குடாவும் பாழாக்கப்பட்டிருக்கவேண்டுமே முஸ்லிம்களின் நிலம் போல். முஸ்லிம்களின் வாழ்வாதாரம் போல். அதே யாழ் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை அழித்து ஆனந்தப்பட்ட நீங்கள் உங்கள் கும்பல்களில் வாழ்வாதாரத்தை அழித்து மீண்டும் ஒரு சந்தோசம் அடைந்திருக்கவேண்டும? ஆனால் இவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகவே இவர்கள் எது செய்தாலும் நம்ம பிள்ளைகள். ஆனால் போலியான காரத்தை காட்டி முஸ்லிம் சமூகத்துக்கு செய்த அநீதி இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் வரலாற்றில் தமிழர்களால் புரியப்பட்ட அயோக்கியத்தனம் என்பதை மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.யாழ் முஸ்லிம்களை வெளியேற்றி இன்று உங்கள் நோக்கத்தை அடைந்தும் விட்டீர்களா? இல்லை உங்கள் குறிக்கோளினை அடைந்துதான் விட்டீர்களா? எல்லாமே முடிந்த கதையாக போய்வி்ட்டது எத்தனை எத்தனை அழிவுகளுக்கு மத்தியில். இருந்தும் உண்மையான உள்நோக்கமும் இணைந்த வாழ்வே வெற்றிக்கு வழி என்பதை கண்டுகொண்டால் முயற்சிகள் பலன் கொடுக்கும். முயற்சிப்போமாக

முஸ்லீம்களை எமது சகோதர்களாக ஏற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை அகற்றாமல் அதைச் செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கு எவ்வளவு பிரச்சனைகளோ அதனை விட அதிகமாகவே தமிழ் மக்கள் அவர்களிடம் இருந்து சந்தித்திருக்கின்றனர். இதுதான் அடிப்படை. தமிழ் மக்கள் மட்டும் முஸ்லீம்களை மன்னிக்க வேண்டும் என்றில்லை. யாழ்ப்பாண இடம்பெயர்வை முஸ்லீம்கள் தூக்கிப் பிடித்தால்.. காத்தான்குடி படுகொலைகளை தூக்கிப் பிடித்தால்.. தமிழ் மக்களும் பதிலுக்கு கிழக்கு இடம்பெயர்வுகள் மன்னார் இடம்பெயர்வுகள் கிழக்குப் படுகொலைகள் வடக்கு காட்டிக் கொடுப்புக்கள் கிழக்கு காட்டிக் கொடுப்புக்கள் என்று பலவற்றை தூக்கிப் பிடிக்கலாம். இவற்றை இலகுவாக கைவிட முஸ்லீம்கள் தயார் இல்லை என்றால் தமிழ் மக்கள் எப்படி தயாராவார்கள். தவறுகளுக்கு இரு சமூகமுமே பொறுப்பு என்பதை உணர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி புலிகளை குற்றவாளி முஸ்லீம் காங்கிரஸை குற்றவாளியாக்கி கொண்டிருப்பதால் பயனில்லை. எல்லா குற்றச்சுமத்தல்களையும் கைவிட வேண்டும். இப்படியான ஒரு பக்கச் சார்பான கட்டுரைகளை வரைவதை நிறுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு உண்மை நிலையை எடுத்து விளக்கி அவர்களை தமிழ் மக்களோடு ஐக்கியப்படுத்தும் அதேவேளை தமிழ் மக்களையும் முஸ்லீம்களை மன்னிக்க கேட்க வேண்டும்.

அதைவிடுத்து கருணா டக்கிளஸை காட்டி அந்தத் துரோகிகள் போலத்தான் இவர்களும் என்றால் அதனை தமிழ் மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை.

கருணாவும் சரி டக்கிளஸும் சரி எவரும் சரி காட்டிக் கொடுப்புக்காக விலகி வைக்கப்பட்டவர்கள் தான். அதுதானே யதார்த்தம். அப்படி இருக்க காட்டிக் கொடுப்பில்.. தமிழ் மக்களை விரட்டி அடிப்பதில்.. கட்டுப்பாடின்றி முஸ்லீம்கள் செயற்பட்ட பொழுதுகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்களுக்கு இப்போ நியாயம் கற்பிக்க முடியாது.

சர்வதேசம் ஏற்படுத்தி போராட்டத்தின் அவல முடிவு என்பதைக் காரணம் காட்டி அது முஸ்லீம்களின் சாபம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால்.. தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ரணங்களை ஆற்ற முடியாது. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

நல்ல விசயம். இதே போல அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்களில் இருந்து (சாய்ந்தமருதுஇ நிந்தவூர்இ வீரமுனை...........) முஸ்லிம்களால் துரத்தியட்டிக்கப்பட்ட தமிழர்களையும் மீண்டும் குடியேற்ற வேண்டும். திருகோணமலைஇ புத்தளம்இ மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிப்பார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தாம் செய்த நடவடிக்கை பிழை என மன்னிப்பு கேட்டு அதன் பின் யாழ்பாணத்தில் பல முஸ்லிம்கள் மீள குடியேறியுள்ளார்கள். மிகுதியானோர் அரச கூலிப்படைகளின் இராணுவ ஆக்கிரமிப்பால் மீள குடியேற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

கிழக்கில் பல இடங்களில் இருந்து முஸ்லிம்களால் விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள் இன்றும் அகதிகளாக வாழ்கிறார்கள்.அத்தோடு முஸ்லிம்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பல ஆயிரத்தை தாண்டும்.இவர்களுக்காக எந்த முஸ்லிம் தலைவர் மன்னிப்பு கேட்டார்(கள்).

சிங்கள இனவாதிகளாள் இனவாதம் ஊட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் அல்லது பிழையாக வழி நடாத்தப்பட்டவர்களே தமிழ் மக்களை தாக்கினார்கள், கொன்றார்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் ,சொத்துக்களை கொள்ளையிட்டார்கள், வாழ்வாங்கு வாழ்ந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்கு சிங்கள இனவாத கூலிப்படைகளும் பின்னணியில் இயங்கின.

முக்கியமாக 1983 இனசங்காரத்தால் சிங்கள இனவாத குண்டர்களாள் கொலை செய்யப்பட்ட , கை கால்கள் வெட்டப்பட்ட, சொத்துக்களை இழந்த தமிழர்கள் எத்தனை எத்தனை? இதற்கு சிங்கள மக்களின் சார்பில் யாராவது ம்ன்னிப்பு கேட்டர்களா?

ஆக தமிழர்கள் இருக்கும் இனங்களிடம் அடியும் வாங்க வேண்டும் அத்தோடு அடிப்பவர்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். இதை சொல்பவர்களும் தமிழர்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மட்டக்களப்பில் இருக்கும் போது கத்தி,மிளகாய்தூள் போன்றவற்றை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இரவில் படுப்பது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.