Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் நடக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்றைய நாள் (வியாழக்கிழமை, மே 06, 2010) வீரகேசரியின் இரண்டாவது பக்கத்தில் பிரசுரமான ஒரு செய்தி.

Suraa_vijay.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நின்ற போதும் இப்படியான கூத்துக்களை ஒட்டுக்குழுக்கள் அரங்கேற்றி யாழ்ப்பாணம் இயல்பு நிலையில் திழைப்பதாகக் காட்ட முற்பட்டனர்.

இப்போ அதையே சிங்களத்திற்காகச் செய்கின்றனர். இது சிங்கள இராணுவத்தின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கிறது என்பதை காட்டுவதற்காக செயலும் செய்தியும். இவற்றை வெளிநாடுகளுக்கு காட்டி சிறீலங்காவில் தனி நாட்டுக்கு அவசியமே இல்லை. எல்லா மக்களுக்கு ஐக்கியமாக ஒண்றுக்கு இருக்கிறார்கள் என்று காட்டத்தான். அப்படிக் காட்டினால் கூலிகளுக்கும் கூலி கிடைக்கும். சிங்களத்துக்கும் வரி சலுகைகள் கிடைக்கும். அதுக்குத்தான் படிச்ச மந்திரி பீரிஸ் வந்திருக்கிறார்.

இந்திய விசா அலுவலக ஊழியர்களின் நெறிப்படுத்தலாக இருக்கலாம். போலித் திராவிடத்தின் விளைவுகளாகவும் இருக்கலாம். வீரகேசரி போன்ற தமிழ் பத்திரிகைகள், தமிழ் தொலைக்காட்சிகள், FM கள் விதைத்துவரும் சினிமா மோகத்தின் விளைவுகளாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்க திமிரெடுத்த நாய்கள் இப்பிடியெல்லாம் செயஇயினம் நாங்களஇ தமிழீழம் பெற்றுக்கொடுக்கவேண்டுமாம் தேவை கருதி இன்னமொரு இடுகையின் கருத்துப்பதிவு இதற்கும் பொருந்துறபடியால் அதை வெட்டியொட்டகிறேன்.

ஓம் ஓம் நாங்கள் தெருக்களில் நிண்டு கத்திக்குரல் எடுத்து வேலைவெட்டியில்லாது போராட்டங்கள் நடாத்துகிறம் அல்லது போராட்டத்துக்கு கக்கூஸ் கழுவியும் கோப்பை களுவியும் காசுசேர்த்துக்கொடுக்கிறம் அதைவிட புலத்தில் உறவுகட்கு அந்தரமாவத்துக்கு உதவிசெய்கிறம் இத்தனையும் செய்துபோட்டு புலம்பெயர்தேசங்களில் இருக்கும் காட்டிக்கொடுப்பாளர்களால் சிங்களவனுக்கு எமது விபரம் அனுப்பப்பட்டு, தமிழீழமெண்டால் என்ன? அது எங்கிருக்கின்றது உங்கட அப்பன் ஆத்தை பாட்டன் பூட்டன் எங்க பிறந்தவையள் எண்டு எங்கட சந்ததிக்கக் காட்டவேணுமாகிலிருந்தால் அவர்களைப் புலத்திற்கு கூட்டிச்சென்று இதுதான் உனக்குச்சொந்தமான மண் இதுக்குத்தான் பல்லாயிரம் தமிழ் மறவர்கள் போராடி இப்மண்ணிலேயே விதையாகினார்கள் என் காலத்திற்குப்பிறகாவது தமிழீழம் கிடைக்குமாகவிருந்தால் நீ இங்கேதான் வரவேண்டும் சிலவேளை அவுக்குமுன்பே நான் மண்டையப் போட்டுட்டனெண்டால் தொடர்ந்தும் இந்தமண்ணைமீடபதற்காய் போராடவேண்டும் எண்டுசொல்ல வழியற்று நிர்க்கதியாக நிக்கும்போது. தமிழீழப் பிரதேசத்தில் சிங்களவனால் கொண்டுவரப்பட்ட இன்னுமொரு இனமுரண்பாட்டுக்கான தேர்தலில், எமதினத்தை அழிப்பதற்குக் கொள்ளிக்கட்டை எடுத்துக்கொடுத்த இந்தியாவுக்கு முதுகுதேய்த்து விடும் சம்பந்தன் மாவை சுரேஸ் (முன்னைநாள் மண்டையன்குழுத்தலைவர்) ஆகியோர் முகத்தில் கரி அள்ளிப்பூசுங்கோ எண்டால், நீங்கள் எல்லாம் ஓடிப்போனவையள் உதப்பத்தி ஒண்டும் கதைக்கக்கூடாது எண்டு எங்களைப்பாத்து எள்ளிநகையாடிப்போட்டு, இப்போ இந்தியாக்காரன் தனது உளவுத்துறையின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்திருக்கிறான் அதுக்கு மண்டையன் குழுத்தலைவரும் மாவையும் போயிருக்கினம் அதைப்பத்தி இங்கு ஒருவரும் கதைப்பாரில்லை இதுக்குப்பிறகு புலம்பெயர் தமிழர்கள் புடுங்குங்கோ எண்டால் யாரையாவது கூப்பிட்டால் செருப்பில பீதோய்ச்சு அடிப்பம் எண்டு எனது நண்பர் கூறுகிறார் இதுக்கு என்னபதில நான் சொல்லுறது நிரோத் டேவிட்

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு அவர்களே.. யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா மக்களும் செய்யவில்லை. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது சில தீய சக்திகளின் தூண்டுதலின் பெயரில் சில இளைஞர்கள் செய்கின்றனர். ஆனால் அவப்பெயர் மக்கள் எல்லோரையும் போய் சேர்கிறது.

இந்தத் தகவலில் கூட அந்த மக்களின் விருப்புக்குப் புறம்பாகவே இது நடத்தப்பட்டுள்ளமை பிரதிபலிக்கப்பட்டுள்ள நிலையில்... மக்களை திட்டுவது சரியல்ல. அவர்கள் ஏலவே பல வேதனைகளை சோதனைகளை சந்தித்து தேற்ற யாரும் இன்றி எதிரியின் பிடியில் சிக்கி சின்னாபின்னப்படும் மக்களாக உள்ளனர்.

அவர்களுக்கு ஆறுதலும்.. ஆளுமையும் அளிக்க வேண்டியவர்களே அவர்களைத் திட்டுவது அறிவான செயல் அல்ல. அது அந்த மக்களை அந்நியப்படுத்தும் செயலாக எதிரிக்கு உதவி நிற்கும் செயலாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.

எழுஞாயிறு அவர்களே.. யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா மக்களும் செய்யவில்லை. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது சில தீய சக்திகளின் தூண்டுதலின் பெயரில் சில இளைஞர்கள் செய்கின்றனர். ஆனால் அவப்பெயர் மக்கள் எல்லோரையும் போய் சேர்கிறது.

இந்தத் தகவலில் கூட அந்த மக்களின் விருப்புக்குப் புறம்பாகவே இது நடத்தப்பட்டுள்ளமை பிரதிபலிக்கப்பட்டுள்ள நிலையில்... மக்களை திட்டுவது சரியல்ல. அவர்கள் ஏலவே பல வேதனைகளை சோதனைகளை சந்தித்து தேற்ற யாரும் இன்றி எதிரியின் பிடியில் சிக்கி சின்னாபின்னப்படும் மக்களாக உள்ளனர்.

அவர்களுக்கு ஆறுதலும்.. ஆளுமையும் அளிக்க வேண்டியவர்களே அவர்களைத் திட்டுவது அறிவான செயல் அல்ல. அது அந்த மக்களை அந்நியப்படுத்தும் செயலாக எதிரிக்கு உதவி நிற்கும் செயலாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.

நீங்கள் சொல்வதுதான் உண்மை...

நிறையவே வேண்டாம்... புலம்பெயந்த இங்கிலாந்து வாழ் இளைஞர்களில் ஒரு 400 பேர் அடிதடிகளிலும் மோசடிகளிலும் இயங்கிய போது ஒட்டு மொத்த தமிழர்களும் அப்படித்தான் எண்று ஊடகங்கள் சொன்னது... ஆனால் அது இங்கிலாந்து வாழ் தமிழர்களில் ஒரு 2% கூட கிடையாது...

இலங்கை தூதரகங்களின் ஆதரவுடன் பவுடர் தீபன் உட்பட பலர் அந்த இளைஞர்களை தூண்டிவிட இருந்தார்கள் எனும் உண்மை எவ்வளவு பேருக்கு தெரியும்...?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இலண்டனில் தினமும் மாலை 6 மணிக்கு முன்பு ஐபிசி தமிழ் ஒலித்த அலைவரிசையைக் கேட்டுப் பாருங்கோ.யாழ்ப்பாணத்தில் இருந்து ருசாந்தன் என்னும் ஊடகவியலாளர் சொல்வதைப் பாரத்தால் யாழ்ப்பாணத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கேட்பவர்களுக்குத் தோன்றுகிறது.அந்தக் குரலை முன்பு வேறு பெயரில் கேட்ட மாதிரியும் இருக்கிறது.{பிசியா இப்படிக் கூறுகிறது என்று பார்த்தால் நேற்றிலிருந்து அதற்குப் புதுப் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.ஐபிசி ஒலித்த அதே வரிசையில் ஐபிசியில் ஒலித்த குரல்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கேட்டு விட்டு உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

ஒவ்வொருத்தரும் எப்படி இருக்கவேணும், வாழவேணும் என்று மற்ற ஆக்கள் உத்தரவு போட ஏலாது. புலிகள் இருந்த காலத்தில நான் யாழ்ப்பாணத்தில இருந்தனான். அந்தக்காலத்திலேயே சனம் ஜெனரேற்றர் போட்டு பிரபுதேவா காதலன் என்று விழுந்தடிச்சு ஓடித்திரிஞ்சதை நான் பார்த்து இருக்கிறன். சில விசயங்களை இளையவர்கள் சும்மா முசுப்பாத்திக்கு செய்யலாம். நாங்கள் வெளிநாடுகளில சுதந்திரமாய் இருந்து அம்ச அடக்கமாய் சகலதையும் அனுபவிச்சுக்கொண்டு தாயகத்தில இரகசியமாய் அனுபவிக்கத்தெரியாத இளசுகளை நொந்துகொள்ளுறது நல்லது இல்லை. இந்தப்பதிவை பார்க்க அண்மையில நான் வாசிச்சு ஓர் நகைச்சுவைதான் நினைவில வருகிது. விடயங்கள் வேறுபாடானதாக இருந்தாலும் உள்ளார்ந்தம் ஒன்றுதான்:

சேட்டைக்காரன்: ஏழாவது கேள்வி! உங்களுக்குப் பொது அறிவு சம்பந்தப்பட்ட செய்திகளிலே ஈடுபாடு உண்டா மிஸ்டர் சூடாமணி?

சூடாமணி: பொதுவா, எனக்கு அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே ஈடுபாடு கிடையாதுங்க! சினிமா மட்டும் தான் பார்க்கிறது வழக்கம்!

சேட்டைக்காரன்: ஹாஹா! சரி, இதோ உங்களுக்கான ஏழாவது கேள்வி!

இந்த நான்கு போலி சாமியார்களில், போலீஸுக்குத் தண்ணி காட்டத் தெரியாதவர் யார்?

A.சுவாமி வெட்டியானந்தா

B.சுவாமி கத்தியானந்தா

C.சுவாமி நித்தியானந்தா

D.சுவாமி பக்கியானந்தா

சூடாமணி: சி. சுவாமி நித்தியானந்தா!

சேட்டைக்காரன்: ஆர் யூ ஷ்யூர்? போலீஸுக்குத் தண்ணி காட்டத் தெரியாதவர்???

சூடாமணி: ஆமாங்க! சுவாமி நித்தியானந்தா தான்!

சேட்டைக்காரன்: உறுதியா சொல்லுறீங்களே! விடையை லாக் பண்ணிடலாமா?

சூடாமணி: அவரையே லாக் பண்ணியாச்சு! விடை தானே, பண்ணுங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கயும் யாழ் நகர் எப்பிடி இருக்குமெண்டு பாக்க அடிபுடியாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்தலின் போதுகூட எந்தவொரு அரசியல்வாதிக்கும் பால்குடம், காவடி எடுக்கவில்லை.

இப்ப "சுறா"வுக்குப் பால் ஊத்துறாங்க.

இனிப் "புறா" வரும் அதுக்கு சோழன் போடுவாங்க.

முகாமில கிடந்து சனம் சீரழியுது.

கேவலம் கெட்டதுகள் .குழந்தை குட்டியள் படுற கஸ்டத்தைப் பார்த்தாவது திருந்த வேணும்.

ஒருத்தரும் கோவிக்காதேங்கோ சும்மா பகிடிக்கு...

வாத்தியார்

...............

இப்படியான ஒரு சிறு கூட்டம் அங்க இருக்கத்தான் செய்யுது...

கிளிநொச்சி விழுந்தாப்பிறகு அதுக்கு வெற்றி கொண்டாட அந்தக் கூட்டம்தான் வேற்ரியுர்வலமும் செய்தது.

இதுக்கு எங்கிருந்து பணம் போகுதென்று பார்த்தால் தெரியும்.

இப்படியான சம்பவங்கள் அங்கிருக்கும் இளம் உள்ளங்களை திசைமாறிவிடும் ஆபத்தும் உள்ளது.

நல்லதுகளை விட கெட்டதுகள் வேகமாக பரவிவரும் காலம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்தலின் போதுகூட எந்தவொரு அரசியல்வாதிக்கும் பால்குடம், காவடி எடுக்கவில்லை.

இப்ப "சுறா"வுக்குப் பால் ஊத்துறாங்க.

இனிப் "புறா" வரும் அதுக்கு சோழன் போடுவாங்க.

முகாமில கிடந்து சனம் சீரழியுது.

கேவலம் கெட்டதுகள் .குழந்தை குட்டியள் படுற கஸ்டத்தைப் பார்த்தாவது திருந்த வேணும்.

ஒருத்தரும் கோவிக்காதேங்கோ சும்மா பகிடிக்கு...

வாத்தியார்

...............

இனி புறாவரும்............. அதற்கு சோழன் போடுவார்கள்!

இது எழுந்தமாத்திரமானதல்ல எதிர்காலத்தின் உண்மை தீர்கதரிசனம்தான். உணர்வுள்ளவர்கள் உள்ளுக்குள் புளுங்குவதை தவிர வேறுவழியில்லை அதிலும் அடக்க முடியாதவர்கள் உடனேயே தட்டி கேட்பார்கள் அவர்கள் சுட்டுபோடுவார்கள். ஈராக்கில் 5 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்ததோ எதிரியினதும் அவனது கூட்டாளிகளினதும் நிகழ்சி நிரல் அதுதான். ஆனால் அறிவற்ற ஆடுமாடுகள் எல்ல நாடுகளிலும் வாழ்கின்றன யாழ்களத்திலேயே இத்தனை உள்ளபோது ஒரு நகரத்தில் எத்தனையிருக்கும்? ஒரு சிந்தனைக்கு ஆவது யோசித்தூபாருங்குள் இங்கு யாழ்களத்தில் உள்ள சிலதுகள் யாழ்காணத்தில் இருந்தால் என்ன செய்துகொண்டு இருக்குங்கள் என்று? அவர்களுடைய சகோதரங்கள் அங்கு உள்ளன என்ற உண்மையை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஆக பாரளமன்றம்போனவர்களை அவர்களது செயற்பாடு போதாது என்று திட்டடிதீர்பது என்பதில் என்ன இருக்கன்றது. அவர்கள் செயல்வீரர்களாக இருந்தால் அவர்களையும் சுட்டுபோடுவார்கள் அல்லது அவர் எதிகளின் நிகழ்சி நிரலுக்கேற்ப புறா வரும்போது சோழனுடன் நிற்கவேண்டும்! மாறத மக்கள் கூட்டம் உள்ளபோது மாற்றம் என்பது மாற்ற முடியாதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் ராஜா தியட்டரில விசயின்ட சுறா படம் ஓடத் துடங்கேக தம்பி விசக்கு வாழ மரங்கள் நட்டு பால் அபிசேகம் செய்திருக்கினம் எங்கட ஆக்கள். நாங்கள் இருக்கிற நிலமையில சரியான அவசியமான காரியம் பாருங்கோ. பெடி பெட்டையள் விசய் என்டு சாகுதுகள். உயிரக் குடுப்பம் என்டு நிக்குதுகள். திருவிழாதான் அண்டைக்கு ராஜதியட்டர் பெரிய களகட்டிப்போய் இருந்துது பாருங்கோ. படத்தில ஈழத் தமிழரப் பற்றி கதைச்சவராம் விசய் என்டும் அவருக்கு நல்ல புகழ். அடகோதாரி என்னண்டால் அத தணிக்க செஞ்சு போட்டாங்களாம்.

ஆனால் ஆர் தணிக்க செஞ்சிருப்பினம் என்டுதான் எனக்கு குழப்பமாய் இருக்குது. மகிந்த தணிக்கை செய்யிறத விட கருணாநிதி செய்திருப்பார்போல கிடக்கது. மத்திய அரசு குறை நினைக்கும். சோனியா காந்தி குறை நினைப்பார் என்டு எத்தின கவலை அவருக்கு. அந்த விசித்திரத்தில அவயின்ட பாசத்தலைவன மீறாத ஆக்கள் பிறகென்ன கோதாரிக்கு ஈழத்தமிழர பற்றி படத்தில வசனம் பேசுறினம். அட செயலில ஏதாவது செய்ய முன் வாங்கோடா. இப்பிடிதானே கருணாநிதியும் சில கவிதையள முந்தி எழுதிப்போட்டு கடைசிய அத செயலில செய்ய வேண்டிய நேரத்தில கால வாறினவர். கஞ்சியாகினவர்.

இப்பிடி படம் காட்டுறது. வசனம் பேசுறது என்டால் விசக்கு நல்ல விருப்பம். விசய் மாதிரி எங்களுக்கும் நிறைய விசயள் இருக்கினம். அவயளும் நல்ல வசனம் பேசுவினம். வசனத்தக் கேட்டால் சும்மா அதிரும். தூள் பறக்கும். பிறகு ஆக்களும் பறந்திருவினம். தமிழ் மக்கள நல்ல பேக்காட்டுறாங்களப்பா. ஆனால் எல்லாம் போர் தந்த வலி... என்டுதான் துடங்குறினம். அப்பதானே கதை நல்ல எடுபடும். பிறகு மெல்ல அதிரடி, சரவெடி என்டு மாசாலாவை தருவினம். எங்கட சில இணையங்கள், சில எழுத்தாளர்கள். அரசியல்வாதியள் என்டு எல்லாருமே இப்பிடிதானே செய்யினம். பின்ன என்னத்ததான் அவயும் கதைக்கிறது பாருங்கோ.

நன்றி_ http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22455&cat=9

யாழ்ப்பாணத்தில் விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா திரைப்படம் வெளியான நாளன்று விஜயின் கட்டவுட்டிற்கு பாலாபிசேகம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் திரையரங்குகளைச் சுற்றி வாழைமரங்கள் நடப்பட்டு தோரணங்களும் கட்டப்பட்டிருந்ததாகவும் இளைஞர்கள் பலர் விஜய் படத்திற்கு முன்னால் விழுந்து வணங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களின் இந்த நடத்தை குறித்து விசனம் வெளியிட்ட கல்விச் சமூகம் கட்டுப்பாட்டுக்குப் பெயர் பெற்ற யாழ்ப்பாணச் சமூகம் தென்னிந்தியச் சினிமா மோகத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்து தமது அதிருப்தியையும் வெளியிட்டனர்.

இதனிடையே ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் திரையரங்குகளில் தற்போது இரவு நேரக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன.

SOURCE: http://www.eelamweb.com

இது ஒரு தொற்றுவியாதி யாழ்ப்பாணத்திற்கும் வந்துவிட்டது நான் நினைக்கிறேன் இந்திய தூதுவரில்லம் திறந்தபின் தொற்றிவிட்டதோ......?

இது ஒரு தொற்றுவியாதி யாழ்ப்பாணத்திற்கும் வந்துவிட்டது நான் நினைக்கிறேன் இந்திய தூதுவரில்லம் திறந்தபின் தொற்றிவிட்டதோ......?

அதெல்லாம் ஒன்றும் இல்லை .... ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.... அப்படித்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

vij6.jpg

vij13.jpg :D

  • கருத்துக்கள உறவுகள்

.

"சுறா" விலை யாரப்பா கதாநாயகி?

அதையும் சொன்னால் நாங்கள் தூக்கு காவடி எடுப்போம் எல்லோ......

.

.

"சுறா" விலை யாரப்பா கதாநாயகி?

அதையும் சொன்னால் நாங்கள் தூக்கு காவடி எடுப்போம் எல்லோ......

.

சிறி அண்ண அது என்ன தூக்குக் காவடி? :D அது மட்டும் தானா? அல்லது நாக்கில அலகு குத்தி, நெஞ்சில எலுமிச்சை குத்தி காவடி எடுப்பீங்களா? :lol:

Kavadi.jpg

Thaipusam-kavadi_0057.jpg

99233855_18dda46383.jpg

சரி சரி... இந்தாங்கோ, இவ தான் சுறா வின்ர கதாநாயகி திருக்கை... :D

0.jpg

Sura-Movie-Gallery-Online_tamilkey-200x300.jpg

  • கருத்துக்கள உறவுகள்

------

சரி சரி... இந்தாங்கோ, இவ தான் சுறா வின்ர கதாநாயகி திருக்கை... :lol:

0.jpg

ஆஆஆ........ திருக்கை நல்லாய் இருக்கு, குட்டி. :D

சுறாவையும், திருக்கையயும் வறை போட்டு சாப்பிட்டால்..... நல்லாயிருக்கும் போலை. ச்சீய்.......... இண்டைக்கு வெள்ளிக்கிழமையாய் போச்சுது. :D

ஆஆஆ........ திருக்கை நல்லாய் இருக்கு, குட்டி. :D

சுறாவையும், திருக்கையயும் வறை போட்டு சாப்பிட்டால்..... நல்லாயிருக்கும் போலை. ச்சீய்.......... இண்டைக்கு வெள்ளிக்கிழமையாய் போச்சுது. :D

வறை என்று வந்துவிட்டால், வியாழன் என்ன? வெள்ளி என்ன? :lol:

ச்சீ... கதையை மழுப்பதேயுங்கோ... எந்தக் காவடி எடுக்கிறதா உத்தேசம்?? :D

நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் புலிகள் இடக்கிட படங்களை தடைசெய்வார்கள் சில காலங்கள் தனிக்கை குழி அமைத்து சில தனிக்கை செய்து படம் ஓட விட்டார்கள் தடைசெய்த காலத்தில் களவாக படமும் வந்தது சனமும் களவாக ஓடியது தான் ஆனால் புலத்தில் உள்ள நமக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை ஈழத்தில் புதிய தலைமுறையை பொறுத்த மட்டில் சினிமா ஒரு வாழ்க்கை புலிகள் ஒரு செய்தி என்பது போல் மாறும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.