Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தில் களேபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 5:

முதல்நாள் லண்டனில் இருந்து புறப்பட்டு வந்த களைப்போடு அப்படியே திருவண்ணாமலை வரை வந்தது தவறு என்று தோன்றியது யாழ் உறுப்பினர் விஜிக்கு. :lol: கூடவே கவனித்துக் கொள்ள சின்னத்தம்பி குஷ்புவின் அண்ணன்மார் கணக்கில் சகோதரர்களும், அம்மாவும் வந்திருந்தாலும் டயட்டில் அடிக்கடி பட்டினி கிடந்ததன் விளைவு இப்போது மயக்கம் வருமளவுக்குப் போய்விட்டது. :D

கோயில் பிரகாரத்தின் தூண்களைப் பிடித்தபடியே சாமியைச் சுற்றி வந்து கும்பிட்டவர் அப்படியே ஒரு ஓரமாக குந்திவிட்டார். sick0001.gif

"அம்மா.. என்னால ஏலேல்லை..!"

"இந்த சோடாவைக் குடியம்மா..! களைப்பு போயிடும். நீ சொன்ன ஜோசியர் இங்க பக்கத்திலதான் இருக்கிறாராம். அவரைப் போய்ப் பார்த்திட்டு மெட்ராசுக்கு வெளிக்கிட வேண்டியதுதான்..!" அம்மாவின் பேச்சு தூரத்தில் வண்டு ரீங்காரமிட்டது போலக் கேட்டது வாடிப்போன விஜிக்கு..! :)

சோடாவைக் குடித்துவிட்டு சிறிது இளைப்பாறியவரை இளவட்டங்களின் ஜொள்ளுப் பார்வை நெளிய வைத்தது. ஜொள்ளுப் பேர்வழிகள் காதல் பார்வை வீசுவதும் அருகில் ராதாரவி கணக்கில் அண்ணன்களைக் கண்டு ஓட்டமெடுப்பதுமாக இருந்தார்கள். :D

சற்று இளைப்பாறி, இழந்த பிராணனை மீண்டும் பிடித்துக்கொண்டு எழுந்து நடந்தார்கள் வாடல்விஜி அண்ட் கோ. ஆட்டோ பிடித்து அந்தப் பிரபல ஜோசியர் வீடு வந்துசேர அதிகநேரம் பிடிக்கவில்லை.

வாசலில் வரவேற்புப் பலகை சொன்னது.

புரட்சிகர கிளி ஜோசியன்

திருவண்ணாமலை

"வாருங்கள் தோழரே" ஒல்லியாக ஜோல்னாப் பையுடன் திண்ணையில் குந்தியிருந்த உருவம் வரவேற்றது. :D

"நீங்கதான் கிளிஜோசியரா?" அகமலர்ந்து கேட்டார் வாடல். :)

"இதோ கிளி. அருகில் நான். அப்போ ஜோசியர் வேறு யாராக இருக்க முடியும் தோழரே?" எதிர்க்கேள்வி போட்டார் ஜோசியர். ashamed0003.gif

"ஆகா.. அதே இலக்கணத் தமிழ்..! பிளேனில வந்து போயும்போயும் ஒரு பிளேடு கிட்ட மாட்டிட்டனே..!" confused0020.gif மனதுக்குள் அங்கலாய்த்தவர் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தார்.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? இட்லி, தோசை? அல்லது குடிக்க ஏதாவது நீராகாரம்?" விருந்தோம்பல் செய்யத் தயாரானார் புரட்சி.

"ஆகா.. ஜோசியம் பார்க்க வாறவங்களையே இந்த மாதிரி உபசரிக்கிறீங்களே..! உண்மையிலயே நீங்கள் புரட்சிகரமான கிளி ஜோசியர்தான்..! இருந்தாலும் எனக்கு ஒண்டும் வேணாம்..! உங்கள் வரவேர்பிர்க்கு :D நன்றி..!" இட்லியை நினைத்து வீணி வடித்தாலும் டயட்டை நினைத்து மறுத்து வைத்தார் விஜி.

அடுத்த வினாடியில், புரட்சி கூண்டைத்திறக்கவும் கிளி வெளியே வந்தது.

"வாடிப்போன இந்தப் பொண்ணு வாட்டம் போகிறமாதிரி ஒரு சீட்டை எடுத்துக்கொடுக்கவும் தோழர் சின்னக்கிளி", வழக்கமான பல்லவியைப் பாடிவைத்தார் ஜோசியர்.scared.gif

நெல்லைக் கொத்திற அவசரத்தில் ஏதோ ஒரு சீட்டை எடுத்துப் போட்டுவிட்டு ஜோசியர் கொடுத்த மூன்று நெல்மணிகளையும் லவட்டிக்கொண்டு கூண்டுக்குள் போய் அடைபட்டுக்கொண்டது கிளி.

சீட்டை விரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதிசயமாக இமயமலை பாபாஜியின் சீட்டு வந்திருந்தது.

"எல்லாம் நல்லசேதிதான்மா..!" வேறுவழியில்லாமல் முழியைப் பிதுக்கியபடியே சொல்லிவைத்தார் ஜோசியர்.

"என்ன நல்ல சேதி?"

"உங்களுக்கு வரப்போறவர் வட இந்தியாவில் இருக்கிறார்..!"

"அப்ப நல்ல வெள்ளையா இருப்பார்தானே..!" கால்விரலால் கோலம் போட ஆரம்பித்தார் லண்டன் அம்மணி. :D

இந்தக் கூத்தைக் கவனித்துக்கொண்டிருந்த கிளி கலவரமாகி தனது வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டது.

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

"ஆகா.. புரட்சிகரமான கிளிஜோசியம்கிறது இதுதானா? இங்கேயும் அதே பல்லவியா? இந்தக்கிளி நம்ம ஆசானுக்கே ஆசானா இருக்கும்போல இருக்கே..! எஸ்கேஏஏஏஏப்..!" சென்னைக்கு ஓடியே போய்ச் சேரும் நோக்கத்தில் நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டம்பிடித்தது அந்த லண்டன் குறூப்.happy0071.gif

(தொடரும்.) :D

அருமையாக உள்ளது ....அப்படியே கச்சிதமா பொருந்துது.... நன்றி தோழர் இசைகலைஞ்சன்.... கி... கி....ஆனாலும் நான் ஜோசியக்காரனா.... உவ்வே ...அடுத்த பாகத்தில் வேறு பாத்திரம் வேணும் தோழர் ....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • Replies 282
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள் குத்தின் உண்மையான அர்த்தம் இப்பதான் புரியுது..... :):):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:) :) :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புக்களையும் கருத்துக்களையும் தந்த நுணாவிலான், தயா, விசுகு அண்ணை, கறுப்பன் மற்றும் முக்கியமாக புரட்சிகர கிளி ச்சே தமிழ்தேசியன் :lol: (நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதற்கு) :) ஆகியோருக்கு நன்றிகள்..! :)

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அய்..அய் இசை அண்ணா..ஏன் தலையை இந்த உருட்டு..உருட்டுறீங்கள்...தலை சுத்தப்போகுது.. :):)

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வசதியான கிளி யோசியர் போலிருக்கு, வழக்கமா பிளாட்பாரத்திலும், மரத்தடியிலும்தான் யோசியர்கள் குந்தியிருப்பார்கள். இவர் வீட்டுத் திண்ணையில் இருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வசதியான கிளி யோசியர் போலிருக்கு, வழக்கமா பிளாட்பாரத்திலும், மரத்தடியிலும்தான் யோசியர்கள் குந்தியிருப்பார்கள். இவர் வீட்டுத் திண்ணையில் இருக்கிறார்.

திண்ணை இன்னொரு இடத்திலயும் இருக்குதானே..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களுக்கு வரப்போறவர் வட இந்தியாவில் இருக்கிறார்..!"

"அப்ப நல்ல வெள்ளையா இருப்பார்தானே..!" கால்விரலால் கோலம் போட ஆரம்பித்தார் லண்டன் அம்மணி.

இந்தக் கூத்தைக் கவனித்துக்கொண்டிருந்த கிளி கலவரமாகி தனது வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டது.

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

"ஆகா.. புரட்சிகரமான கிளிஜோசியம்கிறது இதுதானா? இங்கேயும் அதே பல்லவியா? இந்தக்கிளி நம்ம ஆசானுக்கே ஆசானா இருக்கும்போல இருக்கே..! எஸ்கேஏஏஏஏப்..!" சென்னைக்கு ஓடியே போய்ச் சேரும் நோக்கத்தில் நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டம்பிடித்தது அந்த லண்டன் குறூப்.

விஜிக்கும் புரட்சிகர கிளி ஜோசியனுக்கும் இடையில் ஏற்றமாதிரிக் கிளியின் இந்தி எதிர்ப்பைக் கொண்டுவந்தது...

உண்மையிலேயே அசத்தி விட்டீர்கள் இசைக்கலைஞன்.

தொடரட்டும் உங்கள் பணி.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கிளி ஜோசியம் நன்றாக் இருக்கு.

புரட்சிகர கிளி (தமிழ்) ஜோசியனுக்கு (தேசிகனுக்கு) இந்த காட்சி

http://www.youtube.com/watch?v=BwL6VrnD_sw&feature=player_embedded

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திற்கும் தமிழர் நாட்டுக்கும் ஒருவர் உறவு பாலம் அமைக்கிறார்..... அது பிடிக்காத மாற்று கருத்து எழுதும்... நக்கல் விடும்....பலர் செய்யும் அயல் நாட்டு சதி இது......

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::Dman-and-parrot.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் ஜோசியத்தை...........சீசீ ,,,சீ,,,,சீ,,,,,யோசனையை :lol::D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர கிளி ஜோசியன்

திருவண்ணாமலை

------

"வாடிப்போன இந்தப் பொண்ணு வாட்டம் போகிறமாதிரி ஒரு சீட்டை எடுத்துக்கொடுக்கவும் தோழர் சின்னக்கிளி", வழக்கமான பல்லவியைப் பாடிவைத்தார் ஜோசியர்.scared.gif

புரட்சிகர கிளி ஜோசியரே......forum%20smiley%20parrot.gif நீங்க உங்க தோழர் சின்னக்கிளியின்forum%20smiley%20parrot.gif மூலம், தோழர் இசைக்கலைஞனுக்கு ஒரு சீட்டை எடுத்துப் போட்டு விடுங்கள்.

parrot-emoticon.gif:D:lol:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களேபரத்தில் புதிய பதவி ஏற்று இருக்கும் கிளிக்கு கண்ணுபடப்போகிறது.அவ்வப்போது துடைச்சுக் கொழுத்துங்கோ. :D அத்தோடு யாழின் காவல்காறி யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்...யாயினி..யாயினி..யாயினி எண்டு..கிளி எல்லாம் வேணாம்... :lol::D

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கிளி, ஆட்டுக்குட்டி

நல்ல பொருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு.......இண்டைக்கு தான் இந்த திரியை பார்த்தேன்..... :wub::lol::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 6:

சென்னையில் கட் பண்ணி மறுபடியும் லண்டனில் ஓபிண் பண்ணுகிறோம்..! :lol:

தெற்கு லண்டனின் பரபரப்பான கடைத்தெருக்களில் ஒன்று அது. பிரபலமான அந்தக்கடைத்தொகுதியில் ஜனநடமாட்டத்துக்கொன்றும் குறைவில்லை.

ஆனாலும் எல்லோரும் மூக்கில் விரலை வைக்கும்படியாக காற்று வாங்கிக்கொண்டிருந்தது அந்த வணிக நிலையம்.

வெள்ளிக்கொடி பயணமுகவர் சேவை. happy0055.gif

வரவேற்புப்பகுதியில் ஒல்லியான பெண்ணொருத்தி கணினியில் மும்முரமாக எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். உச்சியில் போட்டிருந்த கொண்டையும் தோளில் பொங்கியிருந்த பிளவுசும் அவளை ஒரு சிங்களத்தி என அடையாளம் காட்டியது. டிஃபென்ஸ் லங்கா, டிஃபென்ஸ்வயர், டிஃபென்ஸ்நெட் என்று இணையத்தில் மாறி மாறி அல்லாடிக் கொண்டிருந்தாள்.

உள்ளே ஒரு கண்ணாடி அறைக்குள் நடுத்தர வயதின் தோற்றத்துடன் இருந்த முதலாளி தனது வாடிக்கையாளருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

"என்ன தம்பி. இந்த சமருக்கு நாட்டுக்குப் போற பிளான் இல்லையோ? எல்லாரும் போகினம் தம்பி. ரிக்கற் விலை குறைவாப் போட்டுத் தரலாம். நாடும் அந்த மாதிரி இருக்கு. ஹிஹி." evilgrin0036.gif

"போகலாமண்ணை.. ஆனால் ஒரு ரெண்டுமாசத்துக்கு முன்னைதான் போட்டு வந்தன். அதான்.." confused0006.gif இழுத்தார் தம்பி.

"என்ன ஐசி இழுக்கிறீர். நீர் இப்ப "அந்தப்பக்கம்" இல்லைதானே.. பின்ன என்ன சுணக்கம்? நான் அடிக்கடி போட்டு வாறனான் தம்பி. ஏ9 இல தலைகுத்தண நடந்துபோனாலும் கேட்பாரில்லை.. சுதந்திரம் தம்பி. அவ்வளவு சுதந்திரம். ஹிஹி..! evilgrin0030.gif

"எனக்கென்னண்ணை பயம்? நான் இப்ப ரெண்டுபட்ட இலங்கை கொள்கையில இருந்து ஒன்றுபட்டதுக்கு மாறிட்டனாக்கும். நினைச்சால் ஒரு ராஜபக்சவைக் கூட்டிக்கொண்டே ஏ9 இல போவனண்ணை..! ஹிஹி." winking0052.gif

"அப்பப் போய்ட்டு வாருமன். பிளேன் சிறீலங்கன். அந்தமாதிரி கவனிப்பு. ரிக்கற் காசு 6 மாசத்துக்குப் பிறகு குடுத்தால் போதும். நோ வட்டி. என்ன சொல்லுறியள்?" evilgrin0006.gif

"ஆ.. இது நல்ல டீலா இருக்கண்ணை. அப்பப் போடுங்கோ. காசைச் சேர்த்து வச்சு என்னத்தைக் கண்டம்?" :wub: சொல்லி முடிக்கவும் அவரது செல் தொலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.

அழைப்பை எடுத்தவர் அடுத்த சில வினாடிகளிலேயே கலவரமானார். :lol:

"என்னடா சொல்லுறாய்? என்ர ஆள் எண்டு சொல்லியிருக்க வேண்டியானே?" confused0004.gif

-- மௌனம் --

" என்னது? சொல்லியும் கடத்தினானா? ஆ.. ஐம்பதாயிரம் பவுண்சா? டேய் அதுக்கு எங்கடா போவன்? லண்டனில பிச்சையெடுத்தாலும் தேறாதேடா..!" sad0007.gif அலறியபடியே வாசலை நோக்கி ஓடினார் காண்டு007.

"சார் ரிக்கற்" குரல்கொடுத்தார் வெள்ளிக்கொடி. :wub:

"போய்யா நீயும் உன்ர ரிக்கற்றும். நமோ நமோ மாதா பாடினதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..! ஏ9 இல நடந்துபோனதுக்கு லண்டனில ஓடவிட்டுட்டாங்களே..!" sad0013.gif புலம்பியவாறு தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தார் காண்டு. சிங்களத்தி ஓரக்கண்ணால் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு டிஃபென்ஸ்வயருக்குள் தலையைச் சொருகிக் கொண்டாள். :lol:

(தொடரும்.) happy0022.gif

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுபேருக்கு 007 துவக்கால வெ(வி)டி விழுந்திருக்கு... :wub::wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 7:

காண்டு தலைதெறிக்க வெளியே ஓடவும் இன்னொரு உருவம் விழுந்தடித்துக்கொண்டு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. :wub:

அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் தொல்லையன். :lol:

"எங்கடி உன்ர முதலாளி?" கூவியபடியே சிங்களத்தியைத்தாண்டி முதலாளியின் அறைக்குள் பிரவேசித்தார் தொல்லையன். :lol:

"வாங்க தம்பி. உங்களை எங்கயோ பார்த்திருக்கிறனே..!" பவ்யமாக வரவேற்றார் வெள்ளிக்கொடி. :wub:

"ஆமாய்யா.. பார்த்தமாதிரித்தான் இருக்கும். ஏன்யா.. இங்க பக்கத்தில இருக்கிற ஜேர்மனிக்கு ரூர் புக் பண்ணச்சொல்லி 2000 பவுண்ஸ் குடுத்தால் எங்கய்யா என்னை அனுப்பி வச்சனீர்?" mad0090.gif

"தம்பி.. ஜேர்மனிக்குத்தானே..!" scared0010.gif

"ஆமாய்யா.. ஜேர்மனிக்குத்தான். ஆனால் லண்டன் டு கொழும்பு. பிறகு கொழும்பு டு பிராங்க்ஃபோர்ட். இதான் ஜேர்மனிக்கு ரிக்கற்போடுற லட்சணமா? கொதித்தார் தொல்லையன்.

"நாடு நல்லாத்தானே இருக்கு.. அதான் அப்பிடி ரிக்கற் போட்டன் தம்பி.. அதுசரி பயணக்கட்டுரை எல்லாம் படிக்கிறதில்லையோ?"

"என்னது பயணக்கட்டுரையா? யோவ்.. மப்பில ரிக்கற்றை கவனியாமல் பிளேன்ல ஏறிட்டன்யா. பிளேன் பாதி தூரம் போனாப்பில ஹோல்ட் ஓன் சொல்லி நிப்பாட்டிறதுக்கு அது என்ன பஸ்சா? :lol: கொழும்பில இறங்கினதுதான். பிறகு சும்மா இருக்க மாட்டாமல் வவுனியா போய் நான் பட்டபாடு எனக்கல்லோ தெரியும்? ஏன்யா அப்பிடி ரிக்கற் போட்டனீர்?" mad0050.gif

"தம்பி ரிலாக்ஸ்.. சூடா இருக்கிறீங்கள். கூல் ட்ரிங்ஸ் சாப்பிடுறீங்களா?"

"கூல் ட்ரிங்ஸா? ஹாட் ட்ரிங்கே சாப்பிட்டுட்டுத்தான்யா வந்திருக்கிறன்." உறுமியபடியே பைக்குள் வைத்திருந்த ஜொனி வோக்கர் போத்தலை மேசையில் தட்டி உடைத்தார் தொல்லையன்.

மேசையைச் சுற்றி கபடி ஆட்டம் ஆரம்பமானது. :lol:

(தொடரும்.) :D

என்னாலை முடியேல்லை... :wub: :wub: :lol:

மிச்சத்தை அடுத்த கிழமைக்கு பின்னுக்கு போடுங்கப்பா...?? இல்லாட்டால் வைத்திய செலவுக்கு காசு சேத்து அனுப்பி வையுங்கோ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைத் தந்து உற்சாகமூட்டிய நண்பர்களுக்கு நன்றி..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.