Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்களத்தில் களேபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிப்பு தாங்க முடியவில்லை. பாவம் கடலை. தயவு யாராவது செய்து இந்த திரியின் இணைப்பை ஆறுமுக நாவல்பழம் அண்ணைக்கு அனுப்பி விடவும். :D

அனுப்பிட்டாலும்...... :rolleyes::o:lol:

இந்தாளுக்குத்தான் காதில எதுவுமே விழாதே..!

அப்பவும் இதுதான் வரும்....

தண்ணறு மத்தமுங் கூவிளமும்

வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்

நண்ணல் அரியநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

புண்ணிய வாணரும் மாதவரும்

புகுந்துட னேத்தப் புனையிழையார்

அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

  • Replies 282
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவல்பழம் பொழிப்பு எழுதுவதை விட்டு ஐ லவ் யு எழுதுவதிலேயே குறியாக இருந்து இருக்கிறார். :rolleyes::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அப்ப வந்த நெஞ்சுவலிதான்..! இன்னும் போகேல்ல..!! :rolleyes:

:o:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 11:

--------

சாவகாசமாக தட்டச்சை முடித்த சிவப்பழம் தனது தனிமடலைத் திறந்தது. எல்லாமே உறுப்பினர் மாரசாமி :rolleyes: தூய தமிழில் அர்ச்சனை செய்து எழுதிய தனிமடல்களாக இருந்தன. அதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு உறுப்பினர் ரதிதேவிக்கு தனிமடல் ஒன்றை சுருக்கமாக வரைந்தார் சிவப்பழம்.

"ஐ லவ் யூ"

"ஆ..ஆ.. சாமீ.. நீங்களுமா?" கடலைக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. :D

"தம்பி.. எங்களுக்கும் காமத்துப்பால் தெரியுமில்லே.. சிவசிவ.." வேட்டியை மடித்துக்கொண்டு வாசலை நோக்கி அட்டகாசமாக நடந்துபோனார் சிவப்பழம். :o

-------

(தொடரும்.) :D

எந்தப் புற்றுக்குள்ளை, எந்தப் பாம்பு இருக்கும் எண்டு சொல்ல ஏலாமல் கிடக்குதே....... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவும் இதுதான் வரும்....

தண்ணறு மத்தமுங் கூவிளமும்

வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்

நண்ணல் அரியநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

புண்ணிய வாணரும் மாதவரும்

புகுந்துட னேத்தப் புனையிழையார்

அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

ஆ ! இதுக்கு அவர் பரவாயில்லை!! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::o:lol:

அடப்பாவி கறுப்பா..! எனக்கு நெஞ்சுவலி வந்த காரணம் உது இல்லை..! :D

உங்கட பாட்டைக் கேட்டால் வந்த வலி இன்னும் கூடும் போலத் தெரியுது..! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலை பாடியவருக்கும்..... பதிந்தவருக்கும்..... நன்றி ............(.....இருவரும் ஒருவரோ? ?)

அண்ணா என்றால் என்ன பிரச்சினை ?...விழலி ...மன்னிக்கவும் நிழலி ..

........அண்ணா என்றால் மதிப்புக்குரிய சகோதரம் என்று அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா என்றால் மதிப்புக்குரிய சகோதரம் என்று அர்த்தம்.

அதை முதலிலேயே எழுதியிருந்தால்....

ஒரு இளைஞன் காப்பாற்றப்பட்டிருப்பான்....

காட்சி 11:

:D:):D:lol: :lol: சிரிச்சு களைச்சு போனேன்... பத்திவுக்கு நன்றி இசைக்கலைஞன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிங்களா நான் என்பாட்டுக்கு தேமேண்ணு கடலை போட்டுக்கிட்டிருந்தா நான் போட்ட கடலை எனக்கே வறுத்துத் தாரீங்களா

இதெலடலாம் வயித்தாலபோவாண்ட சதி என்ன கவிழ்க்கிறதுக்காக கொலைஞனுக்கு ஒரு போத்தல் கள்ளு வேண்டிக்கொடுத்து என்னை பற்றி மட்டமா எழுதச்சொல்லியிருக்கு பாவி மனுசன் . இதுக்கல்லதம் அஞ்சமாட்டான் இந்த விடலை தொடர்ந்தும் போடுவான் ரயில்தேவிக்கு கடல

:):D

காட்சி 11:

ஐயோ.. இந்த ஆளை இவ்வளவு நாளும் நம்பி ஏமாந்துட்டன்யா..! பிரம்மச்சாரி எண்டு நினைச்சு விட்டுவச்சது தப்பாப் போச்சு..!" புலம்பினார் கடலை. mad0003.gif

"

"ஆ..ஆ.. சாமீ.. நீங்களுமா?" கடலைக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. :(

"தம்பி.. எங்களுக்கும் காமத்துப்பால் தெரியுமில்லே.. சிவசிவ.." வேட்டியை மடித்துக்கொண்டு வாசலை நோக்கி அட்டகாசமாக நடந்துபோனார் சிவப்பழம். :lol:

தரையில் மல்லாந்து கிடந்தார் உறுப்பினர் கடலை. happy0007.gif

:lol::D:D :

நெடுநாளைக்கு பிறகு நன்றாக சிரித்து மகிழ்ந்த தொடர்,

காலையில் அலுவலகத்திற்கு வந்த உடன் முதல் வேலையே இன்னைக்கு இசை கையில் யார் சிக்கினர்கள்னு, அதுக்கு என்ன மறுதலிச்சு இருக்காங்கனு பாக்குறதுதான், பட்டாசு கெளப்புறீங்க இசை.

ஆனா என்ன தாய்குலம் யாராவது சாட் அடிச்சா தான் பதிலடிக்கிறீங்க.

(யே யாராவது எல்லாருக்கும் பதிலடிக்க சொல்லுங்கப்பா ) :

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனா என்ன தாய்குலம் யாராவது சாட் அடிச்சா தான் பதிலடிக்கிறீங்க.

(யே யாராவது எல்லாருக்கும் பதிலடிக்க சொல்லுங்கப்பா ) :

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? :) ஏதோ காகம் உட்கார பனம்பழம் விழுந்தமாதிரி ஆகிப்போச்சு அன்றைக்கு..! வேற எதுவுமுல்லை..! :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி எப்போ தொடருவதாக உத்தேசம்...? :)

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 11:

######

சாவகாசமாக தட்டச்சை முடித்த சிவப்பழம் தனது தனிமடலைத் திறந்தது. எல்லாமே உறுப்பினர் மாரசாமி :) தூய தமிழில் அர்ச்சனை செய்து எழுதிய தனிமடல்களாக இருந்தன. அதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு உறுப்பினர் ரதிதேவிக்கு தனிமடல் ஒன்றை சுருக்கமாக வரைந்தார் சிவப்பழம்.

"ஐ லவ் யூ"

"ஆ..ஆ.. சாமீ.. நீங்களுமா?" கடலைக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. :o

"தம்பி.. எங்களுக்கும் காமத்துப்பால் தெரியுமில்லே.. சிவசிவ.." வேட்டியை மடித்துக்கொண்டு வாசலை நோக்கி அட்டகாசமாக நடந்துபோனார் சிவப்பழம். :D

######

(தொடரும்.) :D

யோவ்........ இசை,

"ஐ லவ் யூ" யூஊஊ..... சொன்னது....

மாரசாமியா, ஆறுமுகசாமியா...

ஆறுமுகசாமி சொல்லியிருக்க மாட்டார் எண்டு நம்புறன். :lol:

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி எப்போ தொடருவதாக உத்தேசம்...? :)

போனகிழமையும் இந்தக்கிழமையும் ரொரோண்டோவில..! எங்கயிருந்து எழுதிறது? :D பூகம்பமெல்லாம் வரேல்ல.. எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கோ..! :D

யோவ்........ இசை,

"ஐ லவ் யூ" யூஊஊ..... சொன்னது....

மாரசாமியா, ஆறுமுகசாமியா...

ஆறுமுகசாமி சொல்லியிருக்க மாட்டார் எண்டு நம்புறன். :lol:

.

மாரசாமி நேரடியா அக்சன் தான்.. உப்பிடி கதைச்சு மினக்கடமாட்டார் என்பது என்ர தாழ்மையான கருத்து..! நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? :o

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி எப்போ தொடருவதாக உத்தேசம்...? :)

  • கருத்துக்கள உறவுகள்

மாரசாமி நேரடியா அக்சன் தான்.. உப்பிடி கதைச்சு மினக்கடமாட்டார் என்பது என்ர தாழ்மையான கருத்து..! நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? :lol:

உங்கடை கருத்து சரியே..... :) ஆள் இந்த வயதிலேயும் அலைஞ்சு கொண்டிருக்கிறார். :D

எங்களாலை முடியலேப்பா..... :o

.

  • கருத்துக்கள உறவுகள்

அச்சோ 11 பக்கங்கள் போய்விட்டது . நான் வாசிக்க வில்லையே.

நேரம் கிடைக்கும் போது வாசித்து கருத்து எழுதுறேன்.

கதை தந்த கதாசிரியருக்கு வாழ்த்துகள்

காட்சி 4:

"கட.. கட.. கட.. கட.. கட.. கட.. கட.." இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது விசைப்பலகை ஒலி. அந்த அதிவேக தட்டச்சுக்குச் சொந்தக்காரர் உறுப்பினர் வயித்தாலபோவான். :) விசைப்பலகைக்கு அருகில் ஓணானின் கிட்னி, தவளையின் லிவர் என்று வித்தியாசமான பொருட்கள் அறிவுத்தடாகத்துக்குள் குதிப்பதற்குத் தயாராக இருந்தன.

பகிர்வதனூடு, எழுதுவதனூடு, சொல்வதனூடு என்று தொடர்ச்சியாக ஊடுகட்டி அடித்துக்கொண்டே வந்தவர் ஏதோ ஞாபகம் வந்தவராக யாழிலிருந்து தாவி சிட்டுக்குருவிகள் தளத்துக்குப் போனார். மனைவி முந்தநாள் வைத்த காரமான வெந்தயக் குழம்பில் வாய் அவிந்துபோன கடுப்பில் எழுதிய "மிளகாய்த்தூளின் ஆபத்து" கட்டுரை அவரது இணையப்பக்கத்தில் முன்னுக்கு நின்றது.

இந்த மிளகாய்த்தூள் திரியை வைத்துக்கொண்டு ஜேர்மனியில் ஒருவர் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை அறியாதவராக திரிக்கு வந்திருந்த கருத்துக்களை மட்டுறுத்தத் தொடங்கியவரை மனைவியின் அழைப்பு கலவரப்படுத்தியது.

தலைதெறிக்க அறைப்பக்கமாக ஓடினார்.

"ஐசே" evilgrin0040.gif

"என்னம்மா?" ashamed0001.gif

"ம்ம்ம்.. காலங்கார்த்தாலயே உதில குந்தியாச்சா?" "கோப்பி எங்கை?" evilgrin0039.gif

"ஓ.. நீங்கள் முழிச்சிட்டீங்களே.. இருங்கோ.. கோப்பி வந்துகொண்டே இருக்கு..!" ashamed0006.gif பவ்யமாக குனிந்த முதுகு நிமிராமலேயே அறையை விட்டு வெளியே வந்தவர் சத்தம் வராத முறையில் மீண்டும் கணினிக்குமுன் வந்து குந்தினார். scared0001.gif

நேராக யாழுக்குள் மீண்டும் நுழைந்தவர் கண்ணில் சமூகச்சாளரம் பகுதியில் "ஆண்கள் எல்லோரும் பெண்களின் அடிமைகள்" என்கிற தலைப்பில் உறுப்பினர் ரதிதேவி :lol: எழுதிய திரி தென்பட்டது. ரத்த அழுத்தம் தலைக்கேறியவராக விரல்களை விசைப்பலகையில் நர்த்தனம் ஆடவிட்டார்.

"ஆண்கள் என்றுமே பெண்களுக்கு அடிமையாக இருந்ததில்லை. அப்படி இருப்பவர்கள் ஆண்களே இல்லை. இப்படி எழுதுவதனூடு பெண்களின் வசைமழைக்கு ஆளாகப்போவது எனக்குத் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவன் நானல்ல. பெண்வாசனையே இல்லாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து காட்டுவேன்." சிரிப்பு முகக்குறியுடன் கருத்தைப் பதிந்து முடிக்கவும் மனைவியின் அதட்டல் வரவும் சரியாக இருந்தது.

"கோப்பி என்னாச்சு? ஒருமுறை சொன்னால் விளங்காதோ?" evilgrin0010.gif

கணினிமுன் ஆளைக்காணவில்லை. மனைவியின்முன் கோப்பியுடன் நின்றுகொண்டிருந்தார் உறுப்பினர் வயித்தாலபோவான். :)

(தொடரும்.) :lol:

அட. அதுவும் அப்பிடியோ.. நன்னாருக்கு!! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 12:

ஊர்ந்து ஊர்ந்து நகரத்தின் மையப்பகுதியூடாக மெதுவாக அந்த வணிக வளாகத்தை வந்தடைந்தது அந்த வாகனம். ஊர்ந்து வந்த வேகத்திலேயே தரிப்பிடத்தில் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை செல்லமாக முட்டி நின்றது. இடம் பிரான்சின் தலைநகராம் பாரிஸ். :lol:

காரில் இருந்து இறங்கிய அந்த நடுத்தர வயது உருவம் நேராக தனது கடையைத் திறந்து உள்ளே சென்றது. :lol: வாசலிலேயே இரா. சம்பந்தனின் ஆளுயர கட் அவுட் அன்புடன் வரவேற்றது. :lol:

கணினிகளை பாவனைக்காகத் தயார் செய்துவிட்டு தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தது உருவம். நிமிடங்கள் கழிந்தன. இடமும் கொஞ்சம் கொஞ்சமாக களை கட்ட ஆரம்பித்தது. இளசுகளும் பெரிசுகளுமாக வந்து இணையத்தை மேய ஆரம்பித்தார்கள்.

'ஆகா.. இண்டைக்கு நல்ல வருமானம் போல இருக்கே..!' உள்ளூர மகிழ்ந்துகொண்டார் யாழ் உறுப்பினர் விசுக்கு. :D

சிறிது நேரம் கழித்து தனது கணினியில் யாழ்களத்தைத் திறந்தவருக்கு 100 வோல்ட் மின்சார அதிர்ச்சி..! யாழ்களத்தைப் பூட்டப் போகிறாராம் மேகன்..! :lol:

உடனடியாக யாழ் உறவோசையில் மாப்ளே என்கிற பிரளி என்கிற கிச்சான் என்கிற கொலைஞன் என்கிற இரும்பு என்கிற உறுப்பினர் ஆரம்பித்த நன்றி சொன்ன திரியில் தனது கருத்தை எழுத ஆரம்பித்தார் விசுக்கு.

எழுதினார் எழுதினார் எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால் எதுவுமே யாழில் பதியப்பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு கலர் அடிப்பது, எழுத்துக்களை போல்ட் ஆக்குவது, அடிக்கோடு போடுவது என்று புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார். :D ஒருவழியாக ஒருமணிநேரம் செலவிட்டு எழுதி முடித்தபோது இப்படி வந்திருந்தது. :lol:

ன்றி..

ன்றி..

ன்றி..

திருப்தியுடன் கருத்தை யாழில் பதியப் போனவர் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். இன்னுமொரு 100 வோல்ட் அதிர்ச்சி..! scared0011.gif இணையப் பாவனைக்கு பணம் செலுத்துவதற்க்கு வானவில் நிறத்தில் உள்ள அத்தனை நிறங்களிலும் பாவனையாளர் கூட்டம் கூடியிருந்தது. ^_^

"ஐ ஆம் சாரி.. சீச்சீ.. டிசொலி.." வருத்தம் தெரிவித்தவர் முதலாவதாக நின்றவரின் ரசீதை பிரிண்ட் செய்ய ஆரம்பித்தார். scared0010.gif

பிரிண்டரில் எதுவும் வெளிவருவதுமாதிரித் தெரியவில்லை. ஆனால் சத்தம் மட்டும் கேட்டபடி இருந்தது. rolleye0001.gif

ஒரு நிமிடம் கழித்து பச்சை கலரு ஜிங்குச்சா.. மஞ்சள் கலரு ஜிங்குச்சா.. என்று ஈஸ்ட்மன் கலரில் சிறிது சிறிதாக எட்டிப்பார்க்க ஆரம்பித்தது ரசீது. :lol: பாவனையாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். முகங்களில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. happy0142.gif

(தொடரும்.) :D

என்ன ஒரு சிலர் உறுப்பினரை பற்றி இன்னும் எழுதவே இல்லையே என்று பார்த்துகொண்டு இருந்தோம்... அப்பாடா நிம்மதி ஒருவர் ஒருவராக வந்துகொண்டே இருக்கிறார்கள்.. பிரளி கிச்சான் என்று பெயர் மாத்திய விதம் அருமை அருமை தொடருங்கள் இசை அண்ணா... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிண்டரில் எதுவும் வெளிவருவதுமாதிரித் தெரியவில்லை. ஆனால் சத்தம் மட்டும் கேட்டபடி இருந்தது

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

invasion.gif

தொடருங்கள் இசைக்கலைஞன்

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 13:

ஜேர்மனியின் ஸ்டுட்கார்ட்.

விசுக்கு அந்தப்பக்கம் மேகனின் அறிவிப்பால் மனம் தளர்ந்தார் என்றால் இந்தப்பக்கம் உறுப்பினர் கோவா மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். கணினித் திரையைப் பார்ப்பதும் சிரிப்பதும், ஏகாந்தத்தில் திளைப்பதுமாக பொழுது போய்க்கொண்டிருந்தது. :lol: திரையில் அவர் தயாரித்து முடித்த காணொளி ஓடிக்கொண்டிருந்தது. கோவா பாடிக்கொண்டிருந்தார். :D

சிரித்தாய் வலைவிரித்தாய் உயிர்பறித்தாய்

உண்மையிலே என்மயிலே..

பார்த்தாலே எந்தன்பசி பறந்தோடுது..

லாலால லலலல லாலாலலா

இந்த ரதிதான்.. சதியே..

'யூரியூபில் தரவேற்றிவிட்டால் விசயம் முடிஞ்சிது', மனதுக்குள் நினைத்துக்கொண்டு தொலைபேசியை எடுத்து அண்மைக்காலத்தில் தனக்குத் தெரிந்த அந்த ஒரே இலக்கத்தை அழைத்தார்.

"ஹலோ" தேனினும் இனிய குரலாக அந்தப்பக்கத்தில் ஒலித்தது. :lol:

"ஹலோ.. மணி.. நான்தான்..! எப்பிடி இருக்கிறீங்கள்?" வழிந்தார் கோவா. love0001.gif

"ஓம்.. உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது.. மணி.. மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. ஒண்டில் பிரியா எண்டு கூப்பிடுங்கோ.. இல்லாட்டில் பிரியாமணி எண்டு முழுப்பெயராக் கூப்பிடுங்கோ..! அதென்ன மணி.. பொல்லாத மணி..!" mad0090.gif கடுப்படித்தார் கோவாவின் காதலி.

"சரி அதை விடுங்கோ..! வீடியோ அந்தமாதிரி வந்திருக்கு..! நான் சொன்னனான்தானே கனக்க உடுப்பு கொண்டு வாங்கோ எண்டு.. அள்ளி எறியுது.. உங்கட நடனமும் அமர்க்களம்", புல்லரித்தார் கோவா. winking0023.gif

"நீங்கள் மட்டுமென்ன.. குதிச்சு குதிச்சு ஹை ஹீல்ஸ் சப்பாத்தோட நீங்கள் ஆடினது.. சொல்லி வேலையில்லை..!" :D

"ம்ம்ம்.. வீடியோ எடுத்த ஜேர்மன்காரனுக்கும் பிடிச்சிருக்குதாம்..! அது என்ன டான்ஸ் எண்டு கேட்டான்..! சரி.. சரி.. நான் இப்ப தரவேற்றப் போறன்.. அஞ்சு நிமிசம் கழிச்சுப் பாருங்கோ..! அப்ப நான் வைக்கிறன்..!"

"சரி"

"டொக்"

காணொளியைத் தரவேற்றத் தொடங்கினார் கோவா. பழைய நினைவுகளும் சுழன்றடிக்கத் தொடங்கியது.

'நான் மட்டும் தைரியமாக அண்டைக்கு தனிமடல் போடாமல் விட்டிருந்தால்...!', :( நினைக்கவே நடுங்கியது கோவாவுக்கு. தனிமடல் மேல் தனிமடல் போட்டு ஒருவழியாக வழிக்குக் கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இப்போது எல்லாம் சுபம். டூயட் பாடும் அளவுக்குப் போய்விட்டது. :lol:

தரவேற்றம் முடிந்தது என்று யூரியூப் சொன்னது. சில தரவுகளைக் கொடுத்துவிட்டு ஆர்வத்துடன் காணொளியைக் கிளுக்கினார் கோவா..! திரையில் காணொளி விரிந்தது..!

happy0005.gif

காணொளி முடியவும் உறுப்பினர் கடலையின் தொலைபேசி அழைப்பு வந்தது..!

"வணக்கம் கடலை.. என்ன விசயம்?"

"சும்மாதாண்ணே.. அதுசரி எப்பிடிண்ணே பிடிச்சீங்க?! ஹிஹி" tongue0022.gif

"ஆ.. புகை போட்டுப் பிடிச்சம்..! கேள்வியைப்பாரு..! " ^_^

"அது சரிண்ணே.. ஒண்ணு கேக்கணும்னு நினைச்சன்..! நீங்கள் இந்த இடத்தில பாடினது "அவங்களை" இல்லைதானே..!" :(

happy0007.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.