Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்;

1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது

2) ஆண் அதிக சம்பளம் எடுக்கிறார்கள்

3)ஆண் நல்ல படித்திருப்பது

4)பெண் அழகாய் இருப்பது

5)ஆண்/பெண்ணுக்கு வீடு இருப்பது

6)சொத்துகள் இருப்பது

7)ஜாதகத்தில் பொய் சொல்வது

8)பொறுப்பானவர் குடும்பத்தை வடிவாய் கவனிப்பார் என சொல்வது

9)சமைக்க தெரியும் என பொய் சொல்வது

10)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாய்பிரண்ட் அல்லது கேள் பிரண்ட் இல்லை கல்யாணத்திற்கு முதல் இல்லை என சொல்வது

11)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விசா இருப்பது என சொல்வது

இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எழுதுங்கள் கட்டாயம் ஆயிரம் பொய் வர வேண்டும் :D:(:D

பொய் எல்லாம் சொல்லி ஏன் கலியாணம் கட்டவேணும். சும்மா கிடந்த சனியனை தலையில தூக்கி வச்சு உள்ள நிம்மதியையும் இழக்காமல், கட்டி இருக்கிற கோவண துண்டையும் இழக்காமல் தனியாளாக வாழ்வதே புத்திசாலித்தனமான முடிவு - இது கலியாணம் கட்டி கொட்டை போட்ட பெரிசுகள் சொல்ல வாசிச்ச கருத்து. ஆயிரம் பொய் சொல்லி தனியாளாய் வாழுறதுக்கான ஆலோசனைகளை வேண்டுமானால் தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த சில பொய்கள்;

இருவருக்கும் பொருத்தம்

12) சொந்த புத்தியில் இயங்குவார் என்பது

13) செலவாளியல்ல சேமிப்பார் என்பது

14) அப்பா அம்மாவுக்கு அடிங்கிய பிள்ளை என்பது

15) என்றைக்கும் பெற்றோரின் சொல்லைத்தட்டியது கிடையாது என்பது

16) கடவுளுக்கு பயந்தவர் என்பது

17) தொழிலில் அல்லது வேலையில் அக்கறையுள்ளவர் என்பது

18) நித்திரை பிடிக்காது என்பது

19) சோம்பல் அற்ற சுறுப்பானவர் என்பது

20) இதற்கு முன் எவரையும் ஏறெடுத்துப்பார்க்காதவர் என்பது

21) பெரியோருக்கு மரியாதை கொடுப்பவர் என்பது

22) உடலில் எந்தவித சிக்கல்களும் கிடையாது என்பது

23) நல்ல மனது என்பது

24) பரம்பரைக்கே மொட்டை அல்லது நரைவிழாதென்பது

25) எல்லா வகுப்பிலும் முதல் இடம் என்பது

26) பிறமொழிகள் தெரியும் என்பது

27) பரம்பரையில் பெண் குழந்தை குறைவு என்பது

28) நடந்தால் ராஐநடை என்பது

29) குரல் குயிலுடன் போட்டிபோடும் என்பது

30) ஊரிலேயே உயர்ந்த சாதி என்பது

31) பிள்ளைகள் வெள்ளையாகத்தான் பிறப்பார்கள் என்பது

32) பரம்பரை வியாதிகள் கிடையாது என்பது..

நேரமிருக்கும்போது....... தொடரும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த சில பொய்கள்;

இருவருக்கும் பொருத்தம்

12) சொந்த புத்தியில் இயங்குவார் என்பது

13) செலவாளியல்ல சேமிப்பார் என்பது

14) அப்பா அம்மாவுக்கு அடிங்கிய பிள்ளை என்பது

15) என்றைக்கும் பெற்றோரின் சொல்லைத்தட்டியது கிடையாது என்பது

16) கடவுளுக்கு பயந்தவர் என்பது

17) தொழிலில் அல்லது வேலையில் அக்கறையுள்ளவர் என்பது

18) நித்திரை பிடிக்காது என்பது

19) சோம்பல் அற்ற சுறுப்பானவர் என்பது

20) இதற்கு முன் எவரையும் ஏறெடுத்துப்பார்க்காதவர் என்பது

21) பெரியோருக்கு மரியாதை கொடுப்பவர் என்பது

22) உடலில் எந்தவித சிக்கல்களும் கிடையாது என்பது

23) நல்ல மனது என்பது

24) பரம்பரைக்கே மொட்டை அல்லது நரைவிழாதென்பது

25) எல்லா வகுப்பிலும் முதல் இடம் என்பது

26) பிறமொழிகள் தெரியும் என்பது

27) பரம்பரையில் பெண் குழந்தை குறைவு என்பது

28) நடந்தால் ராஐநடை என்பது

29) குரல் குயிலுடன் போட்டிபோடும் என்பது

30) ஊரிலேயே உயர்ந்த சாதி என்பது

31) பிள்ளைகள் வெள்ளையாகத்தான் பிறப்பார்கள் என்பது

32) பரம்பரை வியாதிகள் கிடையாது என்பது..

நேரமிருக்கும்போது....... தொடரும்

சத்தியமாக நான் சண்டைக்கு வரவில்லை.விச்சு அண்ணா 32 பொய் எழுதீட்டார்..எல்லாம் சரி தான் 32ஆவது எங்கயோ இடிக்கிற மாதிரி இருக்கு..பரம்பரை வியாதி இல்லாட்டிக்கும் கடவுளாள் தண்டிக்கப் பட்டவர்களுக்கும் ஒரே நிலை தான்..இலகு காத்த கிளி மாதிரி இருந்துட்டு காலம் வர கோவிந்தா,கோவிந்தா எண்டு விசில் அடிச்சண்டு இடத்தைக் காலி பண்ணிக் கொண்டு போக வேண்டியது தான்..அதற்காக பொய் எல்லாம் சொல்லி திருமணம் செய்யனும் எண்டு அவசியம் இல்ல.. :D:(

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய பரம்பரை வியாதிகள்

முட்டு

கான்சர்

ஒவ்வாமை

மலட்டுத்தன்மை.........

  • கருத்துக்கள உறவுகள்

ரதி! நீங்கள் ஒரு பொய் சொன்னாலே நூறு பொய் சொன்ன மாதிரி, மேலே ஆயிரத்து ஒண்டு சொல்லிட்டிங்கள், :D:(

  • கருத்துக்கள உறவுகள்

33. மணமகனுக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்தல்

34.முதல் மனைவியின் பிள்ளையை சகோதரத்தின் பிள்ளை என்பது

:D:(

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஏதோ பொய்களை எல்லாம் ஆம்பிளையான் தான் சொல்லுறது போல எழுதுறீங்க. பொம்பிளையாங்க சொல்லுறதையும் எழுதுங்கோ..!

35. பெண் குடும்பக் குத்து விளக்கா இருப்பாள் என்பது. (குத்துவிளக்கே என்னென்று தெரியாததா இருக்கும்.)

36. மாமியாரை தாய் போல் கவனிப்பாள் என்பது. (மாமியாரோட எரிஞ்சு விழுகிறதையே தொழிலா வைச்சிருக்கும்.)

37. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதாய் மதிப்பாள் அன்பா கவனிப்பாள் என்பது. (கணவனுக்கு பூரிக்கட்டையால அடிக்கிறதா இருக்கும்.)

38. மணமகனின் சகோதர சகோதரிகளுக்கு நல்ல தாயாக இருப்பாள் என்பது. ( குடும்பத்தில ஒற்றைப் பிள்ளையா இருக்கும்.)

39. பெண்ணுக்கு நல்லா பாட வரும் என்பது. (குரலை கேட்டா ஆடிப்போயிடுவாங்க.)

40. பெண் நல்ல புத்திசாலி என்பது. (மகா மட்டமா இருக்கும்.)

41. மேக்கப் போடாமலே அவள் வடிவு என்பது. ( ஒரே களிம்பு பூசின மூஞ்சியா இருக்கும்.)

42. நாட்டியம் டான்ஸ் தெரியும் என்பது. (டான்ஸ் வரும்.. ரோட்டில நின்று கூத்தடிச்சதா இருக்கும்.)

43. பெண் ஓரளவுக்கு படிச்சவள் என்பது. (படிச்சிருப்பா ஆனால் அதை பாவிக்கவே தெரியாது இருக்கும்.)

44. ஒரு ஆம்பிளையளையும் அவள் முந்தி ஏறெடுத்தே பார்த்ததில்ல குனிந்த தலை நிமிர்ந்ததில்லை என்பது. (நிறைய போய் பிரண்ட்ஸ் வைச்சிருந்த சுந்தரியா இருக்கும்.)

45. குடும்பத்தை நல்லா கவனிப்பாள் என்பது. (குடும்பமுன்னாவே என்னென்று விளங்காததா இருக்கும்.)

46. நல்லா சமைப்பாள் என்பது.( தனக்கே ரீ கூட போடத் தெரியாததா இருக்கும்.)

47. சேலை கட்டத் தெரியும் என்பது. (சேலைன்னா என்னென்று கேக்கும்.)

48. தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசத் தெரியும் என்பது. (தமிழா.. அது அப்பா அம்மா பேசுறது என்றும்.)

49. ஊரில பெரிய பள்ளியில் படிச்சவள் என்பது. (பிரைவேட் ஸ்கூலில.. காசு கொடுத்து ஓரிரண்டு வருடங்கள் படிக்க விட்டிருப்பினம்.. போய் பிரண்ட் தொல்லை தாங்காம.)

50. ஆங்கிலம் நுனி நாக்கில தவழும் என்பது. (வரும் வரும்.. எல்லாம் f***.b***** போன்ற தூசணமா வரும்.)

51. வருமானத்துக்கு ஏற்ப சமாளிச்சு குடும்பம் நடத்துவாள் என்பது. (எவ்வளவை கஸ்டப்பட்டு உழைச்சாலும்.. என்னத்தை உழைக்கிறா என்று கேட்டு திட்டுத்தான் விழும்.)

52. பூப் போல வளர்ந்தவள், கஸ்டம் தெரியாமள் வளர்ந்தவள் என்பது. (கஸ்டப்பட்டு வளர்ந்திருக்குங்கள் ஆனால் அதை மறைச்சிடுவாங்க.)

53. தாயை வீட்டை பிரிஞ்சு இருந்ததில்ல அவள் என்பது.(தாயை என்ன வீட்டை விட்டே ஓடினதா இருக்கும்.)

54. வீட்டு வேலைகள் எல்லாம் செய்வாள் என்பது. (வீட்டில ரிமூட் அமுக்கவே தங்கச்சியை கெஞ்சிறதா இருக்கும்.)

55. நல்ல சீதனம் தருவம் என்று ஆசை வளர்ப்பது. ( சீதனம் தாறம் என்று சொல்லிப்போட்டு அங்கால கொழுத்த சீதனம் வாங்கினம் என்றும் கதையைக் கட்டி விடுறது.)

56. உடம்பில உள்ளத்தில ஒரு வியாதியும் இல்லை என்பது. (இந்தப் பொய் பெண்ணைப் பெத்தவங்களுக்கு தானா வந்து சேரும்.)

57. கணவனின் கஸ்டங்களை தாங்குவாள் என்பது. ( கணவனுக்கு ஒருவேளை சாப்பாடே செய்து கொடுக்காது.. தாங்கும் தாங்கும்.)

58. குழந்தைகள் மேல் சரியான ஆசை என்பது.( குழந்தை பெத்துக்கும்.. ஆனால் பிறகு நீயும் தானே சேர்ந்து பெத்தா பம்பொஸை மாத்தன் என்றும்.)

59. அவளுக்கு சின்ன வயசு என்பது. (இது கொடுமை.. அதுக்கு 20 25 வயசிருக்கும்.. சின்ன பிள்ளை எண்டுவினம்.)

60. ஏதேனும் உளவியல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றிருந்தால் அதை வயிற்று குத்துக்கு கொஸ்பிற்றலில இருந்தது என்பது. (இது பெண்களின் ரகசியம்.)

61. பெற்றோர் குறிப்பாக பெண்ணின் தகப்பனார் நல்ல உத்தியோகம் பார்த்த படித்த மனிதராக சித்தரிப்பது.( பெரிய இமேஜை கிரியேட் பண்ணுறதுக்குத்தான்.)

62. நிறைய ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட சகோதரங்கள் இருப்பதாக கதை அளப்பது. (உதவிக்கு ஆக்களிருக்கினம் என்று காட்ட.)

63. நிறைய மாப்பிள்ளை பாத்தது எங்களுக்கு பிடிக்கல்லை என்பது. (டிமாண்டக் கூட்ட.)

64. பெற்றோருக்கு நிறைய சொத்து சுகம் இருக்குது பின்னாடி சீதனத்துக்கு மேலவும் இவளுக்குத்தான் கொடுப்பம் என்பது. (குறைய மறைச்சு ஆசையை கூட்ட.)

65. பிள்ளை நல்ல ஒழுக்கம் என்பது. (கெட்டு குட்டிச்சுவராகி.. இப்ப அடங்கி ஒடுங்கி இருக்கும்.)

66. பரம்பரையில ஒரு வியாதியும் இல்லை என்பது. ( எல்லா வியாதியும் வரிசை கட்டி இருக்கும்.)

67. நல்ல ராசிக்காரி இவள் பிறந்த பிறகுதான் எங்களுக்கு எல்லாம் நல்லதா நடந்தது என்பது. (அப்ப தான் தகப்பனுக்கு வேலையே பறிபோய் கஸ்டப்பட்டிருக்குங்கள்.)

68. நல்ல வருமானத்தில வேலை பார்க்கிறாள் என்பது. (வேலை நிரந்தரமில்லாததா இருக்கும்.)

69. வீட்டையும் வேலையையும் கவனிப்பாள் என்பது. ( கூவரே பிடிக்கத் தெரியாததா இருக்கும்.)

70. கார் ஓட்டுவது அவளுக்கு கைவந்த கலை என்பது. (ஆனால் வேகமான கைவேயில கார் ஓட்டப் பயம்.)

71. சரியான சுறுசுறுப்பு ஓரிடத்தில நிற்காது பெட்டை என்பது. (ஒரே சீரியல் பாக்கிற சீதேவியா இருக்கும்.)

72. கண் வாக்கு என்றால் கூளிங்கிளாஸ் போட்டு அல்லது கண்ணாடி போட்டு காட்டிறது. (கண்றாவி பிடிபடுறம் என்று தெரிஞ்சு கொண்டும் இதை செய்யுங்கள்.)

73. ஏதாவது தெரிய வாற பிரச்சனை என்றாள் அவளுக்கு செவ்வாய் வியாழன் சனி தோசம் என்று கிரகங்களில் பழியைப் போடுவது. (அப்பதானே சமாளிக்கலாம் பின்னாடி பிரச்சனை வரும் போது.)

74. நிறைய நகை வைச்சிருக்கிறாள் என்பது. ( தங்களுக்கு சம்பாதிக்க வழி இருந்தது என்று காட்ட.)

75. பாங்கில இவ்வளவு பெரிய சேமிப்பு இருக்கு என்பது. (நான் உனக்கு சளைத்தவள் இல்லை என்று பெருமை பேச வசதிக்கு.)

76. பிள்ளை நல்ல அடக்க ஒடுக்கம் என்பது. ( எல்லாத்துக்கும் மறுத்துப் பேசி.. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல.. வாயால வெட்டிக்கொண்டே இருக்கும்.)

ஆண்கள் மேல மட்டுமே பழி போட்டாங்கன்னு வையுங்க.. பார்த்து இன்னும் இன்னும் தொடரும். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனையும் இல்லாத ஓராளை கண்டு பிடிக்க ரதிக்கு 99 வயதாகிடும்.வாறவரின் வயதை சொல்ல தேவையில்லை.

இந்த மனிசி பிளேனை விட்டதுக்கே இந்த அழுகை அழுகிறா என்றால் பாருங்கோ. :D:(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?

அது எல்லாம் அந்த காலம் ரதி அம்மணி.

இப்போ எல்லாம் நேர்க்கு நேர்.

  • கருத்துக்கள உறவுகள்

அது எல்லாம் அந்த காலம் ரதி அம்மணி.

இப்போ எல்லாம் நேர்க்கு நேர்.

இப்ப மட்டும் என்னவாம் நேருக்கு நேர்.. அவனவன் சிம்காட்டை மாத்தி மாத்தி காட்டுக்கு ஒன்றோட கதைச்சிக்கிட்டு திரியுறாங்கள்.. நீங்க என்னடான்னா..! :D:(

பாடல் :lol:

:D நாடகம்

ஆணோ/ பெண்ணோ வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிலை, ஊரில சம்பந்தம் பண்ணுறவையள் சொல்லுற பொய்யுக்கு அளவே இல்லை...

77. பெட்ரோல் செட்டில்/ சுப்பர் மார்க்கெட்டில் பார்க்கும் வேலையை கவுரவக் குறைச்சலாக தாங்களே நினைக்கிறது பிறகு சம்பந்தம் பேசும் இடத்தில பந்தா காட்டுவதற்கு எங்கட பிள்ளை யுனிவர்சிட்டில படிச்சவன்/ படிச்சவள். (படிச்சது சரி, பாஸ் பண்ணினதா?)

78. பிள்ளையள் இந்தியா பக்கமே போய் இருக்க மாட்டினம், அப்படி போய் இருந்தாலும் விடுமுறைக்குப் போய் இருப்பினம், ஆனால் அங்க பட்டப் படிப்புப் படிச்சதாக போலி சான்றிதழ்கள் வைச்சு இருப்பார்கள். (திருமணம் நடந்த பின்பு இங்கே வந்து பார்த்தாப் பிறகு தான் உண்மை நிலை விளங்கும்)

79. சிலர் போட்டோவைக் காட்டி அளப்பினம்.. (திருமண பேச்சு வார்த்தைகள் முற்றாகி நாளும் குறிச்சிப் பிறகு தான் இங்கிருந்து போய் மண்டையில இடி விழுந்தது மாதிரி இருப்பார்கள்...)

80. எப்பயாவது இருந்துட்டுத்தான் கொஞ்சமா குடிப்பான், குடிக்கேக நேரம் சின்னதா ஒரு சிகிரெட் பத்துவான் என்பார்கள். (ஆனால், பொடியன் ஒரே குடியாத்தான் இருப்பான், நிலக்கரி ரயில் எஞ்சின் கணக்கில புகைஞ்சு தள்ளுவான்...)

81. ஆஸ்பத்திரியில் வேலை செய்தல் அவ்வளவு தான்... உடனே டாக்டர் என்று மார்தட்டிக் கொள்வார்கள்.

82. திருமணமாகி விவாகரத்து ஆனால் அதை இயலுமான வரைக்கும் பெற்றோர் மூடி மறைத்துத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு சம்பந்தம் பேசுகிறார்கள்...

என்ன ஏதோ பொய்களை எல்லாம் ஆம்பிளையான் தான் சொல்லுறது போல எழுதுறீங்க. பொம்பிளையாங்க சொல்லுறதையும் எழுதுங்கோ..!

...

50. ஆங்கிலம் நுனி நாக்கில தவழும் என்பது. (வரும் வரும்.. எல்லாம் f***.b***** போன்ற தூசணமா வரும்.)

...

:(:D :D :(:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பையனின் நிலைபாட்டையே நான் ஆதரிக்கிறன். பொம்பிளப் பிள்ளைக்கு மட்டுமா வாழ்க்கை.. ஏன் ஆம்பிளப் பிள்ளைக்கு அவங்க ஆசைக்கு ஏற்ப வாழ்க்கை அமையனும் என்றதை ஏன் பெரும்பாலான தமிழ் பெற்றோர் புரிஞ்சு கொள்ளுறதில்ல..! தங்கட திருப்திக்கு ஒருத்தியை கட்டிக்கிட்டு அவங்க மாழனும்.. என்றது மாறனும்.. மாறிட்டு வருது.. அது முற்றாக மாறனும்..! :D:(

எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்;

1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது

இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எழுதுங்கள் கட்டாயம் ஆயிரம் பொய் வர வேண்டும் :D:(:D

மாப்பிள்ளை இஞ்சினியர் என்று ஒரு பொய் சொன்னால் ஆயிரம் பொய் சொன்னதற்குச் சமன். திருமணத்தின் பின்னர் அதைச் சமாளிப்பதற்காக ஆயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்.

பொய் சொல்லிப் பேச்சுத் திருமணம் செய்வதால் மட்டும் தான் பாதிபென்றில்லை. இருவர் காதலிக்கும் போது இருவரினதும் பலவீனங்கள் கெட்ட பழக்கங்கள் வெளிப்படுவதில்லை. மறைக்க பட வேண்டியவை மறைக்கப்பட்ட ஏனையவை பாதிப்பாகத் தென்படுவதில்லை. திருமணத்தின் பின்னர் ஒன்றாக வாழும்போது காதலிக்கும்போது இனிமையாகத் தெரிந்தவை வெறுப்பாகத் தோன்ற வாய்ப்புண்டு. மறைக்கப்பட்ட விடயங்களும் பொய்களாகவே கருதப்படும்.

அந்தப் பையனின் நிலைபாட்டையே நான் ஆதரிக்கிறன். பொம்பிளப் பிள்ளைக்கு மட்டுமா வாழ்க்கை.. ஏன் ஆம்பிளப் பிள்ளைக்கு அவங்க ஆசைக்கு ஏற்ப வாழ்க்கை அமையனும் என்றதை ஏன் பெரும்பாலான தமிழ் பெற்றோர் புரிஞ்சு கொள்ளுறதில்ல..! தங்கட திருப்திக்கு ஒருத்தியை கட்டிக்கிட்டு அவங்க மாழனும்.. என்றது மாறனும்.. மாறிட்டு வருது.. அது முற்றாக மாறனும்..! :D:)

ஏன் இல்லை? தைரியம் இருக்கிற ஆண்/ பெண் பிள்ளைகள் தங்கள் வாழ்கையை தாங்களே தான் தீர்மானிக்கிறார்கள்... மட்டறப் படி, பொதுவாக ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண் பிள்ளைகளுக்குத் தான் அவர்கள் ஆசைகள், எதிர் பார்ப்புகளை பெற்றோர்களே கணக்கில் எடுப்பதில்லை... இந்த நிலை இன்னும் பல குடும்பங்களில் காணக் கூடியதாக இருக்கிறது.

எதிர் பார்ப்பு என்பது எல்லாருக்கும் இருக்கக் கூடியது, திருமணமான பின்பு பல எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியும் போது அவைகளையும் சமாளிச்சுக் கொண்டு போகிறார்கள் தானே? இதில் ஆண், பெண் இருவரும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

83. அவர் போட்ட உடுப்பை, திரும்ப போட மாட்டார்.

(மாதக் கணக்கில் ஒரே சட்டையை போடுவார்)

84. சிகரட், சாராயத்தை மாப்பிளைக்கு கண்ணுலையும் காட்டக் கூடாது.

(காட்டினால்..... பிசாசு மாதிரி பறந்து வந்து, பறிச்சு அடிச்சுப் போடுவார்)

.

.

83. அவர் போட்ட உடுப்பை, திரும்ப போட மாட்டார்.

(மாதக் கணக்கில் ஒரே சட்டையை போடுவார்)

84. சிகரட், சாராயத்தை மாப்பிளைக்கு கண்ணுலையும் காட்டக் கூடாது.

(காட்டினால்..... பிசாசு மாதிரி பறந்து வந்து, பறிச்சு அடிச்சுப் போடுவார்)

.

:):D:lol::o:D

85. தம்பிக்கு லைபிரரியை தவிர ஒன்றும் தெரியாது, எப்பவும் புத்தகமும் கையும் தான்.

(ஆனால் இங்கு தம்பிக்கு லைபிரரி தான் தெரியாது, மிச்சமெல்லாம் தெரியும்).

  • கருத்துக்கள உறவுகள்

86. மாப்பிழை கார் வைத்திருக்கிறார்.

( லைசன்ஸ் குடுக்கவே... மாட்டாங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

87 . மாப்பிள்ளை எங்கு போனாலும் காரில் நாலு பேரை அழைத்து செல்வார்.

( கார் தள்ளுவதற்கு).

88 . மாப்பிள்ளை எந்த பொம்பிளைகளையும் நேரே பார்க்க மாட்டார்.

( அவருக்கு வாக்குக்கண்).

89 . பெண் உங்க பையனைத்தான் முடிப்பேன் என்று ஒற்றைக் காலில் நிக்கிறாள் .

( மற்றக் கால் ஊனம்).

90 . பாருங்க பெண் எவ்வளவு அழகு. ( திரிசாவின் படம் )

( என்ன திரிசா போல.... ஓம் ஓம் இவ அவவின்ர விசிறி)

91 . இந்த படத்தை பாருங்க. ஓம் அழகாயிருக்கிறா.

( மெதுவாக இவவின் அக்காதாண்டா நீ கட்டப் போறவ)

  • கருத்துக்கள உறவுகள்

92. மாப்பிளைக்கு பற்றி வீக்கு..

(பக்கத்து வீட்டுக்காரன் கொண்டாட்டம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கலைஞன் நீங்கள் கூட கல்யாணத்தை வெறுத்த மாதிரி எழுதிறீங்கள்...எப்போதில் இருந்து நெடுக்சை போல மாறீனிங்கள்?...ஆனால் எப்படி தான் எல்லோரும் எழுதினாலும் நூறு பொய் வருதில்லையே...இலங்கை தமிழரைப் பொறுத்த வரையில் பொண்ணுக்கு ஆடத் தெரியுமா,பாடத் தெரியுமா எனக் கேட்பதில்லை

93. உங்கட மகளுக்கு சீதனமா நீங்கள் ஒன்றும் தர குடுக்க வேண்டாம்... (பெண்ணின் குடும்பத்தினர் ஆனத்ததில் அரை நொடி திளைக்க...) ஆனால் எங்கட மகனை நாங்கள் பட்டப் படிப்பு வரை படிபிச்சு இருக்கிறம் தானே, அதனால் அந்த படிபிச்ச கடனை நீங்கள் அடைச்சு விட்டால் சரி.... (படிச்சா காலத்தில மாப்பிள்ளை நைட் கிளப்ல நாலு அல்பேனியன் பெட்டையளோட குமாளம் அடிச்ச செலவும் சேருமதி... )

94. மாப்பிளைக்கு கோபமே வராது... (கஞ்சா ஊதிப் போட்டு தன்ர பாட்டில சிரிச்சுக் கொண்டு இருப்பான்...)

இப்ப எல்லாம் வெள்ளை இனத்தவருடன் (பொதுவாக பள்ளி, வேலை இடங்களிலிருந்து) எம்மவர்கள் கைகோர்த்து மக்டோனல்ட், பார், பார்க், நைட் கிளப் என்று போவதைக் காணக் கூடியதாக இருக்கு.... (அங்க போய் ஒரு இடத்தில் இருந்து பண்ணும் கறுமம் கண்றாவியளை எல்லாம் அவர்களுக்குத் திருமணம் என்று பெற்றோகள் பேச்சை எடுக்கும் போது, இவைகள் எல்லாத்தையுமா வெளிப்படையாக சொல்லுகிறார்கள்?)

இணையவன் சொன்னது மாதிரி ஒரு பொய் சொல்லி திருமணம் முடிந்தாப் பிறகு அந்தப் பொய்யை உண்மையாக்குவதற்கு ஆயிரம் இல்லை அதற்கு மேலும் பொய் சொல்லி உண்மை போல் ஆக்கிவிடுவார்கள்... :)

நிறைய எழுதலாம் எழுதவேணும் அப்போது இதுபற்றி கொஞ்சம் விரிவாக எழுதிபோடுகிறன் ரதி.

மற்றும்படி நெடுக்குக்கு நான் முண்டு குடுக்க இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.