Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்:விமல்வீரவன்ஸ

Featured Replies

என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்:விமல்வீரவன்ஸ

திகதி: 10.07.2010 // தமிழீழம்

யார் வற்புறுத்தினாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினை கைவிடப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ இன்று அறிவித்திருக்கிறார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி, இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் நேற்று முன்தினம் தனது உண்ணாவிரதத்தினை அவர் ஆரம்பித்திருந்தார். 3ஆவது நாளாகவும் தனது உண்ணாவிரதத்தினை அவர் தொடர்கின்றார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி என்னை வற்புறுத்தினாலும் நான் என்னுடைய விரதத்தினை முடிக்கப்போவதில்லை. என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும். உண்ணாவிரதத்தினைத் தொடர்ந்து நான் இறந்தால் அதற்கு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலக ஊழியர்களும் பான்கி மூனும்தான் பதில்கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ

http://www.sankathi.com/index.php/news/10118/51//d,fullarticle

-------

உயிர் என்பது எல்லாருக்கும் ஒன்று தானே? ஒரு உயிர் போனால் ஐ.நா பதில் சொல்ல வேண்டும் என்பது நியாயமானால் ஐம்பது ஆயிரம் உயிர்களை அநியாயமாகக் கொன்று ஓராண்டும் முடிந்தாகி விட்டது... அதற்கு ஐ.நா.வின் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

halfords-black-plastic-diesel-can-10l.jpg

விமல்வீரவன்ஸ...மண்ணெணைய் தான் சரி 10 லிட்டர் கேன் ஒன்று அனுப்பவா?... என்ன இங்கும் பெட்ரோல் டீசல் மண்ணெனைய் விலை ஏற்றி விட்டர்கள்... இருந்தாலும் தங்களின் கொள்கை உறுதிக்காக இதை நான் அனுப்பிவைக்கிறேன்... அட்ரஸ் பிளீஸ்... விலாசம் .. விலாசம்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடகத்துக்கு யார் கதை எழுதினது :):D:lol::o

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் முடித்து அங்கே சாமதியும் ஸ்தூபியும் எழுப்பிவிடுவார்களோ? இங்கேயும் ஒரு [தறு]தலை இருக்கு உண்ணா விரதத்திற்கு புது இலக்கணமாக!

wim60011.jpg

தோழர் வீரவன்ஸா, யமனுக்கே வாயுக்குள்ளை வைப்பான் போலிருக்குது! .. உதை ஏற்றிக்கொண்டும் ... சாகிற கதையும் விடுகிறான்! :)

தோழர் வீரவன்ஸா, .. இப்படியே படுத்த படுக்கையிலோ மூத்தா.கக்கா செய்கிறார்? ... உந்த நர்சுகளோ எடுக்கிறார்கள்?? ... கொடுத்து வச்சவனடாப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

[

தோழர் வீரவன்ஸா, யமனுக்கே வாயுக்குள்ளை வைப்பான் போலிருக்குது! .. உதை ஏற்றிக்கொண்டும் ... சாகிற கதையும் விடுகிறான்! :lol:

இதெல்லாம் ஒரு பம்மாத்து நெல்லை அண்ணை.. கொஞ்ச நாள் கழிச்சு பாருங்கோ உவன் கம்பிரமா நடப்பான்..உந்த கேவலம் கெட்டதுவல பற்றி தமிழனுக்கு நல்லாவே தெரியும்... :):D

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் முடித்து அங்கே சாமதியும் ஸ்தூபியும் எழுப்பிவிடுவார்களோ? இங்கேயும் ஒரு [தறு]தலை இருக்கு உண்ணா விரதத்திற்கு புது இலக்கணமாக!

e973cb2ab862ea9c943ad74fe7f858b7.jpg

:o:):D:lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவியளக் கொல்லாதீங்கோடா கொல்லாதீங்கோடா எண்டு ஐநாவிடமும் முழு உலகத்திடமும் கெஞ்சி தீக்குளிச்சுச் செத்தும், உண்ணாவிரதமிருந்தும் ஒரு பயனும் கிடைக்கயில்ல.

உவனோ கொன்ற எங்களை விசாரியாதீங்கோடா எண்டு தனியாளா நிண்டு வெற்றிபெறப் போறான் போலக்கிடக்குது.

அந்தளவுக்கு நாதிகெட்டுப் போய் நாங்கள் கிடக்கிறம்.

உலகத் தமிழனுக்கு வெட்கமில்லை. தமிழ் நாட்டில கொஞ்சப்பேர் ஏதோ தங்களால முடிஞ்சதைச் செய்யினம்.

சர்வதேசத்தாலயும் கணக்கில எடுக்கப்படுகிற இனமாகத் தமிழன் இல்லாத நிலையில எதாலையும் பலன் வராது.

தமிழ்த் தேசியமொண்டு உருவாகினாலொழிய உந்த இழிநிலைபோகாது. உருவாகினதையும் அழிச்சுப் போட்டாங்கள்.

விசயம் விளங்கினவை குறைஞ்சுகொண்டு போகினம். மெல்லத் தமிழினம் சாகும் போலத்தான் கிடக்குது.

வீரவன்சவின் உண்ணாவிரதம் அப்பட்டமான சாட்சியம் [ வலம்புரி ] - [ Jul 10, 2010 04:00 GMT ]

“அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல் வர் மக்கட்பண்பில்லாதவர்” என்பது வள்ளுவரின் முடிபு. பிற ஆயுதங்களை கூர்மையாக்கக் கூடிய அரத்தின் கூர்மை எத்துணை சிறப்பானதோ அது போன்றவர்கள் சீரிய அறிவுடையவர்கள். அவர்களிடம் சீரிய அறிவு இருந்தாலும் பண்பு இல்லையேல் அவர்கள் மரத்திற்கு ஒப்பானவர் கள் என்பது இதன் பொருளாகும்.

அதீதமான அறிவுடையவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பண்பில்லையாயின் அவர் கள் மரத்திற்கு இணையானவர்களெனில், அறிவும் இல்லாமல், பண்பாடும் தெரியாமல் இருப்பவர்களை எதற்கு ஒப்பிடலாம் என்று கேட்பதற்கு வள்ளுவர் உயிரோடில்லை. அத்தகையதொரு கேள்விக்கு வள்ளுவர் உயிரோடு இருந்தாலும் பதிலளிக்க முடியாதென் பதே எமது தாழ்மையான கருத்து. இந்தக் கருத்தை நாம் முன்வைப்பதற்கு விமல் வீரவன்சவே காரணமாக இருக்கின் றார். இலங்கையில் நடந்த போர்க்குற்றங் களை விசாரிப்பதற்கு ஐ.நா. சபை முயற்சி களை மேற்கொண்டிருக்கும்போது, கொழும்பி லுள்ள ஐ.நா.தூதரகத்திற்கு முன்பாக விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஆர்ப் பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் வளர்ச்சி குன்றிய பண்பாட்டை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டியது. இதற்குமேலாக இப்போது விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். வன்னி யுத்தத்தின்போது இராணுவத் தள பதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, ஐ.நா.சபை மேற்கொள்ளும் விசாரணையை அரசு எதிர்கொள்ளவேண்டும் எனக் கூறுகிறார். போரின்போது ‘குற்றம்’ இடம்பெற வில்லை எனில் அச்சமின்றி, ஐ.நா.விசாரணைக் குழுவை எதிர்கொள்ள முடியும் என்பது அவரின் வாதம்.

யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா இவ்விதம் கூற, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணா விரதமிருப்பது எதற்காக?

வன்னியுத்த வெற்றியில் தனக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வதற்காகவா? எல்லாமே அறியாமையின் வெளிப்பாடு.

எல்லா நேரத்திலும் ஏமாற்றுவித்தை அரங்கேற மாட்டாது. சிலவேளைகளில் ஏமாற்று நாடகங்கள் செய்த குற்றங்களுக்கான அப்பட்ட மான சாட்சிகளாகவும் அமைந்துவிடுவது வழக்கம்.

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை திலீபன் ஒருவனே.. அவனுக்கு நிகர் யாருமில்லை.. விமல் வீரவன்ச அல்ல யாருமே உன் கால் தூசிக்கு கூட சமமாகமாட்டார்கள்... மீண்டும் ஒருதரம் உன்னை நினைப்பூட்டியமைக்கு ராஜபக்ச சகோதரர்களுக்கு நன்றிகள்...

இத்தகைய தியாகத்தினை செய்த தமிழினத்திற்குள்ளேயே குள்ள நரிக்கூட்டங்களும் அதிகம்..

  • கருத்துக்கள உறவுகள்

விமல்வீரவன்ஸாட உண்ணா விரதமும் மண்ணாங்கட்டியும் :D ..பொய் சொல்ல கூடாது மகிந்தா நடிக்க சொன்னத விட நல்லா நடிச்சு இருக்கிறான்.. :):D

நான் நினைக்கிறன் இவனுக்கு முத்துவேல் கருணாநிதி தான் பயிற்ச்சி குடுத்து இருக்கனும் என்று... :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்:விமல்வீரவன்ஸ

......

DSC_0715_600.jpg

இவனுக்காக வாங்கிய சவப்பெட்டி வீணாய் போச்சுதே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனுக்காக வாங்கிய சவப்பெட்டி வீணாய் போச்சுதே......

கஜேந்திரன் 40000 சவப்பெட்டி ஆர்மிக்கு வேண்டி வச்சு பிறகு வன்னிச்சனத்திற்கு கொடுத்தவர். அத மாதிரி இதயும் வச்சிருங்கோ. விரைவில யாரும் தமிழனுக்கு தேவைப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் 40000 சவப்பெட்டி ஆர்மிக்கு வேண்டி வச்சு பிறகு வன்னிச்சனத்திற்கு கொடுத்தவர். அத மாதிரி இதயும் வச்சிருங்கோ. விரைவில யாரும் தமிழனுக்கு தேவைப்படும்.

உனக்கு சோறுபோடும் ஆமி நாய்களின் கணக்கில் 27000 குறையுது....

இதை மாத்தையதக்கள் சொல்லவில்லையோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கு சோறுபோடும் ஆமி நாய்களின் கணக்கில் 27000 குறையுது....

இதை மாத்தையதக்கள் சொல்லவில்லையோ??

உனக்கு இரத்தக்கொதிப்பு கூடிப்போச்சு. :lol:

என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்:விமல்வீரவன்ஸ

திகதி: 10.07.2010 // தமிழீழம்

யார் வற்புறுத்தினாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினை கைவிடப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ இன்று அறிவித்திருக்கிறார்.

சிங்கள பயங்கரவாதிகளின் போலி நாடகப் பின்னணி வெளிப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு இரத்தக்கொதிப்பு கூடிப்போச்சு. :lol:

எமது உடலில் ஓடுவது இரத்தம்........... அது கொதிக்கும் துடிக்கும் அது சாரதாரண மனிதனின் உடலில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்ச்சி.

அதை சுட்டிகாட்டி வியந்து பார்பபதற்கு எமது உடலில் சிங்களவனின் மலம்மும் சலமும் இரத்தமாக இல்லை.

உடலுக்குள் என்ன உள்ளது என்பது வாய்வழியாக நாறியே ஆகும். அதை இதை சாட்டி அதை மறைக்க முற்பட்டவர்கள் பலபேர் இந்த யாழ்களத்தில்.

"அகத்தின் நிலையை புறம் கூறும்"

என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்: விமல் வீரவன்ச

மஹிந்த கேட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்: விமல் வீரவன்ச

தப்பிறதுக்கு ஏற்றமாதிரி Backup plan ஓடை தான் மாத்தையா படுத்திருந்திருக்கிறார்.

35786_137054606322559_100000540619953_287575_1008644_n.jpg

... "மஞ்சி பிரான்ட் லெமன் பவ்" இன் அருமையை தோழர் ... இவ்வுண்ணாவிரதத்தின் பின் நன்கறிந்திருப்பார் .. :lol:

இவர்களால் திலீபனாக பூபதிகளாக ஆகிவிட முடியாது. பம்மாத்து வேலைகளை மட்டும்தான் செய்ய முடியும். பான்கி மூனுக்கு வழி சொல்லிக் கொடுத வீரவன்ச.

விமலின் நகைச்சுவை நாடகத்தை தயாரிப்பாளரான ஜனாதிபதி நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளார்- கயந்த _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25291

இவர்களால் திலீபனாக பூபதிகளாக ஆகிவிட முடியாது. பம்மாத்து வேலைகளை மட்டும்தான் செய்ய முடியும். பான்கி மூனுக்கு வழி சொல்லிக் கொடுத வீரவன்ச.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் திலீபனாக பூபதிகளாக ஆகிவிட முடியாது. பம்மாத்து வேலைகளை மட்டும்தான் செய்ய முடியும். பான்கி மூனுக்கு வழி சொல்லிக் கொடுத வீரவன்ச.

உண்ணாவிரதம் என்றால் திலீபனிடம் கற்றுக்கொள்ளுங்கள் : சிறிதுங்க ஜயசூரிய

உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை தியாகி திலீபனிடம் ஜனாதிபதியின் இயக்கத்தில் நடித்த விமல் வீரவன்ச கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தவறு செய்யவில்லை என்றால் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு முகம் கொடுக்க ஏன் தயங்குகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிபுணர் குழுவை கலைக்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை தொடரப் போவதாகவும் அதன் போது தனது உயிர் பிரிந்தால் போராட்டத்தை தொடருமாறும் தனது ஆதவாளர்களிடம் கோரிக்கை விடுத்த விமல் வீரவன்ச, ஐ.நா.வின் நிபுணர்குழு கலைக்கப்படாத போதும் அவருடைய உண்ணாவிரதத்தினை கைவிட்டுள்ளார்.

பொது மக்களை ஏமாற்றி மகிந்தராஜபக்சவும் விமல் வீரவன்சவும் மேற்கொண்ட நாடகம் இன்று அம்பலமாகியுள்ளது.

அது மாத்திரமல்லாமல் இந்த செயற்பாட்டால் எமது நாடு உலக நாடுகள் மத்தியில் கேலிக்கிடமாகியுள்ளது. எமது நாட்டில் இரண்டு மூன்று தினங்கள் உண்ணாமல் இருப்பவர்கள் ஏராளம் உள்ளனர்.

இவர்கள் மத்தியில் விமல் வீரவன்ச செய்வதை எப்படி உண்ணாவிரதம் என்று கூறுவது.

விமல் சாகும்வரையில் ஒரு போதும் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்த நிபுணர் குழுவை கலைக்கப் போவதும் இல்லை.

சாகும் வரையிலான உண்ணாவிரமென்றால் என்னவென்பதை தியாகி திலீபனிடம் இவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.

மாறாக பொதுமக்களை ஏமாற்றி இப்படியான கோமாளி நாடகங்களை அரங்கேற்றி எமது நாட்டிற்கு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilulakam.com/news/view.php?id=13808

ஜயோ... ஜயோ.... இரண்டு முன்று மணிநேரம் எல்லாம் இப்ப உண்ணாவிரதம் இருக்கிறது பாசனா போயிட்டுது, அதாவது காலைசாபாட்டுக்கு பின் மதியசாப்பாட்டுக்கு முன், கிழட்டுகருனாவிடம் கேட்டால் ஜடியாவா எடுத்து விடுவாரே. :lol::lol:^_^

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.