Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மழைத் துளிகள்...: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை கண்ணயர்ந்தபோது, 'நேரம் மணி 7:02 இன்னும் அலார்ம் மணி அடிக்கவில்லை' என்று ஒரு நினைவு வந்தது. எழும்பி நேரத்தைப் பார்த்தால் 7:02. இது எப்படி? :lol::lol:

  • 11 months later...
  • தொடங்கியவர்

கிடத்தட்ட ஒரு வருடத்தின் பின் மீண்டும் இந்த திரியை வளர்க்க முயல்கின்றேன்... இந்த திரியை தேடி எடுக்கவே அரை மணித்தியாலம் போய் விட்டது. இதில் மனதில் தோன்றும் அனைத்தையும் எழுதுவோம் என்று நினைத்து மீண்டும் ஆரம்பிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

கண்டது கரியது, நிண்டது நிமிர்ந்தது............

உள்ளத்தைக் தீண்டும் உணர்சிகளை எல்லாம் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

நேற்று மகனையும், மகளையும் காரில் ஏற்றிக் கொண்டு Shopping செய்து விட்டு வரும் போது மரண ஊர்வலம் ஒன்று போனது

"ஏன் அப்பா எல்லா காரிலும் Emergency சிக்னல் போட்டு விட்டு line ஆக ஓடுகிறார்கள்?" (இங்க செத்த வீட்டு ஊர்வலம் இப்படித் தான் போகும்)

"அது Funeral ஊர்வலம்...Dead body ஒன்றை கொண்டு போறார்கள்"

சில வினாடிகள் மௌனம்

"கொண்டு போய் என்ன செய்வினம்"?

"hindu என்றால் எரிப்பினம்...முஸ்லிம் அல்லது Christian என்றால் bury (புதைத்தல்) பண்ணுவினம்"

"bury என்றால் என்ன என்று தெரியுமோ உங்களுக்கு"? நான் கேட்டன்

"ஓம் ..நிலத்தை Dig பண்ணி பிறகு மண்ணை போடுவது தானே"

"ஓம்...அப்படி தான் dead body யை செய்வினம்"

"ஏன்"

"அப்படி செய்யாட்டி ரோட்டில செத்து கிடக்கும் Animal போல bad Smell வரும்"

மீண்டும் மௌனம்

"அப்ப hindu என்றால் ஏன் burn பண்ணுவினம்"?

"ஒவ்வொரு ஆட்களும் ஒரு மாதிரி... bad ஸ்மெல் வரக் கூடாது என்று செய்வினம் "

"நான் செத்தால் என்ன செய்வீங்கள்" நான் அவன் கேட்க கூடாது என்று பிரார்த்தித்த கேள்வியை உடனேயே கேட்டான்

"burn பண்ணதானே வேண்டும்" (Cremation என்ற வார்த்தையை போட்டால் அவனுக்கு விளங்க கடினம் என்று இதை பயன் படுத்தினேன்)

"ஏன்"

"because நீங்கள் செத்தாலும் bad smell வரும்...ஆனால் நீங்க சாக முதல் நான் செத்து விடுவண்டா" என்று மனம் கேளாமல் சொன்னேன்

"அப்ப உங்களை burn பண்ணவேண்டுமா"

"இல்லை "

"bury பண்ண வேண்டுமா"

"இல்லை"

"ஏன்"

"நானோ அம்மாவோ செத்தால் எங்கள் உடம்பை university க்கு கொடுக்க வேண்டும்"

"bad smell அடிக்காதா"

"இல்லை. அங்கு Lab என்ற ஒன்று இருக்கு அதில் வைத்தால் அப்படி ஸ்மெல் வராது "

"ஏன் உங்களை மட்டும் அப்படி செய்ய வேண்டும்..என்னை மட்டும் எரிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள் அப்பா..."?

"ஏனென்டால் நாம் செத்தால் கம்பசுக்கு கொடுக்க சொல்லி எழுதி கொடுத்து இருக்கின்றோம்" ...."உங்களுக்கு என்னால் விளங்க படுத்த முடியாது...நீ பெரிசாக வளர வேண்டும்"

அதன் பின் அவன் முழுதும் மௌனம் காத்தான்... "அப்பா இப்படித் தான் ஆ ஊ என்றால் நீ பெரிசானால் தான சொல்ல முடியும் என்று இடையில் விட்டு விடுவார்" என்ற வெறுப்பில் அவன்.. இந்த கோதாரியை இவனுக்கு; ஆறு வயது மகனுக்கு எப்படி விளங்கப் படுத்துவது என்ற குழப்பத்தில் நான்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லாவிட்டாலும் அவன்அதற்கான பதிலைத்தேடுவதை நிறுத்தப்போவதில்லை

தற்போதைய பையன்கள் எம்மைவிட கற்பூரங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின் அவன் முழுதும் மௌனம் காத்தான்

இந்த மெளனத்துக்கு பின் பல கேள்விகள் காத்திருக்கின்றன.

அதைக்கேட்கும் ஆவலுடன்...........

முன்பு ஊரில் சிறுவர்களை மரணச் சடங்குகளுக்குக் கூடிக் கொண்டு போகமாட்டார்கள், அவர்களுக்கு மரணத்தைப் பற்றி அறியும் மனப் பக்குவம் இல்லை என்பதால்... ஆனால் இன்று ஊரில் இருக்கும் சிறுவர்களுக்கு மரணத்தைப் பற்றி நிறையவே தெரிந்த்திருக்கிறது... அதே நேரம் அந்த தாக்கங்களால் பல சிறுவர்கள் மனம் பேதலித்துப் போய், விரக்த்தியாக இருக்கிறார்கள்.

ஆறுவயதுப் சிறுவனுக்கு இது அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் விடையம்... உங்கள் மகனின் வயது சார்ந்த சிறுவர்கள் நடுவில உங்கட மகனை miserable ஆக பார்க்க நினைக்காதேயுங்கோ. மரணத்தைப் பற்றி அறிய ஆறுவயது சிறுவனுக்கு இன்னும் காலம் இருக்கு...

சில விடையங்கள் பெற்றோர் சொல்லியும், சில விடையங்கள் நண்பர்கள் சொல்லியும், சில விடையங்களை உங்கள் அனுபவத்தின் வாயிலால நீங்கள் அறிந்தது போல் அவர்களும் அறியும் காலத்தில் அறிந்தது கொள்வார்கள். வீண் குழப்பங்களுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மகனையும், மகளையும் காரில் ஏற்றிக் கொண்டு Shopping செய்து விட்டு வரும் போது மரண ஊர்வலம் ஒன்று போனது

"ஏன் அப்பா எல்லா காரிலும் Emergency சிக்னல் போட்டு விட்டு line ஆக ஓடுகிறார்கள்?" (இங்க செத்த வீட்டு ஊர்வலம் இப்படித் தான் போகும்)

"அது Funeral ஊர்வலம்...Dead body ஒன்றை கொண்டு போறார்கள்"

சில வினாடிகள் மௌனம்

"கொண்டு போய் என்ன செய்வினம்"?

"hindu என்றால் எரிப்பினம்...முஸ்லிம் அல்லது Christian என்றால் bury (புதைத்தல்) பண்ணுவினம்"

"bury என்றால் என்ன என்று தெரியுமோ உங்களுக்கு"? நான் கேட்டன்

"ஓம் ..நிலத்தை Dig பண்ணி பிறகு மண்ணை போடுவது தானே"

"ஓம்...அப்படி தான் dead body யை செய்வினம்"

"ஏன்"

"அப்படி செய்யாட்டி ரோட்டில செத்து கிடக்கும் Animal போல bad Smell வரும்"

மீண்டும் மௌனம்

"அப்ப hindu என்றால் ஏன் burn பண்ணுவினம்"?

"ஒவ்வொரு ஆட்களும் ஒரு மாதிரி... bad ஸ்மெல் வரக் கூடாது என்று செய்வினம் "

"நான் செத்தால் என்ன செய்வீங்கள்" நான் அவன் கேட்க கூடாது என்று பிரார்த்தித்த கேள்வியை உடனேயே கேட்டான்

"burn பண்ணதானே வேண்டும்" (Cremation என்ற வார்த்தையை போட்டால் அவனுக்கு விளங்க கடினம் என்று இதை பயன் படுத்தினேன்)

"ஏன்"

"because நீங்கள் செத்தாலும் bad smell வரும்...ஆனால் நீங்க சாக முதல் நான் செத்து விடுவண்டா" என்று மனம் கேளாமல் சொன்னேன்

"அப்ப உங்களை burn பண்ணவேண்டுமா"

"இல்லை "

"bury பண்ண வேண்டுமா"

"இல்லை"

"ஏன்"

"நானோ அம்மாவோ செத்தால் எங்கள் உடம்பை university க்கு கொடுக்க வேண்டும்"

"bad smell அடிக்காதா"

"இல்லை. அங்கு Lab என்ற ஒன்று இருக்கு அதில் வைத்தால் அப்படி ஸ்மெல் வராது "

"ஏன் உங்களை மட்டும் அப்படி செய்ய வேண்டும்..என்னை மட்டும் எரிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள் அப்பா..."?

"ஏனென்டால் நாம் செத்தால் கம்பசுக்கு கொடுக்க சொல்லி எழுதி கொடுத்து இருக்கின்றோம்" ...."உங்களுக்கு என்னால் விளங்க படுத்த முடியாது...நீ பெரிசாக வளர வேண்டும்"

அதன் பின் அவன் முழுதும் மௌனம் காத்தான்... "அப்பா இப்படித் தான் ஆ ஊ என்றால் நீ பெரிசானால் தான சொல்ல முடியும் என்று இடையில் விட்டு விடுவார்" என்ற வெறுப்பில் அவன்.. இந்த கோதாரியை இவனுக்கு; ஆறு வயது மகனுக்கு எப்படி விளங்கப் படுத்துவது என்ற குழப்பத்தில் நான்

எமது பாடசாலை நாட்களில் (இங்கல்ல) எத்தகைய கேள்விக்கு விடை என்றாலும் யாராவது தெரிந்தவரை கேட்போம் அல்லது ஏதாவது புத்தகங்களை தேடி எடுத்து வாசித்து அறிவோம். சில வேளைகளில் மட்டுமே எமது சந்தேகங்கள் தீர்ந்துள்ளன. இன்றைய நவீன உலகில் விரல் நுனியில் விடைகளை கண்டு பிடிக்கக்கூடியளவில் அதிஸ்டக்கார சிறுவர்களாக வாழ்கிறார்கள்.அவர்களுக்கு அறிவுத்தாகம் மட்டும் இருந்தால் போதும்.மற்றவை அவர்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லாவிட்டாலும் அவன்அதற்கான பதிலைத்தேடுவதை நிறுத்தப்போவதில்லை

தற்போதைய பையன்கள் எம்மைவிட கற்பூரங்கள்

:D :D :D :D :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் 'சத்திய சோதனை' நன்றாகப் போகின்றது!

என்ன காரணம் கொண்டும், வாழ்வின் யதார்த்தத்தில் இருந்து, தூர விலகாமல் எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புது இடத்தில் உள்ளேன், முன்னையதை விட சிறிய நகரம்..பிணைப்புகளும் கூடப்போல இருக்கு. பல நாட்களுக்கு பின் நண்பர்களுடன் வெளியே சென்றேன். நான் நினைக்கிறன் "தெலுங்கில்" ஒ சோன, ஒ சோன..போட்டார்கள், எனையறியாமல் - ஒ ரகுமானின் ஒஸ்கருக்கு பிந்திய பட்டென்று சொன்னேன்..உங்கள் மொழியில் கிட் அனா பிறகு தங்கள் மொழிக்கும் டப் செய்தது என்று சொன்னார்கள். எதோ சந்தோசம். தமிழ் நட்டு தமிழர்கள் ஹிந்தி படிப்பதில்லை என்றார்கள், அது பற்றி சொல்ல எனக்கு தெரியாது ஆனால் அவர்கள் தனித்துவம் போன விரும்பலாம் என்று சொன்னேன்.- ஏற்றுகொண்டார்கள்.

உங்கள் மகனுடுடனான உரையாடல் இன்னுமொருவருக்கு சொல்லகூடிய வகையில்/ பகிரக்கூடிய வகையில் நன்றாகவும், இயல்பாகவும் உண்டு.ஒரு வைத்தியனுடைய முதலாவது/ அல்லது முக்கிய கருமம், தனது ஆசியருக்கு பணி செய்தல், அந்த ஆசியர் தன்பணி செய்ய உதவுபவற்ரில் முதலானது உடல்களே, அதற்க்கு உங்களையும் தந்ததை இட்டு மனம் நெகிழ்கிறோம்.

உங்கள் Facebook தொடர்பான பதிவு நன்றாக உள்ளது.

இதைபற்றி இங்கே சொல்லலாமோ தெரியவில்லை, ஆனால் இன்று பேசிய ஒருவிடயம், குடிப்பதை பற்றி, ஒரு நண்பர் இங்கே வேலை செய்கிறார் ஒரு வைத்தியர் அக, சொன்னது..எதோ ஒரு இடத்தில் நீங்கள் குடித்து விட்டு வைத்தியம் பார்த்திருக்கிறீர்களா என்ற போது, இப்போது இல்லை ஆனால் சில காலத்திர்ற்கு முன் செய்தது என்றார். ஆனால் சொன்ன விடயம் வியப்பில் ஆழ்த்தியது, அந்த நேரத்தில் தான் தனது மனையோடு என்ன கதைத்து என்பது மனைவி சொன்னாலும் ஞாபகம் வருவதில்லையாம், ஆனால் அந்த நேரத்தில் கேட்ட, கிரகித்த ஒவ்வொரு சின்ன சின்ன மருத்துவ விடயங்களும், மறப்தில்லையாம் என்றால். என்னெனில், தான், தன்னுடன் சேர்ந்த்தவர்களுக்கு, மருத்துவம் உயிர், அதை சார்ந்துதான் என்னவாக இருத்தலும் இருக்கிறது என்று சொன்னார்.

இன்று மருத்துவம், பல இடங்களில் தனது "நிலையை" இழந்தாலும், இன்னும் இன்னும் புதிதாக மருத்துவர்கள் வர காரணமாய் இருப்பது, இப்படி மனைவிக்கு மேல்/ முதல் மருத்துவத்தை "கலியாணம்" செய்த புண்ணியவாங்களாலும், அதற்காக அந்த வட்டம் தொடர வேண்டும் என்கிற நோயாளிகள், நலன்விரும்பிகள் ஆல்தான்.

நன்றாக உள்ளது நிழலி. தொடருங்கள்.

திரியின் திகதியை பார்த்தபோது, 16 /7 . ஆண்டை கவனிக்கவில்லை. மீண்டும் தூசு தட்டியதற்கு நன்றி.

நானும் பீசா கடையில் படிக்கிற காலத்தில் வேலை செய்தவன் தான். இப்படியான் அனுபவங்களை கோர்க்கும் எண்ணம் வந்ததில்லை. அழகாக கோர்க்கவும் தெரியாது. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி..... நிஜத்தை அதிகமாகவே தொடுவதால் நெஞ்சம் ஏனோ அழுகின்றது...... :(

  • கருத்துக்கள உறவுகள்

மழைத்துளியில் நனைவதில் ஒரு சுகமுண்டு நாங்கள் நனைகின்றோம் நீங்கள் தொடருங்கள் நிழலி .................

  • தொடங்கியவர்

மகனுடனான உரையாடல் பதிவுக்கு பதில் எழுதிய அனைவருக்கும் நன்றி

ஆறுவயதுப் சிறுவனுக்கு இது அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் விடையம்... உங்கள் மகனின் வயது சார்ந்த சிறுவர்கள் நடுவில உங்கட மகனை miserable ஆக பார்க்க நினைக்காதேயுங்கோ. மரணத்தைப் பற்றி அறிய ஆறுவயது சிறுவனுக்கு இன்னும் காலம் இருக்கு...

சில விடையங்கள் பெற்றோர் சொல்லியும், சில விடையங்கள் நண்பர்கள் சொல்லியும், சில விடையங்களை உங்கள் அனுபவத்தின் வாயிலால நீங்கள் அறிந்தது போல் அவர்களும் அறியும் காலத்தில் அறிந்தது கொள்வார்கள். வீண் குழப்பங்களுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள் :)

எனது அப்பா நாம் பதின்ம வயது வரும் வரைக்கும் தொடர்ந்து உரையாடிக் கொண்டு இருந்தார். இன்னதான் என்று இல்லாமால் எல்லா விடயங்கள் பற்றியும் கதைப்பார். " சாபிட்டியா", "இன்று என்ன படித்தாய்", "ஸ்கூலில் என்ன பாடம்" போன்ற வழக்கமான விடையங்களாகவன்றி பல விடயங்களைக் கதைப்பார். யாழ்பாணத்தில் இருந்த காலத்தில் சைக்கில் கைதடி வெளியிலும் பனை வடலிகளினூடும் Bar இல் வைத்து கொண்டு செல்லும் போது கதைத்த பல விடயங்கள் மிகவும் ஆழமாக பதிந்து இப்பவும் நினைவில் நிற்கின்றது. பதின்ம வயதை அடைந்த பின் எல்லா அப்பன் பிள்ளைகளுக்கும் இடையே தோன்றும் இடைவெளி எனக்கும் அப்பாவுக்கும் இடையே தோன்றினாலும், ஒருவரின் மனதை, செயலை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையை சிறு வயது உரையாடல் ஏற்படுத்தி இருந்தது. அப்பா இப்படி என்றால் அம்மா எமக்கு எல்லாம் மிகச் சிறந்த தோழியாகவே இன்று வரைக்கும் இருந்து வருகின்றார்.

பிள்ளைகளுடன் நேரம் கிடைக்கும் போது உரையாடுவது எமக்கிடையான இடைவெளிகளை மிகக் குறைக்கும் என்பது அப்பாவிடம் நான் கற்றுக் கொண்ட பாடம். ஆனால் சில வேளைகளில் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை எப்படி அவர்களின் வயதுக்கேற்ற மாதிரி சொல்வது என்பதில் குழப்பம் வருகின்றது. "இவன் சின்னப் பிள்ளை இவனுக்கு சொன்னாலும் புரியாது" என்று விட்ட சில விடயங்களை அவனே சரிவர புரிந்து கொண்டு கேள்வி கேட்ட நிகழ்வுகளும் உண்டு. அதே மாதிரி "இந்த சின்ன விடயத்தினை சொன்னால் இலகுவாக புரிந்து கொள்ளுவான்" என்று விளக்க தொடங்கி இறுதியில் அவனையும் குழப்பி நானும் குழம்பிய சம்பவங்களும் உண்டு. குட்டி குறிப்பிட்டுள்ளதை பார்த்தன் மகனை Miserable ஆக பார்க்கும் நிலைக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்

நுணா குறிப்பிட்ட மாதிரி இன்று இன்றைய பிள்ளைகளுக்கு தகவல் அறியும் வழி முறைகள் ஏராளம். அதுவே வரமாகவும் சாபமாகவும் இன்று இருக்கு. பல பிள்ளைகள் Overloaded ஆகிப் போகும் அபாயமும் இருக்கு. அதிக தகவல்கள் ஒருவரை எந்த விடயத்திலும் ஆழமாக நோக்க வைக்க தொடங்கி அதுவே அவனை / அவளை சுயநலவாதியாக மாற்றும் ஆபத்தும் உண்டு. கருப்பும் பொய் வெள்ளையும் பொய் என்று உணர்ந்தால், நிறங்களை ரசிக்க முடியாது.

அழகான பதிவிற்கு நன்றி நிழலி.

எனக்கும் இருவர்.முதலாமவர் 22 ஆகியும் இன்னமும் குழந்தை.எல்லாமே எங்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார்.உடை,உணவு எதிலும் பிடிவாதமோ விருப்பு வெறுப்போ இல்லை.

இரண்டாவது(அப்படித்தான் சொல்லவேண்டும்) 15. எல்லாமே அவர் தெரிவும் விருப்பமும்.எதுவென்றாலும் வாங்கமுதல் ஒரு பெரிய சேர்ச் போட்டு உடன் போய் வாங்கிவிடுவார்.காசு போகும் ஆனால் தலையிடி இல்லை.

குணங்கள் கூட முழு ஒப்பசிற்.முதலாவது எதையும் கொடுத்துவிடும் பிறருக்கு மற்றது ஒன்றுமே கொடுக்காது.

மூத்தவர் பாவம் என்றாலும் அவரால் தான் கஸ்டம் இதுவரை,இரண்டாதவர் முழு செல்fஇஸ்ச் ஆனால் எந்தவித கஸ்டமுமில்லை தானே எல்லாம்.

இப்போ மூன்று பேரும் உடுப்புகளை மாறிப்போடுவோம்.

நீங்களும் அவர்களது அளவில் இருப்பதால் பிரச்சனை இல்லை போல. :lol: :lol:

எப்படி ஒரே குடும்பத்தில் இருந்தும் ஒரே விதமான சூழலில் வளர்ந்தும் குழந்தைகள் தமக்கென ஒவ்வொரு குணாதிசயங்களோடு வளர்கின்றன என்பது நான் ஆச்சரியப்படும் விடயங்களில் ஒன்று. நானும் கண்ணார அதை காண்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் எழுதலாம் என நினைக்கின்றேன்.

எனது கடைசி மகளுக்கு

தாவரங்கள் மிருகங்கள் பறவைகள் என்றால் கொள்ளைப்பிரியம். அவற்றிற்கு எந்த துன்பங்களும் செய்வதை ஏற்கமாட்டாள்.

அத்துடன் இயற்கை வளங்களிலும் அதீத ஈடுபாடு. உதாரணமாக தண்ணீரை திறந்துவிட்டு சேவிங் செய்தால் சத்தம்போடுவாள்.

சிறுவயதிலிருந்தே எவரைப்பார்க்கப்போனாலும் கையில் பூ கொண்டு போவாள்.

சிறுவயதுமுதலே கணணி பாவிப்பதால் பலவிடயங்களையும் இன்ரனெற்றில் பார்ப்பாள். அந்தவகையில் அவள் ஒருமுறை பார்த்துவிட்டு என்னைக்கூப்பிட்டு காட்டியதைத்தான் இங்கு பதிந்தேன். மீன்களில் அணிவகுப்பு என.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=86942

http://www.koreus.com/video/dresseur-poisson-rouge.html

ஆனால் அது மீன்களுக்கான வதை என இங்கு பனங்காய் சுட்டிக்காட்டியதும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதுவரை அதை நான் அவளிடம் சொல்லவில்லை. இப்படியும் மனிதர்கள் என அவள் சங்கடப்படக்கூடாது அல்லவா.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.