Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

குறிப்பு: யாழ் களம் ஒரு சமூகம்சார் களம் என்ற வகையில் இப்பதிவு இங்கு இடப்படக்கூடியது என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றேன். எனினும், இப்பதிவு யாழ் கள வரையறைகளை எவ்வகையிலேனும் மீறுவதாய் உணரப்படின் தாராளமாக நீக்கி விடவும்.

இவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாய் இருந்துவந்திருந்த போதும், நிழலியின் ‘மழைத்துளிகள்’ தலைப்பில் இடப்பட்டுள்ள லண்டன் கள்ளக் காதலர்கள் துணுக்கினை வாசித்தபோது தான் இதை எழுதிவிடுவது என்று முடிவெடுத்தேன்.

எமது சமூகத்தில் ஒன்றுகூடல்கள், கடை வீதிகள், கோவிற் தேர் முட்டிகள், மதகுகள், பள்ளிக்கூட மதில்கள், பொது இடங்கள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாலியல் “முறைகேடுகள்” பிரபல்யமான கதைப்பொருளாகக் கனகாலம் இருந்து வருகின்றன. ஊரில் தெருவோரத்துச் சுவர்களில் பல துணுக்குகள் அவ்வவ்போது கரிக்கட்டியால் அறிவிக்கப்பட்டிருந்ததை பலர் பார்த்திருப்பர். அதுபோன்றே பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பொதுவாகப் பாலியல் விடயங்கள் பேசாப்பொhருளாகிக் கிடக்கும் நமது கட்டுப்பட்டிச் சமூக வழமையே இவ்வாறான செய்திகளின் பிரபல்யத்திற்குக் காரணம் எனச் சிலர் கூறினும், இக்கதைகள் எமது சமூகத்திற்கு மட்டுமான பிரத்தியேக குணவியல்பல்ல. தாராளவாதத்தின் சுவரொட்டிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஹொலிவுட் தொட்டு அனைத்து மக்களிற்கும் பாலியல் கதைகள் பலான கதைகளாகச் சுவாரசியம் கொடுக்கவே செய்கின்றன. இந்தச் சுவாரசியத்தின் அடிப்படை என்ன என்பதனை எனக்குத் தெரிந்தவரை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

மனிதனும் விலங்கு இராச்சியத்தின் ஒரு அம்சமே என்றவகையி;ல் மனிதனின் பாலியல் இச்சையின் அடிப்படையும் இனப்பெருக்கம் சாhந்;து தான் அமைகிறது. எனினும், சொத்துச் சேர்ப்பு முதற்கொண்டு மனிதன் அடிப்படை விலங்கு நிலையில் இருந்து பல வகையில் விலத்தி வந்து விட்டான். குழந்தை உருவாகி விடாது இருப்பதற்கும், உருவான கருவைக் கலைத்து விடுவதற்கும் ஆன ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்தபடிதான் உள்ளன. அவ்வகையில் மனிதனின் இன்றைய பாலியல் இச்சையினை இன்பெருக்கத்தோடு மட்டும் முடிந்து வைத்துவிட முடியவில்லை. அடுத்து, உடல்சார் இன்னபமாகப் பார்க்கையில், அங்கும் பல முரண்பாடுகள் தென்படுகின்றன. அதாவது, தனது கற்பனை வளம் கொண்டு கருவிகள் ஏதும் இன்றி புராதனம் தொட்டு இன்றுவரை தொடரும் கரபோகத்தையும் தாண்டி, மனிதனின் உடல் சார் தேவைகளைத் திருப்திப் படுத்தும் தொழில் நுட்பங்களும் ஏற்கனவே நிறைந்து கிடப்பது மட்டும் இன்றித் தொடர்ந்தும் வந்தபடி உள்ளன. தான் தானாகத் தன்னை மட்டும் கொண்டு தனது பாலியல் இச்சைகளைத் திருப்திப் படுத்திக் கொள்ளலாம், இல்லாது போனால் அதிகபட்சம் பாலியல் தொழிலாழரை நாடலாம் என்ற நிலையுள்ளது. இருந்தும் கள்ளக்காதல்கள் தொடர்கின்றன. இதற்கும் மேலால், மணமானவர்கள், பாலியல் இச்சையைத் தம்வீட்டிலே தம்மவரோடு தீர்க்கப்படக்கூடிய நிலையிலும் பிறமனை நாடுகிறார்கள். இந்தத்தேடல் எதனால் எழுகிறது?

மறுக்கப்பட்ட அப்பிள் பழம் என்ற பைபிள் கதை போல, ஒரு வேளை இதில் ஒரு கிக் இருக்கலாம். அதாவது செய்யக் கூடாது என்பதனைச் செய்வதால் ஏற்படும் ஒருவகை உணர்வு மேலீடு. அதாவது கள்ள மாங்காய் உண்பது போன்று அல்லது வீதிக்கட்டுப்பாட்டை மீறி வாகனம் செலுத்துவது போன்று அல்லது திருட்டுத் தம் அடிப்பது போன்று என்று புரிய முனையலாம். ஆனால், மறுக்கப்பட்டதைச் செய்வதற்கு ஒரு அபராதம் இருக்கும். கத்தரிக்காய் வாங்குவதற்குக் கூட நாட்டில் உள்ள பத்திரிகை எல்லாம் விளம்பரம் தேடி பெற்றோல் கணக்கெல்லாம் பாத்துப் போய் ஐந்து சதம் சேமிக்கும் நம்மவர்களுக்குள் சொத்தில் பாதியை இழக்க நேரிடக் கூடிய, தம் குழந்தைகளின் அன்பையும் அருகாமையையும் இழக்கக்கூடிய கள்ளக்காதல் அபராதம் எவ்வாறு வெற்றி பெறுகிறது?

மேலும் எந்த அபராதமும் செலுத்தாது கற்பனையில் எதையும் செய்யலாம் என்கையில், அபராதம் செலுத்த நேரிடக்கூடிய இந்த றிஸ்க் எதனால் எடுக்கப்படுகின்றது?

நான் தேடியவரை எனக்குக் கிடைக்கும் ஒரே பதிலாக அமைவது அங்கீகாரத் தேடல் என்பதாகவே இருக்கின்றது. குறிப்பு: சற்று ஆச்சாரமானவர்கள் இப்பந்தியின் மீதி வரிகளைப் படிக்காது அடுத்த பந்திக்குச் செல்லுங்கள். தமிழில் கட்டிலறைக் கதைகள் பற்றி அதிகம் கூறத் தெரியவில்லை, தெரிந்தவர்கள் பிரதியிட்டுக் கொள்ளுங்கள். வெள்ளையரைப் பொறுத்தவரை, கலவி நேரத்தில் எழுப்பப்படும் கூச்சல்களிற் சில “Who's your daddy”இ “Fill me up baby” போன்றனவாகவும் அமைகின்றன. ஒவ்வொரு கலாச்சாரத்திலும், அதுவும் குறிப்பாகக் கள்ளக்காதலர்கள் விடயத்தில், மேற்படி கருத்தை ஒத்த சிந்தனைகள் அல்லது கூச்சல்கள் எதிர்பார்க்க்கக் கூடியன. (மேற்படி வாசகங்கள் விரசத்திற்காக இப்பதிவிற் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதனையும் நான் கூற வருகின்ற கருத்தைக் கட்டியெழுப்புவதற்காக மட்டுமே என்றும் கூறிக் கொண்டும் அப்பால் செல்கின்றேன);.

அதாவது, தான் மணமானவன் என்று தெரிந்தும் ஒரு பெண் தன்னைத் தேடுகிறாள் சவால்களைச் சமாளிக்கிறாள் என்கையில் தனது ஆண்மை சிறப்பானது என ஆணும், ஒரு ஆண் தன்னைத் தேடி இத்தனை சவால்களைச் சமாளித்து வருவதால் தனது பெண்மை சிறப்பானது எனப் பெண்ணும் அங்கீகாரம் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வங்கீகாரம் ஒருவரோடு நின்றுவிடாது பல அங்கீகாரங்களை வேண்ட விளைவதும் எதிர்பாhக்க்க் கூடியது. கற்பனையில் யாரும் யாரையும் நினைக்கலாம் என்ற போதும், கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், கற்பனையில் ஒரு பெண் தன்னைத் தேடுவாள் என்று தான் மட்டுமே நினைக்கக் கூடிய ஆணிற்கு உண்மையில் அவள் தன்னை ஏற்பாளா என்ற கேள்வி எங்கேயோ தொக்கி நிற்கவே செய்யும். பெண்ணிற்கும் இத்தகைய கேள்வி இருக்கும். ஆனால் நிஜத்தில், கள்ளக்காதலர்கள் சேர்கையில், கேள்விக்கிடமின்றி அங்கீகாரம் கிடைக்கும். மேலே கூறப்பட்ட ஆங்கிலக் கூச்சல்களில் இவ்வங்கீகாரத் தேடலும் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலும் தெளிவாக வெளிப்படுகிறன.

கள்ளக் காதல் எல்லாம் மகிழ்வாய் அமைந்து விடுவதில்லை. வெளி;த்தோற்றம் கொண்டு அல்லது இதர மதிப்பீடுகள் காரணமாய்க் கவரப்பட்ட சிலர் படுக்கை அறையில் ஏமாற்றம் அடைவதும் நிகழ்வதுண்டு. ஏற்கனவே தனக்கு உள்ள அங்கீகாரம் போதாது என்ற நினைப்பில் அங்கீகாரம் தேடி கள்ளக்காதலை ஏற்படுத்திய ஒருவர், தனது கள்ளக்காதல் முதற்சந்திப்பின் பின் தன்னைக் கண்டால் ஓடுகிறது என்று அறிகையில் முன்னரைக் காட்டிலும் இப்போது அவரிற்கு அதிக அங்கீகாரம் தேவைப்படும். யாராவது நம்மால் திருப்திப்படமாட்டாரா என ஏங்கி அலையவும் புதிய கள்ளக்காதல்களிற்கும் வழிசமைக்கும்.

பணம், அறிவு முதலான இன்ன பல விடயங்கள் பொதுவாகச் சமூகத்தில் அங்கீகாரச் சுட்டிகளாக அமைகின்ற போதும், அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு என்ற வகையில், தக்கன பிழைக்கும் என்ற கூர்ப்பியல் விதியில் தான் தக்கது தானா என்று அறிந்து கொள்வதிலேயே மனிதன் என்ற விலங்கிற்கு உண்மையான திருப்தி இன்னமும் கிடைத்துக் கொண்டிருப்பதே கள்ளக் காதல்களிற்கான அடிப்படையாக எனக்குப் படுகின்றது. இதை எதிர் கொள்வதற்கு, ஒருவர் தனது சிந்தனையில் முதலில் இந்தப் பிரச்சினையினைப் பதிவு செய்து அதன் பின்னர், அத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவதால் தான் என்னத்தைச் சாதித்து விடமுடியும். அத்தகைய அங்கீகாரம் இல்லாத பட்சத்தில் என்னதான் நிகழ்ந்து விடும் என்ற ரீதியில் சிந்திப்பது கள்ளக்காதல் சிக்கல்களிற்குள் சிக்கிக்கொள்ளாது வாழ்வதற்கு உதவலாம்.

நிழலியின் பதிவை வைத்துத் தொடங்கிய பதிவு என்பதனால் நிழலியின் பதிவைப் பற்றிப் பேசி இதை முடிக்கிறேன். பொதுவாக நாம் அனைவருமே (என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்) நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்தில் நாமறிந்த பிறர்பற்றி ஏதேதோ மதிப்பீடுகளை முன்வைப்பதை எம்மை நாம் ஆராய்ந்தால் காணக் கூடியதாய் இருக்கும். பல சமயங்களில் எமது மதிப்பீடுகள் கேள்விக்கப்பாற்பட்ட உண்மைகள் என்பதாய் எமக்குப் படும். எனினும் எமது மதிப்பீடுகளை நாம் ஆழ ஆராய்ந்தால் சில சமயங்களில் எமது ஏக்கங்களின், ஆசைகளின், நிராகரிப்புக்களி;,; அந்தரங்கங்களின், ஏமாற்றங்களின், மறைப்புக்களி;ன், குற்ற உணர்வுகளின் சாயல் மற்றையவர் தொடர்பான எமது மதிப்பீடுகளில் தெரிவதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாய் இருக்கும். உதாரணமாய், நாளை அல்லது அடுத்தவாரம் முக்கிய சோதனை உள்ளது என்ற ரீதியில் இன்று நான் பொறுப்பான மாணவனாய் படித்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பிடித்த கலை நிகழ்வோ பாட்டியோ அருகில் நிகழ்கிறது. படிப்பதால் அங்கு போகக் கூடாது என்று எனது மனம் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால் எனது அறை நண்பன், அவனிற்கும் அதே சோதனை உள்ளபோதும் அந்நிகழ்விற்குப் போகிறான். இப்போது அனேகமாக நான் கூறக் கூடியது அவன் ஒரு பொறுப்பில்லாத பெடியன் என்பதே. பொறுப்பென்றால் என்ன, பொறுப்பின்மை என்றால் என்ன என்றெல்லாம் எனக்கு இங்கு ஆராயத் தோன்றாது. ஏனெனில் நான் போகமுடியாத படி எனது பெறுமதிகள் எனக்குத் தளை போட்டுள்ள வேளையில் அவன் போய் மகிழ்வது பற்றிய எனது மதிப்பீட்டில் எனது ஏக்கத்தின் சாயல் இருக்கவே செய்யும்.

நான் நினைக்கின்றேன் மற்றையவர்களின் பிரத்தியேககங்கள், எங்களைத் தாக்காத வரைக்கும், அவற்றை அவர்களோடு விட்டுவிடுவதே நல்லது. எனினும் நாம் விரும்புகின்ற சமூகம் எமது மகவுகளிற்கும் நாளை கிடைக்;க வேண்டுமாயின், எமது பெறுமதிகளிற்கு முரணான சமூக நிகழ்வுகளை நாம் இன்று விமர்சித்து அகற்ற முயன்றே தீரவேண்டும் என்றொரு நியாயமான எதிர்வாதம் இங்கு எழலாம். இந்த வாதத்தோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. ஆனால். எமது பெறுமதிகள் நாளை எமது மகவுகளிற்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நாங்கள், எமது பெறுமதிகளின் தார்ப்பரியம் என்ன என்று ஆராயாத வரைக்கும் எம்மைப் பயமுறுத்தும் நாளைகள் பயமுறுத்திக் கொண்டே இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

நானும் மற்றையவர் பற்றிய எனது மதிப்பீடுகளை முன்னர் பரபரப்பாய் வெளிப்படுத்தினேன் தான் எனினும் இப்போது அது முடியவில்லை. எனினும் இது எனது கருத்து மட்டுமே.

Edited by Innumoruvan

என் திரியில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வுக்கான எதிர்வினைய (அல்லது, உணர்வுப் பகிர்வு) முக்கிய கருப்பொருளாகத் தந்த இன்னுமொருவனுக்கு என் நன்றிகள். மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை தொட்டுச் செல்கின்றீர்கள்.

இதற்கான என் கருத்துப் பகிர்வை நிச்சயம், சற்று நேரம் கிடைக்கும் போது இன்றிரவோ அல்லது இந்தக் கிழமையோ முன் வைப்பேன்

யதார்த்த உலகில காதல் என்றாலே கள்ளம் கிச்சித்தாவது இருக்கத்தான் செய்யும். உடல் சுகங்களுக்கான தேடல் வெறியாக மாறும்போது கள்ளக்காதல் வரக்கூடும். முரண்பாடாக: உடல் சுகங்களுக்கான தேடலை காதல் என்ற பதத்தில அடக்குவது சரியானதாக தெரிய இல்லை.

பிரபல எழுத்தாளர் ஸ்.ராமகிருஸ்ணன் நடுத்தரவயதில் வயதில் வரும் காதலும் அதனால் வரும் பிரச்சனைகளி பற்றியும் விகடனில் நல்லதொரு கட்டுரை எழுதியிருந்தார்.அது தற்கொலைக்கு ஒப்பானது என்பது அவர் கருத்து.

இன்னொமொருவனின் கட்டுரை ஏன் இந்த கள்ள காதல் வருகின்றது என்பதை அறிய முற்படும் ஒரு சமூக விஞ்ஞான ஆய்வே.

நிழலி எழுதியது ஒரு உண்மைச் சம்பவம்.அதற்கு நான் ஒரு பின்னோட்டமும் விட்டேன்.

ஆய்வுகள் சமனிதர்களின் இயல்புகள் பற்றி நடாத்தப் படவேண்டியது அவசியமே.அக்கம் பக்கத்தில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை உண்மையாகவும் ஏதோ தேவைக்காவும் எழுதினால் அதனால் வரக்கூடிய ஆபத்து மிகப் பெரியது.இவர் இப்படி பதிந்தார் நானூம் பிடிக்காத ஒருவரை பற்றி நாலு கதையை கட்டிவிடுவம் என்று நாலு பேர் புறப்பட்டு விடுவார்கள். அதனால் தான் நிழலியின் இணைப்பிற்கு அப்படி ஒரு பின்னோட்டம் விட்டேன்.

போன மாதம் எனக்கும் ஒரு சம்பவத்தை நேரில் பார்க்கும் அனுபவம் கிட்டியது.யாழில் பதியலாமா? சில வேளை அதனால் ஏதும் பிரச்சனை வரலாம் என்று விட்டு விட்டேன்.இன்று எழுதுகின்றேன்.

எனது பாடசாலையின் இராப்போசனவிருந்து போன மாதம் நடந்தது. நான் இருக்கயில் இருந்து நடக்கும் நிகழ்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.எனது மிக மிக நெருங்கிய நண்பர் கலிபோணியாவில் இருப்பவர் போல் ஒருவர் தூரத்தில் செல்வதை அவதானித்து எழும்பி போனால் அவரேதான்.என திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் என்று கேட்டேன்.நேற்றுத்தான் திடீரென அருகிலிப்பவரை காட்டி நாளைக்கு டொரொன்டோவில் பள்ளிக்கூட டின்னர் வாறியா போய் விட்டுவருவம் என்று கேட்டாராம் தானும் பிளேன் ஏறிவந்து விட்டதகவும் நாளை காலையே திரும்பி போவதாகவும் சொன்னார்.அப்படி என்ன பள்ளிக்கூடத்தில் அவ்வளவு பற்று எனக் கேட்டேன்.யாரோ ஒரு நண்பன் தனது நண்பனுக்கு சொன்னவராம் அவரின் பழைய காதலி டின்னருக்கு வருவதாக.அதற்காக இவ்வளவு தூரம் வந்த அவரை பார்க்க எனக்கு சிரிப்பாக இருந்தது.ஆனால் அவருக்கு சிலவேளை கட்டாயம் பார்க்க வேணும் போல் இருந்திருக்கலாம்.

இருவருமே நாற்பதை கடந்தவர்கள்.நாகரீகம் காரணமாக கிண்டி கிண்டி நான் ஒண்ரும் கேட்கவில்லை.எனது மேசையிலேயே அந்த நபரும் இருந்தார்.அவர் சரியான எக்ஸ்சைட்டாக இருந்தார்.திரும்பி திரும்பி பார்பதும் அந்தரப் படுவதுமாக இருந்தார்.ஒரு 18 வயதிற்கு திரும்பி விட்டார்.டான்ஸ் தொடங்கும் போது தான் அந்த பெண்ணையும் வடிவாகப் பார்த்தேன்.நடுத்தர வயது சராசரி தமிழ்பெண்.அவா படு நோமல்.பெண்ணுக்கு இவர் இங்கு வருவது முன்னமே தெரியுமோ தெரியாது.டான்ஸ் தொடங்கியவுடன் தான் இவர் எங்களியும் ஆட வரச் சொல்லி மெள்ள அவா டான்ஸ் ஆடும் இடத்திற்கு அருகில் சென்றார்.பெண் வெகு சகஜமாக இவரை கூப்பிட்டு தனது கணவன்,சகோதரங்கள்,பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.என்னவென்று அறிமுகம் செய்தார் என எனக்கு தெரியாது .டான்ஸ் தொடர்ந்துகொண்டே இருக்க இருவரும் நன்கு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.பின்னர் ஒன்றாக ஆடி " போடா போடி" என்ற பாட்டிற்கு ஆளையாள் பார்த்து கை காட்டுமளவிற்கு போய் விட்டார்கள்.பாட்டி முடிய இவர் முகத்தில் நல்ல சந்தோசம்.சிரிதுக் கொண்டே நாளைக்கு காலை பிளைட் என்று எனது நண்பருடன் விடை பெற்று சென்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய காதலையெல்லாம் அர்ஜுன் நக்கலாக பார்க்கின்றார்.

இளவயதில் காதலித்தவர்கள் சந்தர்ப்பவசமாக பிரிந்து போய் மறுபடியும் எப்போவாவது சந்திக்கும் போது அதற்கு கள்ளத்தொடர்பு என சொல்வீர்கள் போலிருக்கிறது?

சுட்டிக் காட்டியதற்கு நன்றி குமாரசாமி அண்ணை.எழுத நினைத்த சம்பவத்தை பிழையான தலைப்பின் கீழ் எழுதிவிட்டேன் என நினக்கின்றேன்.அவர்களை நான் கொச்சை படுத்த நினைக்கவில்லை. மன்னித்து கொள்ளவும்.

  • தொடங்கியவர்

கள்ளக்காதல் என்ற சொல்லின் வரைவிலக்கணம் தொடர்பான கேள்வி எழுப்பப்படுவதால் இப்பிற்ச்சேர்க்கை. இந்தத் திரியில் "கள்ளக்காதல" என்ற சொல் சமூகம் "முறைகேடாகப்" பார்க்கும் பாலியல் தொடர்பை சமூகம் விளிக்கும் அதே விதத்தில் குறிப்பிடப் பயன் படுகிறது. இது உண்மையில் முறைகேடு தானா, உடல் சாராத மனத்தின் வெளிப்பாடுகள் என்று காதலில் சாத்தியமா, உடல் சாராத மனம் என்று ஒன்று உண்டா போன்ற விவாவதங்கள் இத்தலைப்பிற்கு அப்பாற்பட்டதாகவே கருதுகின்றேன். அத்தோடு கள்ளக்காதல் செய்யலாமா கூடாதா என்று தீர்ப்புக் கூறும் எண்ணமும் ஏதும் இல்லை--மற்றையவர் பிரத்தியேகங்கள் என்னைப் பாதிக்காதவரை அவை பற்றிய மதிப்பீடோ விமர்சனமோ எனக்குத் தேவையற்றது என்பது எனது கருத்துநில. கள்ளக்காதல் என்ற விடயத்தில் உள்ள சிக்கல்களிற்கு மத்தியிலும் இது ஏன் தொடர்கிறது எதனால் இந்த இச்சை பிறக்கின்றது என்று எனக்குத் தெரிந்தவரை ஆராய முற்பட்டமை மட்டுமே இப்பதிவு. இம்முனையில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

வாசித்துக் கருத்துக் கூறிய அனைவரிற்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

அர்யுன் விவரித்த சம்பவம் தொடர்பில் குமாரசாமி சொல்லும் கருத்தும் நியாயமானது தான். எனினும் அர்யுனின் விவரணத்தின் படி இது எதேச்சையாய் நடந்த சம்பவம் அல்ல, ஒருவர் வருவார் என அறிந்து மற்றையவர் பிரயத்தனம் எடுத்து வந்த சந்திப்பு. இச்சந்திப்பின் வாயிலாக பிரயத்தனம் எடுத்து வந்தவர் என்னத்தை அடைய முற்படுகிறார் என்ற கேள்வியும் இவ்வுதாரணமும் தலைப்போடு சம்பத்தப்பட்டது தான் என்றே எனக்குப் படுகிறது. அதாவது, அங்கீகாரத் தேடல் தான் "கள்ளக்காதல்" களிற்கு மூலம் என்று இத்தலைப்பு வாதிடுகையில், இந்தச் சந்திப்பை எவ்வாறு பார்ப்பது என்பது பொருத்தமுடைய கேள்வியே. ஆனால் மேலே கூறியதைப் போல, இச்சந்திப்பு கள்ளக்காதலை நோக்கியதா என்பது இங்கு தெளிவாகவில்லை. குமாரசாமியின் நியாயமான ஆதங்கமும் அதுதான்.

கள்ளக்காதல் என்ற விடயத்தில் உள்ள சிக்கல்களிற்கு மத்தியிலும் இது ஏன் தொடர்கிறது எதனால் இந்த இச்சை பிறக்கின்றது என்று எனக்குத் தெரிந்தவரை ஆராய முற்பட்டமை மட்டுமே இப்பதிவு. இம்முனையில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

எமக்கு பிரத்தியோகமாக அதிகப்படியான மூடிமறைத்தல் தேவைப்படுகின்றது. இது கற்பு சமூக ஒழுக்கம் சம்மந்தப்பட்டதாக இருக்கின்றது.

எமது காதலும் கள்ளக்காதலும் வரலாற்றுவளியாக புராண இதிகாசங்கள் ஆன்மீகத்துடன் தொடர்புபட்டது. சினிமாக்களுக்கும் புத்தகங்களுக்கும் முற்பட்ட காலத்தில் எமது உடற்சேர்க்கை குறித்த அனைத்து வெளிப்பாடுகளும் ஆன்மீக புராண இதிகாசங்களோடு பிணைந்திருந்தது. இந்திரன் ஆயிரம் பெண்களை புணர்ந்த கதைகளையும் கிருஸ்ண லீலைகளையும் ஐயப்ப கையப்ப கதைகளையும் ஆனைவடிவமெடுத்துப் புணர்ந்து ஆனைமுகன் வந்த கதைகள் என ஆயிரமாயிரம் கதைகளை பிரசங்கங்களாக வாயைப் பிழந்து கேட்டு உணர்வை தூண்டிக்கொள்வதும் அதே நேரம் அதற்கு வடிகால் இல்லாத நிலையை கற்பும் சாதியப்பேணலும் பெண்ணடிமைத்தனமும் ஏற்படுத்தியது. குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற தீர்மானமும் உடன்கட்டை ஏறுதலும் உடற்சேர்க்கையை மையமாகவைத்து இருந்தபோதிலும் சாதிகள் கலப்பதை தடுப்பதே இதன் கருவாக இருந்திருக்கின்றது. தூண்டுதலும் தடுத்தலும் ஆரம்பத்தில் கோயில் மடங்களில் பிரசங்கங்களாக நடந்தேறியது. கோயில் முன்மண்டபத்தில் கற்பொழுக்கம் பற்றி பிரசங்கம் செய்துவிட்டு பின்மண்டபத்தில் தேவதாசிகளுடன் சல்லாபித்தனர். சமூகத்தில் ஒழுக்கவானாக நிலைநிறுத்தவேண்டிய கட்டாயம் உடற்சேர்க்கையை மையமாகவைத்து இருப்பதால் இயற்கையான உணர்வுகள் அதிகப்படியாக வேலிபாயவேண்டியதாக இருக்கின்றது.

இவ்வாறான ஒரு பழக்கவழக்கத்தினூடாகத்தான் சினிமா எமக்கு அறிமுகமாகின்றது. சினிமா மேற்கூறியதன் அடுத்த காலகட்டம். எமது பெண் கடவுள்கள் எமது தற்பவெப்ப சூழலுக்கேற்ப நாம் கொண்டிருக்கும் நிறங்களுக்கு மாறாக வெள்ளைத்தோல்கள் and so sexy. தமிழ்ச் சினிமாவில் கீரோவுக்கு கறுப்பு அல்லது பொது நிறப்பெண்கள் (எமது பெரும்பான்மை மக்களின் நிறம்) மீது காதல் வந்ததாக சரித்திரம் கிடையாது. கீரோக்கள் முதலாவது தகுதி ஒழுக்கம் குறிப்பாக பெண்கள் விடயத்தில் ஒழுக்கம். வெள்ளை நிறத்தின் மீதான அதிகப்படியான மோகத்தை சினிமாவுக்கு முற்பட்ட காலமும் சினிமாக்காலமும் வளர்த்ததின் விழைவு எம்மை நிறம் குறித்து ஒரு நிரந்தர தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளிவிட்டதுதான். ஒரு வெள்ளைக்கும் ஆபிரிக்க கறுப்பருக்கும் இடையிலன சகஜநிலைக்கான மனோநிலை எம்மவரிடத்தில் இல்லை. எம்மவர்களின் பார்வை ஏக்கம் தவிப்பு வெள்ளை நிறத்தின் மீதான மோகம் அதே நேரம் அணுக முடியாத தாழ்வுமனப்பான்மை தலமைத்துவ பண்பு இல்லாநிலை தனிமனிதப் பண்பு சீர்குலைந்த நிலை என ஏராளமான உளவியல் சிக்கல்கள்.

கள்ளத்ததனம் என்பதின் மீது நாம் நிச்சயமாக குற்றம் சுமத்த முடியாது. கள்ளத்தனமே எமக்கான வடிகாலாக எப்போதும் இருந்து வருகின்றது. ஒரு கடவுள் ஒழுக்கமானவன் அதேநேரம் சல்லாபமானவன் என்னும் போது ராமனாகவும் கிருஸ்ணனாகவும் இரண்டு அவதாரமாக்கிவிடுகின்றோம். மனிதனை பொறுத்தவரை கள்ளத்தனம் என்று ஒன்று கிடையாது. ஒழுக்கத்தை மையமாகவைத்து நாமாக இது நல்லது இது கள்ளமானது என்று கூற முற்படுகின்றோம்.

ஒருவனின் மனைவி/கணவன் ஒரு தூண்டுதலால் என்னுமொருவனுடன் உறவுவைத்தவிட்டால் கொல்லுவது விவகாரரத்து செய்வது நடத்தை கெட்டவள் என்று பட்டம் கட்டுவது எல்லாம் ஒழுக்கத்தின் பால் ஏற்படும் உளவியல் சீற்றம். ஆனால் அவளின் இத்தனைவருடகால உழைப்பும் பராமரிப்பும் வாழ்க்கை அற்பணிப்பும் அன்பு எல்லாம் உடற்சேர்க்கை என்ற ஒரு தவற்றில் காணாமல் போய்விடுகின்றுது. எமது சமூகத்தின் வரலாற்றுவழியான சமூக வழக்கம் நடைமுறைகள் பழக்கவழக்கம் போன்றவற்றின் ஊடாக எமக்கென்று பல உளவியல் பிரச்சனைகள் பிரத்தியோகமாக இருக்கின்றுது. ஒரு கணவன் ஒரு வெள்ளைக்காரி மீது மோகம் கொண்டால் அதை மனைவி தனியே கணவனின் பிரச்சனையாகப் பார்ப்பதை கடந்த்து தனக்கு இழைக்கும் துரோகம் என்பதைக் கடந்து எமது உளவியல் சிக்கல்களை புரிந்துகொள்ள முற்படவேண்டும். இதே போல் கணவனும்.

ஊர் என்ன நினைக்கும் ஊர் என்ன சொல்லும் என்று காலம் முழுக்க சமூகத்துக்க அஞ்சி வாழப்பழகுவதை நிறுத்தி எமக்காக வாழ முற்படவேண்டும். எமது பிள்ளைகளை சமூகத்துகு அஞ்சி வாழப் பழக்கப்படுத்தும் போது அவர்களின் தலமைத்தவப்பண்பை அழித்துவிடுகின்றோம் என்பதை மறக்கலாகாது. சமுகத்துக்க அஞ்சும்போது கள்ளத்தனம் உருவாகியே தீரும்.

ஊர் என்ன நினைக்கும் ஊர் என்ன சொல்லும் என்று காலம் முழுக்க சமூகத்துக்க அஞ்சி வாழப்பழகுவதை நிறுத்தி எமக்காக வாழ முற்படவேண்டும். எமது பிள்ளைகளை சமூகத்துகு அஞ்சி வாழப் பழக்கப்படுத்தும் போது அவர்களின் தலமைத்தவப்பண்பை அழித்துவிடுகின்றோம் என்பதை மறக்கலாகாது. சமுகத்துக்க அஞ்சும்போது கள்ளத்தனம் உருவாகியே தீரும்.

சில விடயங்களில் ஊருக்கு அஞ்சி வாழ வேண்டிய கடப்பாடு இருக்குதுதானே சுகன்?

கலியாணம் கட்டிய ஒரு ஆண் இன்னோரு பெண்ணை கண்டவுடன் சபலம் ஏற்படுவது இயற்கை ஆனாலும் சமுகம் ,மனவி பிள்ளைகள் என்ற எண்ணம் வரும் பொழுது அவன் தப்பு செய்வது தடைப்படுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்.. எல்லாம் சரி.. இந்தக் கள்ளக் காதல் கலியாணம் ஆன ஆண் - பெண்கள் சார்ந்துதானா இருக்கும் எப்போதும். அப்போ கலியாணம் ஆகாத.. ஆனால் ஒருத்தனை சீரியஸா காதலிக்கிறது போல காதலிச்சுக் கொண்டு.. இன்னும் பலரையும் காதலிக்கும் சுவைக்கும் பெண்களும் ஆண்களும் உள்ளனரே..! இவர்களின் இந்தக் கள்ளத்தை எங்க வைக்கிறது..??!

ஏதோ நாய் பிறப்பா இல்லாமல் மனிசப் பிறப்பு திறமெண்டு பார்த்தால்.. நாய் ரோட்டில ஒரு காலத்தில செய்யுறதை மனிசன்.. 365.. 24/7 அறைகள் பார்க்குகள் பப்புகள் பள்ளிகள் எங்கும் செய்யுறான்.

நமக்கேன் இந்த வம்பு. நம்ம பிழைப்பு பார்க்கவே வழி தெரியல்ல.. இதுக்க கள்ளக்காதல் வேற..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சில பேர் உணர்ச்சி வசப்பட்டு தப்பு எனத் தெரிந்தே செய்கின்றனர்...ஆனால் பல பேர் கணவனோ,மனைவியோ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பதன் மூலமும் கள்ளக் காதல் ஆரம்பமாகிறது[உ+ம்]கணவர் எந்நேரமும் பணம்,பணம் என அழைய மனைவிக்கு என்னொரு அன்பு காட்டும் நபரிடம் காதல் உண்டாகும்,விருப்பம் இல்லாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் திருமணம் செய்பவர்கள் திருமணத்தின் பிறகு தமக்கு விருப்பமானவரைக் கண்டால் காதல் வரும் என நினைக்கிறேன்

  • தொடங்கியவர்

சுகன், நெடுக்காலபோவான், ரதி. ஜில் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. உங்கள் கருத்துத் தொடர்பான எனது கருத்தைக் கீளே பதிகிறேன்.

சுகனின் பின்னூட்டத்த்தில் அதிக பட்சம் “கள்ளக்காதல்” தொடர்பான சமூகத்தின் எதிர்வினை பற்றியே உள்ளடக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஏன் இந்தக் “கள்ளக்காதல்” உருவாகிறது என்பது தொடர்பில் சுகனின் பின்னூட்டத்தில் நான் புரிந்து கொண்டவரை பின்வரும் காரணம் முன்வைக்கப்படுகின்றது:

அதாவது ஒன்றிற்கு மேற்பட்டவருடனான உறவு, தமது கலாச்சாரத்திற்கு வெளியேயானவர்களுடனான உறவு முதலிய “மறுக்கப்பட்ட” உறவுகளிற்கான அடித்தளங்கள் எல்லாம் நமது புராணங்களாலும், இதிகாசங்களாலும், இலக்கியம் மற்றும் சினிமாவாலும், செவிவழி வழக்குகளாலும், ஊர்ப்பிரமுகர் முதலானோரின் நடவடிக்கைகளாலுமே தூண்டப்படுகின்றன என்பது. அதாவது, தனது சுய தேடலில் இவ்விச்சைகள் ஏற்படுவதற்கு மாறாக, இவ்வாறான விடயங்கள் இனிப்பானவை என ஊட்டப்பட்டு, ஒருவகையில் மூளைச்சலவை என்று கூடச்சொல்லக்கூடிய அளவிற்குத் திருபத்திருப்பக் கூறப்பட்டு அல்லது காட்டப்பட்டு அதனால் இவ்விச்சை நோக்கிய தேடல் உருவாகிறது உருவாகிறது என்பது.

ஒருவகையில் மேற்படி காரணத்தையும் முற்றாக மறுத்துவிடவிடமுடியவில்லை தான். எனினும் புராணத்திலும் இதர விடயங்களிலும் சித்தரிக்கப்படும் கதாநாயகர்கள் இதைத் தான் செய்தார்கள் என்று சொல்லப்படுவதால் அல்லது காட்டப்படுவதால் அக்கதாநாயகர்கள் அல்லது ஊhர்ப்பிரமுகர்கள் அல்லது பலமும் அங்கீகாரமும் பெற்றவர்கள் செய்கின்ற “கள்ளக்காதல்” வழி ஒருவன் ஈர்க்கப்படுகின்றான் என்றால், அவனது மனதில் அங்கீகாரம் பெற்றவர்களின் செயல்களும் அங்கீகாரத்தோடு தொடர்புபட்ட செயல்களாக அவனையும் அறியாதும் பதிகிறனவோ என்றும் எண்ணவே தோன்றுகின்றது. அந்தவகையில் இந்த உதாரணமும் அங்கீகாரத் தேடல் தான் கள்ளக்காதலின் மூலம் என்ற முனையில் இருந்து அதிகதூரம் சென்றுவிடவில்லை என்றே எனக்குப் படுகிறது.

நெடுக்காலபோவான், கலியாணம் அல்லது “சோடி” என்பதனை நான் சட்டப்பூர்வமாக நடாத்தப்பட்ட, அல்லது மங்கலநாண் பூட்டப்பட் ஒரு உறவாக மட்டும் கருதவி;ல்லை. இருவர் தங்கள் மனத்தளவில் ஒரு கொமிற்மென்ரை எடுத்துவிட்டால் என்னைப் பொறுத்தவரை அந்தக் கொமிற்மென்ற் இருக்கும் வரை அவர்களும் சோடிகள் தான், அந்தவகையில் அந்தக் கொமிற்மென்றிற்கு அப்பாற்பட்ட உறவுகளும் இந்தத் தலைப்பின் வரைவிலக்கணத்திற்குள் அடங்குவதாகவே கருதுகின்றேன். எவ்வாறு சட்டப்படி மணமானவர்கள் விவாரகத்து மூலம் தங்கள் “சோடி” என்ற நிலையினைக் கலைத்துக் கொள்கிறார்களோ அதைப்போன்றே மனதளவில் கொமிற்மென்ற் எடுத்தவர்களும் ஒருவரிற்கொருவர் தெரியப்படுத்திப் பிரிகையில் அவர்களின் சோடி அந்தஸ்த்து இல்லாமற் போய்விடுகிறது. இந்தத் தலைப்பு சோடி நிலையில் இருப்பவர்களின் சோடிக்கப்பாற்பட்ட உறவுகள் பற்றி மட்டுமே கதைக்கின்றது.

ரதி கூறுகின்ற, கணவன் மனைவியின் தேவைகள் ஏதோ காரணத்தால் திருப்திப்படுத்தப்படாத நிலையில் அல்லது அன்போ ஈர்ப்போ இல்லாத நிலையில் பிற உறவுகளிற்கான அடித்தளம் உருவாகிறது என்பதும் நியாயமான கருத்துத் தான். எனினும் இதனையும் “அங்கீகாரத் தேடல்” என்ற காரணத்திற்குள் கொண்டுவரலாம் என்றே படுகிறது. அதாவது, இவன் அல்லது இவள் எனக்குத் தோதான துணை இல்லை என்ற எண்ணம் அவர்களின் துணையின் பலவீனங்கள் சார்ந்து மட்டும் தான் எழ வேண்டும் என்பது இல்லை. மாறாக, தம்மீது தாம்வைத்திருக்கும் அதியுயர் எண்ணம் அல்லது தாம் விரும்புகின்ற அங்கீகார நிலை முதலியவற்றின் அடிப்படையிலும் அது ஏற்படலாம் என்றே படுகிறது. அதாவது தனது அன்பைப் பெறுபவர் சில தகமைகளைக் கொண்டிருக்கவேண்டும் (அது உடல் அழகு மட்டும் அன்றி கல்வி, பணம் முதலான பல காரணிகளாக இருக்கலாம்) என்ற எண்ணத்தில், அதாவது தனக்காகத் தான் விரும்பு அங்கீகார நிலை சார்ந்து தன் துணையை எடைபோடுவது. அதாவது அவளின் அளகிற்கும் படிப்பிற்கும் இவனோ மாப்பிள்ளை என்பது போன்ற பேச்சுவழக்கு நடைமுறைகளை ஒத்தது. இ;ப்பேர்ப்பட்ட துணையே இவளை அல்லது இவனை மணப்பதால் இவனது அல்லது இவளது தகுதி இத்தகையது என்ற பிறரின் அங்கீகாரம் நோக்கியதாயும், இதனாலேயே ஈர்ப்பின்றிப் போதலும் கூட நடக்கவே செய்கின்றது.

எனினும் உடல் ரீதியாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதவர்கள், கலியாணத்தின் பின்னர் அறிந்து கொண்ட இதர இயலாமைகள் அல்லது போதாமைகள் என்றும் ஒரு முனை இருக்கவே செய்கின்றது. இவ்வாறான நிலையில் எதற்காக ஒருவர் விவாகரத்திற்குப் பதிலாக “கள்ளத்தொடர்பை” தெரிவு செய்கிறார் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. விவாகாரத்து மற்றும் கள்ளக்காதல் என்ற இரு தெரிவுகளில் ஒன்று எந்த அடிப்படையில் ஒருவரால் தெரிவு செய்யப்படுகிறது என்று பார்க்கையில் அங்கும் அங்கீகாரத் தேடலின் அல்லது தக்கவைத்தலின் சாயல் தெரியவே செய்கிறது. எனினும், திருமணத்தின் பின் தான் அறிந்து கொண்ட தனது துணையின் தன்மைகள் காரணமாகத் துணையினை ஒருவர் விவாகரத்துச் செய்து விட்டு வேறு துணை தேடுவாரேயாயின் நி;ச்சயமாய் அது கள்ளக்காதல் என்ற வரைவிலக்கணத்திற்குள் வரமுடியாதது. குள்ளக்காதல் என்ற பதமே ஒரு சோடி தாம் சோடி என்ற கொமிற்மென்ரைக் கொண்டிருக்கும் வரை தான் சாத்தியமானது.

ஜில் கூறுகின்ற எப்படியும் வாழ்வது நடைமுறைச் சாத்தியமல்ல என்பது உண்மை தான். நாம் விரும்பியோ விரும்பாதோ மனிதன் சமூகமாக வாழத்தலைப்பட்டுவிட்ட நிலையில் நாம் விரும்பியோ விரும்பாதோ சில சட்டதிட்டங்கள் வழக்குகள் உருவாகிவிட்ட நிலையில் அவற்றை மீறுவதற்கு அபராதம் என்று ஒன்று இருக்கவே செய்கின்றது.

இன்னுமொருவன்,

கஞ்சா அடித்துவிட்டு கற்குகைக்குள் நடக்கின்ற ஒரு உணர்வு. எங்கள் சமய, சமூக, கலாச்சாரங்களை எல்லாம் கிண்டி கிளப்புகிறீர்கள். விவாதங்களால் தெளிவடைவோம்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் நிழலியும்,இன்னுமொருவனும் ஒரே ஆள் என :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்காதல்

வைத்திருத்தல்

சின்னவீடு

வேலி பாய்தல்

இரவு மேய்ச்சல்

குருவி சுடுதல்

இப்படி இன்னோரன்ன விடயங்களை எமது சமுதாயம் எவ்வளவுதான் ஒதுக்கி தள்ளினாலும்

அவை எம்முடன் இருக்கின்றன என்பது உண்மைதான்

இவற்றுக்கெல்லாம் காரணம் இக்கரைக்கு அக்கரைப்பச்சை விதிதான்

அவை தவிர்க்கப்படவேண்டியவைதான் என்றாலும் திருடனாக பார்த்து திருந்தாவிடில்........???

நான் இதுவரைக்கும் இதற்குள் போகவில்லை என்பதால் மட்டும் இது என்னுடன் இல்லை என்றாகாது

நான் இதுவரை அதை தவிர்த்துள்ளேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்

சில அனுபவங்களால் பாரிசில்தனியே போகும்போது

காருக்குள் ஏறியதும் உள் பக்கமாக கதவுகளை மூடுவது எனது பழக்கம்

இந்த பகுதியில் சிலகாலமாக தொழில் வைத்திருப்பதன் காரணமாக ஓரளவு அறியப்பட்டவன் என்ற ரீதியில்

எல்லாவற்றுக்கும் தயாரான ஒரு கூட்டத்திடமிருந்தும் நான் தப்பியாக வேண்டும்

அப்படி நான் தவிர்க்கவில்லையென்றால் எனக்கும் இதே பெயர்தான்...

(கள்ளக்காதல்

வைத்திருத்தல்

சின்னவீடு

வேலி பாய்தல்

இரவு மேய்ச்சல்

குருவி சுடுதல்)

  • கருத்துக்கள உறவுகள்

குருவி சுடுதல்

:lol: :lol:

சில விடயங்களில் ஊருக்கு அஞ்சி வாழ வேண்டிய கடப்பாடு இருக்குதுதானே சுகன்?

கலியாணம் கட்டிய ஒரு ஆண் இன்னோரு பெண்ணை கண்டவுடன் சபலம் ஏற்படுவது இயற்கை ஆனாலும் சமுகம் ,மனவி பிள்ளைகள் என்ற எண்ணம் வரும் பொழுது அவன் தப்பு செய்வது தடைப்படுகிறது..

சமூகத்துக்கு அஞ்சுவதால் தப்பு செய்வது தடைப்படுகின்றது என வைத்துக்கொள்வோம். சபலம் ஏற்படுவது இயற்கை என்பதை ஒத்துக்கொள்கின்றபோது இந்த இயற்கை உந்துதலுக்கு சமூகம் தடையாக இருந்தால் சமூகத்துக்கு தெரியாமல் அவைகள் நடந்தேறும். இங்கே கள்ளத்தனத்தையும் நல்லத் தனத்தையும் சமூகமே வரையறை செய்கின்றது. சமூகத்துக்கு தெரியாதவண்ணம் தனது இச்சைகளை தீர்த்துக்கொள்பவர்கள் இறுதிவரை சமூகத்தில் நல்லவர்களே. ஒழுக்கத்தை போதிக்கும் அதிகப்படியான சமூக இறுக்கம் எதிர்வினையாக களத்த்தனத்தையும் ஊக்குவிக்கின்றது. இவற்றை எல்லாம் விடுத்து ஏன் உடற்சேர்க்கையை தூக்கி தலையில் வைத்திருக்கவேண்டும்? இது ஏன் ஒரு பெரிய பூதகரமான பிரச்சனையாக எமக்கு உள்ளது? எமது ஒழுக்கத்தின் பிரதான அளவுகோலாக இது இருக்கின்றது. இது ஏன் என்ற நோக்கிலேயே நான் எழுத முற்படுகின்றேன். எங்கிருந்து இந்த இச்சைகள் உற்பத்தியாகின்றன இவை எப்படி அதிகப்படியாக தூண்டப்படுகின்றது. இந்த இயற்கை உணர்வுகளுக்கு போதுமான வடிகால் எமது சதி மத பேத கலாச்சார சமூக இறுக்கத்தினூடாக இருக்கின்றதா? இப்படித்தான் எழுத முற்படுகின்றேன்.

ஒருவர் வசதியான விலை கூடிய வீடு வைத்திருக்கின்றார். வகனம் வைத்திருக்கின்றார். அதிக விலை உள்ள பிரதேசத்தில் வைத்திருக்கின்றார். பிள்ளைகளில் ஒன்றை எஞ்சினீயருக்கும் மற்றதை டொக்டருக்கும் படிப்பிக்கின்றார். குறிப்பிட்டளவு தொகை செலவளித்து திருமணம் செய்கின்றார். மனைவி 51 பவுணில் தாலி போட்டிருக்கின்றார். மனைவிக்கு உப்பு புளி விலை தெரியாது. (வேலை வெட்டி சொப்பிங் எதுவும் செய்ய விடாமல் ராணிமாதிரி வைத்திருக்கின்றாராம்) இவர் ஒரு வளிகாட்டி. இவரை போல வாழமுற்பட்டு இரண்டுவேலை மூன்றுவேலை செய்து உடலை வருத்தும் ஆண்கள் பலவீனமாகி உடற்சேர்க்கையில் ஈடுபட முடியாத சூழலும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றது. இதன் நிமிர்த்தம் வேலிபாயும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். வருசத்தில் முக்கால்வாசி நாட்களை கெளரிகாப்பு கந்தசட்டி என்று விரதத்தில் மனைவிகள் இருக்க வேலிபாயும் பெண்களும் இருக்கின்றார்கள். தான் விரும்பிய வாழ்க்கையை தனது விருப்பத்துக்கு வாழ இந்த சமூகத்தில் பல தடைகள் நெருக்குவாரங்கள் இருக்கின்றது.

வெள்ளைகள் அல்லது புலம்பெயர் தேசத்தில் வேற்றினத்தவர்கள் தமது இளம்பிரயத்தில் ஏற்படும் இயற்கையான உணர்வுகளுக்கு சுதந்திரமான வடிகலைத் தேடிக்கொள்கின்றனர். இந்த சமூகத்தில் வாழும் எங்கள் பிள்ளைகள் எவ்வளவு நெருக்குவாரங்களை சந்திக்கின்றார்கள். இந்திய உபகண்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் எமக்கும் தொற்றிக்கொண்டது. உடன் கட்டை ஏறுவதும் கற்பு வலியுறுத்தலும் கண்ணகியும் ராமனனும் என என்னும் எத்தனை பூரயக் கலாச்சாரங்கள் சாதியத்தை பேண உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்த சமூதாயத்தையும் உளவியல் நோய்குள் தள்ளிய இந்த கலாச்சாரக்கட்டமைப்பு உலகில் கள்ளத்தன உறவை அதிப்படியானதாக்கியது. இன்று உலகில் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு என்பன உலகில் அதிகப்படியாக ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் என்று பீத்திக்கொள்ளும் இந்தியாவில்தான் நடக்கின்றது. ஒழுக்கம் கற்பு வலியுறுத்தல் போன்ற சமூக இறுக்கத்தால் பாலியல் வல்லுறவும் சரி எயிட்ஸ் நோயாளிகளும் சரி 40 வீதத்திற:கும் குறைவாகத்தான் தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைகள் அல்லது புலம்பெயர் தேசத்தில் வேற்றினத்தவர்கள் தமது இளம்பிரயத்தில் ஏற்படும் இயற்கையான உணர்வுகளுக்கு சுதந்திரமான வடிகலைத் தேடிக்கொள்கின்றனர். இந்த சமூகத்தில் வாழும் எங்கள் பிள்ளைகள் எவ்வளவு நெருக்குவாரங்களை சந்திக்கின்றார்கள். இந்திய உபகண்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் எமக்கும் தொற்றிக்கொண்டது. உடன் கட்டை ஏறுவதும் கற்பு வலியுறுத்தலும் கண்ணகியும் ராமனனும் என என்னும் எத்தனை பூரயக் கலாச்சாரங்கள் சாதியத்தை பேண உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்த சமூதாயத்தையும் உளவியல் நோய்குள் தள்ளிய இந்த கலாச்சாரக்கட்டமைப்பு உலகில் கள்ளத்தன உறவை அதிப்படியானதாக்கியது. இன்று உலகில் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு என்பன உலகில் அதிகப்படியாக ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் என்று பீத்திக்கொள்ளும் இந்தியாவில்தான் நடக்கின்றது. ஒழுக்கம் கற்பு வலியுறுத்தல் போன்ற சமூக இறுக்கத்தால் பாலியல் வல்லுறவும் சரி எயிட்ஸ் நோயாளிகளும் சரி 40 வீதத்திற:கும் குறைவாகத்தான் தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

மனிதன் பற்றிய சரியான அறிவின்மையும் உணர்தல் இன்மையுமே கள்ளக் காதல் போன்ற விடயங்களுக்கு வழிகோலுகின்றன என்று நினைக்கின்றேன்.

உடல் பாலுணர்வு இச்சையை தீர்க்க புணர்ந்து செல்லுதல் என்பதுதான் சோடி சேருதலின் நோக்கம் என்றிருப்பது மனிதனின் சமுதாய வாழ்வியலை எந்தளவுக்கு பலப்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது..??!

மனிதனின் வெற்றிகரமான சமூக வாழ்வுக்கு சோடி.. குடும்பம்.. போன்ற அடிப்படை சமூகக் கட்டமைப்புக்கள் உறுதியானவையாகவும்.. பிடிப்புள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில் தான் அவனால் வெற்றிகரமான வாழ்வை கொண்டு செல்ல முடிகிறது.

எனது கருத்தியலில்... பாலுணர்வு என்பது மனிதனுக்கும் விலங்குக்கும் ஒத்தது போல் தோன்றினாலும்.. மனிதன் அந்த உணர்வை மையப்படுத்தி ஒரு வளமான சமூகத்தை கட்டியமைக்கவும் பயன்படுத்துகிறான். இதில் மனிதன் விலங்கில் இருந்து மாறி நிற்கிறான்.

ஒரு விலங்கு.. புணர்ச்சி என்ற நிலைக்கு வரும் போது.. அங்கு சொந்தமில்லை.. பந்தமில்லை.. எதுவும் உணர்வதில்லை. ஆண் - பெண் என்ற அந்த உணர்தலும் இல்லை. இரசாயனங்களின் தூண்டல்.. செயல் இவைதான் உண்டு.

ஆனால் மனிதன் அப்படியானவன் அல்ல. அவன் இரசாயனங்களின் தூண்டலுக்கு மேலாக பகுத்தறிய முற்படுகிறான். தனக்குள் உள்ள தனியன்களை வேறுபிரிக்கிறான். தனக்கு நெருங்கிய உறவுகளை தனது சொந்தமாகக் கருதுகிறான். மனிதனின் அந்தச் சிந்தனை.. மரபியல் ரீதியில் நல்லதாகிறது. நெருங்கிய உறவு நிலை சேர்க்கைகள் மனிதனில் வெற்றிகரமான மரபியல் மாறல்களை பெரிதும் தருவதில்லை.

அதுமட்டுமன்றி மனிதன் தனது இயைபுக்கு ஏற்ப துணையை தேடிக் கொள்வதோடு.. அவனே கட்டி அமைத்துள்ள சமூகத்தில்.. இன்னொன்றின் துணையை தான் கவர்வதில்லை.. என்ற நிலைக்கு வருகிறான். இதன் மூலம்.. சமூகத்தில் உறவு நிலையை பலப்படுத்த முனைகிறான்.

இன்று ஒருவேளை.. ஒருவனின் மனைவியை இன்னொருவனும்.. இன்னொருவனின் மனைவியை அடுத்தவனும் உரிமையாக்கி வாழும் நிலையை எல்லோருக்கும் என்று கொண்டு வந்திருந்தால்.. மனித சமூகம் ஒரு பலவீனமான அடித்தளத்தைக் கொண்டிருக்கும். அப்பா அம்மா சகோதரங்கள் மாமா மச்சான்.. இப்படியான குடும்ப நிலை உறவுகள் இருந்திருக்கா..! இந்த உறவு நிலைகளே மனிதனின் சமூக வாழ்வை பலப்படுத்தி நிற்கின்றன. மனிதனின் பாலியல் தூண்டல்களை கட்டுப்படுத்தி அவனை வேறு பாதையில் சிந்திக்கவும் செயற்படவும் வைத்துள்ளன. அதன் வழி மனிதன் மற்ற எல்லா விலங்குகளில் இருந்தும் மாறி நிற்கிறான்.. வாழ்வியலில்.

கள்ளக் காதல்.. போன்றவை அறிவு மட்டம் இல்லாத மனித சமூகங்களில் பெருகிக் கிடக்கின்றதே அன்றி ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனித சமூக வாழ்வியல் சிந்தனை தான் அதற்கு காரணம் என்றில்லை. இந்தியாவை பொறுத்தவரை அந்த நாடு அறிவு சமூக அறிவு சார்ந்து.. அறிவியல் சார்ந்து அதன் குடிமக்களை அறிவூட்டத் தவறி நிற்கிறது. காரணம் அதன் அளவுக்கு மிஞ்சிய சனத்தொகை. மேற்கு நாடுகளில் இவ்வளவு கல்வி அறிவு வசதிகள் இருந்தும் எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்றால்.. அதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கை முறையே. இந்தியாவில் ஒருவேளை மேற்குலக தரத்திற்கு கல்வி அறிவும் இதர வசதிகளும் இருப்பின்.. இந்திய கலாசாரம் மேற்குலக கலாசாரத்தால் மாசுபடாதிருப்பின் நிச்சயம் இந்தியாவில் அதன் சனத்தொகையோடு ஒப்பிடும் நிலையில் எயிட்ஸ் போன்ற நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

கல்வி அறிவு என்பதும் சமூக அறிவு என்பதும் தான் மனிதனை விலங்கில் இருந்து பிரித்து பகுத்தறிவு நிலையில் மேம்படுத்தி வைத்திருக்கிறது. இந்திய சமூகம் கலாசார சிந்தனைகளை கொண்டிருக்கிறதே அன்றி போதிய கல்வி மற்றும் சமூக அறிவை கொண்டிருக்கவில்லை. இந்திய சமூகத்திடம் அந்த கலாசார சிந்தனைகளும் இன்றேல் இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் எயிட்ஸ் நோய்க்குரிய தேசமாகவே இருந்திருக்கும்.

மேற்குலகம் அப்படி அன்று. அவங்கு ஒப்பீட்டளவில் இலகுவாக கையாளக் கூடிய சனத்தொகை.. அனைவருக்கும் நல்ல கல்வி.. சுகாதார வசதி.. நோய்க்காப்பு முறைகள் உயர் தரத்தில் வழங்கப்படுகின்றன. இருந்தும் எயிட்ஸ் பெருகிக் கொண்டே இருக்கிறது. காரணம்.. அவர்களிடம் அற்றுப் போயுள்ள.. தனிமனித ஒழுக்கம் என்பதுதான்.

இந்தியர்களிடம் கலாசாரம் புகுத்தியுள்ள தனிமனித ஒழுக்கம் என்பது மட்டும் எயிட்ஸை கட்டுப்படுத்தப் போதாது. காரணம் தனிமனிதன் அந்த ஒழுக்கத்தை எவ்வேளையிலும் தவறவிடலாம். ஆனால் அந்த தனிமனித ஒழுக்கத்தை திடமாக கடைப்பிடிக்க நல்ல கல்வி அறிவும் சமூகம் பற்றிய அறிவும்.. பாலியல் அறிவும் சுகாதாரம் பற்றிய அறிவும் அவசியம். இந்திய சமூகங்களுக்கு இவை சரியாக அளிக்கப்படின் அங்கு எயிட்ஸின் தாக்கத்தை இன்னும் இன்னும் குறைக்கலாம்.

ஆனால் மேற்குலகில்.... எதைக் கொண்டு குறைப்பது.. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதன் மூலமே அதைச் செய்யலாம். அதைத்தான் அவர்கள் செய்கின்றனர். நம்பிக்கைக்குரியவர்களுடன் மட்டும் உறவு வையுங்கள் என்ற விளம்பரங்கள்.. கண்டவரோடும் உறவு வைத்தலை தடை செய்கிறது..! இது தனி மனித ஒழுக்கத்தை மறைமுகமாக வலியுறுத்துகிறது.

எமது ஒப்பீடுகளை எமக்குள் உள்ள நியாயத்தின் அடிப்படையில் முன் வைப்பதிலும் யதார்த்தத்தின் அடிப்படையில் முன் வைப்பதுதான் நல்லது. ஏனெனில் நாம் நியாயம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பலவற்றுள் எம்மை அறியாமலே பல அறியாமைகளை புகுத்தி வைத்திருப்போம். இதனையும் கருத்தில் கொள்வது அவசியம். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதாயினி தாமரையின் இந்தப் பேச்சை கேளுங்கள்.. தனிமனித ஒழுக்கமும்.. சமூகமும் பற்றி சொல்கிறார்..

http://www.sivajitv.com/events/thamarai-speech-fetna-2010.htm

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஈடுபடும் ஆணோ , பெண்ணோ, தத்தமது சட்டபூர்வமான துணைகளும்  இப்பிடி குருவி சுடப்போனால் கெம்பி எழுவினம் .

தேன் பூசி எழுதப்படும் மனோவியல் என்று மறைக்கப்படும் சால்ஜாப்புகள் எல்லாம் அங்கே பல்லிளித்து அடிபட்டுப்போகும் .

போங்கய்யா,  போய் புருஷன் பெண்சாதிக்கு உண்மையாய் இருந்து சீவியுங்கப்பா .... 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.