Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடையாளம் காட்டப் போறன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri_lankan.jpg

ஓல்(O/L) பரீட்சையில்

ஓல்(all) எவ்(F) வந்ததும்

தலை கிறுகிறுக்க அலைந்த போது..

இயக்கத்துக்கு ஓடிடுவானோ..

பயந்தாள் அம்மா.

ஊருக்க வைச்சிருந்தா

உவங்கள் வந்து

இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள்

உங்கால உள்ள காணியை

வைச்சிட்டு

அனுப்பிவிடு இவனை

கொழும்புக்கு..

புத்தி சொன்னார் அப்பா.

கொழும்பில

போய் பொடி கெட்டிடும்

உந்த ஊரெல்லாம் போகுது கனடா

அனுப்பிவிடு அங்க..

பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..!

நானும்

சோதனையில் பெயிலான (fail ஆன)

சோகம் தீர

புறப்பட்டேன்

தாண்டிக்குளம் தாண்டி

ரொராண்டோ.

வருசம் ஒரு 5 போய் இருக்கும்

நாலு காசு

நாய்படா பாடுபட்டு

வெள்ளைத் தோலிடம்

ஏச்சும் இழிவும் வாங்கி

உழைச்சது தான்..!

அம்மா கேட்டாள்

பொம்பிளை ஒன்று அனுப்பி வைக்கட்டே..??!

இளமைத் துடிப்பும்

சோடியாய் அலையும்

ரொராண்டோ வீதிகளும்

எனக்குள்ளும் மோகத்தைக் கிளறி விட

அம்மாவின் கேள்வியில்

நியாயத்தை தேடி..

ஓம் என்றேன்..!

கலியாணம் முடிக்க..

சிறீலங்கா போக ஏலாதாம்

ஏனென்றால் நான் அகதியாம்..

அட கடவுளே

செல் (shell) வந்து அறியா

ஊரை விட்டு ஒரு நாளும் ஓடினதில்ல..

ஓல் லில பெயிலானதுக்கு

அம்மாக்குப் பயந்து

கோவிலில போய் ஒளிச்சிருந்ததை தவிர..

எனக்கும் அகதிப் பட்டம்.

பொம்பிளைக்கு ஆசைப்பட்ட மனசு

சிங்கப்பூர் போயாவது

கொண்டு வரத் துடித்தது

அந்த ஊர் மறி ஆட்டை..!

கனடா குளிருக்க

இருந்த பசிக்கு

வேட்டைக்கு அது அவசியம்..

என்று கண்டதால

றிஸ்க்(risk) எடுப்பது

றஸ்கு சாப்பிடுவது போலாச்சு எனக்கு.

எல்லாம் நல்ல படியா முடிஞ்சு

அவளும் வந்து சேர்ந்தாள்.

மாதம் ஒரு 10 போய் இருக்கும்

யூனியரும் தவழ்ந்தது என் மடியில்.

அதுக்குள்ள

ஊரில பிரச்சனை என்று

அம்மாவும் அப்பாவும் கூட தங்கையும்

ஓடி வந்துவிட்டனர் கொழும்புக்கு.

ஊரே காலி.

நானும் ஓர் நாள்

தற்செயலாக செய்தி கேட்க..

முள்ளிவாய்க்காலாம் எண்டாங்கள்..!

என்ர பொடியும்

வெளியுலகம் பார்த்தது இல்ல..

நானும் புலி வால் பிடிச்சு அறிஞ்சதில்ல..

புறப்பட்டோம்.. போராட என்று

தமிழீழம் கேட்டு..

கட்டினோம் புலிக்கொடி.. காரெல்லாம்.

போதாக்குறைக்கு

பொடிக்கும் மூஞ்சியெல்லாம் புலி வேசம் வரைஞ்சு..

போட்டோம் கூச்சல்...

விடுப்போடு பொழுது போக்க

புலி ஆதரவும் காட்டி நிற்க..!

நாலு சனம் பார்த்துப் பேச..!

இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு

அமைதி வந்திட்டு

அவங்கள் எல்லாம் செத்துட்டாங்கள்

போற வாற வழியில

வரியும் இல்ல புலியும் இல்ல..

ஆமிக்காரங்கள் இங்கிலீசில கதைச்சு

எங்கட பிள்ளைகளை கொஞ்சி மகிழுறாங்கள்

நீயும் கொண்டு போய் காட்டன்....

என்றார்

சுப்பர் மார்க்கட்டில் என்னோட

கூட மாரடிக்கும் மாதகல் மதன்.

போன மாதம் தான்

ஊருக்கு போய் வந்தவராம்.

மதனின் கதை கேட்டதில

எனக்கும் ஊருக்கு போற ஆசை முளைக்க

சும்மா கிடக்கேலாம

கடைசி நேரத்தில புலிக்கொடி புடிச்சது

பயமும் வந்து தொலைய..

தயங்கிப் போட்டு

என்ன ஊருக்குப் போவமே

உமக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்..

மனிசி என்று வந்து

வீட்டுக்கையே இருந்து

எனக்காய் உழைக்கும் அவளையும்

சும்மா கருத்துக் கேட்டன்.

ஓமங்க..

எங்கட பொடிக்கும் ஊர் காட்ட வேணும்

எனக்கும் அப்பா அம்மாவை பார்க்க வேணும்..

வாங்கோ போவம்.

ரிக்கட் போடுறதென்றால்

சிறீலங்கன் எயார் லைன்சில போடுங்கோ..

தமிழ் படம் போடுவாங்களாம்..

எங்கட ஊர் சாப்பாடாம்..

குணம் அன்ரி சொன்னவ..!

அப்ப சரி

நல்லூர் திருவிழாவும்

பார்க்கிற மாதிரி ரிக்கட் போடுறன்..

நீர் இப்பவே ரெடியாகும்

ஊரில உள்ளதுகளுக்கு

சும்மா வெறும் கையோட போக ஏலுமே

நாலு சாமான் வாங்கிச் சேரும்..

என்ன..!

நாலு சாமான் வாங்கிச் சேர்த்து

நாலு லக்கேஜ் கட்டி ஏத்தி

நானும் கட்டுநாயக்கா தாண்டி

ஊருக்கு போனது தான்..

ஊரெல்லாம் நல்ல கலகலப்பு..

உவங்கள் யாரோ

ஈழம் கேட்டு நாசமாக்கினதை தவிர

சனம் ஸ்கூட்டியில பறக்குதுகள்..

ஆமிகாரன் நின்று விசிலடிச்சு

எங்கட பெட்டையளுக்கு

விளையாட்டு காட்டுறான்

என்ன ஒரு பொழுதுபோக்கு

என்ன ஒரு இன ஐக்கியம்..!

கொழும்பில பார்த்த சிங்களம்

மணிக்கூட்டு கோபுரத்தில ஏறி நிற்குது..

மருதானையில பார்த்த புத்தர் சிலை..

மருதனார் மடத்திலும் இப்ப இருக்குது..

பஸ்ஸில பார்த்த ஆமத்துறு

ஆரிய குளத்தில குளிக்கிறான்..!

என்ர பொடிக்கு

உதுகள் தான் எங்கட அடையாளங்கள்

காட்டின திருப்தியோட

கல்வியங்காடு தாண்டி வரேக்க சொன்னன்..

இதுதான்

செங்குந்தா இந்துக்கல்லூரி

இங்க தான் நான் படிச்சது.

பொடியும் கேட்டான்

அதென்ன செங்குந்தா என்றால்

அது அந்த ஊரில இருந்த சாதி

அதென்னப்பா சாதி என்றால்..

காட்டுறன் வா..

அழைச்சுக் கொண்டு

யாழ்ப்பாணச் சாதியெல்லாம்

காட்டிப் போட்டு..

கடைசில..

விடை பெற்றோம்..

கனடாவுக்கு..!

லக்கேச்சுக்கு மேல..

காவுகின்றோம் கனக்க

தலை நிறைய...!

அடுத்த தலைமுறைக்கு

அடையாளமாய் காட்ட..!

அதோட அடுத்த முறைக்கு வரேக்க

கண்டிக்கும் போக வேணும்..

அதுவும் எங்கட நாடு தான்

என்றேன் பெருமையோடு

என்ர பொடிக்கு.

அது சரி

உவங்கள் உந்த சீமேந்து இல்லாத

காலத்திலும்

சக்கரையும் சுண்ணாம்பும் போட்டு கட்டினது

மாவீரர் இல்லங்கள் எண்டாங்கள்

அதுகளைக் காணவே கிடைக்கல்ல..

ஓடேக்க இடிச்சிருப்பாங்கள் போல..!

இப்ப

ஆமிக்காரன்

நல்லாத்தான் வைச்சிருக்கிறான் ஊரை..

ஓல் லில சமூகக்கல்வியில..

படிச்சதை வைச்சு

எவ் எடுத்ததில..

உதயமான அரசியல்

ஞானம்..

ஆராய்ச்சி செய்து கண்ட

உண்மை இது.

ஊரில அமைதி வந்திட்டு

சுதந்திரம் கிடைச்சிட்டு..

சரி எல்லாரும் வாங்கோ

ஒருக்காலாவது

சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஏறி

எங்கடையளுக்கு

அடையாளம் காட்ட

ஊருக்குப் போவம்

இதுவே கனடாவில

என்ர அரசியல் பிரச்சாரம் இன்று..!

Edited by nedukkalapoovan

கவிதை நல்லாய் இருக்கிறது நெடுக்ஸ். அமெரிக்கா இருக்கிது, ஐரோப்பா இருக்கிது, அவுஸ்திரேலியா இருக்கிது, ஆபிரிக்கா இருக்கிது. அது ஏனப்பு கனடாவை எல்லாத்துக்கும் இழுப்பான்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாய் இருக்கிறது நெடுக்ஸ். அமெரிக்கா இருக்கிது, ஐரோப்பா இருக்கிது, அவுஸ்திரேலியா இருக்கிது, ஆபிரிக்கா இருக்கிது. அது ஏனப்பு கனடாவை எல்லாத்துக்கும் இழுப்பான்.

ஊரில ஒரு காலத்தில கனடா போறதே எம்மவர்களின் இலட்சியமாக இருந்தது. சில பேர் இயக்கத்துக்குப் போக பல பேர் கனடாவுக்கு போக பிள்ளையாருக்கு வைரவருக்கு அந்தோனியாருக்கு.. மாதாவுக்கு.. பொங்கல் பொங்கிறதும்.. தேர் இழுக்கிறதும்.. பிரதிஸ்டை பண்ணுறதும்.. ரொட்டி கொடுக்கிறதுமா.. இருந்தவை..! நாங்க அப்போ சிறியவர்கள். அதெல்லாம் பசுமரத்து ஆணிபோல அழகாக ஆழமாக மனதில் பதிந்திருக்குது. அதுதான் அடிக்கடி கனடா ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. நான் என்ன செய்ய..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை..! அத்தனையும் யதார்த்தம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும்

ஏன் இந்த நிலை என்பதற்கு இதுவும் ஒரு சான்று

நன்றி நெடுக்ஸ்......

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் கனடாவில்தான் இருக்கிறார்

அவர் A/L இல் ஓல் எவ் (All F) எடுத்தார்

அவரது படிப்பு எப்படியென்றால்

காலையில் 3 மணிக்கு எழும்பி சட்டியில் தண்ணி எடுத்து அதற்குள் இரு காலையும் வைத்துக்கொண்டு தூங்கித்தூங்கி விழுவார்

நான் பலமுறை சொன்னேன்

ஒன்றில் நிம்மதியாய் நித்திரை கொள்

இல்லையென்றால் படி

நீ இரண்டையும் இழக்கின்றாய் என்று.

நித்திரை வரும்வரை படித்துவிட்டு நிம்மதியாக நித்திரை கொண்ட நான் பாசானேன்

இரண்டையும் கலந்தவர் ஓல் எவ் ஆனார்.

அவரது தாயார் இவர் பிறக்கும்போதே கணவனை இழந்தவர்.

இவர் தான் அவருக்கு எல்லாமே

அதனால் மிகுதி தங்களது கவிதையில் உள்ளபடியேதான் நடந்தது

அதனால்தான் இதை ஏன் இங்கு எழுதுகின்றேன்

அவர் இன்றும் சொல்கிறார்

இயக்கத்துக்கு போக அம்மா விடவில்லை என்று.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

.

கொழும்பில பார்த்த சிங்களம்

மணிக்கூட்டு கோபுரத்தில ஏறி நிற்குது..

மருதானையில பார்த்த புத்தர் சிலை..

மருதனார் மடத்திலும் இப்ப இருக்குது..

பஸ்ஸில பார்த்த ஆமத்துறு

ஆரிய குளத்தில குளிக்கிறான்..!

நல்ல கவிதை நெடுக்ஸ்.

வாசிக்கும் போது ஏக்கம் தான் வருகின்றது.

.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு வித்தியாசமாய் இருக்கிறது...கவிதை நன்றாக,யதார்த்தமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு சாமான் வாங்கிச் சேர்த்து

நாலு லக்கேஜ் கட்டி ஏத்தி

நானும் கட்டுநாயக்கா தாண்டி

ஊருக்கு போனது தான்..

ஊரெல்லாம் நல்ல கலகலப்பு..

உவங்கள் யாரோ

ஈழம் கேட்டு நாசமாக்கினதை தவிர

சனம் ஸ்கூட்டியில பறக்குதுகள்..

ஆமிகாரன் நின்று விசிலடிச்சு

எங்கட பெட்டையளுக்கு

விளையாட்டு காட்டுறான்

என்ன ஒரு பொழுதுபோக்கு

என்ன ஒரு இன ஐக்கியம்..!

கொழும்பில பார்த்த சிங்களம்

மணிக்கூட்டு கோபுரத்தில ஏறி நிற்குது..

மருதானையில பார்த்த புத்தர் சிலை..

மருதனார் மடத்திலும் இப்ப இருக்குது..

பஸ்ஸில பார்த்த ஆமத்துறு

ஆரிய குளத்தில குளிக்கிறான்..!

என்ர பொடிக்கு

உதுகள் தான் எங்கட அடையாளங்கள்

காட்டின திருப்தியோட

கல்வியங்காடு தாண்டி வரேக்க சொன்னன்..

இதுதான்

செங்குந்தா இந்துக்கல்லூரி

இங்க தான் நான் படிச்சது.

பொடியும் கேட்டான்

அதென்ன செங்குந்தா என்றால்

அது அந்த ஊரில இருந்த சாதி

அதென்னப்பா சாதி என்றால்..

காட்டுறவன் வா..

அழைச்சுக் கொண்டு

யாழ்ப்பாணச் சாதியெல்லாம்

காட்டிப் போட்டு..

கடைசில..

விடை பெற்றோம்..

நாலு வசனம் என்றாலும் நறுக்கென்று சொல்லியிருக்கின்றீர்கள்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சுவாரசியமாய் ....கிராமத்து வழக்கோடு ... வரைய பட்டு இருக்கிறது .

.ஆனால் உள் மனத்தில் ஒருவலி............பாராடுக்கள். ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா நீங்க எல்லாரும் எங்கை இருந்தப்பா எழுதுறிங்க?

சரி all(F) எடுத்தவன் தான் இயக்கத்துக்கு போகணும் என்று ஏதாச்சும் தலையெழுத்தா?

இல்லை படிச்சவங்கள் தான் புலம்பெயர்ந்து வரணும் என்றும் இருக்கா?? சரி படிச்சனிங்கள் போராட்டத்துக்காக என்னைய்யா பண்ணினிங்க????

படிச்ச,பணக்கார திமிர் தானே இந்த கவிதையிலும்,சிலருடைய பின்னூட்டத்திலும் தெரிகிறது.all (F) எடுத்தவன் எல்லாம் இயக்கத்துக்கு தான் போகவேணும் என்று சொல்லுறிங்கள் போல.

இந்த மனநிலை மாறும் வரைக்கும் போராட்டமும்........

Edited by ஜீவா

நீங்கள் அவசரப்பட்டு எழுதுறீங்க என்று நினைக்கிறன்.

ஓல்லில பெயிலாயிட்டதால பொடி இயக்கத்துக்கு ஓடிடுமோ என்ற பயம் தாயிடத்தில் வருகிறது என்பதாகத்தான் காட்டி எழுதப்பட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு முறையும் றிசல்ட் வந்த உடன ஒரு கூட்டம் இயக்கத்துக்கு புதிதாக வருவதை இயக்கமே கண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மையும் கூட. அங்கு பெயில் விட்டவர்கள் மட்டுமல்ல.. தரப்படுத்தலால் பல்கலைக்கழகம் போக முடியாதவர்களும் அடங்கி இருந்தனர். ஏன் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்கள் கூட போராளி ஆகி இருக்கின்றனர். குறிப்பாக திலீபன் அண்ணா போன்றவர்கள்.. மருத்துவ பீடத்துக்கு தெரிவானவர்கள்.

இவ்வளவு நியாயம் கேட்கிறீங்களே..

இயக்கதிற்குப் போன யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் வாரிசுகள் எத்தனை பேர்...??! அத்தனை வாரிசுகளும் இன்று லண்டனிலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் இருக்கினம்.

யார் போராடப் போனார்கள்.. அதிகம் ஏழை மக்களும்.. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளால்.. கீழ் சாதி என்று வர்ணிக்கப்பட்ட மக்களின் வாரிசுகளுமே..! கிழக்கில் யார் போராடப் போனார்கள் வறிய கிராமங்களைச் சேர்ந்த எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களே. மாவீரர் பட்டியலை எடுத்துப் பாருங்கள்.. படுவான்கரையும்.. பழுகாமமும்.. வாகரையும்.. கிரானும்.. தந்தது தான் அதிகம். மட்டக்களப்பு நகரை விட.

யார் சிறீலங்காவிற்கு காட்டிக் கொடுத்து அரசியல் செய்தார்கள்.. அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் நித்தியானந்தன்களும்.. நீலன் திருச்செல்வங்களும்.... அவர்களின் மனைவிகளும் வாரிசுகளும். சித்தார்த்தன் யார்.. டக்கிளஸ் தேவானந்தா யார்..??!

நாங்கள் ஆத்திரப்படுவதில் நியாயம் இல்லை. நாங்கள் ஒதுங்கி இருந்து ஓடி வர சந்தர்ப்பம் பார்த்து நின்ற மக்களை தான் அதிகம் கண்டிருக்கிறோமே தவிர பங்காளிகளாக இருக்க பலர் விரும்பவில்லை. இன்றும் கூட அதே மக்கள் தான் ஊருக்கு சுற்றுலாப் போகவும் முண்டி அடிக்கின்றனர்.

மக்களில் பலர் இன்னும் மாறவில்லை. ஆனால் போராளிகள் தான் இவர்களுக்காக போராடி மாய்ந்திருக்கிறார்கள்...! வீழ்ந்தது அவர்கள் வாழ்ந்தது இவர்கள்..! இதில் ஒரு நன்றிக்கடன் கூட இல்லாத மக்களையே நான் அதிகம் காண்கிறேன்..!

வாய்கிழிய முழக்கம் போட்டவர்கள் எல்லாம் இன்று சிறீலங்கன் எயார் லைன்ஸில் பறக்கின்றனர்.. நேற்று வரை புறக்கணிப்போம் என்றவர்கள் இன்று புறப்பட்டு நிற்கிறார்கள்.. இதுதான் எமது தோல்விக்கு காரணமே அன்றி.. வேறல்ல..! இவர்கள் இன்று அடையாளம் காட்டப் போகின்றோம் என்று போகின்றனர்..

அங்கோ மாவீரர் துயில் இல்லங்கள் கூட அடையாளம் இன்றி போய் சிங்கள பெளத்த சின்னங்கள் அடையாளமாகிக் கிடக்கின்றன. இந்த நிலையில்.. எதை அடையாளமாகக் காட்டப் போகின்றனர்..??! இவர்களின் வாரிசுகளுக்கு தமது தேசம் சிங்கள பெளத்த தேசம் என்றா சொல்லிக் கொடுக்கப் போகின்றனர்..??! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகு.எமது சமுதாயத்தை தோலுரித்து காட்டியுள்ளது உங்கள் கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நீங்க எல்லாரும் எங்கை இருந்தப்பா எழுதுறிங்க?

சரி all(F) எடுத்தவன் தான் இயக்கத்துக்கு போகணும் என்று ஏதாச்சும் தலையெழுத்தா?

இல்லை படிச்சவங்கள் தான் புலம்பெயர்ந்து வரணும் என்றும் இருக்கா?? சரி படிச்சனிங்கள் போராட்டத்துக்காக என்னைய்யா பண்ணினிங்க???? படிச்ச,பணக்கார திமிர் தானே இந்த கவிதையிலும்,சிலருடைய பின்னூட்டத்திலும் தெரிகிறது.all (F) எடுத்தவன் எல்லாம் இயக்கத்துக்கு தான் போகவேணும் என்று சொல்லுறிங்கள் போல. இந்த மனநிலை மாறும் வரைக்கும் போராட்டமும்........

ஜீவா

தாங்கள் இந்த கவிதையில் எல்லாவற்றையும் எதிர்பார்க்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்

தங்கள் முதலாவது கேள்விக்கு பரீட்சையில் தோற்ற எனது நண்பரும் பாசான நானும் வெளியாட்டில்தான் இருக்கின்றோம்

ஆனால் பாசானால் ஒரு அடுத்த கட்ட தெரிவு இருக்கும்

அதேநேரம் பரீட்சையில் தோற்றால்

அடுத்து என்ன செய்வது என்றநிலை வரும்.

எனவே பாசானவர்கள் மேற்படிப்புக்கும்

தோற்றவர்கள் இயக்கத்துக்கு போவது அதிகமாகவும் இருந்தது என்பது உண்மை.

அது சரியான முடிவும் தானே.

அதேநேரம் பாசாகியும்மேற்படிப்புக்கு போகாமல், இயக்கத்துக்கும் போகாமல்..... வெளிநாட்டை நோக்கி நகர்ந்த என்னைப்போன்றோர் இன்னொரு ரகம்.

அந்த குத்துதல் இன்றும் உண்டு எனக்கு....

அதனால்தான் இன்றுவரை என்னால் முடிந்ததை செய்து வருகின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா நீங்க எல்லாரும் எங்கை இருந்தப்பா எழுதுறிங்க?

சரி all(F) எடுத்தவன் தான் இயக்கத்துக்கு போகணும் என்று ஏதாச்சும் தலையெழுத்தா?

இல்லை படிச்சவங்கள் தான் புலம்பெயர்ந்து வரணும் என்றும் இருக்கா?? சரி படிச்சனிங்கள் போராட்டத்துக்காக என்னைய்யா பண்ணினிங்க????

படிச்ச,பணக்கார திமிர் தானே இந்த கவிதையிலும்,சிலருடைய பின்னூட்டத்திலும் தெரிகிறது.all (F) எடுத்தவன் எல்லாம் இயக்கத்துக்கு தான் போகவேணும் என்று சொல்லுறிங்கள் போல.

இந்த மனநிலை மாறும் வரைக்கும் போராட்டமும்........

படிக்காத முட்டாள்கள் என்று மாவீரர்களையும் போராளிகளையும் சொல்லீனம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் அதை அழகாய் தந்த நெடுக்கின் கற்பனை அபாரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் அவசரப்பட்டு எழுதுறீங்க என்று நினைக்கிறன்.

ஓல்லில பெயிலாயிட்டதால பொடி இயக்கத்துக்கு ஓடிடுமோ என்ற பயம் தாயிடத்தில் வருகிறது என்பதாகத்தான் காட்டி எழுதப்பட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு முறையும் றிசல்ட் வந்த உடன ஒரு கூட்டம் இயக்கத்துக்கு புதிதாக வருவதை இயக்கமே கண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மையும் கூட. அங்கு பெயில் விட்டவர்கள் மட்டுமல்ல.. தரப்படுத்தலால் பல்கலைக்கழகம் போக முடியாதவர்களும் அடங்கி இருந்தனர். ஏன் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்கள் கூட போராளி ஆகி இருக்கின்றனர். குறிப்பாக திலீபன் அண்ணா போன்றவர்கள்.. மருத்துவ பீடத்துக்கு தெரிவானவர்கள்.

நெடுக்ஸ் அண்ணா,

கவிதை என்பது ஒவ்வொருவருக்குள் ஒரு எண்ணத்தை சொல்லுவதாய் அமையும். எல்லாருக்கும் ஒரே மாதிரி அர்த்தம் சொல்வதாய் இருப்பதில்லை. இல்லை. உங்கள் கவிதை என் மனதில் உருவாக்கின கேள்விகள்.

1. பரீட்சையில்,காதலில் தோற்றவர்களும்,வறுமை காரணமாகச் சென்றவர்களும் அதிகம் என்றால் இவர்களுக்கு போராட வேண்டும் என்ற வீரியம் வருமா??? அப்படியென்றால் நாட்டுக்காக யாரும் போராடப் போகவில்லை என்ற கேள்வி தொக்கி நிற்குதல்லவா???

2. பரீட்சையில் தோற்றதால் பெற்றோர்,சமூகத்துக்கு பயந்து இயக்கத்துக்கு போனவர்களால் எப்படி போராட்டத்துக்கு முழு பங்களிப்பு செய்ய முடியும். ஏனோ தானோ மனநிலை தானே இருக்கும். ஒருவகையில் இதுவும் ஒரு கட்டாயப் படுத்திய ஆட்சேர்ப்பு தானே??? அப்போ எமது தோல்வின் முதல் நிலை எங்கு எழுதப்பட்டு இருக்கிறது???

3. பரீட்சை தோல்வி போராட்டத்திற்கு தூண்டுதென்றால் அதுக்கு யார் காரணம்?

எமது கல்வி முறையும்,பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பும் தானே.

இலைங்கையில் உயர்கல்வி பரீட்சை எடுப்பவர்கள் அண்ணளவாக ஒரு லட்சத்திற்கும் மேல் ஆனால் பல்கலைக்கழகம் தெரிவாவோர் அண்ணளவாக இருபதாயிரம் பேர். அப்படியாயின் மீதி எண்பதாயிரம் பேரும் என்ன செய்ய??

4. ஓ.எல் இல் தோற்றவர்கள் தான் இயக்கத்தில் அதிகம் ஏன்று சொல்வதன் மூலம் இயக்கத்தின் செயற்பாடுகள் பிழை என நிறுவுகிறீர்களா?

.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

தாங்கள் இந்த கவிதையில் எல்லாவற்றையும் எதிர்பார்க்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்

தங்கள் முதலாவது கேள்விக்கு பரீட்சையில் தோற்ற எனது நண்பரும் பாசான நானும் வெளியாட்டில்தான் இருக்கின்றோம்

ஆனால் பாசானால் ஒரு அடுத்த கட்ட தெரிவு இருக்கும்

அதேநேரம் பரீட்சையில் தோற்றால்

அடுத்து என்ன செய்வது என்றநிலை வரும்

எனவே பாசானவர்கள் மேற்படிப்புக்கும்

தோற்றவர்கள் இயக்கத்துக்கு போவது அதிகமாகவும் இருந்தது என்பது உண்ம

அது சரியான முடிவும் தானே

அதேநேரம் பாசாகியும்மேற்படிப்புக்கு போகாமல், இயக்கத்துக்கும் போகாமல்..... வெளிநாட்டை நோக்கி நகர்ந்த என்னைப்போன்றோர் இன்னொரு ரகம்.

அந்த குத்துதல் இன்றும் உண்டு எனக்கு....

அதனால்தான் இன்றுவரை என்னால் முடிந்ததை செய்து வருகின்றேன்

ரொம்ப கொடுமை சரவணா . உங்களைப் பொறுத்தவரை இயக்கத்திற்கு போறது எண'டுறது பரீட்சையில தோத்தா வேலைக்கு போறதோ இல்லாட்டி தொழில்நுட்பக்கல்லூரியிலயோ படிக்கிற மாதிரி. அப்பிடி இயக்கத்திற்கு போறங்க உயிரைக் கொடுத்து தமிழீழம் எடுத்து்தந்தா உங்கள போல படிச்சவங்க பெரிய பொறுப்பில நாட்ட ஆளலாம் எண்டு கனவு கண்டீங்களாக்கும். நீங்களும் உங்கட இன உணர்வும்.

Edited by விடலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்கதிற்குப் போன யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் வாரிசுகள் எத்தனை பேர்...??! அத்தனை வாரிசுகளும் இன்று லண்டனிலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் இருக்கினம்.

யார் போராடப் போனார்கள்.. அதிகம் ஏழை மக்களும்.. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளால்.. கீழ் சாதி என்று வர்ணிக்கப்பட்ட மக்களின் வாரிசுகளுமே..! கிழக்கில் யார் போராடப் போனார்கள் வறிய கிராமங்களைச் சேர்ந்த எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களே. மாவீரர் பட்டியலை எடுத்துப் பாருங்கள்.. படுவான்கரையும்.. பழுகாமமும்.. வாகரையும்.. கிரானும்.. தந்தது தான் அதிகம். மட்டக்களப்பு நகரை விட.

யார் சிறீலங்காவிற்கு காட்டிக் கொடுத்து அரசியல் செய்தார்கள்.. அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் நித்தியானந்தன்களும்.. நீலன் திருச்செல்வங்களும்.... அவர்களின் மனைவிகளும் வாரிசுகளும். சித்தார்த்தன் யார்.. டக்கிளஸ் தேவானந்தா யார்..??!

நாங்கள் ஆத்திரப்படுவதில் நியாயம் இல்லை. நாங்கள் ஒதுங்கி இருந்து ஓடி வர சந்தர்ப்பம் பார்த்து நின்ற மக்களை தான் அதிகம் கண்டிருக்கிறோமே தவிர பங்காளிகளாக இருக்க பலர் விரும்பவில்லை. இன்றும் கூட அதே மக்கள் தான் ஊருக்கு சுற்றுலாப் போகவும் முண்டி அடிக்கின்றனர்.

மக்களில் பலர் இன்னும் மாறவில்லை. ஆனால் போராளிகள் தான் இவர்களுக்காக போராடி மாய்ந்திருக்கிறார்கள்...! வீழ்ந்தது அவர்கள் வாழ்ந்தது இவர்கள்..! இதில் ஒரு நன்றிக்கடன் கூட இல்லாத மக்களையே நான் அதிகம் காண்கிறேன்..!

வாய்கிழிய முழக்கம் போட்டவர்கள் எல்லாம் இன்று சிறீலங்கன் எயார் லைன்ஸில் பறக்கின்றனர்.. நேற்று வரை புறக்கணிப்போம் என்றவர்கள் இன்று புறப்பட்டு நிற்கிறார்கள்.. இதுதான் எமது தோல்விக்கு காரணமே அன்றி.. வேறல்ல..! இவர்கள் இன்று அடையாளம் காட்டப் போகின்றோம் என்று போகின்றனர்..

அங்கோ மாவீரர் துயில் இல்லங்கள் கூட அடையாளம் இன்றி போய் சிங்கள பெளத்த சின்னங்கள் அடையாளமாகிக் கிடக்கின்றன. இந்த நிலையில்.. எதை அடையாளமாகக் காட்டப் போகின்றனர்..??! இவர்களின் வாரிசுகளுக்கு தமது தேசம் சிங்கள பெளத்த தேசம் என்றா சொல்லிக் கொடுக்கப் போகின்றனர்..??! :lol: :lol:

அத்தனையும் மறுக்க முடியாத உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிக்காத முட்டாள்கள் என்று மாவீரர்களையும் போராளிகளையும் சொல்லீனம் போல.

நீங்கள் ஆக்கத்தில் குறிப்பிட்டதற்கு மாறாக கருத்தை திணிக்க விரும்புகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மாவீரர்கள் பற்றியும் போராளிகள் பற்றியும் அல்ல இந்தப் படைப்பு.

இது எப்படி போராட்டத்தை தவிர்த்து போராட்டத்தைக் காட்டி அதனோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டு இன்று தேசம் அடையாளம் என்று பரிந்து பேசிக் கொண்டு எதிரிக்கு துணை போகும் காரியங்களைச் செய்கின்றனர் என்பதையே முதன்மையாக வலியுறுத்துகிறது. இந்தப் பட்டியலில் தான் நிறைய புலம்பெயர்ந்த தமிழர்கள் அடங்குகின்றனர்.

எமது போராட்டம் கல்வித் தரப்படுத்தலில் இருந்துதான் ஆரம்பமானது. உயர்கல்வியை பெறமுடியாத அல்லது அதற்காக வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கபட்ட நிலையில் தான் தமிழீழத்தின் தேவையை அன்றைய இளைஞர்கள் உணரத்தலைப்பட்டு சிவகுமாரன் போன்றவர்களின் முயற்சியில் தமிழீழ மாணவர் பேரவை புரட்சிகர செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியது. அதன் வழியின் போனவர்கள் தான் பிரபாகரன் உட்பட பிற தலைவர்கள்.

ஆகவே போராளிகள் படிக்காத முட்டாள்கள் என்றோ படித்த மேதைகள் என்றோ காட்டுவதை அல்ல நாம் இங்கு படைப்பாக்கி இருக்கின்றோம்.

அமெரிக்க இராணுவம் உட்பட பிரித்தானிய படையில் கூட படைத்துறை கல்வி தான் முதன்மைத் தகுதியாகக் கருதப்படும். அதனை எல்லா புலிப் போராளிகளுக்கும் விடுதலைப்புலிகள் வழங்கி இருக்கின்றனர். அந்த வகையில் போராளிகள் படிக்காதவர்கள் என்ற கதைக்கே இடமில்லை..! அப்படியாக இந்த இடத்தில் காட்ட முனைவது மிக மோசமான கருத்துத் திணிப்பாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

கவிதை என்பது ஒவ்வொருவருக்குள் ஒரு எண்ணத்தை சொல்லுவதாய் அமையும். எல்லாருக்கும் ஒரே மாதிரி அர்த்தம் சொல்வதாய் இருப்பதில்லை. இல்லை. உங்கள் கவிதை என் மனதில் உருவாக்கின கேள்விகள்.

1. பரீட்சையில்,காதலில் தோற்றவர்களும்,வறுமை காரணமாகச் சென்றவர்களும் அதிகம் என்றால் இவர்களுக்கு போராட வேண்டும் என்ற வீரியம் வருமா??? அப்படியென்றால் நாட்டுக்காக யாரும் போராடப் போகவில்லை என்ற கேள்வி தொக்கி நிற்குதல்லவா???

2. பரீட்சையில் தோற்றதால் பெற்றோர்,சமூகத்துக்கு பயந்து இயக்கத்துக்கு போனவர்களால் எப்படி போராட்டத்துக்கு முழு பங்களிப்பு செய்ய முடியும். ஏனோ தானோ மனநிலை தானே இருக்கும். ஒருவகையில் இதுவும் ஒரு கட்டாயப் படுத்திய ஆட்சேர்ப்பு தானே??? அப்போ எமது தோல்வின் முதல் நிலை எங்கு எழுதப்பட்டு இருக்கிறது???

3. பரீட்சை தோல்வி போராட்டத்திற்கு தூண்டுதென்றால் அதுக்கு யார் காரணம்?

எமது கல்வி முறையும்,பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பும் தானே.

இலைங்கையில் உயர்கல்வி பரீட்சை எடுப்பவர்கள் அண்ணளவாக ஒரு லட்சத்திற்கும் மேல் ஆனால் பல்கலைக்கழகம் தெரிவாவோர் அண்ணளவாக இருபதாயிரம் பேர். அப்படியாயின் மீதி எண்பதாயிரம் பேரும் என்ன செய்ய??

4. ஓ.எல் இல் தோற்றவர்கள் தான் இயக்கத்தில் அதிகம் ஏன்று சொல்வதன் மூலம் இயக்கத்தின் செயற்பாடுகள் பிழை என நிறுவுகிறீர்களா?

.

உங்கள் வினாக்களில் நியாயம் இருந்தாலும்.. உண்மை என்ற ஒன்றும் இருக்கிறது.

போராடப் போனவர்களை பின் வருவோராக 8 பிரதான பிரிவுகளில் அடக்கலாம். (பிற சிறு பிரிவுகள் இருந்தாலும் பிரதானமாக இவற்றை காணலாம்).

வினா 1 க்கான விடை..

1. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

2. எல்லையோரங்களில் சிங்களக் குடியேற்றங்களால் விரட்டி அடிக்கப்பட்டோர்.

3. மாற்றுக்குழுக்களின் உபத்திரங்களால் ஆத்திரமடைந்தோர்.

4. கல்வி மற்றும் வேலையில் புறக்கணிக்கப்பட்டதால் அரசை எதிர்க்க வேண்டும் என்று எண்ணியோர்.

5. சாதியம் பேசும் சமூகத்தால் பாதிக்கப்பட்டோர்.

6. வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்து நின்றவர்களுக்கு புரட்சிகர பாதையில் தம்மை உட்படுத்தி தமது திறனைக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நின்றோர். (இதற்குள் தான் சோதனையில் காதலில் தோற்றோர் வருகின்றனர்.)

7. ஈழத்தைப் பொறுத்தவரை ஏழ்மையால் சாப்பாட்டிற்காக இயக்கத்தில் சேர்ந்தோர் மிகக் குறைவு. ஆனால் ஏழைகள் எதிரிகளாலும் சமூகத்தின் பிற பிரிவினராலும் மற்றும் பிற இயக்கங்களாலும் பாதிப்புக்களை சந்திக்க நேர்ந்த போது அவர்களும் போராடத் தூண்டப்பட்டனர். தேசத்துக்காக மட்டுமன்றி சமூக விடுதலை வேண்டியும்.

8. தேசத்தின் அரசியல் உணர்ந்து தேசத்தின் நிலை உணர்ந்து போராடப் போனவர்கள்.

வினா 2, 3 சிறீலங்காவின் கல்வித்திட்டம் சார்ந்தது. அது அந்த நாடு பூராவுமான பிரச்சனை. எமக்கானது மட்டுமல்ல.

வினா 4 க்கான விடை..

இந்தக் கேள்வி நீங்கள் இயக்கம் பற்றிய சரியான புரிதல் இன்று எழுப்பியதாகவே எனக்குத் தெரிகிறது. இயக்கத்தில் இணையும் அனைவருக்கும் அரசியல்.. இராணுவ.. சமூகக் கல்வி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இயக்கத்தில் இணைந்த எவரும் படிக்காதவர்கள் என்ற வகைக்குள் வைக்கப்பட முடியாதவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மற்றும்படி உங்கள் கேள்விகளில் நீங்கள் தேடும் நியாயங்கள் இருப்பினும்.. உண்மை அதற்கு மாறானதாக இருப்பதால் அதனை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். மற்றும்படி உங்களோடு முரண்பட வேண்டும் என்பதல்ல எனது விருப்பம். நீங்களும் உங்கள் தவறை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி. :lol:

Edited by nedukkalapoovan

கவிதை பெரும்பாலான தமிழனின் தன்மையைத் தான் காட்டி நிற்கின்றது.

ஆரம்பத்தில் இயக்கத்திற்கு பலவிதமான கோணங்களிலுமிருந்து இளஞர்கள் சேர்ந்தார்கள். 83 கலவரம் முழு தமிழ் இளைஞர்களையுமே ஒரு முறை உலுக்கி எடுத்தது.வெளிநாடுகளில் இருந்து கூட பலர் இயக்கங்களில் சாதாரண போராளிகளாக இணைந்து கொண்டார்கள்.(இயக்கம் வர முதல் ஓ.எல் பெயிலானவர்களும் காதலில் தோத்தவர்களும் என்ன செய்தார்கள். சிங்களவனை அடிக்க வேண்டுமென்றுதான் பெரும்பாலானோரின் மனநிலை.சோதனை பெயில்,காதலில் தோல்வி இதுவெல்லாம் ஒரு சின்ன விடயங்கள்.அப்பத்தான் காதலிக்க தொடங்கிய பலரும் யூனிவெர்சிடிகளில் படித்துக் கொண்டிருந்த பலரும் கூட இணைந்து கொண்டார்கள்.

எனக்கு ராதா (கரிச்சந்திரா) புலியில் இணைந்துவிட்டார் என்று கேள்விப்பட நம்பமுடியாமல் இருந்தது.வகுப்பில் அவர் இருந்த விதம் அப்படி ஒரு சோலிக்கும் போகாத மனிதரில் மாணிக்கம்.

பின் 2 வருடங்களில் முற்றாக நிலைமை மாறிவிட்டது.இயக்க உள்முரண்பாடுகள்,இயக்க முரண்பாடுகள்,காட்டிக் கொடுப்புகளென சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.அதன் பின்னர் தான் நீங்கள் சொல்லும் இயக்கத்தில் சேருபவர்களின் நிலை உருவானது .

சிறுகுறிப்பும் உண்மையும்- இயக்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் ஓ.எல் அல்லது ஏ.எல் பாஸ்பண்ணியவர்கள். தலைமைகளும் சென்ரல் கொமிட்டிகளும் அப்படி இப்படித்தான்.அதுதான் இவ்வளவு அழிவுகளுக்கும் மிகப் பெரிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் இத் தலைப்பை பார்த்து விட்டு யாரையோ காட்டிக் கொடுக்கப் போறாராக்கும் என பயந்து விட்டேன். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் எப்போதும் உறைக்கும். சிறப்பானதொரு படைப்பு. வாழ்த்துக்கள் நெடுக்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கொடுமை சரவணா . உங்களைப் பொறுத்தவரை இயக்கத்திற்கு போறது எண'டுறது பரீட்சையில தோத்தா வேலைக்கு போறதோ இல்லாட்டி தொழில்நுட்பக்கல்லூரியிலயோ படிக்கிற மாதிரி. அப்பிடி இயக்கத்திற்கு போறங்க உயிரைக் கொடுத்து தமிழீழம் எடுத்து்தந்தா உங்கள போல படிச்சவங்க பெரிய பொறுப்பில நாட்ட ஆளலாம் எண்டு கனவு கண்டீங்களாக்கும். நீங்களும் உங்கட இன உணர்வும்.

இந்த இன உணர்வும் பற்றும் ஆவேசமும் எப்போதும் தங்களுடன் இருக்கக்கடவது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.