Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிவு

Featured Replies

இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான்

இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு.

கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை.

இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கின்றான் உமக்கு எந்த நேரமும் உந்த பாழாய் போன நாட்டுப் பிரச்சனை தான் என்று எந்த நேரமும் சத்தம்.

அங்கை வந்த படியால் தானே உம்மை கண்டனான் என்றால் அதுதான் விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே பிறகு ஏன் அதை பற்றி அக்கறை என்று பொய்யாக ஒரு கோவம்

உங்களில் யாருக்கும் இந்த நிலை வந்ததா? எல்லோருடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • Replies 77
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ...............ரொம்பவும் கவலைப்படுற மாதிரி தெரியுது. இன்னும் மூன்று கிழமை தானே ஓடிடும்.

பிரிவு என்று ஒன்று இருந்தால் தான் உறவின் அருமை தெரியும்.

பிரிவு நிறையவே அனுபவித்திருக்றேன். சொல்லில் அடங்கா வேதனையுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :wub::huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எனது மனைவி ஒரு மரணச்சடங்கில் கலந்து கொள்ள விமானம் ஏற்றி விட்டேன்......

வீட்டிற்கு வந்த பின் தான்.... ஏன் அனுப்பினேன் என்று இருந்தது

எனது வேலை ஒரு பக்கம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய ஆயத்தம் ஒரு பக்கம், வேலையால் வந்து உணவு தயாரிப்பது,

பிள்ளைகளின் உடுப்பு அயர்ன் பண்ணுவது, வீட்டுப் பாடங்களை கவனிப்பது என்று இரண்டு கிழமை ஒய்வில்லாத வேலை.

பிள்ளைகளின் பொருட்கள் சிலவற்றைத்தேடி.... கிடைக்காமால் புதிது வாங்கியதும் உண்டு.

அப்போது தான் நினைத்தேன்.... எங்களுக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும்..... அவர்கள் எங்களை விட அதிக கஷ்டப் படுகின்றார்கள் என்று.

இனி மேல் இப்படியான சந்தர்ப்பங்களில் எங்காவது செல்வதானால், எல்லோரும் செல்வது என்று முடிவெடுத்தேன்.

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :) :)

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

http://www.youtube.com/watch?v=1tvwJd7bWH8&feature=channel

அர்ஜுன் sorry

என்னை தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்

என்னால் உங்கள் கவலையை உணர முடியுது

இது நகைச்சுவைக்காக மட்டும் டேக் இட் ஈஸி

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது என்ற நிலை. self - dependant ஆக இருந்து குழந்தைகளையும் கவனித்து வீடு வேலை கவனித்து வாழுற பல தகப்பனார்களைக் கண்டிருக்கிறேன். அப்படியான அப்பாக்களுக்கு இதெல்லாம் பெரிய கஸ்டமாக இருக்காது.

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :wub::)

நான் இதுக்கு கருத்து எழுதவிரும்பல

எவனாவது பொல்லைக்கொடுத்து அடி வாங்குவானா...??? :):o:huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரிவென்பது நிரந்தரமானது இல்லையே.

கணவன் மனைவிக்கிடையில் இப்படியான பிரிவுகள் இருப்பது ஒரு புரிந்துணர்விற்கு வழி சமைக்கும்.

இந்தப் பிரிவின் பின்னரான சந்திப்பில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனித் தன்மையானது.

அதையும் அனுபவியுங்கள் அர்ஜுன். :huh:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவில் தெரியும் அருமை. உங்கள் சமநிலை குழம்பி இருக்கிறது. சகித்து கொள்ளுங்க . இன்னும் இரண்டுவாரம் மட்டும். என்று மனதை அமைதி படுத்துங்கள். நிறைய வாசியுங்க. வெளியில் சென்று ..நேரத்தை கடத்துங்கள். நல்லவற்றை பாருங்க. (சினிமா). தனிமை கொடியது. குடும்பதின் அருமையை அதன் வலிமையை உணரவைக்கும் ஒரு தருணம். படிக்க வேண்டிய பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் இந்தப் பிரிவு ஏக்கமாயும், உங்கள் நினைவாக்கவுமே இருக்கும். அத்துடன் சமைத்தாரோ, ஒழுங்காய் சாப்பிட்டாரோ என்ற கவலையும் இருக்கும்!

அதனால் இந்த இடைப் பட்ட காலத்தில் நன்றாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.பொழுதும் போகும், சுவாரசியமாயும் இருக்கும்!! :)

இதெல்லாம் ஒரு பிரிவா? :) இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரிய இல்லையா?? :D

சரி சரி உண்மையில் உங்கள் மனைவியின் மூன்று வாரப் பிரிவு உங்களுக்குப் பாதிப்பாக இருந்தால், அதேயே நினைத்து மெண்டல் ஆகாமல் பிரயோசனமாக ஏதாவது செய்யப் பாருங்கள். (அதுக்காகக் புதுசா ஏதும் களவாணிப் பழக்கங்களை பழகி மூன்று வாரம் கழித்து வரும் மனைவி நேரத்துக்கு வந்து உங்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போடாமல் :lol: )...

உங்கள் மனைவிக்குப் ஏதாவது பிடித்து இருக்கும், இந்த வருடம் அதை செய்ய யோசித்து இருப்பார்... அப்படியானவைக்களை ஞாபகப் படுத்தி செய்து வைக்கலாம்... உங்களுக்கும் நேரம் போனது மாதிரி இருக்கும், அதே நேரம் மனைவியையும் சந்தோஷப் படுத்தியது போல இருக்கும்... உதாரணத்திற்கு பிள்ளைகளின் அறைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த கலரில் அல்லது உங்கள் மனைவிக்கு பிடித்த கலரில் பெயிண்ட் அடிக்கலாம். பூக்கள், பூமரங்களை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள், அதனால் உங்கள் மனைவிக்குப் பிடித்த பூமரங்கள் சிலவற்றை வாங்கி (தோட்டம் இருப்பின் வெளியிலோ/ வரவேற்பறையிலோ) வைக்கலாம். அல்லது புதிதாக ஒரு பாசை படிக்கலாம் அல்லது சுவி குறிப்பிட்டது போல சமையல் கற்றுக் கொள்ளுங்கள் இணையத்தில் தான் இப்போ எல்லா வசதிகளும் இருக்கே... நல்லவைகளை தெரிந்து எடுத்து மூளைக்கு வேலையைக் கொடுங்கள் நேரம் போவது தெரியாது... All the best. :lol:

  • தொடங்கியவர்

குட்டி சொல்வது சரிதான் அதற்கு நெடுக்ஸ் சொன்ன காரணம்தான் தான் உண்மை.

22 வயதில நாட்டைவிட்டு தனிய வெளிக்கிட்டு பின்னர் சுத்தாத இடமெல்லாம் சுத்தி இப்ப அதுவும் சொந்த வீட்டில் அதுவும் ஒரு 25 நாட்கள் தனிய இருக்க கஸ்டமாக இருக்கென்றால் கொஞ்சம் ஓவர்தான்.அந்த ஒரு நிலைக்கு நான் என்னை உருவாக்கிவிட்டேன் போலுள்ளது.எனக்கு அப்பா,அம்மா அதைவிட 6 சகோதரங்கள் இங்கு இருக்கின்றார்கள்.இருந்தும் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி தெரியும் தானே.

அப்ப ஏன் பிரிவு கொஞ்சம் கஸ்டப் படுத்துகின்றது என்றால் அந்த நிலைக்கு நான் என்னை இப்போ கொண்டுவந்துவிட்டேன் போலுள்ளது.அதனால் தான் உங்களுடனும் இதை நான் பகிரலாம் என எண்ணுகின்றேன்.

1.குடி

2.அரசியல்.

3.கிரிகெட்(இப்ப இல்லை)

லண்டன் வரும்போது எதுவே தெரியாமல் எனது தயவிலே எல்லாவற்றிற்கும் தங்கியிருந்த மனைவி இந்த 20 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எனது குடும்ப வாழ்க்கை பற்றிய சீரியஸ் இல்லாத தன்மையால் தானே ஓரளவிற்கு எல்லாம் செய்ய வெளிக்கிட்டு இப்போ எல்லா அவாதான் என்ற நிலமை ஓரளவு உருவாகிவிட்டது போல் உணருகின்றேன்

இந்த 4,5 நாட்களும் அது முற்றிலும் உண்மை என்று எனக்கு சொல்லுது.

நான் பெரிய குடிகாரனில்லை ஆனால் சந்தர்ப்பம் வரும் போது அதை விட முடியாதவனாக இருக்கின்றேன்.அரசியல் அது பெரு மோசம் எல்லாருடைய கூட்டங்களுக்கும் அதிகமாக போவேன் அதைவிட புத்தக வெளியீட்டு விழா,குறும்படவிழா என்று கனடாவில் விழாவுகளுக்கா பஞ்சமில்லை.எனது குடும்பதை கவனிக்கும் பெரும் பொறுப்பை மனைவி கையில் விட்டு விட்டேன் போலுள்ளது.

மனைவி திரும்பி வர வாழ்க்கையின் பாதையை கொஞ்சம் மாத்துவம் என யோசிக்கின்றேன்.

என்னை போல் யாரும் இருந்தால் அவர்களுக்கும் இது உதவட்டும் என எழுதுகின்றேன்.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

பிடிச்சிருக்கு

இப்போது கோடை காலம். தோட்ட வேலை செய்வது மனதுக்கு புத்துணர்வை தரும். வீட்டை ஒழுங்கு படுத்தி துப்பரவாக்கினால் நேரம் போவதே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :D:unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..! ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :):unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..!

ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

நெடுக்ஸ் எழுதிய 2 விடயமும் சரிதான்

முதலாவதற்கு என்னிடமும் மருந்து உண்டு

எப்போவாவது வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் மனைவியிடம் கேட்பேன் ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுமப்பா

அவர் தேவையில்லை என்பார்

எனது மக்கள் சொல்வார்கள் இது எமது தாய்க்கு ஒரு வருடத்துக்கு காணும் என்று.

மற்றது குசினிக்குள் போவதில்லை

எனக்கு எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம்

எனது மனைவி அதற்கு நேர் எதிர்22 வருடமாக திருத்தமுடியாத ஒரேஓரு விடயம் இதுதான்...

அவரவர் குடும்பவாழ்க்கையும் வீட்டு காரியங்களும் வித்தியாசமானவை

அர்ஜீன் தங்கள் இருவரது வேலைகளையோ அல்லது வேலை நேரங்களையோ எழுதவில்லை

அவரது மனைவி வீட்டில் இருக்கும் ஆகக்கூட இருக்கலாம்

எனவே வெளியிலிருந்து கருத்து சொல்லவது சுலபமல்ல

நான் 7 நாளும்வேலை செய்பவன்

ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்கள் குறைந்தது உழைப்பவன்

நானும் உணர்ந்தேன் ஒருநாள்

ஒரு ஆபரேசன் செய்து வைத்தியசாலையில் படுத்திருந்தேன்

நோவுக்கான மருந்துடன் நித்திரை செய்யவும் மருந்து தந்திருந்தும்

முழுமையான நித்திரை வரவில்லை

நானும்திரும்பித்திரும்பி படுத்துப்பார்த்தேன்

முடியவில்லை

சில மணித்தியாலங்களின்பின் எனது வலது கை வலிப்பதைக்கண்டேன்

அது சிறிய கட்டில் ஆகையால்

நான் எந்தப்பக்கம் திரும்பிப்படுத்திருந்தாலும் மீண்டும் நான் கண் விழிக்கும்நேரம் எனது வலது கை வெளியில் போயிருப்பதையும்

கண்டேன்

ஏன் என்று யோசித்தபோதுதான் தெரிந்தது

அது எனது மனைவி 22 வருடமாக படுக்கும் கை அது.

அதற்கு மேல்தான் அவர் படுப்பார்

அந்த பழக்கத்தில்தான் இப்படி என்று தெரிந்தது.

இடது பக்கம்படுத்தால் தனது மூச்சு எனது நெஞ்சில் படும்

அது எனக்கு ஆகாது என்று வலது பக்கத்தில்தான்படுப்பார்

இதுவும் ஏதாவது சட்டச்சிக்கலுக்க வருகுதா என்று பார்த்துச்சொல்லுங்களப்பா...

ஏனென்றால் அது தொடர்கிறது.

Edited by விசுகு

...

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:unsure:

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நெடுக்ஸ்... வார விடுமுறையில் எனக்கு நேரம் போகாட்டி நான் இப்படித் தான் ஏதாவது ஒரு வேலையைத் தொடங்கி நேரத்தைப் போக்காட்டுவேன் அவ்வளவு தான்... மனம் கொஞ்சம் பாரமாக இருக்கும் நேரங்களில் (காலநிலையும் சாதகமாக இருப்பின்) தோட்டப் பக்கமாக புல்லு வெட்டி, துப்பரவாக்கி நேரத்தை போக்காட்டுவேன்... காலநிலை சாதகமாக இல்லாவிடின் வீடுக்குள் என்னத்தை மாற்றலாம் என்று யோசிப்பேன்... போகன்வில்லா, அந்தூரியம், வாழை, லக்கி பம்பூ உட்பட இன்னும் பலவிதமான மரங்கள் வாங்கி வீடுக்குள்ளும் வைத்து வளர்த்து வருகிறேன்... நேரம் போனது போலவும் இருக்கும், ஏதோ ஓரளவுக்கு பிரயோசனமாக செய்த திருப்த்தியும் இருக்கும்... :)

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :unsure: வாழத்தெரிந்த மனிதர்.

  • தொடங்கியவர்

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :) வாழத்தெரிந்த மனிதர்.

நன்றி நிலாமதி அக்கா, இருப்பினும் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றது போல ஒன்றைத் தெரிந்து எடுத்து நேரத்தை பிரயோசனப் படுத்துகிறார்கள், யாழுக்கு வந்து ஆக்க பூர்வமான எழுத்துகளை, இணைப்புகளை எல்லாம் கள உறவுகளால் முன்வைக்கப் படுகிறது. அதுவும் நேரத்தைப் பிரயோசனப் படுத்தும் ஒரு முறை தானே? இங்கே எழுதிய பல உறவுகளுக்கும் இந்த பாராடுக்கள் போய்ச் சேரும், அது தான் நியாயமானது... :unsure:

... பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) ...

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

இது டூ... டூ... டூ... டூ... மச் :D:) இப்படி இருந்தால் மிஸ் பண்ணாமல் எப்பிடி இருப்பீங்கள்? :D:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

kumarasamyy-3.gif

அப்புறம் சொல்லுங்கோ

:unsure:

  • தொடங்கியவர்

படம் கொஞ்சம் சென்டிமென்டாகத்தான் ஆகிவிட்டது நாங்கள் சிறீதர்,பாலசந்தர் காலத்து ஆட்கள்தானே.

சங்கர்,கவுதம் மேனன் காலத்து நண்பர்கள் மன்னிக்கவும்.கலரில படங் காட்ட கஸ்டமாக இருக்கின்றது.

அர்ஜுன் நன்றாக எழுதுகிறீர்கள். கிட்டத்தட்ட உங்களை ஒரு குழந்தை மாதிரிதான் பராமரித்துள்ளார். கூடுதலாக கடைச் சாப்பாடு என்றால் உடம்புக்கு நல்லதில்லையே. சில வேலை கனடா கடைச் சாப்பாடு நல்லமோ தெரியாது. ஜிம்முக்கு போவதில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.