Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருப்பதாக சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழீழ உளவுப் பிரிவின் பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டி இது..!

கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?

பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான் எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை.

கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டிருக்கிறார்களே..?

பதில் : (சிரிக்கிறார்..) எனக்கு அப்படியெல்லாம் எவ்வித அஸைன்மெண்ட்டும் கொடுக்கப்படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்ப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்.. அவர்களின் வல்லமை என்ன என்பது போலீஸாருக்கே தெரியும்..

அவர்கள் மூலமாக வரதராஜப் பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது. பிடிபட்டவர்கள் அப்படியொரு வாக்குமூலத்தைக் கொடுத்தார்களா? இல்லை.. வேண்டுமென்றே அப்படியொரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பதும் தெரியவில்லை.. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதையெல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.

கேள்வி : ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்கள்? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியமாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில் : சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு சேர அழிக்கப்பட்டனர். பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம் என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் நம் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்து, கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலக சமுதாயம் முன் வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை.

கேள்வி : பிரபாகரன் தப்பிவிட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தைக் காட்டியது. இதில் எதுதான் உண்மை.?

பதில் : எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது.. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை..

கேள்வி : சரி.. உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்..?

பதில் : (பலமாகச் சிரிக்கிறார்) மிகப் பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை..

கேள்வி : கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறு்பபாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே..?

பதில் : சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய்கிறது. போர்க்காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி : ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா..?

பதில் : முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கென்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்கு முறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்.. - உறுதியுடன் சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்.

மூலம் : ஜூனியர் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சாச்சா....???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சூனிஅய்யருக்கு நல்ல வருமான்ம் தரும் செய்தியா போச்சுது, ஈழ விவகாரமும், புலிகளின் செய்திகளும். :)

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரோ.. பொட்டம்மானோ.. சூசையோ.. யார் உயிரோடு இருந்தாலும் அவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் அவர்கள் வந்து தான் எனிப் போராட்டத்தை முன்னெடுக்கனும் என்ற நிலை இருக்கக் கூடாது. புதிய தலைமுறை உலகின் புதிய போக்கிற்கு ஏற்ப போராட்டத்தை நடத்திச் செல்வதும் தலைவர் போராளிகள் காட்டிய இலட்சியப் பாதையில் மக்களை வழிநடத்தி சென்று விடுதலையை உறுதி செய்து கொள்வதுமே அவர்களிற்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

எனியும் அவர்களைக் காட்டிக் கொடுக்கவோ.. பயங்கரவாத சாயம் பூசவோ.. அனுமதிக்காதீர்கள்.

தொடர்ந்து போராடினால் தான் விடிவு வரும்..! சோர்ந்து போனால்.. அடிமை வாழ்வுதான் மிஞ்சும்.

ஒன்றை மனதில் இருந்திக் கொள்ளுங்கள்.. 1000 பேரில் 1000 பேரும் போராட வரனும் என்று காத்திருக்காதீர்கள். 100 பேர் வந்தாலே போதும் என்ற நிலைக்கு போராட்டத்தை கூர்மைப்படுத்தி நிற்க வேண்டியது தமிழர்களின் பொறுப்பு.

போராட்ட வடிவங்கள் மாறலாம்.. ஆனால் இலட்சியம் மாறாது. - தேசிய தலைவர் சொன்னதைப் பின்பற்றுதலே அவரை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு உதவும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொன்னதை நான் முழு மனதுடன் வரவேற்று....எம்மால் இயன்ற பங்களிப்பை செய்வோம் ....நாம் விழிப்புடன் இல்லாவிடில் எம்மினமே வெகுவிரைவில் காணாமல் போகும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"போராட்ட வடிவங்கள் மாறலாம்.. ஆனால் இலட்சியம் மாறாது"

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றை எம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. வெள்ளையின்ர கால் தொட்டு வணங்கினால்.. மாலை போட்டால்.. வெள்ளைக்காரன் ஆதரிப்பான்.. சீனன் உதவுவான்.. இந்தியன்.. ஈழம் தருவான்.. என்று கனவு கண்டு கொண்டு அவர்களை அனுசரிக்கும் அரசியல் செய்யப் போனீர்கள்.. நிச்சயமாக விடுதலை என்பது அசாத்தியமானது.

இவர்களை இராஜதந்திர ரீதியில் கையாளும் திட்டங்கள் இருக்க வேண்டுமே தவிர இவர்களை ஒருபோதும் நம்பி செயற்படக் கூடாது.

விடுதலை அடைந்த மக்களைப் பாருங்கள்.. உதாரணம் காட்ட உள்ள போராளிகளைப் பாருங்கள்.. பிடல் காஸ்ரோவில் இருந்து எல்லோருமே.. ராஜீய உறவுகளை தங்களை நோக்கி கொணர்ந்து போராடினார்களே தவிர.. அவர்களா யாரையும் நோக்கித் தேடிப் பணிந்து போகவில்லை.

நாம் பணிய முற்பட்டோம்.. குனிய முற்பட்டோம்.. எமது முதுகெலும்பே முறிக்கப்படும்..! இதை உணர்ந்து கொண்டு போராடனும்..! வீம்புக்கான வீரம் கூடாது. விவேகத்துடனான போராட்டமே வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அசத்திட்டீங்க ....உங்கள் ஒவ்வொரு கருத்தும் ஆணித்தரமானவை நெடுக்ஸ்..

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பப் பழசான ஆனந்த விகடனை இப்போதான் படிக்கக் கிடைத்ததா? :)

இது சிரஞ்சீவியைக் கொண்டு ஒரு குழப்பத்தை உருவாக்க நினைக்கும் இந்திய பயங்கரவாதிகளின் முயற்சிபோலவே உள்ளது.

ஈழத் தமிழருக்கு தற்போது சகல நிலவரங்களும் நன்றாக தெரியும்.

தற்போதைய செய்தி: சோனியா முன்னை நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. தற்போது அவருடன் உல்லாசமாக திரிந்து வருகிறாராம். கொலைகாரர்களின் கலாச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பப் பழசான ஆனந்த விகடனை இப்போதான் படிக்கக் கிடைத்ததா? :)

இதையே நான் எழுதியிருந்தால் தம்பி இப்ப என்னோட சண்டைக்கு வந்திருப்பார் :D

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நான் எழுதியிருந்தால் தம்பி இப்ப என்னோட சண்டைக்கு வந்திருப்பார் :)

இன்றைய தேதியில் இது புதுச் செய்தியாக மீள இந்திய ஊடகங்களில் இடம்பிடித்துள்ளன.

பிரபாகரன்.. பொட்டம்மான் ஆகியோர் பலியானதை சிறீலங்கா உறுதிப்படுத்திய பின்னரும்.. ராஜீவ் கொலை வழக்கில் இருந்து இவர்கள் இன்னும் நீக்கப்பட வில்லை..!

------------------------------------------

பொட்டு அம்மான் மிகப் பத்திரமாக இருக்கிறார்! - சிரஞ்சீவி மாஸ்டர்

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 13:50[iST]

விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் பத்திரமாக உள்ளதாக தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் கூறியுள்ளார்.

மேலும் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்ற கேள்விக்கான பதில் ரகசியமானது என்றும், அதுபற்றி தான் இப்போது சொல்ல அனுமதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி:

'உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா?'

'என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை!'

'பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..?'

(சிரிக்கிறார்...) ''எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் வல்லமை என்ன? என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது.

பிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா..? இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.'

'ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?'

'சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். 'பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்' என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை!'

'பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?'

'எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.'

'சரி... உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்...?'

(பலமாக சிரிக்கிறார்) ''மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.'

'கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே?'

'சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.'

'ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா?'

'முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்!' -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்!

தட்ஸ்ரமிழ்.கொம்

http://thatstamil.oneindia.in/news/2010/08/12/pottu-amman-safe-chiranjeevi-master.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சிரஞ்சீவியைக் கொண்டு ஒரு குழப்பத்தை உருவாக்க நினைக்கும் இந்திய பயங்கரவாதிகளின் முயற்சிபோலவே உள்ளது.

ஈழத் தமிழருக்கு தற்போது சகல நிலவரங்களும் நன்றாக தெரியும்.

தற்போதைய செய்தி: சோனியா முன்னை நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. தற்போது அவருடன் உல்லாசமாக திரிந்து வருகிறாராம். கொலைகாரர்களின் கலாச்சாரம்.

அப்ப ராகுல் காந்திக்கும், பிரியங்காகாந்திக்கும் புது அப்பாகிடைத்து விட்டார், காங்கிரஸ் கண்மனிகளுக்கு புதிய தலைவர் கிடைத்து விட்டார், சோனியாகாந்தியும் எவ்வளவு காலத்துக்குதான் காஞ்சு போய் கிடப்பார், இந்திய பெண்கள் என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்று காலம்பூர வாழ்ந்து முடிப்பர், இத்தாலிக்கறிக்கு இது எல்லாம் சர்வசாதாரனம்.

.. உதாரணம் காட்ட உள்ள போராளிகளைப் பாருங்கள்.. பிடல் காஸ்ரோவில் இருந்து எல்லோருமே.. ராஜீய உறவுகளை தங்களை நோக்கி கொணர்ந்து போராடினார்களே தவிர.. அவர்களா யாரையும் நோக்கித் தேடிப் பணிந்து போகவில்லை.

..!

போராளியாக இருந்த பிடல் கஸ்ரோ அதிபராக வந்த பின்னர் ....தம்பியாருக்கு ஆட்சி கொடுத்தது பற்றி உங்கள் கருத்து? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தேதியில் இது புதுச் செய்தியாக மீள இந்திய ஊடகங்களில் இடம்பிடித்துள்ளன.

பிரபாகரன்.. பொட்டம்மான் ஆகியோர் பலியானதை சிறீலங்கா உறுதிப்படுத்திய பின்னரும்.. ராஜீவ் கொலை வழக்கில் இருந்து இவர்கள் இன்னும் நீக்கப்பட வில்லை..!

------------------------------------------

பொட்டு அம்மான் மிகப் பத்திரமாக இருக்கிறார்! - சிரஞ்சீவி மாஸ்டர்

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 13:50[iST]

விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் பத்திரமாக உள்ளதாக தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் கூறியுள்ளார்.

மேலும் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்ற கேள்விக்கான பதில் ரகசியமானது என்றும், அதுபற்றி தான் இப்போது சொல்ல அனுமதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி:

'உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா?'

'என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை!'

'பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..?'

(சிரிக்கிறார்...) ''எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் வல்லமை என்ன? என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது.

பிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா..? இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.'

'ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?'

'சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். 'பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்' என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை!'

'பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?'

'எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.'

'சரி... உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்...?'

(பலமாக சிரிக்கிறார்) ''மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.'

'கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே?'

'சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.'

'ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா?'

'முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்!' -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்!

தட்ஸ்ரமிழ்.கொம்

http://thatstamil.oneindia.in/news/2010/08/12/pottu-amman-safe-chiranjeevi-master.html

நாங்கள் எந்த வகையிலும் போராடலாம் ஆனால் போராட்டத்தை தலைமை தாங்க ஒரு சரியான தலைமை இல்லை என்டால் அந்தப் போராட்டம் தொடர்வது கஸ்டம் என்பது என் தனிப்பட்ட கருத்து...தலைமை தாங்குபவர் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க கூடியவராக இருக்க வேண்டும்...தலைவரே இதற்காகத் தான் சரியாக கஸ்டப்பட்டவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைது செய்யப்பட்டு இருக்கும் சீமானை போட்டியெடுக்கத் தடை போடும் ஈரல் அழுகி நாற்றம் பிடித்துப் போயுள்ள தமிழ்நாடு காவல்துறை, சிரஞ்சீவி மாஸ்டரை பேட்டி கொடுக்க அனுமதித்தது ஆச்சரியம்

சரி இப்ப பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்று யார் சொன்னால் நம்புவிங்கள்? பொட்டு அம்மானா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான் உயிர் தப்பிய செய்தி...உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி... இனியாவது காசு கொடுத்துவிட்டு ...ஈழம் வந்துவிட்டது... நமது வேலை முடிந்தது என இருப்பதை ... ஈழத்தோழர்கள் கைவிட வேணும்.....தமிழீழ தேசிய தோழர்கள்...யாராவது அணுக்கரு... வேதியல்.. ராசாயண... உயிரஅணு ....துறைகளில் பயிற்சி பெற்றவர்கள்.... தமிழீழ தாயகத்தின் மீது பற்றுள்ளவர்கள்.. இனியாவது.... எஞ்சியுள்ள போராளிகளை அரவணைத்து... உலகை அழிக்கும் வண்ணம் 4 அணுகுண்டுகளை வெடிக்க வைத்து காட்டினால் போதுமானது... 83 இல் இருந்து புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்கள் அந்த அளவுக்கு வளரவில்லை என்பதை சத்தியமாக நான் நம்ப மாட்டேன்.. 4 குண்டுகள் அல்ல 2 குண்டுகள் வெடித்து காட்டினாலே போதுமானது ... எவனும் இனி சத்தியமாக கைவைக்க யோசிப்பான்... யாரும்... ஈழத்தில்..... பூரி செட்டும்...ஆலுமசாலே(உருளை கிழங்கு குருமா) ... பானி பூரியும் .....தின்று திரியவில்லை... அவரவர் நிலத்தில்.... அவரவர் உழுதே சாப்பிடுகிறார்கள்... யாரிடமும் இனி கையேந்தாமல் சுயசார்புள்ள ஈழத்தை கட்டமைத்து ... புதியதான தமிழ்தேசிய அரசியல் சட்ட வரைவிலக்கினத்தோடு.... (வேறு ஒரு நாட்டு அரசியல் சட்ட திட்டங்களை ஒத்திருப்பது சிறப்பு அப்பத்தான் உதாரணம் காட்டமுடியும்... நாடு அடைந்துவிட்ட பிறகு மாற்றினால் யாரும் கேட்கபோவதில்லை).....இனி கைவைக்க வரும் எதிரியை ஆவலோடு எதிர்பார்ப்போம்... அங்கிகாரத்தினை பிறகு பார்க்கலாம்... முதலில் எவனும் எவனையும் ஆதரிக்க... அங்கிரிக்க ...தேவையே இல்லை.. இவனுங்க அப்படியே ஆதரிச்சு போட்டாலும் ஈழத்தில் தேனாறும் பாலாறும் வடியபோவது இல்லை.... இருப்பதை சுரண்டவே வருவார்கள் ....முதலில் இருப்பதற்கு உயிர் முக்கியமால்லவா? எவனும் கைவைத்தால் ... கைவைப்பவன் மட்டுமல்ல.... இனி... கூட சேர்ந்து ஜிங்கு சா ஜிங்குசா என ஜால்ரா அடிப்பவனுக்கும் அழிவது உறுதி என உறுதி எடுப்போம்... அடுத்து தலைவர் மீண்டும் வரும்போது "எமக்கு நிலமில்லையெனில் ...எமக்கெதிராக தடுத்தாதரிப்பவர் எவனுக்கும் உயிரில்லை" என சபதம் எடுப்போம்..

on_victory.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இங்கு தமிழ்நாட்டில் திட்டமிட்டே அதனால்தான் இந்த துறைகளில் ஈழதோழர்களுக்கு பொறியியில் கல்லூரியில் சீட்டு மறுக்கபடுகிறது... திபெத்து... பண்டிட்டு கோஸ்டிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க படுகிறது... :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இப்ப பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்று யார் சொன்னால் நம்புவிங்கள்? பொட்டு அம்மானா? :unsure:

கருத்தில் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் நுனி புல் மேய்ந்த மாதிரி கருத்து எழுதுவது, எமது விடுதலை நோக்கிய பயணத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்பது என்பது உமக்கு புரியாமல் இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. இனி இந்த அரை வேற்காட்டுத்தனங்களை தவிர்க்கப் பாருங்கள் நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

இன்ரபோல் இப்போதும் அவரைத் தேடுகின்றதா என்று தேடிப் பார்த்தேன். அவரின் பெயர் காணப்படவில்லை..

வட இந்திய பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆட ஜூனியர் விகடன் ஆசிரிய குழாமில் யாரோ இருக்கிறார்கள்.

எப்படியாவது உண்மையை அறிய முடியுமா என அலையும் வட இந்திய பயங்கரவாதிகள் ஏமாந்து போவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.