Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…!

வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட

நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய்

போராட்டம் நிகழ்கிறது….!

நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும்

நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்…..

ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி

துரோகம் அநியாயம் வசைபாடல்

நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில்

போராடியோர் குரல்களும் உயிர்களும்

நசுங்கிக் கொண்டிருக்க

நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது.

செய்திகளும் அறிக்கைகளும்

கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட

உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக….

எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும்

புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின்

பெயர்களாலும் நீதிக்கான போராட்டம் நடக்கிறது.

ஆழுக்காள் கொத்துப்பட்டு கொழுவுப்பட்டு

தீராவஞ்சப் பிணியகலா மனங்களோடு

யாருக்காய் போராடி யாருக்காய்

வெற்றியை நமதாக்கி

யாருக்காக இதுவெல்லாம்….?

சாவோடும் நோயோடும்

உயிர் கொல்லும் பசியோடும்

தினம் சாகின்ற உயிர்களுக்கு

சங்கூதும் முடிவோடு

அறிக்கைகளின் பெயராலும்

அடிக்கடி முளைக்கும் புது

அவதாரர் பெயராலும்

ஆணிகள் அறையப்படுவதை

யார்தான் நினைப்பார்…..?

ஓ….

மண்ணுக்குள் மரணத்துள்

வாழ்கின்றவர்களே…!

போராடுவோம் நீங்கள்

சாகும்வரை போராடுவோம்.

நீங்கள் கவரிமான்கள் *மயிர் நீர்ப்பின் உயிர்வாழா மானிடங்கள்*

நீங்கள் உயிர் நீர்ப்பினும்

ஓயாது எங்கள் போராட்டம்

ஏனெனில் நாங்கள் கவரிங் மான்கள்.

ஓயமாட்டோம் உங்களை ஒரு வழி பண்ணிக்

கொல்லும் வரை ஓயமாட்டோம்.

வீழமாட்டோம் நீங்கள் வீழ்ந்து மடியும் வரை

நாங்கள் வீழமாட்டோம்.

கோடைவிடுமுறையைக்

கீரிமலையிலும் திருமலையிலும்

நல்லூரிலும் நயினை

நாகம்மை வாசலிலும்

கு(டி)ழித்துக் கழிக்க

எங்களுக்கொரு நிலம் வேண்டும்.

சோற்றுக்காய் பிள்ளைக்குப் பால்மாவுக்காய்

ஆமியிடமும் அகப்படும் யாவரிடமும்

எங்கள் பெண்களும் குழந்தைகளும்

விலையாகிப்போயழிந்து போனாலும்

நாங்கள் ஓயமாட்டோம்.

போராடுவோம் உங்களுக்காக….

போராட்டம் புலத்தார் கைகளில்

தரப்பட்டிருக்கிறது.

இத்தத்துவம் புரியாத (என்போன்ற) மக்குகளை

மண்டையிலை போடாதது பிழையென்று உசுப்புவோம்

இன்னும் கனவுகளில் வாழும் அப்பாவிகளுக்கு

ஓதுவோம் துரோகிகள் இப்படித்தான்

ஒளிந்திருக்கிறார்கள்.

அரிச்சந்திரர்களை அழைத்து

இந்த மக்குகளை

மண்டையிலை போடுவிப்போம்.

போராடுவோம்…..!

இன்னும் மிஞ்சியிருக்கும் உயிர்களே...!

நோயிலும் பசியிலும் நீங்கள்

சாகும் வரை நாங்கள் போராடுவோம்.

31.08.10 (பகல் 11.10)

Edited by shanthy

செவிடன் காதில சங்குதான் ...ஊ ..ஊ....எங்க புரியப்போகிறது இவர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தை இல்லை எம்மினத்தை நினைத்து தலை குனிவதை தவிர. :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் இங்கு எழுதலாமா சாந்தி அக்கா உசுப்பேத்திற மாதிரி அல்லவா ஆக்கங்கள் இருக்க வேண்டும்.

கோடைவிடுமுறையைக்

கீரிமலையிலும் திருமலையிலும்

நல்லூரிலும் நயினை

நாகம்மை வாசலிலும்

கு(டி)ழித்துக் கழிக்க

எங்களுக்கொரு நிலம் வேண்டும்.

20 வருசமா பல்லை கடிச்சுக்கொண்டு இருந்தது இதுக்குத்தானே....எங்களுக்கொரு நிலம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

20 வருசமா பல்லை கடிச்சுக்கொண்டு இருந்தது இதுக்குத்தானே....எங்களுக்கொரு நிலம் வேண்டும்

அடப்பாவிகளா..! எமக்கொரு நிலம் வேணும் எண்டதுக்கு இதுவா அர்த்தம்? :o இதுநாள்வரை தெரியாமல் போச்சே..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

போராடுவோம்…..!

இன்னும் மிஞ்சியிருக்கும் உயிர்களே...!

நோயிலும் பசியிலும் நீங்கள்

சாகும் வரை நாங்கள் போராடுவோம்.

நாங்கள் சாகும் வரையும் இதுதான் தொடரும் போல! :rolleyes:^_^

  • கருத்துக்கள உறவுகள்

போராடுவோம்…..!

இன்னும் மிஞ்சியிருக்கும் உயிர்களே...!

நோயிலும் பசியிலும் நீங்கள்

சாகும் வரை நாங்கள் போராடுவோம்.

நாங்கள் சாகும் வரையும் இதுதான் தொடரும் போல! :wub::lol:

நாங்கள் இறுதித்தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஒரு உதவியும் உங்களுக்கு செய்யமாட்டோம்.ஏன் என்றால் நாங்கள் கவரிமான் சாதி.ஆனால் என்ன இங்கு போட்டிக்கு வேலை செய்து (நித்திரை முழித்து)எங்கள் தலையில் உள்ளுக்கும் ஒன்றும் இல்லை.வெளியிலும் ஒன்றும் இல்லை. :D:lol:

இனியாவது நாங்கள் உண்மைபேச வேண்டும்.உயிரை கொடுத்தவர்களுக்கு மதிப்பைகொடுத்தாலும் நடந்த பல பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டு நாம் இன்னமும் அவர்களைவைத்து பிழைப்பு நடாத்தும் கூட்டத்தைவிட்டு வெளிவரவேண்டும்.துணிந்து அவர்களை விமர்சிக்கவோ எதிர்கவோ தயங்ககூடாது.

இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட உலகில் எமக்கென கடைசி ஒரு நல்ல நேர்மையான அமைப்பை இனியாவது ஆரம்பிக்க வேண்டும்.இவர்களி இப்படியேவிட்டு வைத்தால் இவர்கள் புலம் பெயர்ந்த இன்றைய இளம்தலைமுறையையும் விசம்விதைத்து நாசமாக்கிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழன் புலத்துக்குப் போவது சிலரது தொடைகளை நடுங்க வைக்கிறதுபோலும். சாந்தி! இக்கவிதைமூலம் எதைச்சொல்ல வருகிறீர்கள்? அங்கயிருக்கிற காணிநிலம் சொத்துகளை சிங்களவனுக்கும் சோனகனுக்கும் வந்தவிலைக்கு வித்துப்போட்டு காலாற புலம்பெயர்தேசத்து வயோதிபர் மடத்திலை ஓய்வெடுக்கச் சொல்லுறியளோ? புலம்பொயர்ந்து மேற்குலகம்வந்த எண்பது வீதமானவர்களும் பொருளாதார அகதிகள் என்பதை (நான்உட்பட) மறந்திட்டியள்போல. முள்ளிவாய்காலுக்கு முன்பு பவிசுக்கு போராட்டம் நடத்தி, பாரிய இனஅழிப்புக்குப்பின்பு அடுப்படிக்கை பதுங்கியவர்களுக்க மத்தியில் ஓரிருவர் தெருவில தன்னந்தனியனாக நடந்துபோய் மனிதஅவலத்தை வெளிக்கொணர்ந்து நீதி கேட்கும்போது அவர்கள் பின்னே விரல்விட்டு எண்ணும் ஓரிருவர்தானே அணிவகுக்கின்றனர்? அந்த பவிசுக்கு படங்காட்டாத உண்மையானவர்களையும் தங்கள் ஆக்கத்தினால் பரிகசிக்கிறீர்களே இது தங்களுக்கே நன்றாகப் படுகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா..! எமக்கொரு நிலம் வேணும் எண்டதுக்கு இதுவா அர்த்தம்? :rolleyes: இதுநாள்வரை தெரியாமல் போச்சே..! :lol:

ச்சே!! எனக்கும் தான் அண்ணா, இப்பத்தான் கண்ணைத் திறந்து விட்டிருக்கிறா ‘சாந்தி அக்கா!! இனியாவது பிழைக்கிற வழியைப்பார்ப்பம்:unsure:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்டவர்களுக்கு நன்றிகள். எதையுமே எழுதக்கூடாதென்றுதான் நினைப்பது. ஆனால் தற்போதைய நிலமைகளை பார்க்கின்ற போது எழுத வேண்டும்போலிருந்த எண்ணங்களை இப்படி பதிவாக்கியுள்ளேன். மற்றும்படி யாரையும் நோகடிக்கும் நோக்கமல்ல.

ஒரு பச்சை :D

உங்களுக்கும் ஒரு பச்சை :lol:

நாங்கள் இறுதித்தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஒரு உதவியும் உங்களுக்கு செய்யமாட்டோம்.ஏன் என்றால் நாங்கள் கவரிமான் சாதி.. :(:)

கவரின்களாவே இருக்கிறோம் சஜீவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது நாங்கள் உண்மைபேச வேண்டும்.உயிரை கொடுத்தவர்களுக்கு மதிப்பைகொடுத்தாலும் நடந்த பல பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டு நாம் இன்னமும் அவர்களைவைத்து பிழைப்பு நடாத்தும் கூட்டத்தைவிட்டு வெளிவரவேண்டும்.துணிந்து அவர்களை விமர்சிக்கவோ எதிர்கவோ தயங்ககூடாது.

இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட உலகில் எமக்கென கடைசி ஒரு நல்ல நேர்மையான அமைப்பை இனியாவது ஆரம்பிக்க வேண்டும்.இவர்களி இப்படியேவிட்டு வைத்தால் இவர்கள் புலம் பெயர்ந்த இன்றைய இளம்தலைமுறையையும் விசம்விதைத்து நாசமாக்கிவிடுவார்கள்.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான். விமர்சிப்பதால் தமிழன் துரோகியாகிறான் arjun. இப்போது விமர்சனங்களோடு நிற்காமல் அழிந்துபோன மண்ணின் வளங்களை நம்பிய மக்களுக்கான புது நம்பிக்கையை கொடுத்தலே அவசிய அவசரமான தேவை.

நாங்கள் எங்கோ உச்சியில் நின்று எங்கள் பெருமைகள் பேச அங்கு விபச்சாரம் வரையும் நடக்கிறது. தடுப்பில் இருக்கும் கணவர்களைக் காப்பதாகவும் பார்ப்பதாகவும் வெளியில் செல்லும் எங்கள் பெண்கள் பலர் விடுதிகளில் யாரையோவெல்லாம் நம்பி தம் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலமையை மாற்ற தெருத்தெருவாய் திரியும் ஆதரவற்றோரை ஆற்றுப்படுத்த எதையாவது இப்போது செய்துவிட்டு எதையும் யோ(யா)சிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழன் புலத்துக்குப் போவது சிலரது தொடைகளை நடுங்க வைக்கிறதுபோலும். சாந்தி! இக்கவிதைமூலம் எதைச்சொல்ல வருகிறீர்கள்? அங்கயிருக்கிற காணிநிலம் சொத்துகளை சிங்களவனுக்கும் சோனகனுக்கும் வந்தவிலைக்கு வித்துப்போட்டு காலாற புலம்பெயர்தேசத்து வயோதிபர் மடத்திலை ஓய்வெடுக்கச் சொல்லுறியளோ? புலம்பொயர்ந்து மேற்குலகம்வந்த எண்பது வீதமானவர்களும் பொருளாதார அகதிகள் என்பதை (நான்உட்பட) மறந்திட்டியள்போல. முள்ளிவாய்காலுக்கு முன்பு பவிசுக்கு போராட்டம் நடத்தி, பாரிய இனஅழிப்புக்குப்பின்பு அடுப்படிக்கை பதுங்கியவர்களுக்க மத்தியில் ஓரிருவர் தெருவில தன்னந்தனியனாக நடந்துபோய் மனிதஅவலத்தை வெளிக்கொணர்ந்து நீதி கேட்கும்போது அவர்கள் பின்னே விரல்விட்டு எண்ணும் ஓரிருவர்தானே அணிவகுக்கின்றனர்? அந்த பவிசுக்கு படங்காட்டாத உண்மையானவர்களையும் தங்கள் ஆக்கத்தினால் பரிகசிக்கிறீர்களே இது தங்களுக்கே நன்றாகப் படுகிறதா?

எழுஞாயிறு,

ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பார்க்கும் விதத்தில் உள்ளது அதனதன் புரிதல். இந்தக் கவிதை மூலம் எதையுமே சொல்லவரவில்லை. எனது கருத்து மட்டுமே.

எதையுமே மறக்கவில்லை. பொருளாதார அகதிகள் தங்கள் சொந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியதைத் தவிர வேறெதைச் செய்தோம் புலிகள் இருந்தவரை அவர்களை நம்பினோம். இன்று நம்பிக்கை தகர்ந்துள்ள நிலையில் தமிழன் நிற்கும் இடம் சொல்லத் தேவையில்லை.

அங்கிருக்கிற காணி நிலங்களை இங்கிருந்து மீட்டுக்கொடுக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கோ ? கனபேரின் காணிகளை நீங்கள் சொன்ன சோனகரும் தமிழரும் வலுக்கட்டாயமாக பறிக்கின்ற நிலமை சத்தமில்லாமல் நடக்கிறது.

தன்னந்தனியாக நடந்து போகின்ற அந்த நல்லவர்களுக்கான ஆதரவு கூட முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஆயிரங்கள் நூறாகிக்கிடக்கிறது. ஆயிரம்கதைகள் சொன்னவாய்கள் இன்று இந்தக் கால்நடையாய் சென்று தங்கள் கடமையை செய்யும் நல்லுள்ளங்களுக்கு தார்மீக ஆதரவுகளைக்கூட தடுப்பதை என்னவென்று சொல்வது.

இறுதியாக யாரையும் பரிகசிக்கவில்லை.

அதிகம் பதில் எழுத நேரமில்லை. ஆக இத்தோடு நன்றி வணக்கம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது நாங்கள் உண்மைபேச வேண்டும்.உயிரை கொடுத்தவர்களுக்கு மதிப்பைகொடுத்தாலும் நடந்த பல பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டு நாம் இன்னமும் அவர்களைவைத்து பிழைப்பு நடாத்தும் கூட்டத்தைவிட்டு வெளிவரவேண்டும்.துணிந்து அவர்களை விமர்சிக்கவோ எதிர்கவோ தயங்ககூடாது.

இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட உலகில் எமக்கென கடைசி ஒரு நல்ல நேர்மையான அமைப்பை இனியாவது ஆரம்பிக்க வேண்டும்.இவர்களி இப்படியேவிட்டு வைத்தால் இவர்கள் புலம் பெயர்ந்த இன்றைய இளம்தலைமுறையையும் விசம்விதைத்து நாசமாக்கிவிடுவார்கள்.

அதற்கான தலமையகத்தை டில்லியில் வைத்தால்...? பாதுகாப்பாகவும் ஜனநாயகம் எள்ளவு குறையாமலும் இருக்கும்.

உங்களுக்கு இதில் இஸ்டமிருக்காது............. எங்களுக்கும் இனி நஸ்டமில்லா நிலையே!

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான். விமர்சிப்பதால் தமிழன் துரோகியாகிறான் arjun. இப்போது விமர்சனங்களோடு நிற்காமல் அழிந்துபோன மண்ணின் வளங்களை நம்பிய மக்களுக்கான புது நம்பிக்கையை கொடுத்தலே அவசிய அவசரமான தேவை.

நாங்கள் எங்கோ உச்சியில் நின்று எங்கள் பெருமைகள் பேச அங்கு விபச்சாரம் வரையும் நடக்கிறது. தடுப்பில் இருக்கும் கணவர்களைக் காப்பதாகவும் பார்ப்பதாகவும் வெளியில் செல்லும் எங்கள் பெண்கள் பலர் விடுதிகளில் யாரையோவெல்லாம் நம்பி தம் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலமையை மாற்ற தெருத்தெருவாய் திரியும் ஆதரவற்றோரை ஆற்றுப்படுத்த எதையாவது இப்போது செய்துவிட்டு எதையும் யோ(யா)சிக்கலாம்.

இங்கு புலத்திலே உள்ளவர்களை விமர்சிப்பதுதான்.................

சிறையிலே உள்ளவர்களை விடுதலையாக்கும் என்று சொல்றீங்களோ???

"கவிதை" ஒரு கவிஞ்ஞனின் கற்பனை.... கற்பளை அவனுடைய ஆதங்கமாகவோ உணர்வாகவோ இருக்கலாம். உங்களுடைய கவிதை நன்றாக உள்ளது. தொடாந்துவரும் பதில்கள் சற்று....

விட்டபிழைகளுக்கு மன்னிப்பு கோர வேண்டுமாம்....... யார் யாரை கோருவது? அல்லது அப்படி கோருவதால் என்னதான் ஆகிவட போகிறது?

அவர்கள் பிழைவிட்டார்கள் என்று கூக்கிரலிடவேண்டும் என்பதே இந்த ஊழையிடும் நாய்களின் ஒரே நோக்கம் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எதாவது புடுங்க முடிந்தால் அங்கே போய் புடுங்கவேண்டியதுதானே? அதுக்கேன் புலிகள்விட்ட பிழைகளை நீங்கள் திருத்தவேண்டும்?

திருத்துவதற்கு போரட்டம் என்பது என்ன உருவம் கொண்ட பஸ்வண்டியா???

சிங்களவன் இனவெறிகொண்டான்..... தமிழனை எரித்தான்

அதைபார்த்த ஒரு தமிழ் இளைஞன் எழுந்தான் சிங்களவனின் அரச உடமைகளை எரித்தான் இப்படிதான் தொடாந்தது எமது போராட்டம்....

அவர்களால் முடிந்ததது அது.

உங்களின் மூளைகளுக்கு அதுகள் சின்னபிள்ளை தனமாக இருக்கலாம்........... நீங்கள் படித்து பண்பறிந்தவர்கள்.

பெரியபிள்ளைதனமானதுகளை செய்து கிழிக்கவேண்டியதுதானே???

அது என்ன விட்ட பிழைகளை திருத்துவது என்று வாந்தியெடுப்பது இதுதான் ஆக கூடி உங்களால் முடிந்ததா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ….

மண்ணுக்குள் மரணத்துள்

வாழ்கின்றவர்களே…!

சாவோடும் நோயோடும்

உயிர் கொல்லும் பசியோடும்

தினம் சாகின்ற உயிர்களுக்கு (ய்)

சோற்றுக்காய் பிள்ளைக்குப் பால்மாவுக்காய்

ஆமியிடமும் அகப்படும் யாவரிடமும்

எங்கள் பெண்களும் குழந்தைகளும்

விலையாகிப்போயழிந்து போனாலும்...........

நன்றி சாந்தி நீங்கள் எழுதிய கவிதையையே ஒருவிதமாய் இணைத்துள்ளேன். (ய்) போட்டுள்ளேன்.

இந்த நிலைதான் ஈராக்கிலும் -வேறு நாடுகளிலும் இருக்கலாம். ஈராக்கிலே இந்த நிலை என்றால் எங்கள் நாடுகளில் நடப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். இதை சீராக்கும் செயல், ஒருகை இருகை இணைத்து செய்யகூடிய காரியம் அல்ல, ஏனோ நாங்கள் பலபேர் உணர்வற்று, பொறுப்பற்று உள்ளோம். இங்கே மாத்திரம் அல்ல, அங்கே உள்ளவர்களும்தான். எதாவது ஒரு வழி உண்டா? இங்குள்ளவர்கள் இதை அல்லது இதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பதற்கு அல்லது கருதுவதர்ற்கு?

யார் யாரிடம் முறையிடலாம், உதவி கேட்கலாம், ஆகக்குறைந்தது எந்தனை பேர் சேர்ந்து இதை செய்யலாம்? எங்களிடமே கேள்வி கேட்டு, எங்களிடமே பதில் தேடி ....ஏன்தான் இங்கே புலத்தில் இருப்பவர்கள் இதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்காமல் இருக்கிறார்கள்? புலத்தில் இருந்து ஏன் இன்னும் ஒரு வீச்சுடன் செயல் படவில்லை. நீங்கள் சொல்லாம், உங்கள் கவிதையின் நான் இணைக்காத பகுதிதான் அதன் பதில் என்று, ஆனால் எனக்கென்னவோ அதையும் தாண்டி அவர்கள் மானிடர்கள் என்றுகூட நினைக்கக்கூடாது, என்கின்ற ஒரு உணர்வு எங்கேயோ பதிந்துள்ளது, அது என்னவென்றுதான் தெரியவில்லை? அவர்கள் உலகத்தின் கண்களுக்கு மானிடராய் தெரியாதது அவர்கள் புலியுடன் இருந்தது, புலியை மறைத்து வைத்திருந்தவர்கள். ஆனால் ஏன் எங்களுக்கு இன்னும் மானிடராய் தெரியவில்லை? எதியோபியவிலும், சோமாலியாவிலும் பட்டினி, பசி உள்ளதுதானே என்ற நினைப்பு. அவர்கள் எங்களுக்கு நெருங்கியவர்களாய், அண்ணன், தன்பியாய், அக்கா தங்கையாய்............. தமிழ் மொழி பேசுபவராய் தெரியவில்லை. அவர்களுக்கைதான் ரோட்டில் நின்றோம் என்று நம்புவது கூட கடினமாக இருக்கிறது.

நான் சொல்லுவேன் எந்தனைபேர் இதை ஒரு பிரச்சனையாக கருதுகிறோம் என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி/ அல்லது ஏதாவது ஒன்று தொடங்கி அதில் அவர்கள் தொடர்பான உணர்வுகளை பதியச்சொன்னால், அதற்ற்குரிய பிரச்னையை அறிய முடியும். நான் நம்புகிறேன் எதோ நாங்கள் அறியாத/ ஆழ்மனதில் உள்ள பிரச்சனை ஒன்று எங்களிடம் உள்ளது. இது KP - நெடியவன் பிரச்சனைகளை தாண்டி..ஏனெனில் அதைபற்றி எழுதி இந்த கவிதையை/ வலியை வேறு திசைக்கு எடுத்து செல்ல வேண்டாம். அதை பற்றி பேசுங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புடன் சாந்தி, தங்கள் பதிலின்மூலம் தங்கள் ஆதங்கம் எனக்குப்புரிகிறது. அதே ஆதங்கமே எனக்கும். ஆனால் உண்மையாக இதுவரை விடுதலைக்கு உழைத்த, இன்னுயிரை ஈகம்செய்த எளியவர்கட்கு எதுவிதமனச்சஞசலமும் எமது கருத்துக்களால் வந்துவிடக்கூடாது. கடந்தசில தினங்களுக்கு முன்பு ஒருவரைச் சந்தித்தேன் அவர்கூறினார் கடந்த பலவருடங்களாக நான் தேசத்தின் விடிவிற்காய் எவ்வளவோ செய்தேன் ஆதனால் என் குடும்பத்தில் மூவரைக் களப்பலியும் கொடுத்தேன். மாவீரர் வாரத்தில் நடக்கக் மாவீரர் பெற்றோர் உறவுகளைக் கேளரவிக்கும் நிகழ்சிகளிலேகூடக் கலந்துகொள்வதில்லை காரணம் என்தேசத்தின் விடியலுக்காய் எனது பிள்ளைகளும் விதையாகிப்போனார்களே எனும் திருப்திமட்டும் என்க்குப்போதுமென. ஆனால் இதையெல்லாம் சொல்லிக் கவலைப்படுமளவிற்க தற்போது பல்வேறு தளங்களில் இருந்து கருத்தெழுதுபவர்களது செயல்கள் இருக்கின்றதே என. அப்படியான அப்பிராணிகளை நாம் ஏன் மனச்சபசலப்புடத்துவான் தாங்கள் இவ்விடையத்தில் கவனம் எடுக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.