Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களம், ருவிற்றர்;. கொள்கை விளக்கமும் கொஞ்சம் கோபமும்

Featured Replies

எதனை அடிப்படையாக வைத்து இப்படி சொல்லுறீங்கள் வாத்தியார்? முகமூடி களைவது என்பது நாற்சந்தியில் நாங்கள் நிர்வாணமாக நிற்பது அல்ல.. ஓரளவு கருத்தாடல் செய்த சக கருத்தாளர்களுடன் தொலைபேசி மூலமாக உரையாடுவது, பின்னர் வசதிப்பட்டால் நேரில் சந்திப்பது போன்றவை. கீழ்வரும் யாழ் உறவுகள் ஆகக்குறைந்தது இன்னொரு சக யாழ் கருத்தாளரை முகமூடி களைந்து நேரில் சந்தித்து இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் இப்போது ஒதுங்கியா விட்டார்கள்?

கிருபன், நெடுக்காலபோவான், நாரதர், மோகன், தலை, இளைஞன், சாத்திரி, சாந்தி, கந்தப்பு, நிழலி, சகாறா, நிலாமதி, தூயவன், ஈழப்பிரியன், வல்வைமைந்தன், சபேஸ், நான்… இன்னும் ஏராளம் ஏராளமானோர். பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளிற்கு முகம் கொடுத்தல், நேரப்பற்றாக்குறை காரணமாக தற்போது இங்கு துடிப்புடன் கருத்தாடல் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால்.. இவர்கள் முகமூடிகளை களைந்தமையால் இங்கு தொடர்ந்து நிற்கமுடியாமல் தோற்றுப்போய் விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

உங்கள் தனிப்பட்ட விருப்பம் உங்களைப்பொருத்தது. சிலவேளைகளில் இன்னமும் சில காலத்தின் பின்னர் யாழ் உறவுகளை நேரடியாக சந்திப்பதற்கு நீங்கள் ஆவல் அடையக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்

நீஙகள் குறிப்பிட்டவர்கள் அவதாரபுருஷர்கள் . அதாவது மகான்கள்.

ஆண்டவனே தேவைக்கேற்ப பல அவதாரங்கள் எடுத்தவர்.

படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்று பல பல அவதாரங்கள் அதாவது பல முக மூடிகளுடன் பல காரியங்களைச் செய்தவர்

அப்படியென்றால் நானும் ......

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

சுகன்,

இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று, முகமூடி களட்டுவதற்குப் பலரால் முடியாது அல்லது தயக்கம் இருக்கும் என்றும் அத்தயகத்திற்கான காரணங்கள் என்ன என்பதும். மற்றையது முகமூடி களட்டுவது பற்றிய பேச்சு எதனால் எழுகிறது என்பது. நான் நினைக்கிறேன் இதில் முதலாவது பற்றியே உங்கள் கருத்து அமைகிறது. சாதியம் நிச்சயமாகத் தமிழர்களிடையே இருக்கும் மிகப்பெரும் பிரிவினை தான் என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் முன்னரும் நாங்கள் பிறிதொரு திரியில் பேசிக்கொண்டதைப் போல, சாதியத்தின் அடிப்படையும் கூட தேவை மற்றும் ஆசை சார்ந்தது தான். எனவே அனைவரும் சமம் என்ற மனநிலை எப்போதும் சாத்தியப்படப்போவதில்லை. ஆசையும் தேவையும் இல்லாது போகப் போவதில்லை, வளங்களின் மட்டுப்படுத்தப்பட்ட நிலை மாறப்போவதில்லை, எனவே ஒடுக்குமுறைகள் ஓயப்போவதில்லை. வடிவம் வேண்டுமானால் மாறலாம்.

ஒடுக்குமுறைகள் குழுமமாக அனைவரிற்குமாக வெற்றிகொள்ளப்படுவதைக் காட்டிலும் தனிமனித ஆழுமைகளை வளர்த்துக் கொள்வதும் ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளைத் தாமாகக் கையாளும் வகை தம்மை உயர்த்திக் கொள்ளுவதும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் அதிகம் வினைத்திறன் மிக்கதாய் விரைவானதாய் இருக்கும் என்றே எனக்குப் படுகின்றது (குடி உயரக் கோன் உயரும்). குழுமமாக எதிர்கொள்வதில் உள்ள மிகப்பெரும் பிரச்சினை என்னவெனில், ஒடுக்குபவர் மட்டுமன்றி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களிற்கிடையே கூட குழுமத்தின் சார்பில் பேசிக்கொண்டிருப்பவர்கள் தம்மையும் அறியாது தாம் யாரின் சார்பில் பேசுகிறோமோ அவர்களைத் தமக்குக் கீழாக (அது அறிவு, செயற்திறன் முதலான பல முனைகளில்) நினைத்து விடுகிறார்கள். இதனால் தலைவன் தொண்டன் அல்லது செயற்பாட்டாளன் பலன்பெறுநனர் என்று பிரிவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆழுமை வளர்த்தல் முதலானவை பரவலாய் குழுமத்தை அடைவதற்கு நாட்கள் விரயமாகிவிடுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தத்தமது வக்கீல்களாக தத்தமது வாழ்வைத் தத்தமது பொறுப்புக்களாக, தமக்காகப் போராட தாம் மட்டுமே உள்ளோம் என்ற மனநிலையில் செயற்படுவது அதிகம் வினைதிறன் கொண்டதாய் இருக்கும் என்று எனக்குப் படுகின்றது. இது சாதியம் தொடர்பில் மட்டுமல்ல அனைத்துப் பிரச்சினைகளிற்கும் (தமிழ்த்தேசியம் உள்ளடங்கலாக) பொருந்தும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்தை அறியத் தாருங்கள்.

இனி முகமூடி களட்டவேண்டும் என்ற பேச்சு ஏன் எழுகின்றது என்று பார்த்தால், ஏற்கனவே இத்திரியில் கூறப்பட்டுவிட்ட காரணங்களுடன் சேர்;த்து முக்கியமாக இன்னுமொரு காரணமும் உள்ளதாகவே எனக்குப் படுகின்றது. அதாவது சக கருத்தாளர் மீதான கவர்ச்சி. இது உண்மையில் ஒரு ஆரோக்கியமான ஆசை தான். நாயகன் படம் பார்த்தவர்களிற்கு வேலு நாயக்கரைச் சந்திக்க ஆசை வரலாம். ஆனால் கமல் காசனையோ மணி ரத்தினத்தையோ சந்திப்பது வேலு நாயக்கரைச் சந்தித்ததற்கு ஒப்பானதாய் அமைய முடியாது. அதுபோன்றே அற்புதமான நாவல்களை வாசித்து முடித்தபோதும் எமக்கு அந்த நாவலின் கதாபாத்திரங்களைச் சந்திக்கமுடியாதா என்ற ஏக்கம் பிறப்பது வழமை. பலர் ஒரு நாவல் உருவாக்கப்பட்ட தளமான இடத்திற்கு நாவலின் பாதிப்பால் சுற்றுலாச் செல்வதும் நடப்பது தான். ஆனால் கதாசிரியரைச் சந்திப்பதும் கதாபாத்திரங்களைச் சந்திப்பதும் ஒன்றாகாது, ஒன்றாகவும் முடியாது. முகமூடி அவதாரங்கள் யாழில் ஒரு காதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அவதாரங்களின் இயக்குனர்களைச் சந்திப்பது இந்த அவதாரங்களைச் சந்திப்பதற்கு பல வகைகளில் ஒப்பானதாக அன்றிப் போகலாம்.

தத்துவார்த்தமான ஆளமான விசாசரணைகளின் ஊடு சென்றால் என்ன, மேலோட்டமான சாதாரண நடைமுறையாகப் பார்த்தால் என்ன, முகமூடி அவதாரங்கள் யாழில் மட்டும் உயிருடன் இருப்பதில் ஒரு அழகு இருப்பதாய் எனக்குப் படுகிறது, கலைஞன் கூறியதைப் போன்று இது அவரவர் தெரிவு. இப்போதைக்கு எனக்கு வாத்தியார் கூறியதைப் போன்ற பொம்மலாட்டம் தான் பார்க்கப் பிடித்திருக்கிறது. ஒரு வேளை கலைஞன் கூறியதைப் போன்று பொம்மலாட்டத் திரைக்கு அப்பால் எட்டிப்பார்க்கும் ஆசை காலப்போக்கில் தோன்றலாம்.

Edited by Innumoruvan

இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று, முகமூடி களட்டுவதற்குப் பலரால் முடியாது அல்லது தயக்கம் இருக்கும் என்றும் அத்தயகத்திற்கான காரணங்கள் என்ன என்பதும். மற்றையது முகமூடி களட்டுவது பற்றிய பேச்சு எதனால் எழுகிறது என்பது. நான் நினைக்கிறேன் இதில் முதலாவது பற்றியே உங்கள் கருத்து அமைகிறது. சாதியம் நிச்சயமாகத் தமிழர்களிடையே இருக்கும் மிகப்பெரும் பிரிவினை தான் என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் முன்னரும் நாங்கள் பிறிதொரு திரியில் பேசிக்கொண்டதைப் போல, சாதியத்தின் அடிப்படையும் கூட தேவை மற்றும் ஆசை சார்ந்தது தான். எனவே அனைவரும் சமம் என்ற மனநிலை எப்போதும் சாத்தியப்படப்போவதில்லை. ஆசையும் தேவையும் இல்லாது போகப் போவதில்லை, வளங்களின் மட்டுப்படுத்தப்பட்ட நிலை மாறப்போவதில்லை, எனவே ஒடுக்குமுறைகள் ஓயப்போவதில்லை. வடிவம் வேண்டுமானால் மாறலாம்

சாதியம் குறித்த அடிப்படையான அணுகுமுறை இது. இதை மறுப்பதற்கில்லை. இந்த அடிப்படையை கடந்து பார்க்கவேண்டியும் உள்ளது. ஒடுக்குமுறைகள் ஓயப்போவதில்லை ஏற்றதாழ்வுகள் சமநிலை அடயமுடியாது. இவ்வாறன அடிப்படைகள் உண்மையே. இவற்றுக்கு அப்பால் இந்த சாதியம் உளவியல்ரீதியல் இயல்புநிலையை சீர்குலைத்துள்ளது என்று நம்புகின்றேன். சாதியப் பாதிப்பற்ற நாடுகளில் வேற்றினங்களில் பல்வேறு தொழில்கள் செய்பவர்களுக்கிடையிலான உறவு நிலை, அணுகுமுறை அது சார்ந்த இயல்புநிலை எம்மவரிடத்தில் இல்லை.

வெறுப்பு அருவருப்பு தீண்ட மறுத்தல் தாழ்த்துதல் தாழ்த்துவதூடாக தன்னை உயர்த்துதல் பிற அம்சங்களை கடந்து சாதிய நிலையை கொளரவமாக அணுகுதல் போன்ற பல்வேறு குணாம்சங்கள் உளவியல் சம்மந்தப்பட்டதாகவே அணுக முடிகின்றது. பெரும்பாலும் தாழ்த்தப்படுபவர்களின் உற்பத்திப்பொருட்களையோ பணிகளையே நுகர்கின்றோம் என்ற உண்மை தெரிந்தும் ஒரு வீம்பு நிலை தக்கவைக்கப்படுகின்றது. இவ்வாறான கூறுகள் ஊடாக பிறரை துன்புறுத்துதல் துன்புறுத்தி இன்பம் காணுதல் இவைகள் உளவியல் நோய்கள் சம்மந்தப்பட்டதாக வளர்ச்சிகண்டுவிடுகின்றது.

மேலும் மேற்கண்ட குணாம்சங்களை நியாயப்படுத்தவும் இவ்வாறான குறைபாடுகள் இயற்கையான ஒன்றாக திருப்திப்படவும் கடவுள் ஆன்மீகம் சமயம் போன்றன அடிப்படையாக இருந்துவருகின்றது.

புலம்பெயர் தேசங்களில் வேற்றினங்களுடன் எம்மவர்கள் அணுகுமுறை குறித்து பலரை கவனித்துப்பார்த்ததில் அநாவசியமான தயக்கங்கள் தாழ்வுச் சிக்கல்கள் பயங்கள் போன்ற பல்வேறு கூறுகளை சாதியத்தின் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதே நேரம் எம்மவர்கள் கூடும் ஒரு கோயிலில் பத்துப்பேரளவில் பொதுவிசயங்களை கதைத்துக்கொண்டிருக்கையில் மிகவேகமாக முரண்பாடுகள் மனஸ்தாபங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிந்தது. சிலர் ஐந்து ஆறு வருடங்களாக ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர் ஆனால் முரண்பட்ட காரணம் வலுவாக இல்லை. இது எனது அவதானங்களும் அனுபவங்களும். சாதியம் உளவியல் ரீதியாக எமது சமூகத்தை எவ்வாறு பாதித்துள்ளது, இயல்புநிலையை குலைத்துள்ளது போன்ற நோக்கிலேயே எனது அவதானங்கள் இருக்கின்றது தவிர உங்கள் கருத்துக்களின் அடிப்படை உண்மைகளுடன் முரண்பட எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருத்துக்களை விட்டுக்கொடுத்து எழுதுவதாகவா உங்களுக்கு தெரிகின்றது? நான் எழுதும் பல கருத்துக்களுடன் நான் நேரடியாக சந்தித்து உறவாடும் உறவுகள் பலர் நிச்சயம் முரண்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆயினும், நான் எனது சிந்தனைகளை வெளிப்படையாக கூறுகின்றேன். இங்கு நான் கூறுவது நேரடியாக முகம் பார்த்து பழகினால் எல்லைகள் தாண்டி உணர்ச்சிவசப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதே. அதற்காக அது நிச்சயம் குறையும் அல்லது தவிர்க்கப்படும் என்று இல்லை. வெவ்வேறு சிந்தனையாளர்கள் கலந்துகொள்ளும் நேரடி தொலைக்காட்சி விவாதங்கள் இதற்கு நல்லதொரு உதாரணமாக உள்ளன.

நீங்கள் விட்டுக் கொடுத்து எழுதுகிறீர்கள் என சொல்லவில்லை ஆனால் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கும் போதே பலர் துணிந்து கருத்துகளை எழுதுவதில்லை...நான் ஒரு பெண்ணாக இருப்பதால் என் பக்கம் நியாயம் இருந்தாலும் ஒருவரும் துணிந்து எழுத முன் வந்தால் உடனே அவரை பின் பற்றி வந்து எழுதுவார்களே தவிர தாங்களாக வந்து எழுத மாட்டார்கள் ஏனென்டால் பயம் தங்களை சேர்த்து ஏதாவது கதை கட்டி விடுவார்களோ என்ட காரணமாக கூட இருக்கலாம்...முகமூடி போட்டு இருக்கும் போதே இப்படி பயப்படுபவர்கள் முகமூடி களைந்த பின் எப்படி பயப்படுவார்கள் மற்றவர்களுக்கு [உ+ம்]லண்டன் வாசக வட்டம் நடந்த பிறகு ஏதாவது கருத்து விவாதத்தில் நெடுக்ஸ் எனக்கு ஆதரவாக கதைத்தால் உடனே கதை கட்டி விடுவார்கள் ரதி என்னவோ செய்து போட்டாள் அது தான் நெடுக்ஸ் ரதிக்கு ஆதரவாய் எழுதுகிறார் என...நான் ஏன் இதில் நெடுக்ஸ் உ+ம் ஆக எடுத்தேன் என்டால் அவரும் நானும் தான் அதிகமாக விவாத களத்தில் வாக்குவாதப்பட்டு இருக்கிறோம்.

எதனை அடிப்படையாக வைத்து இப்படி சொல்லுறீங்கள் வாத்தியார்? முகமூடி களைவது என்பது நாற்சந்தியில் நாங்கள் நிர்வாணமாக நிற்பது அல்ல.. ஓரளவு கருத்தாடல் செய்த சக கருத்தாளர்களுடன் தொலைபேசி மூலமாக உரையாடுவது, பின்னர் வசதிப்பட்டால் நேரில் சந்திப்பது போன்றவை. கீழ்வரும் யாழ் உறவுகள் ஆகக்குறைந்தது இன்னொரு சக யாழ் கருத்தாளரை முகமூடி களைந்து நேரில் சந்தித்து இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் இப்போது ஒதுங்கியா விட்டார்கள்?

கிருபன், நெடுக்காலபோவான், நாரதர், மோகன், தலை, இளைஞன், சாத்திரி, சாந்தி, கந்தப்பு, நிழலி, சகாறா, நிலாமதி, தூயவன், ஈழப்பிரியன், வல்வைமைந்தன், சபேஸ், நான்… இன்னும் ஏராளம் ஏராளமானோர். பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளிற்கு முகம் கொடுத்தல், நேரப்பற்றாக்குறை காரணமாக தற்போது இங்கு துடிப்புடன் கருத்தாடல் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால்.. இவர்கள் முகமூடிகளை களைந்தமையால் இங்கு தொடர்ந்து நிற்கமுடியாமல் தோற்றுப்போய் விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

உங்கள் தனிப்பட்ட விருப்பம் உங்களைப்பொருத்தது. சிலவேளைகளில் இன்னமும் சில காலத்தின் பின்னர் யாழ் உறவுகளை நேரடியாக சந்திப்பதற்கு நீங்கள் ஆவல் அடையக்கூடும்.

கலைஞன் நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள் சந்தித்து இருக்கிறார்கள் அதுக்குப் பிறகு யாழ் கள விவாதத்திலும் பங்கு பற்றி இருக்கிறார்கள் ஆனால் நான் நினைக்கிறேன் குறிப்பிட்ட கட்டத்தின் மேல் தொடர முடியாமல் இருந்தால் என்ன செய்வார்கள் என்டால் வேறு பெயரில் வந்து ஒருவரை ஒருவர் அதி மோசமாக திட்டிக் கொள்வார்கள்...மற்றது இன்னுமொருவன் எழுதிய மாதிரி சக எழுத்தாளார்களின் மீதான எழுத்தின் கவர்ச்சி...சுகன் என்ட கருத்தாளாரின் கருத்துகள் எம் மேல் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் சுகனைப் பார்க்க விரும்புவோம் ஆனால் பார்த்த பின் அட சீ இவரா சுகன் என்டு போட்டு அதற்கு பிறகு இவர் மீதான எழுத்தின் கவர்ச்சி குறைந்து விடும் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நான் எழுத மறந்தது கருத்துகளத்தின் வெளியே முகமூடி களைந்து நட்பு பாராட்டுபவர்கள் கருத்துக்களத்தில் தங்களுக்குள்ளே கருத்து முரண்பாடு என்று வரும் போது அவர்களை எதிர்த்து விவாதிக்க மாட்டார்கள் அல்லது வேறு பெயரில் வருவார்கள்...இது தொடர்பாக சகாரா அக்காவின் அனுபவ கருத்தை எதிர் பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

தலைப்பில் இருந்து விலத்துகிறது என்றாலும், உங்களது இறுதிப் பின்னூட்டததில் காணப்படும் வலியினை உள்வாங்கியதால், இதை மட்டும் சாதியம் தொடர்பில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.; சாதியத்தின் தன்மை மற்றும் வீச்சு பற்றி நீங்கள் பல காத்திரமான கருத்துக்களை யாழ்களத்தி;ல் முன்வைத்து வருகிறீர்கள். எனினும், நான் அவதானித்தவரை நீங்கள் உங்கள் கருத்துக்களை ஒடுக்குமுறையாளர்களை (அதாவது “நல்ல சாதி என்று தம்மைக் கூறுவோர்”) நோக்கி, ஒடுக்குமறையாளர்களின் மனமாற்றம் வேண்டியே முன்வைத்து வருகின்றீர்கள். மிகவும் நேரவிரயம் மற்றும் உழைப்புடன் இந்தக் கருத்துக்களை நீங்கள் முன்வைத்து வருகிறீர்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் உங்கள் கவனத்தை ஒடுக்கப்படுபவர்கள் மீது திருப்புவது வினைத் திறன் உடையதாய் இருக்கும்.

உதாரணமாக, கனடாவில் இருந்து சென்ற ஒரு பேராசிரியர் சாதியின் காரணமாக ஆரோ ஒருவர் வீட்டில் தேனீர் பருகமறுத்தமை பற்றியும் அதனால் தேனீர் கொடுத்தவர்கள் புண்பட்டமை பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதி இருந்தீர்கள். பேராசிரியர் தங்கள் வீட்டில் தேனீர் பருகுவது தமக்குப் பெருமை என்ற பெறுமதியினைக் குறிப்பிட்ட வீட்டார் காவும் வரை தான் பேராசிரியரால் இ;வ்வாறு துன்புறுத்தமுடியும். குறிப்பிட்ட வீட்டாரிடம் அந்தப் பெறுமதி தொலையும் போது, பேராசிரியர் தோற்று விடுவார். இதற்கு குறிப்பிட்ட வீட்டாரின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். இத்தகைய மாற்றங்களை உங்களைப் போன்ற எழுத்து,பேச்சு மற்றும் சிந்தனைத் திறன் உடையவர்களால் நி;ச்சயம் உருவாக்க முடியும். நீங்கள் யாசிக்கும் மாற்றம் நீங்கள் எதிர்பார்க்கும் விரைவில் நடப்பது என்பது பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களின் கையில் தான் உள்ளது. குறிப்பாகச் சிந்தனை மாற்றத்தோடு பொருளாதார உயர்ச்சியும் ஏற்படுகையில் மாற்றம் தவிர்க்கமுடியாதன.

வெள்ளையருள் மிகவும் இனவெறி பிடித்த சாரார் கூட எவ்வாறு புலத்தில் பல சமயங்களில் எங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக நாங்கள் வளர்ந்துள்ளோமோ (பல்கலைக்களகங்கள், மருத்துவர், நீதிபதி, வக்கீல், ஆசிரியர், காவல் துறை, ஊடகம், தொழில் துறை இன்னபல முனைகளில்), எவ்வாறு யூதர்கள் தங்கள் மீதான வெறுப்புணர்வை, வெறுப்பும் அருவருப்பும் மாறியததோ இல்லையோ காட்டமுடியாதபடி செய்தார்களோ, அதே வகை சாதிய முனையும் மாறக் கூடியது. . மொத்தத்தில் உலகில் 90 வீத தீர்வுகள் பொருளாதாரம் சார்ந்தனவே. மிகுதி 10 வீததத்தில் தன்னம்பிக்கை, சுயமதிப்பு சிந்தனை என்பன மிகப்பெரும்பங்கு.

ரதி உங்கள் வாதம் நியாயமானதாகவே எனக்குப் படுகின்றது.

நீங்கள் விட்டுக் கொடுத்து எழுதுகிறீர்கள் என சொல்லவில்லை ஆனால் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கும் போதே பலர் துணிந்து கருத்துகளை எழுதுவதில்லை...

ரதி, இங்கு பயம் என்று சொல்வதற்கு இல்லை. ஓர் விவாதத்தில் காத்திரமான ஓர் எதிர்க்கருத்தை வைத்து வாதிடுவது என்றால் முதலில் உங்களுக்கு நேரம் வேண்டும். எனக்கு பிரச்சனையாக உள்ளவிடயம் இதுதான். ஏன் என்றால்.. அடுத்தடுத்து பலர் வந்து பலவகைகளில் உங்கள் கருத்துடன் முரண்படுவார்களானால் உங்களுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட திரியில் நின்று வாதிடுவதற்கு நேரம் போதுமானதாக காணப்பட வேண்டும். கருத்தாடல் என்று வரும்போது அது ஒரு கருத்தில் அல்லது இரு கருத்துக்களில் முடிந்துவிடப்போவது இல்லை. சிலவேளைகளில் குறிப்பிட்ட கருத்தாடல் பலரது கவனத்தை ஈர்க்கும்போது அது பல பக்கங்கள் தாண்டி மிக நீண்ட வாதமாக மாறக்கூடும். எனவே ஒன்றினுள் காலை வைக்கும்போது அதனுடன் மினக்கடுவதற்கு முதலில் உங்களுக்கு நேரம் வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கருத்தை நீங்கள் முழுமையாக உட்பிரவிக்க முடியாது. இப்படியானதொரு காரணத்தினாலேயே நான் கண்டபடி கருத்துக்களை வைப்பது இல்லை. எனது எண்ணப்பாடுகளை இங்கும் அங்குமாக கிடுகிடுவென ஒவ்வொரு இடத்தில் எழுதிவிட்டு செல்வதற்கு குறிப்பிட்ட விடயமே முக்கிய தடங்கலாக உள்ளது. பொழுதுபோக்கு விடயங்களை மாத்திரம் இதற்கு விதிவிலக்காக கூறலாம்.

கலைஞன் நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள் சந்தித்து இருக்கிறார்கள் அதுக்குப் பிறகு யாழ் கள விவாதத்திலும் பங்கு பற்றி இருக்கிறார்கள் ஆனால் நான் நினைக்கிறேன் குறிப்பிட்ட கட்டத்தின் மேல் தொடர முடியாமல் இருந்தால் என்ன செய்வார்கள் என்டால் வேறு பெயரில் வந்து ஒருவரை ஒருவர் அதி மோசமாக திட்டிக் கொள்வார்கள்...

உங்கள் குற்றச்சாட்டு நியாயமானது. நான் இப்படி செய்வது இல்லை. நான் முகம் கண்டுபழகியவர்கள் யாராவது இப்படி செய்து உள்ளார்களா என்று எனக்கு தெரியாது. இதைத்தான் ஏற்கனவே எல்லைகள் – Limitations என்று கூறினேன் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக, கனடாவில் இருந்து சென்ற ஒரு பேராசிரியர் சாதியின் காரணமாக ஆரோ ஒருவர் வீட்டில் தேனீர் பருகமறுத்தமை பற்றியும் அதனால் தேனீர் கொடுத்தவர்கள் புண்பட்டமை பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதி இருந்தீர்கள். பேராசிரியர் தங்கள் வீட்டில் தேனீர் பருகுவது தமக்குப் பெருமை என்ற பெறுமதியினைக் குறிப்பிட்ட வீட்டார் காவும் வரை தான் பேராசிரியரால் இ;வ்வாறு துன்புறுத்தமுடியும். குறிப்பிட்ட வீட்டாரிடம் அந்தப் பெறுமதி தொலையும் போது, பேராசிரியர் தோற்று விடுவார். இதற்கு குறிப்பிட்ட வீட்டாரின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும்.

தமிழரின் பண்புகளில் மிகச் சிறந்தது "விருந்தோம்பல்". எங்களது வீடுகளில் (தாயகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி) வரும் எவரும் "வாய் நனைக்காமல்" போனால் எமது மனம் புண்படவே செய்கின்றது. அவசர காரியமாக வருபவர்கள் தேனீரோ அல்லது தண்ணீரோ குடிக்காவிடில் எமது பண்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடிக்கவில்லையே என்ற வருத்தம்தான் வரும். அவர்களின் பின்புலம் எல்லாம் முக்கியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

.

உதாரணமாக, கனடாவில் இருந்து சென்ற ஒரு பேராசிரியர் சாதியின் காரணமாக ஆரோ ஒருவர் வீட்டில் தேனீர் பருகமறுத்தமை பற்றியும் அதனால் தேனீர் கொடுத்தவர்கள் புண்பட்டமை பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதி இருந்தீர்கள். பேராசிரியர் தங்கள் வீட்டில் தேனீர் பருகுவது தமக்குப் பெருமை என்ற பெறுமதியினைக் குறிப்பிட்ட வீட்டார் காவும் வரை தான் பேராசிரியரால் இ;வ்வாறு துன்புறுத்தமுடியும். குறிப்பிட்ட வீட்டாரிடம் அந்தப் பெறுமதி தொலையும் போது, பேராசிரியர் தோற்று விடுவார். இதற்கு குறிப்பிட்ட வீட்டாரின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். இத்தகைய மாற்றங்களை உங்களைப் போன்ற எழுத்து,பேச்சு மற்றும் சிந்தனைத் திறன் உடையவர்களால் நி;ச்சயம் உருவாக்க முடியும். நீங்கள் யாசிக்கும் மாற்றம் நீங்கள் எதிர்பார்க்கும் விரைவில் நடப்பது என்பது பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களின் கையில் தான் உள்ளது. குறிப்பாகச் சிந்தனை மாற்றத்தோடு பொருளாதார உயர்ச்சியும் ஏற்படுகையில் மாற்றம் தவிர்க்கமுடியாதன.

மிகமிக நல்ல தீர்வு.இன்னுமொருவன்.இதை நடை முறைப்படித்தினால் முக்கால்வாசி பிரச்சனை தீர்நதுவிடும். :o

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நான் எழுத மறந்தது கருத்துகளத்தின் வெளியே முகமூடி களைந்து நட்பு பாராட்டுபவர்கள் கருத்துக்களத்தில் தங்களுக்குள்ளே கருத்து முரண்பாடு என்று வரும் போது அவர்களை எதிர்த்து விவாதிக்க மாட்டார்கள் அல்லது வேறு பெயரில் வருவார்கள்...இது தொடர்பாக சகாரா அக்காவின் அனுபவ கருத்தை எதிர் பார்க்கிறேன்.

கருத்துக்களத்திற்கு அப்பால் முகம் தெரிந்த நண்பர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் வாதாட்டத்தில் இறங்க மாட்டார்கள் என்று முற்றுமுழுதாகக் கூறிவிட முடியாது. கருத்தாடுவார்கள் மிக நாகரீகமாக அவர்களின் கருத்தாடல் அமையும். ஒருவரை ஒருவர் மதித்தெழுதும்பாங்கு அதிகம் தென்படும். ரதி எங்களுடைய அனுபவப்பகிர்வை கேட்டிருந்தீர்கள் ஒரு நீண்ட அனுபவப்பகிர்வுக்கு உரியதாக எங்கள் நண்பர் வட்டம் இன்னும் உருவாக்கம் அடையவில்லை காரணம் எங்களுடைய நண்பர் வட்டத்தின் சந்திப்பு நிகழ்ந்த பின்னரான நாட்கள் எதையும் கருத்துக்களத்தில் நின்று வாதாடிக் கொண்டிருப்பதற்கான நிலைமைகளைக் கொண்டிருக்கவில்லை. அநேகமாக எங்கள் நண்பர் வட்டத்தை கவன ஈர்ப்புப் போராட்டங்களிலேயே அதிக காலம் சந்திக்கக்கூடியதாக இருந்தது. மே 2009 இற்குப் பின்னரான காலப்பகுதியில் நீண்ட மன உளைச்சல்களுக்கு உட்பட்டு அநேகமாக யாருமே யாரையுமே கருத்துக்களத்தில் வாதிக்கவோ விவாதிக்கவோ முடியாத சூழ்நிலையே இன்றுவரை... குறிப்பாக தமிழர்களுக்குள் நிலவும் அரசியல் குழப்பம் நீண்ட மௌனத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டிவிட்டது. இருப்பினும் நிழலி, முரளி, தமிழச்சி, தமிழ்த்தங்கை, சபேசன், வல்வை மைந்தன், போன்றோர் தாங்கள் கருத்தெழுதும் இடங்களில் தத்தம் கருத்துக்களை முகமறிந்த மற்றவருக்காக பெரிதாக விட்டுக்கொடுத்ததாகத் தெரியவில்லை. தத்தம் கருத்துக்களில் தெளிவாக உள்ளவர்கள் தளம்ப வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதைப்பார்த்தேன்

நல்லதொரு எமக்கு தேவையான பதிவு

அதேநேரம் இதில் நான் எதிர்மாறானவன்

அதாவது முகமூடி போடாதவன்

நான் இங்கு எழுதுபவை அனைத்தும் என் சொந்த வாழ்விலும் அனுபவத்திலும் வந்தவை.

அந்த வகையில் எனது குடும்பம், எனது பிள்ளைகள், எனது தொழில், எனது ஊர், தற்போதைய எனது இருப்பிடம், எனது தாகம், எனது தலைவர்.......வரை நான் எழுதியுள்ளேன்.

எதையும் ஒழிக்கவேண்டிய அவசியமில்லை.

இங்கும் யாழ் கள உறவைச்சந்தித்துள்ளேன்

இன்னும் சந்திக்கவுள்ளேன்

வேறு நாடுகளுக்கு செல்லும் போதும் சந்திக்க ஆவலாக உள்ளேன்

ஆனால் அது ஒரு நல்ல உறவாக இருவரும் விரும்பும் போதுதான் அல்லது அந்த உறவின் தார்ப்பரியத்தை இருவரும் புரிந்து கொள்ளும்போதுதான் சாத்தியம்.

அதேநேரம் நான் இங்கு எழுதிய எனது குடும்ப விவகாரங்களை தமது கருத்துக்களை என் மீது சுமத்த பாவித்தவர்களும் யாழ் களத்தில் உண்டு என்ற ஆபத்தையும் நான் மறந்துவிடப்போவதில்லை.

  • தொடங்கியவர்

சகாரா மற்றும் விசுகு உங்கள் இருவரதும் கருத்துக்களிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இங்கு முகமூடி களட்டவேண்டுமா களட்ட வேண்டாமா என்றால் களட்டாமல் இருப்பதே நன்று என தோன்றுகிறது காரணம் முகமூடிகளட்டிவிட்டு உண்மையை எழுதமுடியாமல் போகின்றது என்று தான் எனக்கு தோண்றுது மிகமிக முக்கியகாரணமாக என்னால் பார்க்கப்படுவது பாதுகாப்பு மட்டுமே இதை தவிர்த்து முகமூடி களட்டுவதால் எந்த பாதிப்பும் எனக்கில்லை என்பதே எனது அபிப்பிராயம். புலம்பெயர்ந்த நாட்டில் இருந்துகொண்டே அந்த அரசையோ,மக்களையோ,அவர்கள் கலாச்சாரத்தையோ அந்த நாட்டினருடனேயே எந்தவித சங்கோஜமும் இன்றி விவாதிக்ககூடிய எங்களால் யாழ்களத்தில்லோ,அல்லது சிறீலங்காவிலோ விமர்சிக்க,கருத்துக்கூறமுடியாதது எமது துர்ப்பாக்கியம் தான். இங்கு இன்னொருவன் மனைவியையோ,காதலியையோ அவன் முன்னால் கூட அநாகரீகமாக சொல்வதை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.ஆனால் எங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியம்? வயது,சாதி,படிப்பு,அந்தஸ்து பார்த்துதானே கருத்துக்களையும் மதிப்பிடுகிறோம். முகம் தெரிந்தால் இவர் சொல்வதை நான் கேட்கவா என்ற கேள்வியே எம்மில் பலருக்கு வரும். கூறவரும் கருத்துக்களை விடுத்து முகஸ்துதியே பாடப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுது.... ஆக்கமென்று இல்லை... பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்கள் எழுதுவது ... தூக்கம் வருவதாகவே உள்ளது.... :)

Avil_22_7mg.jpg

இதற்கு சாரு கோஸ்டியே தேவலாம்.... தமிழ்நதி அவர்கள் எழுத்துக்கள் கவிதை தவிர மற்றது பரவாயில்லை ... :)

istockphoto_1686339-bread-slice-and-knife.jpg

சொல்லவற விசயத்தை வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என புட்டு புட்டு வையுங்கப்பா... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுது.... ஆக்கமென்று இல்லை... பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்கள் எழுதுவது ... தூக்கம் வருவதாகவே உள்ளது.... :)

Avil_22_7mg.jpg

இதற்கு சாரு கோஸ்டியே தேவலாம்.... தமிழ்நதி அவர்கள் எழுத்துக்கள் கவிதை தவிர மற்றது பரவாயில்லை ... :)

istockphoto_1686339-bread-slice-and-knife.jpg

சொல்லவற விசயத்தை வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என புட்டு புட்டு வையுங்கப்பா... :D

பிறகு ஏன் யாழுக்கு வருகிறீர்கள் :):):D

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு ஏன் யாழுக்கு வருகிறீர்கள் :):):)

தங்களை போன்ற வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என எழுதும் ஆட்களை காண்பதற்குதான் தோழர் ரதி :):D

டிஸ்கி:

உங்கட சொந்த ஆக்கம் ஏதாவது இருந்தால் இணைப்பு கொடுங்க தோழர் ரதி படிக்க ஆவலாக உள்ளேன்... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.