Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வந்துள்ள சிங்கள மீள்குடியேறிகள் (வீடியோ ஓடியோ படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரயில் நிலையத்தில் தங்கி இருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப்பாதுகாப்புப் போடப்பட் டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது

மீளக்குடியேறும் நோக்கத்தோடு ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்து ரயில் நிலையத்தில் தற்காலிகமாகத்தங்கி உள்ள சிங்கள மக்களில் ஒருவரே சந்திரசிறி. அந்த மக்களின் சார்பில் ஊடகங்களிடம் இவரே பேசுகின்றார்.

மூன்று நாள்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இவருடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடங்கள் எவையும் இல்லாத போதும்,தமக்கு அரச காணிகளை ஒதுக்கித் தருமாறு அரச அதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.newjaffna.com/fullview.php?id=NjYy

Edited by pirasath20

அவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை ஏன் என்றால் அவர்கள் ஒன்றாக போராடினார்கள், தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடினார்கள், கடவுளை நம்பினார்கள் அதற்குரிய பிரதி பலனை அனுபவிக்கிறார்கள்

ஆனால் நாங்கள் எமது போராட்டத்தை நாமே காட்டிக் கொடுத்தோம், எமத் சுய நலத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்பட்டோம், சிங்களவனுக்கு அடிமையையாய் இருந்தாலும் பருவாயில்லை எமது சுயநலமே முக்கியம் என நோக்கினோம், இடை வழியில் இறங்காமல் நிம்மதியாக யாழ்ப்பாணம் போய் வந்தால் காணும் என நினைத்தோம் ,2002- 2006 வரை யாழ்பாணம் போய் வந்த போது A9 பாதையின் இரு மருங்கிலும் வசித்த மக்களும் என்ன ஆனார்கள் என்ற கவலை எமக்கு இல்லை, உலக அரசியலின் போக்குத் தெரியாமால் சும்மா அவன் தான் காரணம் இவன் தான் காரணாம் என எமக்குள்ளே அடிபட்டோம், பிரபாகரன் என்ற தனி மனிதனை பழிவாங்க சிங்களவனுடன் சேர்ந்து எமத் இனத்தில் ஒரு தலைமுறையே அழிய காரணம் ஆனோம், இதுக்கு பிறகும் சிங்களவன் ஏதாவது ஒன்று தருவான் என்று நம்புகிறோம், காலம் காலமாக நாம் வழிபட்ட தெய்வங்களை யாரோ ஒரு தமிழ் நாட்டு கிழவனின் உளரலை நம்பி இழிவு படுத்தினோம், இனிமேல் சிங்களவன் வருகிரான் என்று ஒப்பாரி வைத்து பிரியோசனம் இல்லை, சிங்களவனின் பலம் மடை திறந்த வெள்ளம் மாதிரி, நாம் அதற்குள் அகப்பட்ட மனிதர்கள், ஆனால் மடையை உடைத்ததே நாம் தானே

இதான் எமக்கும் அவனுக்கும் வித்தியாசம்

தமிழ் ஈழத்தை விடுங்கோ, இப்பொதைய நிலையில் ஒரு துண்டு காணியை கூட நாம் வைத்திருக்க முடியாது அதையும் அவன் நினைத்தால் புடுங்குவான் :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

மணியன்தோட்டப் பிரதேசத்தில் கடந்தகாலங்களில் எந்தவொரு சிங்களவர்களும் வாழவில்லை. ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் மக்கிக் கிடங்கடி எனஅந்நாளில் அழைக்கப்பட்ட பலாலிவீதியில் இலுப்பையடிச்சந்திக்க்கும் ஆரியகுளம் சந்திக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் ஓரிரு குடும்பமும், சிங்கள மகாவித்தியாலையத்திற்கு அண்மையில் பத்துப்பதினைந்து குடும்பமும் சிவலிங்கப் புளியடியில் ஒரு குடும்பமும் (இவர்கள்தான் ஆரம்பகாலத்தில் பலாலி இராணுவத்துடன் தொடர்பு கொண்டு அப்பகுதியில் அடாவடி வேலைகளில் ஈடுபட்டவர்கள்) காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலைக்கு அண்மித்த பகுதியில் சில நூறு சிங்களக் குடும்பங்களும் இருந்ததுதான் உண்மை. யாழ் வீரமாகளி அம்மன் கோவிலுக்கு அண்மையில் குளிர்சாதனப் பெட்டிகளை பழுதுபார்க்கும் சிங்களவர் ஒருவர் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தார் அவரது ஒரு மகன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம்வகித்திருந்தார் (இவர் பின்பு வீரமரணமடைந்திருந்ததாக அறிந்தேன் உண்மைபொய் தெரியாது) அதைவிட யாழ்பாணம் றக்கா றோட்டை அண்மித்தககுதியில் ஒரு குடும்பம் இருந்தது அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ் நீதிமன்றில் யூரியாக செயற்பட்டவர். அதைவிட யாழ் மணிக்கூட்டு வீதியில் எண்பதுகளில் தபாலகம் இருந்த இடத்திற்கு அடுத்ததாக ஒரு சிங்களவர் லேத்பட்டடை போட்டிருந்தார் (அதுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய ஒழுங்கையில்தான் ஆரம்பகாலத்தில் தபால் பொதிகட்குள் வெடிகுண்டுகளை அனுப்ப முயற்சித்து சில தபாலில் சேர்க்கப்பட்டது ஒரு சில தபாலகங்களில் சேர்க்க இயலாததினால் சம்பந்தப்பட்டவர்கள் அதை எறிந்துவிட்டுப் போக ஒரு சிறுவன் அதை எடுத்துப்பிரிக்கையில் வெடித்து சிறுவன் அவ்விடத்திலோயோ உயிரிழந்தான்) இன்னும் வேளை வரும்போது சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா சொல்கிறார்.. சிங்கள மக்கள் கிழக்கில் குடியேறலாம் என்று.

பிள்ளையான் சொல்கிறார்: சிங்கள மக்கள் மட்டக்களப்பில் குடியேறலாம் என்று.

டக்கிளஸ் மட்டும் சும்மா இருந்தா நியாயமா: அதுதான் அவர் சொல்கிறார் சிறீலங்கா எல்லாருக்கும் சொந்தம்.. சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் வன்னியில் குடியேறலாம் என்று.

நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒண்டுக்கு இருப்பம் என்று அமெரிக்காவிற்கே சொல்லித்தான் பிளேக்கு சொன்னவன் 90% தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு வாழ விரும்புகின்றனர் புலிப் பயங்கரவாதம் தான் அதுக்கு தடை என்று.

பிளேக்கு சொன்னது காப்பாற்றப்படாட்டி அமெரிக்க தெற்காசிய கொள்கைக்கு தலையிடி.. அதைவிட டக்கிளசுக்கோ தர்ம அடி. அதிலும்.. எங்க தலைவர் அஞ்சா நெஞ்சன்.. எத்தனையோ தற்கொலைக்குண்டுகளை கண்டு வந்த மாவீரன்.. டக்கிளசண்ணன்.. சொன்னபடி சிங்கள மக்களை குறிப்பாக மிகுந்தலை... அனுராதபுரம் பகுதியில் சிங்கள இராணுவத்திற்கு விபச்சாரத்துக்கு விடப்பட்ட குடும்பங்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தி அந்த விபச்சாரிகளை யாழ்ப்பாண விபச்சாரிகளோடு இணைத்து அண்ணன் டக்கிளஸ் விபச்சாரத்தை குடிசைக் கைத்தொழில் ஆக்கப் போகின்ற சாதனையின் ஆரம்பமே இது.

இதனை தமிழ் மக்களின் நீண்ட கால நலன் கருதி எல்லாரும் மெளனமாக இருந்து வாழ்த்தி வரவேற்போம். கொலிடேக்கு போகேக்க சிங்கள படுக்கள்.. யாழ்ப்பாணத்தில திரியுங்கள் நாங்கள் அதுகளை சைட்டடிக்கலாம்..!

தமிழன் ஒரு இனம்.. அவனுக்கு ஒரு நாடு. உந்தப் பிரபாகரனுக்கு தேவையில்லாத வேலை..! டக்கிளஸ் அண்ணன் செய்வதே சிறந்த பணி. மாற்றுக் கருத்துக்களால் வளர்ந்த அண்ணன் வாழ்க. அவனை வாழ்த்தி புலம்பெயர் தேசமெங்கும்.. கொடி புடியுங்கோ..!!!!!!!!!!!!! :D:rolleyes:

முதலில் கொழும்பில், ஏனைய தென், மலையாக பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு அரச காணிகளை வழங்கட்டும். கதிர மலையை, கதிர்காமத்தை திரும்ப தமிழரிடம் கொடுக்கட்டும். சூரன் கோட்டையை தமிழனிடம் கொடுக்கட்டும் - அதன் பின்னர் யாழ் மண்ணில் சிங்கள இனவாதிகளின் குடியேற்றத்தை பற்றி யோசிக்கலாம்.

சம்பிக்க, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பயங்கரவாதிகளின் கூட்டுச் சதி இது.

  • கருத்துக்கள உறவுகள்

:) இதில கசப்பான விடயம் என்ன தெரியுமா? இதுபற்றி எம்மால் இப்போது எதுவுமே செய்ய முடியாது என்பதுதான். மொத்தச் சிங்கள இனமே யாழ்ப்பாணத்தில் குடியேறி, யாழ்ப்பாணத்தை சிறிலங்காவின் புதிய தலைநகர் என்று அறிவித்தாலும் கூட எம்மால் எதுவும் செய்ய முடியாது. நடப்பதை வேடிக்கை பார்க்க மட்டும்தான் முடியும்.

2009 இல் இந்திய அரசினால் சிறிலங்காவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான அறிவுரைகளில் ஒன்று யாழ்ப்பாணத்திலும், வன்னி வடக்கிலும் சனப்பரம்பலை சமனாக்குவது. அதாவது தமிழ் கிராமங்கள், நகரங்களிடையே சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தமிழரின் ஒன்றுபட்ட பலத்தைச் சிதைப்பதும் நாளடைவில் தனிநாட்டிற்கான கோரிக்கையை இல்லாமல்போக செய்வதும்தான். இதற்கு உதாரணமாக அவர்கள் வடக்கிலிருந்து கிழக்கு வெலி ஓயாவால் பிரிக்கப்பட்டதையும், கிழக்கில் சனத்தொகை வீதாசாரத்தில் தமிழினம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அங்கு சிறுபான்மையாக மாற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆகவே இப்போது நடப்பது மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இரு நாட்டு கொள்கை வகுப்பாளர்களின் நீண்டகால திட்டம்.

தற்போது மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள தமிழ்க்கிராமங்களில் தமிழர் அவர்களது காணிகளில் விவசாயம் செய்வதை அப்பகுதிகளில் புதிதாகக் குடியேறியுள்ள சிங்களவர்கள் தடுத்து வருவதுடன், அக்காணிகள் தங்களது என்று உரிமையும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல வவுனியா தெற்கு முற்றான சிங்கள பிரதேசமாக மாறியுள்ளது. கிழக்குத் திருகோணமலியில் காலம் காலமாக தமிழர் குடியிருந்த கிண்ணியா வென்னீரூற்றுபகுதிகள் இதுவரை காலமும் சிங்கள கிராமசபைகளின் கைகளிலிருந்து அண்மையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அங்கும் புதிய சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புலிகள் இருந்த காலப்பகுதியிலேயே இப்பகுதிகளில் இக்குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, தற்போது வெளிப்படையாக எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் மாதகல், நயினைதீவு, கந்தரோடை போன்ற பகுதிகளில் புராதன பவுத்த விகாரைகள் இருந்ததாக புனை கதைகளைக் கட்டி தற்போது அப்பகுதிகளில் நவீன புத்த விகாரைகள் கட்டப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்பட்டு பெயர்களும் மாற்றப்பட்டு சிங்களவர்களின் பூமியாக பிரகடணப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறே முல்லைத்தீவுப்பகுதியில் தமிழர்களின் காணிகளுக்கு பொய்யான உறுதிகள் தாயாரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவத்தினரால நீண்டகால அடிப்படையில் நிரந்தரப் படைமுகாம்களும், பவுத்த விகாரைகளும், இராணுவத்தினருக்கான நிரந்தரக் குடியிருப்புக்களும் கட்டப்பட்டு வருகின்றன.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் தமிழர்கள் நாய்களைப்போல விரட்டப்பட்டு இன்னும் அகதிகளாகத் திரிகையில் அப்பகுதிகளில் சிங்களக் கட்டிடங்களும் விகாரைகளும் எழும்பி வருவதை என்னவென்று சொல்வது. ஆனால் இவற்றை நியாயப்படுத்தவும் இங்கு ஒரு குழு இருக்கிறது. யுத்தத்திற்கு இரண்டு தரப்பும்தான் காரணம், ஆகவே விளைவுகளுக்கும் இரண்டு தரப்பும்தான் காரணம், ஆகவே அவர்கள் அவ்வாறு கட்டிடங்கள் கட்டுவதையோ அல்லது சிங்களவர்களைக் குடியேற்றுவதையோ தவறென்று கூற முடியாது என்று மனிதாபிமானமும், சனநாயகமும், நடுநிலமையும் பேசும் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

இப்படியெல்லாம் நடக்கும் என்று, ஒட்டுக்குழுக்களே.... எதிர்பார்த்திருக்க மாட்டார்களோ.....?

அல்லது அவர்களின் மண்டைக்குள் களிமண்ணை விட கேவலாமான சாமான் இருந்திருக்க வேண்டும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உதுகளைப்பத்தி யோசிக்காது இன்னமொரு வேலையும் செய்யலாம் அவுஸ்ரேலியா நாடு இலங்கைத் தீவைவிட இருநூறுமடங்கு பெரியது பேசாமல் ஈழத்தமிழர் அனைவரும் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக காணிகளை வாங்கி குடியேறிவிடலாம். பாலஸ்தினியர் பிரச்சனையை இஸ்ரேல் காரர்களுடன் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஆபிரிக்காவில் ஒரு பகுதியில் யூதர்களைக் குடியேற்றலாம் எனும் திட்டம் யூதர்கள் இஸ்ரேலை மீடகமுதல் அனைத்துலக நாடுகளால் பிரேரிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
:) உங்கள் கருத்துச் சரிதான் எழுஞாயிறு, ஆனால் அதற்கும் அவுஸ்த்திரேலியாக்காரன் சம்மதிக்க வேணுமே?? எங்களிட்ட என்ன கிடக்கு?? ஒரு ம..இல்லை. எதை வைச்சு அவனிட்ட கேட்கிறது? அகதிகளா வாற ஒண்டிரன்டு சனத்தையும் நாய் படாதபாடு நடத்துறாங்கள், அதுக்குள்ள மொத்தத் தமிழ்ச்சனமும் வந்து குடியேறுவது எப்படி சாத்தியம் ?
  • கருத்துக்கள உறவுகள்

உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் முள் குடியேறுவதற்கான சாதகநிலை என்ற கூறி வரும் அரசு சிங்களவரை யாழப்பாணத்தில் குடியேற்ற முனைவது அப்பட்டமான இன அழிப்பு நடவடிக்கையாகும். இதற்குத் துணை போன மாற்றுக் கருத்தாளர்களின் காணிகளில் இவர்கள் போய் குடியேற வேண்டும்.அப்பொழுதாவது அவர்களுக்கு ரோசம் வருகுதா என்று என்று பார்க்கலாம்.இந்தத் துறைக்கு பசிலும் விம்வீரவன்சவும் பொறுப்பாக நியமிக்கப்பட்டதே இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத்தான்.கூட்டமைப்புக் காரரை எங்கே காணோம்?

இனக்கலவரம் ஒன்றுக்கு யாழ்ப்பாணம் தயாராகி வருகிறது.......

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரம் ஒன்றுக்கு யாழ்ப்பாணம் தயாராகி வருகிறது.......

இனக்கலவரம் நடக்க சந்தர்ப்பம் உண்டு.

இனக்கலவரத்தை ஏற்படுத்தி... யாழில் உள்ள பெரும்பாலான தமிழரின் கடைகளையும், வீடுகளையும் அபகரிப்பார்கள்.

இப்போ யாழ் புகையிரநிலையத்தில் உள்ள சிங்களவர் வீடுகளில் இருப்பார்கள், வீடுகளில் உள்ள தமிழர்கள் புகையிரத நிலையத்தில் இருப்பார்கள்.

தொலைநோக்கு,தூரநோக்கு,என்னவோ சொல்லுகளெல்லாம் பாவித்தார்கள் இப்ப மறந்து போச்சினம் போலகிடக்கு.

வேற ஒண்டும் செய்ய வேண்டாம் காசை மாத்திரம் தாங்கோ தலைவர் மிச்சமெல்லாம் பார்த்துகொள்வாரென்றது இதைத்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

<_< தூர நோக்கும் இருக்கட்டும், கிட்ட நோக்கும் இருக்கட்டும். நாங்கள் காந்திக்கு எடுத்த அரசியல் பாடமும், கலைஞரோட நடத்தின அரசியல் விவாதங்களும், ரஜீவுக்குக் காட்டிய அரசியல் பாதையும்...இன்னும் இருக்க அல்லது, இவ்வலவும்தானா??

வயசு போன காலத்தில ஏன் உந்தக் கேள்வியெல்லாம்?? மாலைக்கண்ணும் , கட்ரக்டும் இருக்கிற காலத்தில தூரநோக்கும், கிட்ட நோக்கும் கேட்குதோ??

தொலைநோக்கு,தூரநோக்கு,என்னவோ சொல்லுகளெல்லாம் பாவித்தார்கள் இப்ப மறந்து போச்சினம் போலகிடக்கு.

வேற ஒண்டும் செய்ய வேண்டாம் காசை மாத்திரம் தாங்கோ தலைவர் மிச்சமெல்லாம் பார்த்துகொள்வாரென்றது இதைத்தானோ?

ஆகா அர்ஜுனா! ... அந்த தொலைநோக்கு/தூரநோக்கு ஒருபுறம் இருக்கட்டும்!! அது முடுந்தும் போச்சு! அதை நெடுக கிண்டி/தோண்டி உங்கடை அரசியலை எவ்வளவு காலத்துக்கு செய்யப் போகிறீர்கள்!! இவ்வளவு காலமும் சிங்களவனோடு ஒட்டி, புலிகள் அழிக்கப்பட்டால் தமிழர்களின் பிரட்சனை தீர்ந்து விடுமென்ற ... உங்கள் ஒட்டு/ஒணான் தூரநோக்குகள்/தொலைநோக்குகள் ... புலி அழிப்பென்ன, தமிழின அழிப்பிற்கே தோள் கொடுத்தீர்கள்!!! சரி புலி அழிந்து விட்டது ... எங்கே உங்கள் தூர/தொலைநோக்குகள்??????????? இனியாவது திருந்த மாட்டீர்களா?????????? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியொரு நிலைமை வருமெண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை

எந்தபக்கத்தாலை பாத்தாலும்......

ஈழத்தமிழனுக்கு .....

இப்ப..

விழுங்கவும் ஏலாது

துப்பவும் ஏலாது

உலக அரசியலை பாக்கேக்கை..

இனிமேலும் ஏலாது?

எல்லாம் முடிந்து போச்சு என்றால பின்னர் ஏன் இந்த இணைப்புகள் எல்லாம்.நடப்பது நடக்கட்டும் என்று இருக்க வேண்டியதுதானே.

மகிந்த சிந்தனைக்கு காலம், மதிப்பு கொடுத்ததெல்லாம் மற்ந்து போச்சோ.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்து போச்சு என்றால பின்னர் ஏன் இந்த இணைப்புகள் எல்லாம்.நடப்பது நடக்கட்டும் என்று இருக்க வேண்டியதுதானே.

மகிந்த சிந்தனைக்கு காலம், மதிப்பு கொடுத்ததெல்லாம் மற்ந்து போச்சோ.

pillaiyaan.jpg_45849690_02anandasangaree226.jpg

daclas+thevanantha..jpgWimal-pillaiyaan.jpg

டக்ளசும், பிள்ளையானும், ஆனந்த சங்கரியும், கருணாவும் இனியாவது திருந்த மாட்டார்களா...... என்னும் நப்பாசைதான்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

<_< நடப்பதெல்லாம் நடக்கட்டும், நாங்கள் பேசாமல் இருக்க வேண்டும் எண்டுதான் நீங்களும் உங்கட எசமானர்களும் விரும்புகின்றனர். ஆனாலும் நாங்கள் பிறந்து வாழ்ந்த பூமியை அவ்வளவு இலகுவாக விட்டுக் கொடுக்க எம்மால் முடியவில்லை.

விட்டுக்குடுக்கிறதையும், காட்டிகுடுக்கிறதையும் பரம்பரைத் தொழிலாச் செய்துவாற உங்களுக்கு அதெல்லாம் விளங்குறது கஷ்ட்டமாத்தான் இருக்கும் எண்டதும் எங்களுக்குத் தெரியும். காந்தி குடும்பத்துக்கு அரசியப் பாடம் எடுத்தேன், கலைஞருக்கு அரசியல் கற்றுக்குடுத்தேன், ரசீவின்ர அரசியல் பின்பலமே நாந்தான் எண்டு புழுகுறதையும், புலிகள் அப்படிச் செய்தாங்கள், இப்படிச் செய்தாங்கள் எண்டு காலம் காலமாக சிங்களவனின்ர இன்வழிப்புப் பிரச்சாரத்துக்கு ஒத்து ஊதி எங்கட போராட்டம் உலக நாடுகளில தடைசெய்யப்படுறதுக்குக் காரணமாக இருந்ததை விடவும் ஏதாச்சும் பிரியோசனமான வேலை உம்முடைய 65 - 70 கால வாழ்வில செய்திருப்பீரோ?

தொலைநோக்கு,தூரநோக்கு,என்னவோ சொல்லுகளெல்லாம் பாவித்தார்கள் இப்ப மறந்து போச்சினம் போலகிடக்கு.

வேற ஒண்டும் செய்ய வேண்டாம் காசை மாத்திரம் தாங்கோ தலைவர் மிச்சமெல்லாம் பார்த்துகொள்வாரென்றது இதைத்தானோ?

நாய்க்கு எங்கே அடிபட்டாலும் காலை தூக்கி கொண்டு தான் ஓடுமாம் இங்க சிலருக்கு எதுக்கெடுத்தாலும் புலிகள் பற்றி புறணி பாடாமல் இருக்க முடியாது....

இவர்களெல்லாம் இந்த நிலைக்கு வந்ததற்கு யார் காரணம்?.இவர்களை முதல் யார் கணக்கில் எடுத்தது.

.செய்வதெல்லாவற்றையும் செய்து தொலைத்துவிட்டு இப்போ கத்தி என்ன பிரயோசனம்.இதில் இருவர் உங்கட தளபதிகள்.ஒருவர் 5 வோட்டும் எடுக்க முடியாமல் அல்லாடுபவர்.மற்றவர் ஈபீ யில் இருந்து விலத்தி ஈ என் டீ எf உடன் சேர்ந்து அதுவும் சரிவராமல் உயிர் தப்புவதற்காக உள்ள சிங்கள அரசுகளுடன் ஒட்டிக் கொண்டவர்.

இன்று தமிழனின் இந்த நிலைக்கு முற்று முழுதான காரணமான புலிகளை திட்டாமல் யாரைத் திட்டுவது.

20 நூற்றாண்டில் இருந்து கொண்டு பண்டாரவன்னியன்,எல்லாளன்,சங்கிலியன் கதை கதைக்கும் உங்களுக்கு உலகம் பின் பக்கமாகத்தான் சுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

நாம் தோற்றுவிட்டோம் என்று விலிகியிருக்கிறோம்

நீங்கள் எம்மை திட்டுவதை நிறுத்தி

எப்போ தங்கள் திட்டங்களை முன் வைக்கப்போகின்றீர்கள்

அல்லது

தொடர்ந்து திட்டி

சிங்களவனுக்கு வழி வகுத்துக்கொடுப்பதுதான் திட்டமா...???

இவர்களெல்லாம் இந்த நிலைக்கு வந்ததற்கு யார் காரணம்?.இவர்களை முதல் யார் கணக்கில் எடுத்தது.

.செய்வதெல்லாவற்றையும் செய்து தொலைத்துவிட்டு இப்போ கத்தி என்ன பிரயோசனம்.

இன்று தமிழனின் இந்த நிலைக்கு முற்று முழுதான காரணமான புலிகளை திட்டாமல் யாரைத் திட்டுவது.

20 நூற்றாண்டில் இருந்து கொண்டு பண்டாரவன்னியன்,எல்லாளன்,சங்கிலியன் கதை கதைக்கும் உங்களுக்கு உலகம் பின் பக்கமாகத்தான் சுத்த வேண்டும்.

அர்ஜுன், சரி புலி பிழை, அழிந்து விட்டது ... புலி பிழை, அழிக்கப்பட வேண்டும் என்று சிங்களத்துடன் ஒட்டி செயற்பட்டீர்கள், புலி அழிந்ததும் சிங்களம் தமிழர்களின் உரிமைகளை தந்து விடும் என பிதற்றினீர்களென்ன ... உங்கள் தூர/தொலை நோக்கு அரசியலாக ... இருந்தது(நேரமிருப்பின் உங்கள் அரசியல் வழிவந்த இணையத்தளங்களில் எழுதிய கடந்தகால குப்பைகளை மீட்டுப் பாருங்கள்)!! அந்த ஒட்டி இருந்து புலி அழிப்பென்று ஆயிரக்கணக்கில் சிங்களத்துடன் போட்டி போட்டு சனங்களையும் முடித்தீர்கள்!! சரி புலி அழிப்பின் உச்சத்தில் 40000 பொது மக்களை சிங்களம் ஓரிரு நாட்களில் அழித்தும், அதனை மறைப்பதிலும், தவிர்க்க முடியாத செயல் என்று காரணங்கள் கூறுவதிலும் காலத்தை ஓட்டினீர்கள்!! சரி இன்று எங்கே உங்களின் தூர/தொலை நோக்குகளின் முடிபுகள்??? அப்படி சிங்களம் தரமாட்டாது எனில் ஏன் இன்னும் ஒட்டி இருக்கிறீர்கள்????

பண்டாரவன்னியனும், சங்கிலியனும் தெட உலகம் மற்றப்பக்கம் சுற்ராது என்று தெரிந்தால், சரியானவற்றை இனியாவது தேடுங்களேன்???

அர்ஜுன்,

உங்களைப் போன்று பலரும் மாற்றுக்கருத்து இணையங்களும் புலி அழிந்தால் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கட்டாயம் வரும் என திரும்பத் திரும்ப கூறினார்கள். இன்று அதைப் பற்றியே மூச்சும் விடுவதில்லை. புலி அழிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஏன் பழைய பல்லவி. புலிகள் போன பாதை தவறாயிருந்தால் அவர்களை விமர்சனத்துக்குள்ளாக்கி , உங்களுக்குத் தெரிந்த சரியான பாதையில் முயற்சிக்கலாமே. எம்மக்களின் பிரச்சனைகளுக்கு நீங்கள் வைக்கும் தீர்வு என்ன? இன்னமும் சிங்களவன் செய்யும் கொடுமைகளுக்கெல்லாம் புலியை குற்றம் சாட்டினால் தீர்வுதான் என்ன? திரும்ப திரும்ப புலியை பற்றி கதைத்துக்கொண்டிராமல் இழி நிலையில் உள்ள எம்மக்களுக்கு உங்களால் செய்யக்கூடியதை செய்ய முயற்சி எடுங்கள். எதிர்காலத்திற்கு தேவையானவற்றை விவாதியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.