Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுச் சைக்கிள்

Featured Replies

அந்தச் சிறுவனுக்கு பத்து வயசுதான் இருக்கும். இதற்குமுன்னர் அவனுடைய அதிகபட்ச ஆசைகள் எல்லாம் சின்னச் சின்ன விளையாட்டுச் சாமான்கள் மேலேயே இருந்தது. ஆனால், வயசும் கூடியதாலோ என்னவோ, இப்போது அவன் கொஞ்சம் அதிகமாகவே ஆசைப்பட்டான். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்டும். அவனுடைய பாடசாலை நண்பர்களில் பலபேர் சைக்கிள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் அடிக்கடி கேட்பான், "நான் ஒருக்கா ஓடிப் பார்க்கவா?" என்று. கெஞ்சிக்கேட்டும் ... அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவில்லை. "என்ர சைக்கிளில சைக்கிளோடப் பழகி அதை உடைச்சிட்டியென்டால்...யார் தர்றது?" என்ற நக்கலான பதில்களே வந்தன.

ஆனாலும் அப்பாவின்ர கிழட்டுச் சைக்கிளில வாருக்குள்ளால கால விட்டு ... பலதடவை விழுந்தெழும்பி ஓரளவுக்கு சைக்கிள் ஓடப் பழகியிருந்தான்.... அப்போது.

அவனுடைய கனவுகளில் கூட சைக்கிள்கள் வந்துபோக ஆரம்பித்தன.

அவனுடைய சிந்தனையெல்லாம் தவணைப் பரீட்சையிலேயே இருந்தது.அதுவொன்றும் அவனது கல்வி மீதுள்ள அதீத அக்கறையில் இல்லை! ஏனென்றால், வழமையாக இவனுடைய வகுப்பில் இவன் மூன்றாம் பிள்ளை அல்லது நான்காம் பிள்ளையாகத்தான் வருவான். முந்தினமுறை மூன்றாம் பிள்ளையா வந்திட்டு போனமுறை நான்காம் பிள்ளையா வந்ததால அப்பாவிட்ட வாதராணித் தடியால வாங்கியிருந்த அடியை இன்னும் மறந்திருக்க மாட்டான்.

அடிவாங்கினபிறகு படிப்பில் அக்கறை கொள்வது என்பது, இவனைப்பொறுத்தவரையில் நடக்காத விடயம். அவனாக படித்தால்தான் உண்டு. அந்தளவுக்கு அந்த வயதிலேயே பிடிவாதக் குணம் கொண்டவன்.

இப்பொழுது அவனுடைய சிந்தனைகள் எல்லாம், இந்த முறை மூன்றாம் பிள்ளைக்குள்ள வந்தால், அவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பதாய்... அவனது தந்தை சொன்ன வாக்குறுதி மீதுதான் இருந்தது.

எப்பிடியாவது மூன்றாம் பிள்ளைக்குள்ள வந்து சைக்கிளை வாங்கிடோணும் என்று உறுதியெடுத்தான்!

தினமும் அதிகாலையிலேயேயே எழும்பிப் படித்தான்... இரவும் ஒரே படிப்பு.விளையாடப் போறதும் குறைவு. அவனுடைய தாயிற்கு இவனது நடவடிக்கைகள் ஆச்சரியத்தோடு சந்தோசத்தையும் கொடுத்தது.

தவணைப் பரீட்சை முடிந்து... ரிப்போர்ட்டோடு வீட்டுக்குள் நுழைந்தவன், அம்மாவிடம் சொன்னான் "அம்மா இந்த முறையும் நாலாம் பிள்ளைதான் அம்மா...! அப்பாவை அடிக்க வேண்டாம் என்டு சொல்லும்மா...! ஆவணியில வருற ஸ்கொலர்சிப்பில எப்பிடியாவது நான் பாஸ் பண்ணிடுவன்" என்றான். தாய் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.

அவனுடைய அப்பா அப்பதான் வீட்டுக்கு வந்தார்... அவனுக்கு இதயம் படபடத்தது.

அவன் நல்லாத்தான் படிச்சிருந்தான்... போனமுறைய விட எல்லாப் பாடத்திலயும் புள்ளிகள் அதிகமாகவே வாங்கியிருந்தான். ஆனாலும் அவனால் மூன்றாம் பிள்ளைக்குள்ள வர முடியவில்லை. இதனை எடுத்து விளக்கும் வயதும், பக்குவமும், துணிவும் அவனுக்கு அப்போது இருக்கவில்லை.

"இன்டைக்கு வாதராணி தடி முறியப்போகுதே" என்ற கலக்கத்தோடு ஒரு ஓரமாய் நாணிப்போய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு சைக்கிள் ஆசையெல்லாம் அடியோடு மறந்துபோய், அடி வாங்காமல் தப்பினால் போதும் என்ற பரிதவிப்புடன் உட்கார்ந்திருந்தான்.

அப்பாவிடம் ரிப்போர்ட்டை நீட்டினார்... அவனது அம்மா.

ரொம்ப நேரமாக அதையே பார்த்துக்கொண்டிருந்த அவனது தந்தை ஒன்றுமே சொல்லாமல் அதை மேசையில் வைத்துவிட்டு வெளியேறினார்.

அது அவனுக்கு ஆயிரம் சைக்கிள்கள் கிடைத்தாலும் கிடைக்கமுடியாத சந்தோசத்தினைக் கொடுத்தது.

"தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்" என்டு நினைத்துக்கொண்டான்.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களின் பின் அவனது அப்பா முக்கியமான விஷயத்துக்காக கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் தனது சின்னப்பிள்ளைத்தனமான விளையாட்டுக்களில் மும்முரமாக இருந்தவனுக்கு அப்பா கொழும்பில் இருந்து அடுத்தநாள் மீண்டும் வீடு திரும்புகின்றார் என்று அம்மா சொன்ன செய்தி கொஞ்சம் கசக்கத்தான் செய்தது!

அவர் வீடு வந்து சேர்ந்தது அதிகாலையில்தான். அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் அவனது பெற்றோர் அவனை எழுப்பவில்லை.

காலை விடிந்து... அவன் எழும்பிச் சென்று முற்றத்தில் பார்த்ததை அவனது கண்களால் நம்ப முடியவில்லை.

அவனுக்காக அவனது அப்பா ஒரு அழகிய சைக்கிளை வாங்கி வந்திருந்தார். அப்பாவை பார்த்து அது தனக்காகவா? என.... கேட்க முனைந்தவனுக்கு ஏதோ தடுத்தாலும், அவன் அம்மாவைக் கேட்டான் ... "அந்த புதுச்சைக்கிள் எனக்குத் தானே!?"

தந்தை பதில் சொன்னார்... "எல்லாத்திலயும் நல்ல மார்க்ஸ் எடுத்திருந்தாய்... இப்பிடியே ஸ்கொலர்சிப்பிலயும் பாஸ் பண்ணு".

"அடுத்த வருஷம் ஹாட்லிக்கு போக சைக்கிள் தேவைதானே. அதுதான் வாங்கிக் குடுத்திருக்கிறன்"... என்றார் நம்பிக்கையுடன். அவனது ஊரில் மிகவும் பிரபலமான பாடசாலை ஹாட்லிக்கல்லூரி. ஆண்டு-5 க்கு பிறகு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணிய மாணவர்கள் ஆண்டு-6 இல் இருந்து ஹாட்லிக்கல்லூரியில் தமது கல்வியினைத் தொடர்வது வழக்கமாக இருந்தது. அதனால்தான் அவனுடைய தந்தை அப்படிக் கூறியிருந்தார். அவன் பதில் ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானது. அதன் முடிவுகள் அவனது பாடசாலைக்கே வந்திருந்தன. முடிவுகளைப் பார்த்தவன் ... நேராக ஓடினான் அவன் அப்பா வாங்கிக்கொடுத்திருந்த சைக்கிளை நோக்கி....!

"அவனுடைய பாடசாலையிலேயே அவனுக்குத்தான் அதிகமான புள்ளிகள் கிடைத்திருக்கிறது" என்ற இனிப்பான செய்தியை தன் தந்தையிடம் சொல்லுவதற்காக ... உரிமையுடன் மிதித்தான் சைக்கிளை அநத சின்னப்பையன். அன்று அவனுக்கு அது.... அவனது பெரும்சாதனையாக அமைந்திருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் என் தம்பியின் ஞாபகம் வருகிறது . பகிர்வுக்கு நன்றி . ஊக்கமது கை விடேல் .......

.........சினச் சின்னச் சந்தோஷங்கள் மறக்க முடியாதவை.

  • தொடங்கியவர்

அந்தச் சின்னப் பையன்.... வேறு யாருமல்ல.... நானேதான்! :D:) :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பார்த்தீபன் யாழுக்கு வந்ததில் இருந்து உங்கள் ஆசைகளையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் :D

  • தொடங்கியவர்

இக்கதையில் சில ஆங்கில வார்த்தைப் பிரயோகங்கள் யதார்த்தத் தன்மையினை பிரதிபலிப்பதற்காக பாவிக்கப்பட்டுள்ளன.

அவற்றிற்கான தமிழ்ச்சொற்கள் இவை:

சைக்கிள்: துவிச்சக்கரவண்டி

ஸ்கொலர்சிப்: புலமைப்பரிசில்

பாஸ்: சித்தியடைதல்

ரிப்போர்ட்:அறிக்கை

மார்க்ஸ்: புள்ளிகள்

:D:):)

சின்ன வயதில் என் தம்பியின் ஞாபகம் வருகிறது . பகிர்வுக்கு நன்றி . ஊக்கமது கை விடேல் .......

.........சினச் சின்னச் சந்தோஷங்கள் மறக்க முடியாதவை.

நன்றி அக்கா!

நானும் உங்கள் தம்பிதானே! :)

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி அது நீங்களா :D நல்ல பதிவுக்கு நன்றி :)

  • தொடங்கியவர்

என்ன பார்த்தீபன் யாழுக்கு வந்ததில் இருந்து உங்கள் ஆசைகளையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் :)

அடங்காத ஆசைகள்! :D

கடந்தகால சின்னச் சின்ன ஆசைகளில் இந்த சைக்கிள் ஆசையும் ஒன்றாக இருந்தது!

இப்ப நினைச்சால் சிரிப்பாக இருக்கும்! :)

ஆனால்... அந்த கதையில் எனது மறைந்துபோன தந்தையின் நிறைந்த நினைவுகள் பல இருக்கின்றன! :D

அடப்பாவி அது நீங்களா :) நல்ல பதிவுக்கு நன்றி :)

:D நன்றி சஜீவன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை எனது சிறு வயதை ஞாபகப்படுத்தியது நன்றி

..

கடந்தகால சின்னச் சின்ன ஆசைகளில் இந்த சைக்கிள் ஆசையும் ஒன்றாக இருந்தது!

இப்ப நினைச்சால் சிரிப்பாக இருக்கும்! :)

ஆனால்... அந்த கதையில் எனது மறைந்துபோன தந்தையின் நிறைந்த நினைவுகள் பல இருக்கின்றன! :)

...

சின்னச் சின்ன மலரும் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

பொதுவாக மூத்த பிள்ளைக்கும் கடைசிப் பிள்ளைக்கும் தான் ஸ்பெஷல் கவனிப்பு குடும்பத்தில் இருக்கும். நான் இரண்டும் இல்லை. இருப்பினும் சைக்கில் விசயத்தில் எனக்கு அதிஷ்டம் என்றே சொல்லுவேன். அண்ணனுக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிளை அவர் ஸ்டாண்டில் விட்டுப்போட்டுத் தான் மாதக் கணக்கில் ஓடினவர் (ஒரு படத்தில் வடிவேலு ஓடுற மாதிரி :D ) ஆனால் இரண்டே இரண்டு நாட்களில் அண்ணனின் சைக்கிளை நான் தான் முதலில் ரோட்டில் ஓடிச் சென்றேன். அதன் பிறகு சைக்கிளைத் தொட விடமாட்டான், ஊரை விட்டு வரும் வரை அப்பாவின் பெரிய சைக்கிளைத் தான் ஓடினேன். (இப்பவும் நேரில் கண்டால் 'எல்லாம் சரி இன்னும் ஸ்டாண்டில விட்டா சைக்கிள் ஓடுறது' என்று கேட்டு கடுப்பு ஏத்துவேன் :) :) )

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை பார்த்தீபன். என்ட கதை உதே மாதிரி தான் ஆனா எனக்கு அப்பாட பழைய "ரலி" சைக்கிளைத் தந்து ஏமாத்திப் போட்டினம், எண்டாலும் அது திறமான சைக்கிள் தான். நீங்களும் எங்கட பள்ளிக்கூடம் போல, ரொம்ப சந்தோசம். எந்த வருஷம்?

கெட்டிக்காரன் புலமைப்பரிசில் பரிட்சை எல்லாம் சித்தி அடைந்து புதிய துவிச்சக்கரவண்டியில பள்ளிக்கூடம்போய் அந்தமாதிரி பல அனுபவங்களை பெற்று இருக்கிறீங்கள். புரட்சி மிரட்சி என்று ஆரம்பத்தில் எழுதும்போதே யோசித்தன் நிறைய தமிழ்ச்சோதினைகள் எல்லாம் சித்தியடைஞ்சுதான் இதுக்கை குதிச்சு இருப்பீங்கள் என்று. என்றாலும்.. சைக்கிள் கதை என்று கேட்க வயித்தைபத்தி எரிகிதப்பு. ஏனென்றால்...

அனைவருக்கும் இனிய திருட்டு வணக்கங்கள்,

இண்டைக்கு (நேற்று) நான் பள்ளிக்கூடம் போனால் என்ன நடந்திச்சிது தெரியுமோ? ரெண்டு அதிர்ச்சிகள் எனக்கு காத்து இருந்திச்சிது. ஒண்டு எனக்கு படிப்பிக்கிற வாத்திக்கு மாரடைப்பு. இனி அவர் படிப்பிக்க மாட்டாராம். புது வாத்தி ஒருத்தர பள்ளிக்கூடம் தேடிப்பிடிக்கவேணும். மற்றது, என்னோட படிக்கிற சக மாணவியிண்ட காரை உடைச்சு களவு.

இதில ரெண்டாவது கதைய மாத்திரம் சொல்லிறன் சுருக்கமா.

நேற்று என்னோட படிக்கிற சக மாணவி ஒருத்தி தன்ர காரை (car - மகிழூர்தி?) பள்ளிக்கூடத்திற்கு அருகில இருக்கிற ஒரு தெருவில விட்டுப்போட்டு அங்கால எங்கையோ போட்டு வாறதுக்கு இடையில யாரோ ரெண்டு திருட்டுப் பசங்கள் கார் கண்ணாடிய கல்லால குத்தி உடைச்சு காருக்க இருந்த பொருட்கள திருடிப்போட்டாங்கள். நாசமாப்போக..

எண்ட சக வகுப்பு மாணவர்களுக்கு மாணவி அனுப்பின மடலை இணைக்கிறன் பாருங்கோ..

மற்றது, முக்கியமா காரை நிறுத்திவிட்டு செல்லும்போது காரினுள் ஒரு சாமாங்களையும் வைத்துவிட்டு போகக்கூடாது. காரை கள்ளங்கள் உடைப்பதற்கான மூலகாரணம் காருக்க ஏதாவது பொருட்களை நீங்கள் விட்டுச் செல்லுறதுதான். எண்டபடியால் கவனம் பாருங்கோ.

இப்பிடித்தான் எண்ட சைக்கிள்... நான் ஆசை ஆசையா கனடாவுக்கு வந்து உழைச்ச காசில ஒரு அழகிய துவிச்சக்கர வண்டி வாங்கி இருந்தன் $900 காசு குடுத்து. ரெண்டு வருசத்துக்கு முன்னம் பள்ளிக்கூடத்தில வாசலில நிறுத்திப்போட்டு (துவிச்சக்கரவண்டிகள நிறுத்தும் இடம்) நூலகத்துக்கு போயிட்டு வாறதுக்கு இடையில நாசமாப்போன திருட்டுப்பசங்கள் பூட்டு இரும்பு வயரை வெட்டிப்போட்டு (பெரிய ஒரு இரும்பு வெட்டுற கத்தரிக்கோலால) எண்ட அழகிய சைக்கிள திருடிக்கொண்டு போட்டாங்கள்.

இப்ப நினைக்கவும் வயித்தப்பத்தி எரியுது. எங்க காவல்துறையிட்ட எல்லாம்போய் முறைப்பாடு செய்ததுதான் ஆனா திருட்டுப்போனது போனதுதான்.

தகவல் மூலம்: எண்ட பள்ளிக்கூடத்தில பட்டப்பகலில நடைபெறும் சில திருட்டு சம்பவங்கள் | மக்கள் சாக்கிரதை

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

நல்ல கதை எனது சிறு வயதை ஞாபகப்படுத்தியது நன்றி

நன்றி வாதவூரான் :D

சின்னச் சின்ன மலரும் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

பொதுவாக மூத்த பிள்ளைக்கும் கடைசிப் பிள்ளைக்கும் தான் ஸ்பெஷல் கவனிப்பு குடும்பத்தில் இருக்கும். நான் இரண்டும் இல்லை. இருப்பினும் சைக்கில் விசயத்தில் எனக்கு அதிஷ்டம் என்றே சொல்லுவேன். அண்ணனுக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிளை அவர் ஸ்டாண்டில் விட்டுப்போட்டுத் தான் மாதக் கணக்கில் ஓடினவர் (ஒரு படத்தில் வடிவேலு ஓடுற மாதிரி :) ) ஆனால் இரண்டே இரண்டு நாட்களில் அண்ணனின் சைக்கிளை நான் தான் முதலில் ரோட்டில் ஓடிச் சென்றேன். அதன் பிறகு சைக்கிளைத் தொட விடமாட்டான், ஊரை விட்டு வரும் வரை அப்பாவின் பெரிய சைக்கிளைத் தான் ஓடினேன். (இப்பவும் நேரில் கண்டால் 'எல்லாம் சரி இன்னும் ஸ்டாண்டில விட்டா சைக்கிள் ஓடுறது' என்று கேட்டு கடுப்பு ஏத்துவேன் :):D )

அண்ணனையே மிஞ்சிட்டீங்கள் குட்டி.... :D பெயர்தான் குட்டி... ஆனால் செய்யுற வேலையளெல்லாம் பெருசா இருக்கு! :(

சின்ன வயது ஞாபகங்கள் எப்போதும் பசுமையானவை! :)

நல்ல கதை பார்த்தீபன். என்ட கதை உதே மாதிரி தான் ஆனா எனக்கு அப்பாட பழைய "ரலி" சைக்கிளைத் தந்து ஏமாத்திப் போட்டினம், எண்டாலும் அது திறமான சைக்கிள் தான். நீங்களும் எங்கட பள்ளிக்கூடம் போல, ரொம்ப சந்தோசம். எந்த வருஷம்?

ரலி சைக்கிள் நல்லாப் பாவிக்கும். உண்மையிலேயே நல்ல சைக்கிள்தான் எனக்கு கிடைச்சது லுமாலா சைக்கிள்தான். அதை ஒரு நாளைக்கு பத்துத் தடவை எண்ணெய்போட்டு துடைச்சு பராமரிச்ச கதையச் சொன்னா உங்களுக்கு தலை சுத்தும்! :D

ம்ம்ம்.... ஒரே பாடசாலை என்பதில் மிக்க சந்தோசம்! :D

  • தொடங்கியவர்

கெட்டிக்காரன் புலமைப்பரிசில் பரிட்சை எல்லாம் சித்தி அடைந்து புதிய துவிச்சக்கரவண்டியில பள்ளிக்கூடம்போய் அந்தமாதிரி பல அனுபவங்களை பெற்று இருக்கிறீங்கள். புரட்சி மிரட்சி என்று ஆரம்பத்தில் எழுதும்போதே யோசித்தன் நிறைய தமிழ்ச்சோதினைகள் எல்லாம் சித்தியடைஞ்சுதான் இதுக்கை குதிச்சு இருப்பீங்கள் என்று. என்றாலும்.. சைக்கிள் கதை என்று கேட்க வயித்தைபத்தி எரிகிதப்பு. ஏனென்றால்...

கரும்பு...! உங்களுக்கு எப்பவுமே குறும்புதான்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

ரலி சைக்கிள் நல்லாப் பாவிக்கும். உண்மையிலேயே நல்ல சைக்கிள்தான் எனக்கு கிடைச்சது லுமாலா சைக்கிள்தான். அதை ஒரு நாளைக்கு பத்துத் தடவை எண்ணெய்போட்டு துடைச்சு பராமரிச்ச கதையச் சொன்னா உங்களுக்கு தலை சுத்தும்! :)

ம்ம்ம்.... ஒரே பாடசாலை என்பதில் மிக்க சந்தோசம்! :)

நீங்கள் மட்டுமே. நாங்களும் தான் அதப் போட்டு துடை துடை எண்டு துடைச்சு, டயர் ஈறா கழுவி. றிம்முக்க பூ மாதிரியான வளையம் எல்லாம் போட்டு தேர் மாதிரி எல்லோ வச்சிருந்த நாங்கள். எனக்கு 6 ஆம் ஆண்டில் முதன் முதலில் கை முறிஞ்சதும் அந்த சைக்கிளில் தான். அதுக்கு என்ன விட வயசு கூட. ஆனால் அதில நான் சுத்தாத இடமே இல்லை. அண்ணாக்கு தான் புது லுமாலா சைக்கிள் கிடைச்சது. பிறகு உயர் தரத்துக்கு வந்தாப் பிறகு அதில தான் ஓட்டம். இடைக்கிடை அம்மாட லுமாலா லேடீஸ் சைக்கிளும் கை கொடுத்திருக்கு. அருமையான அனுபவங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

---------

அவர் வீடு வந்து சேர்ந்தது அதிகாலையில்தான். அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் அவனது பெற்றோர் அவனை எழுப்பவில்லை.

காலை விடிந்து... அவன் எழும்பிச் சென்று முற்றத்தில் பார்த்ததை அவனது கண்களால் நம்ப முடியவில்லை.

அவனுக்காக அவனது அப்பா ஒரு அழகிய சைக்கிளை வாங்கி வந்திருந்தார். அப்பாவை பார்த்து அது தனக்காகவா? என.... கேட்க முனைந்தவனுக்கு ஏதோ தடுத்தாலும், அவன் அம்மாவைக் கேட்டான் ... "அந்த புதுச்சைக்கிள் எனக்குத் தானே!?"

--------

பத்து வயதில் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் சைக்கிள் ஓடப் பழகி, தனக்கென ஒரு சொந்தச் சைக்கிள் வைத்திருக்க வேண்டும் என்று....... மனதை அரித்துக் கொண்டே இருக்கும். உங்களது அப்பா கொடுத்த இன்ப அதிச்சியில்..... உங்களது மனம் அந்த நேரம் பட்டாம் பூச்சியாக பறந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகின்றது. அதனை வர்ணிக்க வார்த்தைகளே.... இல்லை. நல்ல கதை பார்த்தீபன்.radeln.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சைக்கிள் கதை நன்று பார்த்தீபன்

எங்களுக்கெல்லாம் அந்த நாட்களில் புதுச் சைக்கிள் குதிரைக் கொம்பு மாதிரி.

பழைய சைக்கிள் கிடைத்ததே பெரிய கதை.

வாத்தியார்

*********.

  • தொடங்கியவர்

நீங்கள் மட்டுமே. நாங்களும் தான் அதப் போட்டு துடை துடை எண்டு துடைச்சு, டயர் ஈறா கழுவி. றிம்முக்க பூ மாதிரியான வளையம் எல்லாம் போட்டு தேர் மாதிரி எல்லோ வச்சிருந்த நாங்கள். எனக்கு 6 ஆம் ஆண்டில் முதன் முதலில் கை முறிஞ்சதும் அந்த சைக்கிளில் தான். அதுக்கு என்ன விட வயசு கூட. ஆனால் அதில நான் சுத்தாத இடமே இல்லை. அண்ணாக்கு தான் புது லுமாலா சைக்கிள் கிடைச்சது. பிறகு உயர் தரத்துக்கு வந்தாப் பிறகு அதில தான் ஓட்டம். இடைக்கிடை அம்மாட லுமாலா லேடீஸ் சைக்கிளும் கை கொடுத்திருக்கு. அருமையான அனுபவங்கள்

கோயில் தேருக்குக் கூட அவ்வளவு அலங்காரம் இருக்காது... :) தேர் தோத்துப் போயிடும்!!! :)

  • தொடங்கியவர்

பத்து வயதில் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் சைக்கிள் ஓடப் பழகி, தனக்கென ஒரு சொந்தச் சைக்கிள் வைத்திருக்க வேண்டும் என்று....... மனதை அரித்துக் கொண்டே இருக்கும். உங்களது அப்பா கொடுத்த இன்ப அதிச்சியில்..... உங்களது மனம் அந்த நேரம் பட்டாம் பூச்சியாக பறந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகின்றது. அதனை வர்ணிக்க வார்த்தைகளே.... இல்லை. நல்ல கதை பார்த்தீபன்.radeln.gif

.

அந்தத் தருணத்தினை இப்பொழுதும் எப்பொழுதும் மறக்கவே முடியாது! :) நன்றி அண்ணை...! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை பரவாயில்லை சும்மா வாசிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீபன் லீலைகளுடன் தேரோட்டுவீர்களோ இல்லையோ ஈருந்தியை மிதித்து நிறைய லீலைகள் செய்திருப்பீர்கள் போல் இருக்கிறது. கதைப்பக்கம் முத்திரை பதிக்க வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

உங்கள் சைக்கிள் கதை நன்று பார்த்தீபன்

எங்களுக்கெல்லாம் அந்த நாட்களில் புதுச் சைக்கிள் குதிரைக் கொம்பு மாதிரி.

பழைய சைக்கிள் கிடைத்ததே பெரிய கதை.

வாத்தியார்

*********.

நன்றி வாத்தியார்! :)

கதை பரவாயில்லை சும்மா வாசிக்கலாம்

குமாரசாமி அண்ணை..! உங்கட வாயால"பரவாயில்லை" என்ட வார்த்தையை எடுக்கிறதே எனக்கு மிக்க மகிழ்ச்சிதான். :) கொஞ்சம் கிடுக்குப்பிடியான விமர்சகர். நீங்கள் சொன்னால் மிகச் சரியாக இருக்கும். அடுத்தமுறை... என்னை மேலும் மெருகேற்றுகின்றேன்!

நன்றி அண்ணை! :)

அண்மையிலும் துவிச்சக்கரவண்டி பழகுதல்.. இளமைக்காலம் இவை சம்மந்தமான ஓர் விடயம் பேசப்பட்டது.

எனது புதிய நூல் “நேற்றுப் போல இருக்கிறது” | கே. எஸ். பாலச்சந்திரன்

  • தொடங்கியவர்

அண்மையிலும் துவிச்சக்கரவண்டி பழகுதல்.. இளமைக்காலம் இவை சம்மந்தமான ஓர் விடயம் பேசப்பட்டது.

எனது புதிய நூல் “நேற்றுப் போல இருக்கிறது” | கே. எஸ். பாலச்சந்திரன்

நல்லதொரு பகிர்வுக்கு... எனது மனமார்ந்த நன்றிகள் கரும்பு! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்தீபன் அண்ணா உந்தசைக்கிள் மேட்டர் இருக்கே உது எல்லாரும் அனுபவிச்ச ஒன்று தான் அதனாலை நீங்கள் எழுதியது அனைவருக்கும் தமது சொந்த கதையை எழுதினது போல நல்லா இருக்கு அண்ணா. :)

நான் சைக்கிள் பழகினது அப்பாவோடை பெரிய சைக்கிள்ளை தான்,அதுவும் கிந்தி கிந்தி பார் ருக்கு கீழாலை ஓடி காலாலை பிறேக் பிடிக்கிறதே ஒரு சுகம் அதுவும் ஊரி ரோட்டிலை கால்பிறேக் அடிக்க சைக்கிள் சுத்திப்போட்டு நிக்கும் பாருங்கோ சொல்லிவேலையில்லை. அப்புறம் எனக்கென்னவோ சின்ன வயசிலையே பொம்பிளை பிள்ளையள் மேலை சே..கறுமம் கறுமம் பொம்பிளைப்பிள்ளையளின்ரை சைக்கிள் எண்டால் ரொம்ப பிடிக்கும்.

:wub:

அப்பாவும் தங்கச்சியும் ஓடுவாள் எண்டு பொம்பிளை பிள்ளையளின்ரை சைக்கிள் புதுசா எடுத்து தந்தார் அப்புறம் A/L படிக்க தான் நானே கேட்டு ஒரு பழைய லுமால முழுச்சைக்கிள் எடுத்து தந்தார். வ்யசுக்கு வந்தவுடனை ஏனோ புதுசும் பழசாகிடும் என்று பெரிய மனசிலை பழசே எடுத்து தர சொல்லிட்டேன்.(ரொம்ப பெரியமனசில்ல.....யோய் யாரோ ஒருத்தர் திட்டுறார் சுயபுராணம் பாடுறான்னு அதனாலை இத்தோடை விட்டிடுறேன்.) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி சைக்கிள் அனுபவம்உண்டு

என்ர படிப்பை பார்த்து எனது தகப்பனாரும் ஒரு சைக்கிள் புதிசாக வாங்கித்தந்தார்

அது ரலி அல்ல. அந்த நேரம் புதிதாக வந்த மொடல். பெயர் வருகுதில்லை ஏதோ ..........பைக் என்று வரும்.

வாங்கித்தந்த அடுத்தநாளே எமது ஊரில் ஒரு குளத்தின் வரம்பு இருக்கும்

அதனால் முன்பு இருந்த பழைய ரலிச்சைக்கிளில் வீம்புக்கு ஏறித்தான் பாடசாலை செல்வேன்.

அதேபோல் இது புதுச்சைக்கிள் தானே ஆட்களும் பார்த்துக்கொண்டு நிற்கினம் ஏத்துவம் என்று ஏத்தினேன்

டிக் என்று ஒரு சத்தம்

பார்த்தால்கீழ் பார் இரண்டாக உடைந்துவிட்டது.

அப்படியே கொஞ்சநாள் யாருக்கும் தெரியாமல் கட்டி வைத்து ஓட்டினேன்

பின்பு தெரிந்து எனக்கு பாவிக்கத்தெரியாது என்று அவர்களும்

எனக்கு ரலி வாங்கித்தரவில்லை என்று நானும்.........???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.