Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள், கடையில்.. எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்?

நீங்கள் கடையில், எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்? 22 members have voted

  1. 1. நீங்கள் கடையில், எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்?

    • கிழமைக்கு ஒரு முறை.
    • தின‌மும் ஒரு முறை.
      0
    • தின‌மும் ப‌ல‌ முறை.
    • திரும‌ண‌மாகாததால் க‌டையிலேயே சாப்பாடு.

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இரண்டாக பிரிக்ப்படுவிட்டது.வார விடுமுறை மாத்திரம்.

கனேடியன் அவா.இலங்கை நான்.

அவா யூஸ்.பிள்ளைகளுக்கு லன்ச்,பிறேக் பாஸ்ட்

நான் மதிய சாப்பாடு மீன், இறைச்சி, மரக்கறி, அரிசி

இன்னமும் கொஞ்சகாலம் தானே ஒருவாறு தள்ளிவிடலாம்.

  • Replies 51
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழமையில் ஒரு நாள் கொள்வனவு

மனைவியுடன் சென்றால் குறிப்பிட்ட பணத்துக்கே கொள்முதல் செய்யமுடியும் என்பதால் என்னுடன் செல்லும் போது ஆளுக்கொரு வண்டிலுடன் சென்று நிரப்பிவருவார்கள். வீட்டை வந்து வழமைப்படி தேவையற்றதெல்லாம் வாங்கின்கொடுத்தது என்று பல்லவி தொடரும்.

ஆளுக்கொரு வண்டிலில் சாமான் வாங்கி வருவது என்றால் ....... :D

இனிப்பு பொருட்களா, நொறுக்குத்தீனியா, சமையல் பொருட்களா...... விசுகு.

கனடாவில் எல்லா வியாபாரமும் போல மளிகை கடை வியாபாரமும் போட்டியானது. இதில் வார "மலிவு விற்பனைகள்" "தள்ளுபடிகள்" "புள்ளிகள் சேகரிப்புகள்" என பலவிதமான ஊக்கங்கள் தரப்படுகின்றன.

உதாரணத்துக்கு கீழுள்ள இணையத்தளங்களில் நுகர்வோரால் ஒரு "நல்ல சேமிப்பு" பற்றிய செய்தி முன்வைக்கப்படும்.

http://smartcanucks.ca/

வீட்டில் பிரதி எடுக்ககூடிய தள்ளுபடி சலுகைகள் இதில் உள்ளன.

http://save.ca/?ext=html

இப்படியான தளங்களை தமிழகர்கள் பாவித்தும் தமிழிலிலும் உருவாக்கி பயன் பெறலாம்.

பல தமிழர் வர்த்த நிலையங்களும் புள்ளி அடிப்படையிலான மட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.

நான் இவைகளையும் பாவித்து எங்கள் வீட்டின் மளிகை மற்றும் இதர செலவுகளை குறைக்க "முயலுவது" உண்டு.

வாரத்தில் ஒரு நாள் , சனி அல்லது ஞாயிறு NoFrils எனும் super market இற்கும், மோர்னிங் சைட் பக்கம் இருக்கும் sunrise எனும் கடைக்கும் போய் சாமான் வாங்குவன். பெரிய கொள்வனவு என்றால் Costco போன்ற இடங்களில் வாங்குவேன் (இந்த பல்பொருள் அங்காடி விசேடமானது, வருடாந்தம் ஒரு தொகை கட்டி உறுப்பினருரிமை புதுப்பிக்க வேண்டும்)

வார இடையில் மனிசி தேசிக்காய், தக்காளி என்பனவற்றை பக்கத்தில் இருக்கும் கடையில் வாங்கி கொள்வது வேறு விடயம்

சனி அல்லது ஞாயிறு அதிகாலையில் போய் வாங்கிவிட்டு வந்துவிடுவேன். 10 மணிக்கு மேல் போனால், இரண்டு மடங்கு நேரம் செலவழிக்கவேண்டியிருக்கும். அதனால் காலையிலேயே எல்லாம் முடித்துவிடுவேன். இல்லாவிட்டால் மூடுவதற்கு முன் சென்று வாங்குவேன். ஒன்றிரண்டு பொருட்கள் எனில் வேலையால் வரும்போது வாங்கும் பழக்கமும் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொல்ல கேட்டிருக்கின்றேன்.... யாழ்ப்பாணத்தான் சவப்பெட்டி மலிவாக வந்தால் கூட வாங்கி வைத்துவிடுவானாம்!!! :rolleyes:

யாழ்ப்பாணத்தவர்களின் சேமிப்பு பழக்கத்திற்காக.... அப்படி கூறியிருப்பார்கள். :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

---------

ஐயோப்பா வெங்காயம் எழுத மறந்துபோனன்.... எண்டு இவள்பாவி சொல்ல...... :rolleyes:

நான் இந்த இடத்திலை.... கொதிக்கிற கொதி சொல்லி வேலையில்லை...ஆனால் ஒண்டையும் வெளியிலை காட்டிக்குடுக்குறதில்லை(ஏனப்பாசோலி) :wub: :wub: :lol:

-------

கொதியை வெளியிலை காட்டினால் என்ன நடக்கும் கு.சா. அண்ணை......

வாரத்துக்கு ஒருமுறை (4, 5 நாட்களுக்குத்) தேவையானதைச் சமைத்து குளிரூட்டியில் வைத்துவிட்டால், வேலை அதிகம் களைப்பான நாட்களில் (வியாழன், வெள்ளி) கடையில் வாங்குவது.

குட்டி, இங்கிலாந்தில் உள்ள அநேகமான வீடுகளில், வாரத்திற்கு தேவையானதை சமைத்து குளிரூட்டியில் வைப்பபதை அவதானித்துள்ளேன்.

மற்றைய நாடுகளில் அப்படி காணமுடியவில்லை.

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாக பிரிக்ப்படுவிட்டது.வார விடுமுறை மாத்திரம்.

கனேடியன் அவா.இலங்கை நான்.

அவா யூஸ்.பிள்ளைகளுக்கு லன்ச்,பிறேக் பாஸ்ட்

நான் மதிய சாப்பாடு மீன், இறைச்சி, மரக்கறி, அரிசி

இன்னமும் கொஞ்சகாலம் தானே ஒருவாறு தள்ளிவிடலாம்.

kochi.jpg

அர்ஜூன், கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பிள்ளைகள், மருமக்கள் பொருட்கள் வாங்கி வர.........

ஈசி செயாரில் (easy chair) கால் நீட்டிக் கொண்டு இருக்கலாம், என்று பிளான் பண்ணி இருக்கிறியள் போலை...... :wub::rolleyes:

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

--------

பல தமிழர் வர்த்த நிலையங்களும் புள்ளி அடிப்படையிலான மட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.

நான் இவைகளையும் பாவித்து எங்கள் வீட்டின் மளிகை மற்றும் இதர செலவுகளை குறைக்க "முயலுவது" உண்டு.

அகூதா, இங்கும் புள்ளி அடிப்படையிலான கடை வீட்டிற்கு சிறிது தூரத்தில் உள்ளது....

அங்கு சில காலம் பொருட்களை வாங்கிப் பார்த்தேன்..... ஆனால் நேர விரயமும், எரி பொருள் விரயமும்.......

கையும், கணக்கும் சரியாக வந்ததால் விட்டு விட்டேன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் ஒரு நாள் , சனி அல்லது ஞாயிறு NoFrils எனும் super market இற்கும், மோர்னிங் சைட் பக்கம் இருக்கும் sunrise எனும் கடைக்கும் போய் சாமான் வாங்குவன். பெரிய கொள்வனவு என்றால் Costco போன்ற இடங்களில் வாங்குவேன் (இந்த பல்பொருள் அங்காடி விசேடமானது, வருடாந்தம் ஒரு தொகை கட்டி உறுப்பினருரிமை புதுப்பிக்க வேண்டும்)

-------

நிழலி, அவர்களின் கடையில் (Costco) பொருட்கள் வாங்குவதற்கு, நீங்களே... பணம் கட்டி உறுப்பினராவது ஆச்சரியமாக உள்ளது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனி அல்லது ஞாயிறு அதிகாலையில் போய் வாங்கிவிட்டு வந்துவிடுவேன். 10 மணிக்கு மேல் போனால், இரண்டு மடங்கு நேரம் செலவழிக்கவேண்டியிருக்கும். அதனால் காலையிலேயே எல்லாம் முடித்துவிடுவேன். இல்லாவிட்டால் மூடுவதற்கு முன் சென்று வாங்குவேன். ஒன்றிரண்டு பொருட்கள் எனில் வேலையால் வரும்போது வாங்கும் பழக்கமும் உண்டு.

தமிழச்சி, கனடாவில் ஞாயிற்றுக்கிழமை எல்லா கடைகளூம் திறந்திருக்குமா? ( உணவுப் பொருள், உடுப்பு )

இங்கு, ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையம், உண்வகங்களை தவிர்ந்த எல்லா கடைகளும் பூட்டியிருக்கும்.

வீட்டில் உப்பு,புளி, சீனி போன்றவை முடிந்திருந்தால்..... திங்கள் கிழமை மட்டும் சமாளிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை கடைகள் பூட்டியிருப்பதால்....... வீதிகள் வாகனம் இல்லாமல் அமைதியாக இருக்கும். அதை விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, அவர்களின் கடையில் (Costco) பொருட்கள் வாங்குவதற்கு, நீங்களே... பணம் கட்டி உறுப்பினராவது ஆச்சரியமாக உள்ளது. :rolleyes:

ஆனால் Costcoவில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்..! அதனால் வருடத்துக்கு ஒருமுறை செலுத்தும் 50 டொலர்களை பொருட்களின் விலை மலிவில் சேமித்துவிடலாம் (அதிகளவில் பொருட்களை வாங்கினால்..! :wub: ) எல்லாம் ஒரு கேம்தான்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை கடைக்கும் பழக்கம் உள்ளவன்.அத்துடன் சும்மா அலைந்தும் திரிவேன்.ஆனால் மனைவியுடன் போனால் எப்படா வெளியில வருவன் என்று இருக்கும். :rolleyes:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொதியை வெளியிலை காட்டினால் என்ன நடக்கும் கு.சா. அண்ணை.......

அவை பிறகு கோவிப்பினமெல்லே :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. இந்த சம்சாரிகளின் சாமான் வாங்கிற பாடே தனிப்பாடு போல இருக்கு. வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருகுது. :unsure:

நாங்க எல்லாம்.. அதிகம்.. போற இடத்தில குந்தினமா.. ஓடர் கொடுத்தமா.. சாப்பிட்டமா.. போனமா என்றிருக்கிறது. வீட்டில சமைக்கிறது என்றால்.. ஆன்லைனில புக் பண்ணினா கொண்டு வந்து தாறான்.. அதையும் மீறி அவசியம் என்றால் மட்டும் சுப்பர் மார்க்கெட்.. மாதத்தில ஒருக்கா...! பாண்.. பால்.. .. முட்டை... போன்ற அன்றாட தேவைகளை மட்டும் அருகில் உள்ள மினி சுப்பர் மார்க்கெட்டில் வாரத்துக்கு ஒருக்கா வாங்குவன். இதுக்கெல்லாமாவா மனிசன் லிஸ்டு.. லிப்டு என்று.. மிணக்கடுவான்... அடிபிடிப்படுவான்.

(தமிழ் கடையில் சாமான் வாங்கிறதில்ல.. அங்கு காலாவதியான ஸ்ரிகர்களை கழற்றி கழற்றி ஒட்டிறாங்கள்.. இல்ல ஒன்றுக்கு மேல ஒன்று ஒட்டி விக்கிறாங்கள். முதல் நாள் பாழடைஞ்ச கோவா அடுத்த நாள் புதிசா இருக்கும்.. எப்படி என்று கேட்கிறீங்களா.. அழுகின.. இலைகளை ஒடிச்சிட்டு.. நடுவில புதிசா இருக்கிற மிச்சத்தை வைப்பாங்க... விற்பாங்க.)

இதில கொஞ்சப் பேருக்கு மனிசிமார் தானாம் லிஸ்டு போட்டு கொடுக்கனும்.. கொடுமைடா சாமி. இவைக்கு சுயமா ஒரு தேவையும் இருக்கிறதில்லையோ..???! :D:lol:

Edited by nedukkalapoovan

ஐயோ ஐயோ.. இந்த சம்சாரிகளின் சாமான் வாங்கிற பாடே தனிப்பாடு போல இருக்கு. வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருகுது. :lol:

.)

தனிய இருக்கேக்க நாங்களும் உங்களைப்போல கெத்தாப்பா இருந்தனாங்கதான் நெடுக்ஸ். உங்களுக்கும் ஒரு காலம் வராமலா போகும். அப்ப வாயே பேசாம நாய்க் குட்டி மாதிரி நாலுகால் பாய்ச்சல்ல கடைகளுக்கு ஓடுப்பட்டு திரிவீங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாய் குட்டி என்றால் என்ன கேவலமா..??! அதுக்கு இருக்கிற துணிச்சல் கூட கலியாணம் பண்ணின ஆம்பிளையான்களுக்கு கிடையாது போல..! இதெல்லாம் ஒரு பிழைப்பு. :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்! உப்பிடிச் சண்டை பிடிக்க ஆசைப்பட்டுப் போய்த்தான் கடை,கடையா சாமான் வாங்க ஏறி இறங்கிறம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ

ஐயோ

மாறி மாறி மேலும் கீழுமா

மூச்சு வாங்க

கடிபடுகிற சுகம் இருக்கே...

அதை எந்த வார்த்தைக்குள் அடக்குவது...................... :lol: :lol: :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக வாரத்தில் இருமுறையாக இருக்கும். தமிழ் கடைக்கு ஒருமுறையும் மற்றைய கடைக்கு இன்னொரு தடவையாகவும் இருக்கும் ஒரே தடவையில் இரு கடைகளுக்கும் செல்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு வண்டிலில் சாமான் வாங்கி வருவது என்றால் ....... :D

இனிப்பு பொருட்களா, நொறுக்குத்தீனியா, சமையல் பொருட்களா...... விசுகு.

புத்தகம் கொப்பியிலிருந்து

இனிப்புப்பொருள்,,,,

பாடசாலையால் வந்ததும் கொறிக்கும், நொறுக்குத்தீனி,,,, பண்டங்களிலிருந்து

பெண் பிள்ளையாயின் அலங்காரப்பொருள்

ஆண் பிள்ளையாயின் வாசனை திரவியம் வரை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. இந்த சம்சாரிகளின் சாமான் வாங்கிற பாடே தனிப்பாடு போல இருக்கு. வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருகுது. :wub:

நாங்க எல்லாம்.. அதிகம்.. போற இடத்தில குந்தினமா.. ஓடர் கொடுத்தமா.. சாப்பிட்டமா.. போனமா என்றிருக்கிறது. வீட்டில சமைக்கிறது என்றால்.. ஆன்லைனில புக் பண்ணினா கொண்டு வந்து தாறான்.. அதையும் மீறி அவசியம் என்றால் மட்டும் சுப்பர் மார்க்கெட்.. மாதத்தில ஒருக்கா...! பாண்.. பால்.. .. முட்டை... போன்ற அன்றாட தேவைகளை மட்டும் அருகில் உள்ள மினி சுப்பர் மார்க்கெட்டில் வாரத்துக்கு ஒருக்கா வாங்குவன். இதுக்கெல்லாமாவா மனிசன் லிஸ்டு.. லிப்டு என்று.. மிணக்கடுவான்... அடிபிடிப்படுவான்.

---------

எங்களுக்கு உங்களைப் பார்க்கத்தான்.... சிரிப்பாய் இருக்குது. :D

ஆன்லைனிலை..... பயத்தம் பணியாரம், சீனி அரியாரம், பக்கோடா போன்ற நொறுக்குத் தீனி எல்லாம் கிடைக்குமா?

வீட்டுச் சமையலுக்கும், கடைச்சமையலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை நினைக்க பரிதாபமாக இருக்குது.

இன்னும் எத்தினை நாளைக்கு பாணோடை காலம் தள்ளப் போகிறீர்கள் என்று, நாங்க பார்க்கத்தனே... போறம். :lol:

இந்த பாண் இருக்கும் வரை :wub:

நாய் குட்டி என்றால் என்ன கேவலமா..??! அதுக்கு இருக்கிற துணிச்சல் கூட கலியாணம் பண்ணின ஆம்பிளையான்களுக்கு கிடையாது போல..! இதெல்லாம் ஒரு பிழைப்பு. :D:lol:

இது துணிச்சல் அல்ல. விளையாட்டு.

நாய்க்குட்டி பூனையுடன் நன்றாகவே விளையாடுகின்றது. அதுவும் ஒரு சுகம்தானே. தனது திறமையை வளர்த்துக்கொள்கிறது.

நாய்க்கு உடை அணியும் எஜமானியம்மா தனக்கு உடை அணிய மறந்ததேன்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு உடை அணியும் எஜமானியம்மா தனக்கு உடை அணிய மறந்ததேன்? :D

அப்பத்தானே நெடுக்காலபோவன் ஃபேவரிட் பண்ணி ரசிக்க ஏலும்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.