Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்??

வணக்கம். எல்லோருக்கும் தமது உடம்பை கவனமாக நோய் நொடி வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆசை இருக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள். இன்னும் சிலர் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பார்கள். ஆனால் இந்த இயந்திர உலகில் வாழும் நாம் எவ்வளவு தூரம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.நன்றி.

நான் கிழமை நாட்களில் வேலையின் பின்னர் 3 நாட்களாவது உடற்பயிற்சி நிலையத்தில் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செலவளிப்பேன்.சனி, ஞாயிறு அதிகாலையில் யோகா செய்வதுண்டு.

  • முடிந்த வரை படியால் ஏறுவது ( no elevators/lifts)
  • வாகனத்தில் இருந்தபடி சாப்பிடுவது ( no drive thru)

:D:D

மற்றும்படி வீட்டில் இரண்டு பத்து இறாத்தல் எடை தூக்கிகள் இவற்றை ஒரு பத்து நிமிடங்கள் நாளொன்றுக்கு தூக்குவது.

வாரத்தில் 3 நாட்கள் உடற்பயிற்சி நிலையத்தில் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். நான் இருந்தபடியே வேலை செய்வதால் 3 நாட்கள் போதாது என உணர்கிறேன். கூட நாள் செல்வதற்கு நேரம்தான் பிரச்சனையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் 3 நாட்கள் உடற்பயிற்சி நிலையத்தில் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். நான் இருந்தபடியே வேலை செய்வதால் 3 நாட்கள் போதாது என உணர்கிறேன். கூட நாள் செல்வதற்கு நேரம்தான் பிரச்சனையாக உள்ளது.

நானும் 3 நாட்களுக்கு மேல் போகத்தான் முயல்கிறேன்.வேலைப்பளுவால் சில வேளைகளில் சாத்தியப்படுவதில்லை.

மற்றும்படி வீட்டில் இரண்டு பத்து இறாத்தல் எடை தூக்கிகள் இவற்றை ஒரு பத்து நிமிடங்கள் நாளொன்றுக்கு தூக்குவது.

நல்ல விடயம்.நானும் 2 எடை தூக்கிகளை வாங்கி வந்து வீட்டில் செய்வோம் என வாங்கி இருந்தேன். வாங்கிய அன்று மட்டும் தான் அவை என்னால் தூக்கப்பட்டது. :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உடற்பயிற்சி செய்ய ஆசை தான் ஆனால் எனக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் கொஞ்சநேரம் செய்யவே கால் கை எல்லாம் பயங்கரமாக நோகும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு 5 நிமிஷம் செய்தால் ஒரு மணித்தியாலத்திற்கு அவஸ்தையா இருக்கும்.அதாலை ஒரு பத்து நிமிஷம் நடக்கிறதோடை சரி.முந்தி பல்கலைகழகத்திலை இருக்கேக்கை ஒவ்வொரு நாளும் ஜிம்முக்கு போய் பின்னர் மைதானத்தில் ஓடுவேன்(ஆறுதலாகத்தான்).

  • கருத்துக்கள உறவுகள்

எனது உடற்பயிற்சி வேக நடை. பக்கத்தில் பெரிய வயல் வெளி உள்ளது. அதற்குள் நடப்பதெற்கென்று பாதை போட்டுள்ளார்கள்.

கிழமையில் மூன்று, நான்கு நாட்களாவது போவேன். இயற்கையை ரசித்த படி நடப்பது மனதுக்கு இதமாக இருக்கும்.

வீட்டில் இருந்து, உடற் பயிற்சி செய்வதில் எனக்கு ஏனோ.... விருப்பமில்லை.

ஆறு மாதத்திற்கு முன்பு வரை துவிக்சக்கர வண்டி ஓட்டம் செய்தேன். 13.gif

யோகாசனம் செய்ய வேண்டும் என்று, நீண்ட நாட்கள் ஆசையால்.... ஒரு யோகா நிலையத்தில் பெயர் பதிந்து.... வாற கிழமை போவோம் என்று சொல்லியே.... ஒரு வருடமாகி விட்டது.

ஒரு யோசனை வந்தால்.... Nordic Walking ம் செய்வதுண்டு.

865c1dd4cd.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று கேட்காமல் எப்படியான உடற்பயிற்சி செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டால் நல்லா இருக்கும்..! :)

எனக்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதில் பெரிதாக விருப்பமில்லை..! முதலில் ஒரு எலிப்ரிகல் வாங்கினேன்..! அது கொஞ்சநாள் உழக்கி முடிஞ்சு பிறகு அலுத்துப் போச்சு..! :D பிறகு போஃபிளெக்ஸ் எண்டொரு சாமானை ஒரு வருசத்துக்கு முன்னால வாங்கி செய்து கொண்டிருந்தன்..! :rolleyes:

பிறகு கணினியில் கனநேரம் குந்தியிருந்து தோள்பட்டையில் கொஞ்சம் நோ வந்ததில இருந்து ஒரு 3 மாதமாக தடா..! எலிப்ரிகலும் ஓடுவதில்லை. ஏனெண்டால் MP3 பிளேயர் பழுதாப் போச்சு..! :D

இப்பிடி ஏதாவது காரணத்தைச் சொல்லி செய்யாமல் கட் அடிக்கிறதுதான் நம்ம வேலை..!

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று கேட்காமல் எப்படியான உடற்பயிற்சி செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டால் நல்லா இருக்கும்..! :)

எனக்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதில் பெரிதாக விருப்பமில்லை..! முதலில் ஒரு எலிப்ரிகல் வாங்கினேன்..! அது கொஞ்சநாள் உழக்கி முடிஞ்சு பிறகு அலுத்துப் போச்சு..! :D பிறகு போஃபிளெக்ஸ் எண்டொரு சாமானை ஒரு வருசத்துக்கு முன்னால வாங்கி செய்து கொண்டிருந்தன்..! :rolleyes:

பிறகு கணினியில் கனநேரம் குந்தியிருந்து தோள்பட்டையில் கொஞ்சம் நோ வந்ததில இருந்து ஒரு 3 மாதமாக தடா..! எலிப்ரிகலும் ஓடுவதில்லை. ஏனெண்டால் MP3 பிளேயர் பழுதாப் போச்சு..! :D

இப்பிடி ஏதாவது காரணத்தைச் சொல்லி செய்யாமல் கட் அடிக்கிறதுதான் நம்ம வேலை..!

:D

சாட்டுக்கு சாவில்லை. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலும் அதற்கான வசதிகளைச்செய்துள்ளேன்

நீச்சல் தடாகத்துக்கும் பதிந்துள்ளேன்

வாங்கியவுடன் தொட்டதுடன் சரி

நீச்சல் தடாகமும் அப்படித்தான்.

நடக்கவிருப்பம்

ஆனால்காலையில் வருவது கார்

இரவு போவது கார் என்பதால் ஒரு நாளைக்கு 50 மீற்றர் கூட நடப்பதில்லை.

ஆனால் விருப்பமும் அதற்கான தேவையுண்டு

ஆனால் நேரமில்லை.

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய எழும்பினா காலைக்கடனை முடித்துவிட்டு தினமும் 15 நிமிசம் யோக ஆசனம் செய்வன்.கோடையெண்டா எப்பன் ஓடுவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழமையிலை இரண்டு நாளைக்கு யோகாசனம் செய்வன்.

முதலாவதாய் காலைக்கடன் எல்லாத்தையும் (மத்தியானம் 12.00 மணி)முடிச்சுப்போட்டு.....

ஒரு அரைமணித்தியாலம் தலைகீழாய் நிப்பன்....அதுக்குப்பிறகு ...ஒற்றைக்காலிலை...(இடம் வலம்) தலா ஒரு கால் மணித்தியாலம் நிப்பன்...இப்பிடியே இன்னும் கொஞ்சம்....

மற்றும் படி வேர்த்துவிறுவிறுக்க உடம்பை போட்டு முறிக்கிறதிலை எனக்கு பெரிசாய் உடன்பாடில்லை கண்டியளோ

சாப்பாட்டிலையும் பெரிசாய் கரவுவஞ்சகம் வைக்காமல் தான் சாப்பிடுறனான் அதுக்காக காஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி ஒரேயடியாய் அமுக்குறதுமில்லை

அதது அப்பப்ப :unsure:

பொதுவாக படிகள் ஏறி இறங்குவதோடு சரி. வேலைத் தளம் மூன்றாவது மாடியில், கிட்டத்தட்ட 100 படிகள் (குறைந்தது 4, 5 தரம் ஏறி இறங்கவேண்டும்) அதைவிட subway கிட்டத்தட்ட120 படிகள் (2 trains மாறிப் போகவேணும்)

மனநிலையைப் பொறுத்து ஜோக்கிங் போவேன். போட்டு வந்ததும் ஒரு புத்துணர்வு வந்தது போல் இருக்கும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் உடற்பயிற்சி செய்வதில்லை ஆனாலும் நான் ஸ்லிமாகத்[மெலிதாகத்]தான் இருப்பேன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எல்லாம் அட்டவணை மாதிரி ஒழுங்காய் .... ! இப்ப எல்லாம் தலை கீழாய் மாறிவிட்டது.

மாலையில் நேரம் இருக்கும் போது மட்டும் ஆத்தங்கரை ஓரமாய் (பக்கத்தில் 1 கி. மீ. தூரத்தில் ஆறும், காடும், மைதானமும் உள்ளது). சாதரணமாக நடந்து 2 ,3 கி. மீ. நடப்பேன். அவ்வளவுதான் . இனியாவது கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உடற்பயிற்சி செய்வதில்லை ஆனாலும் நான் ஸ்லிமாகத்[மெலிதாகத்]தான் இருப்பேன் :huh:

படம் பாத்தால்த்தான் நான் நம்புவன் :huh:

ஒவ்வொருவரும் தங்கள் நேரம், வசதிக்கேற்றவகையில் தினமும், தினமும் வசதிப்படாவிட்டால் இயலுமான நாட்களில் உடற்பயிற்சி செய்வது முக்கியம். இல்லாவிட்டால் வயக்கெட்டு போகும், உடல் அழகு, தோற்றம், கம்பீரம்.. இவையெல்லாம் நலிந்துவிடும். நான் இயலுமான அளவு தினமும் 150 push ups, 20 குந்தி எழும்புதல், தலைகீழாக நிற்றல்.. இவை, இத்துடன் தியானமும் செய்வது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது நன்றாக நடப்பது. ஒவ்வொன்றையும் செய்யும்போது அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து செய்தால் நமக்கு சலிப்பு ஏற்படாது.

இரண்டு நாட்கள் ஒரு மணிநேரத்திற்கு ஸ்பின்னிங் (சைக்கிள் ஓட்டுதல்), மூன்று நாட்களுக்கு தொடை, மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கான பாரங்தூக்கி உடற்பயிற்சிகள் அரைமணிநேரம் செய்வேன். அதற்கு முன்னர் பதினைந்து நிமிடங்களுக்கு, மிதமான சைக்கிளிங். இவை ஒன்றுவிட்டு ஒரு நாளாக இருக்கும். இதுதான் இப்போதைய அட்டவணை. அதிகநேரம் உடற்பயிற்சிகள் செய்வதால் மூட்டுவலிகள், பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் உடற்பயிற்சிகளை மிதமாக வைத்துக் கொள்வேன். இவற்றோடு, தினமும் காலை அரைமணிநேரம் தியானம். முடிந்தால் மாலையும் செய்வதுண்டு. இத்தியானம் செய்யும்போது, வெறும் வயிற்றோடு செய்யவேண்டுமென்பதால் சிலநேரங்களில் மட்டுமே மாலையில் செய்ய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காலை

கிழமைக்கு 4 அல்லது 5 தடவைகள் காலையில் யோகா பயிற்சி. அதைத் தொடர்ந்து muscle training.

மாலை

இரண்டு அல்லது மூன்று நாட்கள் உடற்பயிற்சி நிலையம்.

அவை தவிர்ந்த நாட்களில் ஓடுவது வழக்கமாய் உள்ளது. (காற்று, மழை. பனிக்குளிர் சந்தர்ப்பகளில் இவற்றை தவிர்ப்பதுண்டு.)

  • கருத்துக்கள உறவுகள்

தண்டால் எடுக்கம் வழிமுறைய தோழர்கள் சொல்லி குடுக்கவேணும் ... எனக்கு அந்தா எலி போல சும்மா தலைய இழுத்து இழுத்து சில ர் செய்வதை போல விருப்பம் இல்லை ... மொத்த பாடி ஸ்ரந்தும் கைகளில் வாங்கி நேராக செய்யவேணும்... இதான் இனி வருங்காலத்திற்கு உபயோகமாக இருக்கம் என நினைக்கிறேன் இந்த தோழர் அனுபஸ்தர்கள் எடுத்து விடுங்கோ உங்கட தண்டால் அணுபவங்களை.... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

படம் பாத்தால்த்தான் நான் நம்புவன் :lol:

அண்ணா என்ட படத்தை நான் உங்களுக்கு அனுப்ப பிறகு உங்கள் குடும்பம் பிரிய எனக்கு ஏன் தேவையில்லாமல் உங்கள் குடும்பத்தை பிரித்த பாவம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா என்ட படத்தை நான் உங்களுக்கு அனுப்ப பிறகு உங்கள் குடும்பம் பிரிய எனக்கு ஏன் தேவையில்லாமல் உங்கள் குடும்பத்தை பிரித்த பாவம் :lol:

படம் அனுப்பினால் குடும்பம் பிரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

படம் அனுப்பினால் குடும்பம் பிரியுமா?

குமாரசாமியண்ணை வீட்டில ஆளைவிட்டால் காணும் என்கிற நிலை..

பொல்லைக்கொடுத்து அடி வாங்கியது போல்

படத்தை கொடுத்து

அந்தம்மாவை காப்பாத்த போயினம்

ஏதோ நல்லது நடந்தால் சரி ....குமாரசாமியண்ணைக்கு..........? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.