Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களை வைத்து சூதாடாதீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் இன்றைய போக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஆதவன் விடுத்த வேண்டுகோள்

ஒலிப்பதிவினை கேட்க

Edited by nirmalan

இது புது வகையா இருக்கண்ணை... நல்ல முயற்ச்சி...!

எழுதிக் கொடுத்தை திக்கித் திக்கித் வாசிக்கும் நிலையில் இருக்கும் ஒருவரின் கவலைக் கிடமான வெளியீடு.சிறிலங்காப் புலனாய்வால் இத் தளமும் நெர்டோவும் நடத்தப்படுகிறது என்பதை மேலும் மேலும் இது உறுதிப்படுத்துகிறது.தெளிவாக எதிர்ப்புரட்ச்சி அல்லது உளவியற் போரின் அங்கமாகவே கேபி பாவிக்கப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது.இனியும் கேபியையும் நேர்டோவையும் நம்புகிறவ்ர்கள் ஒன்றில் அப்பாவிகள் அல்லது வேண்டுமென்றே நித்திரை கொள்வதைப் போல் நடிக்கிறார்கள் என்றெ எண்ண வேண்டி உள்ளது.

சீச்சி... இது சுத்தமான நெய்யாலை தயாரிக்க பட்ட ஒறிஜினல் அல்வா அண்ணோய்... நிறத்திலை முன்னபின்ன இருந்தாலும் தரத்திலை அருமை எல்லோ...

சிங்கள ஆமியோடை சேந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய பாடுபடும் நேட்ரோ ஆக்களை குறை சொல்லலாமோ...?? சிங்கள ஆமியை விட நல்லவை நீங்கள் பாக்க ஏலுமோ...???

நாளைக்கு ஒரு பெண்ணின் கையை பிடிச்சு எங்கட ஆமி நண்பர்கள் இழுத்தால் அவவின் நல்வாழ்வுக்கும் நேற்றோ அமைப்பு பாடுபடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...

Edited by தயா

காணொளியை முழுமையாக பார்த்தேன். இங்கு நேரடி இணைப்பு கொடுக்கலாம் என்று பார்த்தேன். காணொளியில் காண்பிக்கப்படும் காட்சிகள் காரணமாக இணைக்கவில்லை.

இது புது வகையா இருக்கண்ணை... நல்ல முயற்ச்சி...!

நீங்களும் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டு பார்க்கவேண்டியது. :D

எழுதிக் கொடுத்தை திக்கித் திக்கித் வாசிக்கும் நிலையில் இருக்கும் ஒருவரின் கவலைக் கிடமான வெளியீடு.சிறிலங்காப் புலனாய்வால் இத் தளமும் நெர்டோவும் நடத்தப்படுகிறது என்பதை மேலும் மேலும் இது உறுதிப்படுத்துகிறது.தெளிவாக எதிர்ப்புரட்ச்சி அல்லது உளவியற் போரின் அங்கமாகவே கேபி பாவிக்கப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது. இனியும் கேபியையும் நேர்டோவையும் நம்புகிறவ்ர்கள் ஒன்றில் அப்பாவிகள் அல்லது வேண்டுமென்றே நித்திரை கொள்வதைப் போல் நடிக்கிறார்கள் என்றே எண்ண வேண்டி உள்ளது.

lack of professionalism? professionalismஇன் அடிப்படையில் பார்க்கும்போது வன்னியில் வாழ்ந்த முன்னாள் போராளி ஒருவரின் பேச்சை clean cut உருத்திரகுமாரின் பேச்சுடன் ஒப்பிடமுடியுமா? நீங்கள் கூறுவதுபோல் இக்காணொளியின் பின்புலம் காணப்பட்டாலும், தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் ஆயிரத்தில் ஒருவர்கூட இவ்வாறான உணர்வியலை, கருத்தியலை கொண்டிருக்க மாட்டார்கள் என்று உங்களால் கூறமுடியுமா?

சீச்சி... இது சுத்தமான நெய்யாலை தயாரிக்க பட்ட ஒறிஜினல் அல்வா அண்ணோய்... நிறத்திலை முன்னபின்ன இருந்தாலும் தரத்திலை அருமை எல்லோ...

அல்வா கிண்டுபவர்களுக்கே அல்வாவா? :lol:

+++

மாவீரர் தினம் அவரவர் உணர்வு சார்ந்தவிடயம். மேலுள்ள காணொளி அல்லது ஒலிப்பதிவு பற்றி கூறுவதற்கு வேறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் அனுமதிக்க முடியாது எனில் யார் நீங்கள் எங்களை(புலத்தில் உள்ளவர்களை) அனுமதிக்க?? எப்படி ஈழத்தில் வாழும் மக்கள், புலம் பெயர் மக்கள் என இவரால் பிரித்து பேசமுடிகிறது? ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வன்னி மக்களை காப்பாற்றும் படி வீதி வீதியாக குளிரும் மழையிலும் மேற்கு நாடுகளை இறைஞ்சியதை தொலைகாட்சியே பார்க்கவில்லையா? அல்லது நண்பர்கள் மூலம் அறியவில்லையா?

கே.பியின் கூற்றை ஏன் அனுமதிக்க வேண்டும்??

கே.பியிடம் தலைவர் தலைமை பொறுப்பை ஒப்படைத்தால் தலைவரைப்போல் இவரால் செயற்படுகிறாரா? கே.பியின் மாவீரர் உரை எங்கே?

எழுதி கொடுத்து ஒருவரால் வாசிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தவர்களையும்,உருத்திரகுமாரனையும் சாடுகிறார்.நிச்சயமாக அரசின் கைக்கூலி ஒருவரால் தான் உரை எழுதப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தை தமிழர்கள் யாரும் எங்கும் கொண்டாடலாம்.அது அவர்களின் உரிமை. புலத்தில் கொண்டாடக்கூடாது என்ற தொனியில் சொல்ல இவர் யார்? பல மாவீரர்களது உறவினர்கள்,நண்பர்கள் புலத்தில் வாழ்கிறார்கள் என்பதை ஆதவன் அறியாதவரா?

மார்க்கத்தில் மாவீரர் நாள் வைப்பதால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? அங்கு போராட்டத்துக்கு தாலிக்கொடிகள் சேர்க்கப்படுகின்றனவா?

மாவீரர் தினத்தை தமிழர்கள் யாரும் எங்கும் கொண்டாடலாம்.அது அவர்களின் உரிமை. புலத்தில் கொண்டாடக்கூடாது என்ற தொனியில் சொல்ல இவர் யார்? பல மாவீரர்களது உறவினர்கள்,நண்பர்கள் புலத்தில் வாழ்கிறார்கள் என்பதை ஆதவன் அறியாதவரா?

மார்க்கத்தில் மாவீரர் நாள் வைப்பதால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? அங்கு போராட்டத்துக்கு தாலிக்கொடிகள் சேர்க்கப்படுகின்றனவா?

தாயகத்திலை வெளிப்படையாக கொண்டாட விடாமல் தடுத்த நிகழ்வை புலத்திலை நடக்கிறதை கொச்சைப்படுத்தியாவது எஜமானார்களை மகிழ்ச்சி படுத்த நினைக்கினம் விடுங்கோவன்...

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நிகழ்வை புலத்தில் நடக்கவிடாமல் தடுப்பதும் நா.க.அரசின் தலைவர் மீது சேறடிப்பதும் கே.பியை முன்னிலைப்படுத்துவதும்தான் இதன் நோக்கம்.இது சிறிலங்கா அரசின் திடடமிட்ட வேலை என்பது புலனாகின்றது.கடந்த முறை ராமின் மாவீரர் தின உரைக்கு நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதற்கு இலன்டனில் நடந்த மாவீரர் நாள் பெரும் சாட்சியாக உள்ளது.ஏனைய நாடுகளிலும் நன்றாக நடந்திருக்கும் என்பது உறுதியாய் இருந்தாலும் இலன்டனில்தான் சிறிலங்காவின் உளவாளிகளும் கே.பியின் விசுவாசிகளும் மாற்றுக் கருத்து குழப்பவாதிகளும் அதிகம் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த முறை ராமின் மாவீரர் தின உரைக்கு நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்

இலன்டனில்தான் சிறிலங்காவின் உளவாளிகளும் கே.பியின் விசுவாசிகளும் மாற்றுக் கருத்து குழப்பவாதிகளும் அதிகம் இருக்கிறார்கள்.

இந்த நேர்டோலங்கா என்பது கூட இலண்டனில் உள்ள ஒருவர் பெயரில் தான் பதியப்பட்டுள்ளது.

http://who.godaddy.com/WhoIs.aspx?domain=nerdolanka.org

****

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இம்முறை கேணல் ராமை காணவில்லை அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதோ?

சிறிலங்காப் புலனாய்வாளர்களால் இந்த அறிக்கையை வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது நிலையை இவ்வாறு திக்கித்திக்கித் வாசித்து தெளிவுபடுத்தி உள்ளார்.அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அவ்வாறெனில் மற்றைய போராளிகள் பற்றிச் சொல்ல வேண்டுமா?இது தான் போராளிகளின் எண்ணம் எனில் ஏன் அவர்களை சரவதேச தொண்டு நிருவனங்களோஓ ஊடகங்களோ பார்க்க அனுமதிகிறார்கள் இல்லை? கேபியைக் கூட ரோவின் ஊதுகுழலான பிபிசி தமிழ்ச்சேவை கூட பேட்டி காண முடியாது இருக்கிறதே?

அப்போராளிக்கு மேல் இங்கு கொண்டு வந்து இவற்றை கொட்டுபவர்களும், யாருக்குத்தெரியும் சிங்கள புலனாய்வுத்துறையின் *கேணல்* நிலை அதிகாரிகளாக இருக்கக்கூடும்!!36_1_72.gif

... நேற்றைய தினம் *கேபி கும்பல்*, தாமும் இன்னொரு சிங்களத்துடன் இணைந்திருக்கும் ஒட்டுகுழு என உத்தியோர்கபூர்வமாக அறிவித்திருக்கிறது!!! ... கடந்த ஓரு வருடமாக புனர்வாழ்வு வேடமிட்டது கலைந்து விட்டது!!! ... இங்கிடப்பட்ட தலைப்பு இன்று, எல்லா ஒட்டுக்குழுக்களின் ஊடகங்களிலும்!!!!!

... இறுதியாக தம் சுயரூபத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள், கேபி ஒட்டுக்குழுவிற்கு!!!36_17_4.gif

அண்ணக்கு விளங்கேல யார் மாவீரர்களென்று.குளிருக்க நின்று கொடிபிடித்த நாங்களா? சும்மா துவக்கோட ஓடித்திரிந்த நீங்களா எனறு.

அண்ணக்கு விளங்கேல யார் மாவீரர்களென்று.குளிருக்க நின்று கொடிபிடித்த நாங்களா? சும்மா துவக்கோட ஓடித்திரிந்த நீங்களா எனறு.

இல்லை அண்ணை ஒரு காலத்திலை சுதந்திர பறவையள் பெண் போராளிகளை யாழ் கோட்டையில் இருந்து ஆமி வெளியிலை வராமல் அடிபட விட்டு போட்டு மணிக்கூட்டு வீதி ஆஸ்பத்திரி வீதி சந்தியிலை மண் மூடை அடுக்கி வைச்சு அரசியல் செய்த ஆக்கள் தான் அண்ணை மாவீரர்கள்...

ஆமி வெளியிலை வந்தால் தீர்க்க தரிசமாய் தலைதெறிக்க ஓடி ஒளிஞ்சு உயிரை தக்க வைச்சு இண்டைக்கும் நிண்டு அரசியல் பேசுற ஆக்கள் தான் அண்ணை வீரர்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த முறை ராமின் மாவீரர் தின உரைக்கு நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்ற மாதிரி, நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் அதன் பிரதமர் உருத்திரகுமாருக்கும் KPயும் அவரது விசுவாசிகளும், சேரமானும் அவரது காதலர்களும் நன்றாக விளாசுகின்றார்கள்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்ற மாதிரி, நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் அதன் பிரதமர் உருத்திரகுமாருக்கும் KPயும் அவரது விசுவாசிகளும், சேரமானும் அவரது காதலர்களும் நன்றாக விளாசுகின்றார்கள்.

இதனை சேரமான்கள் புரிவார்களா???? ... கருத்து வேறுபட்டு, வேற்றுத்திசையில், இறுதி இலக்கு ஒன்றே என்று செல்பவர்களை தயவு செய்து எதிரியுடன் கொண்டு சென்று சேர்க்காதீர்!!!! ... என்ன கவலை தரும் விடயம் என்றால் ... இன்னும் சேறள்ளிக்கொட்டுவதும், குழி பறிப்புகளும் நிற்கவில்லை/ஓயவில்லை!!!!!!!!!!!!!!!!! ... நிறுத்துங்கள் தயவு செய்து ... அந்த மண்ணில் உறங்கும் மாவீரர்களுக்காவெனிலும்!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிட்னியிலும் மாவீரர் நாள் மிகுந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது. ஏர்மிங்டன் சதுக்கத்தில் மாலை ஆறுமணிக்கு ( சனியிரவு) ஆரம்பித்த நிகழ்வுகள் அகவனக்கம், மாவீரர் குடும்பங்களின் அஞ்சலி, பொதுமக்கள் அஞ்சலி, மாவீரர் நாள் உரை, சிறுவர்களின் தாயக நிகழ்வு நாடகம், தாயத்துத் திரைப்படம் என்று ம்கிஉந்த உணர்வுபூர்வமாக நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.

தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு உழப்பட்டு, உருத்தெரியா அழிக்கப்பட்ட வரும் இன்னாட்களில் இங்கே சிட்னியைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்கள் தமது மாவீரச் செல்வங்களின் மாதிரிக் கல்லரைகளுக்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் செய்த அஞ்சலி, மனதை நெகிழவைக்க, பின்னால் ஒலித்துக்கொண்டிருந்த "உங்கள் உறவுகள் வந்திருக்கிறோம், ஒருமுறை கண்திறந்து பாருங்கள் ..." எனும் மாவீரர் கீதம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

எனது தம்பியின் படத்தை அங்கே காணவில்லை. ஆனால் அங்கிருந்த அனைவரும் என்னுறவுகள் தான். பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் சமாதிக்கு முன்னால் சில நிமிடம் நின்றிருந்தேன். இழப்புக்களின் ரணம் இன்னும் தீரவில்லை.

மாவீர்களை நேரடியாக, மறைமுகமாக, நுணுக்கமாக கேலிபண்ணும் ஒருசில ஈனர்களும் இருக்கிறார்கள்.

சொறிநாய்களின் குரைப்பை பார்த்து சூரியன் ஒழிந்தோடுவதில்லை.

ஒரு அணுகுமுறை : புலபெயர் தமிழர் சமூகமும் தமிழகமும் மாவீரர் தினம் கொண்டாடுவதை விட்டன.

சிங்களம் : ஈழத்தமிழர்கள் போல் உலகத்தமிழர்களும் எங்கள் "மனிதாபிமான போருக்கு" முழு ஆதரவு தந்துள்ளனர். அத்துடன், ஐக்கிய சிங்களத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மற்றைய அணுகுமுறை : புலபெயர் தமிழர் சமூகமும் தமிழகமும் மாவீரர் தினம் கொண்டாடுவதை பெரியளவில் தொடருகின்றன.

சிங்களம் : புலிப்பயங்கரவாதம் இன்னும் ஓயவில்லை. புலம்பெயர் நாடுகளில் இவர்களை நாம் இனம் கண்டுள்ளோம். இவர்களை கைது செய்ய உதவுங்கள்..

சர்வதேசம் / புலம் பெயர் நாடுகள் : ஏன் அங்கு இன்னும் அரசியல் தெரிவு தமிழ் மக்களுக்கு இல்லை? ஏன் தமிழ் மக்கள் இன்னும் சொந்த நிலத்தில் சுதந்திரமாக வழ முடியாமல் உள்ளது? ஏன் மனித உரிமைகள் இன்னும் மீறப்படுகின்றன?

ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு விடிவுக்கு ஒரு கதவு திறந்து விடப்படிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.