Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன்: மகிந்தவின் "வோட்டர்லூ" !

Featured Replies

லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கக் கிடைத்த அனுபவத்தை அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த 'வோட்டர்லூ" என பிரபல ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் வெற்றிகளையே சந்தித்துவந்த மகிந்த ராஜபக்க்ஷவின் இறுமாப்புக்கக் கிடைத்த பலத்த அடியாக லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்துள்ள நிலையிலேயே இவ்வாறான கருத்தை அவர் முன்வைத்திருக்கின்றார்.

லண்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் யூனியனில் வியாழக்கிழமை மகிந்த நிகழ்த்தவிருந்த விஷேட உரை இறுதி வேளையில் இரத்துச் செய்யப்பட்டபோது மிகவும் சங்கடமான ஒரு நிலை மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் எதிரணியினர் மீது ஆளும் தரப்பினர் பாய்ந்துவிழுந்துள்ளார்கள்.

பெருமைவாய்ந்த ஒக்ஸ்போர்ட்டில் இரண்டாவது தடவையாகவும் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்ட ஒரே தலைவர் மகிந்த ராஜபக்க்ஷதான் என அவரது ஆதரவாளர்கள் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக உரை நிகழ்த்த முடியாமல் திரும்பிச் சென்ற ஒரே தலைவர் என்ற களங்கத்துடனேயே அவர் கொழும்பு திரும்பப்போகின்றார்.

ஒக்ஸ்போர்ட்டில் ஜனாதிபதி மகிந்த இன்று உரையாற்றவிருந்த நிலையில் அவருக்கு எதிரான பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் தீர்மானித்திருந்தன. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களும் இதேபோன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தனியாக நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார்கள்.

இந்தப் பின்னணியில் இன்றைய நிகழ்வில் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என பொலிஸாரும் தெரிவித்திருந்தனர். எதிர்புத் தெரிவிப்பது பொதுமக்களின் ஜனநாயக உரிமை அதில் தலையிடுவதில்லை என்பதுதான் பிரித்தானிய அரசின் நிலைப்பாடு எனக் கூறப்பட்டது. இதனால் மகிந்த உரை நிகழ்த்த வரும்போது குழப்பநிலை ஏற்படலாம் எனக் கருதப்பட்டது.

ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் மகிந்த ராஜபக்க்ஷ உரையாற்றவுள்ள போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான பொலிஸாரின் அனுமதியையும் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் பெற்றிருந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். ஒக்ஸ்போர்ட்டை ஆர்ப்பாட்டக் காரர்கள் சுற்றிவளைத்தால் நிலைமைகள் மோசமடையும் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது.

அரசுத் தலைவர் ஒருவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பாதுகாப்பை வழங்காமல் விட்டதன் மூலம் பிரித்தானிய அரசு பழிவாங்கியுள்ளது என சிங்கள அரசியல் தலைவர்கள் கொதித்தீந்துள்ளார்கள். சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட பிரித்தானியத் தலைவர்கள் கொழும்பு வந்தபோது சிங்கள இனவாதக் கட்சிகளால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட “வரவேற்புக்கு“ பிரித்தானியா தருணம் பார்த்து பழிவாங்கிவிட்டது என இவர்கள் கருதுகின்றார்கள். மகிந்தவுக்குப் பாடம் புகட்டுவதற்குத் தருணம் பார்த்திருந்த பிரித்தானிய அரசு காய்நகர்தியிருக்கின்றது என்பதுதான் கொழும்பு அரசியல் வட்டாரங்களின் கருத்தாகவள்ளது.

இச்சம்பவத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பதையிட்டு கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. லண்டனிலுள்ள இலங்கையின் தூதுவர் ஜெயசிங்கவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருக்கின்றார். லண்டனில் காணப்படும் நிலைமைகள் தொடர்பில் உரிய முறையில் தகவல்களைப் பெற்று அதற்கு ஏற்றவாறு அவர் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தால் வோட்டர்லு ஒன்றை மகிந்த சந்திக்க வேண்டிய நிலை வந்திருக்காது என்பது உண்மை!

தமது உறுப்பினர்கள் மத்தியில் உரை ஒன்றை நிகழ்த்த வருமாறு இவ்வருட ஆரம்பத்தில் ஒக்ஸ்போர்ட் ஒன்றியம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், தமக்கு வசதியான ஒரு திகதியை இதற்காகத் தருமாறும் கேட்டிருந்தது. இந்த அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து அவரது விஜயத்தின் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸாருடனும், லண்டனிலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகருடனும் ஒன்றியம் விரிவான பேச்சுக்களை நடத்தியது.

இருந்தபோதிலும் மகிந்த வரும் வரையில் அவருக்கு எதிரான உணர்ச்சிக் கொந்தளிப்பில் தமிழர்கள் உள்ளார்கள் என்பதை லண்டனிலுள்ள பிரித்தானிய தூதரகத்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஹீத்ரோ விமான நிலையத்தில் மகிந்த வந்திறங்கிய போது அங்கு கூடியிருந்த தமிழர்கள் மேற்கொண்ட திடீர் ஆர்ப்பாட்டமும், இதில் கூடியிருந்த மக்களின் உணர்சிக் கொந்தளிப்பும் தூதரக அதிகாரிகளுக்கு முதலாவது எச்சரிக்கையாக அமைந்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் அகப்படாமல் மற்றொரு வாயில் மூலமாக மகிந்தர் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஒக்ஸ்போர்ட் உரையின் போது எப்படியும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தூதரக அதிகாரிகள் அப்போதே தெளிவாக உணர்ந்துகொண்டிருந்தார்கள்.

இதனையடுத்தே ஒக்ஸ்போர்ட் ஒன்றியப் பிரதிநிதிகள் இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். ”மகிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸார் எமது கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து அவரது உரை சாத்தியமானதாக இருக்காது என்பதால் அதனை ரத்துச் செய்வதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அவரது உரை ரத்துச் செய்யப்படுவதையிட்டு ஒன்றியம் மிகவும் வருத்தமடைகின்றது” என இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின் ஒன்றியம் பின்னர் தெரவித்தது.

இதேவேளையில் ஜனாதிபதியின் உரை ரத்துச்செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தி ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதியின் உரை ரத்துச்செய்யப்படுவதாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ள லலித் வீரதுங்க, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட அழுத்தங்களையடுத்தே இது ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

1823 முதல் 187 வருட ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழக சரித்திரத்தில் உரையாற்றுமாறு இரண்டு முறை அழைக்கப்பட்ட ஒரேயொரு நாட்டுத் தலைவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரது தற்போதைய உரை ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் ரத்துச்செய்யப்பட்ட ஒரே உரை மகிந்தவின் உரைதான் என்ற பெயரும் அவருக்கே கிடைத்துள்ளது. இதுவும் சரித்திரத்தில் எழுதப்படும்!

இதற்கு முன் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான உபாய மார்க்கங்கள் என்ற தொனிப்பொருளில் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். உலகின் உயர் மட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இங்கிருந்து உருவாகியுள்ளனர். அத்துடன் உலகின் உயர்மட்ட தலைவர்கள் வல்லுனர்கள் பலர் ஒக்ஸ்போர்ட் மாணவ சங்கத்தில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரங்கில் தனக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாணவர் சங்கத்தில் உரையாற்றுவதன் மூலம் சர்வதேச ரீதியில் தனது நிலையை சற்று உயர்த்திக்கொள்ள முடியும் என மகிந்தர் எதிர்பார்த்தே வந்திருந்தார்.

ஆனால், மகிந்த வரும் வேளையில் நேரம் பார்த்து வெளியிடப்பட்ட சனல் - 4 காணொலி அவருக்குப் பெரும் இடியாகவே அமைந்துவிட்டது. போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரச படையினர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியான இந்தக்காணொலி மகிந்த அரசின் உண்மையான முகத்தைத் தெளிவாக அம்பலமாக்கிவிட்டது.

இதனைவிட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியான தகவல்களும் அவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. இவை அனைத்தும் மகிந்த ராஜபக்க்ஷ லண்டனில் இருந்த காலப்பகுதியில் வெளிவர அவர் நன்றாகத்தான் ஆடிப்போய்விட்டார். லண்டன் புறப்படும் போது அவரிடம் காணப்பட்ட இறுமாப்பை கொழும்பு திரும்பும் போது அவரிடம் காண முடியாதிருக்கும் என்பது மட்டும் உண்மை.

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் எந்தளவுக்குப் பலமானதாகவும், உணர்வு பூர்வமானதாகவும் இருக்கின்றது என்பதையும் லண்டன் சம்பவம் கொழும்புக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது. இதனைப் புரிந்துகொண்டு மகிந்தர் செயற்படாத வரையில் இன்னும் பல வோட்டர்லூக்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை!

http://www.pooraayam.com/news-analysis/1625-mahindainlondon

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து சத்தியன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட ஒட்டுக் குழுக்களை வைத்து ( கே.பி) புலம்பெயர் மக்களை வழி பண்ண முடியும் என்ற தப்பான எண்ணத்துடன் இருந்த மகிந்து, கோத்து மாமாக்களின் கனவுகளையும் தகர்த்து எறிந்துள்ளனர் எம் புலம்பெயர் உறவுகள். மாவீரர் வாரம் முடிகையில் விழுந்த பாரிய உளவியல் ரீதியான அடி.....! இது கட்டாயம் சிங்களம் மற்றும் சிங்களத்துக்கு மூண்டு கொடுக்கும் நாடுகளுக்கும் தெளிவான செய்தியை சொல்லாமல் சொல்லியிருக்கின்றது... இதே பாணியில் ஜநாவில் இருக்கும் இலங்கை துாதருக்கும் கொடுத்தால் இலகுவாக அந்த கயவனையும் கைது செய்ய முடியும் ரமேஷ் அண்ணாவின் காணோளி வெளிவந்தமையால் ஜநா வதிவிட பிரதிநிதியை கைது செய்ய முடியும் என நம்புகின்றேன்....புலம்பெயர் உறவுகளே சோர்ந்து விடாதீர்கள் இதே வேகத்துடன் பயணித்தால் எமக்கான காலத்தினை விரைவில் உருவாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் எந்தளவுக்குப் பலமானதாகவும், உணர்வு பூர்வமானதாகவும் இருக்கின்றது என்பதையும் லண்டன் சம்பவம் கொழும்புக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது. இதனைப் புரிந்துகொண்டு மகிந்தர் செயற்படாத வரையில் இன்னும் பல வோட்டர்லூக்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை!

மகிந்த இனி ஒரு ஐரோப்பிய நாட்டுக்கோ, அமெரிக்கா, கனடா போன்ற நாட்டுக்கோ....... போகும் போது,

பல முறை யோசிக்க வேண்டி இருக்கும். இங்கிலாந்து தமிழரின் எழுச்சியின்,

முன்மாதிரியை பார்த்து மற்ற நாட்டிலுள்ளவர்கள் கற்றுக் கொண்ட பாடம்.

மகிந்தவுக்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் உரையாற்ற விருப்பம் என்றால்....

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக் கழகங்களில் உரையாற்றலாம்.chatterbox.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka guardian the article says: Having pushed the Tamils out of the country systematically, Sri Lanka has created a wider democratic forum for the Diaspora Tamils. In the United Kingdon they are a deciding factor to elect at least 30 parliamentarians and their representations are felt in many constituencies.

Justice Nihal Jayasinghe’s three year term has come to an end.

According to latest information, the government is back-stepping from

its earlier announcement that a senior military official will be taking

on the position fearing law suits of war crimes against the appointee.http://www.srilankaguardian.org/2010/12/weerawansa-at-last-speak.

Sri Lanka Guardian: Weerawansa at last speaking (a) truth

www.srilankaguardian.org

போர்குற்ற வாளி மகிந்தாவை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பிரதமவிருந்தினராக அழைத்து பேச அனுமதித்த காந்தியவாதிகளுக்கும் இது ஒரு நல்ல அடி ......

பயங்கரவாத எழுத்தாளர் டிபிஎஸே வொடெர் லூ என்று எழுதிய நிகழ்வையே இங்கு ஒரு அரும்பு என்ன வெற்றியைக் கண்டீர்கள் என்று கேட்டது.அந்த அரும்பையும் காணேல்ல வேறு பெயரில வருவாரோ? இப்படி முன்னம் சமாதான காலத்தில் சமாதானம் எண்டு ஒருத்தர் வந்தார்.பின்னர் சம்பந்தனுக்கும் இந்தியாவுக்கும் வக்காலத்துக்கு வாங்க சில பேர்வழிகள் வந்தார்கள் இப்போது சிலர் கேபிக்கு வருகிறார்கள்.முகங்களைத் தொலைத்த முன்னவர்களைப் போல இவர்களும் மறைந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நாரதா..... காது செவிடா...?

அது அரும்பு இல்லை, கரும்பு.

பயங்கரவாத எழுத்தாளர் டிபிஎஸே வொடெர் லூ என்று எழுதிய நிகழ்வையே இங்கு ஒரு அரும்பு என்ன வெற்றியைக் கண்டீர்கள் என்று கேட்டது.அந்த அரும்பையும் காணேல்ல வேறு பெயரில வருவாரோ? இப்படி முன்னம் சமாதான காலத்தில் சமாதானம் எண்டு ஒருத்தர் வந்தார்.பின்னர் சம்பந்தனுக்கும் இந்தியாவுக்கும் வக்காலத்துக்கு வாங்க சில பேர்வழிகள் வந்தார்கள் இப்போது சிலர் கேபிக்கு வருகிறார்கள்.முகங்களைத் தொலைத்த முன்னவர்களைப் போல இவர்களும் மறைந்து விடுவார்கள்.

கே பி மற்றும் டக்களஸ் போன்றவர்கள் போரால் பாதிக்கப்பட்ட சிறைப் பட்ட போராளிகள் மக்களின் மறுவாழ்வுக்கு ஆதரவாக செயற்படுவதால், செயற்படக் கூடியவாறு மக்களோடு இருப்பதால் அவர்களது செயற்பாட்டை ஆதரித்து கருத்து எழுதுகின்றேன் . நா க அரசு மற்றும் தேசியவதம் என்ற போர்வையில் மையவாத அரசியல் நடத்திக்கொண்டும் போரால் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து அந்நியப்பட்டும் அவர்களது மறுவாழ்வு குறித்து துளியும் கவலையின்றி இருப்பதால் அவர்கள் செயற்பாடுகளை எதிர்த்து கருத்து எழுதுகின்றேன். இவ்வாறன கருத்துக்களை முன்வைக்க முதல் ஒரு வருடத்துக்கும் மேலாக நா க அரசு போன்ற முன்னெடுப்புகளுக்குப் பதிலாக மக்களின் புனர்வாழ்வு மனித உரிமைக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதே சிறந்தது என்ற கருத்தை எழுதி வந்தேன். இதுதான் எனது கருத்துக்களின் சாராம்சம். இன்றய காலகட்டத்தில் இந்தக் கருத்து நிலையில் மாற்றம் இல்லை. தேசியவாதிகளும் நா க அரசு அமைப்புகளும் ஆதரவுக் கோஸ்டிகளும் மக்கள் நலன் குறித்து தமது செயற்பாட்டைத் திருப்பினால் அவர்கள் செயற்பாடுகளையும் ஆதரிப்போம். புலிகளோ அல்லது புலியில் இருநத கருணா கே பி களோ மாற்று இயக்கத்தினர்களோ அரசியல் கட்சிகளோ நா கா அரசுகளோ ஆதரவாளர்களோ முக்கியமாக துரோகிகளோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதற்குள் புடுங்குப்பட்டு எமோசனல் ரென்சன் ஆக ஒண்டும் இல்லை. மக்கள் நலனில் யார் அதிகம் அக்கறை காட்டுகின்றானோ அவனது அக்கறைய ஆதரிப்போம்.

போராளிகள் எதற்காகப் போராடினார்கள்? அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.அவர்கள் தமிழர்களை அடக்கிய சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.அந்த அடக்குமுறைச் சிங்கள அரசின் ஒரு அங்கமாகவே டக்கிளசு இருக்கிறார்.அவர் சிங்கள அரசிற்காக என்ன செய்கிறார்? போராடியவர்களில் அரசியற் தெளிவுள்ளவர்கள், சிங்கள அரசின் உளவியல் யுத்ததிற்க்கு இணிவாகச் செயற்பட உடன் படாதவர்களை படுகொலை செய்து விட்டு,மிகுதியானவர்களைப் புனர்வாழ்வ்வு என்னும் பேரில் சிங்கள அரசின் இராண்றுவப் புலனாய்வாளருடன் இணைந்து பராமரிகிறார்.இவை சாத்தியம் ஆவது இவர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போர்க் கைதிகளை தடுத்து வைதிருப்பதாலேயே,இதனை அரசியல் ரீதியாக இன்று இருக்கும் சர்வதேச நிலைகளுக்கு ஏற்ப்ப ,சிறிலங்கா அரசின் மீதான மேற்குலகின் போர்க் குற்ற விசாரணை என்னும் நெருக்குதலினூடாக நாம் முறை அடிக்க முடியும்.

போராளிகளையும் மக்களையும் நாம் ஒவ்வொருவரும் பல்வேறு வழிகளினீடாகப் பராமரித்தே வருகிறோம்.டக்கிலசு அவர்களைக் கட்டுப்படுத்தி வைதிருகிறான் என்பதனால் அவனே அவர்களைப் பராமரிகிறான் என்று நீங்கள் நம்பினால், உங்களிற்க்கு உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது என்ரே சொல்வேன்.சிறிலங்கா அரசு கேபியினூடாகச் செய்யும் புலம் பெயர் மக்கள் மீதான அவர்களின் அரசியற் போராட்டங்களை முறையடிக்க நினைக்கும் சிலரின் பிரச்சாரங்களுக்கு நீங்கள் அரசியற் தெளிவற்ர்று பலியாகி விடீர்கள் என்ரே எடுத்துக் கொள்ள முடியும்.

ஓய் நாரதா..... காது செவிடா...?

அது அரும்பு இல்லை, கரும்பு.

:rolleyes: கரும்பு அரசியற் தெளிவற்ற ஒரு அரும்பு.தோல்வி தந்த உளவியற் பாதிப்பின் ஒரு அரும்பு.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் எதற்காகப் போராடினார்கள்? அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.அவர்கள் தமிழர்களை அடக்கிய சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

போராட்ட ஆரம்பகாலத்தில் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவுகள் வரும் என்று எவரும் நினைத்துப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. சிங்கள அடக்குமுறைக்கு ஒற்றுமையாகப் போராடினால் வெற்றி கிட்டும் என்றே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலக அரசியலில் தமிழர்களின் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவும் இருந்தது. எனினும் உலகமாற்றங்களுக்கு ஏற்ப எமது போராட்டம் மாற்றங்களை உள்வாங்காதபோது, இலங்கையரசு மிகவும் திறமையாக உலகத்தின் சிந்தனை மாற்றங்களைக் கையாண்டு தமிழரின் போராட்டத்தை மிகவும் குரூரமான வன்முறை வழிகளைப் பாவித்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

தற்போது தமிழரின் தேசிய இருப்பே மிகவும் கேள்விக்குள்ளான நிலையில் விடுதலையின் தேவை 70களில் இருந்ததைவிட பன்மடங்கு அதிகமாக உள்ளது. எனினும் நாம் ஒன்றிணைந்து ஒரு தேசிய இனமாகச் செயற்படும் வல்லமையை இழந்து உதிரிகளின் கூட்டமாக நிற்கின்றோம் என்பதும் யதார்த்தம். இந்த நிலையில் எங்கள் முன்னால் உள்ள முக்கிய பங்கு ஒற்றுமையாகத் திரள்வதே. ஆனாலும் புலத்தில் உள்ள தமிழர்களையும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய "ஒன்று" தற்போது இல்லை. இந்த நிலையையும் இலங்கை அரசு சரியாகப் பாவித்து பெரிய அரசியல் இடைவெளியை தாயகத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் உருவாக்குவதில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தோல்வி தந்த உளவியற் பாதிப்பின் ஒரு அரும்பு.

தோல்வி தந்தது என்பதை விட தோல்வியிலிருந்து பாடம் கற்க முனையாமல் தொடரும் செயற்பாடுகளால் வந்த பாதிப்பு என்று கொள்ளலாம்.

:rolleyes: கரும்பு அரசியற் தெளிவற்ற ஒரு அரும்பு.தோல்வி தந்த உளவியற் பாதிப்பின் ஒரு அரும்பு.

ஓமோம்... துரோகி, எட்டப்பன், மாற்றுக்கருத்தாளர், காசுக்கு எழுதுபவர், இவை எல்லாம் போய் இப்போது உளவியற்பாதிப்பு அடைந்தவர்? :unsure: இங்கு எழுதப்படும் கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஓர் உளவியல் மருத்துவரிடம் காட்டினால்.. உளவியல் பாதிப்பு அடைந்தவர்கள் யார் என்று கூறுவார். :( கருத்துக்களத்தில் கருத்துக்களை வைக்கமுடியாதவர்கள் தனிநபர்களை தாக்குவதிலேயே குறியாக நிற்கின்றார்கள். இதுவும் ஐந்தாம் கட்ட ஈழப்போரின் ஓர் வடிவமோ? :lol: அரசியல் தெளிவு உள்ள உளவியல் ஆரோக்கியமான ஒருவருக்கு கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்யத்தெரியவில்லை. யாரிடம் நொந்து கொள்வது..? :D

ஓய் நாரதா..... காது செவிடா...? அது அரும்பு இல்லை, கரும்பு.

கரும்பு இங்கு குறிப்பிட்ட திரியில் கருத்து ஏதும் முன்பு வைக்கவில்லையே. இங்கு கரும்பு என்று நீங்கள் கூறவிளைவது என்ன? :rolleyes:

போராட்ட ஆரம்பகாலத்தில் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவுகள் வரும் என்று எவரும் நினைத்துப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. சிங்கள அடக்குமுறைக்கு ஒற்றுமையாகப் போராடினால் வெற்றி கிட்டும் என்றே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலக அரசியலில் தமிழர்களின் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவும் இருந்தது. எனினும் உலகமாற்றங்களுக்கு ஏற்ப எமது போராட்டம் மாற்றங்களை உள்வாங்காதபோது, இலங்கையரசு மிகவும் திறமையாக உலகத்தின் சிந்தனை மாற்றங்களைக் கையாண்டு தமிழரின் போராட்டத்தை மிகவும் குரூரமான வன்முறை வழிகளைப் பாவித்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

தற்போது தமிழரின் தேசிய இருப்பே மிகவும் கேள்விக்குள்ளான நிலையில் விடுதலையின் தேவை 70களில் இருந்ததைவிட பன்மடங்கு அதிகமாக உள்ளது. எனினும் நாம் ஒன்றிணைந்து ஒரு தேசிய இனமாகச் செயற்படும் வல்லமையை இழந்து உதிரிகளின் கூட்டமாக நிற்கின்றோம் என்பதும் யதார்த்தம். இந்த நிலையில் எங்கள் முன்னால் உள்ள முக்கிய பங்கு ஒற்றுமையாகத் திரள்வதே. ஆனாலும் புலத்தில் உள்ள தமிழர்களையும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய "ஒன்று" தற்போது இல்லை. இந்த நிலையையும் இலங்கை அரசு சரியாகப் பாவித்து பெரிய அரசியல் இடைவெளியை தாயகத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் உருவாக்குவதில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கின்றது.

------------------------------------------------------------------------------

"Post - narathar, on 04 December 2010 - 08:35 AM, said:

தோல்வி தந்த உளவியற் பாதிப்பின் ஒரு அரும்பு."

------------------------------------------------------------------------------

தோல்வி தந்தது என்பதை விட தோல்வியிலிருந்து பாடம் கற்க முனையாமல் தொடரும் செயற்பாடுகளால் வந்த பாதிப்பு என்று கொள்ளலாம்.

உண்மை!!!

Edited by vettri-vel

தோல்வி தந்தது என்பதை விட தோல்வியிலிருந்து பாடம் கற்க முனையாமல் தொடரும் செயற்பாடுகளால் வந்த பாதிப்பு என்று கொள்ளலாம்.

மக்களின் இழப்பு பற்றி பேசாமல் தோல்வி பற்றி பேசுகின்றீர்கள். மக்களின் இழப்புக்களை கண்டு இன்னமும் அதன்மூலம் பாடம் கற்கமுனையாமல் தொடரும் செயற்பாடுகள் பற்றி கூறக்கூடியது என்ன? உளவியற்பாதிப்பு என்பது மக்கள் பேரழிவை சந்திக்கும்போது ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்... துரோகி, எட்டப்பன், மாற்றுக்கருத்தாளர், காசுக்கு எழுதுபவர், இவை எல்லாம் போய் இப்போது உளவியற்பாதிப்பு அடைந்தவர்? :rolleyes: இங்கு எழுதப்படும் கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஓர் உளவியல் மருத்துவரிடம் காட்டினால்.. உளவியல் பாதிப்பு அடைந்தவர்கள் யார் என்று கூறுவார். :rolleyes:

ஏன் கரும்பு

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத்தான் மருத்துவரிடம் காட்டவேண்டுமா...?

அல்லது ஆங்கில மருத்துவரிடம் தான் நியாயம் கிடைக்குமா..?

ஆங்கில மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று தாங்கள் நினைப்பதே எனக்கு ஒரு உளவியல் பாதிப்பு போல்தான் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் இழப்பு பற்றி பேசாமல் தோல்வி பற்றி பேசுகின்றீர்கள். மக்களின் இழப்புக்களை கண்டு இன்னமும் அதன்மூலம் பாடம் கற்கமுனையாமல் தொடரும் செயற்பாடுகள் பற்றி கூறக்கூடியது என்ன? உளவியற்பாதிப்பு என்பது மக்கள் பேரழிவை சந்திக்கும்போது ஏற்படுகின்றது.

"தோல்வி" என்ற பதத்தை நான் மேற்கோள் காட்டிய கருத்தில் இருந்தே எடுத்துக்கொண்டேன்.

தவிர, மக்களின் இழப்புக்கள் நிறையவே பாதிப்பை உண்டாக்கியுள்ளன என்பது உண்மைதான். போர் உச்சத்தில் நடந்த அவலங்களின் பாதிப்புக்கள் அவற்றை நேரடியாக அனுபவிக்காத எங்களை உலுக்கியிருந்ததும் உண்மை. நேரடியாகக் கொடுமைகளை அனுபவித்து தற்போது மீண்டும் வாழ்வைத் தொடர முயல்பவர்களையும், அவர்களது சந்ததியனரையும் கணக்கில் எடுக்காத "பாடங்கள்" வெற்றுக் குப்பைகளாகவே இருக்கும்.

ஏன் கரும்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத்தான் மருத்துவரிடம் காட்டவேண்டுமா...?

அல்லது ஆங்கில மருத்துவரிடம் தான் நியாயம் கிடைக்குமா..? ஆங்கில மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று தாங்கள் நினைப்பதே எனக்கு ஒரு உளவியல் பாதிப்பு போல்தான் தெரிகிறது

பக்கச்சார்பு இல்லாத கருத்தை பெறுவதற்காக அவ்வாறு கூறினேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பக்கச்சார்பு இல்லாத கருத்தை பெறுவதற்காக அவ்வாறு கூறினேன். :rolleyes:

ஆங்கிலேயர்கள் எல்லோரும் தற்போது பயங்கரவாத காய்ச்சலில் இருக்கிறார்கள்

அவர்களிடம் நியாயம் அல்லது பக்கசார்பில்லாத நடவடிக்கை................??? :rolleyes:

. நா க அரசு மற்றும் தேசியவதம் என்ற போர்வையில் மையவாத அரசியல் நடத்திக்கொண்டும் போரால் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து அந்நியப்பட்டும் அவர்களது மறுவாழ்வு

அப்ப இது புலம் பெயர் மையவாத அரசியலோ?.......யாழ்ப்பாணமையவாத அரசியலோ?.......லண்டன் மையவாத அரசியலோ? :rolleyes:

ஜனாயக வேடம் போட்டு எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஈன இந்திய பயங்கரவாத மைய அரசியலாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.