Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

நெடுக்காலபோவன்,

சான்றிதழ்களைப் பெறுவதும் படிப்பதும் ஒன்றல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. எந்தத் துறையினை எடுத்தாலும் படிக்கப்படிக்க இன்னும் எத்தனையோ முனைகள் அந்தத் துறைக்குள் விரிவதனை படிப்பவர்களால் அறியமுடியும். பி.எச்.டி எடுத்துவிட்டதால் ஒரு துறை கரைத்துக் குடிப்கப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. நூற்றாண்டுகளிற்கு முன்னரேயே நிறுவிவிடப்பட்ட ஒரு கருதுகோளை தரவுகளுடன் இன்னுமொருமுறை தனக்கும் அக்கருதுகோள் புரிகிறது என்று அக்கருதுகோளுடன் சம்பந்தப்பட்ட படிமுறைகளை விளக்கி மட்டுமே பி.எச்.டி பேப்பர் இங்கிலாந்தில் சம்மிற்பண்ணி பி.எச்.டி பட்டமும் பெற்று வந்துள்ளவர்களை நானறிவேன். உண்மையில் படிப்பவாகள், பி.எச்.டி நிலை வருகையில் தனது துறையின் விரிவைக் கண்டு மலைத்துத் தொடர்ந்தும் துளித்துளியாய் அத்துறையை அறிவதையே விரும்புவர். ஒரு துறையில் ஆர்வமுள் அறிவுள்ள ஒருவரிற்குத் தன் ஆயட்காலம் அத்துறை முழுவதும் அறியப் போதாதது என்பதை அறிவது இலகு. இந்நிலையில் டபிள் பி.எச்.டி என்ற வார்த்தைப் பிரயோகத்தை உண்iமியில் பி.எச்.டி படிக்கும் எவரும் உபயோகிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள்.

எங்கள் சமூகத்தில் பரதநாட்டிய, மிருதங்க, வாய்ப்பாட்டு அரங்கேற்றங்கள் இப்போ மிகச்சாதாரணம். அரங்கேற்றம் முடித்தால் அக்கலையில் கரைகண்டுவிட்டதாய் அர்த்தம் என்ற அர்தத்தில் கூட சிலர் பேசுகிறார்கள். சான்றிதழ்கள் என்பன வெறும் மட்டைகள். குறித்த பாடத்திட்டத்தைப் பாடமாக்கியும் சான்றிதழ் எடுக்கமுடியும். தன்னை ஒரு துறையில் பி.எச்.டி நிலையில் காட்டிக்கொள்ள விரும்பும் ஒருவர் அத்துறையினைத் தான் எவ்வாறு உள்வாங்கி அத்துறைக்குத் தான் என்னத்தைப் பங்களித்தார் என்ற விதத்தில் கதைத்தால் அது பிரயோசனமானது. மற்றையவர்கள் நூற்றாண்டுகளிற்கு முன்பே சிந்தித்து வைத்துவி;ட்டதைப் பாடமாக்கிச் சான்றிதழ் பெறுவது எனது பார்வையில் அத்தனை பிரமிப்பானது அல்ல. ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரிசில் சோதனையில் சித்தி அடைவதும் இருபதுகளில் பி.எச்.டி எடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சான்றிதழ்களை வைத்துச் சீதனம் தீர்மானித்த தெற்காசிய சமூகங்களில் தான் இந்த சான்றிதள் வெறி அதிகம் காணப்படுகிறது.

முன்னைய உலகிலேயே பல உதாரணங்கள் உள்ளன என்றாலும் தற்காலத்தில் பில் கேற்சும் ஸ்ரீவ் யொப்பும் பி.எச்.டி படித்துத் தமது கண்டுபிடிப்புக்களைத் திட்டமிடவில்லை. அதே நேரம் நானறிய பொறியியல் துறையில் சான்றிதழிற்காக பி.எச்.டி பட்டத்தைப் பெற்று விட்டு ஏதோ ஒரு கொம்பனியில் போய் வேலை செய்பவர்களையும், நான்கு ஆண்டுகள் வரை பி.எச்.டி க்கு இவர்கள் செலவிட்ட காலத்தை படித்து முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்து திறமை காரணமாக பி.எச்.டி நபரின் மனேஜராக வந்தவர்கள் கீழ் பி.எச்.டி வேலை செய்வதையும் கண்டுள்ளேன். நான்கு ஆண்டுகள் பொறியியலில் முதலாமவர் ஏறத்தாழ 250 தொடக்கம் 300 ஆயிரம் சம்பாதித்து மனேஜராக இருக்க, பி.எச்.டி நபர் நாலுவருடம் பிச்சைக்காரனாக கிறான்ரில் வாழ்ந்து தொழிலை ஆரம்பிப்பது சான்றிதழ் வெறியின் அவலம். புp.எச்.டி படிக்க விழைபவர்கள் அத்துறைக்குத் தாமும் பங்களிக்கக்கூடியவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாக தாமே கிறான்ற் பெறக்கூடியவர்களாகவும் இருக்க முடியாது போகும் பட்சத்தில் பி.எச்.டி மட்டை மட்டை மட்டுமே. இதே போன்று தான் இலங்கை போன்ற அபிவிருத்தியடைய ஒரு பின்தங்கிய நாட்டின் பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்புக்களை நிகழ்தினால் அது அதிர்ச்சி எனும் அளவிற்கு அங்கு கண்டுபிடிப்புக்கள் அரிதாகக் காணப்பட, அதே இலங்கையில் பிறந்து வளர்ந்து களத்தில் போராளிகள் கண்டுபிடித்துக் குவித்தவை மலையளவு. ஆர்.எப் இல் பிச்.எச்.டி முடித்த ஒருவர் சமாதான காலத்தில் அங்கு சென்று அத்துறையில் சில போராளிகளின் அறிவையும் பயன்படுத்தலையும் கண்டு தான் என்ன படித்தேன் என்று சொல்லாது பொத்திக் கொண்டு வந்ததாகச் சொன்னார். அறிவு என்பதை சான்றிதளோடு நேர்ப்படுத்த முடியாது. பொதுவாகப் படிப்பு என்பது எவ்வாறு ஒரு துறையினை அணுகுவது என்ற ஒரு வழிமுறையினைத் தான் காட்ட முடியும். ஆனால் வாழ்வில் வெற்றிப் படிகளில் ஏறுவதற்குப் பலரிற்குச் சிலசமயங்களில் படித்த பழைய சிந்தனை முறைகள் சிலதை மறப்பதும் அவசியப்படுகிறது. ஏனெனில் நடுத்தர வாழ்வை அதிகமானவர்களிற்கு உறுதிப்படுத்தும் நோக்கில் தான் பல பாடத்திட்டங்கள் அமைகின்றன என்பதால் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டுவதற்குத் தேவையான சிந்தனைக்குச் சில சமயம் அண்லேர்ணிங் தேவைப்படுகிறது.

அடுத்து மற்றயைவர் தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணம் ஒருவரிற்கு எழுவதற்கு இரு அடிப்படைகள் அவசியம். ஒன்று தான் எந்த மட்டத்தில் மதிக்கப்படவேண்டும் என்று குறித்த நபர் தான் சார்ந்து தானாகக் கருதிக்கொள்வது. அடுத்தது மற்றவைர்கள் தன்னை எவ்வாறு மதிக்கிறார்கள் என்று குறித்த நபர் விளங்கிக் கொள்வது. முதலாவது எதிர்பார்ப்புச் சார்ந்து இரண்டாவது குறித்தநபரின் பார்வையில் கைவராதபோது தான் மதிக்கிறார்கள் இல்லை என்ற எண்ணம் எழ முடியும். ஆனால் இதில் சில அடிப்படைகள் கவனிக்கப்படவேண்டியன. அதாவது தான் எந்த மட்டத்தில் மதிககப்படவேண்டும் என்று தான் கருதுவதற்கான அடிப்படைகள் எவை? சுhன்றிதழ்களின் எண்ணிக்கை சார்;ந்து மட்டும் இது எழுகிறதா, ஊரில் எத்தனை வசதியாய் அம்மாஅப்பா வாழ்ந்தார்கள் என்பதை வைத்து எழுகிறதா என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்விகளே. மற்றையவர்கள் தன்னை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் மதிப்பை அவர்கள் வழங்குவதற்கான தகமை தன்னிடம் இருக்கிறதா என்ற இடத்தில ஆரம்பிப்பது பொருந்தும். ஏனெனில் வரட்டுக் கவுரவம் என்று கூட உண்டு. இந்த வரட்டுக் கவுரவத்தை இள வயதில் பலர் சமாளித்து விடுகிறார்கள் ஆனால் வயது கூடக்கூட சதா மற்றையவர்களின் மரியாதை பற்றிச் சிந்தித்து வறட்டுக்கவுரவத்தின் உக்கிரத்தை உடல் தாங்கமுடியாது மனஉழைச்சலில் படுக்கையில் படுத்தவர்களும் உள்ளார்கள்.

அடுத்து, அகதியாய் வந்தவன் காட்டிக்கொடுத்ததால் போராட்டம் முடிந்தது என்பது ஏற்புடையது அல்ல. உலகின் கொள்கை வகுத்தல்கள் நியாயம் தர்மம் உண்மை சார்ந்து நடக்கின்றன என்று நம்பின் தான் இவ்வாறு கூறமுடியும். ஆனால் உலகு அவ்வாறு நடப்பதில்லை. தனது நலன் சார்ந்து உலகு அயோக்கியரையும் ஆதரிக்கும் அற்புதமானவர்களையும் எதிர்ககும். இது ஒரு பாரிய முனை என்பதால் இதை பின்னூட்டத்தில் ஆராய முடியாது. உலகு தமிழரின் போராட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை அகதித்தமிழனின் வழக்கு விபரங்கள் சார்ந்து தான் ஏற்படுத்திக் கொண்டது என்ற புரிதல் தவறனாது என்பதை மட்டும் கூறிக்கொள்ளலாம்.

அடுத்து கொழும்பில் படித்து முடியும் வரை இருந்தவர்கள் எல்லாம் நாட்;டைக்காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவோ அல்லது தாமும் போராட்டத்தைத் தாங்கவேண்டும் என்பதற்காகவோ மட்டும் தான் இருந்தார்கள் என்று கூறமுடியாது. இலங்கையில் படித்தால் தான் படிப்பு என்ற அறுக்கமுடியாதா பெறுமதிக்குப் பலியாகி படிப்பு முடியும் வரை கொழும்பில் இருந்து விட்டு முடிந்தகையோடு வெளியேறியவர்களும் ஒருவேளை இருக்கக்கூடும். ஏனெனில் சின்னவயதில் இருந்து போடப்படும் பெறுமதிகளின் தழை சிலரின் உளவியலில் அத்தனை வலியது.

இறுதியாக வெள்ளைக்காரன் மதிக்கும்வகையில் விசாவோடு வந்து வந்;தவேலை முடிந்த கையோடு திரும்பினால் தான் துரை மதிப்பார் என்று எண்ணத்தேவையில்லை. எங்கள் தேசங்களிற்கு விசா இன்றித் தான் காலனித்துவம் வந்தது. இன்று அகதித்தமிழன் என்ற பதம் பற்றி அன்று ஊர்ச்சட்டம்பிகளாகத் தன்னிறைவோடு வாழ்ந்தவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதில் காலனித்துவத்தின் பங்கும் உண்டு. வெள்ளையையும் புரியாது எங்களையும் புரியாது நாங்கள் புரிதல் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமுடியாது.

Edited by Innumoruvan

  • Replies 271
  • Views 26.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேடியதில் கிடைத்தது. பொதுநலவாய நாடுகள் நிதிய ஸ்கொலசிப் பற்றியது (நெடுக்ஸ் இந்த ஸ்கொலசிப் எடுத்திருக்கவில்லை என்று தெரிகின்றது!)

MINISTRY OF HIGHER EDUCATION

COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS TENABLE IN THE

UNITED KINGDOM – 2011

Applications are entertained from eligible persons for the award of Postgraduate Scholarships offered under the Commonwealth and Fellowships Plan. These awards are tenable at Institutions of Higher Learning in the United Kingdom for the academic year commencing in September/ October 2011. Prospects can also be accessed from Commonwealth Selection Committee website, at www.cscuk.org.uk.

01. Field of Study : Awards remain open to all disciplines, but preference will be given to areas relevant to national development.

02. Tenure : (a) one year taught masters courses or equivalent degrees.

(b) six months of clinical training in medicine or dentistry.

© doctoral degrees, of up to three years duration.

(d) one year research on a split- site basis, towards a PhD registered at a Sri Lankan University.

03. Termination : Any scholarship may at the discretion of the appropriate authority be terminated at any time owing to misconduct, irregularity of attendance, absence from classes or hostel without prior approval of the authority concerned and the unsatisfactory progress in studies or failure at examinations of the holder of such scholarship. If any scholarship is terminated the scholar may be required to return to Sri Lanka at his/her own expenses.

04. General Eligibility Requirements:

Each candidate should

(a) Be a citizen of Sri Lanka.

(b) Be less than 40 years of age on 03.09.2010

© Possess a First or a Second Class (Upper Division) Honours Degree from a recognized University.

(d) Be employed in the public sector, University or a state Corporation. – Note (ii) and (iii)

(e) Possess high proficiency in English. To prove this the candidate must have sat either IELTS or TOEFL and obtained high marks.

(f) In the fields of medicine and dentistry, the candidate must have qualified as a Doctor or a Dentist between 1 October 2001 and 30 September 2006.

In addition a graduate in medicine should have obtained a distinction in the appropriate subject. – Note (i)

Notes : (i) The requirements at 04 © should have been completed by candidates irrespective of their other postgraduate qualifications.

(ii) No application will be entertained from a person holding a temporary or probationary appointment or from person who is unemployed.

(iii) An employee on probation may apply provided however that his/her confirmation is conditional upon acquiring a specified postgraduate qualification, in such a case a statement to that effect should be included in cage 17 of the application.

05. Special Eligibility Requirements :

Candidates,

1. For Business Administration and/or Management and other related fields must have taken the Graduate Management Test (GMAT)

2. For Economics or related subjects must have taken the Princeton Graduate Record Examination(GRE)

3. For medicine and dentistry should possess qualifications registerable with the General Medical Council or the General Dental Council of the United Kingdom

4. Those who are successful at the interview will be further required to pass IELTS examination conducted by the British Council and should obtain an overall score of not less than 6.5

5. For Arts and Music should submit appropriate specimen work (slides, cassettes etc.) with their applications.

6. Applications :

(a) Every application should conform to the specimen form provided.

ஏன் இவ்வளவுக்கு கஸ்டப்படுறீங்க. என்னைக் கேட்டாலே சொல்வேனே. எனது படிப்புத் தலைப்புக்கு ஏற்ப பல்கலைக்ககழமும் ஆராய்ச்சிக்கு உதவிய நிறுவனமும் இணைந்து தந்த புலமைப் பரிசில். இதற்கு நான் படித்த பல்கலைக்கழகம் உறுதியான reference கொடுத்திருந்தது. அவ்வளவும் தான். இதற்குப் போய் ஏன் இவ்வளவு முக்கு முக்குறீங்க...???! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய அரச பிரதிநிதி சொல்லியது போல 70% அங்கு என்றால் இங்கு அது 80% இருக்கும். எல்லா விபரங்களையும் திரட்டி ஒரு சரியான கணிப்பீட்டை செய்யாமல் இதை சொல்ல முடியாது. ஆனால் சட்ட நிறுவனங்களின் உதவியை நாடி அசைலம் அடித்தவர்களின்வழக்குகளின் அடிப்படையில் இதை இப்படிச் சொல்லலாம்.

3 லட்சம் பேரும் அகதிகளாக வந்திருக்கமுடியாது. ஒரு லட்சத்தை அகதிகளாக வராதோர் கணக்கில் இட்டு, ஒரு 50,000 பேரை இங்கு அகதிகளாக வந்து குடியேறியோரின் சந்ததிகளின் கணக்கில் இட்டால்:

ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் புலிகளைச் சாட்டி அசைலம் அடித்தவர்கள்.

மிகுதி முப்பதாயிரம் பேர் மாத்திரம் உண்மையான காரணங்களுக்காக அரசியல் தஞ்சம் கோரியவர்கள்..

கணக்குச் சரிதானே! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன்,

சான்றிதழ்களைப் பெறுவதும் படிப்பதும் ஒன்றல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. எந்தத் துறையினை எடுத்தாலும் படிக்கப்படிக்க இன்னும் எத்தனையோ முனைகள் அந்தத் துறைக்குள் விரிவதனை படிப்பவர்களால் அறியமுடியும். பி.எச்.டி எடுத்துவிட்டதால் ஒரு துறை கரைத்துக் குடிப்கப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. நூற்றாண்டுகளிற்கு முன்னரேயே நிறுவிவிடப்பட்ட ஒரு கருதுகோளை தரவுகளுடன் இன்னுமொருமுறை தனக்கும் அக்கருதுகோள் புரிகிறது என்று அக்கருதுகோளுடன் சம்பந்தப்பட்ட படிமுறைகளை விளக்கி மட்டுமே பி.எச்.டி பேப்பர் இங்கிலாந்தில் சம்மிற்பண்ணி பி.எச்.டி பட்டமும் பெற்று வந்துள்ளவர்களை நானறிவேன். உண்மையில் படிப்பவாகள், பி.எச்.டி நிலை வருகையில் தனது துறையின் விரிவைக் கண்டு மலைத்துத் தொடர்ந்தும் துளித்துளியாய் அத்துறையை அறிவதையே விரும்புவர். ஒரு துறையில் ஆர்வமுள் அறிவுள்ள ஒருவரிற்குத் தன் ஆயட்காலம் அத்துறை முழுவதும் அறியப் போதாதது என்பதை அறிவது இலகு. இந்நிலையில் டபிள் பி.எச்.டி என்ற வார்த்தைப் பிரயோகத்தை உண்iமியில் பி.எச்.டி படிக்கும் எவரும் உபயோகிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள்.

எங்கள் சமூகத்தில் பரதநாட்டிய, மிருதங்க, வாய்ப்பாட்டு அரங்கேற்றங்கள் இப்போ மிகச்சாதாரணம். அரங்கேற்றம் முடித்தால் அக்கலையில் கரைகண்டுவிட்டதாய் அர்த்தம் என்ற அர்தத்தில் கூட சிலர் பேசுகிறார்கள். சான்றிதழ்கள் என்பன வெறும் மட்டைகள். குறித்த பாடத்திட்டத்தைப் பாடமாக்கியும் சான்றிதழ் எடுக்கமுடியும். தன்னை ஒரு துறையில் பி.எச்.டி நிலையில் காட்டிக்கொள்ள விரும்பும் ஒருவர் அத்துறையினைத் தான் எவ்வாறு உள்வாங்கி அத்துறைக்குத் தான் என்னத்தைப் பங்களித்தார் என்ற விதத்தில் கதைத்தால் அது பிரயோசனமானது. மற்றையவர்கள் நூற்றாண்டுகளிற்கு முன்பே சிந்தித்து வைத்துவி;ட்டதைப் பாடமாக்கிச் சான்றிதழ் பெறுவது எனது பார்வையில் அத்தனை பிரமிப்பானது அல்ல. ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரிசில் சோதனையில் சித்தி அடைவதும் இருபதுகளில் பி.எச்.டி எடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சான்றிதழ்களை வைத்துச் சீதனம் தீர்மானித்த தெற்காசிய சமூகங்களில் தான் இந்த சான்றிதள் வெறி அதிகம் காணப்படுகிறது.

முன்னைய உலகிலேயே பல உதாரணங்கள் உள்ளன என்றாலும் தற்காலத்தில் பில் கேற்சும் ஸ்ரீவ் யொப்பும் பி.எச்.டி படித்துத் தமது கண்டுபிடிப்புக்களைத் திட்டமிடவில்லை. அதே நேரம் நானறிய பொறியியல் துறையில் சான்றிதழிற்காக பி.எச்.டி பட்டத்தைப் பெற்று விட்டு ஏதோ ஒரு கொம்பனியில் போய் வேலை செய்பவர்களையும், நான்கு ஆண்டுகள் வரை பி.எச்.டி க்கு இவர்கள் செலவிட்ட காலத்தை படித்து முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்து திறமை காரணமாக பி.எச்.டி நபரின் மனேஜராக வந்தவர்கள் கீழ் பி.எச்.டி வேலை செய்வதையும் கண்டுள்ளேன். நான்கு ஆண்டுகள் பொறியியலில் முதலாமவர் ஏறத்தாழ 250 தொடக்கம் 300 ஆயிரம் சம்பாதித்து மனேஜராக இருக்க, பி.எச்.டி நபர் நாலுவருடம் பிச்சைக்காரனாக கிறான்ரில் வாழ்ந்து தொழிலை ஆரம்பிப்பது சான்றிதழ் வெறியின் அவலம். புp.எச்.டி படிக்க விழைபவர்கள் அத்துறைக்குத் தாமும் பங்களிக்கக்கூடியவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாக தாமே கிறான்ற் பெறக்கூடியவர்களாகவும் இருக்க முடியாது போகும் பட்சத்தில் பி.எச்.டி மட்டை மட்டை மட்டுமே. இதே போன்று தான் இலங்கை போன்ற அபிவிருத்தியடைய ஒரு பின்தங்கிய நாட்டின் பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்புக்களை நிகழ்தினால் அது அதிர்ச்சி எனும் அளவிற்கு அங்கு கண்டுபிடிப்புக்கள் அரிதாகக் காணப்பட, அதே இலங்கையில் பிறந்து வளர்ந்து களத்தில் போராளிகள் கண்டுபிடித்துக் குவித்தவை மலையளவு. ஆர்.எப் இல் பிச்.எச்.டி முடித்த ஒருவர் சமாதான காலத்தில் அங்கு சென்று அத்துறையில் சில போராளிகளின் அறிவையும் பயன்படுத்தலையும் கண்டு தான் என்ன படித்தேன் என்று சொல்லாது பொத்திக் கொண்டு வந்ததாகச் சொன்னார். அறிவு என்பதை சான்றிதளோடு நேர்ப்படுத்த முடியாது. பொதுவாகப் படிப்பு என்பது எவ்வாறு ஒரு துறையினை அணுகுவது என்ற ஒரு வழிமுறையினைத் தான் காட்ட முடியும். ஆனால் வாழ்வில் வெற்றிப் படிகளில் ஏறுவதற்குப் பலரிற்குச் சிலசமயங்களில் படித்த பழைய சிந்தனை முறைகள் சிலதை மறப்பதும் அவசியப்படுகிறது. ஏனெனில் நடுத்தர வாழ்வை அதிகமானவர்களிற்கு உறுதிப்படுத்தும் நோக்கில் தான் பல பாடத்திட்டங்கள் அமைகின்றன என்பதால் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டுவதற்குத் தேவையான சிந்தனைக்குச் சில சமயம் அண்லேர்ணிங் தேவைப்படுகிறது.

அடுத்து மற்றயைவர் தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணம் ஒருவரிற்கு எழுவதற்கு இரு அடிப்படைகள் அவசியம். ஒன்று தான் எந்த மட்டத்தில் மதிக்கப்படவேண்டும் என்று குறித்த நபர் தான் சார்ந்து தானாகக் கருதிக்கொள்வது. அடுத்தது மற்றவைர்கள் தன்னை எவ்வாறு மதிக்கிறார்கள் என்று குறித்த நபர் விளங்கிக் கொள்வது. முதலாவது எதிர்பார்ப்புச் சார்ந்து இரண்டாவது குறித்தநபரின் பார்வையில் கைவராதபோது தான் மதிக்கிறார்கள் இல்லை என்ற எண்ணம் எழ முடியும். ஆனால் இதில் சில அடிப்படைகள் கவனிக்கப்படவேண்டியன. அதாவது தான் எந்த மட்டத்தில் மதிககப்படவேண்டும் என்று தான் கருதுவதற்கான அடிப்படைகள் எவை? சுhன்றிதழ்களின் எண்ணிக்கை சார்;ந்து மட்டும் இது எழுகிறதா, ஊரில் எத்தனை வசதியாய் அம்மாஅப்பா வாழ்ந்தார்கள் என்பதை வைத்து எழுகிறதா என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்விகளே. மற்றையவர்கள் தன்னை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் மதிப்பை அவர்கள் வழங்குவதற்கான தகமை தன்னிடம் இருக்கிறதா என்ற இடத்தில ஆரம்பிப்பது பொருந்தும். ஏனெனில் வரட்டுக் கவுரவம் என்று கூட உண்டு. இந்த வரட்டுக் கவுரவத்தை இள வயதில் பலர் சமாளித்து விடுகிறார்கள் ஆனால் வயது கூடக்கூட சதா மற்றையவர்களின் மரியாதை பற்றிச் சிந்தித்து வறட்டுக்கவுரவத்தின் உக்கிரத்தை உடல் தாங்கமுடியாது மனஉழைச்சலில் படுக்கையில் படுத்தவர்களும் உள்ளார்கள்.

அடுத்து, அகதியாய் வந்தவன் காட்டிக்கொடுத்ததால் போராட்டம் முடிந்தது என்பது ஏற்புடையது அல்ல. உலகின் கொள்கை வகுத்தல்கள் நியாயம் தர்மம் உண்மை சார்ந்து நடக்கின்றன என்று நம்பின் தான் இவ்வாறு கூறமுடியும். ஆனால் உலகு அவ்வாறு நடப்பதில்லை. தனது நலன் சார்ந்து உலகு அயோக்கியரையும் ஆதரிக்கும் அற்புதமானவர்களையும் எதிர்ககும். இது ஒரு பாரிய முனை என்பதால் இதை பின்னூட்டத்தில் ஆராய முடியாது. உலகு தமிழரின் போராட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை அகதித்தமிழனின் வழக்கு விபரங்கள் சார்ந்து தான் ஏற்படுத்திக் கொண்டது என்ற புரிதல் தவறனாது என்பதை மட்டும் கூறிக்கொள்ளலாம்.

அடுத்து கொழும்பில் படித்து முடியும் வரை இருந்தவர்கள் எல்லாம் நாட்;டைக்காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவோ அல்லது தாமும் போராட்டத்தைத் தாங்கவேண்டும் என்பதற்காகவோ மட்டும் தான் இருந்தார்கள் என்று கூறமுடியாது. இலங்கையில் படித்தால் தான் படிப்பு என்ற அறுக்கமுடியாதா பெறுமதிக்குப் பலியாகி படிப்பு முடியும் வரை கொழும்பில் இருந்து விட்டு முடிந்தகையோடு வெளியேறியவர்களும் ஒருவேளை இருக்கக்கூடும். ஏனெனில் சின்னவயதில் இருந்து போடப்படும் பெறுமதிகளின் தழை சிலரின் உளவியலில் அத்தனை வலியது.

இறுதியாக வெள்ளைக்காரன் மதிக்கும்வகையில் விசாவோடு வந்து வந்;தவேலை முடிந்த கையோடு திரும்பினால் தான் துரை மதிப்பார் என்று எண்ணத்தேவையில்லை. எங்கள் தேசங்களிற்கு விசா இன்றித் தான் காலனித்துவம் வந்தது. இன்று அகதித்தமிழன் என்ற பதம் பற்றி அன்று ஊர்ச்சட்டம்பிகளாகத் தன்னிறைவோடு வாழ்ந்தவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதில் காலனித்துவத்தின் பங்கும் உண்டு. எனவே முதலில் வெள்ளை எங்களபை; பற்றி என்ன நினைக்கும் என்ற சிந்தனை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். வெள்ளையையும் புரியாது எங்களையும் புரியாது நாங்கள் புரிதல் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமுடியாது.

இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி.. அகதி அந்தஸ்துக்காக போராட்டத்தை தேசத்தை காட்டிக் கொடுப்பதை நியாயம் என்று கற்பிக்க நீங்கள் வருவீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை இக்கட்டுரை எனக்கு எதுவும் பிரயோசனமாக புதிதாக சொல்லவில்லை. மன்னிக்கவும். :D:icon_idea:

ஏன் இவ்வளவுக்கு கஸ்டப்படுறீங்க. என்னைக் கேட்டாலே சொல்வேனே. எனது படிப்புத் தலைப்புக்கு ஏற்ப பல்கலைக்ககழமும் ஆராய்ச்சிக்கு உதவிய நிறுவனமும் இணைந்து தந்த புலமைப் பரிசில். இதற்கு நான் படித்த பல்கலைக்கழகம் உறுதியான reference கொடுத்திருந்தது. அவ்வளவும் தான். இதற்குப் போய் ஏன் இவ்வளவு முக்கு முக்குறீங்க...???! :lol::icon_idea:

நான் இலங்கையில் யாழ்மாவட்ட மாணவனாக தேர்வெழுதி.. உயர் புள்ளி அடிப்படையில் கொழும்புக்கு தெரிவாகி.. விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற்று தென்னிலங்கைக்கு வந்து... அங்கு படித்துப் பட்டம் பெற்று அங்குள்ள பல்கலைக்கழகம் ஊடாகவே அவர்கள் தெரிவு செய்து அனுப்பியே இங்கு வந்தேன். என்னை இவ்வளவு படிச்சிட்டு திரும்பி வா என்று அனுப்பி வைச்ச பல்கலைக்கழமே கேட்கவில்லை. ஆனால் நீங்க சொல்லுறீங்க.. திரும்பிப் போ என்று. வந்த அலுவல் முடிக்காமல் உங்களின் கோரிக்கைக்காக நான் எப்படி போக முடியும்.

உன்னால் இயன்றளவும் படி என்று தான் சொல்லித் தான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் (குறிப்பாக சிங்களவர்கள்) அனுப்பி வைத்தார்கள். ஆனால் தமிழர்கள் நீங்களோ உங்களின் சுயநலத்தை வெளில சொல்லிடுறம் என்று எங்களை விரட்டி அடிக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.

அட ! reference கொடுத்ததை தான் பல்கலைகழகமே அனுப்பி வைச்சது என்று சொன்னீங்களா..?? இதிலே தான் சிங்களவன் நல்லவன் என்று சொன்னீங்களா ..?? என்னே தத்துவம்..

விடுதலைப்புலிகள் பயண அனுமதி தந்ததை தான் நீங்கள் விடுதலைப்புலிகள் அனுமதி தந்து அனுப்பி வைத்தார்கள் என்று சொன்னீர்களா..??

ஏதோ அனுப்பி வைச்சவங்கள் என்றால் வழிபயணத்துக்கு காசும் கொடுத்து சாப்பாடும் கட்டி கொடுத்துவிட்டவங்கள் மாதிரி அல்லவா எழுதிறீங்கள் :lol::o :o

அந்த காலத்திலே உங்களுக்கு மட்டும் இல்லே. வெளிநாடுக்கு அகதியா போறவங்களுக்கும் பயண அனுமதி தந்தவங்கள் தெரியும் தானே..

ஐயோ ஐயோ ..நான் எங்கே போய் சொல்லுவேன்.

இப்போ தெரிகிறது உங்கள் ஏனைய கருத்துகள் எப்படி இருக்கு என்று..வந்தா வந்த வேலையை பார்த்திட்டு போங்கவன்.. அங்கே நிண்டு சண்டைபிடிக்கவும் தெரியவில்லை. வந்த இடத்திலே வாயை வச்சு கொண்டு சும்மா இருக்கவும் தெரியவில்லை. :D:lol:

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவ்வளவுக்கு கஸ்டப்படுறீங்க. என்னைக் கேட்டாலே சொல்வேனே. எனது படிப்புத் தலைப்புக்கு ஏற்ப பல்கலைக்ககழமும் ஆராய்ச்சிக்கு உதவிய நிறுவனமும் இணைந்து தந்த புலமைப் பரிசில். இதற்கு நான் படித்த பல்கலைக்கழகம் உறுதியான reference கொடுத்திருந்தது. அவ்வளவும் தான். இதற்குப் போய் ஏன் இவ்வளவு முக்கு முக்குறீங்க...???! :D:icon_idea:

எனக்குத் தெரிந்த சிலர் தற்போது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்றுக் கொண்டிருக்கின்றார்கள். COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS ஐத் தவிர வேறு மார்க்கங்களில் ஸ்கொலர்சிப் எடுக்கலாம் என்பது உங்கள் மூலம் தெரிகின்றது. எனவே எப்படியான ஸ்கொலர்ஸிப் எடுக்கலாம் என்பதை தனி ஒரு திரியில் தெரிவித்தால் அங்கு கல்விகற்பவர்களுக்கு உபகாரமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட ! reference கொடுத்ததை தான் பல்கலைகழகமே அனுப்பி வைச்சது என்று சொன்னீங்களா..?? இதிலே தான் சிங்களவன் நல்லவன் என்று சொன்னீங்களா ..?? என்னே தத்துவம்..

விடுதலைப்புலிகள் பயண அனுமதி தந்ததை தான் நீங்கள் விடுதலைப்புலிகள் அனுமதி தந்து அனுப்பி வைத்தார்கள் என்று சொன்னீர்களா..??

ஏதோ அனுப்பி வைச்சவங்கள் என்றால் வழிபயணத்துக்கு காசும் கொடுத்து சாப்பாடும் கட்டி கொடுத்துவிட்டவங்கள் மாதிரி அல்லவா எழுதிறீங்கள் :lol: :lol: :lol:

அந்த காலத்திலே உங்களுக்கு மட்டும் இல்லே. வெளிநாடுக்கு அகதியா போறவங்களுக்கும் பயண அனுமதி தந்தவங்கள் தெரியும் தானே..

ஐயோ ஐயோ ..நான் எங்கே போய் சொல்லுவேன்.

இப்போ தெரிகிறது உங்கள் ஏனைய கருத்துகள் எப்படி இருக்கு என்று..வந்தா வந்த வேலையை பார்த்திட்டு போங்கவன்.. அங்கே நிண்டு சண்டைபிடிக்கவும் தெரியவில்லை. வந்த இடத்திலே வாயை வச்சு கொண்டு சும்மா இருக்கவும் தெரியவில்லை. :icon_idea::D

ஏன் இவ்வளவு கஸ்டப்படுறீங்க. அகதி நாய்கள் என்று வெள்ளைக்காரன் திட்டுறதை சொல்லிப் போட்டம் என்றோ.

அது போக..

reference இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரணம். மற்றது திறமையை பற்றி முழுவதுமாகச் சொல்லுவது.

அந்த ரெவரன்ஸ் அடிப்படையில் தான் எமக்கு புலமைப்பரிசில் கிடைப்பதும் விடுவதும் இருக்கிறது. எனது பேராசிரியர் ரெபரன்ஸ் தந்திட்டு எனக்கு சொன்னது நீ இங்க வந்து எங்களோட இணையனும் என்றதிற்காகவே இந்த ரெபன்ஸை தாறன் என்று.

நான் அதே பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லீம் ஆளிடமும் ரெபரன்ஸ் கேட்டிருந்தேன். இருவருக்கும் சமாளித்து தப்பினார்கள். முஸ்லீம் ஆள் முஸ்லீம்களுக்கே அதிகம் ரெபரன்ஸ் கொடுத்திருக்கிறார். தமிழன் என்று தெரிந்தும்.. 3 சிங்களப் பேராசிரியர்கள்.. வலுவான ரெபரன்ஸை தந்திருந்தமையால் தான் என்னால் இன்று இந்த நிலைக்கு வர முடிந்துள்ளது. அந்த வகையில் நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டே இருக்கிறேன். அதற்காக சிங்கள பேரினவாதிகளை ஆதரிக்கிறேன் என்றில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் பேரினவாதச் சிந்தனை அற்ற நல்லவர்கள் சில பேர் இருக்கவே செய்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு ரெபரன்ஸ் தந்து அனுப்பி வைத்தது பல்கலைக்கழகம் தான். இன்றேல் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் தான் விட்டிருக்கும்..! அந்தவகையில்... உங்களுக்கு நகைச்சுவையாக.. வேடிக்கையாக அது தெரியலாம். ஏனெனில் அகதி அஸ்தந்துக்கு எவ்வளவு பொய் சொல்கிறமோ அந்தளவுக்கு வெற்றி உறுதி..! ஆனால் ஊரில் அழிவும் உறுதி..! ஆனால் எம் பாடு அப்படியல்ல..! :o :o

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த சிலர் தற்போது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்றுக் கொண்டிருக்கின்றார்கள். COMMONWEALTH POSTGRADUATE SCHOLARSHIPS ஐத் தவிர வேறு மார்க்கங்களில் ஸ்கொலர்சிப் எடுக்கலாம் என்பது உங்கள் மூலம் தெரிகின்றது. எனவே எப்படியான ஸ்கொலர்ஸிப் எடுக்கலாம் என்பதை தனி ஒரு திரியில் தெரிவித்தால் அங்கு கல்விகற்பவர்களுக்கு உபகாரமாக இருக்கும்.

இதற்கு தனித் திரி தேவையில்லை. பல்கலைக்கழக மட்ட ஸ்கொலசிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கொழும்பில் உள்ள British council க்கு விஜயம் செய்யும் பல்கலைக்கழக பிரதிநிதிகளுடனாக கலந்துரையாடலில் கலந்து கொண்டு விபரம் கேட்டால் அவர்கள் அறியத்தருவார்கள். அல்லது அந்தந்த பல்கலைக்கழகங்களோடு நேரடியாக துறை சார்ந்து தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.

பல்கலைக்கழக மட்ட ஸ்கொலசிப்.. மற்றும் ஆராய்ச்சி உதவி நிறுவனங்களின் ஸ்கொலசிப்.. பாடத்துறை சார்ந்த ஊக்குவிப்பு பரிசில்கள்.. நிதிச் சலுகைகள்..இப்படிப் பல உண்டு.

உதாரணத்திற்கு..

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/overs-master/index

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/deptscholarships/

நன்றி. வரவுள்ள பட்ஜெட் குறைப்புக் காரணமாக பல்கலைக்கழகங்களிற்கான நிதி கணிசமாகக் குறைக்கப்படவுள்ளது. எனவே எத்தனை பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசல் தாமாகக் கொடுக்கமுன்வருவார்கள் என்று சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அரசியல் காரணங்களோடு அச்சுறுத்தல்களோடு அகதியாக வந்தவர்களையும் நாம் இங்கு கொண்டு வரவில்லை.

ஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மற்றும்படி சட்ட ரீதியாக வந்தவர்கள்.. தேசத்தை காட்டிக் கொடுத்து அதன் துயரை காட்டி பிழைப்பு நடத்தாது வந்தவர்களால் போராட்டத்திற்கு ஆபத்து வரவில்லை..! :icon_idea:

இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்

அத்துடன் இதற்குள் எனக்கு பாதுகாப்புத்தேட முற்படவில்லை.

என் மனச்சாட்சி அதற்கு அனுமதிக்காது.

தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய சுயநலங்கள் சார்ந்து எனது தாயகத்துக்கு ஏதாவது துரோகம் செய்திருந்தால்

அந்த மாவீரச்செல்வங்கள் என்னையும் மன்னிப்பார்களாக.....நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த யாழ்களத்துக்குள்ளை ....

படிச்சவர்,

நேர்மையானவர்,

எல்லாம் தெரிந்தவர்,

கெட்டிக்காரர்,

நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்,

மிகவும் மூளைசாலி,

பண்பானவர்,

அனைவரின் அன்புக்குரியவர்

என அனைத்தும் ஒருவரிடம் மட்டும்தான் இருக்கிறது!

அவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்று சொல்லத்தான் ஆசை

ஆனால் நான் அவரில்லை

இந்த யாழ்களத்துக்குள்ளை ....

படிச்சவர்,

நேர்மையானவர்,

எல்லாம் தெரிந்தவர்,

கெட்டிக்காரர்,

நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்,

மிகவும் மூளைசாலி,

பண்பானவர்,

அனைவரின் அன்புக்குரியவர்

என அனைத்தும் ஒருவரிடம் மட்டும்தான் இருக்கிறது!

அவர் யார்?

அவர் குறுக்காலே மட்டும் போகமாட்டார்.

இந்த யாழ்களத்துக்குள்ளை ....

படிச்சவர்,

நேர்மையானவர்,

எல்லாம் தெரிந்தவர்,

கெட்டிக்காரர்,

நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்,

மிகவும் மூளைசாலி,

பண்பானவர்,

அனைவரின் அன்புக்குரியவர்

என அனைத்தும் ஒருவரிடம் மட்டும்தான் இருக்கிறது!

அவர் யார்?

ஆகா... இப்படிக் கேட்டு நெடுக்குவின் தலையைக் கொண்டுபோய் தண்டவாளத்தில வைக்கிற சதிக்கு நான் வரேல்லை. சொல்லிப்போட்டன் நெடுக்கைத் தண்டவாளத்தில ஆரும் கட்டிப் போட்டா அடுத்ததா ஆதியும் போய் தண்டவாளத்தில கண்டத்தை ஒட்டவச்சுப் படுத்திடுவன்.

evil-monkey.gif

இந்த திரி இவ்வளவு நீண்டதை நினைக்க ஆச்சரியமாக இருக்கு.நானும் லண்டனில் கொஞ்சகாலம் குப்பை கொட்டிய படியால் சிலவற்றை எழுதலாம் என நினைக்கின்றேன்.

பெரும்பாலான எம்மவர்கள் 50,60 களிலேயே மாணவர்களாக ஸ்ருடன்ட் விசாவில் வரத்தொடங்கிவிட்டார்கள்.அவர்கள் காட்ட வேண்டியது பாடாசலை அட்மிசன்,ஸ்பொன்சர் லெட்டெர்,அக்கொமடேசன் லெட்டர்,இந்த ஸ்பொன்சர் லெட்டரை சாட்டாக வைத்து தான் பலரின் விசா மனுக்கள் இலங்கையில் பிரித்தானிய தூதரத்தால் நிராகரிக்கப்படும்.எனது வயது ப்த்த பலர் இந்த விசா மறுத்த நிலையிலேயே 70 களில் மற்ற ஜ்ரோப்பிய நாடுகளுக்கும்,ஓவர்லான்டா ஈரான்,ஈராக் போன்றநாடுகளுக்கும் போக வெளிக்கிட்டார்கள்

லண்டன் வந்து மாணவர்களாக இருந்தவர்களுக்கு கோம் ஒffஇஸ் என்றால் குலை நடுக்கம். ஒவ்வொரு வருடமும் விஸா ரினூயு பண்ணப்போகும் போது நடுங்கிக்கொண்டே போவர்கள் .அவர்கள் பாடசாலைக்கு போன ஒழுங்கிலிருந்து,கள்ளமாக வேலை செய்தாரா ,சோதனை பாஸ்பண்ணுகின்றார என எல்லாம் பார்த்துத்தான் அடுத்த வருட விஸா ரினுயு பண்ணுவார்கள்.ஒழுங்காக படித்து சோதனையும் பாஸ் பண்ணியிருந்தால் 10 வருடத்திற்கு பின் சிற்றிசன்சிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.அந்த நேரத்தில் பலரின் கனவும் அதுவாகவே இருந்தது.பினார் சில குறுக்கு வழிகளை கண்ண்டுபிடிக்க தொடங்கிவிட்டார்கள்.வெள்ளையை கலியாணம் கட்டினால் 3 வருடத்திலேயே சிற்றிசன் சிப்.அதற்கும் இவர்கள் ஒன்றாக குடித்தனம் நடாத்தினார்கள் என புரூப் பண்ணவேண்டும்.அதைவிட விஸா ரினுயு பண்ணமுடியால் ஒழிக்கத்தொடங்கியவர்களும் பலர்.ஸ்கொலர்சிப்பில் வந்து படித்த சிலரும் இருந்தார்கள் அவர்கள் கட்டாயம் திரும்ப போகவேண்டும் ஆனால் ஸொலர்சிப் முடிய அவர்கள் ஏதாவது ஒரு கொம்பனியில் வேலை கேட்டு பின் வேலையின் அடிப்படையில் விசா பெற்றுவிடுவார்கள்.எமது பல டொக்டர்மார் ஸ்கொலர்சிப் முடிய அந்த நேரம் நாட்டிற்கு திரும்பியவர்களே அதிகம்.இலங்கையில் இருந்த பல டொக்டர்மார் வெளிநாட்டில் ஸொலர்சிப்பிற்கு போனவர்களாகத்தான் பலர் இருந்தார்கள்..நாட்டிற்கு அவர்கள் திரும்பி போனதற்கு இரண்டு காரணங்கள் .சேவை மனப்பாங்கு,இலங்கையில் எல்லாமே இலவசமாக படித்ததால் நாட்டிற்று ஏதாவது செய்யவேண்டும் என்ற தன்மை

மேலே தடித்த எழுத்தில் நீங்கள் எழுதியதை உங்களிடத்திலேயே கேள்வியாக விடுகிறேன்.

உயர்கல்வியில் மெரிட் கிடைப்பதே அரிதானது. அதை சிறீலங்காவில் இருந்து கல்வி கற்றிருந்தால் அறிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு வாய்ப்பில் தான் நாங்கள் கொழும்புக்கு வந்தோம். அதுவும் சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு ஓடி வரல்ல. வெளிநாட்டுக்கு பொய் சொல்லி காட்டிக் கொடுத்து அசைலம் அடிக்க ஓடிவந்த ஆக்கள் போல..!

நாங்களும் புலிகளுக்கு நிறையவே உதவி செய்திருக்கிறம். அதை நாங்கள் நிரூபித்தால்.. நீங்கள் பொய் புழுகு சொல்லி.. பெற்ற அகதி அந்தஸ்தை கிழித்தெறிந்துவிட்டு ஊரில் போய் போராட்டத்தை முன்னெடுக்க எம்மோடு உதவிக்காவது வருவீர்களா..???! அதற்கு தயார் என்றால் சொல்லுங்கள்.. உங்கள் சவாலுக்கு நாங்களும் தயார்..! :lol::icon_idea:

நெடுக்கண்ணா

முதலில் எனது சவாலுக்குப் பதில் சொல்லுங்கள் அப்புறம் உங்கள் சாவாலுக்கு வருகிறேன். நான் சொல்லவில்லையே நீங்கள் உதவி செய்தீர்களா இல்லையா என்று.. நீங்கள் தான் சொன்னீர்கள் நாங்கள் உதவி செய்யவில்லை என்று அதற்கு தான் சவால். புரியாமல் திரும்ப சவால் விடாதிர்கள் நெடுக்கண்ணா... வரட்டு கெளரவத்தை கைவிடுங்கள்....

தனிப்பட்ட முறையில் ஒருவரைப்பற்றி ஒருவர் எழுதுவது என்றால் சொல்லுங்கோ உங்களைப்பற்றி நான் எழுதுகிறேன்....

:D:lol: :lol:

Edited by சுஜி

இதையெல்லாம் முற்றுமுழுதாக மாற்றியது 83 கலவரம்.அதற்கு முதல் பல ஜ்ரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு அசைலம் கொடுத்த நிலையில் லண்டன் அசைலம் கொடுத்தாதாக தெரியவில்லை(அமிரின் மகன் காண்டீபன் அசைலம் 76 இலேயே அடித்ததாக சொன்னார்கள் உண்மை பொய் தெரியாது)

83 இற்கு பின் அகதிகள் வரத்தொடங்க லண்டன் வாழ் தமிழர்கள் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது உண்மை.பழங்குடிகள் ஒருவித பிரிட்டிஷ் மனோநிலையிலேயே இருந்தார்கள்.புதுக்க வந்த அகதிகள் ஒருகஸ்டமும் படாமல் உடனேயே அரசாங்க காசுடன் வாழ்க்கைய தொடங்க மாணவர்களாக வந்தவர்கள் அப்பவும் கொலிஜ் பீஸ்,வாழ்க்கை செலவிற்கென மாடாஇ உழைத்துகொண்டிருந்தார்கள்.அதைவிட மாணவராக வந்தவர்கள் பெரும்பாலும் ஓரளவு தகுதியுடனும், அகதியாக வந்த பெரும்பாலோர் அப்படியும் இப்படியும் ஆக இருக்க ஒரு இடைவெளி அப்பவே தொடங்கிவிட்டது.சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து(குரங்குகள் லண்டன் வந்து கூழ் காச்சுத்துகள் என்று புறுபுறுத்தவர்கள் அதிகம்)நடை உடை பாவனை யெல்லாம் தங்களின் மானம் கப்பலேறுவதாக ஒரே அலட்டல்.72 இல் லண்டன் வந்த ஒரு குடும்பத்துடனே தங்கியிருந்தேன்.அவர்கள் நண்பர் குளாம் முழுக்க அதே காலகட்டத்தில் வந்தவர்கள். அகதியாக வந்தவர்கள் ஓரிரு வருடங்களிலேயே வேலையும் எடுத்து நல்ல காரும் வாங்க 10 வருடமாக இவர்கள் பலரால் தாங்கமுடியவில்லை.நியாயமும் தானே.

70 களிலேயே பெரும்படிப்பு படித்து தனி நிறுவனங்கள் நடாத்திக்கொண்டிருந்த தமிழர்கள் இங்கிலாந்தில் பல இடங்களிலும் இருந்தார்கள்.நான் ஆரம்ப கால ஈரோஸ் காரர்களுடன் காசு சேர்க்கப்போகும் போது இவர்களை கண்டு வியந்ததுண்டு .அந்த காலத்திலேயே அரண்மனைபோன்றவீடுகளில் இருந்தவர்கள் இருக்கின்றார்கள்.தேடிவந்த களிக்கு ஒரு நல்ல ரெஸ்ரோடன்டில் சாப்பாடு வாங்கிதந்து பின் இயக்கத்திற்கு நூறு பவுன் செக் கொடுப்பார்கள் .சாப்பாட்டுபில் 200 ஜத் தாண்டும் எனக்கென்ன வெட்டிவிட்டுவருவேன் கூட்டிக்கொண்டு போனவர் புறுபுறுத்துக்கொண்டுவருவார்.

86 களுக்கு பின் நிலமை முற்றுமுழுதாக மாறிவிட்டது.எல்லோரும் ஓரளவிற்கு கலந்துவிட்டார்கள்.இருந்தாலும் வேறு எந்த நாட்டிற்கு போனாலும் இருக்கும் உபசரிப்பு லண்டனில் இல்லை.லண்டன் எவரையும் மாற்றிவிடும்.பிரிட்டிஷ் வெள்ளைகளின் கொன்சவேட்டிவ் தன்மை எம்மவரிலும் மெல்ல தொத்திவிடும்.போன முறை உலக கோப்பை பார்க்க வெஸ்ட் இண்டீஸ் போனபோது லண்டனிலும் இருந்து பல நண்பர்கள் வந்து ஒன்றாகதங்கியிருந்தோம்.அவர்களில் பலர் மனம் விட்டு பழகவே கஸ்டப்படுகின்றார்கள்.டூ மச் போர்மாலிடீஸ்.பாவங்கள் இயற்கையான இருப்பை தொலைத்துவிட்டார்கள் எனது அண்ணர் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு நன்றி. இவ்விடுகையின்மூலம் பலரை அடையாளப்படுத்தியதற்கு. நான் இங்க வந்தது அசைலம் அடித்து நிரந்தர வதிவிட உரிமைபெற. வதிவிட உரிமையும் எடுத்தாயிற்று. நெடுக்ஸ் கூறியதுபோல் பலிகளையும் எனது அசைலம் விண்ணப்பத்தில் விமர்சித்திருந்தேன். இப்போது ஏதோ எனது பொழுதுபோகின்றது ஊரிலையோ அன்றேல் புலம்பெயர்தேசத்திலையோ ஒண்டும் பெரிசாப்படிக்கேல்லை ஆனால் என்னை நம்பி பலர் வாழ்கிறார்கள் அவர்கட்மாகவும் எனது குடும்பத்துக்கமாகவும் இப்போதும் ஓடிக்கொண்டுதானிருக்கிறன். அனைவரையம் மறந்து நானே வாழவேண்டுமென நினைத்திருந்தால் நிறையப் படிச்சிருக்கலாமோ? நெடுக்காருடைய கருத்தினை வாசிச்சதும் யோசிக்கிறன். படிச்சிருக்கலாம் ஆனால் எனது மனதில் இப்போதைய திருப்பி இருக்குமா என்பது சந்தேகமே. மற்றப்படி ஒண்டுமில்லை உலகின் அதிபயங்கரக் குளிர் நிலவும் நாடுகளில் கொல்லதே சிங்களமே தமிழனை என தெருவில் நின்று கூவிய பல்லாயிரம் தமிழர்களில் நானும் ஒருவன் எனும் நினைவுகளே எனக்க பலநூறு கட்டங்கள் பெற்றதற்குச் சமம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இவ்வளவு கஸ்டப்படுறீங்க. அகதி நாய்கள் என்று வெள்ளைக்காரன் திட்டுறதை சொல்லிப் போட்டம் என்றோ.

அது போக..

reference இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரணம். மற்றது திறமையை பற்றி முழுவதுமாகச் சொல்லுவது.

அந்த ரெவரன்ஸ் அடிப்படையில் தான் எமக்கு புலமைப்பரிசில் கிடைப்பதும் விடுவதும் இருக்கிறது. எனது பேராசிரியர் ரெபரன்ஸ் தந்திட்டு எனக்கு சொன்னது நீ இங்க வந்து எங்களோட இணையனும் என்றதிற்காகவே இந்த ரெபன்ஸை தாறன் என்று.

நான் அதே பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லீம் ஆளிடமும் ரெபரன்ஸ் கேட்டிருந்தேன். இருவருக்கும் சமாளித்து தப்பினார்கள். முஸ்லீம் ஆள் முஸ்லீம்களுக்கே அதிகம் ரெபரன்ஸ் கொடுத்திருக்கிறார். தமிழன் என்று தெரிந்தும்.. 3 சிங்களப் பேராசிரியர்கள்.. வலுவான ரெபரன்ஸை தந்திருந்தமையால் தான் என்னால் இன்று இந்த நிலைக்கு வர முடிந்துள்ளது. அந்த வகையில் நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டே இருக்கிறேன். அதற்காக சிங்கள பேரினவாதிகளை ஆதரிக்கிறேன் என்றில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் பேரினவாதச் சிந்தனை அற்ற நல்லவர்கள் சில பேர் இருக்கவே செய்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு ரெபரன்ஸ் தந்து அனுப்பி வைத்தது பல்கலைக்கழகம் தான். இன்றேல் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் தான் விட்டிருக்கும்..! அந்தவகையில்... உங்களுக்கு நகைச்சுவையாக.. வேடிக்கையாக அது தெரியலாம். ஏனெனில் அகதி அஸ்தந்துக்கு எவ்வளவு பொய் சொல்கிறமோ அந்தளவுக்கு வெற்றி உறுதி..! ஆனால் ஊரில் அழிவும் உறுதி..! ஆனால் எம் பாடு அப்படியல்ல..! :icon_idea::lol:

சிங்களவனின்ர காசில படிச்ச நீங்கள் சிங்களவனுக்கு துரோக செய்ய கூடாது, ""உப்பிட்டவனை உள் அளவும் நினைக்க வேண்டும்"", இன்றில் இருந்து நமோ நமோ சிறீலங்கா தாயே, சிறிமாவின்ர பெட்டக்கு கலியானம் தாயே......... பாட வேணும் சொல்லிப்போட்டன். :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஏதோ ஒரு வகையில் ஏமாறுகிறான்

சிலர் பணத்துக்கு........

சிலர் பதவிக்கு.........

சிலர் கதிரைக்கு.......

சிலர் பெண்ணுக்கு........

நெடுக்ஸ் படிப்புக்கு.....

அதேபோல்

தமிழன் ஏதாவது ஒன்றுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருக்கின்றான்

நெடுக்ஸ் பல்கலைக்கழகத்துக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் களைச்சுப் போனப் பிறகு வாறன், இரண்டு விஷயம் சொல்லவே வேணும் போல இருக்கிறதால:

நெடுக்கு,

1. நெடுக்கு, உங்கட கருத்துக்களுடைய அடிப்படையே பிழை (நீங்கள் தந்த சில தரவுகளும் பிழை, ஆனால் மூலாதரமே பிழையா இருக்கும் போது தரவுகளைப் பற்றிக் கதைச்சு என்ன வரப் போகுது? அவற்றை நான் கிழறப் போறதில்லை!). ஒவ்வொருவரும் தங்கட குடும்பம், தங்கட சொந்தப் பாதுகாப்பு இதுகளுக்காக சில பொய்கள் சொல்லலாம். அது யாருடையவும் உயிருக்கு ஆபத்தாக முடியாத வரைக்கும் (அதோடு சில உயிர்களைக் கரை சேர்க்க உதவும் பட்சத்தில்!) பெரிய குற்றமில்லை. என் மூத்த அண்ணர் மார் இருவரும் சட்ட ரீதியாக ஐரோப்பா வந்தார்கள், ஐரோப்பிய ஒன்றியம் எண்ட ஒன்று உருவாக முன்னர். வந்து சேர்ந்த நாட்டில் பிழைப்புக் கஷ்டமாக இருந்த படியால, சட்டவிரோதமாக இன்னொரு நாட்டுக்குப் போய் உழைச்சு என்னைப் படிப்பித்தார்கள். நான் படிக்க வெளிநாடு வந்த போது என் விசாக்கட்டணம், பயணச் செலவு எல்லாம் இந்த இரண்டு அசைலம் அடித்த அண்ணர்மாரிடமிருந்து வந்தது. இண்டைக்கும் நான் எட்டு மணித்தியாலத்தில் உழைக்கும் பணத்தை அவர்கள் குளிரிலும் பனியிலும் பதினாறு மணி நேரம் வேலை செய்து உழைக்கிறார்கள், இன்னும் பலருக்கு உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் விடுதலைக்கு ஆப்பு வைத்தார்கள் என்பதும், இவர்கள் போன்றோர் "படித்தவர்களிலும்" பார்க்க கொஞ்சம் குறைந்தோர் என்று சொல்வதும் பிழை.

2. மேலே இன்னுமொருவன் எழுதிய இடுகை உங்களுக்கு ஒன்றுமே புதிதாகக் கற்பிக்கவில்லை என்கிறீர்கள். உயர் கல்வி, கலாநிதிப் பட்டம் போன்றவற்றின் இன்றைய நிலையை அப்படியே அவர் சொல்லியிருக்கிறார். ஆய்வுக்கான தொழில் நுட்ப வசதிகளும் உபகரணங்களும் இருக்காத காலங்களில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி எடு கோள்களை எடுத்து ஆராய்ந்து எடுகோள்களை நிரூபித்த பி.எச்.டி ஆய்வு மாதிரி அல்ல இப்போதைய ஆய்வுகள். சில வகுப்புகளை எடுத்து விட்டு ஒரு அல்லது சில எடு கோள்களை பல நவீன உபகரணங்களின் துணையுடன் ஆய்வு செய்து முடிவுகளை வெளியீடுகளாகவும் ஆய்வுக் கட்டுரையாகவும் சமர்ப்பித்தால் பி.எச்.டி கிடைக்கிறது (உங்கள் விடயத்தில் வேறு மாதிரி என்று சொல்ல முனையாதீர்கள், நான் எல்லாப் பரீட்சைகளையும் பாஸ் பண்ணிப் போட்டுத் தான் எழுதுகிறேன் இதை!). இது உங்கள் பயணத்தின் ஆரம்பம். அனேகமாக உங்கள் பி.எச்.டி ஆய்வு உங்களுக்கு ஒரு ஆய்வுப் பயிற்சியாகவும் வேலைச் சந்தையில் உங்கள் வாய்ப்பைக் கூட்டும் ஒரு சான்றிதழாகவும் மட்டுமே இருக்கும், இதை விட வேறெந்த வகையிலும் பி.எச்.டி உங்களை மற்றவரிடம் இருந்து உயர்த்திக் காட்டாது.

வியாக்கியானங்களால் பிழை என்று சொல்வதை நீதிமன்றங்களில் சொல்ல முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்கள் விடுதலைப்புலிகள் சார்ந்து தமிழர்கள் வழங்கிய கூற்றுக்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் படியே அதிகம் விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் நிம்மதியாக வாழ விடவில்லை என்பதாகக் கருதி அகதி அந்தஸ்து வழங்கி வந்துள்ளன.

இந்த ஒன்றே போதும்.. அகதித் தமிழர்கள் தங்கள் சுயபிழைப்புக்காக பொய் சொல்லி.. விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் பெற்றுக் கொடுத்த அங்கீகாரத்தை இனங்காட்ட.

இதற்கும் மேலும் இங்கு வியாக்கியானம் செய்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இந்தத் திரியில் இன்னுமொருவனின் கருத்துக்கள் பலவற்றோடு எனக்கு உடன்பாடில்லை. அவர் சில புறநடைகளின் உதவியோடு பொது விதியை நிர்ணயிக்க முயல்வது.. அபந்தமாகத் தெரிகிறது. அவ்வளவே..! :icon_idea::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சொல்ல மறந்திட்டன்.. (எல்லாம் என்னை முதலாவதாக யாழில் வரவேற்ற உறவின் நன்மை கருதித்தான்!)

நெடுக்ஸ் இப்பவும் மாணவ விசாவில் இருந்தால், படிப்பு முடிய ஒரு வருடத்திற்குள் திரும்பவேண்டி வரலாம். எனவே நல்ல கம்பனியாய் பார்த்து அல்லது படிக்கும் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் முழுநேர வேலைசெய்யும் அனுமதியைப் பெற்றால், இன்னமும் இரண்டு வருடங்களுக்குள் (நீங்கள் 2002/2003 academic year இல் வந்திருப்பீர்கள் என்பதை யாழ் களத்தில் உள்ள உங்கள் கருத்துக்களில் இருந்து அறியமுடிகின்றது) நிரந்தர வதிவுடவுரிமையப் பெற்றுக்கொள்ளலாம்! முழுநேர வேலைசெய்யும் அனுமதியை தற்போதுள்ள பொருளாதார சூழலில் முன்னனுபவம் இன்றி எடுப்பது சிரமமாதலால், தற்போதைய பேராசியர்களின் உதவியை நாடுவது நல்லது. இல்லாதுவிடில், இன்னுமொரு துறையில் ஒன்றிரண்டு வருடங்கள் படிப்பைத் தொடர்ந்தால் ஒரு மாதிரி நிரந்தர வதிவிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வருட எல்லைக்குள் நீங்கள் காலத்தை ஓட்டிவிடலாம். எப்படியோ நிரந்தரக் குடியுரிமையை எடுக்காமல் இலங்கைக்குப் போய்ச் சேவகம் செய்யப் போகின்றேன் என்று போய்விடாதீர்கள். (கோத்தபாயா அமெரிக்கன் பிரஜையாக இருந்தும் நாட்டுக்குச் சேவை செய்யவில்லையா என்ன :icon_idea: )

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் புடிச்ச முயலுக்கு மூண்டுகால் எண்டு மல்லுக்கட்டுறவையாலை நாட்டுக்கும் பிரயோசனமில்லை வீட்டுக்கும் பிரயோசனமில்லை.

ஒருமனிசனுக்கு படிப்பறிவு எவ்வளவுதான் இருந்தாலும் பகுத்தறிவு இல்லாட்டில்......... சொல்லி வேலையில்லையப்பா :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சொல்ல மறந்திட்டன்.. (எல்லாம் என்னை முதலாவதாக யாழில் வரவேற்ற உறவின் நன்மை கருதித்தான்!)

நெடுக்ஸ் இப்பவும் மாணவ விசாவில் இருந்தால், படிப்பு முடிய ஒரு வருடத்திற்குள் திரும்பவேண்டி வரலாம். எனவே நல்ல கம்பனியாய் பார்த்து அல்லது படிக்கும் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் முழுநேர வேலைசெய்யும் அனுமதியைப் பெற்றால், இன்னமும் இரண்டு வருடங்களுக்குள் (நீங்கள் 2002/2003 academic year இல் வந்திருப்பீர்கள் என்பதை யாழ் களத்தில் உள்ள உங்கள் கருத்துக்களில் இருந்து அறியமுடிகின்றது) நிரந்தர வதிவுடவுரிமையப் பெற்றுக்கொள்ளலாம்! முழுநேர வேலைசெய்யும் அனுமதியை தற்போதுள்ள பொருளாதார சூழலில் முன்னனுபவம் இன்றி எடுப்பது சிரமமாதலால், தற்போதைய பேராசியர்களின் உதவியை நாடுவது நல்லது. இல்லாதுவிடில், இன்னுமொரு துறையில் ஒன்றிரண்டு வருடங்கள் படிப்பைத் தொடர்ந்தால் ஒரு மாதிரி நிரந்தர வதிவிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வருட எல்லைக்குள் நீங்கள் காலத்தை ஓட்டிவிடலாம். எப்படியோ நிரந்தரக் குடியுரிமையை எடுக்காமல் இலங்கைக்குப் போய்ச் சேவகம் செய்யப் போகின்றேன் என்று போய்விடாதீர்கள். (கோத்தபாயா அமெரிக்கன் பிரஜையாக இருந்தும் நாட்டுக்குச் சேவை செய்யவில்லையா என்ன :D )

உங்கள் கருத்துத் தவறானது. நான் பிரித்தானியாவுக்குள் மீள நுழைந்தது 2006/7 கல்வியாண்டில் ஆகும்.

படிப்பு முடிய போவதில் மாணவர்களுக்கு எந்தச் சிரமும் இல்லை. அந்த வகையில் எனக்கும் சிரமமில்லை..! :icon_idea::lol:

தான் புடிச்ச முயலுக்கு மூண்டுகால் எண்டு மல்லுக்கட்டுறவையாலை நாட்டுக்கும் பிரயோசனமில்லை வீட்டுக்கும் பிரயோசனமில்லை.

ஒருமனிசனுக்கு படிப்பறிவு எவ்வளவுதான் இருந்தாலும் பகுத்தறிவு இல்லாட்டில்......... சொல்லி வேலையில்லையப்பா :lol:

கு.சாண்ணா.. இந்த முயல் பிடிச்சு அதற்கு எத்தினை கால் என்று எண்ணுறதை இன்னும் எத்தனை பரம்பரைக்கு செய்யுறதா உத்தேசம். இது படிப்பறிவும் இல்ல.. பகுத்தறிவும் அல்ல.. பட்டறிவும் அல்ல.. மூடத்தனம். முதலில் உதுகளை கைவிட்டு.. வெளில வாங்கோ. அகதி என்று அலைஞ்சு கஸ்டப்பட்டு நீங்களும் தான் அடுத்தவன் சாவு வீட்டை வைச்சு வாழ்ந்து சப்பைக் கட்டுக் கட்டிறது.. இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லுங்கோ.. :o:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.