Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா....

எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டார்.

நான் குவான்டேர்ஸில் தான் சிட்னியிலிருந்து சிங்கபூருக்கு போனனான்,இவன்கன்ட பிளேன் ஒருசததிற்கு உதவாது ,சாப்பாடும் சரியில்லை பணிப்பெண்களும் சரி ஆண்களும் சரி உதவாக்கரைகள் . சிங்கப்பூரிலிருந்து சிறிலங்கன் எயர்லைன்ஸில் தான் அங்கால போனனான்,"அது எல்லோ பிளைட்"நல்ல சாப்பாடும் அந்தமாதிரி உபசரிப்பும். கிரிபத்தும் சம்பலும் தந்தாங்கள் சொல்லி வேலையில்லை.கட்டுநாயக்காவில இறங்கினவுடன் என்னை அறியாமல் அழுது போட்டேன்,உன்னான அது ஆனந்த கண்ணீர்தான்.மனசுக்குள் ஒரு பயம் இருந்தது ஏனென்றால் இங்க சிட்னியில் ஒரு சில ஊர்வலங்களுக்கு போனனான் அதில என்னுடைய படங்களை எடுத்து ஆர்மிக்காரனுக்கு எங்கன்ட சனம் கொடுத்திருக்குமோ என்ற பயம்தான் .எங்கன்ட சனத்தைப்பற்றி உனக்கு தெரியும்தானே யாழ்மையவாத சிந்தனை கொண்ட சனம்தானே..(கிகிகிகி)ஆனால் ஆர்மிக்காரன் ஒரு தொந்தரவும் தரவில்லை மாத்தையா என்று நல்ல மரியாதையாகத் தான் கதைச்சவன் .எனக்கு 3 பாசையும் நல்லாய் தெரியும்தானே அதால எனக்கு சிறிலங்காவில எந்த மூலைக்கும் போய்வர முடியும் உன்னை மாதிரி 2 பாசைக்காரன் இல்லைத்தானே....

வெள்ளவத்தைக்கு போயிட்டு அடுத்தநாளே யாழ்ப்பாணத்துக்கு போவதற்கு பஸ்ஸுக்கு டிக்கட்டை புக்பண்ணிப்போட்டேன்.கொழும்பு இப்ப அந்த மாதிரியிருக்குதடா அம்பி,30 வருசத்துக்கு முதல் நான் கொழும்ம்பில வேலை பார்க்கும் பொழுது இருந்தமாதிரி நல்லாயிருக்கு(?)

கொழும்பில ஆட்களை கடத்துறாங்கள் என்று இணையங்களில் செய்தி போடுறாங்கள் அப்ப அது பொய்யோ அண்ணே?

உவங்கள் உந்த இணையக்காரங்களை நம்பக்கூடாது,தாங்களும் தங்கட இனையத்தளமும் புகழ் பெற வேணும் என்று கண்டதையும் போடுறாங்கள்.உவங்களை நம்பக்கூடாது .நான் போயிட்டு சேவ்வாக வந்திட்டந்தானே.

யாழ்ப்பாணத்துக்கு அந்த காலத்தில கே.ஜி காரான் பஸ் விட்டான் அது மாதிரி இப்ப டக்கிளஸ் விடுகிறான் சீ சீ விடுகிறார்.அவன் சீ அவர் இப்ப யாழ்ப்பாணத்தை நல்ல டிவலெப்மன்ட் செய்யிறார் என்று டக்கிளஸ்க்கு ஒரு புகழ்மாலையும் போட்டார்.

ஊருக்கு போய் செய்த முதல் வேலை சாரத்தை கட்டிக்கொண்டு கிணற்றில போய் நல்லாய் அள்ளி தலை யில தண்ணி ஊத்தி குளிச்சன் ,ஜயோ அந்த சுகமிருக்கே சொல்ல வார்த்தையில்லை.குளிச்சுப்போட்டு எங்கன்ட கோயிலுக்கு போனேன்,ஒருத்தரும் என்னை மட்டுக்கட்டவி

ல்லை ஆனால் நான் எல்லோரையும் கண்டுபிடிச்சிட்டேன் .

அண்ணே ஆர்மிக்காரன் சனத்தோட எப்படி?

அவங்கள் தாங்களும் தங்கடபாடும் எதாவது நொட்டினால்தான் பிரச்சனை மற்றும்படி அவங்கள் பேசாமல்தான் இருக்கிறாங்கள்.அனேகமான ஆர்மிக்காரங்கள் தமிழ் கதைக்கிறாங்கள்.நான் கோயிலில் நிக்கும் பொழுது இரண்டு ஆர்மிக்காரங்கள் வேஷ்டியுடன் வந்தவங்கள் நல்ல பயபக்தியுடன் கூம்பிட்டவங்கள்.கப்டன்,மேஜர் தர அதிகாரிகள் போல கிடந்திச்சு.போகும் பொழு து என்ட பேத்தியின் கன்னத்தில கிள்ளிப்போட்டு போனவன்.

இப்படித்தான் ஒருநாள் என்ட மகளின் பெயரை சொல்லி கூப்பிட்டு கேட்டுது எட்டிப்பார்த்தேன் ஒரு ஆர்மிக்காரன் வெளியில நின்று தேசிக்காய் தாங்கோ என்று கேட்டான். அவ்வளவு அன்னியோன்னியமாக பழகிறான். என்னை கண்டவுடன் யார் என்று விசாரித்தான் மகளும் அது என்னுடைய அப்பா நேற்றுத்தான் வந்தவர் என்று சொல்ல அவன் உள்ள வந்து என்னுடன தமிழில் கதைக்க தொடங்கினான் நான் சிங்களத்தில் கதைக்க அவன் அதிர்ந்து போனான்.சிங்களத்தில பழமொழி இரண்டு சொல்ல அவன் முழித்த முழி இருக்கே அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பாக இருக்குது. அதற்கு பிறகு அந்த ஆர்மிக்காரன் எங்கு கண்டாலும் என்னோட சிங்களத்தில் கதைப்பான் மாத்தையா என்று சொல்லி நல்லமரியாதை.

எத்தனை ஆர்மிக்காரன் சரியாம் இன்றைக்கு பெடியள் அடிச்ச அடியில என்று கேட்டு சந்தோசப்பட்டதும் நீங்கள்தான் இப்ப ஆர்மிக்காரன் உங்களை மாத்தையா என்று சொன்ன உடனே நல்லவன் என் செர்டிவிக்கேட் கொடுப்பதும் நீங்கள்தான் அண்ணே என்று சொன்னதும் கந்தர் கடுப்பானாலும் காட்டிக்கொள்ளவில்லை.

தம்பி எங்கன்ட பள்ளிக்கூட பெடி பெட்டையள் கொஞ்சம் அட்டகாசம் நெடுகளும் ரொட்டில டியுசனுக்கு என்று சைக்கிளில் திரியுதுகள்.பெண்பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருப்பம் என்றில்லை எப்பவும் ரொட்டிலதான் அதுகளின்ட வாழ்க்கை போகுது.

பெடியளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் பொழுது எல்லாம் ஒழுங்காக இருந்தது,இப்ப எல்லாம் தலைகீழாக கிடக்குது.களவு ,கொள்ளை, தெரு சண்டித்தணம்,சராயத்தை குடிச்சு போட்டு வம்புக்கு ஆட்களை இழுக்கிறது எல்லாம் அந்த மாதிரி நடக்குது.

அண்ணே பெடியள் திரும்பி வந்துஅடிப்பாங்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்களோ என்று வம்புக்கு இழுத்தேன்.பெடியள் வரவேணும் வந்து உந்த களவு ,கொள்ளைகளை தடுக்கவேணும்,பெண்களுடன் சேட்டை விடுகிற கோஸ்டிகள்,குடிச்சுபோட்டு சண்டித்தனம் செய்யிறவன்களை எல்லாம் பிடிச்சு பச்சை மட்டையாள் அடிச்சு அடக்கி வைக்க வேணும்.நான் நினக்கிறேன் பெடியள் இன்னும் வன்னிகாட்டுக்குள் மறைந்து இருக்கிறான்கள் என்றுதான் ,பாருடாதம்பி ஒருநாளைக்கு வைப்பாங்கள் ஆப்பு அப்ப இந்த ஆர்மிக்காரங்கள் எடுப்பாங்கள் ஒட்டம்.

அது சரி அண்ணே நேற்று உங்களை பப்பில் பியர்கிளாஸுடன் strippers சோவில் வெள்ளைகள் குழுக்கி ஆடினதை பார்த்துகொண்டிருந்ததாக கனகர் சொன்னவர் உண்மையோ?அட அந்த கதை உனக்கு தெரிந்துவிட்டதோ?என்ட வயசில எனக்கு எப்படி தப்புதாளங்களை கொன்றோல் பண்னுவது என்று தெரியும் ,அது போக இந்த நாட்டுக்கரான்களுக்கு ஏற்ற மாதிரி நடக்க வேணும் இல்லாவிடில் சுத்த பட்டிக்காடு என்று நினைப்பாங்கள்.ஆனால் ஊரில சனம் செய்யக்கூடாதுதடா நாங்கள் பரம்பரைபரபரையாக கட்டி காத்த கலாச்சாரம் என்னவாது.

உதுகளை விடு நான் உன்னை சந்திக்க வந்த முக்கிய காரணம் ,என்னுடைய சொந்தகாரப்பெடியன் ஒருத்தனை கூப்பிட வேணும் உந்த ஏஜன்ட்காரனை உனக்கு தெரியும்தானே ஒருக்கா ஒழுங்கு படித்துதாடா தம்பி எவ்வவளவு காசு என்றாலும் நான் தாறேன்.

அண்ணே இப்பதானே சொன்னீங்கள் யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு என்று பிறகு ஏன் அந்த பெடியனை இங்க கூப்பிட்டு கஸ்ட படுத்த யோசிக்கிறீயள் ,நீங்கள் எல்லாம் இங்க வந்து நாட்டில பிரச்சனை இல்லை என்று சொல்லி திரிவதால் அவுஸ்ரேலியா விசா கொடுக்கிறாங்கள் இல்லை .

அதுகளப்பற்றி நீ யோசிக்க வேண்டாம் ,அது நான் லோயரை பிடிச்சு சேட் பண்ணி போடுவேன் ,அவனை பத்திரிகை துறையில்தான் வேலை செய்ய விட்டிருக்கிறேன்.......சிறிலன்காவில் பத்திரிகையாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லைதானே.......

இந்த கிறுக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து லீவுக்கு 10 நாள் போய் நின்று போட்டு திரும்பி வந்து சொந்தக்காரன்களை கூப்பிட வேணும் ஆனால் யாழ் நல்லாய் இருக்கு என்று புலம்பும் புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிறுக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து லீவுக்கு 10 நாள் போய் நின்று போட்டு திரும்பி வந்து சொந்தக்காரன்களை கூப்பிட வேணும் ஆனால் யாழ் நல்லாய் இருக்கு என்று புலம்பும் புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம்.

புத்தன் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போறம். புலம்பெயர்ந்து... ஆமிக்காரன் விரட்டாமலே.. புலிகளட்ட கஸ்டப்பட்டு தப்பி... நாங்களா கொழும்புக்கு ஓடி வந்து... அங்க லொச்சில கிடந்து அனுபவிச்சிட்டு.. ஏஜென்சிக்காரனட்டை இலட்சங்களை கட்டி.. களவா சட்ட விரோதமா பனிக்குளிர்கள் எல்லாம் தாண்டி வந்து.. பிறகு சொலிசிற்றரட்ட ஓடித்திருந்து.. எவ்வளவோ பொய்களைச் சொல்லக் கற்று.. அகதி அந்தஸ்து வாங்கி... வெளிநாடுக்கு வந்து நாங்கள் படும் துன்பத்தை... பெரும்பான்மை மக்களின் துயரை.. நீங்கள் சொகுசு வாழ்க்கை என்று சொல்வது அவர்களின் மனித உரிமையை மீறும் செயலாகும். அது மட்டுமன்றி சிலரின் தனிப்பட்ட தகவல்களை அவர் தன்ர குடும்பத்தை களவா எடுக்கப் போறதை எல்லாம்.. கதை என்ற போர்வையில் பப்ளிக்கில சொல்லுறது அப்பட்டமான மனித உரிமை மீறல் மட்டுமன்றி இனத்தை காட்டிக் கொடுத்து அதன் மானத்தை வாங்குவது போன்றது. அந்த வகையில் உங்கள் மீது மான நஸ்ட.. சாரி மனித உரிமை மீறல் வழக்குப் போட்டு உங்களை மகிந்த போல பிளேன் ஏறாமல் செய்யுறம் பாருங்கோ. உங்களுக்கு மாணவ விசாவில வந்ததுகளுக்கு எல்லாம் எங்களைக் கண்டா ஒரு நக்கல் என்ன. செய்யுறம் பாருங்கோ உங்களுக்கு..! :wub: :wub:

(இது இக்கதைக்கான புலம்பெயர் அகதித் தமிழர்களின் கருத்து.)

நல்ல கதை புத்து. அப்படியே யதார்த்தத்தை அள்ளி விசிறி இருக்கீங்க. :wub:

(இது இக்கதைக்கான எனது கருத்து.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

//கொழும்ம்பில வேலை பார்க்கும் பொழுது இருந்தமாதிரி நல்லாயிருக்கு(?)//

ஏன் கேள்விக்குறி[?] :wub::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

கதை தமிழரின் குழம்பின நிலையைக் காட்டுது.



  • ஊர் ஆமி இருந்தாலும் நல்லா இருக்கு எண்டும் சொல்லவேணும்
  • ஊரில கட்டுப்பாடுகளுக்கு புலியும் வேணும்
  • ஊரில் இருக்கிறவை வெளிநாடுகளுக்கு வந்து செட்டில் ஆகவும் வேணும்
  • செட்டில் பண்ணினவை போய் வரக்கூடியதாகவும் இருக்கவேணும்

யதார்த்தம் எண்டது கதையுக்கை நல்லா ஊறிக்கிடக்கு... :wub:

கதை தமிழரின் குழம்பின நிலையைக் காட்டுது.



  • ஊர் ஆமி இருந்தாலும் நல்லா இருக்கு எண்டும் சொல்லவேணும்
  • ஊரில கட்டுப்பாடுகளுக்கு புலியும் வேணும்
  • ஊரில் இருக்கிறவை வெளிநாடுகளுக்கு வந்து செட்டில் ஆகவும் வேணும்
  • செட்டில் பண்ணினவை போய் வரக்கூடியதாகவும் இருக்கவேணும்

உது டார்வீனின் இசைவாக்க தொகுதி... கடவுள் குரங்கு மாதிரி தோற்றத்தில் இருப்பார், இல்லை குதிரை மாதிரி தோற்றத்தில் தான் இருப்பார் எண்டு சொன்னால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டினம்.. கடவுள் மனித உருவத்திலை மட்டும் தான் இருப்பார் எண்டுவினம்....

அது போல தான் யாழ்ப்பாணத்தை இப்படியே பாத்து பழகினவர்கள் இதவிட வேறை விதத்தில் கற்பனை செய்து பார்க்க கூட தயார் இல்லை...

இங்கை லண்டனிலையும் நான் பொலீசை முதல் முதலில் கண்டதும் பம்மினதும், ஹெலியை கண்டதும் மறைவு தேட வேணும் போல இருந்ததும் கூட எனக்கு இப்ப நினைக்கும் போதும் சிரிப்பு வரும்...

ஆனால் இது ஒண்டும் இல்லாத ஈழத்தை என்னாலை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படைப்பு புத்தன்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுத்தமிழில் அனுபவப்பகிர்வுக் கதை நன்றாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு கள்ளுக்கொட்டில் பாருங்கோ இங்க வாந்தியுமெடுக்கலாம் மகாபாரதமும் கதைக்கலாம் நான் சொல்லேல்ல பாருங்க படிச்சவையள் சொல்லினம். ஆனால் இந்த இடுகை அந்தமாதிரி இருக்குதுங்கோ.

நாடு நல்லாக இருப்பதற்கும் வெளிநாடு போவதற்கும் சம்பந்தமில்லை.தமிழீழம் கிடைத்தாலும் போக வழியிருதால் போகிறவர்கள் போய்க்கொண்டுதானிருப்பார்கள்.

வெளிநாட்டு வசதியும் ,காசும் எவரையும் இழுக்கும்.எந்த பிரச்சனையுமில்லாத நாட்டிலுள்ள மிக பணக்காரர்களே அமெரிக்கா,லண்டன் என்றுதான் செட்டில் ஆகின்றார்கள்.(மொனிகா செலஸ்.லெண்டில்,பட்டியல் வெகு நீளம்).

யாழ்ப்பாணத்தில் இருந்து போனகிழமை ஒருவர் வந்திருந்தார்(வெளிக்கிட்டு2மாதமாம்).$40,000கொடுத்ததாகசொன்னார்.கியூபா,இகுடோர்,பெலீஸ்,கொன்டுராஸ்,மெக்சிக்கோ,யூ,எஸ் ஊடாக வந்திருந்தார்.படித்தோ அல்லது படிக்காவிட்டாலோ எதிர்காலம் வெளிநாடு என்றுதான் பலரது முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் இப்போது நன்றாகத்தான் இருக்குது ஒரு சில விடையங்களைத் தவிர,அடிபாடுநடந்துதெண்டால் ஓரிரவரை இழுத்துவிடலாம் என்பவர்களுக்கு அங்க நடக்கும் விடையங்கள் பிடிக்காதுதான். அதைவிட எங்களால நாட்டுக்கு இப்பபோகமுடியாது என்பவர்கட்கும்தான். இங்க இருக்கிற சொகுசுவாழ்கை, அடுத்தவேளை பற்றிய உறுதிப்பாடு இவை அனைத்தையும் விட்டுட்டு யாராலும் திடீரெனப் போகமுடியாது. விருப்பமெண்டால் கொஞசம் காசைச் சேத்துக்கொண்டு ஒருமாதம் மட்டில மினிக்கிப்போட்டு வரலாம். அதைவிட அங்க நீங்கள் ஒண்டும் செய்யமுடியாது. உங்களக்கத் தெரிந்த தொழில்நுடப அறிவுடன் எதாவது தொழில் முயற்சியில் ஈடுபட்டு முன்னேறி பலருக்கு வேலைவாய்புபும் வழங்கலாம் ஆனால் உங்களது தொழில் முயற்சியில் மற்றப்படியார் கண் வைத்துவிட்டீச்சினமெண்டால் நீங்கள் அசைய முடியாது புலிப்பட்டம் கட்டி, புலம்பெயர் தேசத்தில புலிகளது காசில இங்கவந்து தொழில் முதலீடு செய்யினமெண்டு உள்ளதள்ளிப்போடுவினம் அப்புறமென்ன உங்கட தொழில் அவங்கட கைவசம். எண்டாலும்கூட வளர்ந்த படித்த பழகிய விளையாடிய நினைவுகளால் விதியே தமிழ்சாதியை என்னசெய்யப்போகிறாய் எனக் கூறி தலையில அடித்து ஐயோ எண்டு கதறியழவேண்டும்போலுள்ளது. நான் ஒண்டும் சுயநலமில்லாத முனிவரல்ல. மற்றையவர்கட்கு இடைஞ்சல் வராத நியாயமான ஆசைகளை நிறைவேற்றவே என்னால் முடியாதுள்ளது. எனது குடும்பத்தில் நான் மட்டுமே நாடெனும் பட்டியிலிருந்து விலகிய கருப்பாடு. எந்தை தாய் சகோதரங்கள் நால்வரது ஈமையிலும் இறுதியகவேனும் அவர்களது முகங்களைக் காண்கின்ற பாக்கியமற்ற பாவி. எனினும் வெள்ளி நிலாவளிய கிளாளிக்கடலில் கரும்புலிகள் இருபுறமும் கட்டவுட் போட்டவடன் பயணித்த அந்த சதந்திரமான தருணங்களை மனதில் அசைபோட்டு இனிவரும்காலம் நல்லகாலமாகவும் என் தலைவன் வரும் காலமாகவுமிருக்கவுமெனும் ஏக்கத்துடன்இனியஅக் காலத்தின் வரவுக்காய்க் காத்திருக்கிறேன். புலம்பெயர் தேசத்தின் இனிய தருணங்கள் எவையென என்னிடம் கேட்பின் புலிக்கொடி கையிலேந்தி நாம் வாழ்கின்ற நாடுகளின் தெருக்களில் போராட்டம் நடாத்திய நாட்களே. இனியும் அந்நாட்கள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உண்மையைச்சொன்னால் கோவிக்கக்கூடாது

எல்லோரையும் தொடவேண்டும் என்பதற்காக கதையைக்கோட்டை விட்டது போல் எனக்குதெரிகிறது

இங்கு இதை எழுதியது தப்பென்றால் மன்னிக்கவும்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போறம்.D

நல்ல கதை புத்து. அப்படியே யதார்த்தத்தை அள்ளி விசிறி இருக்கீங்க. :D

(இது இக்கதைக்கான எனது கருத்து.)

எனக்கு எதிராக எடுக்க வேண்டாம் ..இதுக்கு எல்லாம் காரணம் எனது முன்னாள் தளபதி ஜில்.. :):(

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் நெடுக்ஸ்

//கொழும்ம்பில வேலை பார்க்கும் பொழுது இருந்தமாதிரி நல்லாயிருக்கு(?)//

ஏன் கேள்விக்குறி[?] :D:D:D

சும்மா ஒரு நக்கலுக்குத்தான் ...நண்றிகள் ரதி

யதார்த்தம் எண்டது கதையுக்கை நல்லா ஊறிக்கிடக்கு... :)

நன்றிகள் கிருபன்....

நல்லதொரு படைப்பு புத்தன்..! :D

நன்றிகள் இசை

பேச்சுத்தமிழில் அனுபவப்பகிர்வுக் கதை நன்றாய் இருக்கிறது.

நன்றிகள் நிலாமதி

நல்ல கதை புத்து. :D

நன்றிகள் சஜீவன்

. ஆனால் இந்த இடுகை அந்தமாதிரி இருக்குதுங்கோ.

நன்றியுங்கோ எழுஞாயிறு

நாடு நல்லாக இருப்பதற்கும் வெளிநாடு போவதற்கும் சம்பந்தமில்லை.

பணக்காரங்கள் வாரதுக்கும் எங்களுடைய ஆட்கள் வாரதற்கும் வித்தியாசம் இருக்கு ....பணக்காரங்கள் வந்து பார்ப்பார்கள் சரி வரவிடில் திரும்பி சென்றுவிடுவார்கள் ஆனால் நாம் அப்படியில்லை...

நறிகள் அர்ஜுன்

புத்தன் உண்மையைச்சொன்னால் கோவிக்கக்கூடாது

எல்லோரையும் தொடவேண்டும் என்பதற்காக கதையைக்கோட்டை விட்டது போல் எனக்குதெரிகிறது

இங்கு இதை எழுதியது தப்பென்றால் மன்னிக்கவும்

நன்றி

எதையும் நேரடியாக சொல்வதன் மூலம் நான் திருந்தக்கூடிய சந்தர்ப்பதை தந்தமைக்கு நன்றிகள்....இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க கூடாது..நன்றிகள் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் காலத்திற்கேற்பவும்,அதிகாரத்திர்கேற்பவும் மெதுவாக மாறுகின்றது. ஆனால் இதுவும் நிரந்தரமில்லை!

நல்ல கதை புத்தன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.