Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செருப்பை காட்டிய கமலுக்கு எதிர்ப்பை காட்டும்.. அறிவுமதி...

Featured Replies

"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..

கமல் படம்.

மன்மதன் அம்பு.

மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு

வந்து விட்@டா@மா

என்கிற அளவிற்கு

ஒரே கமலஹாஸன் களும்!

கமல ஹாஸிகளும்!

அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்

பதுங்கிக் கொண்டு

நூல்தனம் காட்டும் அவரை

பரமக்குடி பையன் என்றும்

பெரியாரின் பிள்ளை என்றும்

பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த

அம்பு...

இராம பக்தர்களின் கைகளிலிருந்து

இராவண திசை நோக்கி

குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று

என்பதை

உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்

பெரும்பகுதித் தமிழர்களுக்கு

அறிமுகமானவர்,

நவராத்திரித் தமிழனை

தசாவதாரத்தால்

முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்

வாயிலாக...

தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,

தாய்த் தமிழை

இழிவு செய்வதில்

உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை

புகழ் சுஜாதா ஆகியோரைத்

தாண்ட முயற்சி

செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்...

தமிழ் தெருப் பொறுக்குமாம்.'

வீடிழந்து, நாடிழந்து,

அக்காள் தங்கைகளின்

வாழ்விழந்து...

ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...

கொத்துக் கொத்தாய்

தம்

சொந்தங்களை

மொத்தமாய்ப் பலியெடுத்த

கொடுமைகளுக்கு

இன்னும் அழுதே முடிக்காத

அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்

இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை

மாடு

மிதித்ததைப் @பால...

வாடகை வண்டி ஓட்டுகிறவராக

ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..

பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..

கதா பாத்திரமாக்கி..

ஒரு செருப்பாக அன்று..

இரு செருப்பாகவும்

என்று

கெஞ்ச வைத்து..

இறுதியில்

அந்த எங்கள்

ஈழத் தமிழரை

செருப்பால் அடிக்கவும்

ஆசைப்பட்டு ஏதோவோர்

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள

முயன்றிருக்கிறீர்களே

கமல்!

அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்

கயவனின் தானோடு ஆடுகிற

சதைதானா உங்களுடையதும்! ஆம்..

சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்

கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய

தங்க நகைகளாய்த் தொங்க விட்டு

உங்களவர்களை அர்ச்சகர்களாக

அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான

பரதநாட்டிய பயிற்சிக்காவும்,

அரங்கேற்றத்திற்காகவும்

இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்

கொடுத்து அழைத்து, வரவேற்று,

சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன

இடங்களில் கூட... நீங்கள்

பெரிய்ய நடிகர் என்பதற்காக

உங்களுக்காக

தங்கள் நேரத்தை வீணாக்கி

தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,

எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு

நீங்கள் காட்டுகிற

நன்றி இதுதானா கமல்!

செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்

எங்களுக் கெல்லாம்

கண்ணீர்த்

தமிழ்!

குருதித்

தமிழ்!

இசைப்பிரியா என்கிற

ஊடகத் தமிழ்த்தங்கை

உச்சரித்த

வலிசுமந்த

தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்

எப்படி கமல்...

அது

எப்போதும்

நகைச் சுவைத்

தமிழாக மட்டுமே

மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.

தாங்கள் நடித்த

படத்திற்குக் கோடிகோடியாய்...

குவிக்க.. தமிழனின் பணம்

வேண்டும்.

ஆனால்

"அவன் தமிழ்

சாக வேவண்டும்

அவன் தமிழ்

தெருப் பொறுக்க

வேண்டும்.''

தெருப் பொறுக்குதல்

கேவலமன்று.. கமல்.

அது

தெருவைத் தூய்மை

செய்தல்!

தோட்டி என்பவர்

தூய்மையின் தாய்..

தெருவை மட்டும் தூய்மை

செய்தவர்கள் இல்லை..

நாங்கள்

உலகையே

தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்

கேளிர்' என்று

உலகையே பெருக்கியவர்கள்

நாங்கள்.

எங்களைப் பார்த்து

செருப்பைத் தூக்கிக்

காட்டிய

கமல் அவர்களே..

உங்களை

தமிழ்தான்

காப்பாற்றியது.

பசி நீக்கியது. நீங்கள்

வாழ்கிற வீடு, நீங்கள் போகிற

மகிழ்வுந்து,

நீங்கள் உடுத்துகிற உடை

அனைத்திலும்..

உங்கள்

பிள்ளைகள் படிக்கிற

படிப்பில்.. புன்னகையில்

எல்லாம்

எல்லாம்...!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட

எங்கள்

ஈழத் தமிழ் உறவுகளின்

சதைப் பிசிறுகள்...

இரத்தக் கவுச்சிகள்

அப்பிக் கிடக்கின்றன.

அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை

மோந்து பாருங்கள்

மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்

படத்தில் வருகிற கைபேசியின் மேல்

வருகிற

மூத்திர வாடைதானே உங்களுக்கு

அதிகமாய் வரும்.

கமல்..

நகைச் சுவை என்பது

கேட்கும் போது

சிரிக்க வைப்பது!

நினைக்கும் போது

அழ வைப்பது!

ஆனால் உங்கள்

நகைச்சுவை

செருப்பால் அடித்து

எங்களைச்

சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறு... வீரம்..

அகிம்சைக்கான

வியாக்யானங்கள்!

அன்பான கமல்..

கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்

கையெழுத்து மரபிற்கு

அய்யாவும் அண்ணலும்

கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்

சூழ்ச்சி செருப்புகளை

அரியணையில் வைத்து ஆளவிட்டு

அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'

பாட மாட்டோம்.

சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட

வன்மம் அள்ளித்தான்

"உயிரே போகுதே'

பாடுவோம்.

ஆம்.. கமல்

தாங்கள் சொல்லியபடி..

எம்

தமிழ்

தெரு பொறுக்கும்!

எவன்

தெருவில்

எவன் வந்து

வாழ்வது

என்று

தெரு பொறுக்கும்!

அப்புறம்

எவன் நாட்டை

எவன்

ஆள்வது

என்ற

விழிப்பில்

நாடும்

பொறுக்கும்.

அதற்கு

வருவான்

வருவான்

வருவான்

"தலைவன்

வருவான்!'

இந்தத் தலைப்பையாவது

கொச்சை செய்யாமல்

விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு

நீங்கள்

உண்மையாக

இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்

பிறந்த

இனத்திற்கு

நாங்கள்

உண்மையாக இருக்க வேவண்டாமா?

அன்புடன்

அறிவுமதி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் எங்கட ஆட்கள் கமலின் படத்தை புறக்கணிக்கவில்லை :unsure:

படத்துக்கு பணம் போட்டவர்களும் மற்றவர்களும் பிழைக்கவேண்டுமென்ற நல்ல எண்ணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை கமலைப்பிடிக்காது

அதற்கு காரணம் கமலுடன் பிறந்த இந்த குள்ளநரிப்புத்தி............. :(

  • கருத்துக்கள உறவுகள்

<_< கமலின் அடிப்படை நாம் அறியாததல்ல. அவர் ஒரு பிராமனர். நாத்திகத் தோல் போர்த்தியிருந்தாலும் அடிப்படையில் அவரொரு பிராமணர்.

அவ்வப்போது அவரின் அடிப்படைக் குணம் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை.

தமிழர் போராட்டம் பற்றி எப்போதுமே ஒரு இழிவான பார்வையைத்தான் அவர் கொன்டிருக்கிறார்.

புன்னகை மன்னன், குருதிப்புனல், தெனாலி போன்ற அவரது படங்கள் ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தத் தவறியதில்லை.

புன்னகை மன்னனில் சிங்கள ரேவதியைக் காதலித்து, ஈழத்து மாணவரைக் கேலி செய்து கொச்சைப்படுத்தினார். குருதிப்புனலில் நாசரை வைவதுபோல ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தினார். தெனாலியில் மூளை பிசகிய தெனாலியை வைத்து இழ்ழப்போராட்டத்தைக் கேலி செய்தார்.

இவரின் மைத்துனரான மணிரத்தினம் இதுவரை எடுத்த ஈழம் தொடர்பான படங்களில் கன்னத்தில் முத்தமிட்டாலில் போராளிகளைக் கொடுமைக்காரர்களாகவும், சிங்களவர்கலை நல்லவர்களாகவும், சிங்கள ராணுவம் அறிவித்துவிட்டே போர் நடத்துவதாகவும் மக்களைக் காப்பதாகவும் படமெடுத்தார்.

ஆக, இவர்களின் குடும்பத்திலிருந்து வரும் எதுவுமே அந்த சமூகத்தின் குணாம்சத்தைக் கொண்டிருப்பதோடு, தமிழரைக் கேவலப்படுத்தவும் தவறுவதில்லை.

இந்த போலி நாத்திகனை விட, ரஜனி பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:blink::blink:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே கருத்து எழுதிய நண்பர்களே மீண்டும் ஒரு முறை சற்று சிந்தியுங்கள்.

உங்கள் பார்வை அவசியம் இல்லாத ஒன்று போல் எனக்கு தெரிகிறது....

மிகவும் குறுகிய பார்வை ....

Edited by samiyar

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், Manmadhan Ambuதமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது-

"என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்"ஞ் என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடுஞ்

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்குஞ்

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..

கமல் படம்.

மன்மதன் அம்பு.

மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு

வந்து விட்டோ‌மோ‌

என்கிற அளவிற்கு

ஒரே கமலஹாஸன் களும்!

கமல ஹாஸிகளும்!

அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்

பதுங்கிக் கொண்டு

நூல்தனம் காட்டும் அவரை

பரமக்குடி பையன் என்றும்

பெரியாரின் பிள்ளை என்றும்

பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த

அம்புஞ்

இராம பக்தர்களின் கைகளிலிருந்து

இராவண திசை நோக்கி

குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று

என்பதை

உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்

பெரும்பகுதித் தமிழர்களுக்கு

அறிமுகமானவர்,

நவராத்திரித் தமிழனை

தசாவதாரத்தால்

முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்

வாயிலாகஞ்

தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,

தாய்த் தமிழை

இழிவு செய்வதில்

உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை

புகழ் சுஜாதா ஆகியோரைத்

தாண்ட முயற்சி

செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்ஞ்

தமிழ் தெருப் பொறுக்குமாம்.

வீடிழந்து, நாடிழந்து,

அக்காள் தங்கைகளின்

வாழ்விழந்துஞ்

ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்றுஞ்

கொத்துக் கொத்தாய்

தம்

சொந்தங்களை

மொத்தமாய்ப் பலியெடுத்த

கொடுமைகளுக்கு

இன்னும் அழுதே முடிக்காத

அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்

இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை

மாடு

மிதித்ததைப் போலஞ்

வாடகை வண்டி ஓட்டுகிறவராக

ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..

பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..

கதா பாத்திரமாக்கி..

ஒரு செருப்பாக அன்று..

இரு செருப்பாகவும்

என்று

கெஞ்ச வைத்து..

இறுதியில்

அந்த எங்கள்

ஈழத் தமிழரை

செருப்பால் அடிக்கவும்

ஆசைப்பட்டு ஏதோவோர்

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள

முயன்றிருக்கிறீர்களே

கமல்!

அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்

கயவனின் தானோடு ஆடுகிற

சதைதானா உங்களுடையதும்! ஆம்..

சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்

கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய

தங்க நகைகளாய்த் தொங்க விட்டு

உங்களவர்களை அர்ச்சகர்களாக

அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான

பரதநாட்டிய பயிற்சிக்காவும்,

அரங்கேற்றத்திற்காகவும்

இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்

கொடுத்து அழைத்து, வரவேற்று,

சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன

இடங்களில் கூடஞ் நீங்கள்

பெரிய்ய நடிகர் என்பதற்காக

உங்களுக்காக

தங்கள் நேரத்தை வீணாக்கி

தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,

எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு

நீங்கள் காட்டுகிற

நன்றி இதுதானா கமல்!

செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்

எங்களுக் கெல்லாம்

கண்ணீர்த்

தமிழ்!

குருதித்

தமிழ்!

இசைப்பிரியா என்கிற

ஊடகத் தமிழ்த்தங்கை

உச்சரித்த

வலிசுமந்த

தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்

எப்படி கமல்ஞ்

அது

எப்போதும்

நகைச் சுவைத்

தமிழாக மட்டுமே

மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.

தாங்கள் நடித்த

படத்திற்குக் கோடிகோடியாய்ஞ்

குவிக்க.. தமிழனின் பணம்

வேண்டும்.

ஆனால்

"அவன் தமிழ்

சாக வேவண்டும்

அவன் தமிழ்

தெருப் பொறுக்க

வேண்டும்."

தெருப் பொறுக்குதல்

கேவலமன்று.. கமல்.

அது

தெருவைத் தூய்மை

செய்தல்!

தோட்டி என்பவர்

தூய்மையின் தாய்..

தெருவை மட்டும் தூய்மை

செய்தவர்கள் இல்லை..

நாங்கள்

உலகையே

தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்

கேளிர்' என்று

உலகையே பெருக்கியவர்கள்

உங்கள்.

எங்களைப் பார்த்து

செருப்பைத் தூக்கிக்

காட்டிய

கமல் அவர்களே..

உங்களை

தமிழ்தான்

காப்பாற்றியது.

பசி நீக்கியது. நீங்கள்

வாழ்கிற வீடு, நீங்கள் போகிற

மகிழ்வுந்து,

நீங்கள் உடுத்துகிற உடை

அனைத்திலும்..

உங்கள்

பிள்ளைகள் படிக்கிற

படிப்பில்.. புன்னகையில்

எல்லாம்

எல்லாம்ஞ்!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட

எங்கள்

ஈழத் தமிழ் உறவுகளின்

சதைப் பிசிறுகள்ஞ்

இரத்தக் கவுச்சிகள்

அப்பிக் கிடக்கின்றன.

அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை

மோந்து பாருங்கள்

மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்

படத்தில் வருகிற கைபேசியின் மேல்

வருகிற

மூத்திர வாடைதானே உங்களுக்கு

அதிகமாய் வரும்.

கமல்..

நகைச் சுவை என்பது

கேட்கும் போது

சிரிக்க வைப்பது!

நினைக்கும் போது

அழ வைப்பது!

ஆனால் உங்கள்

நகைச்சுவை

செருப்பால் அடித்து

எங்களைச்

சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறுஞ் வீரம்..

அகிம்சைக்கான

வியாக்யானங்கள்!

அன்பான கமல்..

கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்

கையெழுத்து மரபிற்கு

அய்யாவும் அண்ணலும்

கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்

சூழ்ச்சி செருப்புகளை

அரியணையில் வைத்து ஆளவிட்டு

அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'

பாட மாட்டோம்.

சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட

வன்மம் அள்ளித்தான்

"உயிரே போகுதே'

பாடுவோம்.

ஆம்.. கமல்

தாங்கள் சொல்லியபடி..

எம்

தமிழ்

தெரு பொறுக்கும்!

எவன்

தெருவில்

எவன் வந்து

வாழ்வது

என்று

தெரு பொறுக்கும்!

அப்புறம்

எவன் நாட்டை

எவன்

ஆள்வது

என்ற

விழிப்பில்

நாடும்

பொறுக்கும்.

அதற்கு

வருவான்

வருவான்

வருவான்

"தலைவன்

வருவான்!'

இந்தத் தலைப்பையாவது

கொச்சை செய்யாமல்

விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு

நீங்கள்

உண்மையாக

இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்

பிறந்த

இனத்திற்கு

நாங்கள்

உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?

அன்புடன்

அறி‌வு‌மதி

- தமிழ் சினிமா

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுமதிக்கு கமல் இப்படி ஒரு பதில் கடிதம் எழுதுவார்...

ஏப்பா அறிவு மிகுதி..

கிறிஸ்மஸுக்கு

யாழ்ப்பாண

ராஜா தியேட்டரில்

விசிலடிச்சு

மன்மத அம்புக்கே அம்பு விட்டவனும்

ஈழத் தமிழன் தான்..!

புத்தாண்டில் வரிசைகட்டி

உந்த வெளிநாடெங்கும்

கடுங்குளிரிலும்..

வீணி வடிச்சு

திரிசாவுக்கு

அம்பு விட்டவனும்..

ஈழத் தமிழன் தான்..!

கண்டிக்கதிர்காமத்திலும்

மட்டக்களப்பு விகாரையிலும்

திருகோணமலை பள்ளிவாசலிலும்..

நான் பேச வைச்ச

தமிழை புகழக் கேட்கலையோ...

உனக்கு மட்டும்

ஏப்பா..

நம்ம பாரதத்தான் மேல இல்லாத

பற்று..

ஈழத் தமிழன் மேல.

அவனுக்கே

புரியல்ல

அவன் நிலை...

இருந்தும் நீ...??!

ஏப்பா

அறிவு மிகுதி..

நீ..

தூங்கிக் கிடக்கிறவன்

மேல..

சுடுதண்ணி பாச்சிறே..

அவங்க ஈழத் தமிழங்க

கடும் குளிருக்க..

விறைச்சுப் போயிருக்காங்க..

திரிசா வந்து சூடேற்றா விட்டால்...???!

அவங்க கதி

அதோ கதி.

நினைச்சுப் பாரப்பா

அவங்க நிலையை..!

புரிஞ்சுக்கோப்பா.

இத்தோட

முடிச்சுக்கிறேன்.

கண்டிக்

கதிர்காமக் கந்தன் உன்னைக்

காப்பாற்றட்டும்.

இப்படிக்கு கமல்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏதோ அடிச்சுப்போட்டுது நெடுக்ஸ் :(:(:(

அழுகை அழுகையா வருகுது :(:(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏதோ அடிச்சுப்போட்டுது நெடுக்ஸ் :(:(:(

அழுகை அழுகையா வருகுது :(:(

எனக்கும் தான்... புலம்பெயர் தமிழர்கள் என்ற புனைப் பெயரை தாங்கிய படி ஈழத் தமிழர்கள் செய்யும் கொடுமைகளை கண்ணாரக் காணும் போது... தாங்க முடியல்ல.

இத்தனை ஈழத்தமிழர்கள் இந்தப் படத்தை பார்த்த போதும்.. அறிவுமதி மட்டும் தான் அதை உணர்ந்திருக்கிறார் என்றால்.. ஈழத்தமிழர்கள்.. சினிமாவுக்கு முன் கேணத்தமிழர்கள் என்று தானே அர்த்தம். அதை கமல் என்ன அசின் கூட பயன்படுத்துவத்துவதில் என்ன தவறு இருக்கு.

தவறு எமது.. இருந்தும்.. அறிவுமதி அவரை தட்டிக் கேட்கிறார்...! அப்படி ஒரு ஆதங்கம் அவருக்கு. ஆனால் நமக்கோ.. சினிமா வீணி..! :rolleyes::D:)

எல்லாவற்றையும் பார்க்க எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது. :(

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார், உங்கள் படத்தைப் பார்த்தாலே நீங்கள் ஒரு கமல் விசுவாசி என்று தெரிகிறது.

சரி, கமல் இதுவரை ஈழத்தமிழனுக்குச் செய்த சேவை ஒன்று சொல்லுங்களேன். தெனாலி, புன்னகை மன்னன் என்று சொல்ல மாட்டிர்கள் தானே??

அதில் நடித்தவர் உண்மையிலே ஈழத்தமிழரா ? ஈழத்தமிழராக இருந்தால் செருப்படி கொடுக்கவேண்டும் , அந்த பாத்திரத்தை ஏற்றதுக்கு

அனெகமான சிங்கள படங்களில் தமிழனை கோமாளிகளாக சித்தரிப்பார்கள்,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒரு கோமாளிகள் என்ற சிங்கள அரசுக்கு கைகுலுக்க முண்டியடிக்கும் இம் இனத்தை ஒளிப்பதிவில் பாருங்கள்,

http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk

கூனி குனிய வேண்டியவன் கூடி மகிழ்ந்து கம்பீரமாக இருக்கின்றான், ஆனால் நாங்கள் ?????

சாமியார், உங்கள் படத்தைப் பார்த்தாலே நீங்கள் ஒரு கமல் விசுவாசி என்று தெரிகிறது.

சரி, கமல் இதுவரை ஈழத்தமிழனுக்குச் செய்த சேவை ஒன்று சொல்லுங்களேன். தெனாலி, புன்னகை மன்னன் என்று சொல்ல மாட்டிர்கள் தானே??

ஈழத்தமிழரே சேவை செய்யாதபோது கமல் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரே சேவை செய்யாதபோது கமல் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

கமல் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அப்பால்.........

கமல் ஏன் எம்மை கேவலப்படுத்தவேண்டும்

அந்த காட்சி இல்லாது படம் எடுக்கமுடியாதவரா கமல்...?

  • கருத்துக்கள உறவுகள்

கமல் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அப்பால்.........

கமல் ஏன் எம்மை கேவலப்படுத்தவேண்டும்

அந்த காட்சி இல்லாது படம் எடுக்கமுடியாதவரா கமல்...?

கமல் உங்களை (ஈழத்தமிழரின் தமிழை) கேவலப்படுத்தினதை இத்தனை ஆயிரம் பேர் விழுந்து விழுந்து மன்மத அம்பை பார்த்த போதும்.. அதற்கு புலம்பெயர் நாடுகளில் வானொலிகளில் தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்த போதும் உணராமல் தானே இருந்தீர்கள். அப்போ எங்கே போனது இந்த உணர்ச்சி. மீண்டும் ஒரு பிரபாகரன்.. அறிவுமதி... சீமான்.. வேண்டுமா உங்களை துயில் எழுப்ப..???!

ஆக நீங்கள் நீங்களும் உங்கள் பாடும் என்று வாழ்வீர்கள். யாரேனும் ஒருத்தன் இன மொழி உணர்வால் உந்தப்பட்டு ஆதங்கத்தைக் கொட்டினால் தானா உங்களுக்கு உணர்ச்சி பிரவாகம் ஆகும்..??! இதுதானா ஈழத்தமிழர்களின் இன எழுச்சிக்கான உதாரணம்..??! அல்லது அளவு..???!

எப்போது நீங்கள் சுயநலத்துக்கு அப்பால் இன நலனை முன்னிறுத்தி இன விடுதலை பாதுகாப்புப் பற்றி ஒட்டுமொத்த இனமும் ஒருங்கிணைந்து சிந்திக்கப் போகிறீர்கள். அப்போதுதான் ஓரிரு தனி நபர்களுக்கு அப்பால் இன விடுதலை என்பது உலகின் முன் ஓங்கி ஒலிக்க முடியும். வெறும் அசைல வாழ்வுக்காக.. இன விடுதலையை உச்சரிப்பது அர்த்தமற்றது. அது இதயத்தில் இருந்து இயல்பாக எழ வேண்டும். அப்போதுதான் இந்த இனம் விடிவை நோக்கி போவது விரைவடையும்.

தமிழர்களின் இயல்பான இன உணர்வின் எழுச்சி கண்டு தான் எதிரிகள் மட்டுமல்ல.. கமலும் திருந்துவார்.. அசினும் திருந்துவாள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமல் உங்களை (ஈழத்தமிழரின் தமிழை) கேவலப்படுத்தினதை இத்தனை ஆயிரம் பேர் விழுந்து விழுந்து மன்மத அம்பை பார்த்த போதும்.. அதற்கு புலம்பெயர் நாடுகளில் வானொலிகளில் தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்த போதும் உணராமல் தானே இருந்தீர்கள். அப்போ எங்கே போனது இந்த உணர்ச்சி. மீண்டும் ஒரு பிரபாகரன்.. அறிவுமதி... சீமான்.. வேண்டுமா உங்களை துயில் எழுப்ப..???!

ஆக நீங்கள் நீங்களும் உங்கள் பாடும் என்று வாழ்வீர்கள். யாரேனும் ஒருத்தன் இன மொழி உணர்வால் உந்தப்பட்டு ஆதங்கத்தைக் கொட்டினால் தானா உங்களுக்கு உணர்ச்சி பிரவாகம் ஆகும்..??! இதுதானா ஈழத்தமிழர்களின் இன எழுச்சிக்கான உதாரணம்..??! அல்லது அளவு..???!

எப்போது நீங்கள் சுயநலத்துக்கு அப்பால் இன நலனை முன்னிறுத்தி இன விடுதலை பாதுகாப்புப் பற்றி ஒட்டுமொத்த இனமும் ஒருங்கிணைந்து சிந்திக்கப் போகிறீர்கள். அப்போதுதான் ஓரிரு தனி நபர்களுக்கு அப்பால் இன விடுதலை என்பது உலகின் முன் ஓங்கி ஒலிக்க முடியும். வெறும் அசைல வாழ்வுக்காக.. இன விடுதலையை உச்சரிப்பது அர்த்தமற்றது. அது இதயத்தில் இருந்து இயல்பாக எழ வேண்டும். அப்போதுதான் இந்த இனம் விடிவை நோக்கி போவது விரைவடையும்.

கமலும் திருந்துவார்.. அசினும் திருந்துவாள்.

மன்மத அம்பில இப்படி ஒரு மேட்டர் இருக்கிறது, எங்கட நெடுக்கருக்கு கூட தெரியாமல் போயிட்டுதே :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்மத அம்பில இப்படி ஒரு மேட்டர் இருக்கிறது, எங்கட நெடுக்கருக்கு கூட தெரியாமல் போயிட்டுதே :lol: :lol: :lol:

நெடுக்கர் தான் இன்னும் படம் பார்க்கேல்ல எண்டு சொல்லப் போறார்..! :D

ஆனால் அதே பிரதிவாதம் இங்க கருத்தெழுதுகிற பலருக்கும் பொருந்தலாம்தானே? :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மன்மத அம்பில இப்படி ஒரு மேட்டர் இருக்கிறது, எங்கட நெடுக்கருக்கு கூட தெரியாமல் போயிட்டுதே :lol: :lol: :lol:

நான் பொதுவாக தென்னிந்திய திரைப்படங்கள் பார்ப்பதில்லை. மன்மத அன்பும் அப்படித்தான். இந்த விடயங்கள் பத்திரிகைகளில் இணையத்தில் தான் கண்டேன். ஆனால் புலம்பெயர் நாடுகளில் தொலைக்காட்சிகளில் பல தினங்களாக இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்தார்கள் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள முடியும்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் பாலுணர்வை தூண்டுகிறது என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பலைகள் எழுந்து அந்த பாடல் காட்சி நீக்கப்பட்டதும் இன்றி கமலும் மறுப்பறிக்கை விட்டிருந்ததாக செய்திகளில் படித்திருந்தேன். ஆனால் இந்த விவகாரம் யார் கண்ணிலும் உணர்விலும் அப்போது கூட தெரியவில்லையே..???! குறிப்பாக சினிமா வட்டார ஆட்கள் உட்பட..!

  • கருத்துக்கள உறவுகள்

கமல் உங்களை (ஈழத்தமிழரின் தமிழை) கேவலப்படுத்தினதை இத்தனை ஆயிரம் பேர் விழுந்து விழுந்து மன்மத அம்பை பார்த்த போதும்.. அதற்கு புலம்பெயர் நாடுகளில் வானொலிகளில் தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்த போதும் உணராமல் தானே இருந்தீர்கள். அப்போ எங்கே போனது இந்த உணர்ச்சி. மீண்டும் ஒரு பிரபாகரன்.. அறிவுமதி... சீமான்.. வேண்டுமா உங்களை துயில் எழுப்ப..???!

ஆக நீங்கள் நீங்களும் உங்கள் பாடும் என்று வாழ்வீர்கள். யாரேனும் ஒருத்தன் இன மொழி உணர்வால் உந்தப்பட்டு ஆதங்கத்தைக் கொட்டினால் தானா உங்களுக்கு உணர்ச்சி பிரவாகம் ஆகும்..??! இதுதானா ஈழத்தமிழர்களின் இன எழுச்சிக்கான உதாரணம்..??! அல்லது அளவு..???!

எப்போது நீங்கள் சுயநலத்துக்கு அப்பால் இன நலனை முன்னிறுத்தி இன விடுதலை பாதுகாப்புப் பற்றி ஒட்டுமொத்த இனமும் ஒருங்கிணைந்து சிந்திக்கப் போகிறீர்கள். அப்போதுதான் ஓரிரு தனி நபர்களுக்கு அப்பால் இன விடுதலை என்பது உலகின் முன் ஓங்கி ஒலிக்க முடியும்.

வெறும் அசைல வாழ்வுக்காக.. இன விடுதலையை உச்சரிப்பது அர்த்தமற்றது. அது இதயத்தில் இருந்து இயல்பாக எழ வேண்டும். அப்போதுதான் இந்த இனம் விடிவை நோக்கி போவது விரைவடையும்.

தமிழர்களின் இயல்பான இன உணர்வின் எழுச்சி கண்டு தான் எதிரிகள் மட்டுமல்ல.. கமலும் திருந்துவார்.. அசினும் திருந்துவாள்.

நெடுக்ஸ்

நீங்கள் வெள்ளையடிப்பதாக நினைத்துக்கொண்டு ஏதோ பூசிக்கொண்டிருக்கின்றீர்கள்

உங்கள் மீது தாங்களே துப்பிக்கொண்டிருக்கின்றீர்கள்

என்ன செய்வது தமிழனின் விதி இதுதான்

படித்தவன் எல்லாம் மேதாவியாக மட்டும்தான் இருக்கிறான் எமக்குள். நீங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்.

ஒரு சிறு தரவு நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை. இந்த திரியில் எழுதப்பட்டதை பார்த்தே பதிலளித்திருந்தேன்.

தனிப்பட்ட முறையில் நான்அக்கறை இல்லாதவனா...?

அப்படி எனது மனச்சாட்சி இதுவரை சொன்னதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

நீங்கள் வெள்ளையடிப்பதாக நினைத்துக்கொண்டு ஏதோ பூசிக்கொண்டிருக்கின்றீர்கள்

உங்கள் மீது தாங்களே துப்பிக்கொண்டிருக்கின்றீர்கள்

என்ன செய்வது தமிழனின் விதி இதுதான்

படித்தவன் எல்லாம் மேதாவியாக மட்டும்தான் இருக்கிறான் எமக்குள். நீங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்.

ஒரு சிறு தரவு நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை. இந்த திரியில் எழுதப்பட்டதை பார்த்தே பதிலளித்திருந்தேன்.

தனிப்பட்ட முறையில் நான்அக்கறை இல்லாதவனா...?

அப்படி எனது மனச்சாட்சி இதுவரை சொன்னதில்லை.

எப்பவுமே தமிழர்கள் நாங்கள் எங்களை மேல் நிலையில் வைச்சுக் கொண்டு கற்பனையில் வாழ்ந்து வருவதற்கு உங்கள் இந்த எழுத்தே போதும்.

மாவீரர்களைத் போராளிகளைத் தவிர மிச்ச தமிழர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் போராட்டத்தில் இருந்து விலகி இருந்து கொண்டு போராட்டத்தின் பயன்களை அனுபவிக்க ஆர்வப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.. இருக்கின்றனர் என்பதுதான் வெளிப்படை உண்மை. இதில் சிலர் தாங்கள் பங்களிப்பு செய்தம்.. அது செய்தம் இது செய்தம் என்று பூசிமொழுகல்களைச் செய்து கொண்டிருக்கிறார்களே தவிர இனத்தின் தற்போதைய தேவை உணர்ந்து எவரும் செயற்படுவதாக அல்லது செயற்படத் தூண்டுவதாக இல்லை.

ஒருவர் தவறைச் சுட்டிக்காட்டினால்.. உடனே அவரை பழிக்க வேண்டியது.. அல்லது மேதாவி என்ற வேண்டியது. இப்படி தனிநபர் வசைபாடுதலையே நாம் செய்யக் கற்றுள்ளோம். ஆனால் எம் நிலையை நாம் சீர்தூக்கிப் பார்க்கப் பிரியப்படுவதும் இல்லை.. மாற்றங்களை இலகுவாக அமைத்துக் கொள்வதும் இல்லை. பிடித்த பிடியில் உறுதியாக இருந்து கொள்வோம். அது காலமாற்றத்துக்கு கள மாற்றத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும்.. நாம் பங்களிப்புச் செய்தோம்.. அதுவே பெரிசு என்று கொண்டு இருக்கிறோம். பங்களிப்பு செய்த காலம் போய் இன்று நாம் எல்லோரும் ஒருமனதோடு களத்தில் அது புலம்பெயர் களமாகட்டும் தாயகம் ஆகட்டும் தமிழகம் ஆகட்டும் நின்று செயற்பட வேண்டிய நேரம்.

ஆனால் நம்மை இன்னொருவர் எழுச்சி ஊட்ட வேண்டிய இக்கட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எமது மோசமான நிலையை காட்டுகிறது. நாம் சுயநலச் செயற்பாடுகள் நோக்கி செல்ல பிரயாசப்பட்டு இனத்துக்கு தேசத்துக்கு செய்ய வேண்டியதை மறந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பழையதை நினைத்து எம்மை சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம்.

இந்த நிலை இன்று புலம்பெயர் தேசத்தில் எம்மவர்களிடம் பெருகிக் கிடக்கிறது. அதில் நீங்கள் என்று அல்ல.. பலர் உணர்ந்தும் உணராமலும் சிக்கி உள்ளனர். இவர்களில் பலரிடம் தேசத்தின் மண்ணின் மைந்தர்கள் இறுதிக் கணங்களில் ஒப்படைத்து விட்டுச் சென்ற பணிகள் கூட ஞாபகத்தில் இல்லை. இருப்பதெல்லாம் சுயநலச் செயற்பாடுகளும்.. சுய இலாபமீட்டல்களும்.. புகழீட்டல்களுமே. இது இனத்துக்கு ஒருபோதும் விடிவை பாதுகாப்பை பெற்றுத் தராது. எதிரிக்கு எம்மை மேலும் மேலும் அடக்க அடக்கி வைக்கவே உதவி நிற்கும். இந்த நிலை மாறனும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களைத் போராளிகளைத் தவிர மிச்ச தமிழர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் போராட்டத்தில் இருந்து விலகி இருந்து கொண்டு போராட்டத்தின் பயன்களை அனுபவிக்க ஆர்வப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.. இருக்கின்றனர் என்பதுதான் வெளிப்படை உண்மை.

.. நாம் பங்களிப்புச் செய்தோம்.. அதுவே பெரிசு என்று கொண்டு இருக்கிறோம். பங்களிப்பு செய்த காலம் போய் இன்று நாம் எல்லோரும் ஒருமனதோடு களத்தில் அது புலம்பெயர் களமாகட்டும் தாயகம் ஆகட்டும் தமிழகம் ஆகட்டும் நின்று செயற்பட வேண்டிய நேரம்..

இந்த வேளையிலாவது புலம் பெயர் களம் என்ற ஒன்று உண்டு

அதுவும் சேர்ந்ததே போராட்டம் என்பதை எழுதியதற்கு நன்றி நெடுக்ஸ்

மாவீரர்களை போராளிகளைத்தவிர எல்லோரும் என்றால் தாங்கள் எதற்குள் நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையிலாவது புலம் பெயர் களம் என்ற ஒன்று உண்டு

அதுவும் சேர்ந்ததே போராட்டம் என்பதை எழுதியதற்கு நன்றி நெடுக்ஸ்

மாவீரர்களை போராளிகளைத்தவிர எல்லோரும் என்றால் தாங்கள் எதற்குள் நெடுக்ஸ்

தாயகத்தில் உள்ள தமிழர்களை விட அவர்களின் போராட்டத்தை அடகு வைத்து புலம்பெயர் நாடுகளில் நிம்மதியான வாழ்வை தேடிக் கொண்ட தமிழர்கள்.. செய்நன்றிக்கடனுக்காகவாவது தாயக மக்களின் போராட்டத்தை விடுதலையை நிம்மதியான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்து கொள்ள தாம் புலம்பெயர் தளத்தில் களம் அமைத்து போராடி ஆக வேண்டும். அதை அவர்கள் தவிர்க்க முடியாது. அது அவர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக அமைய வேண்டும். இதற்கு தாயக மக்கள் நேரடியாக பங்களிக்க முடியாத சூழல் நிலவினாலும் அவர்களின் இதயத்தில் இருந்தான அனுமதி கிடைத்துக் கொண்டே இருக்கும். அதேபோல் தமிழக மற்றும் உலகத் தமிழர்களையும் தம்மோடு ஒருங்கிணைக்க வேண்டிய பணி புலம்பெயர் போராட்டக்களத்தில் உள்ள தமிழர்களினது. ஆனால் அவர்கள் அதை செய்வதை தவிர்த்து மாறாக.. வசைபாடித் திரிவதோடு.. மக்கள் மதிக்கும் தலைவர்கள், கலைஞர்கள் மீது சாணி வாரி வீசுக் கொண்டு திரிகின்றனர். இதனை செய்வதைக் காட்டினும் அந்தத் தலைவர்களோடு கலைஞர்களோடு பிற சமூக ஆர்வலர்களோடு கல்வியாளர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு விடயங்களை விளக்கி பரிகாரங்களை தேடிக் கொள்ள முனைய வேண்டும்.

கமலஹாசன் ரஜனி போன்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அழுத்தங்களின் பேரிலோ ஈழத்தமிழர்கள் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களுக்காக பகிஸ்கரிப்புக்களை செய்திருக்கின்றனர். அவை வெளிப்படை உண்மைகள். அவர்கள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய அறிதல்களைக் கொண்டவர்கள். அந்தவகையில் ஈழத்தமிழர்கள் நேரடியாக தமது கருத்துக்களை அவர்களிடம் கொண்டு போய் அவர்களின் மனப் புரிதலோடு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பக்குவத்தை அடைய வேண்டும். எடுத்ததெற்கெல்லாம்.. திட்டுவதும்.. வசைபாடுவதும்.. புறக்கணிப்பதுமே போராட்டம் ஆகாது. அது நட்பை நெருக்கத்தை புரிந்துணர்வை ஏற்படுத்தாது.

அதை இக்களத்தில் பரிசோதனை ரீதியாக எமது கருத்துக்கள் கூட உணர்த்தி இருக்கின்றன. அந்த வகையில்.. நீங்கள் உட்பட பலர் இன்னும் போராட்ட நியாயத்தை சரியான வடிவில் கொண்டு செல்வதில் அக்கறையோடு செயற்படுவதாகத் தெரியவில்லை. மாறாக அறிவுமதி சொல்லிட்டார் என்பதற்காக கமலை எதிர்ப்பதில் தான் நிற்கிறீர்கள். அதுவல்ல பிரச்சனையை அணுகும் முறை.

இன்னொரு தலைப்பில் மாவீரர்களை மறந்திட்டார் பிரதமர் என்று போட்டிருக்கினம். மாவீரர்களின் தியாகங்கள் வெல்லப்பட வேண்டும் என்றால் சில தருணங்களில் சில களங்களில் அவர்கள் தங்களை உருமறைப்புச் செய்துதான் ஆக வேண்டும். அது அவர்களை மறப்பது என்றதாகாது. அதற்கான தேவை அங்கிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்படுத்தியவர்களும் நாங்களே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் தாண்டி வந்தால் தான் நாம் மாவீரர்களை உலகின் முன் எம் வீரர்களாக நிலை நிறுத்த முடியும். தொடர்ந்தும் தடைகள் மத்தியில்.. ஒளித்து மாற்றுப் பெயர்களில் மாவீரர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான களத்தையும் புலம்பெயர் மக்கள் தான் அமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் இன்று செயற்பட பலதிருந்தும் செயற்பாடற்று சுயநலத்தோடு வாழ விளைவதே அவர்கள் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகிறது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.