Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த தொலைக்காட்சி வாங்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

tv_smiley_18.gif

எந்த தொலைக்காட்சி வாங்கலாம்?

உங்களின் ஆலோசனை தேவை....

நான் பன்னிரண்டு வருடமாக பாவித்த குழாய் தொலைக்காட்சி பென்சன் எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.tv_smiley_20.gif

தற்போது வருட ஆரம்பம் என்ற படியால்.... ஒவ்வொரு கடைக்காரரும் அண்ணை வா, தம்பி வா...... என்று மின்சாரப் பொருட்களை மலிவாக கூவிக்கூவி விற்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் ஒரு சில நாட்களுக்கே இருக்கும். நான் நேற்று சில கடைகளில் பார்த்த போது.... எந்த தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவது என்ற குழப்பத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன்.

நான் பார்த்த தெரிவில் .......tv_smiley_04.gif

முதலாவது LG - 94 செ.மீ. / LED. 480 €

இரண்டாவது Sony - 94 செ. மீ. /LCD 450 €

மூன்றாவது Philips - 94 செ.மீ. / LCD 550€

இதில் இப்போ.... முதலாவதாக உள்ள LG ஐ வாங்க உத்தேசம். இந்த தொழிற்சாலையின் பொருட்கள் தரமானதா? அல்லது இதனைவிட வேறு தொழிற்சாலைப் பொருட்கள் தரமானதா? என்பதை, பாவித்து அனுபவமுள்ளவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.tv_smiley_05.gif :)

.

  • Replies 69
  • Views 21.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ, எப்பொழுதும் சமீபத்திய தொழிற்நுட்பத்தில் உருவான மின்னனு பொருட்களை வாங்குவதே சிறந்தது, நீண்ட கால முதலீட்டை பாதுகாக்க அவை நிச்சயம் உதவும்.

இவ்வகையில் மிகச் சிறந்தவை:

சோனி 46" LED TV

சாம்சங் 46" LED TV

46" குறுக்கு விட்டமுள்ள தொலைக்காட்சியே சிறந்தது. கீழுள்ள தொழிற்நுட்பங்களை கண்டிப்பாக சரிபார்க்கவும்.

  • Edge LED
  • Higher Contrast Ratio
  • Motion Flow Minimum 100hz
  • USB multiple video format

நான் சாம்சங் 46" LED TV வைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாங்குவதாயின் முதலாவது தெரிவு Samsung இரண்டாவது தெரிவு சோனி அல்லது ஷார்ப் மூண்டாவது தெரிவு LG .

Samsung , Sharp , மற்றும் LG தாங்களாகவே panel தயாரிக்கிறார்கள் எண்டு நினைக்கிறேன்.

மற்ற படி கேம்ஸ் விழையாடுவதாயின் கூடிய response ரேட் பாருங்கோ, contrast ஓரளவு இருந்தால் சரி என்பது எனது கணிப்பு.

மற்றது motion flow குறைந்தது 120hz .

LED LCD ஐ விட மெல்லியதாக இருக்கும், கூட ஷார்ப் ஆகா இருக்கும் பவர் குறைவாக எடுக்கும். அனால் சூரிய வெளிச்சம் அதிகமாக வரும் இடமேண்டல் (அதிக ஜன்னல் இருந்தால்), LED இல் அதிக ரிப்லேச்சன் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இருப்பது Samsung.

usb இணைப்புடன் இருக்கிறது.

  • தொடங்கியவர்

ராஜவன்னியன் நான் நேற்று கடையில் பார்த்த போது சாம்சங் தொலைக்காட்சியும் இருந்தது.

சமீபத்தில் வந்த தொழில் நுட்ப பொருட்கள் எனில், அதன் விலை சற்று அதிகமாக இருக்கும்.

ஆறு மாதத்தில் அதன் விலை, சரி பாதியாக குறைம் போது.... கவலை ஏற்படும்.

அனேகமாக இப்போ வரும் தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம்.... 100 Hz உடன் தான் வருகின்றன என நினைக்கின்றேன்.

இன்று... அல்லது நாளை கடைப்பக்கம் போனால் நிச்சயம் USB multiple video format கவனிப்பேன். உங்கள் தகவலுக்கு நன்றி. :)

சபேஷ்.... உங்களது முதலாவது தெரிவும் சாம்சங் தொலைக்காட்சியா.

நேற்று மேலோட்டமாக அவதானித்த போது... சாம்சங் தொலைக்காட்சிப் பெட்டியின் விலை மற்றவையுடன் ஒப்பிடும் போது 200€ அளவில் அதிகமாக‌ இருந்ததால் அக்கறை செலுத்தவில்லை. நீங்களும் சாம்சங் நல்லது என்னும் போது விலையை பற்றி கவலை கொள்ளத்தேவை இல்லை எனநினைக்கின்றேன்.

சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் LED சரியாக இருக்காது என்ற உங்களது மேலதிக தகவலுக்கு நன்றி. :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இருப்பது Samsung.

usb இணைப்புடன் இருக்கிறது.

ஆ...... கறுப்பி, நீங்களும் சாம்சங் தொலைக்காட்சியா?

நிச்சயம் எனது தெரிவும் சாம்சங் தொலைக்காட்சி தான்....

எனது நண்பர் ஒருவரும் பத்து வருடமாக சாம்சங் பாவிப்பதாகவும், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

நானும் USB இணைப்புடன் தான் வாங்க யோசிக்கின்றேன். உங்கள் தகவலுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறி கண்ணை மூடிக்கொன்டு samsung வாங்குங்கோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய மாலை பொழுது வேளைகளில், மப்பும் மந்தாரமான நேரங்களில், பழையபாடல்களை, சொனி ரீவியில், ஒரு கிளாசுடன் இருந்து கேட்கும்போதும், பாக்கும் போதும் ஏற்படும் இன்பம் இருக்குதே, அதுவும் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பெண்னொன்று கண்டேன், நான் ரசிகனும் இல்லை, போன்ற பாடல்களை கேட்கும் போது இருக்கும் இன்பம், அனுபவித்தவனுக்குதான் தெரியும்.

ராஜவன்னியன் நான் நேற்று கடையில் பார்த்த போது சாம்சங் தொலைக்காட்சியும் இருந்தது.

சமீபத்தில் வந்த தொழில் நுட்ப பொருட்கள் எனில், அதன் விலை சற்று அதிகமாக இருக்கும்.

ஆறு மாதத்தில் அதன் விலை, சரி பாதியாக குறைம் போது.... கவலை ஏற்படும்.

அனேகமாக இப்போ வரும் தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம்.... 100 Hz உடன் தான் வருகின்றன என நினைக்கின்றேன்.

இன்று... அல்லது நாளை கடைப்பக்கம் போனால் நிச்சயம் USB multiple video format கவனிப்பேன். உங்கள் தகவலுக்கு நன்றி. :)

LCD, LED க்கள் 50 Hz உடன் வருவது சாதாரணம்... !

நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் விலையையும் பொருளையும் ஒருக்கா தரம் பார்த்துக்கொள்ளுங்கோ...

இங்கையும் பார்க்கலாம்...

http://www.amazon.co.uk/gp/gateway-eu

நீங்கள் சொன்ன LG தொலைக்காட்ச்சி இதுவா....???

http://www.amazon.de/LG-37LE4500-LED-Backlight-Fernseher-Full-HD-schwarz/dp/B00424M60W/ref=sr_1_2?ie=UTF8&s=ce-de&qid=1294149951&sr=8-2

Sony...??

http://www.amazon.de/Sony-KDL-37EX402-LCD-Fernseher-Full-HD-schwarz/dp/B0034XRCQU/ref=sr_1_3?ie=UTF8&s=ce-de&qid=1294150060&sr=1-3-spell

Philips...???

http://www.amazon.de/Philips-37PFL5405H-12-LCD-Fernseher-Full-HD/dp/B003BECY3I/ref=sr_1_1?s=ce-de&ie=UTF8&qid=1294150161&sr=1-1

இவை சரியாக இருந்தால் விலை எண்று ஒரு பிரச்சினை வந்தால் எனது தெரிவு உங்களது தெரிவான LG தான்.... :)

Screen size: 37"/ 94cm

• Resolution: 1920x1080

• Format: 16:9

• Contrast: 2.000.000:1 (dynamic contrast)

• Response time: 3ms

• Connectors: 4x HDMI, components (YUV), 1x SCART, VGA

• Power consumption: 150W

• Dimensions (WxHxD): 90.7x63x27cm

• Weight: 13.8kg

Special features: integrated DVB-C/-T tuner, DivX-HD-/MKV-support, 24p support, USB-interface, LED backlight (Edge-lit) :)

விலை பிரச்சினை இல்லை சிறப்பான வசதிகள் எண்டு கேட்டியள் எண்டால் Sony வாங்குங்கோ எண்டுவன்.... உங்களது கணனியை நேரடியாக இணைக்க முடியும்.... நேரடியாக இணையத்தை இணைத்தும் படம் பாக்கலாம்... :) :) :)

LCD TV ( 101 cm)

http://www.amazon.de/Sony-KDL-37EX402-LCD-Fernseher-Full-HD-schwarz/dp/tech-data/B0034XRCQU/ref=de_a_smtd

இது LED( 102 cm) 200 EUR அதிகமாக இருக்கலாம்...

http://www.amazon.de/Sony-KDL-40EX605-LED-Backlight-Fernseher-Full-HD-schwarz/dp/tech-data/B003HITCHE/ref=de_a_smtd

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

LG தொலைக்காட்சி நம்பிக்கையானது.கொரிய தயாரிப்பு. ஆனால் உதிரிபாகங்கள் யப்பானுடையவை. யப்பானிய தயாரிப்புகளை விட மலிவானது.warrenty ம் ஏனைய தொலைக்காட்சிகளை விட கூட காலத்துக்கு தருவார்கள். 6 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறேன்.எந்த பிரச்சனையும் இல்லை.

lg-lcd-television.gif

என் தெரிவு என்றால் LG ஆகத்தானிருக்கும். இங்கு கனடாவில் Samsung உம் LG உம் கிட்டத்தட்ட ஒரே விலையில் காணப்படும், அங்கு ஏன் வித்தியாசம் என்று தெரியவில்லை

வாங்கும் பொது Latest ஆன LED இனை வாங்குங்கள் சிறி. அத்துடன் 120 HZ எனில் நல்லது. 60 HZ இற்கும் 120 Hz இற்கும் இடையில் கண்ணால் கண்டு பிடிக்க கூடியளவில் வித்தியாசம் இருக்கும். LCD இலும் LED இலும் 240 HZ உம் வந்து விட்டது, ஆனால் விலை கொஞ்சம் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

SONY அண்ணன்

LG தம்பி

எனது தெரிவு தம்பியாகத்தானிருக்கும்

ஏனெனில் சொனியின் தரத்தையும் விலையையும் இறக்கமுடியாததாலும் ஆனால் விற்பனை மார்க்கற்றை சொனி தங்க வைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் இந்த தம்பி.

எதுவாக இருந்தாலும் உங்களுக்கு வசதியிருந்தால்கடைசியாக வந்த மொடலை வாங்குங்கள். சில ஆண்டுகளுக்கு பாவிக்கலாம்.

ஆனால் இன்றைய விஞ்ஞானவளர்ச்சியில் எந்த பொருள் எப்படி மாற்றமடையும் என்று சொல்லமுடியாதுள்ளது. எனவே கடைசிக்கு முதல் மொடலை வாங்கினால்அரை விலைக்கு வாங்கலாம்.

5வருட கரண்டிக்கு இன்னும் 200 ஈரோக்கள் கேட்பார்கள். எடுத்துவிடாதீர்கள். அந்த காசுக்கு அடுத்தவருடம் இதைவிட நல்லதாக ஒன்றை இதே கரண்டிக்காசுக்கு வாங்கிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை சொல்லுறன்.

நான் இஞ்சை வந்தநாள் தொடக்கம் சொனி ரிவி தான்.

வந்த புதிசிலை சொனி குழாய்ரிவி

இப்ப தட்டை சொனி ரிவி.இப்பவெல்லாம் ரெக்னிக்கிலை கிட்டத்தட்ட எல்லா கொம்பனியளும் ஒரேமாதிரித்தான் தெரியுது.என்ன விலைதான் பேரைவைச்சு வித்தியாசப்படுது?

இப்ப சொனியைமாதிரித்தான் எல்ஜியும் சம்சுங்கும் தெரியுது.இருந்தாலும் சொனியிலை கொஞ்ச அமசடக்கான ரெக்னிக்குகள் வெளியிலை தெரியாதமாதிரி இருக்குது?

விசயத்துக்கு வருவம் சிறித்தம்பி?

இப்பவெல்லாம்....

ரிவியிலையே... சற்ரலையிற் ரிசீவர்,நோமல் அன்ரெனா ரிசீவர்,யுஎஸ்பி தொடுப்புகள்...எண்டு கன விசயத்தோடை கனசாமானுகள் வருது.நல்லவடிவாய் யோசிச்சு வாங்கவும்

இப்பவெல்லாம் அது திறம் இல்லாட்டி இது திறம் எண்டெல்லாம் சொல்லேலாது.விலையைப்பத்தியும் பெரிசாய் கதைக்கேலாது?விலை கூடின ரிவியெண்டு நான் வீட்டுக்கை கொண்டுவந்து வைச்சு தம்பட்டம் அடிக்க......வாறகிழமை....அரைவிலைக்கு அதேரிவியை பக்கத்து வீட்டு ஏகாம்பரத்தின்ரை சின்னன் வாங்கிப்போட்டு என்னைப்பாத்து நக்கலாய்ச்சிரிக்கும்.இதை நான் ஏன் சொல்லுறனெண்டால் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி கண்ணை மூடிக்கொன்டு samsung வாங்குங்கோ :)

முதலில் அப்படித்தான் நினைத்தேன் சஜீவன்,

ஆனால் மேலே..... மற்றையவர்கள் எழுதியுள்ளதை வாசிக்கும் போது கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்குது.think_smiley_46.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய மாலை பொழுது வேளைகளில், மப்பும் மந்தாரமான நேரங்களில், பழையபாடல்களை, சொனி ரீவியில், ஒரு கிளாசுடன் இருந்து கேட்கும்போதும், பாக்கும் போதும் ஏற்படும் இன்பம் இருக்குதே, அதுவும் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பெண்னொன்று கண்டேன், நான் ரசிகனும் இல்லை, போன்ற பாடல்களை கேட்கும் போது இருக்கும் இன்பம், அனுபவித்தவனுக்குதான் தெரியும்.

சித்தன், பழைய பாடல்களை சொனி ரீவியில் பார்ப்பது அவ்வளவு இன்பமா? :)

குழாய் தொலைக்காட்சிப் பெட்டியில் தான், நல்ல நிறத்திற்கு சொனி முன்னணியில் நின்றது என நினைக்கின்றேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ, தற்போதைக்கு இதிலுள்ளவற்றில் அள்ளி எடுத்துக்கொள்ளவும்! :unsure:

52325_C_290.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LCD, LED க்கள் 50 Hz உடன் வருவது சாதாரணம்... !

நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் விலையையும் பொருளையும் ஒருக்கா தரம் பார்த்துக்கொள்ளுங்கோ...

இங்கையும் பார்க்கலாம்...

http://www.amazon.co.uk/gp/gateway-eu

நீங்கள் சொன்ன LG தொலைக்காட்ச்சி இதுவா....???

http://www.amazon.de/LG-37LE4500-LED-Backlight-Fernseher-Full-HD-schwarz/dp/B00424M60W/ref=sr_1_2?ie=UTF8&s=ce-de&qid=1294149951&sr=8-2

---------

தயா, நீங்கள் தந்த இணைப்பில் உள்ளது போல்.... கிட்டத்தட்ட உள்ளது.

நான் பார்த்தது 100HZ, Back light இல்லை.

மற்றும் இணையத்தில் வாங்கும் போது Garantie பிரச்சினை உள்ளது.

பக்கத்தில் உள்ள கடையில் வாங்கினால்... ஏதாவது பிரச்சினை என்றாலும், ஆலோசனை பெறலாம் என்பது கூடுதல் வசதி என நினைக்கின்றேன். :)

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LG தொலைக்காட்சி நம்பிக்கையானது.கொரிய தயாரிப்பு. ஆனால் உதிரிபாகங்கள் யப்பானுடையவை. யப்பானிய தயாரிப்புகளை விட மலிவானது.warrenty ம் ஏனைய தொலைக்காட்சிகளை விட கூட காலத்துக்கு தருவார்கள். 6 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறேன்.எந்த பிரச்சனையும் இல்லை.

நேற்று சம்சங் வாங்குவதாக முடிவெடுத்திருந்தேன், இன்று மனம் கொஞ்சம் ஊசலாடுது நுணாவிலான்.

நாளை இங்கு லீவு நாள் என்ற படியால்... தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவதை வெள்ளிக்கிழமை வரை பிற்போட்டுள்ளேன்.

வீட்டில் தினமும் முழிக்கும் பொருளை, அடுத்த தசாப்தத்திற்கு (பத்து வருடம்) பாவிக்கக் கூடியதாக வாங்கும் போது வடிவாக யோசிக்க வேணும் தானே....think_smiley_50.gif

சிறி testberichte.de இதில் விலை மற்றும் தரம் போன்றவற்றை புள்ளிகளோடு வரிசைப்படுத்தியிருப்பார்கள். பெரும் உதவியாகவிருக்கும். அத்தோடு guenstiger.de இங்கு சென்றால்மலிவான விலையில் எங்கு கிடைக்குமென்பதையும் அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சம்சங் வாங்குவதாக முடிவெடுத்திருந்தேன், இன்று மனம் கொஞ்சம் ஊசலாடுது நுணாவிலான்.

நாளை இங்கு லீவு நாள் என்ற படியால்... தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவதை வெள்ளிக்கிழமை வரை பிற்போட்டுள்ளேன்.

வீட்டில் தினமும் முழிக்கும் பொருளை, அடுத்த தசாப்தத்திற்கு (பத்து வருடம்) பாவிக்கக் கூடியதாக வாங்கும் போது வடிவாக யோசிக்க வேணும் தானே....think_smiley_50.gif

தொலைக்காட்சி வாங்கிட்டியளா?

மின்சாரத்தை குறைவாக பாவிக்கக் கூடியதாகவும் புதிய தொழில் நுட்பங்களையும் (இணையங்கள் இப்போ அழகாக TV யில் இயங்குகின்றன youtube ஒளிக்காட்சிகள் உட்பட)

3D தொழில் நுட்பத்தையும் பார்த்து வாங்க.... நானும் வாங்க வேண்டியுள்ளது இந்த தகவல்களை மேலும் எதிர் பார்கிறேன்...... 100HZ என்றால் எதுக்கானது 300HZ, 400HZ, இருந்தால் என்ன பிரச்சனை நன்றி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தெரிவு என்றால் LG ஆகத்தானிருக்கும். இங்கு கனடாவில் Samsung உம் LG உம் கிட்டத்தட்ட ஒரே விலையில் காணப்படும், அங்கு ஏன் வித்தியாசம் என்று தெரியவில்லை

வாங்கும் பொது Latest ஆன LED இனை வாங்குங்கள் சிறி. அத்துடன் 120 HZ எனில் நல்லது. 60 HZ இற்கும் 120 Hz இற்கும் இடையில் கண்ணால் கண்டு பிடிக்க கூடியளவில் வித்தியாசம் இருக்கும். LCD இலும் LED இலும் 240 HZ உம் வந்து விட்டது, ஆனால் விலை கொஞ்சம் அதிகம்

100 HZ வாங்கக் கூடிய விலையில் இருக்கும் நிழலி. அதற்கு மேல் என்றால் பாரிய விலை வித்தியாசம் இருக்கும்.

நான் LED தான் வாங்க யோசித்துள்ளேன். அநேகமாக LG போலை இருக்குது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SONY அண்ணன்

LG தம்பி

எனது தெரிவு தம்பியாகத்தானிருக்கும்

ஏனெனில் சொனியின் தரத்தையும் விலையையும் இறக்கமுடியாததாலும் ஆனால் விற்பனை மார்க்கற்றை சொனி தங்க வைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் இந்த தம்பி.

எதுவாக இருந்தாலும் உங்களுக்கு வசதியிருந்தால்கடைசியாக வந்த மொடலை வாங்குங்கள். சில ஆண்டுகளுக்கு பாவிக்கலாம்.

ஆனால் இன்றைய விஞ்ஞானவளர்ச்சியில் எந்த பொருள் எப்படி மாற்றமடையும் என்று சொல்லமுடியாதுள்ளது. எனவே கடைசிக்கு முதல் மொடலை வாங்கினால்அரை விலைக்கு வாங்கலாம்.

5வருட கரண்டிக்கு இன்னும் 200 ஈரோக்கள் கேட்பார்கள். எடுத்துவிடாதீர்கள். அந்த காசுக்கு அடுத்தவருடம் இதைவிட நல்லதாக ஒன்றை இதே கரண்டிக்காசுக்கு வாங்கிவிடலாம்.

ஆம் விசுகு, புதிதாக வந்த தயாரிப்புகள் ஆறு மாதத்தில் அரை விலைக்கு வரும். அப்போது.... சரியான கவலையாக இருக்கும்.

முன்பு VHS வீடியோ கமெரா வந்த புதிதில் 3800 DM கொடுத்து வாங்கினேன்.

பின்பு டிஜிற்றல் கமெரா வந்த பின்பு... அதனை கடையில் பார்க்கும் போது 150€ அதாவது 300 DM விற்றார்கள்.

மற்றும், இங்கு மின்சாரப் பொருட்களுக்கு மேலதிக பணம் செலுத்தாமலே 2 வருட கரண்டி தருவார்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.