Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கஞ்சா''

Featured Replies

  • தொடங்கியவர்

பின்குறிப்பு.. மிஸ்டர் நெ. நீலமேகம் நீங்கள் சரியான நாட்டுக்கட்டையாக இருப்பீர்கள் போலிருக்கே....

  • Replies 51
  • Views 20.2k
  • Created
  • Last Reply

அண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. சமர் வந்தால் ஒரு தோட்டத்தில் பாத்தி ஒண்டு போடுவது வழக்கம். எல்லா கூட்டளிகளும் சொல்லி வைப்பார்கள்.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

விசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..? :lol:

நெதர்லாந்தில் கஞ்சா விற்பனை அங்கரிக்கப்பட்ட ஒன்று( COFE SHOP) அனைத்து நகரம் ஏன் சிறிய கிராமத்தில் கூட சில கடைகளில் விற்பனைக்கு அனுமதி உண்டு.

நான் கஞ்சா புகைத்து இல்லை(அடிமையாகிவிடுவேன் என்று பயத்தில்) 3 வருசம் சிகிரெட் புகைத்து இருக்கேன் அதுவும் காதலிக்கும் போது திருமனத்தின் பின் மெல்ல மெல்ல விட்டு விட்டேன்.

பாரிஸில் இருக்கு என் நண்பர்கள்( நண்பர்களின் நண்பர்கள் என்று பல பட்டாளம் வரும்) என்னிடம் வரும் போது 2 நிபந்தனையுடன் வருவார்கள், ஒன்று கஞ்சா வாங்கி தரவேட்னும் 2 வது அம்ஸ்டாமில் :D :D :D :D ஆனால் நெதர்லாந்தில் கஞ்சா குடிக்கும் பெடியங்களை கண்டது இல்லை........

Edited by வினித்

பின்குறிப்பு.. மிஸ்டர் நெ. நீலமேகம் நீங்கள் சரியான நாட்டுக்கட்டையாக இருப்பீர்கள் போலிருக்கே....

பின் குறிப்பு..மிஸ்டர் பனங்காய் வாங்க வெடக்கோழி அடிச்சு குழம்பு வச்சு தாறன்.... :D

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்

நான் கஞ்சா புகைத்து இல்லை(அடிமையாகிவிடுவேன் என்று பயத்தில்) 3 வருசம் சிகிரெட் புகைத்து இருக்கேன் அதுவும் காதலிக்கும் போது திருமனத்தின் பின் மெல்ல மெல்ல விட்டு விட்டேன்.

பாரிஸில் இருக்கு என் நண்பர்கள்( நண்பர்களின் நண்பர்கள் என்று பல பட்டாளம் வரும்) என்னிடம் வரும் போது 2 நிபந்தனையுடன் வருவார்கள், ஒன்று கஞ்சா வாங்கி தரவேட்னும் 2 வது அம்ஸ்டாமில் :D :D :D :D

நான் சிகரட் புகைத்ததில்லை, அடிமையாக்கிவிடும் எண்டு பயம்... :lol:

வேலை முடிந்து வீட்டு வந்தவுடன் டெட்டோலில் குளிக்கும் நான் உங்கட 2ம் விடயத்தை நினைத்தும் பார்ப்பேனா.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் இழுக்க,இழுக்க இன்பம்

கஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்] :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா புகைத்த மனிதப் பெண்ணும் அவளளோடு சேர்ந்து கஞ்சா புகைத்த விலங்குகளும்..!

கஞ்சா புகைத்த நாயின் கதி.

no-drugs-480.gif

Edited by nedukkalapoovan

கஞ்சா,

இது மருத்துவத்தில் பாவிக்கப்படும் ஓர் பொருளாகவே முதலில் அறிமுகமாகியது. இது வேதியிலாளர்களால் பராமரிக்கப்பட்டும் வந்தது. இன்று வலி நிவாரணியாக வரும் பல மாத்திரைகளில் இவை பாவிக்கப்பட்டும் வருகின்றது. அத்துடன் இவற்றுடன் கொக்கேன் எனப்படும் போதைப் பொருளும் பாவிக்கப்பட்டு வருகின்றது. கொக்கேன் தொடர்ந்து உள்ளெடுக்கும் ஒருவரிடம், வலிக்கான உணர்ச்சி அற்றுப்போகும் என்று ஓர் ஆய்வு தெரிவித்ததும் ஞாபத்திற்கு வருகின்றது.

அடிமையாதல் என்பதற்கு அதிலே உள்ள நிக்கொட்டின் எனப்படும் வேதிப் பொருளே காரணமாகும். அது உடலுக்கு தேவை என்று மீண்டும் அதற்கான உணர்ச்சியைத் தூண்டக்கூடியது. பாதிப்பு எனப்பார்த்தால், இதன் மூலமும் நுரையீரலில் காபன் படியும், அத்துடன் இதனுடன் வெளியேறும் தார் எனப்படும் பொருள்(வீதிக்கு இடப்படும் தார் போன்றதுதான்) நுரையீரல் மென்சவ்வில் படிவதனால் அந்தக் கலங்கள் தமது இயக்கத்திற்கான தடைகள் ஏற்படும்போது அதிகளவு இரத்தம் செலுத்தப்படுகின்றது. அதனால் அங்கே கட்டி போன்று ஏற்பட்டு புற்றுநோயாக மாறுகின்றது. கஞ்சா புகைக்கும் சிலர், வடிகட்டிகளை உபயோகிக்கின்றார்கள். இதிலே அவர்கள் பெரும்பாலும், பழச்சாறுகளையோ, அல்லது நீரையோ, அல்லது மதுபான வகைகளையோ விட்டு, மேலே கஞ்சாவை போட்டு கொழுத்தி, இந்தத் திரவத்தினூடே வடிகட்டுகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும் தீமகளும் நிறையவே இருக்கின்றது. ஓர் திரவத்தினூடு சூடான புகை செலுத்தப்படும் பட்சத்தில், அதிலே இருக்கும் காபன், தார் போன்றவை ஓரளவு வடிகட்டப்படுகின்றது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது அங்கே வடிகட்டப்படும் தன்மை குறைகின்றது. இதனால் அடிக்கடி இந்த திரவத்தை மாற்றவேண்டும், இதன் மூலம் முற்றாக அவை தடைப்படும் என்றில்லை.

அது தவிர, நாசா விண்வெளி நிலையத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளின் பாவனைக்காக, நாசா நிறுவனம் முதற்தர கஞ்சாவினை கொங்கோ நாட்டிலிருந்து பெறுகின்றது என்றும், அங்கே வேலை பார்ப்பவர்களுக்கான தங்குமிடங்களிலும், விஞ்ஞானக் கூடத்திலும் கஞ்சா புகைப்பதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானியாக அங்கே வேலைபார்த்த எனது நண்பர் தெரிவித்திருந்தார். ஞாபகச் சக்தியை மழுங்கடிக்கக் குடிய இவை சிறந்த சிந்தனைகளை உருவாக்க காரணியாக இருக்கின்றது.

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் வேலை பார்க்கும் என்னுடைய நண்பனின் நண்பர், தொடர்ச்சியாக ஓர் ஆராய்ச்சிகாக 7 வருடங்கள் அந்த ஆய்வுகூடத்திலேயே தங்கி இருந்தாராம். அவர் தொடர்ச்சியாக, பல புதிய கண்டுபிடிப்பு வேலைகளில் ஈடு பட்டிருந்த காலப்பகுதியில், 7 வருடங்களாக குளிப்பதில்லை, என்றும், உணவு உண்ணுதல், மலசலம் கழித்தல், போன்றவற்றுடன் மட்டுமே அந்த சிறிய அறைக்குள்ளேயே அடைபட்டிருந்து ஆராய்ச்சி மெற்கொண்டாராம். உணவு கூட சரிவர எடுத்துக்கொள்ளாது, ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருந்தாராம். திடீரென தூங்குவதும், திடீரென எழுதிருந்து ஆராய்ச்சியை தொடர்வதும் என்றிருந்த அவருக்கு கஞ்சா மட்டும் நேரம் தவறாமல் கிடைக்கவேண்டும் என்றும் கூறினார். தாங்கள் அவருடைய அந்த ஆராய்ச்சி அறைக்குள் செல்வதற்கு என்றே கஸ்ரப்பட்டு செல்லவேண்டும் என்றும், துர்நாற்றமும், ஒரே கஞ்சா புகையினாலும், குப்பைகளினால் நிறைந்த அந்த இடத்தினை சுத்தம் செய்யும்போது 7 வருட ஆராய்ச்சியின் பின்னர், முதல் வருடத்தில் உண்ட உணவின் கூறுகளும் அவற்றிலிருந்து பரவிய நுண்ணங்கிகளையும் வேறொரு ஆய்வுக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 7 வருட ஆராய்ச்சியின் பின்னர் வெளி உலகினை காண்பதற்கு அந்த ஆராய்ச்சியாளர் விரும்பாமையினால், அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதற்கும், அவருடைய வீடும், வெளி வெளிச்சம் உள்ளே நுழையாதவாறு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு கடின உழைப்பாளிகளின் மூலமே இன்றைய தொழில் நுட்பம் அபரிமித வளர்ச்சி அடைந்து வருகின்றது. இது வெளி உலகிற்குத் தெரியாத பல உண்மைகள். இவர்களது ஆராய்ச்சிகளை விலைகொடுத்து வாங்கும் பண முதலைகள் அவர்களிடம் சிறு தொகையை கொடுத்துவிட்டு, தாம் மீதியை சுருட்டிக்கொள்வதோடு தமது பெயருக்கு புகழையும் வாங்கிக் கொள்ளுகின்றன.

கஞ்சா புகைப்பது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் எதுவும் அளவுடனிருந்தால் நல்லமே! தினமும் ஒரு துளி விசம் சாப்பிட்டு வந்த சீனர் ஒருவர் தனது 40 ஆவது வயதில் தற்கொலை செய்ய முயற்சி செய்து அதே விசத்தினை எடுத்து பருகியுள்ளார். ஆனால் அந்த விசம் அவருடைய உடலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவரை ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், அவர் அந்த நஞ்சிற்கு இசைவாக்கம் அடைந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.

சரியான சந்தர்பத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால் எதுவும் நன்மையே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தம்

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவை ஒருமுறை பாவித்து பார்க்க வேண்டும் என்று ஆசை. அது தரும் தாக்கத்தையும் அறிந்து உணர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒமோம். கிறிஸ்மஸ் பார்ட்டிக்கு சுத்தித் தந்ததைப் பத்திப் போட்டு திரும்பிச் சைக்கிளில் வேகமா வரேக்கை பிளேன் ஒட்டுறமாதிரித்தான் இருக்கும். அடுத்த நாள் எழும்பி மூக்கைச் சீறினால் நிறைய இரத்தம் வந்தால், குளிருக்கு ஒழுங்கான உடுப்புப் போடாமல் போனதால் வந்ததா அல்லது கனக்கச் சுத்துப் பத்தினதால் வந்ததா என்ற கேள்வியும் வரும். :lol:

கெரோயின் பத்திப் பார்த்தேன் மனித எலும்பு கருகும் போது ஏ ற்படும் நாற்றம் அன்று வாந்திதான் .கண்சிவக்கும் உடலின் கட்டுப்பாடு எங்களிடம் இருக்காது அடிமையாயாகிவிடுவோம்.

எல் எஸ் ரி போட்டேன் மண்டைக்குள் மட்டும் கிர்ரெண்டும் மற்றும் உடலில்50வீதம் கட்டுப்பாடு எங்களிடமிருக்கும்.ரிப்ஸ் பொல்லாதசாமான் கண்சிவக்கும் கன்னங்கள் வீங்கும் கண்ணாடியில் பார்த்தால் பயங்கரமாகவிருக்கும்,அடுத்து என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது, கொலை கூடசெய்யதயங்கமாட்டோம்.மாடியிலிருந்து பாயச்சொல்லும் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் .கொக்கயீன் மூக்கால் இழுத்தால் மண்டைக்குள் மட்டும் வெலை செய்யும்.ஆனந்தம்தான் , ஆனால் அடிமையாகலாம். விலைஅதிகம். அடிமையாவதற்கு சாத்தியமுள்ளது.கிரக்ஸ் என்னசெய்யுமென்று தெரியாது, கட்டு சூஸ்தி கிராஸ் போன்றவை மருந்தாக பாவிக்க அரசே அனுமதிதுள்ளது.இவை மென்மையான போதை வஸ்த்துக்கள்.அதற்காக இவற்றை பாவிக்கும்படி சொல்லவில்லை.

பொம்மைவெளிக்கு போய் அப்பவே இழுத்துப்பார்த்தாச்சு.பின்னர் லண்டன்,பரிஸ்,ஆம்ஸ்ரடாம் என்று நண்பர்களுடன் ஒப்புக்கு ஊதினேனே ஒழிய அதன் ருசிபிடிபடவில்லை.அதே போல் தான் சிகரெட்டும் இன்று நண்பர்களுடன் பியர் அடித்தால் மாத்திரம் இரண்டு இழுவை.நமக்கு பிடித்தது குடிதான் அளவோட.

லண்டனில் இருந்து போய் பரிசில் ஒருமுறை தண்ணிஅடித்துமுடிய சிலர் கட்டைபத்தவேண்டும் என்றார்கள் அதைகாலை 2 மணி இருக்கும்.அங்கிருந்த ஒருவருடன் நானும் வருகின்றேன் என்று லாசப்பல் என்ற இடத்திற்கு போனோம்.இருட்டுக்குள் கையில் 100 பிராங் வைக்க அவனும் ஒரு கட்டையத்தந்தான் பாட்டீல வந்து பெருமையாக கொடுத்தால் அது வெறும் மண்கட்டி.பின்னர் திரும்ப போய் வேறு இடத்தில் நல்ல சாமான் வாங்கிவந்தோம்.

கனடா வந்து முதல் இருந்தவீட்டில் எனது தோட்டத்தில் ஒரு செடி மிகவிரைவாக முளைத்துவந்தது நண்பன் சொன்னான் என்னவென்று பார்ப்போம் புடுங்காமல் விடு என்று.சில வாரங்களின் பின் கராஜ்சுக்குள் இருந்து பத்தும் போதுதான் சொன்னார்கள் நட்டு அறுவடையும் செய்து காயவைத்து இப்ப பத்துகின்றோம் நீ இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை என்று.அதே நண்பன் இப்போ டவுண்ரவுணில் இருக்கின்றான் அப்பாட்மென்ட் யன்னலுக்குள்ளால் ஏறிப்போய் மரத்தில் சிறுகுடுவைகளுக்குள் வளர்கின்றான்.ஆள் நல்ல ஆரோக்கியமா இன்னமும் இருக்குது.கலியாணம் கட்டவில்லை அந்தமாதி மல்டிக்கல்சரல் கேர்ல்பிரண்ஸ் வைத்திருக்கின்றான்.

சிகரெட் இழுக்க,இழுக்க இன்பம்

கஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்] :D:lol::D

அதெப்படி இவ்வளவு தெளிவாக சொல்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் இழுக்க,இழுக்க இன்பம்

கஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்] :D:lol::D

அனுபவம் பேசுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிகம் பேரால் உட் கொள்ளப் படும் ஒரே ஒரு போதைப் பொருளாக கஞ்சா (மர்ஜுவானா/ஹஷிஷ்/கனாபிஸ் என்பன இதன் மற்றைய பெயர்கள்) இருக்கிறது. கஞ்சாச் செடியின் 40% வீதம் வரை கனாபிடோல் (cannabidiol) எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பதார்த்தமாகும். ஆனால், மிகுதி 60% வீதத்தில் சிகரட்டில் இருப்பது போலவே ஆயிரக் கணக்கான வேறு பதார்த்தங்கள் இருக்கின்றன. அதனால் சிகரட்/பீடி/சுருட்டுப் போலவே நுரையீரலைப் பாதிக்கும் துகள்கள் கஞ்சா புகைப்பதாலும் எமது உடலுக்குள் சென்றடைகின்றன.இதனாலேயே கஞ்சா புகைப்போர் பல நுரையீரல் தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. அடிமைப் படுதல் (addiction) எனும் போது, நிக்கொட்டின் மட்டுமல்ல, கனாபிடோலும் அடிமைப் படுத்துதலைச் செய்ய முடியும். மூளையில் உள்ள கனாபிடோலை உள்வாங்கும் வாங்கிகள் (receptors) மிகையாக வேலை செய்யும் போது tolerance உருவாகி இன்னும் இன்னும் அதிகம் கஞ்சா வழியாக கனாபிடோலை மூளைக்கு வழங்க வேண்டி வரும்- இது எந்த மகிழ்ச்சியூட்டும் மாத்திரையிலும் (recreational drug) நடக்கக் கூடிய ஒன்று. கஞ்சாவின் மருத்துவப் பயன்கள் இந்தக் கனாபிடோல் மற்றும் அதன் வழி வந்த பதார்த்தங்களின் மருத்துவப் பயன்களேயாகும். நீண்டகால வலிக்கு நிவாரணமழிக்கும் குணம் கனாபிடோலில் உள்ளதாக மனிதர்களில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கனாபிடோலின் மற்றைய மருத்துவக் குணங்கள் அனேகமாக எலி போன்ற ஆய்வு கூட விலங்குகளிலும் உடலுக்கு வெளியே வளர்க்கப் பட்ட மனிதக் கலங்களிலும் மட்டுமே நிரூபிக்கப் பட்டிருப்பதால் மனிதர்களில் உண்மையிலேயே நன்மை பயக்குமா என்பது நிச்சயமில்லாத ஒன்று. உதாரணமாக, மார்புப் புற்று நோய்க் கலங்களை அழிக்கவும், உடற்பருமனாதலைத் தடுக்கவும் கனாபிடோலினால் இயலும் என்று காட்டியிருக்கிறார்கள். கனாபிடோலையோ கஞ்சாவையோ நன்மை செய்யும் என்று நம்பி மனிதரில் சோதித்து விட முடியாமைக்கு காரணங்கள் உண்டு: சமூகக் காரணிகள் பங்களிப்புச் செய்யும் போது, கஞ்சா புகைப்போர் உளப்பிளவு நோய்க்கு (Schizoprenia) ஆளாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், அடிமையாதலும் நிகழக் கூடும்.நவீன விஞ்ஞானத்தினால் கனாபிடோல் என்ற தூய பொருளை அல்லது அதிலும் தீங்கு குறைந்த ஒரு பொருளை சுத்திகரிப்பு மூலமோ அல்லது செயற்கை முறை மூலமோ தயாரிக்க முடியும் (இதற்காக மருந்தியல் கம்பனிகள் இந்த ஆய்வுகளில் பல மில்லியன் டொலர்கள் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்). அது வரை கஞ்ஞா புகைக்காதிருப்பதே நல்லது!

Edited by Justin

எங்கட ஜோகிகளும் ஞானிகளும் சிவன் அருளிய பாணமான ( மூலிகையான) கஞ்சாவை உள் இழுத்து தானே முக்தியும் ஞானமும் அடைஞ்சவை....

ஆகவே மாக்களே கஞ்சா புனிதமானதும் கூட .... :lol:

  • தொடங்கியவர்

செக்ஸ்.

புகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.

(எத்தினை பச்சை விழுகுது எண்டு பார்ப்போம்..... :lol: )

எங்கட ஜோகிகளும் ஞானிகளும் சிவன் அருளிய பாணமான ( மூலிகையான) கஞ்சாவை உள் இழுத்து தானே முக்தியும் ஞானமும் அடைஞ்சவை....

ஆகவே மாக்களே கஞ்சா புனிதமானதும் கூட .... :lol:

:wub: :wub: :wub:

செக்ஸ்.

புகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.

:)

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ்.

புகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.

(எத்தினை பச்சை விழுகுது எண்டு பார்ப்போம்..... :lol: )

:)

ஒருத்தர் சிரிச்சிட்டாரய்யா..! :lol:

ஒருத்தர் சிரிச்சிட்டாரய்யா..! :lol:

ச்சீ..ச்சீ ..... நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அதை வாசிக்க எனக்கு கூச்சமா இருந்தது. அதான் சிரித்தேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்!

அது எதற்கு நமக்கு!!

கஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்!

அது எதற்கு நமக்கு!!

நரமாமிசம்தான் கொஞ்சம் ------மற்றும்படி----

  • தொடங்கியவர்

கஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்!

அப்படியாமே.... அடிஆத்தி..... மொத வேலயா இதுக்கு சுத்துபாட்டு பதினெட்டு பட்டியிலும் தடை விதிக்கோனுமுங்கோ... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.