Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரிமலை அருகே கொடூர விபத்து 102 பேர் மரணம்

Featured Replies

சபரிமலையில் நேற்று மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பலர் கொடூரமான விபத்தில் சிக்கினர் இதில் 102 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளி கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசு பேரிடர் மீட்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.

விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது.

வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யாத்ரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டது என்றும், அதை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாகவும் ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.

மிகவும் குறுகலான பாதை என்பதால் ஆம்புலன்ஸ்களோ வேன்களோ செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 102 சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. செல்போன்களும் ஓலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வண்டிப்பெரியாறு போலீஸôர் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும், பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.

நெரிசலில் இறந்ததாக ஒரு வட்டாரமும், வாகனம் ஏறியதால் நசுங்கி இறந்ததாக மற்றொரு வட்டாரமும் தெரிவிக்கிறது.

விபத்து நடந்த இடம் ஒரு அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு விளக்கு வெளிச்சம் இல்லை. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 3 மணிநேரத்திற்கு ஆகும். ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மகர ஜோதி முடிந்து வாகனங்கள் வந்து கோன்டிருந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தற்போது 102 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதால் அவர்களின் அடியாளத்தைக் காண்ட் காவல்த்றையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சூழ்நிலையின் தீவிரத்தைக் கணிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கியோர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1101/15/1110115001_1.htm

  • தொடங்கியவர்

சபரிமலை விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

சபரிமலைக்கு அருகில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்தில் 106 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் ரூ.1லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரணத் தொகையிலிருந்து இதனை வழங்கிட பிஅதமர் உத்தரவிட்டதோடு, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோட் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1101/15/1110115003_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி! :o

  • கருத்துக்கள உறவுகள்

போனமுறை 8க்கோடிக்கு மேல் பக்தர்கள்சென்றதாக அறிந்தேன்.

இந்தமுறை அதைவிட அதிகமாக இருக்கும். பிரான்சிலிருந்தே ஆயிரக்கணக்கானவர்கள் சென்றிருந்தனர். இது தொடரும் போல்தான் தெரிகிறது. பாதுகாப்போ ஒழுங்கமைப்போ இல்லாத ஒரு இடத்தில் இத்தனை மக்கள்; கூடுவது.....?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தமிழர்கள், அபத்தங்களில், மாயைகளில் விழுந்து மரணிப்பது வேதனையான, பரிதாப செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

சபரி மலை ஆலய அனர்த்தத்தில் இலங்கையரும் மரணம்!

சனி, 15 ஜனவரி 2011 20:08

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரி மலை ஐயப்பன் ஆலயத்தில் நேற்று இரவு சன நெரிசலில் சிக்கி இறந்த நூற்றுக்கணக்கான பக்தர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளார்.

ஆலயத்தில் மகரஜோதியை தரிசிக்கின்றமைக்காக அடிபிடிபட்டுக் கொண்டமையில் 104 பேர் அநியாயச் சாவு அடைந்துள்ளனர்.

இவர்களில் 70 பேருக்கும் அதிகமானோர் இன்று அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். இவர்களில் ஒருவர் இலங்கையர் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

tamilcnn.com

  • கருத்துக்கள உறவுகள்

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!" என்ற வரிகள்தான் ஞாபத்திற்கு வருகிறது...

தமிழனுக்கு எப்பொழுதும் அயலவன் பொருளில்தான் நாட்டமும், ஈடுபாடும் அதிகம்.. இது இக்கால திரையுலகம் வரை பொருந்தும்...

அருமையான கருத்துள்ள பாடல் இருக்கையில் "முக்காலா.. முக்கா பூ"னாவை ரசிப்பர்...

உள்ளூர் அழகிகள் நெல்லிக்கனியென இருக்க வெளியூர் அத்திகளையும் நத்தைகளையும் ருசிப்பர்..

அறுபடைவீடுகளும், மீனாட்சி சுந்தரேசுவரரும், நடராசரும் நின்று வீற்றிருக்க "அரைகுறை" குத்துக்காலு பிறவிக்கும், குபேர கடன்காரனுக்கும் கடன்பட்டு காவடியெடுக்கும் 'பே'விசிறிகள்..

என்ன இல்லை, இத்தமிழ் திருநாட்டில்..குருடர்களே...? :wub::huh:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பக்தி இருப்பதில் தவறில்லை.

உள்ளூரில் உள்ள கோவிலிலோ. வீட்டில் உள்ள சாமிப்படத்தையோ கும்பிட்டுக் கொள்ளலாம்.

அதற்காக, ஊர் விட்டு ஊர் போய் கும்பிட வேண்டும் என்று இல்லை.

பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளிலிருந்து பலர் தனி விமானம் ஒழுங்கு பண்ணி பல ஈழத்தமிழர் செல்வதாக அறிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பக்தி இருப்பதில் தவறில்லை.

உள்ளூரில் உள்ள கோவிலிலோ. வீட்டில் உள்ள சாமிப்படத்தையோ கும்பிட்டுக் கொள்ளலாம்.

அதற்காக, ஊர் விட்டு ஊர் போய் கும்பிட வேண்டும் என்று இல்லை.

பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளிலிருந்து பலர் தனி விமானம் ஒழுங்கு பண்ணி பல ஈழத்தமிழர் செல்வதாக அறிகின்றேன்.

இப்படிப்பட்டவர்களை, "செத்தும், பரலோகம் போய்ச்சேர்" என்று தண்ணி தெளித்து விட்டுவிடுவதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்டவர்களை, "செத்தும், பரலோகம் போய்ச்சேர்" என்று தண்ணி தெளித்து விட்டுவிடுவதே நல்லது.

வன்னியன், பலர் குழந்தைப் பேறு வேண்டியும், பதவி உயர்வு வேண்டியும் நேர்த்திக் கடன் வைத்துச் செல்கிறார்கள்.

பரலோகம் போனால் இது நிறைவேறாதே.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன், பலர் குழந்தைப் பேறு வேண்டியும், பதவி உயர்வு வேண்டியும் நேர்த்திக் கடன் வைத்துச் செல்கிறார்கள்.

பரலோகம் போனால் இது நிறைவேறாதே.... :rolleyes:

குழந்தைப்பேறும், பதவி உயர்வும் தன் முயற்சியினால் வரவேண்டியது...மரத்தை சுற்றுவதாலோ, மலையை குடைவதாலோ வந்திடுமா? சரி அப்படியே நேர்ந்து கொண்டாலும் தமிழ் நாட்டிலோ அல்லது அவர்கள் வாழும் புலத்திலோ முடித்துகொள்ளலாம்தானே?

கடவுள் ஒன்றேயொன்றிருக்க, அதற்கு ஏனிந்த தனித்தனி சட்டங்கள், சடங்குகள், மூட நம்பிக்கைகள்..அதனால் வரும் அவலங்கள், அனர்த்தங்கள்..?

அரைவேக்காட்டு பகுத்தறிவாளர்களுக்கும், இந்து சமய விரோதிகளுக்கும் உற்சாகமூட்டும் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

<_< கடவுளென்று இருக்குமென்றால் இன்று நடக்கும் அழிவுகளும், அனர்த்தங்களும் நடந்திருக்க வாய்ப்பில்லை. 2009 வன்னியில் பிறக்காத சிசுவும், ஓரிரு மாதப் பாலகர்களும் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு கடவுளாவது காரனம் சொல்ல முடியுமா, அல்லது எந்தக்கடவுளாவது நியாயப்படுத்த முடியுமா??

இயற்கை அனர்த்தங்களில் 2004 இல் மட்டும் ஒரு மில்லியன் மக்கல் பலியானார்களே, அதை எந்தக்கடவுள் வந்து நியாயப்படுத்த முடியும்?? அல்லது எந்தக் கடவுளின் பக்தர்களால் இவற்றுக்கு விளக்கம் கொடுக்க முடியும்??

அதெப்படி, இதிகாசங்களில் மட்டும் மக்கள் கேட்டவுடன் ஓடிவந்து உதவும் கடவுள்கள் இப்போது மட்டும் ஒளிந்திருக்கிறார்கள்.

இருக்கும் கடவுள்கள் போதாதென்று, இப்போது, லிங்கம் எடுக்கிறேன், திருநீறு கொட்டுகிறேன், சங்கிலி உருவுகிறேன் என்று புதுக்கடவுள்கள். சனம் அலைமோதுது. அதே கடவுள்கள் நடிகைகளுடன் கட்டிப் புரண்டாலென்ன, சிறுவர்களை பாலியல் ப்லாத்காரத்திற்கு ஆளாக்கினாலென்ன, பக்த கோடிகள் உண்மையைக் கண்டறிந்தபோது கொல்லப்பட்டலென்ன....இன்னும் நம்பிக்கொண்டுதானிருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், தங்களைக் கடவுளின் மறு அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மனிதக் கடவுள்கள், தாம் இறக்கும் காலம் நெருங்க நெருங்க இன்னொரு சிறுவனையோ அல்லது சுறிமியையோ காட்டி எனது அடுத்த பிறப்பு அவர்தான் என்று சொல்லுவதன்மூலம் தமது பித்தலாட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற வழிசமைத்து விட்டுப் போகிறார்கள். இந்த மந்தைக்கூட்ட பக்தர்களும், போலிக்கடவுள்கள் காட்டும் திசையில் மே...சொல்லிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!" என்ற வரிகள்தான் ஞாபத்திற்கு வருகிறது...

தமிழனுக்கு எப்பொழுதும் அயலவன் பொருளில்தான் நாட்டமும், ஈடுபாடும் அதிகம்.. இது இக்கால திரையுலகம் வரை பொருந்தும்...

அருமையான கருத்துள்ள பாடல் இருக்கையில் "முக்காலா.. முக்கா பூ"னாவை ரசிப்பர்...

உள்ளூர் அழகிகள் நெல்லிக்கனியென இருக்க வெளியூர் அத்திகளையும் நத்தைகளையும் ருசிப்பர்..

அறுபடைவீடுகளும், மீனாட்சி சுந்தரேசுவரரும், நடராசரும் நின்று வீற்றிருக்க "அரைகுறை" குத்துக்காலு பிறவிக்கும், குபேர கடன்காரனுக்கும் கடன்பட்டு காவடியெடுக்கும் 'பே'விசிறிகள்..

என்ன இல்லை, இத்தமிழ் திருநாட்டில்..குருடர்களே...? :wub::huh:

அவ்வளவும் தங்கம். :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!" என்ற வரிகள்தான் ஞாபத்திற்கு வருகிறது...

தமிழனுக்கு எப்பொழுதும் அயலவன் பொருளில்தான் நாட்டமும், ஈடுபாடும் அதிகம்.. இது இக்கால திரையுலகம் வரை பொருந்தும்...

அருமையான கருத்துள்ள பாடல் இருக்கையில் "முக்காலா.. முக்கா பூ"னாவை ரசிப்பர்...

உள்ளூர் அழகிகள் நெல்லிக்கனியென இருக்க வெளியூர் அத்திகளையும் நத்தைகளையும் ருசிப்பர்..

அறுபடைவீடுகளும், மீனாட்சி சுந்தரேசுவரரும், நடராசரும் நின்று வீற்றிருக்க "அரைகுறை" குத்துக்காலு பிறவிக்கும், குபேர கடன்காரனுக்கும் கடன்பட்டு காவடியெடுக்கும் 'பே'விசிறிகள்..

என்ன இல்லை, இத்தமிழ் திருநாட்டில்..குருடர்களே...? :wub::huh:

இக்கரைக்கு அக்கரை பச்சை. அத்தோடு வன்னியனுக்கு ஒரு பச்சை. :)

  • கருத்துக்கள உறவுகள்

சபரி்மலை நெரிசல் ஏற்பட்டது எப்படி?-அதிர்ச்சி தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 16, 2011, 11:01[iST]

பத்தினம்திட்டா: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 100க்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியதற்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற மகரவிளக்கு தரிசனத்தை கண்டு விட்டு புல்மேடு நோக்கி சுமார் இரண்டை லட்சம் பக்தர்கள் திரும்பியுள்ளனர். அப்போது ஏராளமான வாகனங்கள் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளன. பயணிகளை ஏற்றி வந்த வாடகை ஜீப் ஸ்டார்ட் ஆகாமல் போகவே அதனை பக்தர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியி்ல் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜீப் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அது ஆட்டோ ரிக்ஷா மீது மோதி, புறப்பட தயாராக இருந்த மினி பஸ் மீது மோதியுள்ளது.

அதைத் தொடர்ந்து ஏற்பட் களோபரத்தினால் பக்தர்கள் சிதறி ஓட, மிகக் குறுகிய அந்த இடத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் கீழே விழுந்து மிதிபட, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பக்தர்கள் இருபுறமும் இருந்த தற்காலிக கடைக்களுக்குள் திபுதிபுவென புகுந்துள்ளனர்.

இதில் கடையில் இருந்த பொருட்கள் கீழே சரிய, கோபமான கடைக்காரர்கள், பக்தர்களை கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் கடைகளுக்குள் இருந்து பக்தர்கள் வெளியே திரும்பி வெளியே ஓடி வர, கடைகளுக்குள் வர முயன்றவர்களும் இவர்களும் எதிரெதிரே மோதிக் கொண்டு தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் மேலும் பலரும் கீழே விழுந்து மிதிபட்டுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி கீழே விழுந்துவிடாமல் இருக்க சாலையி்ன் இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பு சங்கிலிகளை பக்தர்கள் பிடித்து தொங்க, அந்த தடுப்பு சங்கிலி எடை தாங்காமல் மொத்தமாய் அப்படியே பெயர்ந்துள்ளது.

இதனால் ஏராளமான பக்தர்கள் இருண்டு கிடந்த பள்ளத்துக்குள் விழுந்துள்ளனர். மகரஜோதியை கண்ட புல்மேடு உப்புபாறையில் இருந்து மரண ஒலியோடு பக்தர்கள் பள்ளத்துக்குள் சரிந்து விழுந்து உயிரை இழந்துள்ளனர்.

போதிய மின் வசதிகளும் இல்லாத சூழலும், இரண்டரை லட்சம் ஐயப்ப பக்தர்களை ஓழுங்குபடுத்த வெறும் 5 போலீசார் மட்டுமே அங்கு பணியில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஜீப் ஒரு காரணம் என்றாலும் உயிரை காப்பாற்ற கடைக்குள் புகுந்த ஐயப்ப பக்தர்களை விறகு கட்டைகளால் தாக்கி விரட்டிய அந்த பகுதி கடைக்காரர்கள் தான் மிக முக்கிய காரணம் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கேரள அரசு தீவிர நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டி தக்க தண்டனை பெற்று தர வேண்டும்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது கேரள காவல்துறையினர் காட்டுமிராண்டிதனமான தாக்குதலை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் புல்மேட்டில் பெரிய வாகனங்கள் நிறுத்த வண்டிபெரியார் முதல் வல்லகடவு செக்போஸ்ட் பகுதியில் கோழிக்காணம் பகுதி ஓதுக்கப்பட்டும், தவறான அணுகுமுறையால் இந்த வாகனங்கள் அங்கு நிறுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சபரிமலை வரலாற்றில் நடந்த மிகப்பெரிய முக்கிய விபத்து இதுதான். 1952ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி 66 பேர் பலியாகினர். 1999ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிலச்சரிவில் 53 பேர் பலியாகினர். இந்த விபத்துகள் அனைத்தும் மகர ஜோதி தரிசனம் சமயத்தில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் உண்டியல் வசூல், வாகன வசூல் என பல்வேறு வழிகளில் பல நூறு கோடிகளை குவிக்கும் தேவஸ்தனமும் சரி, கேரள அரசும் சரி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் காசி்ல் மட்டுமே குறியாக இருப்பதை விட்டு விட்டு அவர்களது உயிரையும் பாதுகாக்கும் வண்ணம் சாலை வசதி, பாதுகாப்பு வசதி, உள்ளிட்டவைகளை இந்த 109 மரணத்துக்கு பிறகாவது சீரமைக்க வேண்டும்.

செய்வார்களா.....???

thatstamil

இந்த சம்பவத்தில் கேரள அரசு தீவிர நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டி தக்க தண்டனை பெற்று தர வேண்டும்

செய்யவேணும் ...சர்வதேச விசாரணை செய்து .ஜக்கிய நாடுகள் சபைக்கு மணு அனுப்பி பான் கீ மூன் தலைமையில் விசாரனை செய்தால் ஒரு நல்ல தீர்வை ஜயப்பன் காட்டுவான்..... :wub:

சபரி்மலை நெரிசல் ஏற்பட்டது எப்படி?-அதிர்ச்சி தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 16, 2011, 11:01[iST]

இந்த சம்பவத்தில் கேரள அரசு தீவிர நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டி தக்க தண்டனை பெற்று தர வேண்டும்.

இதிலிருந்து எஸ்கேப் ஆவதற்காகத்தானே மத்திய அரசு காசை கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் சற்று முன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது!

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2011 16:13

சபரி மலை ஐயப்பன் ஆலயத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கை பக்தர் உஷாக்காந்த் சாமியின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரி மலை ஐயப்பன் ஆலயத்தில் மகரஜோதியை தரிசித்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் உஷாக்காந்த் சாமியும் ஒருவராவார். அவருடைய சடலம் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி தெனியாய பகுதியைச் சேர்ந்த உஷாக்காந்த் சாமி வீட்டில் கடைசி பிள்ளையும் ஆவார்.

கடந்த 14ஆம் திகதி சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதியை தரிசித்துவிட்டு ஏராளமான பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த வேளையில் பக்தர்களுக்கு எதிரே ஜீப் வண்டியொன்று சென்று கட்டுப்பாட்டை இழந்து பின்நோக்கி வந்துள்ளது.

அந்த விபத்தினால் பக்தர்கள் சிலர் உயிரிழந்ததோடு அதில் ஏற்பட்ட சனநெரிசலாலும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilcnn.com

  • கருத்துக்கள உறவுகள்

சாவுகளுக்கு பக்தர்கள் பொறுப்பல்ல.. கேரள அரசே பொறுப்பு..! :unsure:

மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் சரியான பாதுகாப்பு முறைமைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு..! பாதுகாப்பற்ற இடங்களைக் கண்டறிந்து அங்கே கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவசியம்..! ஆனால் அங்குள்ள அரசுகள் ஏதோ கால்நடைகள் இறந்ததுபோல நடந்துகொண்டிருக்கிறார்கள்..! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலைக்கு கும்பிடச் சென்ற போது 102 பேர் பலி. வீட்டில் இருந்தால் தப்பி இருப்பார்கள். மக்காவுக்கு அல்லாவைத் தரிசிக்க செல்பவர்களும் கூட்ட நெரிசலிலும் கொல்லப்பட்டு வருகிறார்கள். சுனாமியின் போது கடற்கரை ஒரத்தில் அமைந்திருக்கும் தேவாலயங்களுக்கு வழிபாடச் சென்றவர்கள் பலர் பலி. ஜோசப் பராஜசிங்கம் நத்தார் பூசைக்கு கும்பிடப் போனபோது தேவாலயத்தில் சுட்டுக் கொலை. கடவுளைக் கும்பிடப் போன போது ஏற்பட்ட சாவுகள் இவை.

----------------------------------------------------------------------------------------------------

வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு, மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாததன் விளைவு, சபரிமலையில் 106 உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கோட்டயம்-பம்பை, எரிமேலி-பம்பை, புல்மேடு-சன்னிதானம் என மூன்று வழிகள் உண்டு. குமுளி வழியாக 36 கி.மீ. சென்று ஆறு கி.மீ. கீழிறங்கி நடந்தால் சன்னிதானத்தை எளிதில் அடைந்து விடலாம் என்பதால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் புல்மேடு-சன்னிதானம் வழியையே அதிகம் பயன்படுத்துவது வழக்கம்.

இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகேயுள்ள, சபரிமலையில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த புல்மேடு பகுதி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மகரஜோதிக்கு மட்டுமே திறக்கப்படுவது வழக்கம்.

சபரிமலையில் தெரியும் மகரஜோதியைக் காண்பதற்காக கடந்த 14-ம் தேதி புல்மேடு பகுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். ஜோதியைப் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில் அனைவரும் ஒருசேர கிளம்ப முயற்சிக்க, பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று, நின்று கொண்டிருந்த ஜீப்பின் மீது மோதியிருக்கிறது.

ஜீப் மலைப்பாதையில் உருள, அதிர்ச்சியடைந்த பக்தர்கள் தாறுமாறாக ஓடியிருக்கின்றனர். அதிக நெரிசலினால் பலர் கீழே விழ, அவர்களை மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஓட, வேலியைத் தாண்டியும் சிலர் கீழே உருள, இப்படி அரைமணி நேரத்தில் 106 பேரின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது அந்தக் கோர விபத்து.

உயிருக்குப் பயந்து ஓடிய பக்தர்கள், அருகிலிருந்த கடைகளுக்குள் செல்ல முயற்சிக்க, கடைக்காரர்கள் அவர்களை அடித்து விரட்டியிருக்கின்றனர். இதனால் விபத்து எண்ணிக்கை மேலும் அதிகமானது. விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள்.

வயர்லெஸ் வசதியில்லாததால், விபத்து நடந்து இரண்டு மணிநேரம் கழித்தே கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்குத் தகவல் தெரிந்திருக்கிறது. அதன் பின்னர் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்த விபத்தை ‘தேசிய பேரிடர் விபத்து’ என அறிவித்து, மீட்புக்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தபோது உயிரிழப்பு அதிகமாகியிருந்தது.

கேரள அரசு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே இந்த விபத்திற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்னர் 1952-ம் ஆண்டு வெடிவழிபாடு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 66 பக்தர்கள் இறந்தனர்.

அப்போது விபத்து குறித்து ஆராய அமைக்கப்பட்ட சந்திரசேகர மேனன் கமிட்டி, சபரிமலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லையென சுட்டிக்காட்டி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கியது.

60 ஆண்டுகளில் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ள நிலையிலும், கமிட்டியின் பரிந்துரைகளை கேரள அரசு நடைமுறைப்படுத்தவில்லை. புல்மேடு-சன்னிதானம் பகுதிக்கு வருவதற்கு இரண்டு வனத்துறை செக்போஸ்டுகளைக் கடந்துதான் வரவேண்டும். பக்தர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே அங்கு வந்து டெண்ட் அடித்து மகரஜோதியைக் காண காத்திருப்பது வழக்கம்.

எத்தனை வாகனங்கள், எவ்வளவு பக்தர்கள் என எல்லா விவரங்களும் வனத்துறைக்கும், அரசுக்கும் தெரிந்திருந்தும் சில போலீஸார் மட்டுமே விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் வேறு இல்லை. இதனால் மீட்புப் பணியும் தாமதம் ஆகியிருக்கிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாததால் காயமடைந்தவர்களை இளநீர் வண்டிகளில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

இறந்தவர்களில் 24 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், 28 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என வும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

காயமடைந்தவர்களுக்கு கோட்டயம் மற்றும் தேனி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்து மருத்து வமனைகளுக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததும் மரண எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

சபரிமலை பக்தர்களுக்கு ஏற்படும் மூன்றாவது பெரிய துயரம் இது. 1952-ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 66 பேர் இறக்க, 1999-ல் மகரஜோதி தரிசனம் கண்டு திரும்பிய பக்தர்கள் பம்பையில் நெரிசலில் சிக்கி 52 பேர் இறந்தனர். இப்போது 106 பேர். இந்த எல்லா விபத்துக்களும் ஜனவரி 14-ம் தேதி நடந்ததும் குறிப்பிடத்தக்கது,

விபத்தில் இறந்தவர்களைப் பார்க்க குமுளி மருத்துவமனைக்கு வந்தார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். விபத்தின் காரணம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்க, ‘‘நீதி விசாரணை நடத்தினால்தான் காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் பத்திரிகை அலுவலக சீனியர்களை திருப்திப்படுத்துவதற்காக கண் டதையும் எழுதாதீர்கள். எங்களுக்கு ஆதரவாக இருங்கள்’’ என்று பேச, அதுவும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பிரதமரின் கூடுதல் செயலாளர் கோபாலகிருஷ்ணனின் மகள் அமுல்யாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கேரளா வந்த ராகுல்காந்தி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. வானிலையைக் காரணம் காட்டி ராகுலின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

கேரளாவே பதறிக் கொண்டிருந்த நேரத்தில், ஆலப்புழா படகுவீட்டில் ராகுல் உல்லாசமாக ஓய்வெடுக்க, அவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குமுளி மருத்துவமனைக்கு வந்த கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சி.கே. சந்திரப்பன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து அங்கேயே மயங்கி விழுந்தார். பிறகு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் கர்நாடக பக்தர்கள் பலியானதை அறிந்து உடனடியாக கேரளா வந்தார்கள் அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் உமேஷ்கட்டி, மின்துறை அமைச்சர் சோபா கரந்தலஜே ஆகியோர். கேரள அரசின் பாதுகாப்புக் குளறுபடிகளை கடுமையாக விமர்சித்த அவர்கள், மருத்துவ உதவி தேவைப்படு பவர்களை கர்நாடகம் அழைத்துச் செல்லவும் தவறவில்லை.

கர்நாடக ரூரல் டி.எஸ்.பி. பி.ஜே.பண்டாரி தனி டீமுடன் ஹெலிகாப்டரில் கேரளா வந்து, மரணமடைந்த உடல்களை, கொச்சி வழியாக எடுத்துச் சென்றார். ஆந்திர போலீஸாரும் உடனடியாக வந்து தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவி செய்தனர்.

தமிழக பக்தர்கள் அதிகம் பேர் விபத்தில் பலியான போதும், தமிழக அரசு அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தேனி கலெக்டர் முத்துவீரன் மட்டுமே குமுளி சென்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் தேக்கடியில் நடந்த படகு விபத்தில் சிக்கி பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் உயிரிழந்தனர். அப்போதும் கேரள அரசின் பாதுகாப்புக் குறைபாடுகள் விமர்சனங்களை உருவாக்கியது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சபரிமலையில் இரண்டு கோடியே ஏழு லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளார்கள். அதன்மூலம் 133 கோடி ரூபாய் திரு விதாங்கூர் தேவஸ்தானத்துக்கு வருமானம் கிடைத்துள்ளதாம். வருமானம் ஈட்டுவதில் காட்டும் அக்கறையை வருமானத்தைத் தருபவர்கள் மீதும் கேரள அரசு காட்ட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

106 பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்த இந்த கோர விபத்தை ஆந்திர, கர்நாடக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்து வெளியிட்டன. தமிழக தொலைக்காட்சிகள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி, விபத்தை இருட்டடிப்புச் செய்ய, பலியானவர்களின் உறவினர்களுக்கே இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது.

இந்தச் செய்தியை ஒளிபரப்புச் செய்த கேரள ஊடகங்கள், ‘‘விபத்தில் நூற்றுக்கும் அதிகமான கர்நாடக, ஆந்திர, தமிழக பக்தர்கள் பலி. நல்லவேளையாக மலையாளிகள் யாரும் மரணமடைந்திருக்கவில்லை’’ என திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, பிறமாநில பக்தர்களின் எரிச்சலை அதிகப்படுத்தின.

- குமுதம் ரிப்போட்டர்

இவ்வளவையும் வாங்கிக்கட்டுகின்றனான் இதையும் வாங்கிகட்டுவம்.

ராஜவன்னியன் சொன்னது அத்தனையும் சுத்த தங்கம்.உண்மை.

இதை இவர் இந்தியாவில் இருந்து எழுதி இருந்தால் இன்னமும் ஏற்ககூடியதாக இருக்கும்.

சேரனின்"வெற்றிக் கொடி கட்டு" தான் நினைவுக்கு வந்தது.

அல்லது வழக்கமாக பலர் போல் ஊருக்குத்தான் உபதேசமோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் வாங்கிக்கட்டுகின்றனான் இதையும் வாங்கிகட்டுவம்.

ராஜவன்னியன் சொன்னது அத்தனையும் சுத்த தங்கம்.உண்மை.

இதை இவர் இந்தியாவில் இருந்து எழுதி இருந்தால் இன்னமும் ஏற்ககூடியதாக இருக்கும்.

சேரனின்"வெற்றிக் கொடி கட்டு" தான் நினைவுக்கு வந்தது.

அல்லது வழக்கமாக பலர் போல் ஊருக்குத்தான் உபதேசமோ தெரியவில்லை

இவ்வளவு எழுதியவன், இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்க மாட்டேனா அர்ஜூன்?

எனது தமிழக மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்து ஓய்ந்த பின்னரே இங்கே அனுப்பபட்டுள்ளேன். இதற்குமேல் விளக்கம் தேவையெனில் தனிமடலில் கேளுங்கள் சொல்கிறேன்..என்னுடைய சேவைகளின் விபரத்தை...

இது ஊருக்கு உபதேசமில்லையப்பு.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.