Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்பவர்களை கோழைகள் என்பார்கள் ஆனால் தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா...சாகப் போறோம் எனத் தெரிந்து கொண்டே இப்படித் தான் சாக வேண்டும் என ஒர் வழியை தெரிவு செய்து அதன் படி சாவார்கள்...சிலருக்கு ஆயுசு கெட்டியாயிருந்தால் தப்பி விடுவார்கள் அப்படி இல்லை சாக வேண்டும் என்று தான் எழுதி இருந்தால் இறந்து விடுவார்கள்.

மனதில் விரக்கி,துயரம்,தாங்க முடியாத கவலை இருந்தால் மனம் தற்கொலையை நாடும்...சில பேர் சில பேரைப் பழி வாங்கவும் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என நான் கேள்விப் பட்டு இருக்கேன்...தற்கொலை செய்யும் எண்ணம் திடிரெனத் தான் தோன்றுமாம் ஆனாலும் சில பேர் பல நாள் யோசித்து திட்டம் தீட்டி தற்கொலை செய்வார்கள்...அநேகமாக பலர் தற்கொலை செய்வதற்கு பரிட்சையில் பெயிலாகுதல்,காதல் தோல்வி,கள்ளக் காதல்,குடும்பத்தில் கணவன்,மனைவிக்கும் இடையில் தோன்றும் பிரச்சனை என்பன முக்கியமாக காணப்படுகின்றன.

எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தால் நான் வந்து தூக்கில் தொங்க மாட்டேன்[கண்,முழி எல்லாம் பிதுங்கி அழகில்லாமல் போய் விடுவேன்.]...புகை வண்டி முன்ன‌ல் விழ மாட்டன்[நசுங்கிப் போய் விடுவேன்.]செத்தாலும் அழகாக இருக்க வேண்டும்...என்னைப் பொறுத்த வரை தற்கொலை செய்ய சிறந்த வழி நஞ்சு குடிக்கிறது தான்.என்ன குடிக்கும் போது கொஞ்சம் நேரம் கச‌க்கும் ஆனால் பிறகு ஓகேயாகி விடும்[செத்தாலும் வடிவாயிருப்பன் அது தான் ரொம்ப முக்கியம்.]

ஒருவரும் தற்கொலையை தெரிவு செய்யாதீங்கோ,பிர‌ச்ச‌னையை பேசித் தீர்த்து கொள்ளுங்கோ...உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களது மனநிலையை புரிந்து கொள்ளுங்கோ...எல்லோரும் சந்தோச‌மாய் இருங்கள்...நான் வருகிறேன் நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி உண்மையாய் பகிடியில்லை எனக்கு ஒருமாதிரிகிடக்கு :( :( :o

ரதி, நல்லாத் தானே இருந்தனீங்கள்? என்ன திடீர் என்று இதில எது நடந்தது? ஏன் இப்படி ஒரு பதிவு? :unsure::blink:

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை முடிவுக்கு யாரும் உடனடியாக வருவதில்லை என்றே உளவியல் சொல்கிறது. நீண்ட காலம் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களே இவ்வாறான முடிவுகளை எடுக்க தள்ளப்படுகின்றனர்.

மன அழுத்தம் உள்ள மனிதர்கள்.. தனிமையில் சுற்றம் சூழலின் கவனம் இன்றி கருணை இன்றி அனாதரவாக விடப்படும் போது மன அழுத்தம் அதிகரிக்க வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு சிந்திக்க உந்தப்படுகின்றனர்.

தயவுசெய்து எவராக இருந்தாலும் மன அழுத்ததிற்கு உள்ளாகி இருந்தால் அல்லது அதற்குரிய சூழ்நிலை நிலவினால் உடனடியாக உங்கள் குடும்பநல வைத்தியரை நாடி உங்களுக்கான மன ஆறுதலை பெற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே. இறந்த பின் குறித்த வாழ்க்கையை எவராலும் எச்சந்தர்ப்பத்திலும் மீட்ட முடியாது. ஆகவே முடிந்தவரை உங்களுக்காக இல்லா விட்டாலும் உங்களின் அன்புக்காக உலகில் எத்தனையோ உயிர்கள் அனாதைகளாகி ஏங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்காகவாவது வாழுங்கள்.

அன்னை தெராசா போல இல்லாட்டிலும்.. அனாதரவான உயிர்கள் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால்.. உங்களுக்கும் மன அழுத்தம் நீங்கும். மனித சமூக உறவாடல் அதிகரிக்கும். தற்கொலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையோ சிந்தனையோ எழாது.

தற்கொலை எண்ணம் கொள்ளும் பலர் குறுகிய வட்டத்திற்குள் இந்த உலகை வரையறுத்துக் கொண்டு அதுதான் வாழ்க்கை அதற்கு அப்பால் எதுவுமில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆறறிவுள்ள மனிதர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். பிற உயிரினங்களில் தற்கொலை செய்வது மிகக் குறைவு. இது இந்த உலகம் எந்த மனிதனையும் தற்கொலைக்குள் தள்ள என்று படைக்கப்பட்டதல்ல என்பதை காட்டுகிறது. ஆனால் மனிதர்கள் இயற்றியுள்ள செயற்கைத்தனமான அவர்களைச் சூழ்ந்த உலகம் என்பதுவே பலரை தற்கொலைக்குள் தள்ளுகிறது. காதல் என்பது கூட ஒரு உணர்வு. அதைத் தாண்டி வாழ்க்கை என்பது வேறானது. ஒருவர் காதலித்து ஏமாற்றினால் அதை மறந்துவிடுவதே சிறந்தது. ஏமாற்ற நினைப்பவர் ஒருபோதும் காதலித்து இருக்கவும் முடியாது. அவர் பொய்யானவர். அப்படியானவர்களை நினைவில் இருந்து மட்டுமல்ல.. கருத்தில் இருந்தும் தூர விரட்டி விட வேண்டும்.

அதேபோல்.. சுயநலவாதிகள்.. தயவுசெய்து உங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை மன அழுத்ததிற்கு ஆளாக்குவதையும் செய்யாதீர்கள்.

குறிப்பாக காதல் கலியாணம் கீதல் என்று மற்றவர்களின் மென்மையான மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள்.. அவற்றை செய்யாமல்.. மரங்கள் போல வாழ்ந்து தொலையுங்கள். அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடாதீர்கள். இவற்றின் மூலம் பல உயிர்களை காக்க முடியும்.

வறுமைக்கு ஏற்றத்தாழ்வுக்கு தனிமைக்கு தயவுசெய்து யாரேனும் இலக்கானால் அவர்களுக்கு ஆறுதலும் உதவியும் செய்பவர்களாக இருந்து உங்கள் அன்பை ஆதரவை ஆறுதலை பரிமாரிக் கொள்ளுங்கள். அதன் மூலம் அவர்களின் வாழ்வை வழமைக்கு கொண்டு வர முடியும். இதனால் நீங்கள் எதனையும் இழக்க மாட்டீர்கள்.

பரீட்சையில் தோல்வி அடைவது என்பது பிற மனிதன் உங்களை அவனின் அளவுக்கு எழுப்பக் கூடிய வினாக்கள் கொண்டு அளவீடு செய்தலில் ஏற்படும் தோல்வி என்பதே யதார்த்தம். எல்லாப் பரீட்சைகளுக்கும் எல்லா மனிதருக்கும் ஏற்றதல்ல. மனிதர்களிடையே மதிநுட்பம்.. கேள்விகளை அணுகும் முறை என்று பல வேறுபாடுகள் உள்ளன. எனவே பொதுமைப்பாடான பரீட்சைகளில் தோல்வி அடைவது வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக அர்த்தப்படுத்தப்படக் கூடாது. அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்து உங்கள் வாழ்க்கையை அதற்கேற்ற வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பரீட்சைகளால் மனிதர்களை அளவீடு செய்யும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உளவியலாளர்களுக்கு மாற்றுக் கருத்திருக்கும் என்று நினைக்கவில்லை. பரீட்சைகளே மாணவர்கள் மத்தியிலும் விரக்தி.. மன அழுத்தம்.. புகை.. குடி என்று இட்டுச் செல்கின்றன. பரீட்சைகள் இயற்கையின் அம்சம் கிடையாது. அது மனிதன் இயற்றியது. அதில் பல தவறுகள் உள்ளன. எனவே அவற்றை நீங்கள் உங்களுக்கு என்று எண்ணக் கூடாது. பரீட்சையில் தவறானால்.. அது உங்களை அவர்கள் பரீட்சித்த முறையில் உள்ள தவறை தான் உணர்த்துமே அன்றி உங்களை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதேநேரம் மற்றவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களை பாவிக்க நினைக்காதீர்கள்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் நெடுக்கு! கொஞ்சநேரம் வெளியிலை நில்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நெடுக்கு! கொஞ்சநேரம் வெளியிலை நில்லும்.

வெளியில் நிற்கும் அந்தக் கணங்களுக்குள் ஒரு தற்கொலை நிகழும் என்றால் அதற்காக நீங்கள் என்ன செய்வீர்கள்.. தண்ணி அடித்து மன அழுத்தத்தை போக்குவீர்களோ..???! அது உயிரை காக்க தவறி நிலையாகும்..!

:D:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியில் நிற்கும் அந்தக் கணங்களுக்குள் ஒரு தற்கொலை நிகழும் என்றால் அதற்காக நீங்கள் என்ன செய்வீர்கள்.. தண்ணி அடித்து மன அழுத்தத்தை போக்குவீர்களோ..???! அது உயிரை காக்க தவறி நிலையாகும்..!

:D:unsure:

நான் இங்கே தண்ணி அடிப்பதை விளக்கு பிடித்து பார்க்கிறீர்களாக்கும்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

நாலுபேருடன் அன்னியோன்யமாக பழகப்பாருங்கள்?

அதன் பின் உங்கள் விளம்பரங்களை முன்னிறுத்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நாலுபேருடன் அன்னியோன்யமாக பழகப்பாருங்கள்?

அதன் பின் உங்கள் விளம்பரங்களை முன்னிறுத்துங்கள்!

அந்நியோன்னியமாக பழக முதல் அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக என்றும் பார்க்க வேண்டும்.

கல்லுக் கொட்டில்லில் போய் அந்நியோன்னியம் காக்கனும் என்றால் கல்லுப் போத்தலோடதான் நிற்கனும். அதுதான் அங்கு அந்நியோன்னியம். அப்படி ஒரு அந்நியோன்னியம் தேவை இல்லாத இடத்தில் வேறு வகையில் தான் அதை தெரிவு செய்யனும். :D:)

நான் இங்கே தண்ணி அடிப்பதை விளக்கு பிடித்து பார்க்கிறீர்களாக்கும்? :lol:

இதற்கெல்லாமா விளக்குப் பிடிப்பினம். இவை சூரிய வெளிச்சத்தில தெரியக் கூடிய வெளிப்படை உண்மைகளாக கூட இருக்கலாம். :D:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் தற்கொலையை தெரிவு செய்யாதீங்கோ,பிர‌ச்ச‌னையை பேசித் தீர்த்து கொள்ளுங்கோ...உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களது மனநிலையை புரிந்து கொள்ளுங்கோ...எல்லோரும் சந்தோச‌மாய் இருங்கள்...நான் வருகிறேன் நன்றி வணக்கம்..............

கொஞ்சம் நில்லம்மா ...............பேசிதீருங்கோ ..............மற்றவருக்கு உபதேசியாமல் நீங்களும் பின் பற்றி .

......வாழும் வரை வாழுங்கள். உங்களுயிர் மாய்த்து கொள்ள உங்களுக்கு உரிமை இல்லை. ...

.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நியோன்னியமாக பழக முதல் அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக என்றும் பார்க்க வேண்டும்.

கல்லுக் கொட்டில்லில் போய் அந்நியோன்னியம் காக்கனும் என்றால் கல்லுப் போத்தலோடதான் நிற்கனும். அதுதான் அங்கு அந்நியோன்னியம். அப்படி ஒரு அந்நியோன்னியம் தேவை இல்லாத இடத்தில் வேறு வகையில் தான் அதை தெரிவு செய்யனும். :D:)

இதற்கெல்லாமா விளக்குப் பிடிப்பினம். இவை சூரிய வெளிச்சத்தில தெரியக் கூடிய வெளிப்படை உண்மைகளாக கூட இருக்கலாம். :D:)

எந்தவொரு விடயத்தையும் சாதுர்யமாக இழிவுபடுத்திவிட்டு முன்னுக்கு வருபவர்கள் நெடுக்காலை போவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை முடிவுக்கு யாரும் உடனடியாக வருவதில்லை என்றே உளவியல் சொல்கிறது. நீண்ட காலம் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களே இவ்வாறான முடிவுகளை எடுக்க தள்ளப்படுகின்றனர்.

மன அழுத்தம் உள்ள மனிதர்கள்.. தனிமையில் சுற்றம் சூழலின் கவனம் இன்றி கருணை இன்றி அனாதரவாக விடப்படும் போது மன அழுத்தம் அதிகரிக்க வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு சிந்திக்க உந்தப்படுகின்றனர்.

தயவுசெய்து எவராக இருந்தாலும் மன அழுத்ததிற்கு உள்ளாகி இருந்தால் அல்லது அதற்குரிய சூழ்நிலை நிலவினால் உடனடியாக உங்கள் குடும்பநல வைத்தியரை நாடி உங்களுக்கான மன ஆறுதலை பெற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே. இறந்த பின் குறித்த வாழ்க்கையை எவராலும் எச்சந்தர்ப்பத்திலும் மீட்ட முடியாது. ஆகவே முடிந்தவரை உங்களுக்காக இல்லா விட்டாலும் உங்களின் அன்புக்காக உலகில் எத்தனையோ உயிர்கள் அனாதைகளாகி ஏங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்காகவாவது வாழுங்கள்.

அன்னை தெராசா போல இல்லாட்டிலும்.. அனாதரவான உயிர்கள் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால்.. உங்களுக்கும் மன அழுத்தம் நீங்கும். மனித சமூக உறவாடல் அதிகரிக்கும். தற்கொலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையோ சிந்தனையோ எழாது.

தற்கொலை எண்ணம் கொள்ளும் பலர் குறுகிய வட்டத்திற்குள் இந்த உலகை வரையறுத்துக் கொண்டு அதுதான் வாழ்க்கை அதற்கு அப்பால் எதுவுமில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆறறிவுள்ள மனிதர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். பிற உயிரினங்களில் தற்கொலை செய்வது மிகக் குறைவு. இது இந்த உலகம் எந்த மனிதனையும் தற்கொலைக்குள் தள்ள என்று படைக்கப்பட்டதல்ல என்பதை காட்டுகிறது. ஆனால் மனிதர்கள் இயற்றியுள்ள செயற்கைத்தனமான அவர்களைச் சூழ்ந்த உலகம் என்பதுவே பலரை தற்கொலைக்குள் தள்ளுகிறது. காதல் என்பது கூட ஒரு உணர்வு. அதைத் தாண்டி வாழ்க்கை என்பது வேறானது. ஒருவர் காதலித்து ஏமாற்றினால் அதை மறந்துவிடுவதே சிறந்தது. ஏமாற்ற நினைப்பவர் ஒருபோதும் காதலித்து இருக்கவும் முடியாது. அவர் பொய்யானவர். அப்படியானவர்களை நினைவில் இருந்து மட்டுமல்ல.. கருத்தில் இருந்தும் தூர விரட்டி விட வேண்டும்.

அதேபோல்.. சுயநலவாதிகள்.. தயவுசெய்து உங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை மன அழுத்ததிற்கு ஆளாக்குவதையும் செய்யாதீர்கள்.

குறிப்பாக காதல் கலியாணம் கீதல் என்று மற்றவர்களின் மென்மையான மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள்.. அவற்றை செய்யாமல்.. மரங்கள் போல வாழ்ந்து தொலையுங்கள். அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடாதீர்கள். இவற்றின் மூலம் பல உயிர்களை காக்க முடியும்.

வறுமைக்கு ஏற்றத்தாழ்வுக்கு தனிமைக்கு தயவுசெய்து யாரேனும் இலக்கானால் அவர்களுக்கு அறுதலும் உதவியும் செய்பவர்களாக இருந்து உங்கள் அன்பை ஆதரவை ஆறுதலை பரிமாரிக் கொள்ளுங்கள். அதன் மூலம் அவர்களின் வாழ்வை வழமைக்கு கொண்டு வர முடியும். இதனால் நீங்கள் எதனையும் இழக்க மாட்டீர்கள்.

பரீட்சையில் தோல்வி அடைவது என்பது பிற மனிதன் உங்களை அவனின் அளவுக்கு எழுப்பக் கூடிய வினாக்கள் கொண்டு அளவீடு செய்தலில் ஏற்படும் தோல்வி என்பதே யதார்த்தம். எல்லாப் பரீட்சைகளுக்கும் எல்லா மனிதருக்கும் ஏற்றதல்ல. மனிதர்களிடையே மதிநுட்பம்.. கேள்விகளை அணுகும் முறை என்று பல வேறுபாடுகள் உள்ளன. எனவே பொதுமைப்பாடான பரீட்சைகளில் தோல்வி அடைவது வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக அர்த்தப்படுத்தப்படக் கூடாது. அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்து உங்கள் வாழ்க்கையை அதற்கேற்ற வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பரீட்சைகளால் மனிதர்களை அளவீடு செய்யும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உளவியலாளர்களுக்கு மாற்றுக் கருத்திருக்கும் என்று நினைக்கவில்லை. பரீட்சைகளே மாணவர்கள் மத்தியிலும் விரக்தி.. மன அழுத்தம்.. புகை.. குடி என்று இட்டுச் செல்கின்றன. பரீட்சைகள் இயற்கையின் அம்சம் கிடையாது. அது மனிதன் இயற்றியது. அதில் பல தவறுகள் உள்ளன. எனவே அவற்றை நீங்கள் உங்களுக்கு என்று எண்ணக் கூடாது. பரீட்சையில் தவறானால்.. அது உங்களை அவர்கள் பரீட்சித்த முறையில் உள்ள தவறை தான் உணர்த்துமே அன்றி உங்களை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதேநேரம் மற்றவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களை பாவிக்க நினைக்காதீர்கள்..! :)

நெடுக்குத் தம்பி எல்லாம் அனுபவமோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி எல்லாம் அனுபவமோ? :rolleyes:

அனுபவம் இரண்டு வகைப்படும்.

1. நேரடியான அனுபவங்கள்.

2. சூழலில் உணரப்படும் அனுபவங்கள்.

எனக்கு கல்விச் சூழலில் உணரப்பட்ட அனுபவங்கள் தான் அதிகம். நான் உளவியலையும் ஒரு பாடமாக பயின்றிருக்கிறேன். அந்த வகையில் சில அடிப்படை விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அந்தளவே. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைகுறை குடங்கள் தளம்புகின்றன. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரைகுறை குடங்கள் தளம்புகின்றன. :lol:

அரைகுறை குடங்கள் தளம்பினாலும் தண்ணி வீணாகாது. நிறை குடங்கள் தளம்பினால் தான் தண்ணி எல்லாம் வழிஞ்சு ஓடும்..!

தமிழ் பழமொழிதான் தலைகீழ் என்றால்... தமிழர்களுமா..???! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் நெடுக்காலைபோவான் !நான் இங்கே உங்களை மாதிரி விவாதிக்கவோ விதண்டாவாதம் பிடிக்கவோ வருபவனல்ல.

எனது ஊரும் நானும்..... :wub:

இன்றிலிருந்து உங்கள் பெயரை உச்சரிப்பதை நிறுத்திக்கொள்கின்றேன்.நன்றி வணக்கம்.

நானும் உங்களோடு விவாதிக்கவோ விதண்டாவாதம் செய்யவோ வருபவனல்ல. கிடைக்கிற சிறிய ஓய்வு நேரங்களில் எண்ணத்தில் தோன்றுவதை தாய் மொழியில் சொல்லத்தான் வாறனான்.

நான் எக்காரணத்திற்காகவும் சக கருத்தாளனின் பெயரை உச்சரிக்கமாட்டன் என்று சொல்லமாட்டன். யாழைப் பொறுத்தவரை கருத்துக்களுக்கு அப்பால்... கருத்தாளர்கள் எல்லோரும் எனக்கு சமன். யாரையும் நான் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. கருத்துக்களை மட்டுமே நான் வேறுபடுத்தி நோக்குவேன்.

நீங்க எப்பவும் எனக்கு யாழ் கள நட்புக்குரிய கு.சாண்ணா தான். :D:)

ரதியிடம் இருந்து இப்படியான ஒரு திரியை எதிர்பார்க்கவில்லை

அழகுக்கும் வாழ்வுக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போலத்தான் சாகும் காரணத்துக்கும்....

யாழில் துணிச்சலான ஒரு பெண்ணிடம் இருந்தே இப்படியான திரி வருகுதென்றால், மற்ற பெண்களின் நிலை

---------------------

@வல்வைசாகரா,

ஒரு பெண் தற்கொலை பற்றி எழுதி நன்றி வணக்கம் போடுகின்றார்...அது பற்றி ஒன்றும் எழுத மனம் வரவில்லையா? ஆறுதலாக நாலு வார்த்தை? சும்மா கவிதைகளில் மட்டும் பெண்ணியம், வாழ்வு என்று பேசினால் சரியாக இருக்காது சாகரா.....

Edited by நிழலி

-------------------

இதில் பொறுப்பாக பதில் எழுதிய நெடுக்கு பாராடுக்குரியவர்....பெண்களை வெறுப்பவர் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் தான் ஒரு பெண்ணின் தற்கொலை தொடர்பான திரிக்கு பொறுப்புடன் பதில் சொல்கின்றார் !!

தற்கொலையென்றாலும்,தற்கொடையென்றாலும் கோழைகளின் செயலே.

பிரச்சனைகள் வரும் போது, தலைக்கு மேல் பிரச்சனைகள் போகும் போது தன்னால் ஒருமுடிவிற்கும் வர முடியாத நிலையில் தானே எடுக்கும் முடிவு தற்கொலை.

இதே பிரச்சனைக்கு மற்றவனை தள்ளிவிடுவது தற்கொடை.

ரதிக்கு அந்த அளவு பிரச்சனை இல்லை. பல ரதியின் பதிவுகளே அதற்கு சாட்சி.

தற்கொலை பற்றிய மனஓட்டத்தை இன்னோரு பதிவில் துவங்குவது நல்லதென நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை யார் மனதிலும் தோன்றலாம். தற்கொலை செய்வதற்குகூட மனதில் தைரியம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்வதற்க்குரிய எண்ணம் மனதில் தோன்றுவதே.... மிகவும் ஆபத்தானது.

பிரச்சினைகளுக்கு தற்கொலை தான் தான்.... தீர்வு என்றால், இந்த உலகில் பாதிப்பேர் தற்கொலை செய்திருக்க வேண்டும்.

ஈழத்தில் அண்மையில் ஏற்பட்ட போர் அனர்த்தங்களில்.... நன்றாக தொழில் செய்து, காணி, பூமியுடன் வாழ்ந்த மக்கள் இன்று சொந்தங்களை இழந்து, அங்கவீனர்களாகி, அடுத்த நேரச்சாப்பாட்டிற்கு மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலையில் உள்ள மக்களை விட....

இங்கிலாந்தில் வசதியாக வாழும் ரதிக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட எந்த வித நியாயமும் இல்லை.

ஆறறிவுள்ள மனிதன் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்வு காண மாற்று வழிகள் எத்தனையோ உள்ளன.

ரதி இன்றே.... உடனடியாக தனது வைத்தியரை சந்தித்து, தனக்கு இப்படியான எண்ணம் ஏற்பட்டது என்று கூறினால்... அவர் தகுந்த வழி காட்டுவார்.

மன நோய் மருத்துவரை நாடுவதற்கு தயக்கமாகவிருந்தால். பார்வையற்றோர் அங்கவீனமற்றோர் இல்லங்களூக்கு சென்று ஒரேயொரு நாளை செலவிடுங்கள். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள். தாழ்வு மனப்பான்மை நாம் நாமாக இல்லாமல் மற்றவரோடு ஒப்பீடு செய்தல் இவை ஒருகட்டத்தில் மனவழுத்தமாகி இந்த நிலைக்கு கொண்டுவரும்.

மனதில் விரக்கி,துயரம்,தாங்க முடியாத கவலை இருந்தால் மனம் தற்கொலையை நாடும்...சில பேர் சில பேரைப் பழி வாங்கவும் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என நான் கேள்விப் பட்டு இருக்கேன்...தற்கொலை செய்யும் எண்ணம் திடிரெனத் தான் தோன்றுமாம் ஆனாலும் சில பேர் பல நாள் யோசித்து திட்டம் தீட்டி தற்கொலை செய்வார்கள்...அநேகமாக பலர் தற்கொலை செய்வதற்கு பரிட்சையில் பெயிலாகுதல்,காதல் தோல்வி,கள்ளக் காதல்,குடும்பத்தில் கணவன்,மனைவிக்கும் இடையில் தோன்றும் பிரச்சனை என்பன முக்கியமாக காணப்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட எவையுமே ஒரு உயிரை பறிப்பதற்கு போதுமான காரணமாக இல்லை. எல்லாவற்றிற்கும் மாற்றீடு இருக்கிறது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் வேண்டும். அதேவேளை நாங்கள் நினைத்த விடயம் நடக்காத பொழுது 'எல்லாம் நன்மைக்கே' என எடுத்துக்கொள்ளும் மனப்பாவம் வேண்டும். உதாரணத்திற்கு காதலித்து வெற்றிகரமாக திருமணம் செய்த எனக்கு தெரிந்த ஒரு தம்பதி. அவர்களுக்குள் ஒரே பிரச்னை, அடிதடி, இரண்டு பிள்ளைகள். நீண்டகாலத்திற்குப் பிறகு இப்பொழுது பிரிந்து விட்டார்கள். பிள்ளைகளும் தவறான பாதையில் செல்லுகிறார்கள். இதைவிட இவர்களை காதல் தோல்வியில் முடிந்திருக்கலாம்.

கூடுதல் எதிர்பார்ப்பும் எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதே மன அழுத்தத்திற்கு காரணம். மன அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் வைத்தியரை பார்ப்பது அவசியம். நான் எதிர்பார்த்தது நடக்காமல் போனதே பிற்காலத்தில் பல நன்மைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒரு விடயத்தில் தோல்வி ஏற்பட்டால் அதை நினைத்து நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கத்தேவையில்லை. விரக்தியும் மன வேதனையும் ஏற்படும் பொழுது எம்மை விடவும் கஷ்டமான நிலையில் உள்ளவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டில போராலும் இப்பொழுது வெள்ளத்தாலும் கஷ்டப்படுபவர்களை பார்த்தாலே விளங்கும் நாங்கள் எவ்வளவு நல்ல நிலையில் உள்ளோமேன்று. தற்கொலை பண்ணுவதால் மற்றவர்களை பழிவாங்கலாம் என்பது சிறுபிள்ளைத்தனமான எண்ணம். சுயலவாதிகள் மற்றவர்களின் தற்கொலையைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை. தியானம், உடற்பயிற்சி, யோகா, கடவுள் நம்பிக்கை மற்றும் இயற்கையை ரசிப்பது மனதுக்கு ஆறுதலை தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.