Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

புதன்கிழமை, 19 ஜனவரி 2011 19:09

விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

""சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... ""நான் தமிழீழக் கனவை நினை வாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளி யே வருவார்' என ரூபன் சொன்ன செய்தி யைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.

நக்கீரன்

sankamam.com

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை டைரக்ட‌ர் யார் :D

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

....

நக்கீரன்

sankamam.com

ஆரம்பிச்சிட்டாங்கள்!!!!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை டைரக்ட‌ர் யார் :D

நக்கீரன் கோபால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கீரன் கோபால்

தவறு.

சரியான விடை RAW என்பதாகும்.

கேள்விக்கு சரியான பதில் அளிக்கப்படாததால் போட்டியில் இருந்து நீக்கப்படுகின்றீர்கள். :lol:

அண்ணா நீங்கள் சினிமாத்துறைக்கு முயற்சி செய்யலாம்.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

புதன்கிழமை, 19 ஜனவரி 2011 19:09

sankamam.com

சரியான விடை எழுதினால் ரூபாய் பத்து லட்ச்சம் பரிசு. போட்டியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.ஆறுதல் பரிசும் உண்டு.9999 என்ற இலக்கத்துக்கு நீங்கள் உங்கள் மொபைல்போனூடாகவும் பதிலனுப்பலாம். போட்டியில் கலந்து பரிசுகளை அள்ளிச்செல்லுங்கள்.

இப்பிடி ஒரு விளம்பரம் கூட காலப்போக்கில இந்தியாவின் வார ஏடுகளில் வரலாம்..

ஈழத்தமிழன்ற பிரச்சனை இவனுகளுக்கு பட்டிமன்ற தலைப்பாயிடுச்சு..?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவேளை இந்திய மற்றும் பன்னாட்டு உளவு நிறுவனங்களே புனைந்து வழங்கும் தகவல்களாக இருக்கலாம். நக்கீரன் அறிந்தோ அறியாமலோ அதை பிரசுரிக்கவும் கூடும்.

தலைவர் நீடூழி வாழனும் என்பது தான் எல்லோரினதும் பெரு விருப்பும். ஆனால் அவர் உயிரோடு இருந்தாலும்.. போராட்டத்தை எனி மக்கள் தான் நடத்தனும். தலைவர் காட்டிய வழிகாட்டல் இருந்தால் போதும். தலைவரை வைத்து போராட்டத்தை அழிக்க நினைத்தவர்களை வெல்ல வேண்டும் என்றால்.. தலைவர் தலைமறைவாக வேண்டியது அவசியம் தான். நிச்சயம் மக்களுக்காக தலைவர் அதையும் செய்யத் துணிவார். தன் சாவில் தான் விடிவு கிடைக்கும் என்றால் அதையும் தலைவர் செய்யத் தயங்கமாட்டார்..! தலைவர் ஒருபோதும் எதிரிகளுக்கு விலைபோய் போராட்டத்தை காட்டி சுக வாழ்வோ அரசியலோ செய்யும் மனிதரல்ல.. என்பதை மட்டும் துணிவோடு சொல்லலாம்..!

Edited by nedukkalapoovan

தலைவர் ஒருபோதும் எதிரிகளுக்கு விலைபோய் போராட்டத்தை காட்டி சுக வாழ்வோ அரசியலோ செய்யும் மனிதரல்ல.. என்பதை மட்டும் துணிவோடு சொல்லலாம்..!

நெடுக்ஸ் பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனுக்கு கட்டி வைத்து கொடுக்க வேணும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனுக்கு கட்டி வைத்து கொடுக்க வேணும். :D

என்ன கொடுக்கனும் :D

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்...!

எவ்வளவுதான் நக்கலாக நீங்கள் பதிந்தாலும்..நக்கீரன் முதற்கொண்டு அனைத்து ஊடகங்களும் இதை வைத்துக் கல்லா கட்டினாலும்..., அவர்களை நீங்கள் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தாலும்...அடிமனதில் சிறிதாவது ஏக்கம்/தாபம் "இப்படியும் இருந்துவிடக்கூடாதா" என்று தோன்றவில்லை?

எனக்கு தோன்றியது.. இங்கிருக்கும் சக தமிழருக்கும் தோன்றியது... :)

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

ரூபன் கொழும்பில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் விமான ஓட்டியாக இருந்தவர். அந்த விமானம் விழுந்த பொழுது அவரும் இறந்து விட்டார்.

நல்ல புலனாய்வு.

என்ன கொடுக்கனும் :D

பச்சை மட்டை அடி

Edited by thappili

அனைவரும் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்...!

எவ்வளவுதான் நக்கலாக நீங்கள் பதிந்தாலும்..நக்கீரன் முதற்கொண்டு அனைத்து ஊடகங்களும் இதை வைத்துக் கல்லா கட்டினாலும்..., அவர்களை நீங்கள் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தாலும்...அடிமனதில் சிறிதாவது ஏக்கம்/தாபம் "இப்படியும் இருந்துவிடக்கூடாதா" என்று தோன்றவில்லை?

எனக்கு தோன்றியது.. இங்கிருக்கும் சக தமிழருக்கும் தோன்றியது... :)

உண்மைதான் ராஜவன்னியன், எனது மனநிலையும் இதுவாகவே இருந்தது இதை வாசிக்கும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள்.

ஐயோ.... பாவம், மிகவும் லேட்டாக கண்டுபிடித்தாலும்...... மாட்டை, கோட்டை விட்டு விட்டார்கள். cow.gifcow1.gif

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறார்

என்னுள்

என் வீட்டில்

என் பிள்ளைக்குள்

அடுத்து

என்பேரப்பிள்ளைக்குள்....

நக்கீரன் மட்டுமா கதை அளக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் மட்டுமா கதை அளக்கின்றார்?

இவரும் இத்தனை வருடமாக இங்கு எத்தனை கதைகள் விடுகிறார்.

எவரும் நம்புவதில்லை

இவருக்கு கோபம் வருவது நியாயம்தானே :(

உறவுகளே!

இது நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் புலம் பெயர் செயற்பாடுகழுக்கும் வைக்கும் ஆப்புதான்.தலைவர் இன்னும் மடியவில்லை தேசியத்தை விரும்பும் ஒவ்வொரு தமிழனுடனும் வாழ்ந்து வழிகாட்டியாகவே உள்ளார்.இது ஒரு தேவையில்லாத விவாதம்

ஐயோ.... பாவம், மிகவும் லேட்டாக கண்டுபிடித்தாலும்...... மாட்டை, கோட்டை விட்டு விட்டார்கள். cow.gifcow1.gif

இவனுக பண்ணிய புடிச்சுவந்து கட்டி வச்சிட்டு மாடெண்னுபீலாவுடுற ஆளுக......

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயம் இந்திய புலனாய்வுத்துறையின் வேலை என்பதில் சந்தேகமில்லை.அவர்கள் வேறு காரணத்திற்காக(போர்க்குற்ற விசாரணைகளைக் குழப்புவதற்கும் சிறிலங்காவைத் தன் கைக்குள்ளே அடக்கி வைத்திருப்பதற்குமான ஒரே கல்லில் 2 மாங்காய் விழுத்துவது போல) இப்படிச் செய்திகளைக் கசிய விட்டாலும் தலைவர் இருக்கின்றார் என்ற செய்திகள் அடிபடுவது சோர்வடைந்துள்ள தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கு உளவியல் ரீதியாக புதிய உற்சாகத்தையும் வேகத்தையும் அளிக்கிறது.ஆனால் தலைவர் இருக்கின்றார் என்று விட்டு எல்லோரும் சும்மாயிருந்தால் ஒன்றும் தேறாது.தலைவர் போராடியது போதும் அவர் மறைந்திருந்து எமக்கு உளவியல் பலம் அளிக்கட்டும்.இனி மக்களே போராடவேண்டும்.மக்கள் பங்களிக்காத எந்தப் போராட்டமும் வென்றதாகச் சரித்திரம் இல்லை.சிறிலங்கா அரசைப் போர்க்குற்றவிசாரணையில் முறையாகச் சிக்க வைக்க வேண்டும்.அத்துடன் தமிழர்தேசம் தனியாகச் சுதந்திரதேசமாகப் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு உலகநாடுகளை வலியுறுத்த வேண்டும்.நாடு கடந்த அரசாங்கமானது தங்கள் வெளியுறவுத்துறை மூலமாக உலக நாடுகளின் தலைவர்களோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு உலகநாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.இந்தியா நிச்சயம் இதற்கு இடையூறுகள் கொடுக்கும்.அதன் வெளிப்பாடுகளே மேற்படி செய்திகள்.ஏனெனில் இந்தியாவே மறைமுகமான பிரதான போர்க்குற்றவாளியாகும்.நம்பியாரை வழிநடத்தியது இந்திய வெளியுறவுத்துறையே.மக்களே பிரிந்து கிடக்காமல் நமக்குக் கிடைக்கும் அரிதான சந்தர்ப்பததை சரியாகப் பயன்படுத்த ஒன்று சேருங்கள்.

0

Edited by புலவர்

இந்தியப் புலனாய்வுத் துறையினர் இதற்காக இவ்வளவு கஷ்ரப்படத் தேவையில்லை. கொழும்பில் குண்டுகளை வெடிக்கச் செய்து புலிக்காய்ச்சலை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை இதுதான்.

.மக்கள் பங்களிக்காத எந்தப் போராட்டமும் வென்றதாகச் சரித்திரம் இல்லை.

0

பிற(வெளிநாடு)சக்திகளுடன் கூட்டுச்சேரா எந்த போராட்டமும் வென்றதாக சரித்திரம் இல்லை.....கூட்டுச்சேர்ந்து வென்ற பின்பு அதற்கு பெயர்

மக்கள் போராட்டம்

இந்தியப் புலனாய்வுத் துறையினர் இதற்காக இவ்வளவு கஷ்ரப்படத் தேவையில்லை. கொழும்பில் குண்டுகளை வெடிக்கச் செய்து புலிக்காய்ச்சலை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை இதுதான்.

அப்படி செய்ய முடியாதே அவர்கள் தான் சொல்லி போட்டினமே "தல"போயிற்றார் என்று.....ஆனால் சிங்கள புத்தி ஜீவிகள் உசாரத்தான் இருக்கிறான்....ஏன் என்றால் அவங்கள் சொல்லுறாங்கள் தல போகவில்லையாம் வால் மட்டும் போனதாம் "தல" " கால் "எல்லாம் புலத்தில இருக்காம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.