Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்வியால் புகழ் பெறும் தமிழர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் 25 பிரதமர்களையும் பல உலகத்தலைவர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் ஒக்ஸ்பேட்.

அங்கு அனுமதி பெற்று படிப்பது என்பது பலரின் ஆசையாக இருந்தாலும் பலருக்கு தகுதி இருந்தாலும் சரியான வாய்ப்பு அமைவது ஒரு சிலருக்கே.

ஆண்டு தோறும் இளநிலை பட்டப்படிப்புக்கு 17000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெறும் பல்கலைக்கழகத்தில் வெறும் 3200 இடங்கள் தான் நிரப்பப்பட முடியும்.

எதிர்காலத்தில் ஒக்ஸ்பேட்டுக்கு நுழைய விரும்புபவர்களுக்கு இப்பதிவின் மூலம் 5 வழிகளைக் காட்டுகிறது பிபிசி.

_51031510_rag_304.jpg

ராகுலன் என்ற இந்த 17 வயதான தமிழ் இளைஞன் 2011 கல்வியாண்டில் ஒக்ஸ்பேட்டில் படிக்க தெரிவாகி இருக்கிறான்.

அவன் தனது இந்தத் தெரிவிற்கு பெற்றோரின் ஊக்குவிப்பமே முதன்மை என்று சொல்கிறான்.

Families also play a big part in providing the right encouragement and work ethic at home.

Ragulan Vigneswaran, 17, says his Sri Lankan parents have been a big factor in his success in getting to Balliol College.

"From a young age, my parents really tried to instil into me that education is pretty much the most important thing.

"My mother I remember was teaching me maths from a really young age because she wanted me to become really adept at it and become passionate in the subject in the way she was.

"They have been supporting me continuously and encouraging me to study more - encouraging out of school study - to make myself more knowledgeable and prepared for the future."

ஆதாரம்

http://www.bbc.co.uk/news/magazine-12308121

Edited by nedukkalapoovan

பெற்றோருக்கும் இராகுலனுக்கும் வாழ்த்துக்கள். தகவலுக்கும் நன்றி.

கணிதமும் விஞ்ஞானமும் முக்கிய பாடங்களாக அமைகின்றன இப்படியான பல்கலைக்கழகங்கள் செல்ல.

வட அமெரிக்காவில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் கூட இது போன்றது:

http://en.wikipedia.org/wiki/List_of_Harvard_University_people

இந்த தளம் மாணவர்களுக்கு உதவியானது:

http://www.khanacademy.org/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இராகுலனுக்கும் அவரை ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கும்! :D

நன்றி நெடுக்கு! :D

இராகுலனுக்கும் அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்....!

வாழ்த்துக்கள் ராகுலன் ,இதில் ஆண்டுதோறும் 10தமிழ் பிள்ளைகளுக்காவது அனுமதி கிடைக்கவேண்டுமென்பது எனது அவா.

பொறுப்பாக படிக்கும் ரகுலனுக்கும் அவரின் பக்க பலமாக இருந்து ஊக்குவிக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

ராகுலனுக்கும் அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் :)

வாழ்த்துக்கள் இராகுலனின் பெற்றோர்களுக்கு!!

... என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் .. ஒரு கூட்டத்தில் சில பிள்ளைகள் இருப்பார்களாயின், அவர்களுக்கு பக்கத்தில் சில வாழைப்பழங்களை வைத்தால் ..

.... சிலர் தாமே எடுத்து உரித்து சாப்பிடுவார்கள்,

.... இன்னும் சிலருக்கோ, நாம் வாழைப்பழத்தை எடுத்து உரித்துக் கொடுத்தால், பின் சாப்பிடுவார்கள்,

.... இன்னும் மீதி சிலர், நாமே பழத்தை உரித்து, அவர்களின் வாயில் திணித்தாலே, மட்டும் சாப்பிடுவார்கள்.

.... இவ்வாறு தான் சிறு வயதில் படிப்பும்!! அவர்கள் படிப்பார்கள், அவர்களே படிக்க வேண்டும் என்றிருந்தால் ... சிலவேளை கோட்டை விட்டு விடுவோம்! அதுவும் புலத்தில் வருங்கால சந்ததியினர் பல தடைகளை தாண்ட வேண்டி இருக்கும், ஒரு நல்ல வேலை எடுப்பதற்கு/முன்னணிக்கு வருவதற்கு!!! ... இங்கெல்லாம் இப்பொழுது கிழக்கு ஐரோப்பியர்கள், இந்தியர்கள் படையெடுக்கின்றனர். அவர்களில் கிழக்கு ஐரோப்பியர்களின் அடுத்த சந்ததி பெயர்கள் வேறுபடினும், வெள்ளையர்கள் ஆகி விடுவார்கள், முன்பு யூதர்கள் இங்கு கலந்தது போல்! அவர்களை நிறம் ஒன்றும் பாதிக்க மாட்டாது! ஆனால் நாமோ, என்னதான் செய்தாலும் எம் நிறத்தை மாற்ற முடியாது! ஆகாவே அவர்கள் ஓரடி பாய்வார்களாயின், எம் பிள்ளைகள் இரண்டடி பாய வேண்டும்! ... அதற்கு எம் பிள்ளைகளின் படிப்பில் மட்டுமல்லாது எம் உந்துதல்கள்/முயற்சிகள்/உதவிகள் எம் பிள்ளைகளை மென்மேலும் மேல் கொண்டு செல்லும்!

அண்மையில் இங்குள்ள பிரபலமான/முன்னணியில் நிற்கும் ஓர் பாடசாலை..... நாம் முன்பு ஐந்தாம் வகுப்பு முடிய புலமைபரீட்சைகள்/பாடசாலை பரீட்சைகள் எடுத்து நல்ல பாடசாலைகளுக்கு ஆறாம் தரத்துக்கு போகின்றது போல் ... ஏறக்குறைய ஐந்தாயிரம் மாணவர்கள் முதல் அமர்வு பரீட்சையில் தோற்றினார்கள். அதில் வடித்து ஐநூறு பேரை இரண்டாம் அமர்வுக்கு எடுத்திருக்கிறார்கள், அந்த ஐநூறில் நூற்றியெண்பது பேரே இறுதியாக தெரிவு செய்யப்பட்டுவார்கள். இந்த ஐநூறில் முன்னூற்றி ஐப்பது பேரளவில் எம் குழந்தைகள். மிகவும் பெருமைப் பட வேண்டிய விடயம்!

எமக்கு அங்கு என்னத்தை சிங்களம் தர மறுத்ததோ, அவைகள் இங்கு நாம் அடையக்கூடியதாக இருக்கிறது, பெற்றோர்களின் முயற்சியினால்!!!... ஆனால் ...

.... இங்கு பல சிகரங்களை இராகுலன் போன்றவர்கள் தமது பெற்றோரின் துணையுடன் தொட முற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நடு ரோட்டிலும் சேறையும், சகதிகளையும் கிளறியபடி இன்னோர் சந்ததி அலைவதையும் காணக்கூடியதாக இருப்பது வேதனையே!!!

Edited by Nellaiyan

இணைப்பிற்கு நன்றி நெடுக்கர். :)

வாழ்த்துக்கள் ராகுலன்.. முக்கியமாக ராகுலனின் பெற்றோர்களுக்கு.

அனுபவத்தில் உணர்ந்த ஆக்கபூர்வமான கருத்துக்கள் நெல்லையன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலனுக்கு வாழ்த்துக்கள். பெற்றோருக்குபாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராகுலன்.. முக்கியமாக ராகுலனின் பெற்றோர்களுக்கு.

நெல்லையனின் கருத்துத்தான் எனதும்.

வெளிநாடுகளில் கொடுக்கப்படும் அல்லது கிடைக்கும்இதுபோன்ற சந்தர்ப்பங்களை எமது மக்கள் அதி உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும்.

ராகுலனுக்கு வாழ்த்துக்கள். பெற்றோருக்குபாராட்டுக்கள்.அத்துடன் அந்த "யாழ்மண்வாசனைக்கும்" படியடா .படிஅப்பு,படிதம்பி,படிமகனே...........

  • கருத்துக்கள உறவுகள்

இராகுலனுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!கூடவே அவரது பெற்றோர்களுக்கும்.

சிங்களம் எமது உயர் கல்வியைப் பறித்தது.எவ்வளவு முயற்சி செய்தாலும் தரப்படுத்தல் மத்தியில் ஒரு வருடத்தில் சிறிலங்காவில் பல்கலைக் கழகம் புகும் மாணவர்கள் தொகையிலும் பல மடங்கு தொகையில் உலக நாடுகளின் பல்கலைக் கழகங்கங்களில் நமது பிள்ளைகள் அனுமதியைப் பெறுகிறார்கள். அதுவும் உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில்.அதே போல் பொருளாதாரத்திலும் முன்னை விடச் சிறந்து இருக்கிறார்கள். சிங்களம் எதைத் தடுத்ததோ அதை நாம் எண்ணிக்கை அளவில் பெற்றிருக்கிறோம். ஆனால் எமது உயிரின் மேலான நிலத்தை இழந்திருக்கிறோம்.இந்தக் கல்வியறிவையும் பொருளாதார வளர்ச்சியையும் பயன் படுத்தி எமது நிலத்தை நாம் மீpட்டெடுப்போம்.

நெல்லையன் சொன்ன நெருடலான விடயம்.எமது இளைஞர்களில் சிறு பகுதியினர் வன் முறைக்கும் போதைக்கும் அடிமையாகி விடாமல் தடுப்பது பெற்றோர்களுக்கும் இங்குள்ள தமிழ் அமைப்புக்களுக்கும் முன்னுள்ள முக்கியமான விடயமாகும்.ஒரு பிள்ளையும் வீணாகப் போகக் கூடாது என்ற சிந்தனையுடன் எல்லோரும் செயற்பட வேண்டும்.

வாழ்த்துக்கள் ராகுலன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_51031510_rag_304.jpg

ராகுலனுக்கும் அவர் தாய்தந்தையருக்கும் வாழ்த்துக்கள்.

இருப்பினும்...

தமிழையும் தமிழர்களையும் மறந்துவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலனுக்கு நல்வாழ்த்துக்கள்.

அவரின் படிப்பிற்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.