Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசைக் கைவிட்டு இலங்கை அரசுடன் கைகோர்க்கவும் ருத்திரகுமாருக்கு கருணா பகிரங்க அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசைக் கைவிட்டு இலங்கை அரசுடன் கைகோர்க்கவும் ருத்திரகுமாருக்கு கருணா பகிரங்க அழைப்பு

[Monday, 2011-02-14 11:19:22]

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராகச் செயற்படும் விசுவநாதன் ருத்திரகுமாரன் தனது அனைத்துச் செயற்பாடுகளையும் உடனடியாகக் கைவிட்டு விட்டு இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவர் இலங்கை அரசியலில் ஈடுபட வேண்டுமானால் அவருக்கு ஒரு முக்கிய இடத்தினை எமது கட்சியில் பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளேன்; என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

கே.பி. எனப்படும் பத்மநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் வெளியான செய்திகள் குறித்துப் பிரதியமைச்சரிடம் கேட்ட போதே அவர் இதனையும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கே. பி இணைந்து செயற்படுவதில் எந்தத் தடையும் இல்லை. கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவன் என்ற வகையில் நான் இதனை வரவேற்கிறேன்.

கே.பி மட்டுமல்ல.. உருத்திரகுமார் கூட எமது கட்சியில் இணைந்து வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்கு உதவ முன்வர வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் எம்முடன் இணைந்து செயற்படுமாறு நான் அவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்று சொல்லிக் கொண்டு இன்று அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களே பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதுடன் ஏனைய சமூகத்தின் முன் சந்தேகத்துடனும் நோக்கப்படுகின்றனர்.

யுத்தம் முடிந்து சமாதானம் நிலவும் இன்றைய நிலையில், இவ்வாறான நாடு கடந்த செயற்பாடுகள் தமிழ் மக்களை மீண்டும் சாபத்துக்குள்ளாக்கி விடும்.

தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயற்படும் ஒருவராக உருத்திரகுமார் இருப்பாரானால் தற்போதைய அவரது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

seithy.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை எவர் சொல்ல வேண்டும் என்ற அருகதை கூட அறியாத பதர்!

அடிமை விசுவாசம் சோத்துப் பயம் என்ற பதார்த்த்தால் ஆனது, நாட்டு விடிவு என்ன அதன் கோட்டிங்கா?

நாடு கடந்த அரசு சரியான பாதையிலா செல்கின்றது? என்ன செய்கின்றது?

என்ற கேள்விகளுக்கு இந்த பகிரங்க அழைப்பில் பதில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு திட்டாதீங்கோ கருணாவின் அழைப்பை உருத்திரகுமார் ஏற்றார் என்டால் அதன் பின் என்ன சொல்வீர்கள்?

அவசரப்பட்டு திட்டாதீங்கோ கருணாவின் அழைப்பை உருத்திரகுமார் ஏற்றார் என்டால் அதன் பின் என்ன சொல்வீர்கள்?

நாடு கடந்த அரசின் பிரதமராக அவர் மட்டும் நினைத்தால் இணையமுடியாது. இப்படியான விடயங்கள் முன்வைக்கப்பட்டு

விவாதிக்கபாடல் வேண்டும்.

தனி நபராக அவர் முடிவெடுக்கலாம். அது அவர் உரிமை. ஆனால், அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் ஒரு உறுப்பினராக, ஒரு பிரதமராக.

Edited by akootha

நாடுகடந்த அரசா?

அப்டீன என்னா சார்?

:lol:

நாடுகடந்த அரசா?

அப்டீன என்னா சார்?

:lol:

அப்படின்னா உங்க ஆயா சார் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த அரசா?

அப்டீன என்னா சார்?

:lol:

பனங்காய், இப்படி விளங்காயாய் இருக்கலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு திட்டாதீங்கோ கருணாவின் அழைப்பை உருத்திரகுமார் ஏற்றார் என்டால் அதன் பின் என்ன சொல்வீர்கள்?

மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதை மோட்டுத்தனம் என்று சொல்லுவோம்!

இன்னமும் ஒரு 5 வருடங்களுக்குள் இவர்கள் எல்லோருமே இணக்க அரசியலுக்கு போய்விடுவார்கள்.அதுதான் யதார்த்தம்.

புலம்பெயர்ந்த அரசியல் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

இன்னமும் ஒரு 5 வருடங்களுக்குள் இவர்கள் எல்லோருமே இணக்க அரசியலுக்கு போய்விடுவார்கள்.அதுதான் யதார்த்தம்.

புலம்பெயர்ந்த அரசியல் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

ஆஆஆ... கழக கண்மணி சொல்கிறார் எல்லோரும் கேளுங்கோ!!!!!! .... அந்த மாதிரி போராட்டத்தை தொடங்கி, அந்த மாதிரி முடித்த கூட்டமல்லவா .... என்ன மக்கள் போராட்டமோ??????!!!!!! ..... நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் அர்ஜுன், கனக்க சாதித்த கழக கண்மணிகளில் ஒருவரல்லாவா தாங்கள்!!!!!!!! தொடர்ந்து சொல்லுங்கோ!!! ... ஆனால் நாம் திரும்ப கேட்டால் மட்டும், சில நாட்களுக்கு எஸ்கேப் ஆகி விடுகிறீர்கள்!!!... ஆனால் நீங்கள் சொல்லுங்கோ .... இங்கே நாங்கள் கேட்பம் ... நீங்கள் என்னவெல்லாம் சொல்ல/எழுத இங்கே இடமிருக்கு ... ஏதாவது ஒரு தாங்கள் சார்ந்த மாமா(மா.க.மா)க்களின் இணையத்தளம் ஆவது சொல்லுங்கோ, நாங்கள் எங்கள் கருத்தை சுதந்திரமாக கூற/எழுத????? .... நீங்கள் எழுதுங்கோ ......

இன்னமும் ஒரு 5 வருடங்களுக்குள் இவர்கள் எல்லோருமே இணக்க அரசியலுக்கு போய்விடுவார்கள்.அதுதான் யதார்த்தம்.

புலம்பெயர்ந்த அரசியல் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

எப்படி புளொட் என்ற ஒரு அமைப்பு சோத்துப் பாசலுக்கு ஓடுப்பட்டுத் திரிஞ்சு கடைசியில் ஒரு சத்தத்திற்கும் மக்களுக்குப் பிரயோசனம் இல்லாமல் போனது மாதிரியா?

ரொம்பத்தான் ஆர்வமா இருகிறீங்கள் போல தெரியுது... :rolleyes:

எல்லாருக்கும் ஒரே மாதிரியா மூளை வேலை செய்யும்? இருந்து பார்க்கத்தானே போகிறார்கள் மக்கள்.

நாடு கடந்த அரசு சரியான பாதையிலா செல்கின்றது? என்ன செய்கின்றது?

என்ற கேள்விகளுக்கு இந்த பகிரங்க அழைப்பில் பதில் உள்ளது.

ஒரு பச்சை போட்டுள்ளேன்.

இன்னமும் ஒரு 5 வருடங்களுக்குள் இவர்கள் எல்லோருமே இணக்க அரசியலுக்கு போய்விடுவார்கள்.அதுதான் யதார்த்தம்.

புலம்பெயர்ந்த அரசியல் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

இப்படி தான் இழவு காத்த கிளியும். :D

நெல்லையன்.

நான் ஒரு நாளும் யாழை விட்டு ஒடிப்போய்வரவில்லை.தேவையில்லாத கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புவதில்லை.நான் எழுதுவதை விளங்காமலே பலர் அதில் கேள்விகேட்கின்றார்கள்.

எனது கருத்தை நான் எழுதினேன் அது சரியென்பதா தவறென்பதா என காலம் தான் தீர்மானிக்கவேணுமே ஒழிய நீங்களில்லை.

முன்னர் என்போல் எழுதியவர்களின் கருத்துக்கள் தான் சரியாகவந்தது அதே நம்பிக்கை தான் இப்போதும்.

அதைவிட நாங்கள் என்ன செய்தோம் என்பதை என்றோ ஒரு நாள் எழுதுவேன் உண்மையாகவும் நேர்மையாகவும் யாருக்கும் பொய் சொல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.

இன்னமும் ஒரு 5 வருடங்களுக்குள் இவர்கள் எல்லோருமே இணக்க அரசியலுக்கு போய்விடுவார்கள்.அதுதான் யதார்த்தம்.

புலம்பெயர்ந்த அரசியல் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

சில பதிவுகளுக்கு முன்னர் தாங்கள் நாடு கடந்த அரசின் "ஒரு இரசிகனாக" மாறப்போவது போன்று பதிந்திருந்தீர்கள். அதையும், மேலே உள்ள கருத்தையும், நாட்டு நடப்பையும் பார்த்தால்:

--இன்னும் ஐந்து வருடங்களுக்கு குறைவான காலத்துக்கு உள்ளாக சிங்களம் ஒரு இணக்க அரசியலுக்கு வந்து விடும்

-- தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு கிட்டிவிடும்

-- புலம்பெயர்ந்த அரசியல் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்

ஒரு பச்சை போட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி புளொட் என்ற ஒரு அமைப்பு சோத்துப் பாசலுக்கு ஓடுப்பட்டுத் திரிஞ்சு கடைசியில் ஒரு சத்தத்திற்கும் மக்களுக்குப் பிரயோசனம் இல்லாமல் போனது மாதிரியா?

ரொம்பத்தான் ஆர்வமா இருகிறீங்கள் போல தெரியுது... :rolleyes:

எல்லாருக்கும் ஒரே மாதிரியா மூளை வேலை செய்யும்? இருந்து பார்க்கத்தானே போகிறார்கள் மக்கள்.

ஒரு பச்சை போட்டுள்ளேன்.

உண்மைதான் குட்டி

15 லட்சத்துக்கு மேற்பட்ட புலம் பெயர் மக்களின் உணர்வுகள், ஆசைகள், தேசத்தின்மீதான பற்றுதல், எமக்காக உயிர் கொடுத்த அந்த மக்கள் மற்றும் மாவீரர்களின் மீதான எமது கடைப்பாடு.................

இவை அணைந்துபோகும் என்று சொல்ல ஒருவருக்கு வருகிறது என்றால்........

அவரைப்புரிந்து கொண்டு என்னத்தை சாதிக்கப்போகின்றோம். இவர் சுயசரிதை எழுதி எதை இரைமீட்கப்போகின்றார்......???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன்.

நான் ஒரு நாளும் யாழை விட்டு ஒடிப்போய்வரவில்லை.தேவையில்லாத கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புவதில்லை.நான் எழுதுவதை விளங்காமலே பலர் அதில் கேள்விகேட்கின்றார்கள்.

எனது கருத்தை நான் எழுதினேன் அது சரியென்பதா தவறென்பதா என காலம் தான் தீர்மானிக்கவேணுமே ஒழிய நீங்களில்லை.

முன்னர் என்போல் எழுதியவர்களின் கருத்துக்கள் தான் சரியாகவந்தது அதே நம்பிக்கை தான் இப்போதும்.

அதைவிட நாங்கள் என்ன செய்தோம் என்பதை என்றோ ஒரு நாள் எழுதுவேன் உண்மையாகவும் நேர்மையாகவும் யாருக்கும் பொய் சொல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.

யாழில் புலிஆதரவு பதிவர்கள் எவரும் புது அவதாரம் எடுத்ததே இல்லை. அப்படியே புலித்துவேசிகள் எவரும் தொடர்ந்து ஒரே பேரில் பதிவராய் இருந்ததே இல்லை. ஏன் என்றால் பொத்திப், பொத்தி தமது சொந்த உள்நோக்கம் வெளித்தெரியாமல் பதிவுகளை எழுதுவார்கள், ஆனாலும் அப்படி அந்த இரகசியம் தொடர்ந்து போண முடியாமல் எப்படியோ தம் வாயாலேயே வாந்தி எடுத்து விடுவார்கள். அதன் பின்னால் என்ன வேறு பேர்ருக்கு தமது முகவரியை மாற்றத்தானே வேண்டும்!

மேலும் அர்யுன்; கிளியோசியம், குருவியோசியம் போல் கதைகளை எடுத்துவிடும் தங்கள் பாணியை யாழ்களத்தில் உபயோகிக்காதீர்கள். அது தேசம் நெற்றுக்கான பாரம்பரியம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியில் உள்ள பதில்களை படித்தால் நாம் எதற்காக இன்னும் இந்த நிலையில் நிற்கிறோம் என்பது புரிகிறது! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ! அருவரியில் படித்த ஞாபகம்.

துரோகிகளை பற்றி கதைத்து காலம் கடத்துவதை விட, ஒருவரை ஒருவர் தாக்குவதை விட்டு விட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் புலத்தில் ஒன்று பட்டு ஈடுபடல், நிச்சயம் வெற்றி நமதே!

Edited by Queen

கிழக்கின் சொறிநாய்களின் குரைப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியில் உள்ள பதில்களை படித்தால் நாம் எதற்காக இன்னும் இந்த நிலையில் நிற்கிறோம் என்பது புரிகிறது! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ! அருவரியில் படித்த ஞாபகம்.

துரோகிகளை பற்றி கதைத்து காலம் கடத்துவதை விட, ஒருவரை ஒருவர் தாக்குவதை விட்டு விட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் புலத்தில் ஒன்று பட்டு ஈடுபடல், நிச்சயம் வெற்றி நமதே!

எதாவது ஒரு சரியான வழிமுறை இருந்தால் சொல்லுங்கள்?

மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதை மோட்டுத்தனம் என்று சொல்லுவோம்!

விரும்புகிறீங்களோ இல்லையோ நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர வேணும் எண்டால் நாடுகடந்த அரசோ இல்லை அதன் உப அமைப்போ இலங்கையில் அதாவது ஈழத்தில் செயற்பட வேண்டும்... ! (இண்டைக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்ட வளியும் அப்பதான் கிட்டும்...! ) அப்படி செயற்படும் நாளில் தான் நாங்கள் எங்களின் வெற்றியின் படியில் முதலாவது அடியை வைத்து இருப்போம்...

சுருக்கமாக சொல்வது கொஞ்சம் கஸ்ரமான விசயம் எண்டாலும் முடிஞ்சளவு சொல்ல முயற்சி செய்கிறன்.. !

இண்டைக்கு நாடுகடந்த அரசோ இல்லை உலக தமிழர் பேரவையோ செய்வது இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் ஒண்டை கொடுப்பது மட்டுமாக தான் நகர்கின்றது... இதன் விளைவு தான் இலங்கையில் ஏற்ப்பட வெள்ளப்பெருக்கை கூட கண்டு கொள்ளாது உலகம் சிங்கள அரசை தவிக்க விட்டு இருக்கிறது... ( ஆனால் எங்கட மக்களை நாங்கள் கண்டு கொள்ளாது இருக்க முடியாது அல்லவா..?? )

இது போதுமானது இல்லை எண்டாலும் இந்த அழுத்தங்களில் இருந்து தப்ப தமிழர் தரப்போடை சமரசத்துக்கு வருவதுக்கான அடித்தளம் தான் இந்த கோரிக்கைகள்... ! அண்மையில் இலங்கை பிரதமர் "எரிக்சொல்கைமை" நடுநிலைக்கு ஏற்க்க முடியாது எண்டு வேறை கருத்து சொன்னவர்... அப்ப யாருடன் சமரசம் எண்டு கேள்வி வருவது தவிர்க்க முடியாது அல்லவா...??

நாங்கள் இன்னும் ஒரு தென்சூடானக வேண்டும் எண்றால் நாங்கள் இலங்கையில் இருந்து எங்களுக்கான அரசியலை செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்... அங்கு நடுநிலையாக ஐநா வரவேண்டும் எண்றாலும் அங்கு நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளின் பிரசன்னம் அவசியமாகின்றது, அவர்களின் அரசியல் நடவடிக்கைகளும் அவசியமாகிறது ... அதுவும் பலமான நிலையில் பேரம் பேசும் நிலையில் இருந்து... ! இதுக்கும் மேலை என்ன செய்ய வேண்டும் எண்று தலைமையில் இருப்பவர்கள் தான் முடிவெடுத்து செயற்பட வேண்டும்... !

இங்கு கருணா மூலம் இலங்கை அரசு செய்வது ஒரு உளவியல் நடவடிக்கை... ! இதையே வேறை விதமாக சொன்னால் நாடுகடந்த அரசின் மீது புலம்பெயந்த தமிழர்கள் நன்மதிப்பை வைக்காமல் செய்ய இலங்கை அரசால் எடுக்கப்படும் உளவியல் நடவடிக்கை இது... அதாவது நாடுகடந்த அரசின் கொள்கையாக இல்லாமல்( இலங்கையில் செய்ற்படும் முடிவு எடுக்கப்படும் தருணங்களில்) தங்களின் கோரிக்கையை ஏற்று தங்களோடு சேர்ந்து வேலை செய்ய நாடுகடந்த அரசு ஆர்வமாக உள்ளது எனும் தொனிப்ப இங்கு உரைக்கப்பட்டு இருக்கின்றது...

இங்கை இன்னும் ஒரு தலைப்பிலை KP எண்டவர் விட்ட அறிக்கை கூட இந்த உளவியல் நடவடிக்கையின் ஒரு அங்கம் தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தனது அனுபவத்தை சொல்கிறார். தான் எப்படி விலை பேசப்பட்டு.. எப்படி சுதந்திரக் கட்சிக்குள் பிரதித் தலைவரானது என்பது பற்றிச் சொல்லுறார்.

இப்படி ஓடிப் போய்.. பெரும்பான்மையினக் கட்சிகளோடு ஒட்டி.. அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை தான் அப்பு.... தேர்தலில நிக்காம.. பார்லிமெண்டுக்கும் போகாமல்.. அமைச்சராகலாம்.

உப்படி தேர்தலில நிற்காமல் அல்லது மக்களை ஏமாற்றும் வகையில் சும்மா தேர்தலை நடத்தி.. பின் கதவால பதவிக்கு வாறவைக்கு எகிப்தில நடந்தது தெரிஞ்சா சரி.

தமிழ் மக்களின் சாபம்.. விடுதலைக்கான பிரஜாசையல்ல. உங்களைப் போன்ற துரோகிகள் தான். எமது விடுதலை அடையப்பட முடியாமல் போனதற்கும் மக்கள் இவ்வளவு துன்பங்களை சந்தித்தற்கும்.. துரோகங்களே காரணம்..! அதையும் கருணா.. ஒரு தடவை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவர் தான் கலியாணம் கட்டி பிள்ளைப் பெறும் வரைக்கும் பலியிட்ட போராளிகளின் உயிரின் அருமை தெரியல்ல.. தனக்கு பிள்ளை குட்டி பொண்டாட்டி என்று வந்த உடனதான்.. அவருக்கு அதுகளின்ர அருமை தெரிஞ்சு.. இப்ப சுதந்திரக் கட்சிக்காக தமிழ் மக்களை கொலை செய்யுறதை தொழிலா செய்து கொண்டு.. சாபமாம்.. சாபம் சொல்கிறார்.

இவனை எல்லாம் தலைவர் தூக்கி பக்கத்தில வைச்சிருந்ததுதான் பிழை. அப்பப்ப சண்டைக்கு அனுப்பி போட வேண்டிய நேரத்தில உதுகளை போட்டிருந்தா ஏன் இந்த நிலை.. இவ்வளவு துயரம்..! இவன் ஒருத்தனால எத்தனை உயிர்கள் பலி...! ஒரு இனமே அழிஞ்சு போச்சுது. :rolleyes::o:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரும்புகிறீங்களோ இல்லையோ நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர வேணும் எண்டால் நாடுகடந்த அரசோ இல்லை அதன் உப அமைப்போ இலங்கையில் அதாவது ஈழத்தில் செயற்பட வேண்டும்... ! (இண்டைக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்ட வளியும் அப்பதான் கிட்டும்...! ) அப்படி செயற்படும் நாளில் தான் நாங்கள் எங்களின் வெற்றியின் படியில் முதலாவது அடியை வைத்து இருப்போம்...

சுருக்கமாக சொல்வது கொஞ்சம் கஸ்ரமான விசயம் எண்டாலும் முடிஞ்சளவு சொல்ல முயற்சி செய்கிறன்.. !

இண்டைக்கு நாடுகடந்த அரசோ இல்லை உலக தமிழர் பேரவையோ செய்வது இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் ஒண்டை கொடுப்பது மட்டுமாக தான் நகர்கின்றது... இதன் விளைவு தான் இலங்கையில் ஏற்ப்பட வெள்ளப்பெருக்கை கூட கண்டு கொள்ளாது உலகம் சிங்கள அரசை தவிக்க விட்டு இருக்கிறது... ( ஆனால் எங்கட மக்களை நாங்கள் கண்டு கொள்ளாது இருக்க முடியாது அல்லவா..?? )

இது போதுமானது இல்லை எண்டாலும் இந்த அழுத்தங்களில் இருந்து தப்ப தமிழர் தரப்போடை சமரசத்துக்கு வருவதுக்கான அடித்தளம் தான் இந்த கோரிக்கைகள்... ! அண்மையில் இலங்கை பிரதமர் "எரிக்சொல்கைமை" நடுநிலைக்கு ஏற்க்க முடியாது எண்டு வேறை கருத்து சொன்னவர்... அப்ப யாருடன் சமரசம் எண்டு கேள்வி வருவது தவிர்க்க முடியாது அல்லவா...??

நாங்கள் இன்னும் ஒரு தென்சூடானக வேண்டும் எண்றால் நாங்கள் இலங்கையில் இருந்து எங்களுக்கான அரசியலை செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்... அங்கு நடுநிலையாக ஐநா வரவேண்டும் எண்றாலும் அங்கு நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளின் பிரசன்னம் அவசியமாகின்றது, அவர்களின் அரசியல் நடவடிக்கைகளும் அவசியமாகிறது ... அதுவும் பலமான நிலையில் பேரம் பேசும் நிலையில் இருந்து... ! இதுக்கும் மேலை என்ன செய்ய வேண்டும் எண்று தலைமையில் இருப்பவர்கள் தான் முடிவெடுத்து செயற்பட வேண்டும்... !

இங்கு கருணா மூலம் இலங்கை அரசு செய்வது ஒரு உளவியல் நடவடிக்கை... ! இதையே வேறை விதமாக சொன்னால் நாடுகடந்த அரசின் மீது புலம்பெயந்த தமிழர்கள் நன்மதிப்பை வைக்காமல் செய்ய இலங்கை அரசால் எடுக்கப்படும் உளவியல் நடவடிக்கை இது... அதாவது நாடுகடந்த அரசின் கொள்கையாக இல்லாமல்( இலங்கையில் செய்ற்படும் முடிவு எடுக்கப்படும் தருணங்களில்) தங்களின் கோரிக்கையை ஏற்று தங்களோடு சேர்ந்து வேலை செய்ய நாடுகடந்த அரசு ஆர்வமாக உள்ளது எனும் தொனிப்ப இங்கு உரைக்கப்பட்டு இருக்கின்றது...

இங்கை இன்னும் ஒரு தலைப்பிலை KP எண்டவர் விட்ட அறிக்கை கூட இந்த உளவியல் நடவடிக்கையின் ஒரு அங்கம் தான்...

நா.க.தமிழீழ அரசு; இது புலத்தமிழரின் எண்ணங்கள், விருப்பங்கள் என்று சொல்லலாம். இது முழுமையான ஜனனாயகப் பண்புகொண்டிருப்பதால், சாதாரணமாக எரிடமும் வேர்விடத்தக்க சந்தேகம் அநாவசியமானது என்ற முடிவைக் கொண்டிருக்கின்றது. அரசுகள் மிகப்பெரிய பணத்தால் எவரையும் விலைக்கு வாங்கிவிடும் என்ற சந்தேகபயம் மக்களிடம் இருப்பது இயல்பானது. ஆனால் பெரிய கூட்டத்தின் பெரும்பான்மையை விலை போகச் செய்வது என்பது முடியாத காரியம். நா.க.தமிழீழ அரசு அத்தகைய பெரும்பான்மை மக்களின் கருத்துக்களே அதன் முடிவு ஆகும் வகையில் அதன் கட்டுமானங்கள் யாவும் முழு ஜனனாயகத்தன்மை கொண்டிருக்கின்றது. இதன் துவக்க காலத்தில் இலங்கை அரசு இதை கண்டு கொள்வதாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் இவளவு விரைவாக இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டி இருப்பது இதுவரை நா.க.தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு ஒரு சான்றாக அமைகின்றாது.

இந்த அமைப்பினது வெளிநாட்டு நிர்வாகம் என்பது மக்களின் பார்வைக்கு நீட்ட முடியாமையின் முக்கிய காரணம் அது சிங்களத்தின் எதிர்வினை நடவடிக்கைகளுக்கு இலகுவானதாகும் என்பதால்.

புலிகள் காலத்தில் அவர்களுக்கு எதிர்வினை ஆற்ற பல குழுக்கள் சிங்களத்தால் இயக்கப்பட்டது. அதேபோல் இன்று இந்த நா.க.தமிழீழ அரசுக்கு எதிர்வினை ஆற்றவும் அதே வகையாக சிங்களம் தலையால் நடக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசா?

அப்டீன என்னா சார்?

:lol:

பனங்காய்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.