Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பேய் என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.

பேய் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று பேய் உருவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம்.இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள்.

பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.

சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர்.மெதேன் வாயுவுக்கு நம் நாட்டில் கொள்ளிவாய் பேய் என்ற பெயர் வழங்கப்படுகிறது

பேய் அனுபவம் உங்களுக்காராவது இருக்கின்றதா?

யோவ் என்னய்யா இது வெள்ளிக்கிழமை அதுவுமா? :mellow::o:blink:

  • கருத்துக்கள உறவுகள்

பேய் என்று ஒன்றும் இல்லை .ஒருவகை மனபிராந்தி ..மன வியாதி ..முள்ளிவாய்க்காலில்

அவலமாக் மரணித்த மக்களின் உயிர்களெல்லாம் ...............????

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் என்னய்யா இது வெள்ளிக்கிழமை அதுவுமா? :mellow::o:blink:

பயப்பிடாதே...... குட்டி,

கடைசியிலை.... துண்டைக் காணோம்.... கட்டிய துணியை காணோம்.......

என்று..... அம்மணமாய் நின்றால்..... பேயே.... ஓடிப் போயிடும்.

பேயை விரட்ட... நிர்வாணாம் தான்... நல்ல மருந்து.

- சுவாமி தமிழ்சிறியானந்தா -

  • கருத்துக்கள உறவுகள்

48fc671e2ab1c6.83101884frogview-gallery.jpg

மிகப் பிரபலமான லண்டன் "ப்ரவுன் லேடி" பேய்யின் புகைப்படம் இது!

மிகுதி செய்திகளுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்குக! :lol:

ப்ரவுன் லேடி

.

Edited by ராஜவன்னியன்

பயப்பிடாதே...... குட்டி,

கடைசியிலை.... துண்டைக் காணோம்.... கட்டிய துணியை காணோம்.......

என்று..... அம்மணமாய் நின்றால்..... பேயே.... ஓடிப் போயிடும்.

பேயை விரட்ட... நிர்வாணாம் தான்... நல்ல மருந்து.

- சுவாமி தமிழ்சிறியானந்தா -

:lol:

அப்போ நிழலியானந்தாவின் அவட்டர் இருப்பதால் இங்கே பேய் வாராது என்று சொல்லுறியள் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

48fc671e2ab1c6.83101884frogview-gallery.jpg

மிகப் பிரபலமான லண்டன் "ப்ரவுன் லேடி" பேய்யின் புகைப்படம் இது!

மிகுதி செய்திகளுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்குக! :lol:

ப்ரவுன் லேடி

ராஜவன்னியன் உங்களுடைய இணைப்பிற்கு நன்றி.

நான் இதை விட.. கனபேய்களுடன் வாழ்ந்த பேய், கோம்பயன் மணல் பேய்....., ரத்தக் காட்டேரி...... ஆஆஆஆ ......ஊஊஊஊ.......

:lol:

அப்போ நிழலியானந்தாவின் அவட்டர் இருப்பதால் இங்கே பேய் வாராது என்று சொல்லுறியள் :D:lol:

ஓம் குட்டி, இங்கை மற்றவர்கள் வரமாட்டார்கள்.

பூந்து... விளையாடுங்க...... :D:lol::wub:

பயப்பிடாதே...... குட்டி,

கடைசியிலை.... துண்டைக் காணோம்.... கட்டிய துணியை காணோம்.......

என்று..... அம்மணமாய் நின்றால்..... பேயே.... ஓடிப் போயிடும்..

- சுவாமி தமிழ்சிறியானந்தா -

அதுவும் குட்டி, பெண் பேயாகவிருந்தால் வந்தவரைக்குமிலாபம் என்று இருக்க வேண்டிதான். :rolleyes:

Edited by thappili

அதுவும் குட்டி, பெண் பேயாகவிருந்தால் வந்தவரைக்குமிலாபம் என்று இருக்க வேண்டிதான். :rolleyes:

ஆஆஆ... ஏன் இந்தப் பேய் வெறி??? :blink::blink::o:o

  • கருத்துக்கள உறவுகள்

பேய் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று பேய் உருவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது

அதுவும் குட்டி, பெண் பேயாகவிருந்தால் வந்தவரைக்குமிலாபம் என்று இருக்க வேண்டிதான்.

தப்பிலி,

கோமகன் பேயைப்பற்றி எழுதியது மேலே 'நீல வண்ணத்தில்' உள்ளது.அது ஆண் பேயாய் இருந்தாலென்ன? பெண் பேயாய் இருந்தாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வீட்டிலும் பொதுவா பேய் இருக்கும்.. ஏன்னா.. தலைவிரி கோலமா பெண்கள் இருக்காங்கல்ல..! :D:)

ghostly-woman_1218736c.jpg

Ghostly 'white lady' sparks hunts by spirit hunters

http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/4176249/Ghostly-white-lady-sparks-hunts-by-spirit-hunters.html

Edited by nedukkalapoovan

தப்பிலி,

கோமகன் பேயைப்பற்றி எழுதியது மேலே 'நீல வண்ணத்தில்' உள்ளது.அது ஆண் பேயாய் இருந்தாலென்ன? பெண் பேயாய் இருந்தாலென்ன?

யாருக்குத் தெரியும் புங்கையூரான். நான் நேரில் பார்த்ததில்லை. தமிழ் படங்களில்தான் பார்த்திருக்கிறேன். பூவைத்து பொட்டு வைத்து தளைய தளைய சேலை உடுத்தி வரும். :D

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேறாத ஆசை............... பேயின் மறு வடிவம்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குத் தெரியும் புங்கையூரான். நான் நேரில் பார்த்ததில்லை. தமிழ் படங்களில்தான் பார்த்திருக்கிறேன். பூவைத்து பொட்டு வைத்து தளைய தளைய சேலை உடுத்தி வரும்.
:D

தப்பிலி, நீங்கள் படத்தில காட்டின மாதிரி பேய் இருக்குமெண்டால், பேயோடு குடும்பமே நடத்தலாம்!

ஏன் கோமகன் யாழில் இணைக்கிறதுக்கு வேறு ஏதும் கிடைக்கவில்லையா?... வேறு வேலை வெட்டி இல்லையா? .. சும்மா பேய் கீய் என்று ஏன் இப்படி பயம் காட்டுகிறீர்கள்... ^_^

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மட்டும் பேய் அண்டவே அண்டாது ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் :D

  • தொடங்கியவர்

ஏன் கோமகன் யாழில் இணைக்கிறதுக்கு வேறு ஏதும் கிடைக்கவில்லையா?... வேறு வேலை வெட்டி இல்லையா? .. சும்மா பேய் கீய் என்று ஏன் இப்படி பயம் காட்டுகிறீர்கள்... ^_^

பொதுவாக எனது பதிவுகள் கள நண்பர்களுக்கு ஓர் சிறிய மாற்றத்தை ஏற்படத்த வேண்டும் என்ற ஆவலிலேயே போடுகின்றேன்.எம்மை நாம் பல வழிகளில் "சுயபரிசோதனைக்கு" ஆட்படத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.எல்லா துறையிலுமே இந்த சுயபரிசோதனை தேவை. இங்கு வந்தும் கூட, மூட நம்பிக்கைகளும், போலி மதத்துறவிகளும், கைரேகை சாத்திரம் என்று எங்ளைப் பின்தொடர்வது ஆரோக்கயமான வளர்ச்சி என்று நினைக்கன்றீர்களா சுஜி? உங்களைப் பயப்படுத்தியருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

என்னை மட்டும் பேய் அண்டவே அண்டாது ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் :D

ஓ தெரியமே நீங்கள் மன்மதன்ர அவாவல்லோ :D:D:D:D:D:D

Edited by komagan

என்னை மட்டும் பேய் அண்டவே அண்டாது ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் :D

சகோதர பாசம் :lol:

சகோதர பாசம் :lol:

ஸேம் பிளட் ^_^

  • தொடங்கியவர்

பேக்குப் பயனளிக்கும் வகையில் கருத்துகளை பதிந்த குட்டி,தமிழ்சிறி,நிலாமதி அக்கா,ராஜவன்னியன்,நெடுக்ஸ்,ரதி,சுஜி, புங்கையூரான், தப்பிலி ,கறுப்பி, மற்றும் நண்பர்களுக்கு நன்றிகள். :D:D:D:D

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மட்டும் பேய் அண்டவே அண்டாது ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் :D

பேயிடம் பேய் எப்பவுமே அண்டாதுங்க. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

பேயிடம் பேய் எப்பவுமே அண்டாதுங்க. :lol::)

சரியாக சொன்னீர்கள் கறுப்பி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.