Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் பருவமடைந்தால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பருவம் அடைந்தால் அதுதான் சாமத்தியப்பட்டால் சாப்பாட்டு விசையத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமா அதாவது சரக்கு அரைத்து போட்ட கறி மற்றும் அது கொடுக்க கூடாது இது கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் அவசியமா.தெரிந்தவர்கள் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

16 வயசை கடந்திட்டா.. தம்மு அடிக்கலாம்..

18 வயசைக் கடந்திட்டா.. தண்ணி அடிக்கலாம்..

21 வயசைக் கடந்திட்டா.. புருசனையே அடிச்சு விரட்டலாம்.

இப்படி எல்லாம் இருக்கும் போது.. அதென்ன.. பக்தி.. பத்தியம்.. சாமத்தியம் என்று கொண்டு..! :unsure::D:o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பருவம் அடைந்தால் அதுதான் சாமத்தியப்பட்டால் சாப்பாட்டு விசையத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமா அதாவது சரக்கு அரைத்து போட்ட கறி மற்றும் அது கொடுக்க கூடாது இது கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் அவசியமா.தெரிந்தவர்கள் கூறுங்கள்.

நிச்சயம் பத்தியச் சாப்பாடு மூன்று கிழமைக்குத் தன்னும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பருவம் அடைந்தவுடன் வேப்பிலைக் குருத்துடன் மஞ்சளும், சர்க்கரையும் அரைத்து, காலையில் இரண்டு நெல்லிக்காய் அளவு கொடுக்க வேண்டும்.

சுத்தமான நல்லெண்ணை ஒரு மேசைக் கரண்டி காலையில் கொடுக்க வேண்டும்.

உழுந்தையும், சின்ன சீரகத்தையும் அரைத்து நல்லெண்ணை தோசை சுட்டுக் கொடுக்க வேண்டும்.

கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் போன்றவற்றை உணவில் தினமும் சேர்க்க வேண்டும்

இவைகளை ஒழுங்காக கொடுத்து வந்தால்... பிற்காலத்தில் மாதவிடாய் ஏற்படும் காலங்களில், அவர்களுக்கு வயிற்றுக் குத்து, வயிற்று நோய் போன்றவை ஏற்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

உழுந்தில் செய்த களி,உழுத்தம் புட்டு,பலகாரம்,எள்ளுப் பாகு,எள்ளுப் பலகாரம்,நல்லெண்ணெயில் பொரித்த முட்டை,கத்தரிக்காய் பொரியல்,கோழியில்,மீனில் சரக்கு கறி போன்றன கொடுப்பார்கள்...பிறகு மாத விடாய் வரும் காலங்களில் இச் சத்தான சாப்பாடே பெண்ணுக்கு கை கொடுக்கும்...அதிக வலி ஏற்படாமல் தடுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி மற்றும் ரதி உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.நீங்கள் சொல்வது நானும் கேழ்விப்பட்டிருக்கிறேன்.ஊரில் என்றால் நீங்கள் சொல்வது சரி.காரனம் ஒன்று,ஊரில் வசதி இல்லாத குடும்பத்துப் பெண் பிள்ளைகளாக இருப்பின் இந்த நிகழ்வின் போது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் மூலம் அந்தப்பிள்ளைக்கு அந்தக்காலத்தின் போதாவது சத்துணவு கிடைக்க இந்த சம்பிராதயம் கை கொடுக்கும்.காரனம் இரன்டு ஊரில் பெரும்பாண்மையான குடும்பத்தில்ஆண்பிள்ளைகளுக்கு சாப்பாட்டு விடையத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கபடுவதில்லை.பெண் வயதுக்கு வந்தவுடன் மட்டும் ஆ ஊ என்று கவனிக்கிறேன் பேர்வழி என்று அந்த பிள்ளைக்கு எல்லாத்தையும் போட்டு அடையிறது.அல்லது பத்தியம் என்று போட்டு வாட்டுறது. இங்கு புலத்தில் சகல பிள்ளைகளும் ஆரம்பத்திலிருந்தே நிறையுணவுடன் தான வழர்கிறார்கள்.அதால இதுக்கு என்று பிரத்தியேகமாக ஏதாவது செய்ய வேன்டுமா என்பதுதான் எனது கேள்வி. :unsure:

நாங்கள் வாழும் நாடுகளில் பருவமடையும் பெண்கள் நன்றாகத் தானே இருக்கின்றார்கள். அவர்கள் சீரகம், உழுத்தம் மா, ஆகியவை பற்றிக் கேள்விபட்டது கூட இல்லையே. நீங்கள் கொஞ்சம் சிந்திக்கின்ற மனிதன் போல் உள்ளது.பருவமடைவது ஒரு இயற்கையின் விளைவு.இயற்கையே அதைக் கவனித்துக் கொள்ளும்.அது ஒரு நோயோ அல்லது வியாதியோ அல்ல. ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தெரியாதவிடத்துப் பேசாமல் அப்படியே விட்டு விடலாம் என்பது எனது தனிப் பட்ட கருத்து.வேண்டுமானால் உங்கள் GP இடம் கதைத்துப் பாருங்கள். அவரிடம் சீரகத்தைப் பற்றிக் கூறிவிடாதீர்கள்!!!

பருவமடைந்த பெண்களுக்கு கொடுக்கும் உணவுகள் சத்துக்காக கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு கத்தரிக்காய் அப்படியொன்றும் சத்துக்கூடிய உணவல்ல. மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கவே குறிப்பிட்ட இந்த உணவுகளை உண்ணவேண்டும் என்று கூறுவார்கள். ஆங்கில மருத்துவத்தில் என்ன மாதிரிஎன்று தெரியவில்லை .

பெண்களுக்கு மாதவிலக்கு நிற்பதற்கு ( menopause ) சில காலங்களுக்கு முன்பிருந்தே Primrose Oil குளிசைகள் போன்றவற்றை உட்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் வெறுப்புணர்வு, மனநிலையில் சடுதியான மாற்றம் ஏற்படுதல் போன்றவற்றை குறைக்குமென மேற்குலகில் கூறுகிறார்கள். இதே போன்றே பூப்பெய்தும் பொழுது இந்த உணவுகளை கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன். மருத்துவ உலகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வயதுக்கு வந்த பெண்களுக்கு.. ஒரு கப் பியர்.. ஒரு கப் வைன்.. ஒரு கப் விஸ்கி.. ஒரு கப் வொட்கா.. ஒரு கப்.. ஜக்டானியல்.. எல்லாம் கலந்து 5 கப் கொடுங்க.. நல்ல தெம்பா இருப்பினமாம்..!

குறிப்பு: பின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல..! :):D

நம்மட சனம் தேவையில்லாம உந்த விசயத்தை பெருசு படுத்துது என்று நினைக்கிறம். பையங்க நாங்களும் தான் வயசுக்கு வாறம்.. நமக்கு இப்படி எந்தக் கவனிப்பாவது இருக்கா. அதுவுமில்லாம.. ஏதோ உந்த தமிழ் பெட்டையள் மட்டும் தான் வயசுக்கு வருகினமா.. உலகத்தில எத்தனை கோடி பெட்டையள் வயசுக்கு வருதுகள்.. அதுகள் எல்லாம் இப்படி செய்யுதுகளா..??! கொடுமை சரவணா இது. :D:)

  • கருத்துக்கள உறவுகள்

-----

நீங்கள் வயசுக்கு வந்ததை எப்படி உறுதி செய்கிறீர்கள்.

சேவ் எடுக்கிறதை வைத்து வயசுக்கு வந்திட்டம் என்று, சொல்லாமல்....

உடம்பில் ஏற்படும் உள் மாற்றங்களை வைத்து சொல்வதாக இருந்தால்.....

இது வரை, எத்தனை தமிழ் பையன்கள் தனது, பெற்றோரிடம்... தனக்கு விந்து வருகின்றது என்று சொல்லியிருப்பான்.

அப்படிச் சொல்லியிருந்தால்.... உங்களுக்கும் சாமத்திய வீடு செய்ய... பெற்றோர்கள் ஏன் தயங்குகிறார்கள்.

தமிழ்ப் பெண்கள் தான்.... வயதுக்கு வந்தவுடன்... துணிந்து, வெளிப்படையாய், தாய்க்குச் சொல்வதால் சாமத்திய வீடு செய்கிறார்கள்.

தமிழ் பையன்களுக்கு, அப்படிச் சொல்லும் துணிவு இல்லை. பிறகேன்... சாமத்திய வீடு வைக்கவில்லை என்று கவலைப் படுகின்றீர்கள்.

Edited by தமிழ் சிறி

பெட்டையள் மட்டும் என்ன நாங்க முட்டை இட்டிட்டம் என்றா போய் சொல்லினம். வயித்துக்க குத்துது.. வயித்துக்க நோவுது.. சுகமில்ல.. பீரியட் என்று தானே சொல்லினம். நாங்க பையன்களும் தான் சொல்லுறம்.. wet dream எண்டெல்லாம். எவன் கவனத்தில எடுக்கிறான். நாங்க எங்களுக்கையே கதைச்சிட்டு போயிடுறம். அது இயற்கை என்று அற்புதமா விளங்கிக் கொள்கிறம். பெட்டையள மட்டும் ஏன் தூக்கிப் பிடிக்கினம். அது இயற்கை. இயற்கையான மாற்றங்களை இயற்கையாகவே சமாளிக்கக் கூடிய நிலையை இயற்கை அளித்திருக்கிறது. செயற்கை தனமான மாற்றங்களை இட்டுத்தான் விசேட கவனிப்பு அவசியம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

நீங்கள் குத்தலாகக்கதைத்தாலும் இந்த விடயம் மிகவும்பாராதூரமானது.

அந்த 3 நாட்களில் அவர்கள் படம் வேதனையை ஒரு ஆண் உணரமுடியாது. நீங்கள் சொல்லும் எந்த தண்ணியாலும் இதற்கு நிவாரணம் தரமுடியாது. தயவு செய்து ஆணாக சிந்திக்காமல் மனிதனாக யோசியுங்கள். :(:(:(

விசுகு அண்ணா. நான் அவைட உணர்வுகளை மதிக்கிறன். அதில மாற்றுக் கருத்தில்ல. ஆனால் அநாவசியமாக.. ஒரு இயற்கையான விடயத்தை சமூகத்தில் பூதாகரமாக அல்லது விசேடமாக காட்டுவதுதான் ஏன் என்று கேட்கிறேன்.

மனிதப் பெண்களைப் போல சில பிரமேட்டு குரங்குகளிலும் இவை நிகழ்கின்றன. அவைக்கு யார் சாமத்தியவீடு.. மற்றும் விசேட பத்திய உணவு கொடுக்கினம். இயற்கை தானே...! அது மனிதப் பெண்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் தானே...! தமிழ் பெண்களுக்கு மட்டும் தானா இவை எல்லாம்.. விசேசமா வருகுது..?????????????! இதுதான் என் கேள்வி. இதைக் கேட்பதால்.. அவர்களின் உணர்வை புரிஞ்சுக்கல்ல.. மதிக்கல்ல என்பதல்ல அர்த்தம். பெண்ணின் உணர்வை பெண்ணின் நிலை இருந்தும் எங்களால உணர முடியும். ஆணாக இருந்தாலும் அதை செய்யும் மனப் பக்குவம் இருக்கு விசுகு அண்ணா. அதற்காக சில மூடத்தனங்களை அனுமதிக்கனுமா..????! :D:)

ஏன் நெடுக்ஸ்

குரங்குகளில் வைத்தியப்படிப்பு படித்தவை இருக்கினமே....

அது என்ன மனித இனத்தில் மட்டும் இத்தனை படிப்புக்கள்...?

எதற்காக இத்தனையும்....? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருபவர்கள் எல்லாம் அப்பா மாரும் அண்ணாமாரும்.

பெண்பிள்ளியை பெற்ற் அம்மாமாருக்கு விளங்கும் தெரியும்.

இந்த தலைப்பை நீக்கி விடவும்......... தேவையற்ற விவாதம்.

பொதுவாக சத்தான உணவுகள் வளரும் பிள்ளைகளுக்குக் கொடுப்பது அவசியம்! இதில் ஆண், பெண் பேதம் பார்க்கத் தேவை இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. இருப்பினும் ஆசிய நாட்டவர்கள் தமது பெண் பிள்ளைகள் பருவ வயதை அடைந்ததும் அவர்களுக்கு சில பத்திய உணவு வகைகளை கொடுத்துப் பராமரிக்கிறார்கள், இதனால் பெண்களுக்கு உரிய மாதாந்த சிரமங்களை ஓரளவேனும் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையில்...

மற்றைய நாட்டு பெண் பிள்ளைகளும் பருவமடைகிரார்கள், அவர்கள் பல மாத்திரைகளை (Pain killers எடுப்பதால் மாதாந்தம் வரும் வலிகளை ஓரளவு குறைத்துக் கொள்ளுபவர்களாக இருக்கலாம். இந்த முறையை எமது இனத்துப் பெற்றோர் அதிகம் வரவேற்பது இல்லை. எல்லாவற்றுக்கும் மருந்து மாத்திரைகளை பாவிப்பதால் பிற்காலத்தில் குழந்தை பெறும் தன்மை குறைந்து விடும் அல்லது இல்லாமல் போகும் என்று கருத்துக்கள் பரவலாக இருப்பதனால் இந்த முறையை அவர்கள் ஊக்குவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.

சத்தான உணவோடு விட்டமின் மாத்திரைகளையும் தினமும் எடுப்பதனால் அவர்களின் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை பெற முடியும்.

http://www.vitabiotics.com/addtocart.aspx?ID=240&source=aw&awc=2646_1302549691_4aefcea3ea2e9b488e2b487846c04dab#

http://wiki.answers.com/Q/What_kind_of_vitamins_should_teenage_girls_take

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் என்ன தான் நாம் புலம் பெயர் நாட்டில் வாழ்ந்தாலும்,சத்தான உணவு சாப்பிட்டு வளர்ந்தாலும் ஒரு பெண் பருவமடையும் போது கட்டாயம் சத்தான,பத்திய உணவு சாப்பிட வேண்டும் இல்லா விட்டால் குட்டி எழுதியது போல் இங்கு உள்ள பெண்களை போல வலி நிவாரணி மாதந்தோறும் எடுக்க வேண்டி வரும் அத்தோடு அப் பெண் குழந்தை பெறும் போது அதிக வலியால் அவதிப் பட வேண்டி வரும்.

தப்பிலி இங்கு கத்தரிக்காய் முக்கியம் இல்லை...கத்தரிக்காயோடு சேர்த்து கொடுக்கப்படும் நல்லெண்ணெய் தான் முக்கியம்...நல்லெண்ணெயோடு சேர்த்து கொடுப்பதற்கு கத்தரிக்காய் பொருத்தமாக இருக்கலாம்[நல்லெண்ணெய் குளிர்மை கத்தரிக்காய் சூடு]

நெடுக்காலபோவான் வைத்திய துறை சம்மந்தமாக படிக்கிறார் என்பதை இந்த பதிவில் அவர் எழுதிய கருத்தின் மூலம் நம்ப முடியாமல் உள்ளது...ஒரு பெண்ணின் வலிகளைப் புரிந்து கொள்ள வைத்தியராக இருக்க தேவையில்லை ஒரு சாதரண மனிதனாக இருந்தாலே போதும்...இது சாமத்திய வீடு பெரிதாக செய்ய வேண்டுமா இல்லையா என்கிற பதிவு இல்லை ஒரு பெண் பருவமடையும் போது அவருக்கு சத்தாண உணவு கொடுக்க வேண்டுமா இல்லையா என்கிற பதிவு.

பெண் பருவமடைதல் என்பது சாப்பாடு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அது வளர்ச்சி.. ஓமோன்கள் சம்பந்தப்பட்ட இயற்கையான மாற்றம். சாதாரண நிறை உணவை உண்டாலே போதும். அதற்கு என்று ஒரு வரையறுத்த உணவு வழக்கம் இருப்பதாக நான் அறியவில்லை. ஆனால் தமிழர்கள் அதை செய்கின்றனர். ஏன் என்பதுதான் கேள்வி. அதுமட்டுமன்றி பருவ வயதை அடையும் ஆண்களுக்கு இவை தவிர்க்கப்படுகின்றன. பெண்களின் மாதாந்த குருதி இழப்பை இட்டு அவர்களுக்கு அயன் பிரச்சனைகள் வரலாம் என்பதால் அதற்கேற்ப கீரை பால் உட்பட்ட சாதாரண நிறை உணவை அவர்கள் உண்டாலே போதுமானது. மற்றும்படி அவர்களுக்கு என்று விசேடித்த ஒரு உணவு வழக்கம் அவசியமற்றது. முருங்கக்காய்.. கத்தரிக்காய்... நல்லெண்ணை.. முட்டை என்று அளவுக்கு அதிகமாக (நிறைவை உணவு வழங்கும் வழக்கத்தை விட்டு) உணவுகளை வழங்குவது ஆபத்தானதுடன்.. பக்க விளைவுகளையும் கொண்டு வரும். அதுதான் என்னவோ.. தமிழ் பெண்கள் குண்டு பூசனிக்காய் களாக ஆகிவிடுகிறார்கள். :lol::D:)

தமிழ் பெண்கள் குண்டுப் பூசனிக்காயாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் இங்கு உள்ளவர்கள் மாதிரி எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரைகள் எடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் குண்டுப் பூசனிக்காயாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் இங்கு உள்ளவர்கள் மாதிரி எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரைகள் எடுக்கவில்லை.

வலி நிவாரணத்துக்காக வழங்கப்படும் மாத்திரைகளின் பாதிப்பை விட நம்மவர்கள் அதிகமாக உண்ணும் உணவின் பாதிப்பு அதிகம். அதை தமிழர்கள் உணர்வதாகவும் இல்லை..! அதுக்க சண்டித்தனம் வேற..! :):D

  • கருத்துக்கள உறவுகள்

வலி நிவாரணத்துக்காக வழங்கப்படும் மாத்திரைகளின் பாதிப்பை விட நம்மவர்கள் அதிகமாக உண்ணும் உணவின் பாதிப்பு அதிகம். அதை தமிழர்கள் உணர்வதாகவும் இல்லை..! அதுக்க சண்டித்தனம் வேற..! :):D

இங்குள்ளவர்கள் மாதிரி இலையையும்,குழையையும் சாப்பிட்டு நீண்ட நாள் வாழ்வதை விட குறைந்த காலம் வாழ்ந்தாலும் நன்றாக சாப்பிட்டு விட்டு சாக வேண்டும்...தலைப்பை திசை திருப்பாமல் தயவு செய்து போய் புத்தகத்தையும்,கணணியையும் கட்டிப் பிடித்து கொண்டு தூங்கவும்...நன்றி...வணக்கம்

தலைப்பை திசை திருப்பும் அம்சமே இதில் தான் அக்கா அடங்கி இருக்குது.

புத்தக்கத்தையும் கணணியையும் கட்டிக் கொண்டு தூங்கினால் அறிவும் வழிகாட்டலுமாவது கிடைக்கும்..! :D:)

பூப்பெய்திய பெண்களுக்கு அவர்களின் எதிர்கால ஆரோக்கியம் கருதியே இந்த பத்தியச் சாப்பாட்டு கொடுக்கப்படுகிறது. இரத்தப்போக்கால் இழக்கப்பட்ட சக்தியை மீட்பதற்காக அல்ல.

இவையெல்லாம் 'உணவே மருந்து' என வாழ்ந்த எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு விட்டுச் சென்ற அருமருந்துகள். அவர்களின் உணவுப் பழக்கங்கள், மூலிகைகளின் உபயோகங்கள் ஆகியவன நோயின் அடிப்படைக் காரணிகளை முற்றாக அகற்றுவதாக இருந்தது.

வலி நிவாரணி பாவிப்பது வழியைக் குறைக்கவே அன்றி நோயை நீக்குவதற்காக அல்ல. அத்துடன் பக்க விளைவுகளும் அதிகம்.

வெள்ளைப்பூண்டின் மணத்திற்கு தூர ஓடிய வெள்ளையர்கள்தான் இன்று அதன் மருத்துவ குணமறிந்து தேடி தேடி சாப்பிடுகிறார்கள்.

மஞ்சள் , பச்சை மிளகாய், வெந்தயம் போன்றவைகள் உடலுக்கு நல்லது என அண்மையில் ஆங்கில பத்திரிகையில் வாசித்தேன்.

எங்கட பிரச்சனை என்னவென்றால் , எங்களில் நல்ல பழக்க வழக்கங்களைக் கூட நாங்கள் மதிப்பதில்லை. வெள்ளைகள் சொல்வதே தாரக மந்திரம். மூதாதையர் பாவித்த மூலிகைகளையே வெள்ளைகள் விளம்பரம் செய்து எங்களுக்கு விற்கும் காலம் அதிகமில்லை.

தப்பிலி இங்கு கத்தரிக்காய் முக்கியம் இல்லை...கத்தரிக்காயோடு சேர்த்து கொடுக்கப்படும் நல்லெண்ணெய் தான் முக்கியம்...நல்லெண்ணெயோடு சேர்த்து கொடுப்பதற்கு கத்தரிக்காய் பொருத்தமாக இருக்கலாம்[நல்லெண்ணெய் குளிர்மை கத்தரிக்காய் சூடு]

ரதி,

கத்தரிக்காயை மற்றைய பொருட்களுடன் பாவிப்பது, மாதவிடாயால் வரும் வலியை குறைக்கவேயன்றி சத்துக்காக அல்ல என்பதை சொல்ல வந்தேன்.

பருவம்டையும் வயதில் ஆண் பிள்ளைகளோ அல்லது பெண் பிள்ளைகளோ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பது அவசியம். எம்மவர்கள் இயற்கை உணவுகளான உளுந்து, நல்லெண்ணெய் போன்றவற்றை தருவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளில் இவ்வகை உணவுகளை அளவாகவே தருகிறார்கள். உணவே மருந்து என்பது அளவாக உண்ணும்போது மட்டுமே.

எங்கள் சமூகக் கட்டமைப்பில் பொதுவாகவே ஆண்பிள்ளைகளுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு அப்படி அல்ல. எனவே பூப்படையும் காலங்களில் அவர்களை விசேடமாக கவனித்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இது அவர்களுக்கு ஒருவித மனத்திருப்தியை தரக்கூடும். மேலும் பெண்கள் ஆரோக்கியமாக (உடல், உள) இருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். இதற்காகவாவது அவர்களை சிறப்பாக கவனிக்கலாம் அல்லவா?

வளரும் பதின்ம வயதில் பையன்கள் தாமாகவே புஷ்ட்டியான உணவுகளை தேடிக்கொள்கிறார்கள். முட்டை/இறைச்சி கொத்து சாப்பிடாத பதின்ம வயது இளைஞன் யார்? :lol: :lol: பெண்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் குறைவு. எனவே இது தவறல்ல. தவிர்க்கப்பட வேண்டியதும் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்ததையும் எழுதுவம் என்று பார்கின்றேன்.

பருவமைடைதல் என்பது ஒரு "பல படிகொண்ட செயற்பாடு" எப்ப தொடங்கி எப்ப முடிகிறது என்று சொல்லத்தெரியவில்லை. நாங்கள் இங்கே பேசுவது தனியே மாதவிடாய் தொடங்குவது உடன் சம்பத்தப்பட்டது. பெண்பிள்ளை பிறக்கும் போது முட்டைக்குரிய அணுக்கள் சுலகத்தினுள் இருக்கும். சூலகம் வெளியே தெரியும் உறுப்பல்ல, அடிவயிற்றில் -ஆண்களுக்கு விதைகள் உள்ளமாதிரி- இடுப்பு பகுதியில் இருக்கும். இந்த ஒவ்வொரு அணுவும் 2 தடைவை பிரிய வேண்டும் ஒரு முட்டையை தர, முதலாவது பிரிவு கிட்டத்தட்ட 3 - 4 - 5 வயதில் நடக்கும்..வெளியில் ஒன்றும் தெரிவதில்லை..இரண்டாவது பிரிவு ஒவ்வொரு மாதவிடாயின் போதும் நடக்கும். நான் நினைக்கிறன் கிட்டதட்ட 600 வளமான முட்டைகள் ( ஒருக்கா பிரிந்த முட்டைகள் ) இந்த முட்டைகளில் ஒவ்வொன்றாக விருத்தியடைந்து (2 வது பிரிவு நடந்து ) மாதவிடாயின் போது வெளிவரும்.

பருவமடைவது என்பது தனியே இந்த முட்டை உருவாவது மாத்திரமல்ல. பெண்ணை அடுத்த சந்ததியை விருத்தி செய்வதரற்கு ஏற்றமாதிரி தயார் செய்வதும் ஆகும்.

சரி இதில் எங்கள் சமுகம் செய்யும் சடங்குகள், பொதுவாக பொருத்தமானவையே.- சமத்திய சடங்கை தவிர-

சாப்பாடு விடயம்... முதலில், பெண்பிள்ளைகளுக்கு, சிறியவயதில் இருந்து கொடுக்க/ கவனிக்க வேண்டும், தனியே ஒருமாதம் இரண்டு மாதம் போதாது. ஆனால் அவர்கள் கொடுப்பது பொதுவில் நல்ல போசனை சத்து கொண்டவையே..நான் நினைக்கிறன் மல்லி, சிறகம் , மிளகு..இவற்றில் ஒன்று அல்லது எல்லா சேர்ந்த கலவை நிறைய/ குறைந்தளவில் ஆவது இரும்பு சந்து கொண்டது.

அந்த நேரத்தில் வருகிற நோ, உடம்பில் சுரக்கும் வேறுபட்ட பதர்தண்களால் வருவது. அவற்றையும் இந்த பத்திய சாப்பாடு கட்டுப்படுத்தலாம். காச்சலுக்கு வேர்கொம்பு கொடுப்பது போல---

கத்தரிக்காயை பற்றி பலரும் எழுதியிருந்தார்கள்..ஒன்று இது இலகுவில் கிடைப்பது, மற்றது இலகுவில் சமிபாடு அடையும் பெரியளவில் காஸ், மற்ற மற்ற பிரச்சனைகள் அற்றது. நான் அறிந்தவைரையில் நிறைய நுண் கணியங்கள் கொண்டது -நாகம், செலனியம் --சரியோ தெரியவில்லை.

ஆண்களுக்கு இப்படி பெரிதாக தேவைபடாதர்ற்கு காரணம், நாங்கள் வாழும் சமுகத்தில்- ஆண் பிள்ளைகள் எல்லா இடத்திலும் முக்கியம் பெறுவது வழமை, நல்ல சாப்பாடு அவர்களுக்கு எப்பவும் உண்டு. அதை விட இந்த இனப்பெருக்க விடயத்தில், அவர்களில் முழு வட்டமும் ஒவ்வொரும் முறையும் புதிது புதிதாக நடக்கும் - ஆண்களிலும் , முதலாம் பிரிவும் , 2 பிரிவும் நடக்கும், ஆனால் அது ஒன்றை தொடர்ந்து ஒன்று நடக்கும். இதனால் தான் 60 - 70 வயதிலும் ஆண் சிங்கமாக இருக்க முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பருவமடைவது இயற்கையின் வழி.... உலகில் உள்ள அனைத்து மானிடப் பெண்களும் பருவமடைகிறார்கள் (சில பெண்கள் முதுமை வந்தும் பருவமடையாமல் இருளி என்ற அடைமொழிக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள் இப்படியான நிலை ஆயிரத்தில் ஒருவருக்கோ அல்லது அதனிலும் அதிகமான எண்ணிக்கையில் ஒருவருக்கோவாகத்தான் இருக்கும்) இங்கு எமது சமூகம் மட்டுமே அதிகளவில் இந்தப் பெண்கள் பருவமடைதலை பெரிதுபடுத்துகிறார்கள். அந்த வகையில் இயற்கையாக பெண்ணுக்கு ஏற்படும் உடல் வளர்ச்சியின் ஒரு கூறான இப்பருவமடைதலை மிகுந்த கவனிப்புக்குள்ளாக்குகிறார்கள்.

பொதுவாகவே எம்முடைய நாடுகளில் பெண் பிள்ளைகளுக்கு பருவமடையும் காலங்களில் மிகுதியான கவனிப்பு இருக்கும். அதற்குப் பல காரணங்கள் உண்டு.

1. ஆண் பிள்ளையை வளர்க்கும் விதமாக பெண் பிள்ளைக்கு ஊட்டச்சத்து நிறை உணவை தராமை.

2. பருவமடையும் காலங்களில் பலவீனமான பெண் பிள்ளைகளுக்கு வலிப்பு, முடக்குவாதம், குளிரினால் ஏற்படக்கூடிய நீண்டகால நோய்கள் தாக்கும் தன்மை

3. அதிகளவான உதிரப் போக்கு

4. எதிர்காலத்தில் சந்ததி விருத்திக்கான ஆரோக்கியம்

முதல் முறையாக உண்டாகும் உதிரப் போக்கு உடலைப் பலவீனப்படுத்தாது இருப்பதற்காகவே பருவமடைந்த பெண் பிள்ளையை அதிக கவனமெடுத்துக் கவனிக்கிறார்கள். எமது நாட்டில் வேர்க்கம்புத்தூள் போட்டு கத்தரிக்காயை நல்லெண்ணெயில் பொரித்துக் கொடுப்பார்கள், எள்ளுடன் சம்பந்தப்பட்ட உணவை அதிகமாக கொடுப்பார்கள் ஒரு விடயம் தண்ணீரை மட்டும் தர மாட்டார்கள் நல்லெண்ணெயும் வேர்க்கம்பும் இணைந்து வாய்ல் எச்சில் நுரைக்கும் ஈவிரக்கமின்றித் தண்ணீரை மறுப்பார்கள். இப்போது கொஞ்சம் மாறிவிட்டார்கள் இருப்பினும் பத்தியமான உணவை இன்னும் உட்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

இதைப்போலத்தான் மகப்பேற்றுக் காலத்திலும் இன்னும் கடுமையாகப் பத்திய உணவைப் பாவிப்பார்கள்.

இப்போதெல்லாம் நாம் வாழக்கூடிய நாடுகளில் பெண் பிள்ளை பருவமடைந்தால் எத்தகைய பலவீனங்களுக்கும் உள்ளாகும் சாத்தியங்கள் குறைவு. இப்பருவமடைதல் இயல்பான வளர்ச்சியில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஊரிலெல்லாம் குழந்தை பெற்றால் தண்ணீர் குடிக்க மிகவும் கட்டுபாடு வைப்பார்கள் ஆனால் மிகவும் தவறானது என்று இன்றைய நாட்களில் அறியமுடிகிறது. குடலில் சேரும் அழுக்குகள் வெளியேறாமல் போகும்போது கால ஓட்டத்தில் அவை கர்ப்பப்பைப்புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது என்று அறியக் கூடியதாக இருக்கிறது. அடுத்து இன்றைய நாட்களில் அதுவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் பெண் பிள்ளைகளுக்கு ஊரில் பார்த்ததுபோல் பத்தியம் தேவையில்லை என்பது எனது கருத்து. தண்ணீர் குடித்தால் வயிறு உப்பும் என்று தண்ணீரை குறைவாகக் குடிக்கவிடுவார்கள் தண்ணீர் குடிப்பதனால் வயிறு உப்பும் என்பது பொய்கதை வயிறு உப்புதல் குடும்பப் பின்னணி மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை தகுந்த உடற்பயிற்சி இல்லாமை ஆகியனவே பலரை பேத்தைகளாக உருவாக்கியிருக்கிறது. பத்தியம் என்று பெண்பிள்ளைகளை இம்சை செய்யாமல் நேரந்தவறாத ஆரோக்கியமான உணவு, நல்ல உடற்பயிற்சி இவை இரண்டையும் பெற்றோர் சரியாக கொடுத்து வந்தால் அந்தப் பெண்பிள்ளைக்கு உடல் வலிமை மட்டுமல்ல மனவலிமையும் கூடும்

வேர்க்கம்பு - உடலின் வெப்பநிலையை பாதுக்காக்கிறது உள்ளுடம்பின் காயத்தை ஆற்றுகிறது(உள்ளுடம்பின் காயம் என்பது பற்கள் முறைக்கும்போது ஈறு வலிப்பதைப்போல)

வேப்பங்குருத்து - ஆரோக்கியம் கரு விருத்தி

நல்லெண்ணெய் - சத்து மற்றும் வேர்க்கம்பின் சூட்டுநிலையை சமப்படுத்துகிறது. இவைகளையும் மறுக்க முடியாது

கொசுறாக நெடுக்குத் தம்பி இனி உங்கள் அதாவது ஆண்களின் பருவமடைதலை வீட்டில் யார்டமாவது சொல்லுங்கள் காய்ம் காய்ச்சிக் கொடுக்க சிபார்சு செய்கிறோம் :D

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.