Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

கடவுளும் டெலோ மீதான தாக்குதலை நடத்த மறுத்து இயக்கத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

கடவுள் சகோதரர்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்தவர்.

கிழக்கின் நிலைகளுக்கேற்ப அங்கு இயக்களுக்குள்ளான முரண்பாடுகள் இருக்கவில்லை. தமிழர்கள் சிறுபான்மையான இருந்த பல்லின சமூகம் நிறைந்த இடங்களைக் கூட கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். தலைமையின் கட்டளைகளை ஏற்க மறுத்து, எங்களுக்குள் சண்டை வேண்டாம் என்று சகல போராளிக் குழுக்களையும் அழைத்து கடவுள் முடிவெடுத்தார். சில கசப்பான சம்பவங்கள் நடந்ததால் அவருடன் சில போராளிகளும் டெலோ மீதான தாக்குதலை மறுத்து வெளியேறினார்கள்.

Edited by thappili

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இருக்கும் போது இதை தட்டிக் கேட்கவோ அல்லது புலிகள் இருக்கும் போது இதைப் பற்றி விமர்சிக்க முடியாமல் உள்ள சாஸ்திரி அண்ணா தர்போது புலிகளை தட்டிக் கேட்கிறார் என்டால் அவருக்கு எவ்வளவு தில் வேண்டும்

ஜயோ ஜயோ கதையை வடிவா படிக்கேல்லை போலை முதல்லை ஒரே சிவப்பு சேட்டு என்றதைப்போலத்தான் இந்தக் கருத்தும். பிரபாகரன் திருமணத்தை எதிர்த்தவர்களின் முக்கியமாக நானும் ஒருத்தன் என்கிறதை படிக்கேல்லை போலை முதல்லை படியுங்கோ பிறகு எழுதுங்கோ :lol: :lol:

அதே நேரம் தப்பிலியின் கருத்தையும் படியுங்கள் அவர் கிழக்கு மாகாணத்தின் பல விடயங்களை எழுதுவதால் அந்த பகுதியை சேர்த ஒருவர் மட்டுமல்லாது பல விடயங்களையும் தெரிந்த ஒருவராக இருக்கிறார். தப்பிலி உங்களிற்கு தெரிந்தவைகளையும் எழுதுங்கள்.

Edited by sathiri

நான் கதையை வடிவாய் வாசித்து விட்டுத் தான் எழுதுகின்றேன்...தட்டிக் கேட்ட நீங்கள் பொன்னம்மான் வந்து சொன்னதும் ஏன் அடங்கிப் போனீர்கள்?...ஏன் புலிகள் பலமாக இருக்கும் போது இந்த விடயம் பற்றி பத்திரிகையிலோ அல்லது இணையத்திலோ ஏன் விவாதிக்கவில்லை...விவாதிக்க முடியவில்லை?

84ம் ஆண்டு யாழ் இணையத்திலை எழுத முயற்சித்தனான் ஆனால் அப்ப எனக்கு தமிழிலை தட்டச்சு செய்யத் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பதிவு எப்பொழுது சாத்திரி?. வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

84ம் ஆண்டு யாழ் இணையத்திலை எழுத முயற்சித்தனான் ஆனால் அப்ப எனக்கு தமிழிலை தட்டச்சு செய்யத் தெரியாது

:D:lol:

." .......இங்கு பெரியளவில் யாரும் பதிவாக்காத நடந்த சம்பவத்தையும் எழுதி எனது பயணத்தை நிறைவு செய்கிறேன்."

நன்றி உங்கள் நீண்ட பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்கு,

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரது திருமணம்

இது பற்றி நானும் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் மதிவதனி எனது உறவுக்காரர் என்பதாலும் அதையடுத்து அவரது தகப்பனார் ஏரம்பு ஆசிரியரது சில நடவடிக்கைகள் பற்றிய கேள்விகள் இங்கு எழும் என்பதாலும் தவிர்த்தேன். எதையும் விவாதிப்பது நல்லதே. அதேநேரம் கல் எப்போது கிடைக்கலாம் நாய்க்கு எறியலாம் என்கின்ற கூட்டம் இருப்பதனால் தவிர்க்கவேண்டிய சில விடயங்களை தவிர்ப்பதே நல்லது. சாதாரணமாக முன்னாள் போராளிகள் எதையும் பேசமாட்டார்கள். அவர்களிடமிருந்து வரும் ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தமும் விவாதங்களும் திசை திருப்பல்களும் வரும் என்பதாலும் அது அவர்களது தேசிய இயக்கத்துக்கும் தமிழீழ மக்களுக்கும் சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அவர்கள் மௌனித்தே இருப்பர். இங்கு சாத்திரி சிலவற்றை சொல்ல வெளிக்கிட்டு அந்த அந்த மௌனத்தை உடைத்துள்ளார். அந்தவகையில் அவரே அதற்கான பொறுப்பாளியாவார். சாதாரண ஒரு பொது மகனாக சாத்திரி பேசுவதற்கும் முன்னாள் போராளி என பேசுவதற்குமான பொறுப்பை சாத்திரி புரிந்தே இதை செய்கின்றார் என நினைக்கின்றேன் .

மற்றும் தலைவரது திருமணம்

1984 ஆரம்பப்பகுதி என நினைக்கின்றேன். தாயகத்தில் எல்லா இடமும் பேசப்பட்ட ஒரு விடயம் தலைவரது திருமணம். முதலில் இது எவருடன் என்பது தெரியாது தலைவர் திருமணம் செய்துவிட்டார் என்றே பேசப்பட்டது. சில முக்கிய நபர்களுக்கே யார் பெண் என தெரிந்திருந்தது. எனக்கு தலைவர் மதிவதனியைத்தான் திருமணம்முடித்துவிட்டார் என்ற தகவல் கசிந்ததும் நான்முதலில் செய்தது மதிவதனியின் சகோதரர் சந்துருவைச்சந்தித்ததுதான். அவர் ஏற்கனவே புலிகளுக்கான பிரச்சாரங்களை எமது ஊரில் செய்துவந்தார். அந்தவகையில் அடிக்கடி அவரை நான் சந்திப்பது வழக்கம். அவரை நான் கேட்டதற்கு அவர் ஆமாம் என்றார். அத்துடன் நான் மௌனமாகிவிட்டேன். அந்த நேரத்தில் போராளிகளுக்கிடையே பிரிவுகள் வருவதையோ போட்டிகள் ஏற்படுவதையோ எவரும் விரும்பவில்லை. இது சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது. ஆனால் மக்கள் இதற்கு முக்கியம் கொடுக்காதபோதும் ஏற்கனவே பெண்கள் விடயத்தால் துரத்தப்பட்ட உமா போன்றவர்களுக்கு இது மிகவும் பிரயோசனமானதாகப்பட்டது. அவர்களே இதை மிகவும் பிரச்சாரப்படுத்தினார்கள். நாங்கள் செய்யக்கூடாது மற்ற போராளிகள் செய்யக்கூடாது அவர் செய்யலாம். என்ன நியாயம் இது என்று முடிச்சுப்போடும் வேலைகள் ஏராளமாக நடந்தன.

நான் சில நாளில் நல்லூரிலுள்ள எனது மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தபோது அங்கும் இது எதிரொளித்தது. அவர்கள் புலிகளின் விசுவாசிகள். அவரது தகப்பனார் கமங்களினூடாக புலிகளுக்கு பெருமளவில் உதவிக்கொண்டிருந்தார். எனவே தலைவர் அப்படி செய்யவில்லை என்றே அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் எனக்கு உண்மை தெரிந்திருந்ததால் நான் அவர்களிடம் சொன்னது. மதிவதனியை நீங்கள் கண்டதில்லை. அதனால் உங்களுக்கு தெரியாது. எனக்கு அவரது வடிவு தெரியும். தலைவர் மயங்கிவிட்டார். தலைவரும் மனிதர்தானே என்று. அவர்கள் அப்பொழுதும் நம்பவில்லை. எமது ஊரிலேயே மிகவும் வெள்ளையாகவும் அழகாகவும் எல்லாத்திறமையும் கொண்டவர்களில் ஒருவர் மதிவதனி. அந்தநேரத்தில் எனது தனிப்பட்ட கருத்து பிரபாகரனது போராட்ட வாழ்க்கைக்கு மதிவதனிதான் மிகவும் பொருத்தமானவர் என்பதே. அதை பின்னர் தெளிவாக உலகத்துக்கு செய்தும் காட்டினார். முள்ளிவாய்கால்வரை..........

அதேநேரம் அந:;தநேரத்தில் புலிகள்தான் எமது போராளிகள் என்றநிலை இருக்கவில்லை. எல்லோருமே வளச்சிப்பாதையில்தான் இருந்தார்கள். அதன் பின்னான புலிகளின் செயல்களே அவர்கள் எமது தேசிய விடுதலைப்போராட்ட இயக்கமாக வகுத்தெடுத்தது. இதில் தலைவர், அத்தனை தளபதிகள், போராளிகள், மக்களது செயலுடன் மதிவதனியின் பங்கும் இன்றியமையாதது

Edited by விசுகு

நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே?

ஆரம்பத்தில் பிராபா செய்த கொலைகளோ,கொள்ளைகளோ அல்லது திருமணமோ அவரை பயங்கரவாதியாக்கவில்லை.அபார வளர்சிபெற்றபின்னும் அதிலிருந்து மீளாதுதான் அவரின் அறியாமையும் முள்ளிவாய்க்கால் முடிவும்.

மதிவதனி வடிவான பொம்பிளியில்லாவிட்டால் போராட்டம் வேற மாதிரி போயிருக்குமோ அண்ணை? நல்லாத்தான் சப்பை கட்டுகட்டுகின்றீர்கள்.

பலருக்கு தெரியாத பலவிடயங்களை பதிந்ததற்கு நன்றி சாத்திரியாரே.மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நினைவில் உள்ளவற்றை பதியவும்.

எனது பால்ய நண்பரொருவர் இந்துக்கல்லூரி பழையமாணவர் .இவர் ஒரு பிராமணர்.(பெயர் எழுதவிரும்பவில்லை) இவரும் புலியில் முக்கிய பொறுப்பில் இருந்து கடத்திவரப்பட்ட பெண்ணொன்றைத்தான் மணம் செய்து இப்போ லண்டனில் இருப்பதாக அறிகிறேன்.உண்மையா?

அன்ரன்(சிவகுமார்) பற்றி ஏதும் தெரியுமா?இவரும் இந்துதான்(நிழலி தேனீர் கொடுத்தவர்)

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் போய் கண்டதையும் படிப்பதற்கு முன்

நாங்கள் எழுதற்கு பதில் எழுதமுன்

கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசியுங்கள்தலைவர் மயங்கியதற்கு வடிவு காரணம் எனவும் ஆனால் பல திறமைகள் கொண்டவர் மதிவதனி என்றும் விளக்கமாக எழுதியுள்ளேன்.

தலைவர் பிரபாகரன் திருமணம் செய்தது 27 வருத்திற்கு முன்பு.தமிழீழ மக்களுக்கு, அப்பொழுதே விடுதலைப் புலிகளினால் அதற்கான விளக்கமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டது . அதோடு அந்த அத்தியாயம் முடிவுற்றது. நீங்கள் இப்பவும் இதைப்பற்றி........... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் திருமணம் செய்தது 27 வருத்திற்கு முன்பு.தமிழீழ மக்களுக்கு, அப்பொழுதே விடுதலைப் புலிகளினால் அதற்கான விளக்கமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டது . அதோடு அந்த அத்தியாயம் முடிவுற்றது. நீங்கள் இப்பவும் இதைப்பற்றி........... :wub:

தலைவரது திருமணம்

அதேநேரம் அந:;தநேரத்தில் புலிகள்தான் எமது போராளிகள் என்றநிலை இருக்கவில்லை. எல்லோருமே வளச்சிப்பாதையில்தான் இருந்தார்கள். அதன் பின்னான புலிகளின் செயல்களே அவர்கள் எமது தேசிய விடுதலைப்போராட்ட இயக்கமாக வகுத்தெடுத்தது. இதில் தலைவர், அத்தனை தளபதிகள், போராளிகள், மக்களது செயலுடன் மதிவதனியின் பங்கும் இன்றியமையாதது

:(

1984ம் ஆண்டு ஜப்பசி மாதம் பிரபாகரனிற்கும் மதிக்குமான திருமணத்தினை போருர் கோயில் ஒன்றில் எளிமையாக கே.பி முன்நின்று நடத்திவைத்திருந்தார்.

தலைவர் பாவம் அவருக்கு ஒண்டும் தெரியாது கே.பி அந்த நேரமே இயக்கத்திலை பிளவை உருவாக்குவதற்கு திட்டமிட்டே மதிவதனியை தலைவரிற்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம்.இது தெரியாமல் தலைவரும் அந்த சதித்திட்டத்திற்கு பலியாயிட்டார். ஆனால் கே.பி நினைத்தபடி நல்லவேளையாக இயக்கம் பிளவுபடவில்லை

என்னமா யோசிக்கிறாங்கள் :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பதிவு எப்பொழுது சாத்திரி?. வாசிக்க ஆவலாக உள்ளேன்.

கந்தப்பு அடுத்ததாக 2009 ம் ஆண்டு புலம்பெயர் தேசங்களில் நடந்த ஆர்பாட்டங்களை பின்னணியாக வைத்து ஒரு கதையை எழுதவுள்ளேன்.அதுவும் உண்மை சம்பவங்களை தொகுத்ததாவேயிருக்கும்

கந்தப்பு அடுத்ததாக 2009 ம் ஆண்டு புலம்பெயர் தேசங்களில் நடந்த ஆர்பாட்டங்களை பின்னணியாக வைத்து ஒரு கதையை எழுதவுள்ளேன்.அதுவும் உண்மை சம்பவங்களை தொகுத்ததாவேயிருக்கும்

சாத்திரியாருக்கு ஏழரைச் சனி இடைக்கூறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு ஏழரைச் சனி இடைக்கூறு.

என்னுடைய குலதெய்வமே அதுதானே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு தெரியாத பலவிடயங்களை பதிந்ததற்கு நன்றி சாத்திரியாரே.மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நினைவில் உள்ளவற்றை பதியவும்.

எனது பால்ய நண்பரொருவர் இந்துக்கல்லூரி பழையமாணவர் .இவர் ஒரு பிராமணர்.(பெயர் எழுதவிரும்பவில்லை) இவரும் புலியில் முக்கிய பொறுப்பில் இருந்து கடத்திவரப்பட்ட பெண்ணொன்றைத்தான் மணம் செய்து இப்போ லண்டனில் இருப்பதாக அறிகிறேன்.உண்மையா?

அன்ரன்(சிவகுமார்) பற்றி ஏதும் தெரியுமா?இவரும் இந்துதான்(நிழலி தேனீர் கொடுத்தவர்)

லண்டனில் இருக்கும் ; பெண் என்னுடைய நல்லதொரு நண்பி. ஆனால் புலிகள் அமைப்பில் இருந்த ஆரம்ப காலத்து பெண்போராளிகளின் வெளிநாட்டு வாழ்கைகள்; நன்றாக அமைந்ததில்லை.பலருடைய குடும்பத்து வாழ்க்கைளும் சிக்கலானதாகவே அமைந்திருந்து. காரணம் அவர்களது புலிகள் அமைப்பின் வாழ்க்கை சுததந்திரத்தை தங்கள் சுய இருப்பை அவர்களது கணவர்கள் அடக்க முயற்சித்த விழைவுகளாய் இருந்தது. அதனால் விவாக ரத்து பெற்றவர்களாக இருந்தனர். அதன் காரணமாக நானும் சிக்கல்களை தவிர்கும்முகமக எவருடனும் தொடர்புகளை nவிளிநாடுகளில் தொடர்ந்ததில்லை. ஒரு சில குறிப்பிட்டவரகளைத் தவிர

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய குலதெய்வமே அதுதானே :lol:

அதுக்கேன் எங்களை பிடிச்சாட்டுறீங்க :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு ஏழரைச் சனி இடைக்கூறு.

கடைக்கூறாயிருக்காதோ ? :lol:

அதுக்கேன் எங்களை பிடிச்சாட்டுறீங்க :D:lol:

சனியெண்டா அப்பிடித்தானே உடையாத உடையார். :lol:

சாத்திரி வட்டக் கையெழுத்து வேட்டை ??????????????????

மதி(மதிவதனி) அனோஜா.ஜெயா. லலிதா என நான்கு பல்கலைக்கழக மாணவிகள் இலங்னையரசின் அடக்குமுறைகளிற்கெதிராக உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கின்றனனர்
.

இவர்கள் உண்ணாவிரதம் இருந்த உண்மையான காரணம் நீங்கள் சொன்னதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இவர்கள் உண்ணாவிரதம் இருந்த உண்மையான காரணம் நீங்கள் சொன்னதா?

இந்த நாலுபேரும் உண்ணாவிரதம் இருந்தது நான் சொன்ன காரணங்களிற்காகத்தான். அதற்கு பின்னர் விஜிதரன் என்கிற மாணவர் கடத்தப்பட்டது சமபந்தமாக. ஒரு உண்ணவிரதம் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அதில் 3 பெண்கள் 3 ஆண்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அதைத்தான் நீங்கள் கேக்கிறீங்கள் என நினைக்கிறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைக்கூறாயிருக்காதோ ? :lol:

சனியெண்டா அப்பிடித்தானே உடையாத உடையார். :lol:

சாத்திரி வட்டக் கையெழுத்து வேட்டை ??????????????????

அம்மணி அந்த விடயத்தை நான் எழுதவேணும் நாலுபேர் யாழிலை என்னைத்திட்டவேணும் அதை பாத்து உங்கடை மனசு டண்டணக்கா டணக்குடக்கா அடிக்கவேணும்.அதுதானே உங்கடை ஆசை .சரி அதையேன் நான் கெடுப்பான் எழுதிவிடுறன். பிரபாகரன் திருமணம் செய்து கொள்வதை இரண்டாம் கட்ட பொறுப்பாளர்கள் போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து எதிர்ப்பின் வேகத்தை குறைப்பதற்காக. எதிர்ப்பவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு தரும்படி பிரபாகன் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் கட்ட பொறுப்பாளர்கள் குழு அனைவரும் கையெழுத்து வைப்பதற்கு முடிவெடுத்திருந்தோம். ஆனால் அங்கேதான் ஒரு பெரிய சிக்கல். காரணம் அன்றைய காலத்தில் புளொட் அமைப்பின் தலைமைக்கெதிராக குரல் எழுப்பியவர்கள் டம்பண்ணப்பட்ட(கொல்லப்பட்ட)செய்திகள் வெளியாகியிருந்தது. அதே போல ஒரு திட்டத்தினை பிரபாகரனும் வைத்திருக்கலாம் அதனால்தான் கையெழுத்து கேட்கிறார் என நாம் நினைத்தோம்.

காரணம் எப்பொழுதும் எதிர்ப்பு காட்டுபவர்களில் தீவிரமானவர்களே உணர்ச்சிலசப்பட்டு முதலில் கையெழுத்து போடுவார்கள் இது சாதாரண உளவியல். அப்படி நாங்கள் கையெழுத்து போட்டு கொடுக்கும் பட்டியலில் முதலில் கையெழுத்து போட்ட ஒரு பத்து அல்லது இருபது பேரை தூக்கிவிட்டால்.(சிறை வைத்தல் அல்லது இரகசியமாக சுட்டுவிடல்) மற்றையவயவர்கள் தானாக அடங்கிடுவார்கள் . இப்படி ஏதும் திட்டம் இருக்கலாமென சந்தேகித்த நாங்கள் அதற்கு ஒரு வழியை கண்டு பிடித்தோம். அதுதான் வட்டக்கையெழுத்து. அதாவது பக்கங்கள் பதியப்படாத ஒரு கொப்பியை வாங்கி அதிலிருந்து ஒற்றைகளை (தாள்களை)கிழித்தெடுப்பது .கிழிக்கப்பட்ட ஓற்றைகளில் வட்டவாரி வைத்து வட்டங்களை போட்டு வட்டத்தைச்சுற்றி புள்ளிகளை இடுவது . பின்னர் இடப்பட்ட புள்ளிகளில் அனைவரும் கையெழுத்து போடுவது. இதுதான் எங்களது திட்டம். இப்படி செய்வதால் வட்டத்தை சுற்றி யார் முதலில் iயெழுத்திட்டனர் என்று கண்டு பிடிக்கமுடியாது. அதே வேளை பக்கங்கள் எழுதப்படாத பேப்பர் என்பதால் முதலாவது பேப்பரில் யார் கையெழுத்திட்டார்கள் என்பதும் தெரியாது.இதன்படியே நாங்கள் அனைவரும் வட்டம் போடப்பட்ட புள்ளிகளில் கையெழுத்து வைத்துவிட்டு அதனை பயிற்சி முகாம்களில் இருந்தவர்களும் பின்பற்றுமாறும் செய்தியினை அனுப்பியிருந்தோம். அதன்படியே அவர்களும் செய்து அனுப்பியிருந்னர். கையெழுத்துக்களை பார்த்த பிரபாகரன் என்ரை பெடியள் எல்லாருமே புத்திசாலியள் என்று சொல்லி சிரித்தாய் அருணா பின்னர் எங்களிடம் சொன்னார். ஆனால் நாங்கள் நினைத்ததுபோல் தூக்கிற திட்டம் எல்லாம் பிரபாகரனிடம் இருக்கவில்லை . அப்படி அவர் நினைத்திருந்தாலும் அவருடன் கூட இருந்தவர்களான பலசிங்கம் அண்ணர். பொன்னம்மான் .பேபி .கே.பி.அருணா. ராகவன் பேன்றோர் உடன்பட்டிருக்க மாட்டார்கள்.. ஆனால் புளொட் அமைப்பில் உமா நல்லவராக இருந்திருந்தாலும் அவரை சுற்றியிருந்தவர் சரியில்லாது போனதால் அந்த பெரும் இயக்கம் அழிந்து போனது. அதனை பெரும் இயக்கம் என்று நான் சொன்னதான் காரணம். புலிகள் இயக்கத்தில் 84ம் ஆண்டு வெறும் 700 பயிற்சி பெற்றவர்கள் ஆயுதங்களுடன் இருந்த பொழுது புளொட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று ஆயுதமின்றி இருந்தனர்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தில் 84ம் ஆண்டு வெறும் 700 பயிற்சி பெற்றவர்கள் ஆயுதங்களுடன் இருந்த பொழுது புளொட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று ஆயுதமின்றி இருந்தனர்.

ஆக.. மனித வளத்தை வீணாக்கிய கூட்டம் புளட் எண்டுறியள்..! :unsure:

புளொட்டில் 84 கடைசிகளில் 5000 பின் தளத்தில் பயிற்சி எடுத்தவர்களும் 2000 தளத்தில் பயிற்சி எடுத்தவர்களும் இருந்திருப்பார்கள்.உமாவின் இரண்டு முகங்களை பற்றி எழுதியே தீரவேண்டும் போலுள்ளது.

என்னால் பலவிடயங்களை எழுதமுடியாது.ஒன்று நான் நாட்டில் இருந்தவனல்ல,இரண்டாவது முகாம்களில் இருந்து பயிற்சி எடுத்தவனுமல்ல.மற்றவர்கள் சொன்னதைக்கேட்டு உண்மையெது பொய் எது எனதெரியாமல் அனுமானத்தில் எழுதவிரும்பவுமில்லை.

ஆனால் இன்றுவரை உண்மையில் என்ன நடந்தது என்றுமுடிந்தவரை எல்லா பக்கத்தவர்களிடமும் கேட்டும் வாசித்தும் வருகின்றேன்.இது எனது ஒரு ஆர்வக்கோளாறுக்காக மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.