Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்ணைப் பாலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z_page-12-Jaffna04.jpg

பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்

தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,

கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை

கடற்காற்றில் கலந்து,

பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப

பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில்

கடற்காற்று மீட்டிய சங்கீதம்

அந்த மாலை நேரத்துப்,

பறவைகளின் ஒலியோடு கலந்தது!

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,

களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்

கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை

அகல விரித்துத் தவம் செய்ய,

மேல் வானத்துச் சூரியன்

தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்

சங்கமிக்கத் தயாராகினான்!

பாலத்தின் அடித்தளத்து மதகுகளின்

மேலே குந்தியிருந்த மீனவர்களின்

மூங்கில் தடித் தூண்டில்களில்

தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன்

அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள்,

ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி

விளையாடிக்கொண்டிருந்தன!

உன் கரையோரக் கண்ணா மரங்களின்

ஆகாயம் பார்த்த வேர்களின் மீது

ஓடி விளையாடிய சிறு நண்டுகள்

பாடசாலை முடிந்து

வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல

நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும்

கோலக் கரை போன்ற உந்தன் கற்களில்

ஒளிந்து கொள்ள இடம் தேடின!

பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த

கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த

தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும்

மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி

கல்லில் நாருரித்த எங்களுக்கு

நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,

பொருளே இல்லாதவர்களுக்குப்

பொருளாதாரம் காட்டிய பாதை நீ!

நிரை நிரையாகக்

கரையோரங்களின் இருந்த

வெள்ளைக் கற்கள் மட்டுமே

வழி காட்டி விளக்குகளாகப்

பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி

ஊர் சேரும் வரை.

உயிரைக் கையில் பிடித்த படி

உன் மடியில் ஊர்ந்த நாட்கள்

இன்றும் நினைவுகளில்!

பள்ளிப் படிப்பற்றுத்

துள்ளித் திரிந்த தலைமுறைக்குக்

கல்லூரி காட்டிய உன்னால்,

மூடிக் கிடந்த எங்கள் கதவுகள்

அகலத் திறந்து, நாங்கள்

அகிலம் எல்லாம் பரந்து விட

நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய்,

எல்லோரையும் கரையேற்றி விட்ட

கற்குவியல் பாதையாய் இன்னும்!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

1990 களின் முற்பகுதியில் நாங்கள் பள்ளிச் சிறார்களாய் இருக்கும் போது விடுதலைப் புலிகளால் நல்லூரில் நடத்தப்பட்ட ஒரு கண்காட்சியில் இந்தப் பாலம் சார்ந்த கடற்பகுதியை உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்ற வகையில் எப்படி வடிவமைப்பது அழகுபடுத்துவது என்று அற்புதமான திட்டம் ஒன்றை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் எமக்கு காட்டியது.

அதுமட்டுமன்றி யாழ் நகரப் பகுதியையும் அழகு படுத்துவது பற்றிய நல்ல திட்டங்கள் இருந்தன. யாழ் நகர மத்தியில் இருக்கும் பஸ் தரிப்பு நிலையம் வைத்தியசாலை போன்றவற்றிற்கு பேரிடஞ்சலாக இருப்பதால் அதனை வேற்றிடத்திற்கு மாற்றி பஸ்கள் போகும் பாதை ஒன்றை பயணிகளை ஏற்றி இறக்கும் இடம் ஒன்றை மட்டும் அமைப்பது.. இப்படி பல திட்டங்கள் இருந்தன. ஆரிய குளத்தை மேம்படுத்துவது அதனை அண்டிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற வகையில் கொண்டு வருவது இப்படிப் பல.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகி சிங்களமும்.. தமிழ் கூலிக் கும்பல்களும்.. தங்களின் பண வேட்டைக்காக.. அநாவசிய திட்டங்களை தொலைநோக்கற்ற திட்டங்களை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் யாழ் நகர முதல்வர் ஒரு அடிப்படை திட்ட அறிவின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதை விட மோசமாக அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாரன் இராணுவக் கைக்கூலி போல செயற்படுகிறார்.

நல்லூரை மையப்படுத்தி ஆன்மீக உல்லாசப் பயணத்துறை சார்ந்து விடுதலைப்புலிகள் திட்டங்களை தீட்டி இருந்ததோடு.. அதை துணை நகராக மாற்றவும் திட்டங்கள் இருந்தன.

புலம்பெயர் மக்கள்.. நாடு கடந்த தமிழீழ அரசு.. எமது தேச பொருண்மிய உட்கட்டுமானங்கள் தொடர்பில் ஒரு திட்டத்தை வரைந்து கொடுக்க வேண்டும். அதில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.. சார்ந்தவர்களும் தமது உருவாக்கங்களை உள்ளடக்க வேண்டும். அதைவிட..

என்னுடைய ஆசை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினர்.. உட்பட அதில் சம்பந்தப்பட்டவர்கள்.. எமது தேசத்தின் வளர்ச்சியை நோக்கில் கொண்டு இன்றைய சூழலில்.. தேர்தல்கள் மூலம்.. நகர சபைகளை.. மாநகரசபைகளை.. உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி அங்கு தொலைநோக்குள்ள நல்ல மக்கள் திட்டங்களை செய்ய முன் வர வேண்டும். கடந்த கால போராட்ட தோல்வியை இட்டு நொந்து கொண்டிராமல்.. எமக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும். எமது விடிவு வரும் வரை நாம் முன்னேறாமல் இருக்க முடியாது. மேலும்.. எமது தேசத்தை நாம் விரும்பும் வடிவில் கட்டி எழுப்ப வேண்டும்.

சிங்களவர்களும் இந்தியர்களும் சீனர்களும்.. எமது நிலத்தை ஆக்கிரமிப்பது மட்டுமல்ல.. தொலைநோக்கற்ற திட்டங்களால்.. தமது வருவாய் கருதிய திட்டங்களால் எமது தேசத்தை நாசமாக்கவும் செய்கின்றனர். குறிப்பாக தாயகத்தில் உள்ள தமிழ் தேசிய விடுதலை முன்னணி.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள்.. மற்றும் யாழ் பல்கலைக்கழகம்.. கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவை வடக்கு கிழக்கு வித்தியாசமின்றி.. வட- தென் தமிழீழப் பகுதிகளை பொருண்மிய ரீதியில் கட்டி எழுப்ப பாட பட வேண்டும்.

செய்வார்களா.. அல்லது கருணாவும்.. பிள்ளையானும்.. டக்கிளசும்.. சிங்கள ஆட்சியாளர்களும்.. கூலிகளும்.. சிங்கள சிப்பாய்களும்.. எமது தேசத்தை சுரண்ட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா..??!

எமது தேச அபிவிருத்தியில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் கண்காணிப்பையும் உறுதிப்படுத்துவது.. சுரண்டல்களை.. தடுத்து எமது போராட்டத்தின் உண்மை நோக்கத்தை அவர்கள் அறியவும்.. வியக்கவும் வழிவகுக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி புங்கையூரான். தீவக வாழ்வு நினைவூட்டி செல்கிறது அந்த வாழ்வை எண்ணி பெருமூச்சு மட்டும் தான் எழுகிறது. கற்குவியலாய் இருப்பது எங்கள் பண்ணைப் பாலம் மட்டுமல்ல தீவக மக்களின் வாழ்வும் தான். வாழ்வு கட்டியெழுப்ப படுவது எப்போது ?

  • கருத்துக்கள உறவுகள்

z_page-12-Jaffna04.jpg

------

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,

களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்

கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை

அகல விரித்துத் தவம் செய்ய,

மேல் வானத்துச் சூரியன்

தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்

சங்கமிக்கத் தயாராகினான்!

------

11337126.jpg

பண்ணைப் பாலம் என் வாழ்வில் எத்தனையோ மகிழ்ச்சிகளைத் தந்தது. புங்கையூரான்.

நண்பர்களுடன் விளையாட்டாக, அம்மாவின் சேஃப்டிப் பின்னை வளைத்து, அதில் மண்புழுவை கொழுவி தூண்டில் போட்டு மீன் பிடிக்கப் போவது, பண்ணைப்பாலத்தில் சைக்கிள் ஓடுவது திரில்லாக இருக்கும். பக்க கடல்காற்றும், வரும் வாகனங்களின் வேகத்துக்கு சைக்கிளை லாவகமாக ஓட வேண்டும். அப்படி இருந்தும் மண்டைதீவு வரை சென்று, ஈச்சம்குலை வெட்டிவருவோம். மாலையில் உறவினருடன் சூரியனின் சிவப்பு கதிர்களை பார்ப்பதற்காக சென்று, நேரம் போனதே... தெரியாமல் ஒன்பது, பத்து மணிவரை இருந்து விட்டு வீடு திரும்புவோம்.

அப்போது... இருந்த பாலத்தையும், இப்போது கரை முழுவதும் முள்ளுக்கம்பி கட்டி இருக்கும் பாலத்தையும் பார்க்க..... விசர் பிடிக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமன்றி யாழ் நகரப் பகுதியையும் அழகு படுத்துவது பற்றிய நல்ல திட்டங்கள் இருந்தன. யாழ் நகர மத்தியில் இருக்கும் பஸ் தரிப்பு நிலையம் வைத்தியசாலை போன்றவற்றிற்கு பேரிடஞ்சலாக இருப்பதால் அதனை வேற்றிடத்திற்கு மாற்றி பஸ்கள் போகும் பாதை ஒன்றை பயணிகளை ஏற்றி இறக்கும் இடம் ஒன்றை மட்டும் அமைப்பது.. இப்படி பல திட்டங்கள் இருந்தன. ஆரிய குளத்தை மேம்படுத்துவது அதனை அண்டிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற வகையில் கொண்டு வருவது இப்படிப் பல.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகி சிங்களமும்.. தமிழ் கூலிக் கும்பல்களும்.. தங்களின் பண வேட்டைக்காக.. அநாவசிய திட்டங்களை தொலைநோக்கற்ற திட்டங்களை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் யாழ் நகர முதல்வர் ஒரு அடிப்படை திட்ட அறிவின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதை விட மோசமாக அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாரன் இராணுவக் கைக்கூலி போல செயற்படுகிறார்.

நல்லூரை மையப்படுத்தி ஆன்மீக உல்லாசப் பயணத்துறை சார்ந்து விடுதலைப்புலிகள் திட்டங்களை தீட்டி இருந்ததோடு.. அதை துணை நகராக மாற்றவும் திட்டங்கள் இருந்தன.

எமது தேச அபிவிருத்தியில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் கண்காணிப்பையும் உறுதிப்படுத்துவது.. சுரண்டல்களை.. தடுத்து எமது போராட்டத்தின் உண்மை நோக்கத்தை அவர்கள் அறியவும்.. வியக்கவும் வழிவகுக்கும்..!

உண்மையான, ஆழமான கருத்து, நெடுக்ஸ்!

இந்தக் கடல்களில் சும்மா கிடைக்கும், அவலோனி( Avaloni ) , எனப் படும் ஒரு வகையான நத்தைகளின் விலை ஒரு கிலோவிற்கு அவுஸ்திரேலிய டாலர்கள் $550 மற்றும் கடலட்டைகள் .(Beach de mer ) , சிங்கறால்( Lobster ), கணவாய் (Calamari ) போன்றவை உலகச் சந்தையில் மிகவும் விலை கூடியவை. நெடுந்தீவு போன்ற கடற்கழிகளில் வளரும் றால்கள் எந்த வித விசேட உதவியும் இல்லாமலேயே ஆறு அங்குலங்களுக்கு மேல் வளர்வதை அவதானித்திருக்கின்றேன்!

நீங்கள் கூறியபடி அபிவிருத்திப் பணிகள் ஒரு திட்டமிட்ட முறையிலேயே செயற்படுத்தப்பட வேண்டும்! எங்களுக்கு விளங்குகின்றது!

சர்வ தேசங்களின் கண்காணிப்பும், எமது மக்களின் கல்வி மேம்பாடும் மட்டுமே தற்போதைய நிலையில் எங்கள் தேவையாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பண்ணைப்பாலம் என்பது ஈழத்து இலக்கியர்களின் விருப்பிற்குரியதான ஒன்றாக அறிகிறேன். இன்றுவரை அதனை கண்ணுற்றதில்லை ஆனால் எனது எழுத்துலக நண்பர்களால் அலாதியாகப் பேசப்படும் ஒரு இடமாக கண்ணுற்றுள்ளேன். கற்பனைக்கண்களால் அந்த இடத்தின் அழகை எட்டிப்பார்ப்பதும் ஒரு சுகம்தான் காணாத காதல்போல் உங்கள் பதிவுகள் மென்மேலும் அவாவுற வைக்கிறது புங்கையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி புங்கையூரான். தீவக வாழ்வு நினைவூட்டி செல்கிறது அந்த வாழ்வை எண்ணி பெருமூச்சு மட்டும் தான் எழுகிறது. கற்குவியலாய் இருப்பது எங்கள் பண்ணைப் பாலம் மட்டுமல்ல தீவக மக்களின் வாழ்வும் தான். வாழ்வு கட்டியெழுப்ப படுவது எப்போது ?

நன்றிகள், நிலாமதி அக்கா!

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, மண்வெட்டியைத் தோளில் அவர்கள் சுமந்து செல்லும் காட்சியை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்!

அவர்கள் முகங்களின் உள்ள மகிழ்ச்சியும், கல கலப்பான சிரிப்புக்களும், வாழுகின்ற வாழ்வின் திருப்தியும், பலவந்தமாக அவர்களிடம் இருந்து பறிக்கப் பட்டு விட்டன!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11337126.jpg

பண்ணைப் பாலம் என் வாழ்வில் எத்தனையோ மகிழ்ச்சிகளைத் தந்தது. புங்கையூரான்.

நண்பர்களுடன் விளையாட்டாக, அம்மாவின் சேஃப்டிப் பின்னை வளைத்து, அதில் மண்புழுவை கொழுவி தூண்டில் போட்டு மீன் பிடிக்கப் போவது, பண்ணைப்பாலத்தில் சைக்கிள் ஓடுவது திரில்லாக இருக்கும். பக்க கடல்காற்றும், வரும் வாகனங்களின் வேகத்துக்கு சைக்கிளை லாவகமாக ஓட வேண்டும். அப்படி இருந்தும் மண்டைதீவு வரை சென்று, ஈச்சம்குலை வெட்டிவருவோம். மாலையில் உறவினருடன் சூரியனின் சிவப்பு கதிர்களை பார்ப்பதற்காக சென்று, நேரம் போனதே... தெரியாமல் ஒன்பது, பத்து மணிவரை இருந்து விட்டு வீடு திரும்புவோம்.

அப்போது... இருந்த பாலத்தையும், இப்போது கரை முழுவதும் முள்ளுக்கம்பி கட்டி இருக்கும் பாலத்தையும் பார்க்க..... விசர் பிடிக்குது.

தமிழ் சிறி,

இந்தக் கவிதையின் 'உட்கருவே' (CORE ), நீங்கள் கூறுவது தான்.

நீங்கள் இணைத்த படத்தையே முதலில் இணைக்க எண்ணினேன்.

ஆனால், சீரழிக்கப் பட்ட ஒரு பெண்ணின் முகத்தையே அது திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகின்றது!

அதனால் நிஜத்தில் வாழாமல், நினைவில் வாழ முடிவெடுத்துப் பாலத்தின் பழைய படமொன்றை இணைத்தேன்!

உங்கள் கருத்துக்கு நன்றிகள்!!!

சிறு வயதில் அம்மா பிறந்த ஊரான புங்குடுதீவுக்கு இப்பாலத்தால் போயிறுக்கிறன். மற்றப்படி நயினாதீவு போகும் போது போயிருக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பண்ணைப்பாலம் என்பது ஈழத்து இலக்கியர்களின் விருப்பிற்குரியதான ஒன்றாக அறிகிறேன். இன்றுவரை அதனை கண்ணுற்றதில்லை ஆனால் எனது எழுத்துலக நண்பர்களால் அலாதியாகப் பேசப்படும் ஒரு இடமாக கண்ணுற்றுள்ளேன். கற்பனைக்கண்களால் அந்த இடத்தின் அழகை எட்டிப்பார்ப்பதும் ஒரு சுகம்தான் காணாத காதல்போல் உங்கள் பதிவுகள் மென்மேலும் அவாவுற வைக்கிறது புங்கையூரான்

கருத்துக்கு நன்றிகள் சகோதரி!

இதயத்தின் மெல்லிய அதிர்வுகளைக் கூட, வரிகளில் வடிக்கும் திறமை கொண்டவர் நீங்கள்!

உங்கள் கடைசிக் கவிதையில் (பிறந்ததற்காய்.... வாழச் சபிக்கப் பட்டிருக்கின்றது!) உங்கள் ஆதங்கம் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

இந்தக் கவிதையின் 'உட்கருவே' (CORE ), நீங்கள் கூறுவது தான்.

நீங்கள் இணைத்த படத்தையே முதலில் இணைக்க எண்ணினேன்.

ஆனால், சீரழிக்கப் பட்ட ஒரு பெண்ணின் முகத்தையே அது திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகின்றது!

அதனால் நிஜத்தில் வாழாமல், நினைவில் வாழ முடிவெடுத்துப் பாலத்தின் பழைய படமொன்றை இணைத்தேன்!

உங்கள் கருத்துக்கு நன்றிகள்!!!

புங்கையூரான்,

நீங்கள் இந்தக் கவிதையை எழுதியதின் பின் மனதில் அந்தப் பாலமே.....

திரும்பத் திரும்ப...மனதில் ஞாபகமாக பழைய நினைவுகளை அசைபோட்ட படி உள்ளது.

அந்தப் பாலத்தில் தான்.... போராளியான இன்பன் என்பவரை, ஸ்ரீலங்கா இராணுவம் கொலை செய்து போட்டதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரை மையப்படுத்தி ஆன்மீக உல்லாசப் பயணத்துறை சார்ந்து விடுதலைப்புலிகள் திட்டங்களை தீட்டி இருந்ததோடு.. அதை துணை நகராக மாற்றவும் திட்டங்கள் இருந்தன.

புலம்பெயர் மக்கள்.. நாடு கடந்த தமிழீழ அரசு.. எமது தேச பொருண்மிய உட்கட்டுமானங்கள் தொடர்பில் ஒரு திட்டத்தை வரைந்து கொடுக்க வேண்டும். அதில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.. சார்ந்தவர்களும் தமது உருவாக்கங்களை உள்ளடக்க வேண்டும். அதைவிட..

என்னுடைய ஆசை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினர்.. உட்பட அதில் சம்பந்தப்பட்டவர்கள்.. எமது தேசத்தின் வளர்ச்சியை நோக்கில் கொண்டு இன்றைய சூழலில்.. தேர்தல்கள் மூலம்.. நகர சபைகளை.. மாநகரசபைகளை.. உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி அங்கு தொலைநோக்குள்ள நல்ல மக்கள் திட்டங்களை செய்ய முன் வர வேண்டும். கடந்த கால போராட்ட தோல்வியை இட்டு நொந்து கொண்டிராமல்.. எமக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும். எமது விடிவு வரும் வரை நாம் முன்னேறாமல் இருக்க முடியாது. மேலும்.. எமது தேசத்தை நாம் விரும்பும் வடிவில் கட்டி எழுப்ப வேண்டும்.

சிங்களவர்களும் இந்தியர்களும் சீனர்களும்.. எமது நிலத்தை ஆக்கிரமிப்பது மட்டுமல்ல.. தொலைநோக்கற்ற திட்டங்களால்.. தமது வருவாய் கருதிய திட்டங்களால் எமது தேசத்தை நாசமாக்கவும் செய்கின்றனர். குறிப்பாக தாயகத்தில் உள்ள தமிழ் தேசிய விடுதலை முன்னணி.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள்.. மற்றும் யாழ் பல்கலைக்கழகம்.. கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவை வடக்கு கிழக்கு வித்தியாசமின்றி.. வட- தென் தமிழீழப் பகுதிகளை பொருண்மிய ரீதியில் கட்டி எழுப்ப பாட பட வேண்டும்.

செய்வார்களா.. அல்லது கருணாவும்.. பிள்ளையானும்.. டக்கிளசும்.. சிங்கள ஆட்சியாளர்களும்.. கூலிகளும்.. சிங்கள சிப்பாய்களும்.. எமது தேசத்தை சுரண்ட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா..??!

எமது தேச அபிவிருத்தியில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் கண்காணிப்பையும் உறுதிப்படுத்துவது.. சுரண்டல்களை.. தடுத்து எமது போராட்டத்தின் உண்மை நோக்கத்தை அவர்கள் அறியவும்.. வியக்கவும் வழிவகுக்கும்..!

நன்றி நெடுக்ஸ்

பழைய நினைவுகளுக்கு என்னை அழைத்துச்சென்றதற்கு.

பிரான்சில் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் (TEEDOR) ஒரு முக்கிய பதவியில் இருந்தவன் என்றவகையில் ............

பசு வளர்ப்பு, கோழிவளர்ப்பு, இறால் வளர்ப்பு, நெல் செய்கை, முந்திரிச்செய்கை, வேறு பலமுதலீடுகள்... என எத்தனை மாநாடுகள், பிரான்சில் நடந்த எத்தனை கண்காட்சிகள் என அவ்வளவையும் அள்ளி அனுப்பினோம். நீங்கள் எழுதியதுபோல் இன்றும் எதுவும் தடைப்பட்டுவிடவில்லை. செயற்படத்தான் எவருமில்லை. ஆனால் விட்டுவிடமுடியுமா..???

அம்மா பிறந்த ஊரான புங்குடுதீவுக்கு இப்பாலத்தால் போயிறுக்கிறன். மற்றப்படி நயினாதீவு போகும் போது போயிருக்கிறன்.

நன்றி தகவலுக்கு :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
karayinager+road.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சிறி

தயவுசெய்து இந்த படங்களை இணைப்பதை நிறுத்துங்கள். தாங்கமுடியவில்லை. அந்த நாள் ஞாபகங்களை ....................??? :(:(:(

விசுகு, உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் இந்தத்தலைப்பில் பண்ணைப் பாலத்தின் படங்களை இணைக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரைக்கும் நான் பண்ணைப்பாலப்பக்கம் போனதேயில்லை :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லைப்பிட்டிக்கு போறது இந்த பண்ணை பாலத்தை தாண்டியா????

எங்களுடன் படித்த அனுமான்(சொந்தபெயர் ஞாபகம் இல்லை)கந்தர்மடத்தைசேர்ந்தவர் நண்பர்களுடன் வகுப்பு கட் பண்ணிக்கொண்டுபோய் பண்ணைபாலத்திற்கிடையில் குளிக்கும் போது மரணமடைந்தார்.

துரையப்பா கொலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இன்பம்,செல்வம் இருவரையும் கொலை செய்து போட்ட இடமும் இதுதான்.

எனது ஊர் நண்பரொருவர் மண்டைதீவிற்கு வேலைக்கு போய்வரும் போது சூரியன் மறைவதை படம் எடுக்க வெள்ளைகாரன் நிறுத்திவைத்திருந்த கமாராவை ஒருவரையும் பக்கத்தில் காணவில்லை என்று தூக்கி சைக்கிலில் கொண்டுவந்தார்.திரும்பி வந்த வெள்ளைக்காரன் கமராவைக்காணாமல் பொலிசுக்கு அறிவிக்க பண்ணை பாலத்தில் ஜீப்பிற்கு மேல் குந்தியிருந்த இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை" கமரா கள்ளரே வருக வருக" என கூட்டிக்கொண்டுப் போய் 2 நாட்கள் வாங்கு வாங்கென வாங்கி நண்பர் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

பண்ணைப்பாலத்தில் இருந்து சூரியன் மறைவதைப் பார்ப்பது தனி அழகு.டைனமட் வைத்து மீன் பிடிப்பவர்களால் தண்ணீரில் மீன்கள் பல செத்து மிதக்கும் அவலமும் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் அம்மா பிறந்த ஊரான புங்குடுதீவுக்கு இப்பாலத்தால் போயிறுக்கிறன். மற்றப்படி நயினாதீவு போகும் போது போயிருக்கிறன்.

எனது அம்மாவும் புங்குடுதீவு தான் செவ்வந்தி!

நெருங்கி விட்டோம் :D :D :D !

எங்களுடன் படித்த அனுமான்(சொந்தபெயர் ஞாபகம் இல்லை)கந்தர்மடத்தைசேர்ந்தவர் நண்பர்களுடன் வகுப்பு கட் பண்ணிக்கொண்டுபோய் பண்ணைபாலத்திற்கிடையில் குளிக்கும் போது மரணமடைந்தார்.

அர்ஜுன், நீங்களும் நெருங்கி விட்டீர்கள்!

அனுமான் தண்ணீரில் அடி பட்டுக் கொண்டு போய்ச் செத்த போது நானும் யாழ் இந்துவில் படித்துக் கொண்டிருந்தேன்!!!

அல்லைப்பிட்டிக்கு போறது இந்த பண்ணை பாலத்தை தாண்டியா????

ஆமாம், ஜீவா, யாழ்ப்பாணக் கோட்டைக்கும், அல்லைப் பிட்டிக்கும் இடைப் பட்ட பாலம்!

பிரான்சில் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் (TEEDOR) ஒரு முக்கிய பதவியில் இருந்தவன் என்றவகையில் ............

பசு வளர்ப்பு, கோழிவளர்ப்பு, இறால் வளர்ப்பு, நெல் செய்கை, முந்திரிச்செய்கை, வேறு பலமுதலீடுகள்... என எத்தனை மாநாடுகள், பிரான்சில் நடந்த எத்தனை கண்காட்சிகள் என அவ்வளவையும் அள்ளி அனுப்பினோம். நீங்கள் எழுதியதுபோல் இன்றும் எதுவும் தடைப்பட்டுவிடவில்லை. செயற்படத்தான் எவருமில்லை. ஆனால் விட்டுவிடமுடியுமா..???

விசுகு அண்ணா! உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன்!

வீழ்வது, மீண்டும் எழுவதற்காகவே!!!

உண்மை எவ்வளவு கொடியதாயினும், அது தான் இன்றைய நிலவரம்!!!

நீங்கள் இந்தக் கவிதையை எழுதியதின் பின் மனதில் அந்தப் பாலமே.....

திரும்பத் திரும்ப...மனதில் ஞாபகமாக பழைய நினைவுகளை அசைபோட்ட படி உள்ளது.

தமிழ் சிறி, நான் நீண்ட நாட்களாகத் தேடிய படம், நன்றிகள்!

இதை எனது வலைத் தளத்தில் இணைக்கலாமா?

இதுவரைக்கும் நான் பண்ணைப்பாலப்பக்கம் போனதேயில்லை

குமாரசாமியண்ணை, வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை வீணடித்து விட்டீர்களே?

யாழ் நகரின், அதி சிறந்த கள்ளே, இந்தப் பாலம் தாண்டித் தானே! :(:rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

----

தமிழ் சிறி, நான் நீண்ட நாட்களாகத் தேடிய படம், நன்றிகள்!

இதை எனது வலைத் தளத்தில் இணைக்கலாமா?

இந்தப் படத்தை கூகிளில் தான் எடுத்தேன்.

தாராளமாக உங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள் புங்கையூரான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை கூகிளில் தான் எடுத்தேன்.

தாராளமாக உங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள் புங்கையூரான்.

நன்றிகள்! தமிழ் சிறி!!!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், நீங்களும் நெருங்கி விட்டீர்கள்!

அனுமான் தண்ணீரில் அடி பட்டுக் கொண்டு போய்ச் செத்த போது நானும் யாழ் இந்துவில் படித்துக் கொண்டிருந்தேன்!!!

புங்கையூரான்,

இவ்வளவு நெருங்கி வந்திட்டீங்கள்.. :unsure: இன்னும் அர்ஜுன் அண்ணாவைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? :(

வடை போச்சே..

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பண்ணை பாலம் பற்றி மறக்க முடியாத ஒரு நினைவு என்னோடும் உள்ளது............. அதை இங்கே பகிர முடியாது! அந்தளவு துணிவு என்னோடு இல்லை

நான் மறந்தாலும் அதை அந்த பாலம் மறவாது என்ற எண்ணுகிறேன்.......

இரு நாட்கள் அந்த பாலத்தின் கீழே வாழ்ந்திருக்கிறேன்................ ஒரே ஒரு லெபன்பவ் பிஸ்கேட் பாக்கேற் நண்பணிடம் இருந்தது .............. இருந்தும் தண்ணீர் தாகத்தினால் அதையும் உண்ண முடியவில்லை மறுநாள் கண்ணை மூடிகொண்டு உப்பு நீரை அள்ளி குடிக்க தொடங்கிவிட்டேன் நண்பன் வாந்தி கரணமாக குடிக்கவில்லை.

1990 ம் ஆண்டு..............

யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற எத்தணிப்பை புலிகளுக்கு ஏற்படுத்த அந்த சம்பவமும் ஒரு கரணமாக இருந்திருந்தது. .........

Edited by நிழலி
சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

இவ்வளவு நெருங்கி வந்திட்டீங்கள்.. :unsure: இன்னும் அர்ஜுன் அண்ணாவைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? :(

வடை போச்சே..

:lol:

நெருங்குகின்றேன்!

ஆகக் கிட்ட நெருங்கும் உத்தேசம் இல்லை! கண்டு பிடித்து விட்டால், மறைந்திருந்தே பார்க்கும் மர்மம், இல்லாமல் போய்விடும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பண்ணை பாலம் பற்றி மறக்க முடியாத ஒரு நினைவு என்னோடும் உள்ளது............. அதை இங்கே பகிர முடியாது! அந்தளவு துணிவு என்னோடு இல்லை

நான் மறந்தாலும் அதை அந்த பாலம் மறவாது என்ற எண்ணுகிறேன்.......

இரு நாட்கள் அந்த பாலத்தின் கீழே வாழ்ந்திருக்கிறேன்................ ஒரே ஒரு லெபன்பவ் பிஸ்கேட் பாக்கேற் நண்பணிடம் இருந்தது .............. இருந்தும் தண்ணீர் தாகத்தினால் அதையும் உண்ண முடியவில்லை மறுநாள் கண்ணை மூடிகொண்டு உப்பு நீரை அள்ளி குடிக்க தொடங்கிவிட்டேன் நண்பன் வாந்தி கரணமாக குடிக்கவில்லை.

1990 ம் ஆண்டு..............

யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற எத்தணிப்பை புலிகளுக்கு ஏற்படுத்த அந்த சம்பவமும் ஒரு கரணமாக இருந்திருந்தது. .........

பதியுதீன் மகுமூத்தை உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன்!

இவர் தான் எங்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடக்கி வைத்தவர்!

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் மருதங்கேணி!!!

Edited by நிழலி
நீக்கப்பட்ட வரிகளும் Quote பண்ணப்பட்ட பகுதியில் இருந்ததால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.