Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPL சீயர்ஸ் கேர்ள்ஸையும் விட்டு வைக்கிறாங்கில்லையப்பா..??! என்ன கொடுமை இது..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

155-ipl-cheerleaders-0.jpg

வீரர்களின் ரகசியங்களை வெளியிட்ட ஐ.பி.எல். நடன அழகி நீக்கம்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது.

போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங்கி தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர் போன்ற விஷயங்களையும் அவர் இணையதளம் மூலம் தனது நட்பு வட்டாரத்தில் பரவவிட்டது

ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு தெரியவரதே, அவர் கழற்றி விடப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஒருவர், நடன அழகிகளுக்கு பறக்கும் முத்தமிட்டதுடன், உங்களை கட்டித்தழுவ ஆசையாக இருக்கிறது. எனது அறைக்கு வாருங்கள் என்று அழைத்ததாக கேப்ரியலா ஒரு தகவலில் கூறியுள்ளார்.

அதே சமயம் சில இந்திய வீரர்களை அவர் பாராட்டியுள்ளார். டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் அமைதியாகவும், இது போன்ற விஷயங்களில் விலகி இருப்பார்கள் என்றும், தெண்டுல்கர் இவற்றில் கலந்து கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

வேலை போனது குறித்து கேப்ரியலா கூறும் போது, `நான் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. எந்த குறிப்பிட்ட வீரரின் பெயரையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை. பொதுவாகவே எழுதினேன். இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் எனது வருமானம் பறிபோயிருக்கிறது' என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53567

அவங்களும் பாவமடாப்பா.

புலனை ஒருமுகப்படுத்தி வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த சியர்ஸ் கேர்ள்சின் கொங்குனி ஆட்டம் தேவைதானா?

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களும் பாவமடாப்பா.

புலனை ஒருமுகப்படுத்தி வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த சியர்ஸ் கேர்ள்சின் கொங்குனி ஆட்டம் தேவைதானா?

கோடிக்கணக்கான காசுக்கு விளையாடும் வீரர்கள், விளையாட்டிலை கவனம் செலுத்துறதை விட்டுட்டு...... சியர்ஸ் கேர்ள்சை ஏன் பாக்க வேணும்?

மைதானாத்தில் உள்ள எம்மைப்போன்ற ரசிகர்களை,44969smiley__cheer_girl__373_blue.gifgirl_cheer.gif44969smiley__cheer_girl__374__green.gif . குஷிப்படுத்த வந்த சியர்ஸ் கேள்சில், வீரர்கள் பங்கு போடுவது நல்லாயில்லை, தப்பிலி

நான் சியர்ஸ் கேர்ள்ஸை கண்டிக்கவில்லை. அவர்கள் வீரர்கள் கண்களுக்கும் விருந்தாவதைத்தான் கண்டிக்கிறேன்.

நான் சியர் கேர்ள்ஸின் ஆட்டத்தைக் கண்டிக்கவில்லை. அந்த அணங்குகளின் ஆட்டம் ரசிகர்களுக்கு அண்மையாக இல்லை என்பதைத்தான் கண்டிக்கிறேன். :(

மற்றும்படி சியர்ஸ் கேர்ல்சிற்காகவே விளையாட்டுப் பார்ப்பவன் என்ற முறையில் உங்கள் ஆதங்கம் புரிகிறது. :D

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12-gabriella-pasqualotto300.jpg

IPL வீரர்கள் ஜொள்ளுவிட்ட சீயர்ஸ் கேர்ள் இவர் தான்.

----------------------------------------------------------------

ஜொள்ளு விட்ட கிரிக்கெட் வீரர்கள் குறித்து பிளாக்கில் எழுதிய சியர் லீடர் நீக்கம்

டெல்லி: தன்னிடமும், பிற சியர்லீடர் அழகிகளிடமும் ஜொள்ளு விட்டு, முத்தமிட, கட்டியணைக்க முயன்ற ஐபிஎல் வீரர்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல், பிளாக்கில் எழுதிய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சியர்லீடர் அழகியை ஐபிஎல் நிர்வாகம் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டது.

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை விட ஒவ்வொரு அணியின் சியர்லீடர் அழகிகள் தான் அனைவரையும் கவருகிறார்கள். இப்படி சியர்லீடர்களாக செயல்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகுப் பெண்கள் ஐபிஎல் சியர்லீடர் குழுக்களில் இணைந்து செயல்படுகின்றனர்.

இவர்களிடம் வீரர்கள் ஜொள்ளு விட்டது குறித்து பிளாக்கில் எழுதப் போய் சிக்கலில் மாட்டி, வேலையை இழந்து நாடு திரும்பிள்ளார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப்ரியலா பாஸ்குவாலோட்டோ.

இவர் ஆஸ்திரேலிய வீரர்களின் சேஷ்டைகள் குறித்து பிளாக்கில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார். மேலும் தன்னிடமும், பிற அழகிகளிடமும் ஜொள்ளு விட்டவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் புகார் கூறவே, தற்போது கேப்ரியலா நீக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து கேப்ரியலா தனது பிளாக்கில் கூறுகையில், ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இரவில் பார்ட்டி நடப்பதுண்டு. .அப்போது கிரிக்கெட் வீரரர்கள், எங்களிடம் வழிந்து வழிந்து பேசுவார்கள்.

தென் ஆப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் தனது காதலி அருகில் இல்லாவிட்டால் மற்றவர்களிடம் வழிவார். ஆஸ்திரேலியர்கள்தான் மிகவும் சேஷ்டை பிடித்தவர்கள். குறிப்பாக ஐடன் பிளிஸ்ஸார்ட், டேன் கிறிஸ்டியன் ஆகியோரைச் சொல்லலாம்.

ஒரு முறை போட்டி முடிந்ததும் ஒரு வீரர் எங்களை அணுகி உங்களையெல்லாம் முத்தமிட விரும்புகிறேன். அவர்களில் குறிப்பாக 3 பேரிடம் மட்டும் அவர் அதிகமாகவே ஜொள்ளு விட்டார். இத்தனைக்கும் அந்த வீரருக்கு அவரது ஊரில் அழகான கேர்ள் பிரண்ட் இருக்கிறார். இருந்தாலும் எங்கள் அத்தனை பேர் மீதும் அவர் வெறியாக இருந்தார்.

என்னைப் பார்த்து என்னுடன் வா, பேசலாம் என்று கூட கேட்டார். நான் போகவில்லை.

இந்திய வீரர்கள் அப்படி இல்லை. சில வீரர்கள் மிக நன்றாகப் பழகுகிறார்கள். கேப்டன் டோணி, ஹோரித் சர்மா ஆகியோர் அமைதியானவர்கள். சச்சின் டெண்டுல்கர் இதுபோன்ற இடங்களுக்கு வருவதே இல்லை என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

கேப்ரியலாவின் இந்த பிளாக் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி விட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதுகுறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கேப்ரியலாவை நீக்கி விட்டது ஐபிஎல் நிர்வாகம். மேலும் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கும் அனுப்பி வைத்து விட்டது.

இதை கண்டித்துள்ளார் கேப்ரியலா. நான் நடந்ததைத்தான் சொன்னேன். உண்மையைச் சொன்னதற்காக எனது வேலையைப் பறித்து விட்டது நியாயமல்ல என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சியர்லீடர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவர் கேப்ரியலா என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/12/ipl-cheerleader-sacked-after-aussie-star-complains-aid0091.html

இதே போன்று வேலைத் தளங்களிலும் சியர்ஸ் கேர்ள்ஸை வைத்து உற்சாகப்படுத்தினால் ஊழியர்கள் வேலை செய்யும் வீதம் அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்று வேலைத் தளங்களிலும் சியர்ஸ் கேர்ள்ஸை வைத்து உற்சாகப்படுத்தினால் ஊழியர்கள் வேலை செய்யும் வீதம் அதிகரிக்கும்.

அலுவலகங்களில சியர்லீடர்கள் கட்டாயம் வேணும்.. :rolleyes: கிழலீடர்களைப் பார்த்து சீயெண்டு போச்சுது..! :lol::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீயர்ஸ் கேர்ள்ஸை பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தனும்.

ஒவ்வொரு பாட இடைவேளையின் போதும் பிளக்பெரி - ஐபோன் ரைம் அவுட் (blackberry- Iphone Time out) வழங்கி 2.30 நிமிடம் சீயர்ஸ் கேர்ள்ஸ் மாணவர்களை உற்சாகப்படுத்த அனுமதிக்க வேணும்.

அப்படியே கேர்ள்ஸ் ஸ்கூலுக்கு சீயர்ஸ் பாய்ஸ்களாக நம்மளப் போல "கான்ஸமான" ஆக்களை எடுத்து சீயர்ஸ் பண்ண விடனும். :D

அதுமட்டுமன்றி பரீட்சையின் போதும்.. ஒவ்வொரு வினாத்தாள் பக்கத்தை முடிக்கும் போதும்.. அதை Hot hit ராக அறிவிச்சு.. சீயர்ஸ் கேர்ள்சை கொண்டு வாழ்த்தி பரீட்சை எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தினால்..

நிச்சயமாக மாணவர்களின் தேர்வு வீதம்.. சட சடவென உயர பெரும் வாய்ப்பு குவிந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள்.. பிளீஸ் கவனத்தில் எடுக்கவும்..! :lol::D

குறிப்பு: சீயர்ஸ் கேர்ள் உள்ள போது ஆசிரியர்களின் கண்ணை கட்டி விட வேண்டும். அது கட்டாயம். அவர்கள் சீயர்ஸ் கேர்ள்ஸை துஸ்பிரயோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. மாணவர்கள் சீயர்ஸ் கேர்ள்ஸ் முன் எப்பவும் ரெம்ப நல்லவங்க. பரீட்சையில் நிச்சயம் சீற் பண்ண மாட்டார்கள்.

Edited by nedukkalapoovan

அலுவலகங்களில சியர்லீடர்கள் கட்டாயம் வேணும்.. :rolleyes: கிழலீடர்களைப் பார்த்து சீயெண்டு போச்சுது..! :lol::wub:

நீங்க வேற...

Co-op Students இனை வேலைக்கு எம் நிறுவனம் சேர்ப்பது உண்டு. இந்த முறை ஒரு 18 வயது ; இப்பதான் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த ஒரு செர்பிய பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார்கள்.....யப்பா அவ போடுகின்ற உடுப்பே என் BP இனை எகிற வைக்குது....கிட்டத்தட்ட மேலாடை இல்லாமல் வார மாதிரி வந்து எங்களை இம்சை படுத்துறா

அப்படியே கேர்ள்ஸ் ஸ்கூலுக்கு சீயர்ஸ் பாய்ஸ்களாக நம்மளப் போல "கான்ஸமான" ஆக்களை எடுத்து சீயர்ஸ் பண்ண விடனும். :D

அருமையான யோசனை. இப்படியான வேலைகள் செய்தால் ஒரு job satisfaction கிடைக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற...

Co-op Students இனை வேலைக்கு எம் நிறுவனம் சேர்ப்பது உண்டு. இந்த முறை ஒரு 18 வயது ; இப்பதான் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த ஒரு செர்பிய பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார்கள்.....யப்பா அவ போடுகின்ற உடுப்பே என் BP இனை எகிற வைக்குது....கிட்டத்தட்ட மேலாடை இல்லாமல் வார மாதிரி வந்து எங்களை இம்சை படுத்துறா

நீங்க இப்படி "இம்சைப்" படுறது உங்க ஆத்துக் காரிக்குத் தெரியுமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்று வேலைத் தளங்களிலும் சியர்ஸ் கேர்ள்ஸை வைத்து உற்சாகப்படுத்தினால் ஊழியர்கள் வேலை செய்யும் வீதம் அதிகரிக்கும்.

நல்ல யோசனை வருகிற கொம்பனி மீட்டிங்கில் இந்த ஆலோசனையை முன்வைக்கலாம் என்று இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கேர்ள்ஸ் ஸ்கூலுக்கு சீயர்ஸ் பாய்ஸ்களாக நம்மளப் போல "கான்ஸமான" ஆக்களை எடுத்து சீயர்ஸ் பண்ண விடனும். :D

நீங்கள் எல்லாம் இந்த வேலைக்குப் போனால் எவன் மட்ச் பார்ப்பான்?...எவ்வளவு காசு கொடுத்தாலும் விளையாட்டு வீரர்களே விளையாட வர மாட்டார்கள் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் இந்த வேலைக்குப் போனால் எவன் மட்ச் பார்ப்பான்?...எவ்வளவு காசு கொடுத்தாலும் விளையாட்டு வீரர்களே விளையாட வர மாட்டார்கள் :lol: :lol: :lol:

அப்ப நெடுக்காலபோவானையே கண்சிமிட்டாது பார்த்துகொண்டிருப்பார்கள் என்றா சொல்கின்றீர்கள்??

நல்ல யோசனை வருகிற கொம்பனி மீட்டிங்கில் இந்த ஆலோசனையை முன்வைக்கலாம் என்று இருக்கிறேன்.

குறைந்தது ஊழியர்களுக்காக நடாத்தப்படும் குழுவாக்க விளையாட்டிலாவது (team building games) இப்படியான ஊக்குவிப்புகளை பரிட்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள். கைமேல் பலன் கிடைக்கும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் இந்த வேலைக்குப் போனால் எவன் மட்ச் பார்ப்பான்?...எவ்வளவு காசு கொடுத்தாலும் விளையாட்டு வீரர்களே விளையாட வர மாட்டார்கள் :lol: :lol: :lol:

நாங்கள் பெண்கள் அணிகள் கலந்து கொள்ளும் 20/20 ஐ அறிமுகப்படுத்தி.. WPL என்று பெயர் வைச்சு.. அதில சீயேர்ஸ் பாய்ஸா போய் நின்று உழைப்பமில்ல..! ஆண்கள் விளையாடும் போட்டிக்கு போக.. நாங்க என்ன....?????????????! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை வேலையிடத்திலையும் ..சீயர்ஸ் கேர்ள்ஸ் இருக்கினம் அவை வேலை செய்துகொண்டே எக்கச்சக்கமான விண்ணாணங்கள் காட்டிக்கொண்டிருப்பினம். நானும் தெரியாதமாதிரி ....ஏதோ அவதிப்பட்டு வேலைசெய்யிற மாதிரி அக்ஜன் போட்டுக்கொண்டு செய்யுற சிலுமிசங்கள் சொல்லி வேலையில்லை...உதாரணத்துக்கு முழங்கையாலை :lol: ....இல்லாட்டில் அவை நிக்கிற இடத்திலைதான் ஏதோ முக்கியமான சாமானை வைச்சிட்டு தேடுறமாதிரி பின்னாலை முன்னாலை தேய்படுறது :wub: :wub: .......இதெல்லாம் வந்து ஒரு கொடுப்பனை....எல்லாருக்கும் இந்த அதிஸ்டம் வராது. :(

அதுவும் இண்டைக்கு வேலையிடத்திலை எனக்கு நடந்த சுகமான அமர்களத்தை சொன்னனெண்டால்.......இல்லை வேண்டாம்..... ஒருநாளும் மற்றவனை வெறுப்பேத்தக்கூடாது <_<

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இப்படியான பலவீனமானவர்களா நீங்கள்? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை பலவீனம் என கருதுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை இங்கு பதியப்பட்டிருக்கும் ஆண்களின் கருத்திற்குப் பொதுவாக நான் சொன்ன கருத்து இது....

ஆமா கு.சா அண்ணை ஏன் இப்படித் தேய்படவேணும் என்று தோன்றுகிறது? அது ஒரு வகைப்பலவீனந்தானே!!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ணை இங்கு பதியப்பட்டிருக்கும் ஆண்களின் கருத்திற்குப் பொதுவாக நான் சொன்ன கருத்து இது....

ஆமா கு.சா அண்ணை ஏன் இப்படித் தேய்படவேணும் என்று தோன்றுகிறது? அது ஒரு வகைப்பலவீனந்தானே!!! :D

"பலவீனம்" என்றதன் அர்த்தம் என்ன?அந்தசொல் எதற்காக? எங்கே உபயோகிக்கப்படுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

"பலவீனம்" என்றதன் அர்த்தம் என்ன?அந்தசொல் எதற்காக? எங்கே உபயோகிக்கப்படுகின்றது?

ஐயோ கு.சா அண்ணை தெரியாத்தனமாக இந்தத் திரியில் பலவீனம் என்ற வார்த்தையை உபயோகித்து..... இப்ப உங்கள் கேள்விச்சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டேன். இங்கு நான் பலவீனம் என்று எடுத்துக்கொண்ட பதம் உடல் ரீதியான செயற்பாட்டுக்குத் தூண்டும் மனோவியல் சார்ந்தது. மனதின் சலனம் என்பது மனிதர்களைப் பொறுத்தவரை பெரும் பலவீனமே. நீங்கள் கேட்ட கேள்வி அகம் புறமாகப் பார்த்தால் எதிரும் புதிருமாக இருக்கும். புறநிலை வினையான உரசல் பலவீனம் என்றால் அதன் பலமான வினையாற்றல் படுபாதகமானது. அகத்தில் பார்த்தால் கட்டுப்பாடற்ற அல்லது எதிலும் திருப்தியற்று அலைபாயும் நிலைபோல இதைத்தான் நான் பலவீனம் என்ற வகைக்குள் அடக்கினேன்.

கதையோடு கதையாக வேலை இடங்களில் வேண்டுமென்றே உரசும் ஆண்களை பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எருமை முட்டிட்டுப் போகுது என்று பக்கத்தில் நிற்பவர்களிடத்தில் சொல்லிக் கொள்வார்கள். ஆக மிஞ்சித் தொந்தரவாக இருந்தால் அடக்கி வைத்துககொள் இல்லையென்றால் இழுத்து வைத்து அறுத்துவிடுவேன் என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன் :lol:

அக்கா.. பெண்ணின் மீதான ஆணின் பால் கவர்ச்சியும்.. ஆணின் மீதான பெண்ணின் பால் கவர்ச்சியும் இயற்கையானது. விளம்பரங்களில் வரும் பெண்களை பெண்களே ரசிக்கும் கொடுமையையும் தினமும் காண்கிறோம். அப்படி இருக்கும் உலகில் வர்த்தக நோக்கங்களுக்காக... மக்களின் மனக் களைப்பை போக்கி உற்சாகம் அளிக்க இப்படியான சீயேர்ஸ் கேர்ள்ஸை.. பாய்ஸை பயன்படுத்துவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களை விபச்சாரத்துக்குள் தள்ளுவதை.. அவர்கள் மீது பாலியல் வக்கிரத்தை உபயோகிப்பதை அது ஆண்கள் செய்தால் என்ன பெண்கள் செய்தால் என்ன வெறுக்கிறேன்.

அழகை தூரத்தில் வைச்சு ரசிப்பதில் தவறில்லைத் தானே..! அழகை ரசிக்காட்டி.. ரசிக்க விடாட்டி.. பிறகெதற்கு அந்த அழகு..! :D:)

பெண்கள் மீதான ஆண்களின் அங்க சேட்டைகள்.. ஆண்கள் மீதான பெண்களின் அங்க சேட்டைகள் இரண்டையும்.. நாகரிகம் ஒழுக்கம் விரும்பும் மனிதர்கள் செய்யமாட்டார்கள். அதேநேரம் தற்செயலாக.. (சிலர் வேணும் என்றும் செய்வார்கள்.. ஜஸ்ட் முட்டிட்டு போறது தானே..) ஓரிரு தடவைகள்.. முட்டிட்டு போறதால.. பெண்கள் கற்பையோ.. ஒழுக்கத்தையோ இழக்கப் போறதில்லை. இதில் அப்படியான ஆண்களை திட்டுவதில் என்ன பயன்...??! இதில் பெண்கள் வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு உள்ளூர இருக்கும் ஆசைகளை இதில் வெளிப்படுத்தாவிட்டாலும்.. ஆண்கள் முட்டுவதை ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால்.. இப்படி உரசிக் கொண்டு திரிவதும்.. ஒரு ஜென்ரில் மேனுக்கு அழகில்ல.. என்பது எனது நிலைப்பாடு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மீதான ஆண்களின் அங்க சேட்டைகள்.. ஆண்கள் மீதான பெண்களின் அங்க சேட்டைகள் இரண்டையும்.. நாகரிகம் ஒழுக்கம் விரும்பும் மனிதர்கள் செய்யமாட்டார்கள். அதேநேரம் தற்செயலாக.. (சிலர் வேணும் என்றும் செய்வார்கள்.. ஜஸ்ட் முட்டிட்டு போறது தானே..) ஓரிரு தடவைகள்.. முட்டிட்டு போறதால.. பெண்கள் கற்பையோ.. ஒழுக்கத்தையோ இழக்கப் போறதில்லை. இதில் அப்படியான ஆண்களை திட்டுவதில் என்ன பயன்...??! இதில் பெண்கள் வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு உள்ளூர இருக்கும் ஆசைகளை இதில் வெளிப்படுத்தாவிட்டாலும்.. ஆண்கள் முட்டுவதை ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால்.. இப்படி உரசிக் கொண்டு திரிவதும்.. ஒரு ஜென்ரில் மேனுக்கு அழகில்ல.. என்பது எனது நிலைப்பாடு.

சிலைகள் அழகு!

ஓவியங்கள் அழகு!

மலர்கள் அழகு!

இவற்றின் அழகைத் தொட்டா ரசிக்கிறோம்? தூரத்தில் இருந்து தானே?

போனமுறை இந்தியாவில் நடந்த போட்டிகளின்போது.. இந்திய கிரிக்கெட் அதிகாரிகள், இங்கிலாந்தில் இருந்து சியர் லீடர்களுக்கு ஓடர் பண்ணிவிட்டு பின்குறிப்பில் காப்பிலி பொட்டைகள் வேண்டாம் எண்டு கொட்டை எழுத்தில் போட்டு நல்லா வாங்கிக்கட்டிக்கொண்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.