Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தையில் பங்கு கேட்பது முஸ்லிம் காங்கிரஸின் பச்சோந்தித்தனம்

Featured Replies

சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்களின் பேராதரவினையும் அங்கீகாரத்தையும் பெற்ற இரு அரசியல் கட்சிகள் என்றால் அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவே. ஆகும். இந்த விடயத்தில் எவராலும் இரண்டாம் கருத்துக் கூற முடியாது.

.

தமிழர்களின் பிரச்சினைகள் என்று வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வரும் போது முஸ்லிம் காங்கிரஸ_ம் கொடுக்கும் குரல் மற்றும் அழுத்தங்களே வலுவுள்ளனவாக அமைகின்றன என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட விடயம்.

இந்த இரு கட்சிகளும் தத்தமது இனத்துக்காகத் தனித்து நின்று குரல் கொடுத்தாலும் தமிழ்ப் பேசும் மக்களின் ஒட்டு மொத்தப் பிரச்சினைகள் என்று வரும்போது அவை ஒருமித்து நின்று கருத்துகளைத் தெரிவிக்க வேண்டியதும் சில வேளைகளில் ஓர் இனத்தின் பிரச்சினைத் தீர்வுக்காக மற்ற இனம் விட்டுக் கொடுப்பதும் ஒத்துழைப்பு வழங்குவதும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவைகளாகும்.

.

கூட்டமைப்பின் புரிந்துணர்வு

இந்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் தனது பங்கினைச் சரியாகச் செய்கிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. தமிழர்களின் இனப்பிரச்சினை என்று வரும்போது முஸ்லிம்கள் தொடர்பாகவும் அவர்கள் நலன் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்த, குரல் கொடுக்கத் தவறவில்லை என்பதனை நாம் மறுக்க முடியாது. ஒருமொழி இரு இனங்கள் என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயங்களில் முஸ்லிம்களையும் அரவணைத்தே செல்கிறது.

.

கசப்புணர்வுகளை மறக்கவேண்டும்

இரு இனங்களுக்கிடையில் சில, சில கசப்புணர்வுகள், துன்பியல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தாலும் அதனையே தொடர்ந்தும் மனதில் வைத்துச் செயற்படுவது அர்த்தமல்ல என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு புரிந்து கொண்டு செயற்படுகிறது. சிறிலங்காவில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் புட்டும் தேங்காயும் போன்று வாழ்ந்த காலமும் நம் மனக்கண் முன் உள்ளது. இந்த இரு இனங்களையும் பிரித்து வேறுபடுத்தி ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கியது சிறிலங்காவின் சிங்கள அரசுகள் என்பதில் ஐயமில்லை. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல் இரு சமூகங்களும் ஒன்றிணைந்தால் சிறிலங்கா மத்திய அரசின் நிலை தர்மசங்கடமாகிவிடும்.

.

இதனை நன்கு புரிந்து கொண்ட சிங்கள அரசுகளே இவ்வாறான நிலையைத் தோற்றுவித்தன என்பதே உண்மை. இந்த விடயத்தைத் தமிழ்த் தலைமைகள் நன்கு புரிந்து கொண்ட நிலையில், கொழும்பைத் தளமாகக் கொண்ட முஸ்லிம் தலைமைகள் சிங்கள அரசுகளின் இவ்வாறான பிரித்தாளும் தந்திரச்; செயற்பாடுகளுக்குச் சாமரம் வீசி பன்னீர் தெளித்து நின்றதனையும் நாம் கடந்த காலங்களில் அறிவோம். இவ்வாறானதொரு நிலை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதுமாகவே அமரர் அஷ்ரபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இரு இனங்களும் இணைந்த போகும் தன்மையை அவர் பலவிடயங்களில் கடைப்பிடித்து வந்தார். இதுவே தேவையானதும்.

.

அடம்பிடிப்பதால் சிங்கள அரசிற்கே நன்மை

ஆனால், இன்று நிலை வேறாகிவிட்டது. தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுப் பேச்சுவார்த்தைகள் என்று வரும்போது எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுப்பது, அடம்பிடித்து நிற்பது இன்று முஸ்லிம் காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறான விடயங்கள் தவறானவை என இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமை புரிந்து கொண்டிருந்தாலும் அந்தக் கட்சியைச் சேர்ந்த சில சிரேஷ்ட உறுப்பினர்கள் குழப்பவாதிகளாகச் செயற்படுவது, அறிக்கை விடுவது என்னவோ தொடர் கதையாகவே உள்ளது.

.

இவ்வாறானவர்களைத் தட்டிக் கேட்க முடியாத தர்மசங்கடமான நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை உள்ளது என்பதுடன் அந்தத் தலைமைக்கு அவ்வாறானவர்கள் விடுக்கும் அறிக்கைக்கு மறுப்பு அறிக்கையோ மன்னிப்போ கேட்க முடியாதுள்ளது என்பதும் ஒரு பக்கத்திலான உண்மைகள். ஆனால் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் முஸ்லிம் காங்கிரஸின் மொத்தச் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

.

இந்த நிலையில் பொறுப்பற்ற இவ்வாறானவர்களின் அறிக்கைகள், செயற்பாடுகள் இன்னொரு சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதனை அலசிப் பார்க்கும் போது வேதனையாகவுள்ளது.

முப்பது வருட கால யுத்தம், நாடோடி வாழ்க்கை, சுமந்த சோகங்கள் இழந்தவைகள், இழக்க இருப்பவை அனைத்தும் சிறிலங்கா தேசத்தின் தமிழர் கணக்கில் வரவில் வைக்கப்பட்ட, வைக்கப்பட வேண்டிய விடயங்கள்.

.

பொறுப்பற்ற அணுகுமுறைகள்

இந்த நிலையில், யுத்தம் ஏதோ ஒரு வகையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் ஏனையவை அப்படியே உள்ளன. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து சிறிலங்கா அரசு பேசுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையானது வெறும் காலம் கடத்தல் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அந்தப் பேச்சுவார்த்தையில் தங்களையும் கலந்து கொள்ளச் செய்ய வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைசச்ருமான பஷீர் சேகுதாவூத் கேட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தப் பேச்சுவார்தையை எப்படியும் குழப்பி விட வேண்டும் என்ற திடத்தில் உள்ள சிறிலங்கா அரசுக்கு இந்த விடயம் கூட ஒரு வாய்ப்பாக அமையலாம்.

.

பஷீர் சேகுதாவூத் இந்த விடயத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். சில வேளைகளில் தான் சார்ந்த சமூகத்திடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென இந்த நச்சுக் கருத்தை அவர் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் நினைத்திருந்தால் அது அவர் போட்ட தப்புக் கணக்காகவே கருதப்பட வேண்டும். ஏனெனில், அவர் தெரிவித்த கருத்துக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்திடமிருந்தே ஆகும்.

.

முஸ்லிம் சமுகத்தையே பிழையான வழியில் இவரின் கருத்துகள் இட்டுச் செல்லுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சி இவ்வாறு குற்றம் காண்பதில் உண்மைகளே நிறைந்திருக்கின்றன.

.

தமிழர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தவறவில்லை.

கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்தனை நாம் அறிவோம்.அந்த நிலையே இன்றும் தொடர்கிறது. சிறிமாவோ அம்மையார் ஆட்சிக் காலத்தில் புத்தளத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்குள் பொலிஸார் நுழைந்து செய்த அடாவடித்தனங்களை அன்று பாராளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் அமைச்சர்களோ எம்.பிக்களோ கண்டிக்கவும் இல்லை. தட்டிக் கேட்கவும் இல்லை ஆனால், இவை அனைத்துக்கும் எதிராக வெகுண்டெழுந்து குரல் கொடுத்த தமிழன் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தான். தனது சகோதர இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அந்த அநியாயத்துக்காகக் குரல் கொடுத்து நீதி வேண்டி நின்றவர் அவர்தான்.

.

இதே கொள்கையைத்தான் இன்றைய கூட்டமைப்புத் தலைமையும் கூட்டமைப்பும் கடைப்பிடித்து வருகின்றன. இனப்பிரச்சினைத் தீர்வு என்று வரும்போது அது முஸ்லிம் மக்களுக்கும் உரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அடிக்கடி கூறி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் பஷீர் சேகுதாவூத் வெளியிட்டுள்ள கருத்துகள் கவலை தருகின்றன.வெண்ணெய் திரண்டு வருகிறதோ என்னவோ அதற்காகத் தாழியை உடைக்கக் கூடாது. சிறிலங்காவில் இன்று அநாதைச் சமூகமாக மாற்றப்பட்டு மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் நடத்தப்படும் ஒரு சமூகமாவே தமிழர் சமூகம் காணப்படுகிறது.

.

சிறிலங்கா அரசிடம் ஐந்து கேட்டால் ஒன்றாவது கிடைக்கும் என்ற நப்பாசை நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலுமே இன்று அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி வருகிறது. அவ்வாறு ஒன்றேனும் கிடைக்கும் சாத்தியம் இருந்தால் அதனையும் இல்லாமல் செய்யும் வேலைகளில் இவர் போன்றோர்; ஈடுபடுவது கவலை தருகிறது.

.

இவ்வாறான செயற்பாடுகள் ஓர் இனத்தின்; அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அபிலாஷைகளை மழுங்கடிக்கச் செய்து விடுவதுடன் அவற்றினை இல்லாமலும் செய்துவிடும். அதுமட்டுமின்றி இன ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் அபாயத்தைத் தோற்றுவிக்கவும் முடியும்

இதேவேளை, முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என்று கூற முற்படவில்லை. டி.எஸ் சேனநாயக்கவின் கல்லோயாத் திட்டம் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒன்றும் இரகசியமானது அல்ல.

.

கல்லோயத் திட்டம் என்ற போர்வையில் அம்பாறை மாவட்டத்தில் அன்று மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள்.. எல்லை விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் எல்லையுடன் பிற மாவட்டங்களின் சிங்களப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு அந்த மாவட்டத்தின் முஸ்லிம் குடிப்பரம்பல் சிதைக்கப்பட்டமை முதல் இன்று இடம்பெறும் முஸ்லிம்களினதும் காணி அபகரிப்பு வரையிலான அனைத்த விடயங்களும் தெரிந்தவை.இவைகள் அனைத்தும் தீர்க்கப்படத்தான் வேண்டும்.

இந்த விடயத்திலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால், இன்னொரு இனத்தின் பிரச்சினைகள் பேசப்படும் போது அதற்குள் மூக்கை நுழைக்கக் கேட்பதால் எல்லாமே பிரச்சினையாகிவிடும். என்ற உண்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும். இரு சமுகங்களும் ஒற்றுமைப்பட்ட நிலையில் செயற்படுவதன் மூலமே நாம் நமது அபிலாஷைகளை அடைய முடிவதுடன் எமது சக்தியை சிறிலங்காவின் சிங்கள அரசுகளுக்குக் காட்ட முடியும்.

.

இதனை விடுத்து கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமான ஒரு சூழலை உருவாக்குவதோ அல்லது எரியும் வீட்டில் பிடுங்கித் திண்ணுவது லாபம் என்ற மனப்பாங்குடன் செயற்படுவதோ சிறந்ததல்ல.. இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தெளிவு பெற வேண்டியுள்ளது.

.

ஈழ நாதத்திற்காக கொழும்பிலிருந்து சித்தன் http://www.eelanatham.net/story/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசு இங்க தான் என்றால் அங்கயுமா.. இந்த பெயரை வைத்தவன் பூரா மொள்ளமாறிய இருப்பது ஆச்சிரியம் அளிக்கிறது..

டிஸ்கி:

தமிழர்களுக்கு ஒவ்வாத பெயர்களாக கருணா எட்டப்பன் போன்றது மாதிரி.. :o

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசு இங்க தான் என்றால் அங்கயுமா.. இந்த பெயரை வைத்தவன் பூரா மொள்ளமாறிய இருப்பது ஆச்சிரியம் அளிக்கிறது..

டிஸ்கி:

தமிழர்களுக்கு ஒவ்வாத பெயர்களாக கருணா எட்டப்பன் போன்றது மாதிரி.. :o

இப்படியும் பார்க்கலாம் புரட்சி

இந்த மதம் உள்ள எந்த நாடு நிம்மதியாக உள்ளது..............???

புகுந்து விட்டாலே தொப்பி புரட்டுவதுதானே வேலை :(:(:(

இப்படியும் பார்க்கலாம் புரட்சி

இந்த மதம் உள்ள எந்த நாடு நிம்மதியாக உள்ளது..............???

புகுந்து விட்டாலே தொப்பி புரட்டுவதுதானே வேலை :(:(:(

இந்த மதம் உள்ள நாட்டினர் தான் இன்று புரட்சி செய்து தம்மை அதிகாரம் செய்த பல சர்வாதிகாரிகளை தூக்கி எறிகின்றனர்... கடந்த, இந்த நூற்றாண்டில் இடம்பெற்ற பெரும் வரலாற்று நிகழ்வாக இதை வரலாறும் பதிவு செய்கின்றது

இவற்றை விட, எம் சக தமிழ் தொலைக்காட்சிகள் மானாட மயிலாட போடும் போது எம் மக்களின் துயரை வெளிக் கொண்டு வரும் அல்-ஜஸீரா கூட இந்த மதத்தவர்களின் தான்

ஒரு இனத்தை,மதத்தை அவர்களை பற்றிய எதுவித அறிவுமேயில்லாமல் பழிப்பது மிக கேவலம்.எனது வேலையிடத்தில் எம்மை(தமிழர்) பற்றி மிக கேவலமான அபிப்பிராயம்.அது இங்குள்ள சிலரின் நடவடிக்கைகளும்,அதை ஊதிப்பெருப்பிக்கும் ஊடகங்களும்.

ஏதோ வன்முறையாளர்கள் இங்கும் வந்து தொடர்கின்றார்கள் (ஸ் ரீரியோ டைப்) ஒருவர்,இருவர் செய்யும் தவறுக்கு அந்த இனத்தையே குறைகூறுவது அறியாமையாயாகும்

இதனால் தான் நான் அடிக்கடி உபயோகிப்பது தேவர்மகன் வசனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியும் பார்க்கலாம் புரட்சி

இந்த மதம் உள்ள எந்த நாடு நிம்மதியாக உள்ளது..............???

புகுந்து விட்டாலே தொப்பி புரட்டுவதுதானே வேலை :(:(:(

ஒரு இனத்தை,மதத்தை அவர்களை பற்றிய எதுவித அறிவுமேயில்லாமல் பழிப்பது மிக கேவலம்.எனது வேலையிடத்தில் எம்மை(தமிழர்) பற்றி மிக கேவலமான அபிப்பிராயம்.அது இங்குள்ள சிலரின் நடவடிக்கைகளும்,அதை ஊதிப்பெருப்பிக்கும் ஊடகங்களும்.

ஏதோ வன்முறையாளர்கள் இங்கும் வந்து தொடர்கின்றார்கள் (ஸ் ரீரியோ டைப்) ஒருவர்,இருவர் செய்யும் தவறுக்கு அந்த இனத்தையே குறைகூறுவது அறியாமையாயாகும்

இதனால் தான் நான் அடிக்கடி உபயோகிப்பது தேவர்மகன் வசனம்.

அர்யுனின் இந்தக் கருத்துக்கு உடன் படுகின்றேன்!

தனிமனித வெறுப்புக்களை ஒரு சமூகத்தின் மேல் பழித்தல் பொறுப்புணர்ச்சி அற்ற செயல்.

பேச்சுவார்த்தையில் தாமும் பங்கு பெற வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கேட்பதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குப் படவில்லை.

இனப்பிரச்சினைத் தீர்வென்று வருகின்ற போது அங்கே முஸ்லிம் மக்களும் ஒரு இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரங்கள் பற்றிப் பேசப்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் கணிசமான தொகையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் விருப்பு வெறுப்புகள் குறித்தும் பேசப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதனால் ஒரே நேரத்தில் அரச தரப்புடன் தமிழ் முஸ்லிம் தரப்புகள் ஒன்றாகப் பேசுவது என்பது சரியானதாகவே படுகிறது. (இந்தப் பேச்சுக்களில் அரசு எதாவது தருமா என்பது வேறு விடயம்.)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவாழ் முஸ்லீம்கள் என்பது ஒரு பிறிதான இனக்குழுமம் அவர்களது சிறப்பான அடையாளம் தமிழைத் தாய்மொழpயாகக் கொண்டது இலங்கைத்தமிழர்க்கு ஒரு அதிகார அலகு தேவைப்படுமிடத்தே அவர்கட்கும் பிறிதான அதிகார அலகு தேவைப்படுவதை எவராலும் புறந்தள்ளமுடியாது அது எதிர்காலத்தில் பலபிரச்சனைகள் வருவதை தடைசெய்யும். பேச்சுவார்த்தை மேசையில் அவர்களையும் வரவேற்பதே நல்லது. இதனால் காலதாமதம் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு அதிகார அலகு எமக்குக் கிடைத்து அவர்கள் அதன்பின்பு எம்முடன் பிரச்சனைக்கு வருவதைவிட தற்போதே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை நாம் அனுமதிக்கவேண்டும் சும்மா யாழப்பாணத்தனமான திமிர்பிடித்த அரசியலை விட்டுத்தள்ளுங்கள். பலகோடி சொத்திழப்புடன் அவர்களை விட்டு விரட்டியதற்குப் பிராச்சித்தமாக அவர்களுடன் ஒத்துழைத்து மீண்டும் எமது அன்பைப் பகிர்வோம். நாமும் வாழ்வோம் மற்றோரையும் வாழவிடுவோம். அதைவிட பேச்சுவார்த்தை என்று வரும;போதுதான் இதில் எவ்வளவு சிக்கல் இருக்கு கடந்த காலங்களில் தமிழர்களை சிங்களம் எவ்வளவு பாடுபடுத்தியிருக்கு எதற்காக அவர்கள் ஆயுதம் தூக்கினார்கள் என்பனவெல்லாம் அவர்களுக்கு சிங்களவனாலேயே நியாயப்படுத்தப்படும். அதன்பின்பு எமது நியாயாதிக்கத்தை உணர்ந்து கொள்வார்கள். இறுதியில் ஒண்டுமே கிடைக்காதுதானே ஆகவே இப்பேச்சுவார்த்தையில் அவர்கள் கலந்து கொண்டால் என்ன குடியா கெட்டுப்போய்விடப்போகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் தங்கள் உரிமையைக் கேட்பதில் நியாயம் இருக்கின்றது!

இவர்கள் கேட்கும் விதமும், அதைக் கேட்கும் தருணமும் தான் எரிச்சலை ஊட்டுகின்றது!

உதாரணமாக இந்தியாவின் சுதந்திரத்தின் போது, ஜின்னா நடந்த விதத்தை நினைவு கூருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் உள்ள நாட்டினர் தான் இன்று புரட்சி செய்து தம்மை அதிகாரம் செய்த பல சர்வாதிகாரிகளை தூக்கி எறிகின்றனர்... கடந்த, இந்த நூற்றாண்டில் இடம்பெற்ற பெரும் வரலாற்று நிகழ்வாக இதை வரலாறும் பதிவு செய்கின்றது இவற்றை விட, எம் சக தமிழ் தொலைக்காட்சிகள் மானாட மயிலாட போடும் போது எம் மக்களின் துயரை வெளிக் கொண்டு வரும் அல்-ஜஸீரா கூட இந்த மதத்தவர்களின் தான்

இங்கு என்னுடன் பல எகிப்தியர்கள் துனிசியர்கள் லிபியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர்

புரட்சி நடந்தபோது ஆரவாரமாக திரிந்த அவர்கள் இன்று முகம் சுருங்கி திரிகின்றனர். காரணம் புரட்சியை தாங்கள்தான் நடாத்தியதாக எண்ணிய அவர்களுக்கு தாம் வேறு ஒரு கையால் ஆட்டிப்படைக்கப்பட்டிருக்கின்றோம். அதற்குள் முன்பைவிட தாழ்வாக மூழ்கிவிட்டோம் என்று தற்போது புரிகிறது.

மற்றது

ஈழத்தில் இஸ்லாமியத்தமிழரால் எமக்கான ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற கனவை முதலில் விடுங்கள். ஒருபோதும் அது சாத்தியமற்றது. அனுபவபாடத்தாலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஒரு கணத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல அது.

பல வருடங்களின் பின் இதேமுடிவுக்கு மீண்டும் தமிழினம் வரும். அது காலத்தின் கட்டாயம்.

இங்கு இஸ்லாமியத்தமிழருடனான ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் வெறும் பார்வையாளர்கள். அவர்களுக்கு பேசவும் எழுதவும் முடிச்சுபோடவும் மட்டுமே தெரியும். ஆனால் களம் என்பது வேறு. அதில் நின்றவர்களுக்கே எவரை வைத்திருக்கணும் எவரை அகற்றணும் என்று தெரியும். அதுவே நடந்தது. தற்போதையநிலையில் களத்தை இவர்கள் பொறுப்பெடுத்தால்.........??? முதலில் இதையே செய்வார்கள். செய்யணும் .

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையென்றால்

தமிழினம் வெறும் கழுத்தறுப்புக்களுக்கு மட்டுமே முகம் கொடுக்கும்.

  • தொடங்கியவர்

***

இஸ்லாமிய தமிழர்களுக்கு உரிமை பற்றி பேச அருகதை உண்டு. மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்து கொண்டு நாமும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுக்கும் பிரச்சினை இருக்கு என்று முஸ்லிம் காங்கிரஸ் வருவதுதான் பிரச்சினை.

முஸ்லிம்களில் முஸ்லிம் காங்கிரஸ் இனை விட ஏனைய பெரும்பான்மை கட்சிகளில்தான் அதிக எம் .பி. க்கள் இருக்கின்ரார்கள்.

அடுத்ததாக அரசாங்கத்துடன் சேர்ந்தால்தான் தமக்கும் தமது இனத்திற்கும் பாதுகாப்பு என முஸ்லிம் காங்கிரஸ் கூறியே அவர்களுடன் சேர்ந்தார்கள். அவ்வாறு எனின் அரசுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை செய்து ஏன் ஒரு அலகை இன்னமும் பெற முடியாமல் போனது ?

கூட்டமைப்பு ஒன்றும் தடை விதிக்கவில்லையே?

சிங்கள அரசின் கைப்பொம்மைகளாக இருப்பவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டமைப்பு பேச சென்றால் சிங்கள அரசு முஸ்லிம்களையும், ஒட்டுக்குழுக்களையும் வைத்துக்கொண்டு எப்படி குளப்பலாம் என்றுதான் பார்க்கும்.

இன்று அரசின் அறிக்கைகளை பார்த்தீர்களா?

இனிமேல் எல்லா கட்சியுடனும் தான் பேசவேண்டும். கூட்ட்மைப்புடன் மட்டும் பேசமுடியாது என கூறியுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் மக்களால் பெரும்பன்மையாக தெரிவு செய்யபட்டுள்லவர்களுடந்தான் பேசவேண்டும்.

அரசாங்கமே தாம் பெரும்பான்மையானவர்கள் என்றுதானே எல்லா தீர்மானங்களையும் எடுக்கின்ரார்கள்.

எடுத்ததற்கெல்லாம் அனைத்துக்கட்சி குழுவை கூட்டுகின்றார்களோ?

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

அட அப்ப சிங்கள அரசுகள் எங்களுக்கு வாங்குபது சரி என சிங்களவன் சொன்னால் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும்.அவனும் தளத்தில் நின்றுதான் பொதுமக்களுக்கு குண்டுவைத்ததை உதாரணம் காட்டி சொல்லுகின்றான்.களம் என்பது வேறு அங்குநிற்பவனுக்கு யாரை அகத்தவேணும் எனதெரிந்ததால் தான் அகத்தினான் என்றால் ஏன் போர்குற்றம் என கத்துகின்றீர்கள்.அவர்களுக்கு சரி என்றால் மட்டும் காணுமோ? இதுதான் அங்கு கேள்வி

இதேதான் இங்கும் கேள்வி.உங்களுக்கு(படிக்காத) சரியென்றால் மட்டும் காணுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அப்ப சிங்கள அரசுகள் எங்களுக்கு வாங்குபது சரி என சிங்களவன் சொன்னால் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும்.அவனும் தளத்தில் நின்றுதான் பொதுமக்களுக்கு குண்டுவைத்ததை உதாரணம் காட்டி சொல்லுகின்றான்.களம் என்பது வேறு அங்குநிற்பவனுக்கு யாரை அகத்தவேணும் எனதெரிந்ததால் தான் அகத்தினான் என்றால் ஏன் போர்குற்றம் என கத்துகின்றீர்கள்.அவர்களுக்கு சரி என்றால் மட்டும் காணுமோ? இதுதான் அங்கு கேள்வி

இதேதான் இங்கும் கேள்வி.உங்களுக்கு(படிக்காத) சரியென்றால் மட்டும் காணுமோ?

முஸ்லீம்கள் விடயத்தில் புலிகள் செயற்பாடு நியாயமானதுதானா என்றால் புலிஅபிமானிகளில் பெரும்பகுதி இல்லை என்றே சொல்வார்கள்! இது கருத்தியல் தளத்திற்கு நியாயமானதாகவும், நடைமுறைத் தளத்திற்கு மிகவும் கடினமான ஒன்றாகவும் சிலர் கருத்துரைக்கின்றனர். முஸ்லீகளின் தலைமை சிங்களத்தின் தேவைக்கு தனிமனித நலனுக்காக ஒரு சமூகத்தின் கௌரவத்தை பலியாக்கியது மிகப்பெரிய குற்றம். வலியை வல்லமையை உடைய அரசே நாசகார சூழ்ச்சிகளால் புலிமேல் வலை விரிக்கும் போது தனிய புலிமேல் மட்டும் இப்படிக் குற்றத்தை ஆராயும் நிலை மறுவளத்தில் சிங்களத்தின் செயல்களை கண்ணிய மனிதாபிமான உடையதாக்கின்றது. ஒருவனை மரணம் நெருங்கும் போது அவன் எதிரியைச் கொலை செய்தாலும் அதன் பெயர் தற்காப்பு. இது ஏன் சொல்கின்றேன் என்றால் அந்த் சூழ்நிலை, எதிரியின் மனிதர்மத்திற்கு புறம்பான செயல், புலியில் பலம் என்று பன்முகத்தள ஆய்வுக்குரியது இவை.

இப்படி எவளவிற்குத்தான் விளக்கம் கொடுத்தாலும், மனிதாபிமானம் என்ற பார்வையில் புலிகள் குற்றவாளிகளே! முடிவு புலிகளின் பயணம் இனவிடுதலைக்கானது. அவர்கள் எந்த சகதியிலும் இறுதிவரைக்கும் அதை தாண்டி விழுந்து விடவில்லை. தவறான முடிவுகளில் கூட நியாயமான காரணம் இருந்தால் அந்தக் குற்றங்களும் மன்னிக்கத் தக்கதே!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு இஸ்லாமியத்தமிழர் பற்றி எழுதியதற்கு பலத்த எதிர்ப்பு வந்தது.

இஸ்லாமியத்தமிழர் பற்றிய எனது கருத்து அனுபவத்தால் வந்தது. அதற்கு வேறு கருத்து இல்லை.

இன்றும் இஸ்லாமிய சமுதாயம் தனக்கான தேவைகளுக்காக போராட முயலவில்லை. நீ போராடி எடு. ஆனால் சரிசமனான பங்கு வேண்டும் என்கிறது. அத்துடன்அந்த போராட்டம் வெல்லும்வரை அது எதிரியுடன் ஒட்டி நின்றுதான் பிழைத்துக்கொள்ள முயல்கிறதே ஒழிய போராடுபவனுக்காக இதுவரை ஒரு உண்ணாவிரதத்தை தானும் செய்ததில்லை.

ஒற்றுமையான பயணிப்பு என்பது அவர்களாக விரும்பி உணர்ந்து வரவேண்டியது. இதுவரை நாம் தான் வாங்கோ சேர்ந்து போராடலாம் என்று கெஞ்சியபடியுள்ளோம். அவர்கள் அது பற்றி நினைத்துப்பார்த்துகூட இல்லை. தலைவர் கூட போர் நிறுத்தகாலத்தில் எல்லோரையும் கூப்பிட்டு ஒப்பந்தங்கள் செய்தார். ஆமாம் போட்டு ஒப்பந்தம் செய்து போனவர்கள் அங்கு போய் சுருதி மாறி அறிக்கைவிட்டார்கள். எவ்வளவுக்கு தொல்லை கொடுக்கமுடியுமோ அவ்வளவுக்கு தொல்லை கொடுத்தார்கள். அவர்களால் எமக்கு வரும் சிக்கல்களை அவர்களும் திருத்தமாட்டார்கள். நாங்களும் திருத்தவிடமாட்டார்கள். முடிவு உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

இறுதிப்போர் ஆரம்பித்த காலத்தில் மூதூரிலிருந்து திருகோணமலைவரை துளைத்துச்சென்ற புலிகள் அந்த நேரத்திலும் தங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களில் கூட அங்கு காணப்பட்ட எமக்கு தொல்லை கொடுத்த கூலிகளை அழித்தே சென்றார்கள். இது வரலாறு கற்றுத்தந்த பாடம். அது தான் ஆசிரியன். அதுவே வழிகாட்டி.

இங்கு முள்ளிவாய்க்காலையும் யாழிலிருந்து இஸ்லாமியத்தமிழர் வெளியேற்றப்பட்டதையும் ஒப்பிடும் அளவுக்கு காழ்ப்புணர்ச்சி மேலோங்கியிருக்கிறது. யாழிலிருந்து இஸ்லாமியத்தமிழர் அன்று வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அன்றே யாழ்ப்பாணத்தில் ஒரு முள்ளிவாய்க்காலை இயக்கம் சந்தித்து அழிந்திருக்கும். இது இரு பகுதியினருக்கும் தெரியும்.

தமிழர் தரப்பு அரசுடன் பேச்சு வார்த்தைக்கு போகும் பொழுது மாத்திரம் தங்களையும் அதில் சேர்த்துக் கொள்ளவேண்டுமென கூறுவார்கள். இதுதான் கால காலமாக நடக்கிறது.

மற்றைய நேரங்களிலும், அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள் என்ற முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்தானே? தங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமென்பவர்கள் அதற்காகப் போராட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்............................வரலாற்றுபாடங்களை புரட்டி போட்டால் ”வெளியேற்றம்” சரியானது என்றே கொள்ளவேண்டும்!!!!! இதில் மாற்றுகருத்தே இல்லை!!!

இலங்கையில் மலையகத் தமிழரைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்களை மத ரீதியாகப் பிரித்தால் இந்துக்களுக்கு அடுத்ததாக முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள். தீர்வொன்று கிடைக்குமாமால் முஸ்லிம்களையும் உள்வாங்குவதே புத்திசாலித் தனம். இல்லையேல் இலங்கையின் சனத்தொகையில் விகிதாசாரப்படி தமிழர்கள் 15 வீதம்கூட வரமாட்டார்கள்.

பழையதையே கதைத்து எம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டாம் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைச்சனத்தொகையில் தமிழர் எத்தனை வீதம் என்பதாலா போராட புறப்பட்டோம்.

2 வீதம்இருந்தால் கூட போராட்டுத்துக்கான காரணமும் எமக்கான மண்ணும் இருக்கும் வரை எதிரிகள் குறித்து கூட அக்கறையற்றிருக்கலாம். ஆனால் பின்னால் குத்துபவர்கள் குறித்து...............???

பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவருக்கும் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை. ஆனாலும்.. தமிழ் தலைமைகளிடம் காணப்படாத இலங்கை முஸ்லீம் தலைமைகளின் புத்திசாதுரியத்தையும், தந்திரங்களையும் பாராட்டியாக வேண்டும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவருக்கும் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை. ஆனாலும்.. தமிழ் தலைமைகளிடம் காணப்படாத இலங்கை முஸ்லீம் தலைமைகளின் புத்திசாதுரியத்தையும், தந்திரங்களையும் பாராட்டியாக வேண்டும்.

இரண்டு நிமிடங்களுக்கு முன் ஜெலலிதாவுக்கு பாராட்டு சொன்ன தமிழர்களை வாத்துக்களுடன் ஒப்பிடுகின்றீர்கள்

உடன் இங்கு அதேவேலையைச்செய்யும்இஸ்லாமியர்களுக்கு அறிவாளிகள் பட்டம்.

என்னே அனுமானம் தன் இனத்தின்மீது...............???

புல் அரிக்குது போங்கள். :(:(:(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=85434

தென்துருவ தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதிகள்:

Antarctica-Emperor_Penguin-original-1.jpg

Edited by விசுகு

இரண்டு நிமிடங்களுக்கு முன் ஜெலலிதாவுக்கு பாராட்டு சொன்ன தமிழர்களை வாத்துக்களுடன் ஒப்பிடுகின்றீர்கள்

உடன் இங்கு அதேவேலையைச்செய்யும்இஸ்லாமியர்களுக்கு அறிவாளிகள் பட்டம்.

என்னே அனுமானம் தன் இனத்தின்மீது...............???

புல் அரிக்குது போங்கள். :(:(:(

தென் துருவத்தில் வாத்துக்கள் உள்ளன. தமிழர்கள் புலம்பெயர்ந்து தென்துருவத்தில் வாழவில்லை. AFTA - Australasian Federation of Tamil Associations என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு தென் துருவ தமிழ் சங்கங்களின் சம்மேளனமா? முஸ்லீம் காங்கிரஸ் வட துருவத்து முஸ்லீம்களின் சம்மேளனமா?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மலையகத் தமிழரைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்களை மத ரீதியாகப் பிரித்தால் இந்துக்களுக்கு அடுத்ததாக முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள். தீர்வொன்று கிடைக்குமாமால் முஸ்லிம்களையும் உள்வாங்குவதே புத்திசாலித் தனம். இல்லையேல் இலங்கையின் சனத்தொகையில் விகிதாசாரப்படி தமிழர்கள் 15 வீதம்கூட வரமாட்டார்கள்.

பழையதையே கதைத்து எம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டாம் என்பது எனது கருத்து.

நீங்கள் இன்னமும் அப்பாவியாகவே இருக்கிறீர்கள்............................

பேச்சுவார்த்தைக்கு போனால் சிங்கள அரசுதான் முஸ்லீமை கூட்டிவருகிறது. அது உங்களுக்கு தீர்வு தருவதற்கு அல்ல பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு. பின்பு போர் தொடங்கினால் காட்டிகொடுப்பு கூடி நின்று கொல்வது.

அவர்களுக்கு தீர்வு வேண்டாம் என்று யார் சொன்னார்....................

என்ன தீர்வு வேண்டும்???? என்றுதான் கேட்க்கிறார்கள்.

இவ்வளவு காலமும் அரசுடன்தானே கூடிகுலாவினார்கள்............ தமக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்கியிருக்கலாமே???

  • கருத்துக்கள உறவுகள்

தென் துருவத்தில் வாத்துக்கள் உள்ளன. தமிழர்கள் புலம்பெயர்ந்து தென்துருவத்தில் வாழவில்லை. AFTA - Australasian Federation of Tamil Associations என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு தென் துருவ தமிழ் சங்கங்களின் சம்மேளனமா? முஸ்லீம் காங்கிரஸ் வட துருவத்து முஸ்லீம்களின் சம்மேளனமா?

அவுஸ்திரேலியத் தமிழ்ச் சங்கங்களில் கூட்டமைப்பு!!!

எங்களிடம் இவை தான் உள்ளன!

post-8395-0-93679700-1305603084_thumb.jp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவருக்கும் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை. ஆனாலும்.. தமிழ் தலைமைகளிடம் காணப்படாத இலங்கை முஸ்லீம் தலைமைகளின் புத்திசாதுரியத்தையும், தந்திரங்களையும் பாராட்டியாக வேண்டும்.

உந்த முக்கால் பயல்கள் செய்யிறது, புத்திசாலித்தனமும், தந்திரமும் என்றால், கருனாவும் பிள்ளையானும் டக்கிளசும் செய்யிறது அதிபுத்திசாலித்தனமும் அதிதந்திரமான செயல்களா? ஏன் என்றால் கூட குறைய இருந்தாலும் எல்லாப்பயல்களும் ஒரே செயலைத்தானே செய்கிறார்கள். :lol: :lol: :lol:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.