Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலையாளிகள் டெல்லியில் பதுங்கி பத்திரமாக உள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தட்டவர்கள் பத்திரமாக டெல்லியில் பதுங்கி இருக்க அந்தக் கொலையை காரணம் காட்டி தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Rajiv assassins hiding in Delhi: CPI

With the DMK ouster by the AIADMK on Friday the 13th, pro-LTTE parties are demanding that the Rajiv Gandhi assassination case be re-opened to find the “real” culprits.

At a public meeting here on Tuesday commemorating the second anniversary of the Mullivaikkal tragedy, D Pandian, state secretary of the CPI, an AIADMK ally, who witnessed the former PM's assassination said: “The Rajiv Gandhi assassination files need to be reopened. The culprits are sitting pretty in New Delhi. Mr P Chidambaram knows all about it.” He compared the Lankan government's "war" on LTTE leader V Prabhakaran which resulted in a "genocide" of innocent civilians to recent US military operations. He asked governments across the world to work towards rendering justice to the wronged in Sri Lanka. He ended his speech with a Veeravanakkam (greetings to the brave), an LTTE usage.

MDMK chief Mr Vaiko, Eelam Tamil Protection Movement leader, Mr P Nedumaran and the CM's friend Sasikala Natarajan's husband, M Natarajan, accused the Indian government of being apathetic to the misery of Lankan Tamils. They were referring to the recent joint statement issued by the Indian government with its Sri Lankan counterpart.

Calling the “Lessons Learnt and Reconciliation Commission” formed by the government of Sri Lanka as “Lies Launched and Renegade Commission,” Mr Vaiko said that no country can deny its people “right to lf-determination” given under the United Nations International Covenant of Civil and Political rights. Declaring he had lost his faith on the Union, he asked the newly formed state government to lift the ban on the LTTE.

Meanwhile the state today granted permission to the pro-LTTE head of the Naam Thamizar Movement, Seeman, to hold a meeting commemorating the first anniversary of the movement at Vellore. He was denied such permission by the erstwhile DMK government.

Source: The Statesman - dailymirror.lk (இது சிங்களப் பேரினவாத சார்பு ஆங்கிலப் பத்திரிகை ஆகும்.)

அப்போ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைத்து வைத்துள்ள நளினி, முருகன், பேரறிவாளன் போன்றோரை விடுவிக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சித தலைவர் சீமான் விடுத்த கோரிக்கையை கருத்தில் எடுத்து செயல் படுவாரா? அல்லது அதை தொடர்ந்து மறைக்கத் தான் சோனியாவின் 'டீ பாட்டி' ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப் பட்டதா? :unsure::rolleyes:

தலையங்கத்தை பார்த்ததும் பிரபாகரனும்,பொட்டம்மானும் டெல்கியில் இருக்கின்றார்கள் என நினைத்துவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்தை பார்த்ததும் பிரபாகரனும்,பொட்டம்மானும் டெல்கியில் இருக்கின்றார்கள் என நினைத்துவிட்டேன்.

அந்த அளவுக்கு நீங்கள் இந்திய மற்றும் சிறீலங்கா சிங்கள அரச ஊடகங்களாலும் வல்லாதிக்க சக்திகளின் பரப்புரைகளாலும் கருத்துரிமை என்ற போர்வையில்.. பக்கச் சார்ப்பாக நடக்க சிந்திக்க.. மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளீர்கள் என்பது தெரிகிறது.

எல்லாம் சரி, அப்ப ஏன் தலைவர் பேட்டியில் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார். நேரடியாக அதற்கும் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருப்பாரே. நான் எந்த கட்டுரை, பத்தியெழுத்தாளர்கள், பேச்சாளர்களையும் விட தலைவரை நம்புகின்றேன்

நேரடியாக "எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருப்பாரே" என்று அங்கலாய்ப்பவர், "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்று கூறியதை மட்டும் "நாம் தான் கொன்றோம்" என்று கூறுவதாக வசதிக்கேற்ப எடுத்துக்கொள்ளும் இலக்கிய ரசனை, தமிழறிவு அற்புதம் தான்

இவ்வாறு "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்பதை "நாம் தான் கொன்றோம்" என்று வசதிக்கேற்ப எடுத்துக் கொள்வது - அவரின் உள் மன நிலையை, உண்மையான சுய ரூபத்தை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

அதுவும் போதாதென்று "நான் எந்த கட்டுரை, பத்தியெழுத்தாளர்கள், பேச்சாளர்களையும் விட தலைவரை நம்புகின்றேன்" என்ற வேடத்திற்கும் குறைவில்லை.

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் கோலோச்சுவார்கள்!!!

நெடுக்காலை போவான் கூறியது போல கருத்துரிமை என்ற போர்வையில் சிலர் பக்கச் சார்ப்பாக நடக்க சிந்திக்க.. மூளைச் சலவை செய்யப்பட்டு, தமிழின படுகொலையாளர்களின், ஜனநாயக வேடம் போட்டுத்திரியும் அரச பயங்கரவாதிகளின் வாழ்நாள் கைக்கூலிகளாக மாறியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

நேரடியாக "எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருப்பாரே" என்று அங்கலாய்ப்பவர், "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்று கூறியதை மட்டும் "நாம் தான் கொன்றோம்" என்று கூறுவதாக வசதிக்கேற்ப எடுத்துக்கொள்ளும் இலக்கிய ரசனை, தமிழறிவு அற்புதம் தான்

இவ்வாறு "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்பதை "நாம் தான் கொன்றோம்" என்று வசதிக்கேற்ப எடுத்துக் கொள்வது - அவரின் உள் மன நிலையை, உண்மையான சுய ரூபத்தை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

அதுவும் போதாதென்று "நான் எந்த கட்டுரை, பத்தியெழுத்தாளர்கள், பேச்சாளர்களையும் விட தலைவரை நம்புகின்றேன்" என்ற வேடத்திற்கும் குறைவில்லை.

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் கோலோச்சுவார்கள்!!!

நெடுக்காலை போவான் கூறியது போல கருத்துரிமை என்ற போர்வையில் சிலர் பக்கச் சார்ப்பாக நடக்க சிந்திக்க.. மூளைச் சலவை செய்யப்பட்டு, தமிழின படுகொலையாளர்களின், ஜனநாயக வேடம் போட்டுத்திரியும் அரச பயங்கரவாதிகளின் வாழ்நாள் கைக்கூலிகளாக மாறியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

..அதாவது நான் ஒரு கைக் கூலி என்கின்றீர்கள்.

முதலில் கருத்துக்கு பதில் கற்றுக்கொள்ளுங்கள்; கருத்தாளரை தாக்காமல்

என்னுடைய இலக்கிய ரசனை, தமிழறிவு பற்றி உங்களிடம் பாராட்டு பெற வேண்டிய தேவை இல்லை.

கருத்துக்கு பதில் கருத்து எழுத முடியாத அளவுக்கு கருத்து பஞ்சம் ஏற்பட்டு, எழுதியவரை ஏமாற்றுக்காரன், கைக்கூலி, வேடதாரி என்று கூறும் உங்களைப் போன்ற கருத்தாளர்களால் ஆவது ஒன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
:( நிழலி, நீங்கள் இப்போது உரிமை கோருவதால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?? சோனியா உடனேயே மனமிறங்கி எங்களுக்கு விடுதலை தரப்போகிறாவா??

எல்லாம் சரி, அப்ப ஏன் தலைவர் பேட்டியில் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார். நேரடியாக அதற்கும் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருப்பாரே. நான் எந்த கட்டுரை, பத்தியெழுத்தாளர்கள், பேச்சாளர்களையும் விட தலைவரை நம்புகின்றேன்

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கான பதிலே அது......கேள்வி வேறு மாதிரி இருந்திருந்தால் பதிலும் வேறாக இருந்திருக்கும்....

ஒசாமா கொள்ளப்பட்டதைப்போல ராஜீவ் காந்தியின் மரணமும் ஒரு துன்பியல் சம்பவமே........

***

Edited by இணையவன்

:( நிழலி, நீங்கள் இப்போது உரிமை கோருவதால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?? சோனியா உடனேயே மனமிறங்கி எங்களுக்கு விடுதலை தரப்போகிறாவா??

ராகு செய்ததை செய்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் பறவாய் இல்லை செய்யாததை செய்யவில்லை என்று தெளிவாக சொல்ல வேண்டியது தானே?

சரி இனியாவது சொல்லி தெளிவுபடுத்தவேண்டியது தானே?

:( நிழலி, நீங்கள் இப்போது உரிமை கோருவதால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?? சோனியா உடனேயே மனமிறங்கி எங்களுக்கு விடுதலை தரப்போகிறாவா??

நாம் தொடர்ந்து சில விடயங்களை ஏற்காமல் இருப்பதால், மறைப்பதால் உலகமும் எம்மை அப்படியே நம்பும் என்று நினைப்பது தவறு.

இன்று இந்த கொலைக்கான விளைவுகள் எல்லாம் கடந்த ஒரு சூழ்நிலையில் இப்படியான கட்டுரைகள், பேச்சுகள் மீண்டும் பழையவற்றை கிளறவே வழி செய்யும். ராஜீவ் கொலை என்பது இந்திய மத்திய அரசுக்கு கிடைத்த ஒரு அவல். ஒரு சாட்டு அவ்வளவு தான். இந்தக் கொலை நிகழ்ந்து இருக்காவிடினும் கூட இந்தியா இன்று எப்படி எம்மை அழித்ததோ அதே போன்று தான் அழித்து இருக்கும். தன் நாட்டில் நடக்கும் சிறு கிளர்சிகளை கிளர்சிகளை கூட அடக்கி ஒருக்கும் ஒரு பயங்கரவாத தேசம், எம்மை மட்டும் அரவணைத்து இருக்காது

என்னைப் பொறுத்தவரைக்கும் ராஜீவ் கொலையை மறுப்பதை விட, அந்த கொலைக்கு காரணமான இந்திய இராணுவத்தின் படுகொலைகளையும், காட்டு மிராண்டிதனங்களையும் உலகத்தின் முன் மீண்டும் மீண்டும் கொண்டு செல்வதே சிறந்தது.

Edited by நிழலி

நளினி உள்ளிட்டோரை விடுவிக்க ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கோரிக்கை

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டோருக்கு விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரும், ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நளினி, ரவி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1991ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் 20 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் உள்ளனர். நளினி, ரவி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைவாச விதிகளின்படி தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், அதற்குத் தாங்கள் தகுதியானவர்களே என்றும் நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக நிரூபித்தும் உள்ளனர். ஆனால் தமிழக அரசு கூட்டணி அரசியல் தர்மம் என்ற பெயரில் இல்லாத பொல்லாத காரணங்களைக் கூறி, நியாயமாக அவர்கள் பெறக்கூடிய விடுதலையை தடுத்து வந்தது. இந்த நிலை தொடர்வது மானுட மனப்பாங்கிற்கு உகந்ததல்ல. மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற – காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயின் தம்பி-கோபால் கோட்சே விடுவிக்கப்பட்டு புனேயில் வாழந்து வருகிறார். எனவே ஆயுள் தண்டனை என்ற காரணத்தைக் காட்டி எந்த ஒரு குற்றவாளியையும் நிரந்தரமாக சிறைப்படுத்தி வைத்திருப்பது சிறைப்படுத்தலின் அடிப்படையாகத் திகழும் தத்துவத்திற்கு முரணானது ஆகும்.

எனவே இந்த நால்வரையும் விடுதலை செய்வதில் அரசுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவித்திடல் வேண்டும். அதன் மூலம் மனிதாபிமானத்தை தமிழக அரசு நிலைநிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் நிலை இன்னமும் கவலைக்குரியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களும் சிறையில் உள்ளனர். 1998இல் இவர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து 13 ஆண்டுகளாக சாவை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர்.

ராஜீவ் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாற்றப்பட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் உயரிழந்துவிட்டனர். கொலையாளிகளுக்கு இடமளித்தனர், கொலைக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது போன்ற சாதாரண குற்றங்களுக்காக தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேரும், அப்படிப்பட்ட ஒரு கொடும் தண்டனைக்கு உரியவர்கள்தானா? மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டாமா? 13 ஆண்டுகள் சாவை மட்டுமே எதிர்நோக்கி வாழ்ந்துவரும் இவர்களை இதற்கு மேலும் அதே நிலையில் வைத்து அவர்களை உயிருடன் கொல்லப்போகிறோமா? தண்டனை என்ற பெயரில் இவர்களின் வாழ்வுரிமை மறுப்பிற்கு போதுமான காரணங்கள் உள்ளனவா? இப்படி சிறையில் இருந்து இவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு இன்று வரை எவரும் பதில் கூறவில்லையே!

19 வயதில் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, இளமை பறிக்கப்பட்டு 20 ஆண்டுக்காலமாக சிறையில் வாடுகிறானே பேரறிவாளன் – பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றம் அவனது வாழ்வை சூனியமாக்க போதுமானதா? அப்படி நாம் கருதுவோமானால் அது நியாயமானதா? என்கிற வினாக்களை ஈர நெஞ்சுடன் மாநில அரசிற்கு நாம் தமிழர் கட்சி எழுப்புகிறது.

ராஜீவ்காந்தி கொலையில் பல மர்மங்கள் உள்ளன. அவைகள் அவிழ்க்கப்படவில்லை. அவரை சதித்திட்டம் தீட்டி கொன்றது தமிழினமே என்று உறுதிப்படுத்திடவே இவர்கள் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இராஜீவ் கொலையை ஒரு காரணமாக்கியே ஈழத் தமிழர் இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரித்து உதவியது என்று இந்தியாவில் மட்டுமல்ல, சிறிலங்க அமைச்சர்களும் கூறுகின்றனர். இப்படி தமிழினத்தின் மீது அபாண்ட பழி சுமத்தி, அதையே காரணமாக்கி தமிழினத்தை அழித்துள்ளனரே இது நியாயம்தானா என்ற வினாவை நாம் தமிழர் கட்சி எழுப்புகிறது.

‘பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்’ எனும் முதுமொழி இராஜீ்வ் கொலைக்கு மிகவும் பொருத்தமானது. எனவே இராஜீ்வ் கொலையோடு பின்னியுள்ள அரசியலை ஒதுக்கிவிட்டு, மனிதாபிமான உணர்வோடு – வாழ்வுரிமையை மதித்து இன்றைய உலகம் செல்லும் பாதையில் சென்று – இந்த மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்கள் இத்தனையாண்டுக் காலம் சிறையில் இருந்ததே பெரும் தண்டனை தான் என்பதை சட்ட ரீதியாக எடுத்துக் கூறி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி இந்த மாபெரும் மக்கள் திரளின் பேராதரவோடு தமிழக அரசிற்கு முன்வைக்கிறது.

http://www.alaikal.com/news/?p=70803

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, அப்ப ஏன் தலைவர் பேட்டியில் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார். நேரடியாக அதற்கும் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருப்பாரே. நான் எந்த கட்டுரை, பத்தியெழுத்தாளர்கள், பேச்சாளர்களையும் விட தலைவரை நம்புகின்றேன்

இந்த திரிக்கு சம்பந்தமில்லாத விடயம் என்றாலும்

இது புலிகளால் செய்யப்பட்டதாக தலைவர் ஒரு இடமும் குறிப்பிடவில்லை.

ஆனால் என்னைப்பொறுத்தவரை

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஏகொபித்த தமிழ் மக்களின் விருப்பத்துக்காக

தமிழ் மக்களால் அது செய்யப்பட்டது. அதற்கு தலைமை தலையசைத்திருக்கலாம்.

to: cmcell@tn.gov.in

Subject : Mr. Rajiv Ghandi's case : compassion to those held in prison

Hon. Selvi. Jeyalathitha Jeyaram,

The Chief Minister of Tamil Nadu, India.

I urge your goodwill to consider pardoning those who have been on death row and life in prison on late PM’s case. The court has the powers to do so, should your office put forward such a recommendation.

Many Tamils in Tamil Nadu around the world feel that You have the compassion towards these citizens. This would also help all of to close this unfortunate incident in our history!

Sincerely,

-----------------------

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஏகொபித்த தமிழ் மக்களின் விருப்பத்துக்காக

தமிழ் மக்களால் அது செய்யப்பட்டது. அதற்கு தலைமை தலையசைத்திருக்கலாம்.-----விசுகு

உண்மை. தமிழர்கான விடிவைவிட பழிவாங்கல்தான் முக்கியமாக இருந்தது.(படிக்காத தன்மை)

அதேபோல் தன்கணவரை கொலை செய்தவர்களை எத்தனை உயிர்களை பலிகொடுத்தாலும் கொல்ல மனைவி முடிவெடுத்ததும் உண்மை.

பிரியங்கா நளினியை போய் தனியாக சந்தித்தபின் திட்டவட்டமாகமுடிவு எடுக்கப்பட்டுவிட்டது.சோனியா இவ்வளவு காலமும் காத்திருந்ததே அதிகம் என பலர் சொன்னார்கள்.(மஜோரிட்டி அரசும்,இலங்கையில் சரியான தலைமையும் இல்லாததும் தான் முக்கிய காரணம்)

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஏகொபித்த தமிழ் மக்களின் விருப்பத்துக்காக

தமிழ் மக்களால் அது செய்யப்பட்டது. அதற்கு தலைமை தலையசைத்திருக்கலாம்.-----விசுகு

உண்மை. தமிழர்கான விடிவைவிட பழிவாங்கல்தான் முக்கியமாக இருந்தது.(படிக்காத தன்மை)

அதேபோல் தன்கணவரை கொலை செய்தவர்களை எத்தனை உயிர்களை பலிகொடுத்தாலும் கொல்ல மனைவி முடிவெடுத்ததும் உண்மை.

பிரியங்கா நளினியை போய் தனியாக சந்தித்தபின் திட்டவட்டமாகமுடிவு எடுக்கப்பட்டுவிட்டது.சோனியா இவ்வளவு காலமும் காத்திருந்ததே அதிகம் என பலர் சொன்னார்கள்.(மஜோரிட்டி அரசும்,இலங்கையில் சரியான தலைமையும் இல்லாததும் தான் முக்கிய காரணம்)

அது உங்களைப் போல மெத்தப் படிச்ச மேதாவியள் என்று உங்களை நீங்களே முதுகில தட்டி பீத்திக்கொண்டு திரியிரவையள் தான் விடிவை விட பழிவாங்கலில் சொந்த இனத்துக்கு எதிராக செயல்படுகிற ஆட்கள்.

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் நீங்கள் சொல்லும் பழிவாங்கல் குணம் பிரதிபலிக்கிறதே? அதை கூட உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றால் மெத்தப் படிச்ச/ பல பிரபல்யமானவர்களைத் தெரிந்தும் என்ன பிரயோசனம்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஏகொபித்த தமிழ் மக்களின் விருப்பத்துக்காக

தமிழ் மக்களால் அது செய்யப்பட்டது. அதற்கு தலைமை தலையசைத்திருக்கலாம்.

இந்த உரிமை கூரல் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

ராஜீவ் காந்தியின் மரணத்தை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொன்னதற்கும்.. அதை நாமே செய்தோம் அல்லது அந்தத் துன்பியலுக்கு நாமே காரணம் என்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.

அன்னை இந்திரா காந்தி டெல்லியில் சீக்கிய மெய்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட போது.. அவருக்காக அதிகம் அழுதவர்கள்.. ஈழத்தமிழர்கள். முழு ஈழமே சோகமயமானதாக இன்றும் ஆவணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

ஆனால் ராஜீவின் மரணம் அந்தளவுக்கு எதனையும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. அப்போது விடுதலைப்புலிகள் கூட இந்த மரணம் குறித்து எதனையும் சொல்லவில்லை. குற்றச்சாட்டுக்களை மட்டும் அவர்கள் மீது சுமத்தி.. இன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அன்றைய காங்கிரஸ் கட்சியை திருப்திப்படுத்த எடுத்த நடவடிக்கையின் விளைவாக சிகிச்சைக்காக தமிழகத்தில் தங்கி இருந்த அப்பாவி போராளிகள் சயனைட் குடிக்கச் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

பின்னர் கிட்டண்ணா... வங்கக் கடலில் வைத்து இந்தியப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த அறிவிப்பின் பின் தான் தேசிய தலைவர் இந்திய ஊடகவியலாளர்களை பகிரங்கமாக சந்தித்து தனது கருத்தை வெளியிடக் கூடிய சூழல் எழுந்தது. அப்போது அவர் ராஜீவின் மரணம்... தமக்கு மனதில் துன்பத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு என்று அது ஒரு துன்பியல் என்று குறிப்பிட்டார்.

அவர் அப்படிக் கூற ஒரு காரணமும் உண்டு. ராஜீவ் காந்தி படுகொலை செய்த மக்களை பிரதிநிதிப்படுத்தும் விடுதலைப் புலிகள்.. ராஜீவின் மரணத்திற்கு பகிரங்க இரங்கல் செய்வது என்பது தான் சார்ந்த மக்களை வேதனையில் தவிக்க விடுவது போன்றது. அந்த வகையில் தான் தலைவர் சரியான ஒரு பதத்தை அங்கு பாவித்தார்.

அந்தப் பதத்திற்கு ஊடகங்களும் இந்திய.. சிறீலங்கா கொள்கை வகுப்பாளர்களும் அளித்த விளக்கம் என்பது புலிகள் தாம் செய்தது ஒரு துன்பியல் நிகழ்வு என்று உரிமை கோருகிறார்கள்.. அல்லது வருந்துகிறார்கள் என்பதுதான். அதையே தான் நிழலியும் இங்கு பிரதிபலிக்கிறார். காரணம்.. அவரும் ஒரு முன்னாள் ஊடகவியலாளர்.

ஆனால்.. ராஜீவ் கொலை.. அதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள்.. அரசியல் தலைவர்களின் பிரச்சன்னக்கள்.. பிரசன்னங்கள் அற்ற நிலைகள் என்று பல காரணிகள்.. இங்கு கேள்விகளாக இன்றும் உள்ளன. அதுமட்டுமன்றி ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் அவரது கூட்டாளிகள் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது அதில் இருந்து விலகிப் போயிருந்தமை உட்பட பல விடயங்கள்.. இந்திய மற்றும் பிற உளவு அமைப்புக்களின் சதிகள் இதன் பின்னணியில் இருக்க வாய்ப்பளித்திருக்கிறது.

ராஜீவின் கொலையை மையப்படுத்தி ஒரு தமிழின அழிப்பை மட்டுமல்ல இந்தியா செய்திருக்கிறது. 1989 களில் சிறீலங்காவிடம் இருந்து பிரேமதாச அரசிடம் இருந்து இந்தியா பகிரங்க அச்சுறுத்தலை பெற்றது. அது விடுதலைப்புலிகளிடம் வந்திருந்த அச்சுறுத்தலை விட அதிகம். அதைத் தொடர்ந்தே இந்தியப் படைகள் ஈழத்தில் இருந்து விலக்கப்பட்டன. உண்மையில் இந்தியப் படைகள் விடுதலைப்புலிகளால் ஆயுத ரீதியில் விரப்பட்டிருக்கவில்லை. மாறாக.. ராஜதந்திர ரீதியிலேயே வெளியேற்றப்பட்டனர்.

அது இந்தியாவிற்கு ஒரு சாதாரண தோல்வி அல்ல. பிராந்தியத் தோல்வி. அதன் பிராந்திய நலனுக்கு எதிரான தோல்வி. அதில் இருந்து வெளிவர செய்யப்பட்ட ஒன்றாகவே ராஜீவின் கொலை அமைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியே முள்ளிவாய்க்கால் பேரவலமும்.. விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கையும்.

விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டிய தேவை என்பது பிராந்தியத்தில் தங்களை விஞ்சிய மேற்கத்திய தலையீடு இருக்கக் கூடாது. அதேபோல் சிறீலங்கா தங்களை மிஞ்சி சீனாவிடம் போகக் கூடாது என்ற இந்திய நிலைப்பாடுகளே. இதன் பின்னணியில் அமைந்ததே இந்திய தமிழீழ விரோத நிலைப்பாடு.. ராஜீவ் காந்தி படுகொலை. இதில் அமெரிக்காவின் சீன எதிர்ப்பு அணுகுமுறையும் ஒருங்கிணைகிறது. அதனை இந்தியா பயன்படுத்தி நிற்கிறது. இதுதான் உண்மை..!

அந்த வகையில் கம்னியூட்டுக்கள்.. ராஜீவ் காந்தி கொலையில் முதலாளித்துவ நாடுகளை சந்தேகிப்பதும்.. சீன எதிர்ப்பு இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதும் ஒன்றும் புதிதல்ல. அதையே பாண்டியனும் செய்திருக்கிறார்.

இதில் எமக்கு கிடைத்திருப்பது.. எமது போராட்டத்தை.. எமது இனத்தை அழித்தாவது.. தன்னை தற்காத்துக் கொள்ள இந்திய வல்லாதிக்கம் தயங்காது என்பதைச் சொல்வதையே. அந்த வகையில் இந்திய வல்லாதிக்கத்தை.. நாம் கட்டுப்படுத்த வேண்டின் எமக்கு தமிழக தொப்புள் கொடிகளின் இருப்பும் உறவும் மிக முக்கியமாகிறது. சிறீலங்காவிற்கு இந்தியாவை ஆட்டிப்படைக்க எப்படி எமது பிரச்சனை உதவுகிறதோ.. அதேபோல்.. இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தை ஆட்டிப்படைக்க எமக்கு தமிழக அரசியலில் செல்வாக்கு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்திய வல்லாதிக்கம்.. தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகளை எமக்கு எதிராக நிலை எடுக்க வைத்து.. தமிழ் மக்களை எமக்கு எதிராக திருப்பி விட ராஜீவ் கொலையை பயன்படுத்தியதை சாதாரணமாகக் கொள்ள முடியாது. அதன் பின்னணியில் திட்டமிட்ட செயல் இருக்க வேண்டும். இது அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலும்.. ஓசாமாவின் தேடலும் அமெரிக்க படைகளின் ஆப்கானிஸ்தான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கும் ஊடுருவலுக்கும் ஒப்பானது.

பாகிஸ்தானை அமெரிக்கா ஊடுருவ முக்கிய காரணம்.. தீவிர வாதம் அல்ல. சீனாவின் அதிக அரவணைப்பும்.. சீன உதவியோடு பாகிஸ்தான் கட்டி அமைக்கும் இராணுவ வலிமைகளுமே ஆகும்...! ஆப்கான் ஆக்கிரமிப்பு.. அல்குவைடா சார்ந்தது அல்ல.. அது பிராந்திய நலன் சார்ந்த ஒன்று..!

Edited by nedukkalapoovan

உண்மை. தமிழர்கான விடிவைவிட பழிவாங்கல்தான் முக்கியமாக இருந்தது.(படிக்காத தன்மை)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படு கொலை சம்பவத்தைப் பற்றிக் கருத்துக் கூறும் போது அது ஒரு துன்பியல் சம்பவம்(துக்கரமான நிகழ்வு என்பது இதன் விரிவான பொருள்) என்பது அந்தக் கொலையை நான்தான் செய்தேன் என்பதாகுமா?இந்தியப் பத்திரிகைகள்தான் தங்கள் வசதிக்கு எற்றவாறு எழுதினால் அது தலைவர் ஒப்புக் கொண்டது போலாகி விடுமா?ஆனால் இந்தியப் பத்திரிஜகைகள் என்ன நோக்கத்திற்காக அப்படி எழுதினாலும் ராஜீவ் செய்த தமிழினப் படுகொலைகளுக்கு இந்தத் தண்டனை ஏற்றதே என்பதால் தமிழ் மக்களுக்கு அந்த நிகழ்வு இந்திரா காந்தியின் மரணத்தைப் போல துன்பத்தைத்' தரவில்லை. மாறாக தவறு செய்தவர் தண்டிக்கப்பட்டார் என்ற மன நிலையே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதினாயிரம் பேரைக் கயமைத்தனமாகக் கொன்றவர்களே, தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறும் இந்த உலகில், தனி ஒரு மனிதனின் கொலை, அதன் சரியான பின்னணி வெளியே தெரியாத அல்லது தெரியப் படுத்தப் பட விரும்பாத கொலையை எத்தனை பேர் புலிகள் தலையில் கட்டிவிடத் துடிக்கின்றார்கள்!

திட்டமிடப் பட்டுக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப் படுவதே கொலை எனப் படுகின்றது!

திட்டமிடல் எங்கே, யாரால் செய்யப் பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாமலே, கொலை பழியை ஏற்றுக் கொள்வதில் எமக்கு என் இவ்வளவு ஆர்வமோ தெரியவில்லை!

எய்தவனைத் தேடுவதை விட்டு, அம்பை மட்டும் நோவதில் என்ன பயன்?

எய்தவர்கள் பத்திரமாக இருக்கின்றார்கள் என்பதையே இந்தத் திரியின் தலைப்பு எமக்குச் சொல்கின்றது!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதினாயிரம் பேரைக் கயமைத்தனமாகக் கொன்றவர்களே, தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறும் இந்த உலகில், தனி ஒரு மனிதனின் கொலை, அதன் சரியான பின்னணி வெளியே தெரியாத அல்லது தெரியப் படுத்தப் பட விரும்பாத கொலையை எத்தனை பேர் புலிகள் தலையில் கட்டிவிடத் துடிக்கின்றார்கள்!

திட்டமிடப் பட்டுக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப் படுவதே கொலை எனப் படுகின்றது!

திட்டமிடல் எங்கே, யாரால் செய்யப் பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாமலே, கொலை பழியை ஏற்றுக் கொள்வதில் எமக்கு என் இவ்வளவு ஆர்வமோ தெரியவில்லை!

எய்தவனைத் தேடுவதை விட்டு, அம்பை மட்டும் நோவதில் என்ன பயன்?

எய்தவர்கள் பத்திரமாக இருக்கின்றார்கள் என்பதையே இந்தத் திரியின் தலைப்பு எமக்குச் சொல்கின்றது!!!

உண்மை அதுதான் புங்கையூரான்.

இதற்குப் பின் உள்ள காரணிகளை ஆராயாமல் புலிகளை குற்றம் சொல்வதில் மட்டும் முன்னுக்கு நிற்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில், குற்றம் சாட்டப் பலர் இன்று டெல்லியில் சுகபோக வாழ்க்கை வாழுகின்றார்கள்.

அவர்களை விசாரித்தால், உண்மை வெளிவந்துவிடுமோ..... என்று, பம்மிக் கொண்டு,

ஊருக்கு இளைச்சவன் தமிழன் தலையில், வழக்கம் போலை எல்லாப் பழியையும் போட நினைக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.