Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • தொடங்கியவர்

கோமகன் பருத்தித் துறையிலையிருந்து ஏழாலை போறதற்கு அச்சுவேலி சந்தியிலை இறங்கி மாறாமல் எதுக்கு யாழ்ப்பாணம் போய் திரும்ப பஸ் பிடிச்சனியள். அதோடை குப்பிளான் சந்தியிலை பஸ்வை விட்டு இறங்கினதாய் எழுதியிருக்கிறீங்கள் குப்பிளானிற்கு பஸ் போகுதா??

அண்ணா , நான் அப்பதான் முதல் தரம் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போனனான் . அந்த ஆசைல அப்பிடி போய் மாறின்னான் . அந்த பஸ் சுன்னாகம் வரை போனது . அப்பவும் அண்ணை சொன்னவர் ஓட்டோவில வாடாப்பா எண்டு நான் தான் சொல்லுக் கேக்கேல :D :D :lol: :lol:

கருத்துப் பதிந்ததிற்கு மிக்க நன்றிகள் உடையார் , நாகேஸ் நிலாமதியக்கா , சாத்திரி :) :) :) .

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தகம் அடிப்பது என்பது பெரிய விடயம் அல்ல

புத்தகம் ஈசியா அடிக்கலாம். பிரச்சனை அவை விற்பதும் ஆட்கள் வாங்குவதும்தான் - முன்னர் யாழில் இளங்கவி என்றொரு கவிஞர் இருந்தார். அவர் ஒரு கவிதை நுாலை ஆர்வத்தோடு வெளியிட்டார். புத்தகம் வெளியான பிறகு அவரை யாழ் பக்கமே காணவில்லை.. :(
  • கருத்துக்கள உறவுகள்

பஸ் குப்பிளான் சந்தியில் எங்களை இறக்கிவிட்டது . அதிலிருந்து நாங்கள் ஓட்டோ பிடித்து அண்ணையின் வீட்டை அடைந்தோம் .

நம்ம ஊரிலை இறங்கியிருக்கிறியள் கோ நம்ம ஊர் குப்பிளான் பற்றியும் சொல்லுங்கோ. இனிமேல் குப்பிளான் பக்கம் போக முடியுமோ தெரியாது. போன நீங்கள் ஊரிலை என்ன மாற்றம் ஏற்றம் என்பதை எழுதினால் வாசிப்பம்.

நெருடிய நெருஞ்சி, 2012 முடியிறதிற்கிடையில் எழுதி முடிந்துவிடுமோ கோமகன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரிலை இறங்கியிருக்கிறியள் கோ நம்ம ஊர் குப்பிளான் பற்றியும் சொல்லுங்கோ. இனிமேல் குப்பிளான் பக்கம் போக முடியுமோ தெரியாது. போன நீங்கள் ஊரிலை என்ன மாற்றம் ஏற்றம் என்பதை எழுதினால் வாசிப்பம்.

கேணியடி புளியமரத்தை தறிச்சிட்டாங்களாம். சந்தி அக்காவின்ரை இடியப்பக்கடை 5 ஸ்ரார் கொட்டேலாய் மாறியிருக்காம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் சந்தைப்படுத்தல் உத்திகள் தொடர்புகள் இருந்தால் மட்டும் புத்தகம் அடிக்கும் விடயத்தில் இறங்கவும். நாங்களும் புத்தகம் அடிச்சம் எண்டு சொல்லுறதுக்காக புத்தகத்தை அடிச்சு கார் கராச்சிலையும் வீட்டு நில அறையிலையும் கட்டி வைக்கிறதுக்காக புத்தகத்தை அடிக்காதையுங்கோ. பிறகு உங்களை திட்டவேணும் எண்டு உங்கள் மனைவிக்கு தோன்றுகிற நேரமெல்லாம். நீங்கள் புத்தகம் அடிச்சது வாய்ப்பாய் போயிடும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அணுபவமோ?

நன்னா இருக்கு கோம்ஸ் அண்ணா

Edited by SUNDHAL

    நெருடிய நெருஞ்சி, 2012 முடியிறதிற்கிடையில் எழுதி முடிந்துவிடுமோ கோமகன் :rolleyes:

தயவு செய்து எழுதி முடியுங்கோ.
  • தொடங்கியவர்

புத்தகம் ஈசியா அடிக்கலாம். பிரச்சனை அவை விற்பதும் ஆட்கள் வாங்குவதும்தான் - முன்னர் யாழில் இளங்கவி என்றொரு கவிஞர் இருந்தார். அவர் ஒரு கவிதை நுாலை ஆர்வத்தோடு வெளியிட்டார். புத்தகம் வெளியான பிறகு அவரை யாழ் பக்கமே காணவில்லை.. :(

மிக்க நன்றிகள் சயந்தன் :) :) :) .

நம்ம ஊரிலை இறங்கியிருக்கிறியள் கோ நம்ம ஊர் குப்பிளான் பற்றியும் சொல்லுங்கோ. இனிமேல் குப்பிளான் பக்கம் போக முடியுமோ தெரியாது. போன நீங்கள் ஊரிலை என்ன மாற்றம் ஏற்றம் என்பதை எழுதினால் வாசிப்பம்.

நாணலும் தன் வாயால் கெடும் சாந்தி அக்கா :lol: . எதுக்கும் எங்கடை அண்ணையிட்டை கேட்டு குப்பிளானைப் பற்ரிச்சொல்லுறன் :) :) .

கோமகன் சந்தைப்படுத்தல் உத்திகள் தொடர்புகள் இருந்தால் மட்டும் புத்தகம் அடிக்கும் விடயத்தில் இறங்கவும். நாங்களும் புத்தகம் அடிச்சம் எண்டு சொல்லுறதுக்காக புத்தகத்தை அடிச்சு கார் கராச்சிலையும் வீட்டு நில அறையிலையும் கட்டி வைக்கிறதுக்காக புத்தகத்தை அடிக்காதையுங்கோ. பிறகு உங்களை திட்டவேணும் எண்டு உங்கள் மனைவிக்கு தோன்றுகிற நேரமெல்லாம். நீங்கள் புத்தகம் அடிச்சது வாய்ப்பாய் போயிடும்.

உங்கள் புத்திமதிகளுக்கு மிக்க நன்றிகள் சாத்திரியார் :) :) :) .

அலைமகள் யாழ்கவியின் கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

கேணியடி புளியமரத்தை தறிச்சிட்டாங்களாம். சந்தி அக்காவின்ரை இடியப்பக்கடை 5 ஸ்ரார் கொட்டேலாய் மாறியிருக்காம். :lol:

சென்றியிருக்கிறமெண்டு நீங்கள் இரவில இறக்கின கள்ளு முட்டியள் சுமந்த பனையளும் தறிபட்டிட்டுதாமோ ? :icon_idea:

நாணலும் தன் வாயால் கெடும் சாந்தி அக்கா :lol: . எதுக்கும் எங்கடை அண்ணையிட்டை கேட்டு குப்பிளானைப் பற்ரிச்சொல்லுறன் :) :) .

உங்கடை அண்ணை ஊரில பக்கத்தில இருக்கிறதாலை அவருடைய கண்ணில எல்லாம் வளமையாத்தான் தெரியும் கோ :lol: நீங்கள் புதிதாக அதுவும் கனகாலத்துக்கு பிறகு போன அனுபவம் குப்பிளான் நிலமையைத் தான் கேட்டேன். அண்ணை அண்ணியின் விவரணம் பயண அனுபவமாக வராது. :lol:

வேண்டாமண்ணே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சென்றியிருக்கிறமெண்டு நீங்கள் இரவில இறக்கின கள்ளு முட்டியள் சுமந்த பனையளும் தறிபட்டிட்டுதாமோ ? :icon_idea:

உங்கடை அண்ணை ஊரில பக்கத்தில இருக்கிறதாலை அவருடைய கண்ணில எல்லாம் வளமையாத்தான் தெரியும் கோ :lol: நீங்கள் புதிதாக அதுவும் கனகாலத்துக்கு பிறகு போன அனுபவம் குப்பிளான் நிலமையைத் தான் கேட்டேன். அண்ணை அண்ணியின் விவரணம் பயண அனுபவமாக வராது. :lol:

வேண்டாமண்ணே. :lol:

ஜயோ ஜயோ அது பலாலி ஆமி எவ்வளவு தூரத்திலை நிக்கிறான் என்ன செய்யிறான் எண்டு பாக்கிறதுக்குதான் நாங்கள் பனையிலை ஏறின்னாங்கள். அந்த நேரம் தண்ணி விடாச்சுதா..யாரோ பனையிலை பானையிலை தண்ணி ஊத்தி கட்டிவிட்டிருந்தாங்களா அதைதான் குடிச்சனாங்கள். :lol:

ஜயோ ஜயோ அது பலாலி ஆமி எவ்வளவு தூரத்திலை நிக்கிறான் என்ன செய்யிறான் எண்டு பாக்கிறதுக்குதான் நாங்கள் பனையிலை ஏறின்னாங்கள். அந்த நேரம் தண்ணி விடாச்சுதா..யாரோ பனையிலை பானையிலை தண்ணி ஊத்தி கட்டிவிட்டிருந்தாங்களா அதைதான் குடிச்சனாங்கள். :lol:

நாங்க நம்பிட்டோம்ல. :D

  • தொடங்கியவர்

img0700sp.jpg

ஏழாலை தொட்டதெல்லாம் பொன்கொழிக்கும் சிவந்தபூமி அரசபதவிகளில் பலர் இருந்தாலும் அவர்களது பக்கவருமானம் தோட்டமே. முக்கியமாக சிறுதோட்டப்பயிர்களே அவர்களது முயற்சியாகும். அண்ணையும் இதற்கு விலக்கு இல்லை. நாங்கள் வீட்டை அடைந்தபொழுது அந்தச்சூழல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது வீடு எங்கும் பசுமை போர்த்தி மனதிற்கு இதமாக இருந்தது. பலாவும், மாவும் , கமுகுவும், அழகான பூக்கண்டுகளும் அணிவகுத்தன. ஒரு பலாவில் பழம் பழுத்ததால் அதன் வாசம் எங்கும் பரவியிருந்தது. கமுகுவில் பாழை பிளந்து அழகாக இருந்தது .நான் வீட்டிற்குள் போகமல் வளவைச்சுற்ரி வந்து கொண்டிருந்தேன். பிலாமரத்துக்கு அடியில் ஒரு கூட்டிலே, இரண்டு அடுக்கு வசதிகளுடன் பத்துப் பதினைந்து முயல்கள் துள்ளி விழையாடின .அவைகளில் பலவிதமான தரங்களில் புல்லுகளை மேய்ந்து கொண்டிருந்தன. கூட்டுக்குள் அவை இருந்தாலும், அம்மா, அப்பா, அக்கா, அண்ணை, தங்கைச்சி, என்று உறவுகளுடன் சந்தோசமாகத் துள்ளி விழையாடின .எனக்கு இல்லாத ஒன்றை அந்த முயல்கள் பெற்றதை நினைக்கும்பொழுது, மனதில் முள் ஒன்று ஆழமாகக் கோடுபோட்டு இழுத்தது. எனது சிந்தனையை அண்ணையின் குரல் கலைத்தது,

img0697z.jpg

"இங்கை என்னடாப்பா செய்யிறாய் ? "

"உனக்கு என்னம் சின்னப்பிள்ளைக் குணம் விட்டுப்போகேல".

என்றவாறே கோப்பியைத் தந்தார்.

நான் வலிந்து சிரித்தேன் எனது முகமாற்ரத்தை உணர்ந்த அண்ணை,

" என்னடாப்பா நானும் நீ வந்தநேரம் தொட்டு பாக்கிறன் நீ சந்தோசமாய் இல்லை . என்ன பிரச்சனை ? அண்ணைதானே சொல்லு ".

" இல்லை அண்ணை எனக்கு எதிலையும் இங்கை ஒட்டுதில்லை ".

ஏன் அப்பிடி சொல்லுறாய் ? நாங்கள் உன்னை வித்தயாசமாய்ப் பாக்கேலையே ?

" எனக்கும் உங்கள் எல்லாரோடையும் நேரடி தொடர்பு விட்ட காலம் கூட அண்ணை அதால எல்லாமே இயந்திரத்தனமாக் கிடக்கு " .

" நீ தேவையில்லாமல் குளம்புறாய் . கதையோட கதையா நான் என்ர இலக்கிய கூட்டுகள் கொஞ்சப்பேரை நீ வந்திருக்கிறாய் எண்டு வரச்சசொல்லியிருக்கிறன் அவையும் வாறதாய் சொல்லீச்சினம் ".

" ஏன் அண்ணை ? நான் ஒண்டும் எழுதிப் பெரிசாய் வெட்டிக்கிளிக்கேல .

"அவை வாறதாய் சொல்லியிருக்கினம். நீயும் அவையளோட நாலு கதையளைக் கதைச்சால் தானே உனக்கும் இங்கைத்தையான் நிலமையள் விளங்கும் ".

"சரி அண்ணை அவையைச் சந்திப்பம்"

அண்ணையின் பிள்ளைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் . எல்லோரும் என்னைப்பற்ரி நன்றாகக் கற்பனை பண்ணி வைத்திருந்தார்கள் . எனது நிஜம் அவர்களுக்கு ஒரளவு ஏமாற்ரத்தையே தந்திருந்தது . அவர்கள் என்னை ஒரு வெள்ளையாக , நெடியவனாக , உருவகப்படுத்தியிருந்தார்கள் . அவர்களது சிறிய மனதின் கற்பனை அப்படி!!! . நான் அவர்களது கற்பனையைக் கேலி பண்ணிக்கொண்டு இருந்தேன் .நேரம் 11 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . அண்ணையின் கூட்டுகள் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தார்கள் . வீட்டின் பிலாமரத்தின் கீழ் அரட்டை தொடங்கியது . நான் அண்ணைக்கு வாங்கியந்த ஜே பி யும் , மெண்டிஸ் ஸ்பெசலும் ஒரு சிறிய மேசையில் நடுநாயகமாக இருந்தன . பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு தொடங்கியது எங்களது அரட்டை .

dsci0826l.jpg

எல்லோரும் எனது பார்வையில் இன்றய நிலமையை அறியவே ஆர்வம் காட்டினார்கள் . என்னுடன் சில இடங்களில் உடன்பட்டாலும் , பலதிற்கு அவர்கள் தங்களது வியாக்கியானங்களையே தந்தார்கள் . அவர்களின் வாதங்களில் இருந்து அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே தெரிந்தது .போரின் அவலங்களும் வன்னிப்பேரவலமும் அவர்களிடம் ஆறாவலியாக கீறிக் கிழித்திருந்தது.எனது கேள்வியான இளையசமூகத்தின் கலாச்சார சீர்கேட்டிற்கான அவர்களது பதில் ஏற்ருக் கொள்ளக்கூடியதாகவே இருந்தது .

29489018086080866104517.jpg

அதாவது ,< ஓர் இறுக்கமான சூழலில் வளர்ந்த இந்த இளையவர்கள் அபரீதமான தொடர்பாடலின் வளரச்சியில் இவர்கள் அள்ளுப்படுவது தவிர்க முடியாததே . ஆனால் , இவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை இதில் தெளிவுடன் இருக்கும்> என்றார்கள் . அத்துடன் புலம்பெயர் சமூகத்தையும் அவர்கள் ஒரு பிடி பிடிக்கத்தவறவில்லை .< புலம் பெயர் சமூகத்தின் அளவில்லாத காசு இவர்களை அடைவதும் ஒருகாரணம் என்று குறிப்பிட்ட அவர்கள் , வடக்கு கிழக்கு மக்களை ஒரு இரக்கத்துக்குரிய நபர்களாகப் பார்பதும் , அதைக் காரணங்காட்டி அந்த மக்களுக்குப் பணத்தை வாரியிறைப்பதாலும் , இந்த இளயசமூகம் திசைமாறுவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்று குமுறினார்கள் >. ஆனால் , எனக்கு அவர்களது வாதம் இறுதியில் இரசிக்கும்படியாக இருக்கவில்லை . இவர்களுக்கு இன்னல்கள் வரும்பொழுது கைகொடுக்கின்ற எங்களுக்கு ,அவர்களிடம் கேள்வி கேட்கின்ற உரிமைகளை அவர்கள் மறுத்தது எனக்கு வலியை ஏற்படுத்தியது . எம்முடன் உள்ள தொடர்புகள் பணத்தின் அடிப்படையில் தானா உருவானது ? அப்போ நாங்கள் இவர்களின் இரத்த உறவுகள் இல்லையா ? எனது மனம் இரத்தம் வழிந்து உறைந்தது .நான் அமைதியாக இருந்ததை பார்த்த அண்ணை என்னை நிஜத்திற்குக் கொண்டு வந்தார்.

"அப்ப எல்லாரும் சாப்பிடுவமே"?

" ஓம் அண்ணை எனக்கும் பசிக்கிது".

எல்லோரும் சாப்பிட இருந்தோம் . அண்ணியின் சமையல் கைப்பக்குவம் ஏனோ அம்மாவை நினைவிற்குக் கொண்டு வந்தது. அன்று இரவு அங்கேயே நின்று அடுத்த நாள் காலை பரித்தித்துறைக்கு வெளிக்கிடத் தயாரானோம். இந்தமுறை அண்ணை எங்களை பஸ் எடுக்கவிடவில்லை. நண்டுபிடித்து நின்று தனக்கு தெரிந்தவரின் ஓட்டோவைப் பிடித்து விட்டு, எங்களிடம் காசு கேட்கக் கூடாது என்று அவரிடம் சொல்லிவிட்டார்.

67129483154067828514522.jpg

67177483152767828514522.jpg

எங்களை ஏற்ரிக்கொண்டு ஓட்டோ அந்தக் காலை வேளையில் பரித்தித்துறைக்கு வெளிக்கிட்டது. ஓட்டோ உள்ள ஊரி சந்து பொந்துக்களில் எல்லாம் புகுந்து போனது. எல்லா இடமும் தோட்டங்கள் பசுமை போத்தியிருந்தன. தோட்டத்திற்கு அடித்த மலத்தியனின் நெடி மூக்கை அடைத்தது. ஒழுங்கைகளின் இருபக்கமும் ஏழ்மையும் பணக்காரத்தனமும் போட்டி போட்டு வீடுகளில் அணிவகுத்தன. சில மணி நேர ஓட்டத்திற்குப் பின்பு பரித்தித்துறையை வந்தடைந்தோம்.நாங்கள் மீண்டும் கொழும்பு போகின்ற நாள் நெருங்குகிறதால் மாமி பரித்திதுறை வடை மாலுக்குள் சுட்டுக்கொண்டிருந்தா .அன்ரி வடகம் காயப்போட்டுக்கொண்டிருந்தா .மாமா சாய்மனைக்கதிரையில் இருந்து கொண்டு இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் .நேரம் மதியத்தை நெருங்கிக்கொண்டிருந்தது .வெக்கை அனல் பறத்தியது. நான் மாமரத்தடியில் கதிரையைப் போட்டுவிட்டு , வரும் வழியில் வாங்கி வந்த உதயன் பத்திரிகையை மேய்ந்தேன். எனக்கு வந்த களைப்பால் நித்திரை எட்டிப்பார்தது. அப்படியே நித்திரையாகி விட்ட என்னை மனைவி எழுப்பினா. நான் எழும்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் படுத்து விட்டேன்.நான் மீண்டும் நித்திரையால் எழும்பியபொழுது பின்நேரம் 4 மணியாகியிருந்தது ஓரளவு வெக்கை அடங்கிக் கடல் காத்து வீசியது நான் கிணற்ரடியில் போய் வாளியால் அள்ளிக் குளித்தேன்.குளித்து வெளிக்கிட்டு நானும் மச்சானும் பஸ்ராண்டுக்கு வெளிக்கிட்டோம் எமது வழமையான பாதையால் நடக்கத்தொடங்கினோம் நாங்கள் பஸ்ராண்டை அடைந்தபொழுது வழமையான பரபரப்பில் அது அமிழ்ந்து போய்இருந்தது. நாங்கள் பஸ்ரண்டில் வவுனியா போவதிற்கு முற்பதிவு செய்தோம்பின்பு பிளேன் ரீ அடிக்க மீன்சந்தைக்குப் பக்கத்திலுள்ள ரீகடைக்குள் உள்ளட்டோம் பிளேன் ரீயையும் றோல்ஸை யும் எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்து நின்று கொண்டோம்.

29195417809723560406917.jpg

தொடரும்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் எனக்கு பொறாமை கோ....

இவ்வளவு பொறுமை எனக்கு இல்லை. எவ்வளவு மினக்கெட்டு ரசித்து இந்த படங்களை இயற்கையை எடுத்துவந்துள்ளீர்கள். அதற்காக அடுத்தமுறை கபேக்கு பதிலாக சாப்பாடு வாங்கித்தந்திடவேணும் :wub::lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிவந்தபூமி அரசபதவிகளில் பலர் இருந்தாலும் அவர்களது பக்கவருமானம் தோட்டமே முக்கியமாக சிறுதோட்டப்பயிர்களே அவர்களது முயற்சியாகும்.

இதுதான் பலரது கண்ணை குத்தியது...மாற்று பிரதேசமக்கள்,மாற்று இனத்தவர்கள்....

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை அழிச்சுப்பார்த்தான் ஆனால் ஆனால் அவன் மீண்டும் வளர்கிறான் தொடருங்கள் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் அந்த முயல் குட்டி எனக்கு இப்ப வேணும்..............

அந்த மரத்தை போல தானே அண்ணா எங்கள வாழ்க்கையும்?

ஊரை இழந்து உறவை இழந்து எல்லாவற்றையும் இழந்து..........இந்த வாழக்கை எங்களுக்கு மீண்டும் வருமா? சொந்த நாட்டை விட்டு இடம்பெயருவதை போல ஒரு கொடுமை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.................ஜ மிஸ் யாழ்பாணம்...........

வாவ் அந்த முயல் குட்டி எனக்கு இப்ப வேணும்..............

சீ......இந்த வயதில் முயல் குட்டியா :rolleyes: ஒரு அழகான மனித பெண் முயலாய்ப் பார்த்துப் பிடிக்கவும் சுண்டு :)

ஊரை இழந்து உறவை இழந்து எல்லாவற்றையும் இழந்து..........இந்த வாழக்கை எங்களுக்கு மீண்டும் வருமா? சொந்த நாட்டை விட்டு இடம்பெயருவதை போல ஒரு கொடுமை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.................ஜ மிஸ் யாழ்பாணம்...........

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கோமி அண்ணா படங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது.. யாழ்,திருநெல்வேலியில் பார்த்த தோட்டம்,மரஞ்,செடி,கொடி எல்லாம் கொண்டு வந்து போடுறீங்கள் மிக்க நன்றிகள்.அந்த நினைவுகள் தான் வருகிறது..:)

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் முயல் & தோட்ட படங்கள் எனக்கு பிடிச்சிருக்கு, தொடருங்க

Edited by உடையார்

நன்றி கோ!

ஊருக்கு நாங்களும் போய்வந்த உணர்வினை அளிக்கின்றீர்கள் தங்களின் எழுத்துக்கள் மூலம்.

தொடருங்கள்...! பொறுமையாக இரசித்து வாசித்து வருகின்றேன்! :)

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் விசுகு , புத்தன் , வாத்தியார் , சுண்டல் , அலைமகள் , யாயினி , உடையார் கவிதை , உங்கள் கருத்துகளுக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

முயல்க்கூடு போலத்தானே எங்கள் வாழ்க்கையும் எவ்வளவு அழகானது அந்த மண்ணில்...அந்த மண்ணிண் வெய்யில்...அதனால் ஏற்படும் அயர்ச்சி...அதனோடு வரும் குட்டித்தூக்கம்..துக்கம் முடிய கிணற்றுத்தண்ணியில் முகம் கழுவ வரும் புத்துணர்ச்சி...அப்படியே நண்பர்களைப் பார்க்க சைக்கிலை எடுத்துக்கொண்டு வீதியால் போக எதிர்ப்படும் அழகான பொம்பிளைப்பிள்ளையள்..அப்பொழுது எறித்துக்கொண்டிருக்கும் அழகான மாலை நேரத்து மெல்லிய மஞ்சல் வெய்யில்...நண்பர்களோடு ஒதுங்கும் தேநீர்க்கடை..அங்கு கிடைக்கும் இஞ்சிப்பிளேன்ரியும் சமோசாவும்...நண்பர்களுடனான அரட்டைகள்...எல்லாவற்றையும் ரிவைன்ட் பண்ண வைத்துவிட்டது உங்கள் பதிவு கோமகன் அண்ணா...! நன்றி அண்ணா கிடைக்கும் நேரத்தில் அடிக்கடி எங்களை ஊருக்கு அழைத்துச்செல்வத்ற்க்கு...

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் விவரனைக்காகவே அவரது பதிவுகள் வாசிகக் தூண்டும்..........இசையும் கதையும் போல் படமும் பதிவும் அருமை. இரண்டு நாட்களாக என் கணனியில் சிறு பிரச்சி னை .இன்று வழமைக்கு வந்து விட்டது

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் சுபேஸ் , நிலாமதியக்கா , உங்கள் கருத்துப் பதிவுகளுக்கு :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.