Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆற்றில் குளிக்காதீர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு வாழும் காலத்தில், ஆற்றில் குளித்து மரணமான தமிழர்களின் எண்ணிக்கை, அறியக்கூடியதாக 20 ஆட்களுக்கு மேல் இருக்கும். இங்குள்ள ஆறுகள் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் மிக ஆழமானவை. ஆற்றின் கரைப்பகுதியே பல இடங்களில் இரண்டு தொடக்கம் மூன்று மீற்றர் ஆழம் உடையவை. அதன் நடுப்பகுதி எட்டுமீற்றர் வரை ஆழம் உடையது. அத்துடன் எவ்வளவு வெய்யில் எறித்தாலும் ஆற்றின் நீர் 5 பாகை அளவில் தான் இருக்கும்.

அந்த குளிர் நீர் எமது உடலுக்கு ஏற்றதல்ல. எவ்வளவு நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும்..... ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் போது... குளிர் நீரில், எமது தசைகள் இறுகிவிடும். அதன் பின் எம்மால்... நீந்த முடியாது. எவ்வளவோ உலகச் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனும் தேம்ஸ் நதியில் நீந்தும் போது தான் மரணம் சம்பவித்தது. எம்மில் பலர் கோடைகாலங்களில் ஆற்றங்கரையில் கிறில் செய்வதும், நீந்துவதும், சிறிய பிள்ளைகளுடன் காற்று வாங்கப் போவதும் தவிர்கப் பட வேண்டியது. ஆற்றங்கரையில் பெரியவர்கள் கிறில் செய்வதில் கவனமாக இருக்கும் போது... அவர்களின் சிறிய பிள்ளைகள் ஆற்றில் கால் நனைத்து விளையாடப் போய் மூழ்கி இறந்த பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஜீவாவின் சகோதரனின் செய்தியை அறிந்த பின்னாவது. ஆற்றங்கரைக்குப் போவதை தவிருங்கள். இதனை உங்கள் நண்பர், தெரிந்தவர்களுக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கும் தயவு செய்து கூறுங்கள்.

Edited by தமிழ் சிறி

துன்பங்களும் துயரங்களும் தானாக எம்மைத்தேடி வருவதில்லை நாமாகவே தான் தேடிச் செல்கின்றோம் இந்த வகையிலே சிறி கூறுவது உண்மைதான்.

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துடன் உடன்படமுடியவில்லை சிறி.

மேலத்தேசங்களில் இதற்கான அனுமதி உள்ள இடங்களில் தாராளமாக குளிக்கலாம். அத்துடன் அதிக நீச்சல் தெரியாதவர்கள் அனுமதித்த இடங்களில், அனுமதித்தவர்களின் கண்காணிப்பு எப்பொழுதும் இருக்கும் இடங்களாகப்பார்த்து குளித்தல் நன்று. அதையும் மீறி சில நடந்துதான் உள்ளன. ஆனால் அதற்காக குளிக்கவே கூடாது என்பது எனக்கு சரியாகப்படவில்லை.

ஆனாலும் தங்களது கரிசனையை மதிக்கின்றேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
:o :o
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சுவிஸ் சென்றிருந்தபோது றைன் நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். இது ஜேர்மனியின் எல்லையை ஒட்டி உள்ளது. ஆற்றின் வேகத்தையும், தண்ணீரின் அளவையும் பார்த்தால் கை நனைக்கவே மனம் வராது..! :unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு வாழும் காலத்தில், ஆற்றில் குளித்து மரணமான தமிழர்களின் எண்ணிக்கை, அறியக்கூடியதாக 20 ஆட்களுக்கு மேல் இருக்கும். இங்குள்ள ஆறுகள் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் மிக ஆழமானவை. ஆற்றின் கரைப்பகுதியே பல இடங்களில் இரண்டு தொடக்கம் மூன்று மீற்றர் ஆழம் உடையவை. அதன் நடுப்பகுதி எட்டுமீற்றர் வரை ஆழம் உடையது. அத்துடன் எவ்வளவு வெய்யில் எறித்தாலும் ஆற்றின் நீர் 5 பாகை அளவில் தான் இருக்கும்.

அந்த குளிர் நீர் எமது உடலுக்கு ஏற்றதல்ல. எவ்வளவு நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும்..... ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் போது... குளிர் நீரில், எமது தசைகள் இறுகிவிடும். அதன் பின் எம்மால்... நீந்த முடியாது. எவ்வளவோ உலகச் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனும் தேம்ஸ் நதியில் நீந்தும் போது தான் மரணம் சம்பவித்தது. எம்மில் பலர் கோடைகாலங்களில் ஆற்றங்கரையில் கிறில் செய்வதும், நீந்துவதும், சிறிய பிள்ளைகளுடன் காற்று வாங்கப் போவதும் தவிர்கப் பட வேண்டியது. ஆற்றங்கரையில் பெரியவர்கள் கிறில் செய்வதில் கவனமாக இருக்கும் போது... அவர்களின் சிறிய பிள்ளைகள் ஆற்றில் கால் நனைத்து விளையாடப் போய் மூழ்கி இறந்த பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஜீவாவின் சகோதரனின் செய்தியை அறிந்த பின்னாவது. ஆற்றங்கரைக்குப் போவதை தவிருங்கள். இதனை உங்கள் நண்பர், தெரிந்தவர்களுக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கும் தயவு செய்து கூறுங்கள்.

கடலையும் சேர்த்து விடுங்கள் தமிழ் சிறி.இங்கு சிட்னியில் மட்டும் கடலில் போனவர்கள் எனக்குத் தெரிய ஐந்து பேர்.

அவர்களின் இருவரின் உடல்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப் படவில்லை.

விசுகு சொன்னது போல, அதற்கென அடையாளப் படுத்தப் பட்ட இடங்களில் குளிப்பது பாதுகாப்பானது. தாண்டு போனால் தூக்குவதற்கு சில பேர் கடமையில் இருப்பார்கள்!

caption.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பற்ற ஆற்றங்கரைகளில் பாதுகாப்பற்ற முறைகளில் குளிக்க எப்படி அனுமதிக்கினம் என்றதுதான் புரியல்ல. கடந்த காலச் சம்பவங்களில் இருந்து சுவிஸ் பொலிஸார் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி கற்றிருந்தால் ஒன்றில் ஆபத்தான ஆற்றங்கரைகளுக்கு போவதற்கு தடைவிதித்திருப்பார்கள்.. அல்லது தகுந்த உயிர்க்காப்பு உபகரணங்களோடு மட்டுமே அந்தப் பகுதிக்கு போக முடியும் என்று கட்டுப்பாடு போட்டிருப்பார்கள்.

அநியாயமாக உயிர்களை இவ்வாறு பலியிட்டு விட்டு சட்டங்களை போடுவது இறந்து போனவர்களுக்கு பயனில்லை என்றாலும்.. எதிர்காலத்திலாவது இவை தவிர்க்கப்பட வேண்டும். உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுப்பார்களா..????! மேற்கு நாடு ஒன்றில் இவ்வளவு அசட்டையீனம் என்பது கவலை அளிக்கிறது.

அதுமட்டுமன்றி எம்மவர்களும் எச்சரிக்கைகளை அசட்டை செய்துவிட்டு ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவை தொடர்பிலும் எம்மவர்களை அறிவுறுத்த வேண்டும்.

அண்மையில் ஒரு பிரபல்ய நிறுவனம் ஒழுங்கு செய்த ஒன்றுகூடலுக்காக வழங்கப்பட்ட பூங்காவை அசிங்கம் செய்ததற்காக அந்த நிறுவனத்திற்கு அந்தப் பூங்காவை எதிர்காலத்தில் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தமிழர்களுக்கு சொந்தமானது. இவை தேவையா..??! :unsure::(:o

யார் என்ன தான் சொன்னாலும் நாம் வருமுன் காப்போமாக இருப்பின் இவ்வாறான அநியாய இழப்புக்களை தவிர்த்து மகிழ்ச்சிகரமாக வாழ முடியும்.

Edited by nedukkalapoovan

இங்கிலாந்து ஆறுகளில் யாரும் குளிப்பதைக் கண்டதில்லை. தேம்ஸ் நதி நீர் அழுக்காக இருக்கும்.

அதுமட்டுமன்றி எம்மவர்களும் எச்சரிக்கைகளை அசட்டை செய்துவிட்டு ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவை தொடர்பிலும் எம்மவர்களை அறிவுறுத்த வேண்டும்.

எம்மவர் அதிகம் ஆட்கொள்ளப்படுவது மதுவினால். மதுவை அளவு கடந்து குடித்துவிட்டு கடலில்/ ஆற்றில் இறங்குவது கூடாது. மேலும் எம்மவரில் பலருக்கு நீச்சல் தெரியாத போதும் நீந்த முற்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெயில் காலங்களில் நீரைக்கண்டால் கால் நனைக்க ஆசை. குளிக்க ஆசை. ஆசையே விபரீதமாகவும் போய்விடுகிறது.

நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் இறங்குவதே தப்பு.

எமதினம் இழந்த உயிர்கள் ஏராளம். தேவையில்லாமல் எந்த ஒரு உயிரும் இழக்கப்படக்கூடாது. இதை தவிக்க பல வழிகளில் நாம் முயற்சிக்கவேண்டும்.

இந்த பிரச்சனை பல நாடுகளிலும் தமிழர் தரப்பில் அதிகம் உள்ளது. எமது ஊடகங்கள் இவை பற்றிய விழிப்புணர்வை செய்வது அரிது. நீச்சல் தெரிந்தாலும் சிலவேளைகளில் சில தவறுகளால் அநியாயமாக உயிர்கள் இழக்கப்படுகின்றன. எமது சிறுவர்களுக்கு இயலுமான அளவுக்கு நீச்சல் அறிவும் 'எதை செய்யக்கூடாது' என்பது பற்றிய அறிவும் சிறு வயது தொடக்கம் படிப்பிக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போனவருடம் எனக்கு தெரிந்த ஒருவரை கடல் கீழால் இழுத்து மூச்சையடைய செய்துவிட்டது. ஒருவாறு பணியாளர்கள் காப்பாற்றி கரையில் கொண்டுவந்துபோட்டுவிட்டு அவர்கள்கோபத்துடன் இவர்களிடம் கேட்டது சாவதெற்கென்றே இங்கு வருகின்றீர்களா என்று.

காரணம் மயக்கமடைந்தவர்கள் நீளக்காற்சட்டையுடனும் சேட்டுடனும் கிடந்தார். பக்கத்தில் அழுது கொண்டு நின்ற அவரது மனைவி முழுப்பாவாடை சட்டையுடன் நின்றார். :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் இந்த றைன் நீர் வீழ்ச்சி பற்றி தேடி படித்து விட்டு இப்படியான இடங்களில் போய் கூட்டங்களோடு கூத்தடித்து ஆபத்துக்களில் மாட்டுபவர்களின் மீது தான் கோவம் ஏற்பட்டது..

கூடியவரைக்கு இவற்றை தவிர்த்துக் கொண்டால் வீணாக ஏற்படக் கூடிய சில உயிர் இளப்புக்களில் இருந்து நம்மை நாமே பாது கொள்ளக் கூடியதாக இருகுக்கும் என்பது எனது எண்ணம்.ஒரு உயிர் இளப்பு என்பது அந்தக் குடும்பத்தை எவ்வளவு பாடாய் படுத்திவிடும் என்பது யாவரும் அறிந்த ஒரு விடையம்.வேறு,வேறு இணையங்களில் கூட இந்த றைன் நீர்வீழ்ச்சியில் போய் விபத்தில் அகப்பட்ட இளைஞர்கள் பற்றிய செய்தி வந்து இருந்திச்சு.அந்தச் செய்தியைப் படிப்பதற்கே மனசுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்திச்சு..இதுவரைக்கும் நமது இனம் இளந்த உயிர்கள் போதும் என்று நினைக்கிறன்.இனிமேலும் தயவு செய்து யாரும் ஆறு,கடல் என்று போய் உங்கள் உயிருக்கே ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள்..

சற்று சிந்தித்துப் பாருங்கள் இப்படியான உயிர் இளப்புக்களால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை..முக்கியமாக தாய்,மனைவி என்று இருப்பவர்களுக்கு எவ்வளவு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டு போகிறீர்கள்..எங்கள் சமுதாயம் ஒரு ஆணுக்கு துணையாக வந்து இருக்கும் பெண்ணைப் பார்த்து எவ்வளவு எல்லாம் கேலி செய்யும்..எத்தனை விதத்தில் கதைப்பார்கள் என்பதை எல்லாம் புரிந்து கொண்டு நடவுங்கள்..எதிர்வரும் காலத்திலாவது இதை எல்லாம் கருத்தில் கொண்டு நடவுங்கள்..

கிட்டத் தட்ட ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்று நினைக்கிறன் ..சுவிஸ்சலன்ட் நாட்டில் எனது உறவுக்காரர் ஒருவர் இப்படித் தான் ஆற்றில் குளிக்கப் போய் இறந்துட்டார்..அவரின் தாயார் இப்போது கூட அந்த அண்ணாவை மாதிரி வேறை யாரையாவது கண்டால் உடன் அளத் தொடங்கிடுவார்..நல்ல நகைகள் கூட போட மாட்டார்..திருமணவீடு மற்றும் நிகழ்வுகளுக்கு கூட அந்த நேரம் போக மாட்டா..எல்லாம் முடிந்த பின்பு தான் வீட்டை போவார்..இந்த நிலைமை யாரால் ஏற்பட்டது.....?தேவை அற்று கூட்டங்களோடு போய் இறந்து விட்ட பிள்ளையால் தானே..ஆகவே யாரும் நான் சொல்வதை தப்பாக நினைக்காதீர்கள்...முடிந்த மட்டுக்கு இப்படியான விடையங்களில் போய் பங்கு பற்றி விட்டு வீண் உயிர் இளப்புக்களை சந்தித்துக் கொள்ளாதீர்கள்..நான் சொல்வதில் தப்பு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.நன்றி. :(:(

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் சுவிசில் நீச்சல் தடாகத்திலேயே(நீச்சல்பழகப்போன) ஒரு தமிழ்ப்பிள்ளை பிள்ளை இறந்தது.பாதுகாப்பு அதிகாரிகளும் பயிற்றவிப்பாளர்களும் இருந்தும் என்ன பயன்.அது மட்டுமல்ல பிரத்தானியாவில் தமிழரின் நீச்சல் போட்டி ஒன்றில் பல பிள்ளைகள் நீரில் முழ்கினார்கள்.எதில் போட்டி போடுவதென்பது(நீச்சல்தெரியாட்டியும் தமிழர்களுக்குத் தெரியவில்லை.)விளையாட்டு நடத்தினவர்களும் பணத்தை மட்டும் பார்த்தார்கள் அந்த பிள்ளைக்கு நீச்சல் தெரியுமா என்று அதற்குரிய ஆவணத்தைப் பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாகன விபத்தும் நீரில் மூழ்கியும் தான் இங்கே இளவயதில் மரணிப்பதில் அதிகமாக இருக்கின்றது.

இதற்கு ஒழுங்கு விதிகளை மீறுவதே முதன்மை காரணமாகவும் உள்ளது. தற்போதைய தலைமுறை எதிர்மறையாகவே உள்ளது

தயவு செய்து அடுத்த தலைமுறையை ஆவது ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு வாழும் ஒரு தலைமுறையாக வாழ பழக்க வேண்டும். பழக்குவதென்றால் அதை முதலில் நாம் கற்று கொள்ள வேண்டும்.

ஒரு கடலை நீந்தி கடக்க தெரிந்த வெள்ளை காரனும் ஒரு படகில் செல்வதென்றால் மிதப்பு அங்கியை அணிந்தே செல்வான்.....

ஆனால் நீந்தவே தெரியாத ஒரு தமிழன் அதை தொடவும் மாட்டான் படகில் எமு ஆபத்தான இடமோ அங்கேயே அசட்டையாக நிற்பான்............. அதில் ஒரு பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா சுவிஸ் சுவிஸ் என்று வெருட்டாதையுங்கப்பா :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம், இதே மாதத்தில் றைன் நதியில் குளித்த இருவர் பலியாகி உள்ளார்கள்.

அது பற்றிய செய்தியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

http://www.varudal.com/index.php?option=com_content&view=article&id=909:2010-07-13-15-45-43

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றில் குளித்தாலும் சரி,கடலில் குளித்தாலும் சரி குளிக்கும் போது மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் இது தான் மிகவும் முக்கியம்...நீச்சல் தெரிந்த விற்பன்னர்களே விபத்தில் இறக்கிறார்கள் காரணம் விதி...அவர்கள் தண்ணீருக்குள் தான் இறக்க வேண்டும் என்பது ஆண்டவனின் கட்டளை

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றில் குளித்தாலும் சரி,கடலில் குளித்தாலும் சரி குளிக்கும் போது மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் இது தான் மிகவும் முக்கியம்...நீச்சல் தெரிந்த விற்பன்னர்களே விபத்தில் இறக்கிறார்கள் காரணம் விதி...அவர்கள் தண்ணீருக்குள் தான் இறக்க வேண்டும் என்பது ஆண்டவனின் கட்டளை

சரியுங்கோ ரதியானந்தா................ :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.