Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தளத்தினை மூடி விடுதல்??????????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையின் மேற்கோளுக்கு, நெல்லையின் பதில் என்ன?

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா????

அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்?

மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது?

.....

ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணலாம்.

உங்கள் கருத்துக்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுவருடங்களுக்கு முன்பு யாழில் மோகன் அண்ணா.

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.

......

.........

.............

முதற் கட்டமாக

- களத்தின் பல கருத்துப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.

- புதிய அங்கத்துவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

மோகன்

*****************************************************************************************************************************************************************************************************

இப்பொழுது யாழில் மோகன் அண்ணா

வணக்கம், உங்களை யாழ் கருத்துக்களம் அன்புடன் வரவேற்கின்றது!

நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களைப் பதிந்து கொள்ளலாம். அத்துடன் ஏனைய கருத்தாடல்களில் பங்குபற்றி உங்கள் கருத்துக்களை வைக்கலாம்.

உங்களை நீங்கள் மிக இலகுவாக இங்கே பதிந்து கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசம்.

பதிந்து கொள்ள மேலே New user? Register என்பதில் அழுத்திப் பதிந்து கொள்ளுங்கள்.

பதிவதில் சிரமங்கள் இருப்பின் அறியத் தாருங்கள்.

http://www.yarl.com/contact

…………………………………………………………………………………………………….................................................................................................................................................

இரண்டு நாட்களுக்கு முன் நெல்லை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது நெல்லை

... இங்கு நான் சில கேள்விகளை முன் வைத்தேன். ஏன் யாழை தொடர வேண்டும்? ... இந்தக் கேள்விகள் கேட்டதற்கு ... நெல்லைக்கு நேற்று .. இவன் என்ன எல்லோரையும் கேள்வி கேட்பது, இவன் கண்டிப்பாக சீன/யஷ்யா உளவாளியாகத்தான் இருக்க வேண்டும்! என்ற இன்னொரு திரிக்கு மேல் ... நெல்லை ஓர் துரோகி!!!!!!!!!!!??????????

ஒருவன் பதினொரு வருடமாக இந்த யாழை தன் செலவில் ... நானும் ஏறக்குறைய அத்தனை வருடம் பார்க்க தொடங்கி ... பத்து வருடங்களாக குப்பையும் கொட்டுகிறேன்!!! ... இன்றுவரை நாம் பொழுது போக்க ...!!!! ... யாராவது ஒருவர், இதற்கு எவ்வளவு செலவு போகிறது? இச்செலவை எவ்வாறு பகிரலாம்? சரி, அவன்பாவி தனிநபர்களிடன் வாங்குகிறான் இல்லை, அதற்கு மாற்றீடாக ஏதாவது விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து, அதனை சரி செய்வோம்(நான் உட்பட)???? ... ஏதாவது???????

அப்படிப் போடுங்கோ. நான் அடிக்கடி பாக்கும் தளம் எண்டால் அது யாழ் தான். வேலையில் கூட எப்பவும் ஒரு விண்டோவில் யாழ் குந்திக்கொண்டிருக்கும். எத்தினையோ நான் வேலையில் யாழை வாசிச்சு மனம் விட்டு சிரிக்க பக்கத்தில இருக்கிற வெள்ளை "what is so funny" எண்டு கேள்வி கேட்டிருக்கு. ஒருவகையில நான் யாழுக்கு அடிமையாகின மாதிரி தான். புலம் பெயர்ந்த இயந்திர சூழலில் கொஞ்சமாவது தமிழில் கதைக்க எழுத கிடைக்கும் சந்தர்ப்பம் எண்டால் அது யாழ் தான். கருத்துக் களத்தில் என்னதான் மோதினாலும் யாழில் இருக்கும் பலரையும் மிகவும் பிடிக்கும் அத்துடன் பல திறமையான, அறிவு பூர்வமா சிந்திக்கிற ஆக்களும் வந்து போற இடமா யாழ் இருக்கிறதால பலதும் பத்தும் எண்டு புது விசயங்களையும் அறியக் கூடியதாய் இருக்கு. வளர்ந்த ஆக்களும் சின்னப் பிள்ளைதனமா நடந்து கொள்ளுவது தான் மிகவும் வேதனைக்குரியது. நாங்கள் வாழப் போவதே கொஞ்சக் காலம், இருக்கும் பொது சந்தோசமாக வாழ்ந்து அனுபவித்துப் போட்டுப் போறத விட்டிட்டு இப்பிடி ஆளுக்கு ஆள் அடிபடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

மனிசனாப் பிறந்தவனுக்கு கொஞ்சம் எண்டாலும் ரோசம் இருக்கோணும், நான் எண்டால் போறன் எண்டு சொன்னால் மூடிக் கட்டிக்கொண்டு போடுவன், அத விட்டுப் போட்டு சும்மா ஆக்களுக்கு கடுப்பேத்திக்கொண்டிருக்க மாட்டன். உங்களுக்கு களவிதிகளை மத்தித்து கருத்தாட முடியவில்லையா, மற்றவர்களோடு மரியாதையாக கதைத்துப் பேச தெரியவில்லையா, இதுகளால இரவு நித்திரை வருகுது இல்லையா பேசாமல் யாழை விட்டுப் போய் விடுங்கள். இப்பிடியான திரிகளை ஆரம்பிப்பது இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதைக்கும் ஆப்பு வைக்கும் என்பதே எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களாகப் புலத்தில் வாழும் எனது தமிழ் இன்னும் உயிரோடு இருப்பதற்கு, யாழ் களம் போன்ற சில களங்களே முக்கிய காரணமாகும்!

களம் என்பதன் பொருளே, போராடும் இடம் என்பதே!

கருத்துக் களம், என்பதன் அர்த்தம் ; கருத்துக்கள் மோதுமிடம்!

வகுக்கப் பட்ட விதிகளுக்கமைய கருத்து மோதல்கள் இடம் பெறும்போது, ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படும் என்பது எனது கருத்து!

விதிகள் மீறப் படும்போது, அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு எதிரொலிக்கும், தீர்வுகள் வரும் வரை, அதன் விளைவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

மனிதன் ஒரு சமூக மிருகம்!

சமூகத்தை, இழந்தவர்கள், அல்லது சமூகம் ஒன்றில் இருந்து பலவந்தமாகப் பிடுங்கி எறியப் பட்டவர்கள். ஏதோ ஒரு விதத்தில் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

அந்தத் தேவையை யாழ் நிறைவு செய்கின்றது!

இதற்காகவாவது, யாழ் களம், வாழ வேண்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாரு யாழ்க்கருத்துக்களப்பல்லி சொல்லியதா?... அந்தப்பல்லி எனக்குச் சொல்லேல்லையே :D

நீங்கள் சும்மா கவிதை என்று கற்பனையில மிதந்தா எல்லாம் பல்லி சொல்லாது..............

அக்கா நீங்கள்........... யாழுக்கு ஆப்பு வைப்பமா? யாரையாவது போட்டுகொடுப்போமா? என்று எதாவது நல்லதை சித்திச்சாதான் பல்லி வந்து சொல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு மேல் ... தனிநபர்களின் விளம்பரங்களும், தனிநபர் தாக்குதல்களும் (நான் உட்பட), மிரட்டல்களும், சட்டங்களுக்கு முரனான செயற்பாடுகளுமே இங்கு மலிந்து போய் கிடக்கின்றன.

...

:o:o:o:D:D:D

  • தொடங்கியவர்

மல்லையின் மேற்கோளுக்கு, நெல்லையின் பதில் என்ன?

... சிறி, .. பல்லி சொன்னதாக எழுதுதினேன், புரியவில்லை? ... அதற்கு மேல் ... சொல்வதானால் ... இத்திரியை தொடங்கிய அன்றே, ஓர் மட்டு தூக்கியது, அத்துடன் வேறு சிலதுகளையும்!!!! ஆனால் நேற்று மீண்டும் ... இங்கு!!!! ... புரிந்தால் ..???

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் இனியும், எங்களுக்குள் புடுங்குப்படுவது அழகல்ல.

ஒவ்வொருவரும், ஒருத்தருக்கு உறுதுனையாக இருப்பதே நன்று.

நாங்கள், அடுத்த, தலை முறையை தயார் படுத்தும் வேளையில்....

சாந்தியோ..., சாத்திரியோ..., நெல்லையனோ.... மற்றவர்களை கவலைப் படுத்தும் விதத்தில் கதைப்பது வேதனையாக உள்ளது.

நீங்கள் மூவரும் சந்தோசமாக இருந்தால் தான்....உங்களுடன் உரையாடுவேன்.

இல்லாவிட்டால்.. என்னை மறந்து விடுங்கள். நன்றி.

  • தொடங்கியவர்

நீண்ட காலங்களாகப் புலத்தில் வாழும் எனது தமிழ் இன்னும் உயிரோடு இருப்பதற்கு, யாழ் களம் போன்ற சில களங்களே முக்கிய காரணமாகும்!

களம் என்பதன் பொருளே, போராடும் இடம் என்பதே!

கருத்துக் களம், என்பதன் அர்த்தம் ; கருத்துக்கள் மோதுமிடம்!

வகுக்கப் பட்ட விதிகளுக்கமைய கருத்து மோதல்கள் இடம் பெறும்போது, ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படும் என்பது எனது கருத்து!

விதிகள் மீறப் படும்போது, அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு எதிரொலிக்கும், தீர்வுகள் வரும் வரை, அதன் விளைவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

மனிதன் ஒரு சமூக மிருகம்!

சமூகத்தை, இழந்தவர்கள், அல்லது சமூகம் ஒன்றில் இருந்து பலவந்தமாகப் பிடுங்கி எறியப் பட்டவர்கள். ஏதோ ஒரு விதத்தில் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

அந்தத் தேவையை யாழ் நிறைவு செய்கின்றது!

இதற்காகவாவது, யாழ் களம், வாழ வேண்டும்!!!

நன்றிகள் புங்கையூரான்! ... நிறைகுடம் தளம்பாது என்பார்கள் ... நீர் மட்டுமல்ல இங்கு நெடுக்கர், யூட், ரதி, நிழலி, தப்பிலி, நிலாமதி, சகாரா, ஹரி முக்கியமாக அகோதா இப்படி இன்னும் சிலர் எதன் கீழ் கருத்தெழுதினாலும் இப்படித்தான் கருத்துக்கள் வரும்! போட்டோம்/உடைத்தோம் என எழுதும் என் போன்றோர் போல் வராது!!!!

இத்திரியில் ... ஓர் கேள்வியே தலைப்பாக இருந்தது, மாறாக மூடுங்கள் என்ற கோரிக்கையா விடப்பட்டது???? ... ஏதோ சொல்ல வேண்டும் என்று பட்டதை மறைமுகமாக எழுதுதினேன் ... யாழை எவ்வாறு தொடர செய்யப்போகிறீர்கள் என்று?? ... மோகனின் சுமைகளையும் பகிர்ந்து கொண்டு செல்லப்போகிறீர்கள் என்று??? .... அது கூட விளங்கிக் கொள்ளப்படாமல் ... சீனா/இந்திய/ரஷ்ய உளவுத்துறையுடன் சேர்ந்தியங்கும் நெல்லை, யாழை மூட சதி ... என்றொரு திரியே வந்தது!!!!!!

... இத்திரிக்கு முன், சில வருடங்களுக்கு முன் மோகன் மூடப்போவதாக முன்னறிவிப்பு விட்டு ஓர் திரி இங்கிணைக்கப்பட்டிருந்தது. அது இப்பவும் இருக்கிறது, அதில் நெல்லை எழுதியவற்றை பார்த்தால் .... புரியும்!!!!

Edited by Nellaiyan

நெல்லையன், உங்கள் ஆக்ரோசமான கருத்துக்களை வரவேற்பவன். விமர்சனங்கள் தேவையும் கூட. ஆரோக்கியமான விமர்சனங்கள் திட்டுவதற்கு அல்லாமல் திருத்துவதற்கே என நம்புவபன்.

அதைவிட நீங்கள் நல்ல கலை ஆர்வலரும் கூட.

உங்கள் ஆதங்கத்திற்கான உரையாடலை நான் பார்க்கவில்லை.

அதற்காக யாழை மூடுவதோ அல்லது நீங்கள் யாழை விட்டு விலகுவதோ இதற்கு பரிகாரமில்லை. மன அழுத்தத்தைத்தான் தரும். சில கெட்ட நிகழ்வுகளை மறந்து விடுதல் நல்லது.

இந்த சம்பவங்கள் யாழ் கள உறவுகளையும் மிகவும் பாதித்து இருக்குமென நினைக்கிறேன். சகலத்தையும் மறந்து ஒற்றுமைப்படுங்கள்.

இதில் சம்பந்தப்பட்ட உறவுகள் சாந்தி, சாத்திரிக்கும் இதே வேண்டுகோள்தான். உங்கள் உதவிகளை எதிர்பார்த்துப் பலர். இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் அவர்களுக்குச் நீங்கள் செய்யும் பணியை வரவேற்கிறேன்.

எல்லோரும் கருத்தில் வேறுபட்டாலும் ஒற்றுமையாக இருங்கள்.

இவை எனது தனிப்பட்ட வேண்டுகோள் மாத்திரமே.

  • தொடங்கியவர்

உங்கு தலைப்பு இட்டதற்கு பின்னம் மடல்கள் வந்து குவிகின்றன ... கண் கொடுத்து பார்க்க முடியவில்லை ... சிலதுகளை ...

36_1_19.gif

நெல்லையான்,

முன்பு உம்முடைய எழுத்தெல்லாம் பிடித்திருந்தது, ஆனால் நீங்கள் இப்ப போட்ட யாழை மூடுகிறது தொடர்பானதோடு உங்களை கண்ணில் காட்ட இயலாமல் இருக்குது. நீங்கள் தொடருவீர்களாயின், நாங்கள் பின் லாடன், பூலாந்தேவியுடன் கூட்டு சேர்ந்து இலட்சத்தை மில்லியன் கணக்கில் கேட்க சாட்சியும் சொல்லுவம். இப்ப பின் லாடன், பூலாந்தேவியிக்கு எதிரான உம் செயற்பாடுகளால் ஆத்திரமடந்த முல்லா உமர், தலபானுகளை கிளர்ந்தெள சொல்கிறார். தலபானுகளோடு தொடர்பில்லாத நானும், உம்முடைடையது தொடர்ந்தால், சேர்ந்து உமக்கு எதிராக செயற்பட வேண்டி வரும். ஆகவே உந்தத்தலைப்பில் எழுதுவதையெல்லாம் நிறுத்தும்.

:lol: :lol: :lol:

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கு தலைப்பு இட்டதற்கு பின்னம் மடல்கள் வந்து குவிகின்றன ... கண் கொடுத்து பார்க்க முடியவில்லை ... சிலதுகளை ...

தனிமடல்

4. தனிமடற் சேவை

1. கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.

2. தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.

3. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)

4. தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இது தனிமடல் தொடர்பாக யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையில் உள்ளது. அனைவரும் வாசித்திருப்பீர்கள். இதுவரை வாசித்தறியாதவர்கள் கருத்துக்கள விதிமுறைகளை மறுபடியும் வாசிக்கவும்.

கருத்துக்களத்தில் அண்மைக் காலமாக தனிமடல் பிரச்சனை தொடர்பாக சில முறைப்பாடுகள் வந்துள்ளன. இவை தொடர்பாக கருத்துக்கள நிர்வாகம் சில விசாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் நாம் சில விடயங்களை அனைவருக்கும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

1. தனிமடல் சேவையானது கருத்துக்கள உறுப்பினர்கள் தமக்குள் நட்புப் பாராட்டுவதற்கும், கருத்துக்களம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கருத்துக்கள நிர்வாகத்தினரோடு தொடர்புகொள்வதற்குமான ஒரு சேவையாகவே அமையவேண்டும். இவை தவிர்த்து நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, வேறு இணையத்தளங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, எரிதங்களை (SPAM MAILS) அனுப்புவதற்கோ பயன்படுத்துதல் ஆகாது. உங்கள் இணையத்தளம் பற்றி அறியத் தர விரும்பின் - அதனை யாழ் வழிகாட்டி பகுதியில் இணைக்கலாம். யாழ் கருத்துக்களம் சாராத எந்த விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

2. உங்களின் (கருத்துக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை தனிமடலில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். யாழ் கருத்துக்களம் என்பது கள உறுப்பினர்களிடையே பகையுணர்வை வளர்ப்பதற்கான களமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் - எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் யாழ் கருத்துக்களம் என்பது அவசியமில்லை. எனவே, கருத்துக்களத்தில் ஏற்படும் கருத்தாடல் முரண்பாடு என்பது வெளியில் பகையுணர்வாக வளரக்கூடாது என்பதே எமது அவா. அப்படி வளருமானால் அதற்கு கருத்துக்கள நிர்வாகம் எவ்விதப் பொறுப்புமேற்காது. அந்தவகையில், உங்கள் "சண்டைகளுக்கு" - "பகையுணர்வுக்கு" கருத்துக்கள தனிமடற் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்.

3. ஒரு கருத்துக்கள உறுப்பினர்க்கு இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் (நிர்வாகத்தினர் தவிர) தன்னோடு தொடர்புகொள்வது விருப்பமில்லையெனின் தனிமடல் சேவையில் அவரை தடைசெய்யும் அனைத்து உரிமையும் உள்ளது.

4. கருத்துக்களம் சாராத வேறு விடயங்களை - குறிப்பாக கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை வேறு சேவைகளின் ஊடாக பேசிக்கொள்ளலாம். அவைபற்றி நீங்கள் அறிந்திராவிடின், சில உதாரணங்கள் இதோ: தொலைபேசி, மின்னஞ்சல் சேவை, msn messenger, yahoo messenger போன்றவைகள்.

5. யாழ் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்களை - உதாரணம்: மின்னஞ்சல் முகவரி - தவறான முறையில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விபரங்களை வெளியில் வேறு நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு வழங்குவது தவிர்க்கப்படவேண்டும்.

6. தனிமடல்களை பொதுக் களத்தில் இடுவதுவும் - அதுபற்றி பொதுக்களத்தில் விவாதிப்பதுவும் - தடைசெய்யப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு அனுப்பும் தனிமடலை அவரது அனுமதியின்றி இன்னொருவருக்கு (நிர்வாகத்தினர் தவிர) அனுப்புவது தவிர்க்கப்படவேண்டும்.

7. ஒரு கருத்துக்கள உறுப்பினர் பற்றி ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுக்கு அவதூறான செய்திகளை, வதந்திகளை மற்றும் கோள்மூட்டல்களை பரப்புவதுவும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

8. தவறான முறையில் தனிமடல் சேவை பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தால் கருத்துக்கள நிர்வாகத்துக்கு அறியத்தாருங்கள்.

9. தனிமடல் சேவை ஊடாக பிற கருத்துக்கள உறுப்பினர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படின் அதனை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.

10. ஆதாரமான தனிமடல்களினை உடனே அழிக்காமல் - சேமித்து வைத்து நிர்வாகத்தினருக்கு அனுப்புங்கள்.

மேற்கண்ட விடயங்களை கவனத்தில் எடுத்து அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936&st=0&p=327766&#entry327766

  • தொடங்கியவர்

தனிமடல்

அண்ணா ... கிருபண்ணா! ... நான் மடல்கள் என்றேன்!! நீங்கள் தனி மடல்கள் என்கிறீர்கள்!!! ... வித்தியாசம் ...???????

ஏன் மாப்பு மௌனப்புரட்சியா? :lol:

buddha3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ... கிருபண்ணா! ... நான் மடல்கள் என்றேன்!! நீங்கள் தனி மடல்கள் என்கிறீர்கள்!!! ... வித்தியாசம் ...???????

உங்களுக்கு அண்ணனாகும் தகுதி எனக்கு இல்லை :lol:

தனிமடல்கள் யாழில் உள்ளது. உங்களுக்கு வரும் பிரத்தியேக மடல்கள் (யாஹூ அல்லது வேறேதாவது) பிரத்தியேகமாக வைத்திருக்கவேண்டும். அவற்றையும் பொதுக்களத்தில் இட்டு தேவையில்லாத விவாதங்களை ஊதிப் பெருப்பித்து ஒரு பிரயோசனமுமில்லை.

உண்மையில் இந்தத் திரி ஏன் தொடங்கினீர்கள் என்று புரியவில்லை. யாழை மூடாவிட்டால் உங்களால் யாழைவிட்டுப் போகமுடியாது என்று உங்களுக்குப் புரிந்ததனால் என்றுதான் நான் நினைக்கின்றேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தத் திரி ஏன் தொடங்கினீர்கள் என்று புரியவில்லை.

யாழை மூடாவிட்டால் உங்களால் யாழைவிட்டுப் போகமுடியாது என்று உங்களுக்குப் புரிந்ததனால் என்றுதான் நான் நினைக்கின்றேன். :lol:

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='கிருபன்' timestamp='1311440

உண்மையில் இந்தத் திரி ஏன் தொடங்கினீர்கள் என்று புரியவில்லை. யாழை மூடாவிட்டால் உங்களால் யாழைவிட்டுப் போகமுடியாது என்று உங்களுக்குப் புரிந்ததனால் என்றுதான் நான் நினைக்கின்றேன். :lol:

கிருபன் அவர்களுக்கு 3 வது பாச்சை எனது...................

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புங்கையூரான்! ... நிறைகுடம் தளம்பாது என்பார்கள் ... நீர் மட்டுமல்ல இங்கு நெடுக்கர், யூட், ரதி, நிழலி, தப்பிலி, நிலாமதி, சகாரா, ஹரி முக்கியமாக அகோதா இப்படி இன்னும் சிலர் எதன் கீழ் கருத்தெழுதினாலும் இப்படித்தான் கருத்துக்கள் வரும்! போட்டோம்/உடைத்தோம் என எழுதும் என் போன்றோர் போல் வராது!!!!

இத்திரியில் ... ஓர் கேள்வியே தலைப்பாக இருந்தது, மாறாக மூடுங்கள் என்ற கோரிக்கையா விடப்பட்டது???? ... ஏதோ சொல்ல வேண்டும் என்று பட்டதை மறைமுகமாக எழுதுதினேன் ... யாழை எவ்வாறு தொடர செய்யப்போகிறீர்கள் என்று?? ... மோகனின் சுமைகளையும் பகிர்ந்து கொண்டு செல்லப்போகிறீர்கள் என்று??? .... அது கூட விளங்கிக் கொள்ளப்படாமல் ... சீனா/இந்திய/ரஷ்ய உளவுத்துறையுடன் சேர்ந்தியங்கும் நெல்லை, யாழை மூட சதி ... என்றொரு திரியே வந்தது!!!!!!

... இத்திரிக்கு முன், சில வருடங்களுக்கு முன் மோகன் மூடப்போவதாக முன்னறிவிப்பு விட்டு ஓர் திரி இங்கிணைக்கப்பட்டிருந்தது. அது இப்பவும் இருக்கிறது, அதில் நெல்லை எழுதியவற்றை பார்த்தால் .... புரியும்!!!!

நன்றிகள் நெல்லைக்கு!

உங்களை நான் புரிந்து கொள்கின்றேன் நெல்லை!

பொதுவாக, உலக நியதி ஒன்று உண்டு! சில சமயங்களின், நாங்கள் அதனுடன் இணங்கியே போக வேண்டும்!

நாணல் போல வாழ்வது தான் வாழ்க்கையாகுமா? இது தத்துவம்!

ஒரு வேளை, நாணலாக வாழ்ந்திருந்தால், முள்ளி வாய்க்காலைத் தவிர்த்திருக்கலாமோ என நான் எண்ணுவதுண்டு!

இந்த உலகில், ஒரு பெண் கற்போடு, இருப்பதை விட, அவள் கற்புள்ளவள் என்று உலகை நம்ப வைப்பதில் தான் அவளது கவுரவம் தங்கியிருக்கின்றது!

உங்களைப் போன்ற, போட்டுடைக்கும் கருத்தாளர்கள் தான், யாழை வளப்படுத்துகின்றார்கள்!

சுருக்கமாகச் சொன்னால், உங்கள் போன்ற கருத்தாளரை யாழ் இழக்கக் கூடாது!

இயற்கையின் படைப்பில் சிலர் மீன்கள், சிலர் மான்கள், சிலர் பறைவைகள்!

எல்லோரும் வாழ உலகில் இடமுண்டு!!!

  • தொடங்கியவர்

... நெல்லையின் மடல் அனுப்பிகளை இடைமறித்ததில் ... இரண்டு இங்கு ...

முல்லா ஒமருக்கு ... சலாம் அழைக்கும்!

... நைனா, ஒங்க அட்டாக்குகள் பல இடங்களில் இப்போ செய்கிறீங்க. அதற்கு மேல் தலபானுகளை ஏவியும் உடுறீங்க, நிப்பாட்டுங்க நைனா! உவ கூடாது நைனா. நீங்க வயசில் மூத்தவ, மரியாதய வேன்டுரவ ... என்னை உட்டு ஒதுங்கி இருப்பது நல்லது நைனா!

ஒங்களுக்கு நாங்க ... ரண்டு நாலு சாறீஸும், இரண்டு சிஞ் சக்குகளும் அனுப்பி ஒடறேன். .. நன்றி நைனா!

அண்ணை நெல்லை,

யாழில் பலருக்கு, நீ போகப்போறது எண்டு சொன்னது பாலை வார்த்திருக்குது. நீயே போறதற்கு முன் திறத்தவும் விருப்ப்பம். போ, ஆனால் போறதற்கு முன்னுக்கு ஏதோ செய்ய வேண்டியவைகள் என்று சொன்னியே, அதை செய்து முடித்து விட்டுப் போ.

இங்கு றூல்ஸ் அன்ற் றெகுலேஷன் எல்லாம் கதைக்கினம் சிலர், முன்பு இங்கு எத்தனை மடல்கள் எத்தனை பேருக்கு அனுப்பப்பட்டது என்றதுகளும், இங்கு போடப்பட்டதுகளும் தெரியாதோ? இல்லை ஏன் அப்போ உதுகளை போடவில்லை? ... உப்படியானதுகளை கவனத்தில் எடுக்க வேண்டாம்.

களம் என்றால் சூடாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தாளமும் போட்டு, பக்கப்பாட்டும் பாடுவது களமல்ல.

நன்றியண்ணை.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

... நெல்லையின் மடல் அனுப்பிகளை இடைமறித்ததில் ... இரண்டு இங்கு ...

கொழுவி விட்டுவிட்டுக் கூத்துப் பார்ப்போர் மடல்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

உங்களால் முடிந்தளவு ஆதாரங்களுடன் எவரையும் அம்பலப்படுத்துங்கள். ஆதாரமில்லாமல் சொல்லும் கருத்துக்கள் வெறும் கிசுகிசுக்காளாகத்தான் இருக்கும், ஆனால் கிசுகிசு படிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றதுதானே. அவர்களையும் குஷிப்படுத்த ஏதாவது எழுதத்தானே வேண்டும். இல்லாவிட்டால் களம் சுறுசுறுப்பாக இருக்காது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் விளங்காத்தனமான தலைப்பு அல்ல. நெல்லையனின் உள்நோக்கங்களைச் சொல்லும் தலைப்பாகக் கூட எடுக்கலாம்.

யாழ் களத்தை மூட வேண்டும் என்ற கருத்தை நெல்லையன் மட்டுமல்ல.. தமிழ் தேசிய உணர்வை... தமிழீழ விடுதலையை.. எரிச்சலாக நோக்கும் பலர் கொண்டிருக்கின்ற ஒன்று தான்.

நெல்லையனின் அரசியல் கருத்துக்கள்.. பல தடவைகள் ஒரு தளம்பல் நிலையில்.. சலனத்தன்மையை வெளிக்காட்டி இருக்கின்றன.

அது நாடு கடந்த தமிழீழ அரசாகட்டும்.. விடுதலைப்புலிகள் அமைப்பாகட்டும்.. தமிழ் தேசியம் ஆகட்டும்... புலம்பெயர் மக்களின் செயற்பாடகட்டும்.. அடிக்கடி குழம்பித் தெளியும் நிலையில் இருக்கிறார் அவர்.

இந்த நிலையில் இப்படியான அநாவசிய தலைப்புக்களை அவர் இடுவது ஒன்றும் புதிரான விடயம் அல்ல. ஆனால் அவர் சில தெளிவுகளைப் பெற இந்தத் தலைப்பை கள உறவுகள் பாவித்தால் நன்றாக இருக்கும்.

நெல்லையனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய உலகமோ.. தமிழ் மக்களோ செயற்பட முடியாது. ஒரு நியாயமான பொதுமைப்பாட்டோடு அவர் தெளிந்து இணங்கி வர முற்பட வேண்டும். அதன் மூலம் இவ்வாறான தலைப்பிடுவதில் இருந்தும் அவர் தன்னை விலக்கி வைக்கலாம். :)

மற்றும்படி.. எத்தனையோ இடர்களைக் கண்டு வளர்ந்து இன்று ரீன் ஆக இருக்கும் யாழ் களப் பையனை.. யாரும் எதுவும் பண்ண முடியாது. அவன் இப்ப ரீன்..! கருத்துக்கு கருத்தைத் தூக்குவான்.. கத்திக்கு கத்தியை தூக்குவான். :lol::D

Edited by nedukkalapoovan

யாழை தேசிய இணையமென்று முத்திரை குத்தி குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட ஒரு திறந்த ஜனநாயக தளமாக வைத்திருப்பதே நல்லது.

பச்சைபுள்ளிக்கு எழுதுபவர்களுக்கு அது தொடர்ந்தும் கிடைக்கும் பயப்பிடவேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.